07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 16, 2015

வலைச்சரத்தில் என்னைப் பற்றி


முதலில் வலைச்சர ஆசிரியர் பதவியை தந்த சீன ஐயாவுக்கும் தமிழ்வாசி ப்ரகாஷ்க்கும் மிக்க நன்றி.

போன வருடமே சீனா ஐயா வலைச்சர பொறுப்பினை ஏற்க சொன்ன போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.பின் சகோ பிரகாஷ் அழைத்ததும் ஏற்றுக்கொண்டேன்.

இப்போழுது என்னைப் பற்றி சொல்கிறேன்..

என் பெயர் மேனகா.சஷிகா என்னும் வலைப்பூவில் கடந்த 6 வருடத்திற்கும் மேலாக பல சமையல் குறிப்புகளை எழுதி வருகிறேன்.கணவர் மர்றும் 2 குழந்தைகளுடன் பிரான்சில் வசிக்கிறேன்.ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்காக் வீட்டில் சமைத்த குறிப்புகளை பகிர்ந்து வந்தேன்,இப்போழுது வலைப்பூ என்னுடைய 3 வது குழந்தையாக கருதுகிறேன்.

இதில் சைவம்,அசைவம்,பேக்கிங்,வெளிநாட்டு சமையல் என நிறைய குறிப்புகளை நான் சமைத்து ருசித்ததையே பகிர்கிறேன்.

என்னுடைய குறிப்புகளில் எனக்கு மிக பிடித்தவை

லட்டு

தால் பக்வான்‍‍ - இது நம்ம ஊரு மைதா பூரிபோல தான் ஒரு மாறுதலுக்கு செய்து பாருங்களேன்,அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க.

தாளி உணவு வகைகள்

அசைவ‌  பிரியாணி வகைகள்

சரவண பவன் சாம்பார் மற்றும் கார சட்னி

சிறுதானிய குறிப்புகள்

சட்னி வகைகள்

நாளை முதல் மற்ற பதிவர்களின் அறிமுகங்களை பார்க்கலாம்..

நன்றி!!

64 comments:

  1. வருக! இவ்வளவு நாள் உங்கள் வலைப் பக்கம் எப்படி வராமல் இருந்தேன். பிரான்சில் ஏராளமான தமிழ் வலைப் பதிவர்கள் இருப்பது மகிழ்ச்சி . தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் !!

      Delete
    2. எனக்கும் வியப்பாக உள்ளது முரளி. வாழ்த்துகள் மேனகா

      Delete
  2. எங்களுக்கு பிடித்த குறிப்புகள் கணக்கிலடங்கா...!

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சகோ !!

      Delete
  3. //வலைப்பூ என்னுடைய மூன்றாவது குழந்தை!..//

    எந்த அளவுக்கு நேசம் என்பது புரிகின்றது..
    சிறப்பான தொகுப்புகள் தொடர்வதற்கு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி துரை சார் !!

      Delete
  4. வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  5. சகோதரி மேனகா,

    சுருக்கமான, அழகான சுய அறிமுக உரை. உங்கள் வலைப்பூவின்மேல் நீங்கள் கொண்டுள்ள பாசம் புரிகிறது.

    இந்தவார வலைச்சர ஆசிரியரான‌தற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சித்ராசுந்தர் !!

      Delete
  6. வணக்கம்
    வலைச்சர ஆசிரியர் பணிக்கு வருக வருக
    நல்ல அறிமுகம் இந்தவாரம் சிறப்பாக அசத்த எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன் சகோ!!

      Delete
  7. நல்வரவு மேனகா.

    விட்டுப்போன சமையலை இப்பதான் ருசி பார்த்துக்கிட்டு இருக்கேன்:-)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி துளசிம்மா!!

      Delete
  8. ரத்தினச்சுருக்கமான சுய அறிமுகம் படிக்க எளிமையாகவும், எரிச்சல் ஏற்படுத்தாமலும் உள்ளது. பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    //இப்போழுது வலைப்பூ என்னுடைய 3 வது குழந்தையாக கருதுகிறேன்.//

    ஆஹா ..... கைக்குழந்தை மீது மட்டுமே அதிக பாசமாகவும் மிகுந்த கவனமாகவும் இருப்பாள் .... எந்தத்தாயுமே ! :) சபாஷ் !

    ஆனால் பாவம் ..... நிஜமான அந்தச் சவலைக் குழந்தைகள் இருவரும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வைகோ ஐயா!!தங்கள் நகைச்சுவையை கண்டு ரசித்தேன்,அகமகிழ்ந்தேன்...

      Delete
  9. வலைச்சர ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள். பொதுவாக நான் சமையல் குறிப்புகளைப் பார்ப்பதில்லை. தெரிந்து வைத்ததை முதலில் செய்வோமமென்பதாலேயே.. உங்கள் சிறுதானியக் குறிப்புகள் ஈர்த்தது. வித்தியாசமான பல செய்முறைகள் போட்டிருக்கீங்க அதற்காகவே இணைகிறேன் உங்கள் பக்கத்தில்.... வாழ்த்துக்கள். என் முக நூல் பக்கத்திலும் பகிரப் போகிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி எழில்!! முகநூல் பக்கத்திலும் பகிர போவதற்காக மிக்க மகிழ்ச்சி...

      Delete
  10. நல்வரவு மேனகா! வலைச்சர ஆசிரியர் பதவியேற்ற‌ற்கு இனிய வாழ்த்துக்கள்! ஒவ்வொரு நாளும் அசத்தலாகத்தொடர்வீர்கள் என்று நம்புகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மனோ அம்மா!!

      Delete
  11. நல்வருகை

    WELCOME

    BIENVENUE

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  12. அழகான அறிமுகம். ஆசிரியப் பொறுப் பேற்றதற்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு நாளும் விதவிதமான பகிர்வுக்கு காத்திருக்கிறேன் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி காயத்ரி!!

      Delete
  13. வலைச்சர பணி ஏற்றதற்கு வாழ்த்துகள். சுருக்கமான அழகான அறிமுகம்.

    ReplyDelete
  14. ஆசிரியப்பணி சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்!!

      Delete
  15. அழகான ஆரம்பம்!! வலைச்சர ஆசிரியப்பணியை ஏற்றமைக்கு வாழ்த்துக்கள் மேனகா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ப்ரியசகி!!

      Delete
  16. அட இந்த வாரம் நீங்களா ? அசத்துங்க ... சுய அறிமுகம் சிம்பிளா அழகா இருக்கு.

    வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி!!

      Delete
  17. Replies
    1. மிக்க நன்றி அமுதாக்கா!!

      Delete
  18. வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  19. விருந்துகளுடன் சுய அறிமுகம் செய்து கொண்ட மேனகா சத்யா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.
    தமிழ் மணம் 5
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    ReplyDelete
  20. வாழ்த்துக்கும்,தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி சகோ!!

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் மேனகா :)
    ..கைகுட்டை போட்டு இடம் பிடிச்சிட்டேன் .இந்த வாரம் முழுதும்me இங்கேதான் அருமையான சுய அறிமுகம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஏஞ்சலின் !! இடத்தை யாருக்கும் விட்ராதீங்க..

      Delete
  23. சுவையான பதிவு... ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அனுராதா!!

      Delete
  24. வலைச்சர ஆசிரியை பொறுப்பேற்றிருப்பதற்குப் பாராட்டுக்கள் மேனகா! சிறப்பாக பணி செய்ய வாழ்த்துக்கள்!
    நட்புடன்,
    ஞா.கலையரசி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கலையரசி !!

      Delete
  25. இந்த வாரம் வலைச்சரம் மணக்கும்.... :-)

    ReplyDelete
  26. //சீனா ஐயா வலைச்சர பொறுப்பினை ஏற்க சொன்ன போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.பின் சகோ பிரகாஷ் அழைத்ததும் ஏற்றுக்கொண்டேன். // யக்காவ் ஏன் இந்த கொலவெறி

    ReplyDelete
    Replies
    1. ஜெய் என்ன கொலவெறி நிஜமாவே புரியலயே...

      Delete
  27. இந்த வாரம் மணம் வீச வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் மேனகா :)!++++++++++++++++++++++++++++++

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆசியாக்கா!!

      Delete
  29. சுருக்கமான சுய அறிமுகம்... வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  30. நறுக்கென்ற சுருக்கமான அறிமுகம் அருமை மற்றும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு பாராட்டுகள் அக்கா !

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. மேனகா

    ஜே மாமியின் மனமார்ந்த வாழ்த்துக்கள். நாமெல்லாம் சந்திக்கா விட்டாலும் மனதளவில் ஒரு அருமையான நெருக்கம் இழையோடுகிறது. ரிடையர் ஆகி இப்பதான் செட்டில் ஆகி இருக்கேன். இனி உங்கள், ஏன் எல்லாருடைய வலைத்தளங்களுக்கும் வருகை (தர ஆசை தான்) தர முயற்சிக்கிறேன்.

    வாழ்த்துக்களுடன்
    ஜே மாமி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மாமி !!தங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்,மிக்க மகிழ்ச்சி...

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது