07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 15, 2015

கொஞ்சம் சோறு கொஞ்சம் சங்கீதம்!

வலைச்சரம் ஏழாம் நாள்
விடைபெறும் நேரம்!  


கொஞ்சம் சோறு 

சாப்பாடு என்று சொல்லும்போது எனக்கு எங்கள் இரண்டு நண்பர்கள் நினைவிற்கு வருவார்கள். முதலாமவர் பார்த்தசாரதி. என் கணவரின் அலுவலக நண்பர். அவர்கள் குழந்தைகளும் எங்கள் குழந்தைளும் ஒரே பள்ளி ஆகையால் குடும்பமே நட்பானது.
‘என்ன இன்னிக்கு தோசை கைல ஓட்டறது? உளுந்து அதிகமோ?’ என்பார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது முதல் தடவை இப்படி ஒரு காமென்ட் கேட்டு. அப்புறம் கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டது! அவரது மனைவியை முதல் தடவை பார்த்தவுடன் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். ‘எப்பவுமே இப்படித்தானா?’ அவரும் சிரித்துக்கொண்டே ‘எப்பவும் இப்படித்தான்!’ என்றார்.

‘பருப்பு துகையல் என்றால் தொட்டுக்கொள்ள நீர்க்க கூட்டு பண்ணவேண்டும். கூட்டு என்றால் கெட்டியாக துகையல் அரைக்க வேண்டும். பொரிச்ச கூட்டு என்றால் புளித்துகையல். ரசம் என்றால் அப்பளம்....’ என்று வகை வகையாக சாப்பாடுதான் எப்பவுமே பேச்சின் மைய பொருளாக இருக்கும். எனக்கு ரொம்பவும் அதிசயமாக இருக்கும். ஆண்கள் சமையலறைப் பக்கமே போகக்கூடாது என்ற குடும்ப வழக்கத்தில் வந்த எனக்கு  இப்படி ஒரு ஆண் பேசுவது  விந்தையாகவே இருந்தது.

அடுத்த நண்பர் பாலக்ருஷ்ணன். இவர் சமையலில் எக்ஸ்பர்ட். விடுமுறை நாட்களில் தானே சமையல் செய்ய ஆரம்பித்துவிடுவார். ‘புருப்புசிலி என்றால் பொலபொலவென்று மணல் மணலாக இருக்கணும்’ என்பார்.  நான் இவரது மனைவியிடம், ‘நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி. அவரே எல்லாம் செய்கிறாரே’ என்றேன். அதற்கு அவர், ‘நீங்க வேற! வெளியில் போய் சாப்பிடக்கூட விடமாட்டார். உனக்கு போரடிச்சா நான் பண்றேன் என்று வந்துவிடுகிறார். இவர் எப்போ வெளியூர் போவார்னு காத்திருந்து நானும் என் பெண்ணும் போய் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வருவோம்’ என்றார்.

கொஞ்சம் சங்கீதம்

எனக்கு தெரிந்த மூன்று பாட்டு ஆசிரியைகள் பற்றி சொல்ல வேண்டும். சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். முதல் ஆசிரியை திருமதி ராஜலக்ஷ்மி ராஜகோபாலன். புரசைவாக்கம் முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி பாட்டு டீச்சர். குரல் ரொம்ப நன்றாக இருக்கும். அனுபவித்துப் பாடுவார். நிறைய தியாகராஜ கீர்த்தனைகள் சொல்லிக் கொடுத்தவர்.

இரண்டாவர் திருமதி சரோஜா. இவரிடம் நான், என் பெண், பிள்ளை எல்லோரும் பாட்டு கற்றுக்கொண்டோம். அண்ணாநகரில் இருந்தவர். நிறைய நடன நாடகங்கள் போட்டிருக்கிறோம் இவர் இயக்கத்தில். ஒருமுறை  கலைவாணர் அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சி. தசாவதார நடனம். முதல்நாள் அங்கு போய் ரிஹர்சல் பார்க்கப் போயிருந்தோம். அந்த மேடையைப் பார்த்த உடனே நான் டீச்சரிடம் இந்த மேடையில் உட்கார்ந்து ஒரு பாட்டுப் பாடி விடுகிறேன் என்று சொல்லிவிட்டு மேடையின் நடுவில் உட்கார்ந்து பாடினேன். அதுதான் எனது முதல் கடைசி மேடைக் கச்சேரி!

மூன்றாமவர் இங்கு பெங்களூரில் எங்களுக்குக் கிடைத்த பாட்டு டீச்சர் திருமதி லக்ஷ்மி நரசம்மா. எனது தீவிர ஆர்வத்தைப் பார்த்து தனது பாட்டு நோட்டையே என்னிடம் தூக்கிக் கொடுத்தவர். என்ன பாட்டு வேணுமோ காப்பி பண்ணிக்கோங்க. நான் சொல்லித் தருகிறேன்’ என்றார்.  ஒரே ஒரு பிரச்னை பாட்டுக்கள் எல்லாம் கன்னட மொழியில்! நான் அப்போதுதான் அந்த மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருந்தேன். அதனால் என் கன்னட மொழிப் புலமை வளரவும் இந்த பாட்டு நோட்டு உதவியது!

இத்தனை கற்றுக்கொண்டும் பயிற்சி இல்லாததால் (பாடப்பாட ராகம்; மூட மூட ரோகம் என்பது போல) என் பாட்டு நின்று போய்விட்டது. ஆனால் இசையை ரசிக்கிறேன். அது போதுமே!

இன்றைய வலைச்சரத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் எனக்கு எழுதுவதற்கு தூண்டுதலாக இருப்பவர்கள். என்னுடைய எழுத்துக்களுக்கு தவறாது வந்து கருத்துரை சொல்பவர்கள். இவர்களுடைய எழுத்துக்களுக்கு நான் ரசிகை. வலைச்சரத்தின் கடைசி நாளான இன்று இவர்களை இங்கு கௌரவிப்பதில் பெருமை கொள்ளுகிறேன்.
************************************************************************

அதிகமாக திருப்பூர் பற்றித்தான் எழுதுவார். அங்கு நூற்பாலையில் பொதுமேலாளராக இருப்பதால். அவற்றைவிட தனது குடும்பத்தைப் பற்றி ஒரு தந்தையாக, மகனாக அவர் எழுதும் பதிவுகள் நான் அதிகம் விரும்புபவை. நல்ல நண்பர். நல்ல நல்ல வலைத்தளங்களை எனக்கு அறிமுகம் செய்தவர்.  ‘தினமும் ஒருமணி நேரம் இணையத்தில் நல்ல தளங்களாகத் தேடிப்பிடித்து படியுங்க’ என்பார்.

"ஏதாவது கதை சொல்லுங்க அப்பத்தா" என்றால் இவர் சொல்லும் வட்டார வழக்குத் தமிழ் வார்த்தைகள் அவர்களுக்குப் புரியாமல் அது குறித்து அப்டின்னா? என்று தொடர் கேள்விகளை எழுப்ப அம்மாவுக்கு அலுப்பாகி விடும்.

தொலைவில் இருப்பதால் தன் குழந்தைகளுக்கும், தன் அம்மாவிற்கும் தொடர்பில்லாமல் இருக்கும் நிலை பற்றிப் பேசுகிறார் இந்தப் பதிவில்.


‘வகுப்பாசிரியருக்கு மகளின் மதிப்பெண் என்பது அவரது கீரிடத்தில் வைக்கப்படும் வைரக்கல். எனக்கோ அது முக்கியமென்றாலும் அது மட்டுமே முக்கியமல்ல என்பதை அவரிடம் எப்படி சொல்ல முடியும்?’ என்று கேட்கிறார் இந்தப் பதிவில்.

ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய பதிவு இது.

*****************************************************************************

இவரும் மிகப்பிரபலமான வலைப்பதிவர். தினம் ஒரு பதிவு என்றெல்லாம் எழுதுவதில்லை. ஆனால் எழுதினால் அன்று இவரது வலைப்பதிவு ஹவுஸ்ஃபுல் தான்!
பின்னூட்ட புயல் என்ற செல்லப்பெயரும் இவருக்கு உண்டு.
பொதுவாக திருக்குறளை வைத்து பதிவுகள் எழுதுவார். திருக்குறளுடன் திரைப்பாடல்களும் இடம் பெறும். ISO பற்றிய பதிவுகளும் உண்டு.
இப்போது புதிய/பழைய பதிவர்களுக்கு ‘லிங்கா...?’ என்று தொழில்நுட்பம் கற்றுத் தருகிறார்.  
சென்ற ஆண்டு பதிவர் விழா சிறக்க இவரது உழைப்பும் முக்கியக் காரணம்.

வலைச்சரத்தில் அறிமுகம் ஆகும் அத்தனை தளங்களும் இவருக்குத் தெரிந்தவையே. ஒன்றிரண்டு புதிது என்றால் நாம் அதிர்ஷ்டசாலி என்று சொல்லிக்கொள்ளலாம். பெரிய மீசையின் பின் ஒளிந்திருக்கும் நல்ல மனிதர்.

****************************************************************************

இவரை அறியாதவர்கள் வலையுலகத்தில் இல்லை. கோவில் 
கோவிலாகப் போய் ‘ஹையோ.....ஹையோ’ என்று தெய்வங்களை
தரிசித்துவிட்டு வருபவர்.


நான் மிகவும் விரும்பிப்படிக்கும் தளம். பயணக் கட்டுரைகள், இவர் 
இருக்கும் நியுசிலாந்து நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் என்று எப்பவுமே
 பிசியாக இருக்கும் இவரது தளம். மெல்லிய நகைச்சுவையுடன் ஒரு 
விவரம் விடாமல்  தான் பார்த்த இடங்களைப் பற்றி எழுதுவார் இந்த 
வலைப்பதிவாளர் துளசி கோபால்.  

சுமார் பத்து வருடங்களாக வலைப்பதிவு செய்துவருகிறார்.  இவரது 
வலைப்பதிவுகளை ஆரம்பகாலத்திலிருந்து  படிக்க ஆரம்பித்திருக்கிறேன். 
அப்படி படிக்க விருப்பம் இருக்கிறவர்களுக்கு இந்த சுட்டி உதவும்.

*************************************************************************

மொத்தம் ஐந்து ஆசிரியர்கள். ஒவ்வொரு வாரம் பாசிடிவ் செய்திகள் 
போடுவது ஸ்பெஷாலிட்டி. நான் ரொம்ப விரும்பிப் படிப்பது ‘திங்க’ 
கிழமைப் பதிவுகள் தான். இந்த முறை மாறுதலாக ஒரு ஆராய்ச்சி 
செய்திருக்கிறார், ஸ்ரீராம். அலேக் அனுபவங்களும் அருமையாக இருக்கும்.

*******************************************************************
வரிக்கு வரி நகைச்சுவை யுடன் எழுதும் பாலகணேஷ் – இன் 
வலைத்தளம். போன வருடம் இவரது சரிதாயணம் புத்தகம் 
(வலைபதிவில் எழுதியது) வெளியாகியது. விடாமல் சிரித்து மனதை 
லேசாக்கிக் கொள்ள சிறந்த வலைத்தளம்.


மேய்ச்சல் மைதானம் என்று இன்னொரு தளமும் வைத்திருக்கிறார்.
***********************************************************************

ரேவதி நரசிம்மன் என்கிற வல்லி இந்த வலைப்பூவின் சொந்தக்காரர்.

சிரிப்பாலேயே நம்மை கவர்ந்து விடுவார்.

தனது அம்மாவின் பிறந்த நாளன்று தாயின் நினைவாக அவருடன்  போய் 

சென்னை எதிராஜ் கல்லூரியில் தான் சேர்ந்ததை நினைவு கூர்கிறார்.



நமக்கு எத்தனை வயதானாலும் நம் அம்மா அப்பா என்றால் தனி பாசமும், 

பிணைப்பும் இல்லையா?
*********************************************************************************

ஹுசைனம்மா


‘இப்படியாக, ஒரே மாதத்தில் 6 -7 கிலோ எடை குறையவும், பார்ட்டி பயங்கர சந்தோஷமும்  பெருமையுமாக என்னிடம் வந்து சொன்னார்’ பார்ட்டி என்பது இவரது கணவர் தான். அவர் மேற்கொண்ட டயட் பற்றி வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க சிரிக்க எழுதுகிறார்.


சுமார் 30 வருடங்களாக குர் ஆனை அரபு மொழியில் ஓதி வருகிறேன். பிறந்ததிலிருந்து பேசி, எழுதி, படித்து, சுவாசித்து வரும் தமிழிலேயே நான் புலமை பெறவில்லை எனும்போது, கேள்வியறிவைக் கொண்டு மட்டுமே வாசித்து வரும் அரபு மொழியில் புலமை இருக்குமா என்ன? என்று கேட்கிறார். மேலே படித்துப் பாருங்கள்.

*************************************************************************

கீதா சாம்பசிவம்


ஆம்ஆத்மி கட்சின்னா இவங்களுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்! இவங்க சொல்லியிருப்பதும் நிஜம் என்றாலும், கொஞ்சம் பாஸிடிவா யோசனை பண்ணுங்க, ப்ளீஸ்!

சமையலை ரசிச்சு ரசிச்சு எழுதறாங்க!

கீதாவும் 2005 லிருந்து பதிவு எழுதுகிறார். முதலிலிருந்து இரண்டு மூன்று பதிவுகள் படித்திருக்கிறேன். தொடர்ந்து படிக்க வேண்டும். 

இவரது மற்ற தளங்கள்
கண்ணனுக்காக
சாப்பிடலாம் வாங்க
பேசும் பொற்சித்திரமே
என் பயணங்களில்
ஆன்மீக பயணம்

******************************************************************************

ராஜலக்ஷ்மி பரமசிவம் அரட்டை என்ற தளத்தில் எழுதுபவர்.
அமெரிக்காவில் இருக்கும் தனது மகள் வீட்டிற்குப் போனபோது ஸ்மோக் டிடெக்டரால் தான் பட்ட அவஸ்தையை நகைச்சுவையாக வர்ணிக்கிறார்.
இவரது இரண்டு மின்னூல்கள் வெளி வந்திருக்கின்றன. இவரது கதாபாத்திரங்கள் ராசியும் விஷ்ணுவும் பதிவுலகில் பிரசித்தி பெற்ற தம்பதி.

ஊஞ்சல் என்ற தனது சமீபத்திய பதிவில் ‘சோம்பலாயிருந்தது. உடல், மனம்  இரண்டும் தான்’ என்று எழுதியிருந்தார். சீக்கிரமே மறுபடி எழுத ஆரம்பிப்பதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் இதுவரை எதுவும் எழுதவில்லை.

மிக விரைவில் இவர் இந்த மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் மீண்டும் பதிவுலகில் வலம் வர வாழ்த்துக்கள்!
********************************************************************

மனோ சாமிநாதன் முத்துச்சிதறல்

இவரது வலைத்தளத்தில் கொட்டிக் கிடக்கும் முத்துக்களில் சில:
அனுபவ முத்துக்கள், ஓவிய முத்துக்கள், கவிதை முத்துக்கள், குறிப்பு முத்துக்கள், கைவினைக்கலை முத்துக்கள், சமையல் முத்துக்கள், சிந்தனை முத்துக்கள், சிறுகதை முத்துக்கள், மருத்துவ முத்துக்கள், முத்துக்குவியல் ரசித்த முத்துக்கள்


‘ரொம்ப ரொம்ப சின்ன உதவிகளை அவசரத்திற்கு செய்யத் தயங்காதீர்கள். உங்களுக்கு அதன் பின் அதுவே பழக்கமாகி விடும். அதன் பின் எத்தனை நண்பர்கள் உங்களுக்குக் கிடைக்கிறார்கள் என்று பாருங்கள்! பிரமித்துப்போவீர்கள்!! உதவும் மனப்பான்மை நம்மில் வளர வித்திடுங்கள்!!’ என்கிறார்.

இவரது ஓவிய முத்துக்களிலிருந்து
இந்தப் புன்னகை என்ன விலை?

தனது சமீபத்திய வலைச்சர வாரத்தில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ராகம் என்று மிகச் சிறப்பாக எழுதியிருந்தார். ரொம்பவும் ரசித்தேன். 

*****************************************************************************.

ராதா பாலு – எழுத்துலகில் எனது நீண்ட நாளைய தோழி. இன்னும் நேரில் பார்த்ததில்லை. நிறைய பத்திரிகைகளில் எழுதுகிறார். பல வெளிநாடுகளுக்கு போய் வந்திருக்கிறார். அந்த அனுபவங்களையும் எழுதுகிறார்.

‘புத்தகங்களைப் படிப்பதும்,அறிந்தவற்றையும்,அனுபவங்களையும் எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள்.கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நான் எழுதிய கதை,கட்டுரை,ஆலய தரிசனம்,சமையல் குறிப்புகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகின்றன.  அவற்றின் தொகுப்பே இந்த வலைப்பூ.சமையல் குறிப்புகளை அறுசுவைக் களஞ்சியத்தில் காணலாம்’ என்று சுய அறிமுகத்தில் கூறுகிறார்.

எண்ணத்தின் வண்ணங்கள் என்று இன்னொரு வலைத்தளமும் வைத்திருக்கிறார்.

சமையல் குறிப்பிற்காக அறுசுவை களஞ்சியம் என்ற தளம் வைத்திருக்கிறார்.
*******************************************************************************

ரூபன்: ரூபனின் எழுத்துப் படைப்பு  என்ற தளத்தின் சொந்தக்காரர். நம் திண்டுக்கல் அண்ணாச்சியின் வலையுலகத் தம்பி. கவிதைப் போட்டி, கதைப் போட்டி என்று நடத்தில் வலையுலகை சுறுசுறுப்பாக வைத்திருப்பவர். ஒரு முறை இவர் நடத்திய போட்டிக்கு நடுவராக இருந்த அனுபவம் எனக்கு உண்டு. அழகிய தாளில் அச்சடிக்கப்பட்ட சான்றிதழ் எனக்கு அளவில்லாத சந்தோஷத்தைக் கொடுத்தது.
தனது தளத்தில் சிறுகதைகளும், கவிதைகளும் எழுதி வருகிறார். வயதில் இளையவராகிய இவருக்கு வெகு விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கிறேன்.

*******************************************************************************

திருமதி இராஜராஜேஸ்வரி ஆன்மீகப் பதிவுகள் எழுதுபவர். சமீபத்தில் உடல்நிலை சரியில்லை என்று எழுதியிருந்தார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக கட்டாய ஓய்வில் இருப்பதாக தனது இந்தப்  பதிவில் சொல்லியிருந்தார். பிறகு தகவல் எதுவுமில்லை. பதிவர்கள் யாருக்காவது அவரை வலைப்பதிவிற்கு வெளியே தெரியுமா என்று தெரியவில்லை. யாருடனாவது அவர் தொடர்பில் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. மிக விரைவில் அவர் குணமாகி மறுபடியும் வலையுலகில் எழுத ஆரம்பிக்க வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் எனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பை முடிக்கிறேன்.

இந்த ஒருவாரம் என்னுடைய பதிவுகளைப் படித்து ரசித்து பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் எனது சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்.


எனது வலைத்தளத்தில் தொடர்ந்து சந்திக்கலாம்.

58 comments:

  1. வணக்கம்
    அம்மா.

    கொஞ்சம் சோறு கொஞ்சம் சங்கீதம்! என்ற தலைப்பின் கீழ்
    என்னுடை அறிமுகம் கண்டு மகிழ்ச்சியடைந்தேன் அம்மா. வலைச்சரம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை தங்களின் வழிதான் நான் அறிந்தேன் வலைச்சரத்தில் முதலில் அறிமுகம் செய்து வைத்ததும் நீங்கள்தான் அம்மா.. அதன் பின்பு என்னைப்பற்றிய அறிமுகம் பல ஆசிரியர்கள் செய்தார்கள்...
    என்னுடைய வலைப்பதி மட்டும் அன்றி என்னுடை வாழ்(க்)கை பற்றியும் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா.
    தங்களின் சேவை எழுத்துலகில் இன்னும் தொடர வேண்டும் என்பதை இறைவனை வேண்டுகிறேன்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன்!
      உங்களை எப்படி மறக்கமுடியும்? நீங்கள் அனுப்பிய சான்றிதழ் உங்கள் நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறதே!
      உங்களது வருகைக்கும், உங்கள் பிரார்த்தனைக்கும், எனக்கு முன்னால் எல்லாத் தளங்களுக்கும் போய் அறிமுகம் பற்றி சொல்லிவிட்டு வந்ததற்கும் மனமார்ந்த நன்றி!

      Delete
  2. நிறைவு நாளான இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் அருமை. 'எங்க ப்ளாக்' தவிர மற்றவை அனைத்தும் தெரிந்தவர்களின் பதிவுகள்தான். வழக்கமாக ஜோதிஜியும், திண்டுக்கல் தனபாலன் அவர்களும் பரிசை வென்றிருக்கிறார்கள். தொடக்கத்தில் நண்பர்களிஐப் பற்றிய செய்திகளும் சுவையானவை. வாழ்த்துக்கள் டீச்சர். த.ம.+

    ReplyDelete
    Replies
    1. வாங்க கவிப்ரியன் கலிங்கநகர்!
      ஜோதிஜியும், திண்டுக்கல் தனபாலனும் மறக்க முடியாதவர்கள் ஆயிற்றே!
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

      Delete
  3. மேய்ச்சல் மைதானத்தை ஓராண்டாக கவனிக்காமல் விட்டதில் புற்கள் மண்டிவிட்டன என்கிற குற்ற உணர்வு எனக்கு எழுந்ததால் அதற்கு புதிய சட்டை போட்டு புதுப்பிக்க இப்போது ஏற்பாடு பண்ணிட்டிருக்கேன். இனி நிறைய அங்க பழைய பொக்கிஷங்களைத் தரணும்னு சேகரிச்சும் வெச்சிருக்கேன். இந்த நேரத்துல இங்க உங்களால கெடைச்ச இந்த அறிமுகம் இன்னும் வேகமா செயல்படற எண்ணத்தை விதைச்சிடுச்சு. நன்றிம்மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பால கணேஷ்!
      இன்னும் நிறைய எழுத எனது வாழ்த்துக்கள்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      Delete
  4. மிக்க மிக்க நன்றி அம்மா...

    இன்றைய அனைத்து அறிமுக உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனபாலன்!
      தினமும் வந்து உற்சாகப்படுத்தியதற்கு எனது நன்றி உங்களுக்கு.

      Delete
  5. மிக்க நன்றி ரஞ்சனி நாராயணன். 'எங்கள்' ப்ளாக் பற்றிக் குறிப்பிட்டதற்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க KG ஸார்!
      நான் வந்து உங்களுக்குத் தகவல் சொல்வதற்கு முன் நீங்கள் வருகை தந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி ஸார்!

      Delete
  6. அனைவரும் நான் தொடர்ந்துபடித்துவரும் பதிவர்கள் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் அக்கா !

    வாழ்த்துகள் மற்றும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க மெக்னேஷ் திருமுருகன்!
      தினசரி வருகைக்கும், உற்சாகமான கருத்துரைகளுக்கும் நன்றி!

      Delete
  7. கொஞ்சம் சோறு கொஞ்சம் சங்கீதம் - என ஆரம்பித்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..

    இனிய தொகுப்பினை வழங்கி - பணியினை நிறைவு செய்து விடை பெறும் தங்களுக்கு - அன்பின் வணக்கங்கள்!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை செல்வராஜூ!
      தினமும் வந்து பதிவுகளைப் படித்து உற்சாகப்படுத்தியதற்கு எனது மனமார்ந்த நன்றி உங்களுக்கு!

      Delete
  8. நிறைவான பணி. சிறப்பாக. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க டாக்டர் ஐயா!
      தினசரி வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது நன்றி உங்களுக்கு.

      Delete
  9. என்னை மட்டுமல்லாது , ராசி-விஷ்ணு தம்பதியையும் இங்கு அறிமுகப் படுத்தி என்னை கவுரவப் படுத்திவிட்டீர்கள் ரஞ்சனி.
    சற்றே மெத்தனமாய் இருந்த என்னை, உங்கள் வலைச்சர அறிமுகம், மீண்டும் புத்துணர்ச்சியுடன் எழுதத் தூண்டுகிறது. அதற்கு உங்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இங்கு அறிமுகம் செய்ததோடு, என் தளத்திலும் வந்து சொல்லியதற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் . என்னோடு அறிமுகமாயிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
    வலைச்சர அறிமுகத்தைப் பற்றிய செய்தியை எனக்கு அறிவித்த திரு.ரூபன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .
    நன்றி .

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி!
      உங்களை மறுபடியும் எழுத வைக்கவேண்டும் என்பதே எனது குறிக்கோள். இரண்டு பதிவுகள் எழுதுங்கள். தானாகவே போன உற்சாகம் திரும்பி வந்துவிடும்.
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

      Delete
  10. மிக மிக நன்றி ரஞ்ஜனி எழுத்து என்பது மறக்காமல் இருக்கவே இப்போது எழுதுகிறேன் . என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றி. திரு ரூபன் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி!
      உங்கள் தளத்திலும் வந்து தகவல் தெரிவித்தேன். அது எங்கே போயிற்று என்று தெரியவில்லை. எனக்கு முன்னால் ரூபன் சொல்லியிருந்தார். அப்படியும் நானும் தகவல் சொன்னேன்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      Delete
  11. எமது தளத்தையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிகவும் நன்றிகள்.

    தற்போது கணினியை தொடக்கூடாது என தடை உத்தரவு போட்டு லாக் செய்து வைத்திருக்கிறார்கள் குடும்பத்தினர்..

    கணினி கிடைத்ததும் மீண்டும் வருவேன்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க இராஜராஜேஸ்வரி!
      உங்களை மீண்டும் இங்கே பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி. உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். மீண்டும் வருவதாகச் சொல்லியிருப்பது உற்சாகத்தைக் கொடுகிறது.
      வருகைக்கும், மீண்டும் வருவதாக அளித்த தகவலுக்கும் நன்றி!

      Delete
  12. என்னுடைய வலைத்தளம் பற்றி தாங்கள் குறிப்பிட்டு எழுதியுள்ளதற்கு மிக்க நன்றி ரஞ்சனி.

    சாப்பாட்டையும், சங்கீதத்தையும் பற்றிய தங்கள் அனுபவம் அருமை!

    //எனது வலைத்தளத்தில் தொடர்ந்து சந்திக்கலாம்.//

    வலைத் தளத்தில் மட்டுமல்ல...விரைவில் நேரிலும் சந்திக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராதா!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி. நிச்சயம் சந்திக்கலாம்.

      Delete
  13. வலைச்சரப் பணியைத் திறம்படவும் சுவையாகவும் நடத்தியமைக்குப் பாராட்டுக்கள்! அறிமுகப்பதிவுகளை இனிமேல் தான் வாசிக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கலையரசி!
      தினமும் வருகை தனது உற்சாகப்படுத்தியதற்கு எனது மனமார்ந்த நன்றி!

      Delete
  14. தினசரி கொஞ்சம் சங்கீத ஆலாபனையுடன் ஆரம்பித்து நீங்கள் விரும்பிப் படிக்கும் வலைத்தளங்களை மிகவும் சிறப்பாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள். ஏதோ இந்த வாய்ப்புக் கிடைத்தது அதற்கேற்ப சில வலைத்தளங்களைத் தேடிப்பிடித்து அறிமுகம் செய்துவிட்டுப் போகலாம் என்று கடமைக்காக இல்லாமல் ஒவ்வொரு வலைத்தளத்துடனும் நெஞ்சார்ந்த ஈடுபாட்டுடன் இங்கே அறிமுகம் செய்திருக்கிறீர்கள் பாருங்கள், அந்த சிரத்தையும் செய்நேர்த்தியும்தான் கவர்ந்தன. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை கடுமையாக ஈடுபாட்டுடன் உழைத்துள்ளார் என்பதே அவர் அறிமுகம் செய்து வைத்துள்ள பல பதிவுகள் எனக்கு உணர்த்தியது.

      என்னவொன்று. உங்களைப் போல என்னைப் போல விமர்சனங்களை அவர் எதிர்கொள்ளும் விதம் தான் எனக்கு வித்தியாசமாக உள்ளது. நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களை உள்வாங்கி அதனை தன் எழுத்துப் பணியுடன் ஒப்பிட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டியதே ஒரு வளர நினைக்கும் படைப்பாளியின் முக்கிய குறிக் கோளாக இருக்க வேண்டும் என் எண்ணம்.

      இளையராஜா குறித்து நீங்க எழுதியதற்கு உங்களுக்கு வந்த அனானி விமர்சனம் போல இவருக்கு வரும்பட்சத்தில் நாலைந்து மாதத்திற்கு வலைதளம் பக்கம் வராமல் இருந்து விடுவாரோ என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு.

      எனக்கும் இவருக்கும் பூர்வ ஜென்ம பந்தம் உண்டு. அதனால் இடிப்பாரை இல்லா மன்னன் போல இவர் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு அவவ்போது இவருக்கு பீதியை உருவாக்குவது என் வாடிக்கை.

      மற்றபடி இந்த வாரம் முழுக்க அறிமுகம் செய்த அத்தனை பதிவுகளுக்கும் ஒரு சிறப்புண்டு. எல்லோரும் செய்யும் கிளிஷே போல இல்லாமல் தனித்துவமாய் செய்து காட்டியுள்ளார்.

      அமுதவன் சார்பாக என் சார்பாக வாழ்த்துகள்.

      Delete
    2. வாங்க அமுதவன் ஸார்!
      உங்களது அருமையான கருத்துரைக்கு நன்றி!

      Delete
    3. வாங்க ஜோதிஜி!
      அதென்ன, அமுதவன் சார்பாக வாழ்த்துக்கள்? நீங்க வாழ்த்தமாட்டீங்களா?
      உங்கள் வருகைக்கும், என்னுடைய உழைப்பை அங்கீகரித்ததற்கும் நன்றி.

      Delete
  15. இந்தவார வலைச்சரப்பணியினை நிறைவுடன் முடித்துள்ளதற்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள். குறிப்பாக சில முக்கியத்தகவல்கள் கிடைக்கப்பெற்றோம். அதற்காக மட்டுமே என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோபு ஸார்!
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி!

      Delete
  16. ஒருவார காலம் வலைச்சர ஆசியப்பணியை சிறப்பக கொண்டு சென்ற தங்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் அம்மா. நிறைய தளங்கள் அறியாதவை. ஒவ்வொன்றாக சென்று படித்துக் கொண்டு இருக்கிறேன். மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க உமையாள் காயத்ரி!
      வருகைக்கும், எல்லாத் தளங்களையும் சென்று படித்து வருவதற்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!

      Delete
  17. சிறப்பான வாரமாக முடித்து விட்டீர்கள். "எங்கள் நண்பர் பார்த்த சாரதியை நினைவு படுத்துகிறீர்கள் என்று என்னைச் சொல்லியிருந்தீர்கள். பஜன்லால் சேட்டைப் பார்த்த சந்தானம் போல் உணர்கிறேன்! :)))))))

    எங்களையும் குறிப்பிட்டுள்ளமைக்கு நன்றி. திருமதி ராஜராஜேஸ்வரி விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்!
      பஜன்லால் சேட்டைப் பார்த்த சந்தானம்..? புரியவில்லை. சினிமா பார்த்தே பலவருடங்கள் ஆகிவிட்டன. சந்தானம் படம் ஒன்று கூடப் பார்த்ததில்லை.

      தினமும் வந்து உற்சாகமான கருத்துரை கொடுத்து வந்ததற்கு நன்றி!
      உங்களோட 'திங்க' பதிவுகள் தான் இந்தப் பதிவுகளுக்கு தூண்டுதல்!

      Delete
  18. என் தளத்தினைப்பற்றி எழுதி, என் ஓவியத்தையும் குறிப்பிட்டிருப்பதற்கு அன்பு நன்றி ரஞ்சனி நாராயணன்! வலைச்சர ஆசிரியர் பதவியை மிகச் சிறப்பாக முடித்திருப்பதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ!
      வருகைக்கும் உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் நன்றி!

      Delete
  19. நீங்கள் ரசித்துள்ள தளங்கள் பெரும்பான்மை நானும் ரசித்துக் கொண்டிருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. மற்றவர்களையும் இன்றிலிருந்து இணைப்பில் வைக்கிறேன் மிக்க நன்றி மேம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க எழில்!
      எனக்குப் பிடித்த தளங்கள் உங்களுக்கும் பிடித்திருப்பது பற்றி மிகவும் சந்தோஷம்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      Delete
  20. திருமதி ராஜராஜேஸ்வரி விரைவில் உடல் நலம் பெறப் பிரார்த்தனைகள். அனைவரும் சிறந்த பதிவர்களே. அனைத்து அறிமுகங்களும் தெரிந்தவர்களே! அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா!
      தினசரி வலைச்சரம் வந்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டு சிறப்பு செய்ததற்கு எனது மனமார்ந்த நன்றி.

      Delete
  21. //ஆண்கள் சமையலறைப் பக்கமே போகக்கூடாது என்ற குடும்ப வழக்கத்தில் வந்த எனக்கு இப்படி ஒரு ஆண் பேசுவது விந்தையாகவே இருந்தது.//

    நீங்க வேறே! எங்க அப்பாவோட விமரிசனம், என் தம்பியோட சமையல், எங்க ரங்க்ஸோட விமரிசனம் எல்லாம் பார்த்தால் இப்படிச் சொல்லி இருக்க மாட்டீங்க. இதோட எங்க மாமனாரையும் சேர்த்துக்கணும். :)))))

    ReplyDelete
    Replies
    1. இப்போது எல்லாம் பழகிவிட்டது. போனவருடம் என் வீட்டிற்கு வந்த எனது மைத்துனர் மகன் 'நிறைய கொத்துமல்லி போட்டு சாம்பார்ல பெங்களூர் கத்திரிக்காய் வாசனை தெரியாம பண்ணிட்டீங்க' என்று சொன்னபோது பார்த்தசாரதி வந்துவிட்டுப் போனார்!

      Delete
  22. அழகாக எழுதி அருமையான விமரிசனங்களைச் செய்து நிறைவாக முடித்து விட்டீர்கள். வாழ்த்துகள். ஆரம்ப நாட்களில் நான் அதிகம் மொக்கைகளே எழுதி இருக்கேன்! ஆகவே படிக்கலைனா வருத்தமெல்லாம் படாதீங்க! :))))

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அமெரிக்க அனுபவங்கள் சுவாரஸ்யமாகவே இருக்கின்றன. முடிந்தபோது படித்துக்கொண்டு போகிறேன். அதிக நேரம் கணணி முன் உட்கார்ந்து படிப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

      Delete
  23. உங்களின் தொகுப்பு அபாரம்!! எனக்கு சமையல் (செய்ய) பிடிக்காது என்றாலும், சமையல் குறித்து ‘ருசி’கரமாக எழுதினால் ரொம்பப் பிடிக்கும்!! அந்த வகையில் விதவிதமான சமையல் விவகாரங்கள் குறித்து ‘சுவை’பட எழுதியதில் தினமும் தவறாமல் வாசித்துவிட்டேன். :-))

    கரும்பு தின்ன கூலி கொடுத்தது போல, என் பதிவையும் இங்கு அறிமுகம் செய்திருக்கிறீர்கள். நன்றி மேடம்!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஹுசைனம்மா!
      நான் உங்களின் நகைச்சுவையுடன் கலந்த எழுத்துக்களை ரசித்தால் நீங்கள் என் எழுத்தை ரசிக்கிறீர்கள். MAC!
      வருகைக்கும் அழகான பாராட்டுரைக்கும் நன்றி!

      Delete
  24. சிறப்பாக நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள்.
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி!
      தினமும் வந்து பதிவுகளைப் படித்து உற்சாகப்படுத்தியதற்கு நன்றி!

      Delete
  25. இன்னொரு திறமையும்(பாட்டு) இருக்குன்னு இன்னைக்குத்தான் தெரியுது. இந்த ஒரு வாரத்தில் ஏகப்பட்ட‌ அறிமுகங்கள். வெற்றிகரமாக முடித்திட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. ரொம்பவே ஸ்வாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது. அதற்குள் ஒருவாரம் முடிந்து விட்டதா? அதனாலென்ன?
    அடுத்துவரும் போது தனி ஆவர்த்தனக் கச்சேரியே செய்து விடுவீர்கள். கோர்வையாக விஷயங்கள் அடுத்தடுத்து.
    உண்மையிலேயே ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியராக உங்களைத் தேர்ந்தெடுத்து பதவி கொடுக்கிரார்களோ என்னவோ? இந்த வார அத்தனை அறிமுகங்களுக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள். அன்புடன்

    ReplyDelete
  27. கடு மையான உழைப்பு தெரிங்கின்றது சகோதரி! .எத்தனை அறிமுகங்கள்!



    ன்ஹன்றி பகிரும் போது கூட நண்பர்களின் அறிமுகங்கள். பல புதியவர்கள்! ஒரு வாரம் களை கட்டியிருக்கிறது வலைச்சரம் கதம்பத்தினால். எங்களால் தான் அப்போது வர முடியாமல் போய்விட்டது.



    தொடர்வோம் தங்களை. தங்கள் தளத்தில். என்ன இப்போது இது வேறு கணினி. எங்கள் கணினி சரியானால் எளிதாக வர இயலும். இது அப்படி இல்லை. இதில் தமிழ் பாண்டும் இல்லை....கொஞ்சம் பாடுதான்...வர முயற்சிக்கின்றோம். மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  28. 'கூட்டில்' துளசிதளத்தையும் சேர்த்தமைக்கு மனம் நிறைந்த நன்றி!
    வாரம் முழுசும் சமையலும் சங்கீதமுமா அமர்க்களமாக இருந்தது. இனிய பாராட்டுகள்!

    ReplyDelete
  29. அறிமுகப்படுத்திய பதிவர்கள்அனைவரும் நான் அறிந்தவர்களே! வாழ்த்துகள்! தங்களுக்கும் நன்றி

    ReplyDelete
  30. மிக அருமையான வாரம்,
    தலைப்பும் செய்திகளும் மிக அருமை, பாடல், நாடகத்தில் நடித்தல் என்று எத்தனை திறமை! உங்களிடம். வாழ்த்துக்கள்
    குடும்பவிழாவில் கலந்து கொள்ள ஊருக்கு வந்து இருப்பதால் நேரம் கிடைக்கும் போது கருத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன், மன்னிக்கவும்.
    திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் விரைவில் குணமாகிவர இறைவனை வேண்டுகிறேன்.
    வலைச்சரத்தில் இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. vanakkam Raji avarkal. I read about all your blgo introudctions. Very nice to see u here again. I like your way of your writings.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது