இன்றைய பதிவில்
வாட்ஸப் ஐ கூகிள் குரோமிலும் பயன்படுத்தலாம் என இங்கே விளக்கம் அளித்துள்ளார் சகோ பிரகாஷ் .
முருங்கைகீரை பொடி கேள்விபட்டிருக்கிங்களா செய்முறையை திருமதி ராஜலஷ்மிம்மா சொல்லியிருகாங்க..
சரண்யாவின் கைவண்ணத்தை இங்கே பாருங்களேன்,தேவையில்லாமல் நாம் தூக்கி எறியும் பொருட்களில் அழகா செய்துருக்காங்க..
மோதகமும் அதிரசமும் என்ற தலைப்பில் நகைச்சுவையாக கில்லர்ஜி அவர்கள் எழுதியிருக்காங்க..
இயற்கை அழகு சாதனங்கள் பற்றிய குறிப்புகள் இங்கே..
குழந்தைகளுக்கான
நீதிக் கதைகள் நிறைய இருக்கும் வலைப்பூ இது.
பழைய சாதத்தின் மகிமையை அழகா சொல்லியிருக்காங்க இங்கே...
தாம்பூலம் தரும் முறையை
இங்கே மிகவும் அழகா பாரம்பரியத்தோடு சொல்லியிருக்காங்க..
சித்தமருத்துவபயன்கள்,மருத்துவங்கள் உள்ள வலைப்பூ இது.
மொட்டை மாடியில் பாதுகாப்பாக தோட்டம் அமைப்பது பற்றி
இங்கே சொல்லியிருக்காங்க,மறக்காம போய் பாருங்க.
மாடியில் ஒரு உணவுத்தோட்டம் பற்றி
சொல்வனத்தில் சொல்லியிருக்காங்க,வாங்க போய் பார்க்கலாம்.
உஷா அவர்களின் வலைப்பூவில் ஏராளமான பயனுள்ள குறிப்புகள் இருக்கிறது.
பாதாமின் பயன்கள் மற்றும் உணவு செய்முரைகள் எழுதியிருக்கிறார்.
என்ன நண்பர்களே இந்த வாரம் முழுவதும் பதிவுகளை ரசித்திருப்பிர்கள் என நம்புகிறேன்.இந்த வாய்ப்பினை எனக்களித்த சீனா ஐயாவுக்கும் சகோ பிரகாஷ்க்கும் நன்றியை தெரிவித்து விடை பெறுகிறேன்.வணக்கம் !!
மேலும் வாசிக்க...
இன்றைய வலைச்சரத்தில்...
எப்போழுதும் சிக்கன்,மட்டனில் தான் பிரியாணி செய்வோம்.ஒரு மாறுதலுக்கு மீனில் செய்து பாருங்களேன்.சுவை நன்றாக இருக்கும்.
செய்முறை இங்கே..
ஸ்மார்ட்போன் கேமராவில் தெளிவாக படம் எடுப்பது பற்றி இங்கே சொல்லியிருக்காங்க.
திருவண்ணாமலை தீபத்தை பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைகள் புண்ணியமாம்.மேலும் தெரிந்துக் கொள்ள
இங்கே பார்க்கவும்.
துரை செல்வராஜ் அவர்கள்
சிவலாய தரிசனத்தை பக்தி மணத்தோடு அழகா எழுதியிருக்காங்க..
வாழ்க்கைக்கு உதவும் பல்வேறு தகவல்கள்
இங்கே நிறைய இருக்கு.
வீட்டு தோட்டம் போட விருப்பமா தகவல்கள்
இங்கே இருக்கு..
விக்கிரமாதித்தன் கதைகளை சிறிய வயதில் ரத்னபாலா அம்புலிமாமா புத்தகத்தில் படித்ததோடு சரி,
இங்கே தளிர் சுரேஷ் அவர்கள் விக்கிரமாதித்தன் கதை எழுதியிருகாங்க பாருங்கள்..
கோபத்தை விட கொடுமை உண்டா என நீதிக்கதையுடன் அழகா விளக்கியிருக்கிறார் யாதவன் நம்பி அவர்கள்...
நாலாயிர திவ்விய பிரபந்தம் பற்றி முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள் அழகாக சொல்லியிருக்கிறார்..
தோழி கௌசல்யா அவர்கள்
தாம்பத்தியம் பற்றி ஒவ்வொரு பகுதிகளிலும் அழகா சொல்லியிருக்கிறார்.இந்த பகுதியை படித்து இப்படி கூட அழகா எழுதி சொல்லமுடியுமா என மிகவும் வியந்திருக்கிறேன்.
வெங்கட் நாகராஜ் அவர்கள்
ஏரிகளின் நகரம் என அழைக்கபடும் நைனிதால் பற்றி 20 பகுதிகளாக எழுதி இருக்கிறார்.நீங்களும் பாருங்களேன்.
மீதி நாளைய பதிவில்..
மேலும் வாசிக்க...
இன்றும் நாம் பார்க்க போவது பொது வலைப்பூக்கள்
இந்து சமய குறித்த ஆன்மிக செய்திகள் உள்ள வலைப்பூ இது..
http://arivomaanmeekam.blogspot.in/
இந்த வலைப்ப்பூவில் இந்துசமயம் மற்றும் ஜோதிடம் குறித்த தகவல்கள் இருக்கு..
http://aanmikam.blogspot.in/
குறிப்பிட்ட தலைப்புக்கு விளக்கமளித்து அதர்கெற்ற திரைப்படபாடல்களை அளித்து வரும் இந்த வலைப்பூவில் நிறைய பாடல்கள் இருக்கு..
தமிழை பிழையின்றி பேச எழுத வேண்டுமா அப்போ இங்கே போய் பாருங்கள்
பாடும் நிலா திரைப்பட பிண்ணணி பாடகர் எஸ்.பி.பி பாடிய பாடல்கள் உள்ள வலைப்பூ..
புதிர்க்கணக்குகள்,வார்த்தை விளையாட்டுக்கள் உள்ள வலைப்பூ இது..
தானியம் மற்றும் பழஉணவுகள் கவனம் தேவை ,எதற்கு என இங்கே விளக்கம் கூறப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டினை நமக்கு இலவசமா சுற்றி காட்டியிருக்காங்க பிரியசகி,நீங்களும் அந்த கண்கொள்ளா காட்சியை பாருங்களேன்..
சகோ குமார் தொடர்கதை எழுதுவதில் வல்லவர்.80 பகுதிகளைக் கொண்ட
கலையாத கனவுகள் தொடர்கதையை நீங்களும் படிங்களேன்..
மேலும் வாசிக்க...
இன்றைய வலைச்சரத்தில் நாம் பார்க்க போவது பொது வலைப்பூக்கள்
தொப்பையை குறைக்க 14 வழிகளை இந்த வலைப்பூவில் வலைபதிவர் சொல்லியிருக்கிறார்,நீங்களும் போய் பாருங்களேன்.
கணினி பற்றிய ஏராளமான செய்திகள் நிறைய இருக்கு இந்த வலைப்பூவில்..
இந்து சமய கோயில்கள்,தகவல்கள் என ஆன்மிகம் செய்திகள் இடம்பெற்றுள்ள வலைப்பூ இது.
http://atmaanubhavangal.blogspot.com/
இயற்கை உணவு ,இயற்கை வாழ்வு ,இயற்கை மருத்துவ முறைகள் என இயற்கை வாழ்வோடு வாழ வழிகாட்டும் வலைப்பூ இது.
http://naturalfoodworld.wordpress.com/
ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவரா ,அப்போ உங்களுக்கான வலைப்பூ இதோ..
சித்தர்கள் குறித்த செய்திகள்,தியான முறைகள் மற்றும் யோகா பயிற்சிகள் என நிறைய செய்திகளை சொல்லும் வலைப்பூ இது..
http://yogicpsychology-research.blogspot.in/
அனுராதா அவர்கள்
கர்நாடகா கொல்லூரை இலவசமாக சுற்றி காண்பித்திருக்கிறாங்க...
பின்னூட்ட புயல் ரூபன் அவர்களின் தளத்தில் சிறுகதைகள் மற்றும் கவிதை போட்டிகள் பல நடத்தி விருதுகளும் பொடுப்பவர்.இவரின் தளம் இதோ..
துளசிம்மாவை தெரியதவங்க இந்த வலையுலகில் இருக்கமுடியாது.அவரால் எபப்டி அனுஅனுவாய் எழுத்தினை ரசித்து எழுதுகிறார் என பலமுறை வியந்ததுண்டு.நிறைய பயனுள்ள பதிவுகள் இருக்கு.இவரின் வலைப்பூ இதோ..
வை.கோ ஐயாவின் வலைப்பூ மிக சுவராஸ்யமானது.காஞ்சி மகா பெரியவரின் மகிமைகளை அழகா சொல்லிருக்கிறார்.நீங்களும் பாருங்களேன்..அவரின் வலைப்பூ இதோ!!
மீதி நாளைய பதிவில்
மேலும் வாசிக்க...
இன்று நாம் பார்க்க போவது சமையல் வலைப்பூக்கள்
நீரின்றி அமையாது உலகுன்னு சொல்வாங்க ஆனா என்னைப் பொறுத்தவரை உணவின்றி அமையாது நம் உயிர் அதனால் இன்றைக்கு நான் முதலிடம் தரப்போவது சமையல் வலைப்பூக்களுக்கே...
சமைக்கும் போது கவனம் சிதையாமல் சமைத்தாலே அந்த சமையல் ருசியாக இருக்கும்.
எடுத்தவுடனே இந்த சமையல் சமைத்தேன் சரியாக வரவில்லை என சொல்லாமல் அதில் எப்படி என்ன தவறு செய்தோம் என கண்டறிந்து பின் மறுபடியும் சமைத்தால் ஆஹோ ஒஹோ தான்.
சமைக்கும் போது அன்பு என்னும் சுவையையும் கலந்து சமைத்தால் சாப்பிடுபவர்களின் வயிறு நிறைந்து நம்மை வாழ்த்துவதே இருக்கு அதற்கு ஈடு இணை எதுவுமில்லை என்பேன்.
சமைப்பது ஒருகலை என்றால் அதனை இன்முகத்துடன் பரிமாறுவதே தனிகலை.சுவையில்லாத உணவுகூட சுவையாயிருக்கும்.
அறுசுவை.காம் இந்த வலைப்பூவில் ஏராளமான குறிப்புகள்.இப்போ புதுமுயற்சியாக வீடியோ தொகுப்புகளை அறிமுகபடுத்தியிருக்காங்க.நீங்களும் போய் பாருங்களேன்.
வஞ்சீரம் மீன் குழம்பு மற்றும் வறுவல் பற்றி சுவையா எழுதியிருகாங்க சித்ரா அவர்கள்,ஸ்ஸ்ஸ் சொல்லும்போதே நாவூறுதே....
வேர்க்கடலை குழம்பு எப்படி செய்றதுன்னு சுவைபட சொல்லியிருகாங்க,நானும் செய்து பார்க்கனும்..
தக்காளியோதரை கேள்விபட்டிருக்கீங்களா,அது என்னன்னு தெரிஞ்சுக்க இங்க போய் கொஞ்சம் பார்த்துட்டு வாங்க...
மணத்தக்காளியில் செய்துருக்கீங்களா,நானும் செய்ததில்லை.அதை எப்படி செய்றதுன்னு நீங்களே போய் இங்க பார்த்துடுங்க.
பொரிச்சகரை சமையல் பெயரே வித்தியாசமா இருக்குல்ல..செய்முறை குறிப்பு இங்கே.
குடம்புளி சேர்த்து ஏஞ்சலின் அவர்கள்
மீன் குழம்பு செய்துருக்காங்க இங்க வந்து நீங்களும் பாருங்க.இது பெரும்பாலும் கேரளாவில் மட்டுமே பயன்படுத்துவார்கள்.குடம்புளி உடம்புக்கு மிக நல்லது.
கொங்கு நாட்டு சமையல் குறிப்புகள் ஏராளமா இருக்கு இங்கே..
கதிர்வடை கேள்விபட்டிருக்கிங்களா,இல்லைன்னா செய்முறை குறிப்பு இங்கே இருக்கு வாங்க பார்க்கலாம்..
பெரும்பாலும் தூள் வெல்லம் கிடைப்பதில்லை,உருண்டை வெல்லத்தை ஈசியாக எப்படி துருவலாம் என
இங்கு சொல்லியிருக்காங்க.இது ஒரு ஆங்கில வலைப்பூ.
மீதி நாளைய பதிவில்
மேலும் வாசிக்க...
முதலில் வலைச்சர ஆசிரியர் பதவியை தந்த சீன ஐயாவுக்கும் தமிழ்வாசி ப்ரகாஷ்க்கும் மிக்க நன்றி.
போன வருடமே சீனா ஐயா வலைச்சர பொறுப்பினை ஏற்க சொன்ன போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.பின் சகோ பிரகாஷ் அழைத்ததும் ஏற்றுக்கொண்டேன்.
இப்போழுது என்னைப் பற்றி சொல்கிறேன்..
என் பெயர் மேனகா.
சஷிகா என்னும் வலைப்பூவில் கடந்த 6 வருடத்திற்கும் மேலாக பல சமையல் குறிப்புகளை எழுதி வருகிறேன்.கணவர் மர்றும் 2 குழந்தைகளுடன் பிரான்சில் வசிக்கிறேன்.ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்காக் வீட்டில் சமைத்த குறிப்புகளை பகிர்ந்து வந்தேன்,இப்போழுது வலைப்பூ என்னுடைய 3 வது குழந்தையாக கருதுகிறேன்.
இதில் சைவம்,அசைவம்,பேக்கிங்,வெளிநாட்டு சமையல் என நிறைய குறிப்புகளை நான் சமைத்து ருசித்ததையே பகிர்கிறேன்.
என்னுடைய குறிப்புகளில் எனக்கு மிக பிடித்தவை
லட்டு
தால் பக்வான் - இது நம்ம ஊரு மைதா பூரிபோல தான் ஒரு மாறுதலுக்கு செய்து பாருங்களேன்,அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க.
தாளி உணவு வகைகள்
அசைவ பிரியாணி வகைகள்
சரவண பவன் சாம்பார் மற்றும்
கார சட்னி
சிறுதானிய குறிப்புகள்
சட்னி வகைகள்
நாளை முதல் மற்ற பதிவர்களின் அறிமுகங்களை பார்க்கலாம்..
நன்றி!!
மேலும் வாசிக்க...