வலைச்சரத்தில் நான்
மீண்டும் நான்!
வணக்கம் பலமுறை சொன்னேன்
தமிழ் பதிவர்கள் முன்னே – வலைச்சரம் வழியே.
சுயதம்பட்டம்!
2012 அக்டோபர் மாதம் முதல் தடவை பதவி ஏற்பு. இதோ மறுபடியும் உங்கள்
முன் மீண்டும் நான் என்கிற ரஞ்சனி நாராயணன். இந்த இரண்டு + வருடங்களில் எனது இணைய
அறிவு கூடியிருக்கிறதா? எனது எழுத்தில் மெருகு ஏறியிருக்கிறதா? தினமும்
ஆயிரக்கணக்கில் என் பதிவுகளைப் படிக்க உலகெங்கிலிருந்தும் மக்கள் போட்டிபோட்டுக்
கொண்டு வருகிறார்களா? தமிழ் மணத்தில் எனது ரேங்க் முன்னேறியிருக்கிறதா? இல்லை,
இல்லை, இல்லை. ஏன் இப்படி வேர்ட்ப்ரஸ்-ஐ கட்டிக் கொண்டு அழுகிறீர்கள்? ப்ளாக்
ஸ்பாட்டிற்கு மாறுங்கள் என்று பலர் சொல்லியும் (சொல்ற பேச்ச கேட்கற வழக்கம்
என்னிக்கு இருந்தது, இனிமேல் வர? ஐந்தில் வளையாதது ஐம்பதில் – மன்னிக்கவும்
அறுபதில் வருமா?) தொடர்ந்து வே.க.அ.!
ஆனால் இந்த வருடங்களில் சில மாறுதல்கள் எனது எழுத்தில். இதுவரை எனது
எழுத்தில் நகைச்சுவை அதிகமாக இருக்கும். இப்போதும் அப்படி எழுதவே விரும்புகிறேன்.
ஆனால் எனக்கு வந்த சில வாய்ப்புகள் என்னிடமிருந்து சீரியஸ்ஸான எழுத்துக்களை
எதிர்பார்த்ததால் சற்று மாற வேண்டியிருந்தது. நடப்பவை எல்லாமே நல்லதிற்குத்தான்,
இல்லையா?
ஆழம் என்னும்
மாத இதழில் சென்ற 2013 ஏப்ரல் மாதத்திலிருந்து எழுத ஆரம்பித்தேன். எல்லாமே அரசியல்
செய்திகள். அவ்வப்போது நடப்பவை. நிறைய அரசியல் செய்திகளைப் படித்து தொகுத்து எழுத
வேண்டி இருந்தது. அதுமட்டுமல்ல. 2014 ஆம்
ஆண்டு நான் எழுதிய விவேகானந்தர் பற்றிய புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடாக வந்தது.
டயல் ஃபார் புக்ஸ் மூலம் வாங்கலாம். 2015 இல் இரண்டாவது புத்தகம் மலாலா – ஆயுத
எழுத்து வெளியானது. இதுவும் கிழக்குப் பதிப்பக வெளியீடு தான்.
மின்னூல்கள்
இரண்டு வந்திருக்கின்றன. சொல்ல மறந்துவிட்டேனே! முதல் முறையாக ஒரு
போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசும் பெற்றிருக்கிறேன். வல்லமை இதழில் திரு ஜோதிஜி எழுதிய
டாலர் நகரம் புத்தகத்தைப் பற்றி எழுதிய புத்தக மதிப்புரைக்கு மூன்றாம் பரிசு
கிடைத்திருக்கிறது. இதைவிடப் பெரிய பரிசு இந்தப் போட்டிக்கு நடுவராக இருந்த
பத்திரிக்கையாளர் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் பாராட்டுரை.
மெல்ல மெல்ல எனது எழுத்துக்களின் எல்லைகளை விரிவுபடுத்த ஆரம்பித்தேன்.
என்ற இணைய தளத்தில் எழுத ஆரம்பித்தேன். என் எழுத்தும் மாறியது. அரசியல்
அதிகம் பேசுவது இல்லை நான். ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்கிற
மனநிலைதான். ஆனால் அடுத்தடுத்து வந்த மோசடிகள், ஊழல்கள், அண்ணா ஹசாரே அவர்களின்
தலைமையில் ஊழலுக்கு எதிராக இந்தியாவே திரண்ட போது நானும் விழித்துக் கொண்டேன். அந்தப்
போராட்டத்தின் மையமாக இருந்த திரு அர்விந்த் கெஜ்ரிவால் பேசிய பேச்சுக்களில் புதிய
நம்பிக்கை ஏற்பட, அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.
அவர் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியவுடன் ஒரு புதிய நம்பிக்கை.
இந்தியாவிற்கு ஒரு புது வெளிச்சம் வருமென்று. அவர் மேல் இருந்த நம்பிக்கை எத்தனையோ
பேர் எத்தனையோ சொல்லியும் குறையவில்லை. அந்த நம்பிக்கையில் கெஜ்ரிவாலுக்கு ஒரு
கடிதம் எழுதினேன்.
ஷேக்ஸ்பியரின் 450 வது பிறந்தநாளைக்கு வாழ்த்துச் சொன்னேன்.
கடிதம் எழுதுவது என்பது வழக்கத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும்
இந்த வேளையில் வல்லமையில் கடிதம் எழுதும் போட்டி வைத்தார்கள். மூன்றாம் பரிசு
பெற்றது எனது கடிதம்: மணிமொழியாகிற
என் அன்பு அம்மாவே...!
நான்குபெண்கள் என்னும் தளத்தில் குழந்தை வளர்ப்பு பற்றிய தொடர் ஆரம்பித்தேன். 80
வாரங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. நடுவில் சில காரணங்களால் எழுத
முடியாமல் போயிற்று. அந்த தளத்தின் சொந்தக்காரர் மிகவும் புரிதலுடன் நான் மீண்டு
வர நேரம் கொடுத்தார். இப்போது தொடர்ந்து எழுதுகிறேன். இந்த தளத்திலேயே நோய்நாடி நோய்முதல் நாடி என்ற உடல்நலம்
பற்றிய தொடர் கட்டுரையும் வந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் அதையும் மீண்டும்
தொடர எண்ணியிருக்கிறேன்.
அமெரிக்காவிலிருந்து
வரும் ‘தென்றல்’ மார்ச் இதழில் எனது வலைப்பூ அறிமுகம் செய்யப்பட்டது. வலையுலகின் வளைக்கரங்கள் என்ற பகுதியில்
என்னைப்பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். நான் எழுதும் குழந்தைகள் வளர்ப்பு
தொடர், அறிவியல் கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
சுய தம்பட்டம் போதும் என்று
நினைக்கிறேன்.
நாளை...
சங்கடமான சமையலை விட்டு........என்ன
செய்யப்போகிறேன்? பொறுத்திருந்து பாருங்கள்.
|
|
வலைச்சர பணியேற்கும் மதிப்புக்குரிய ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு நல்வரவு!.. வாழ்க நலம்!..
ReplyDeleteவாங்க துரை செல்வராஜூ!
Deleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
சகலகலாவல்லவர் நீங்கள்...
ReplyDeleteஉடல்நலம் பற்றிய தொடர் கட்டுரையையும் தொடர வேண்டும் அம்மா...
வாங்க தனபாலன்!
Deleteவீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டதால் இந்தத் தொடர் தற்காலிகமாக நின்றிருக்கிறது. நிச்சயம் தொடருகிறேன்.
வருகைக்கும் புதிய விருதிற்கும்(!) நன்றி!
தமிழ்த் தென்றல் தவழ்ந்து வீசட்டும்
ReplyDeleteவலைச்சரம் மணம் கமழட்டும்.
இந்த வாரம் வலைச்சர பணியேற்கும் மதிப்புக்குரிய ரஞ்சனி நாராயணன் அவர்கள் பணி
சிறக்க வாழ்த்துகள்.
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
வாங்க யாதவன் நம்பி.
Deleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. உங்கள் தளத்திற்கும் சென்று பார்த்து படித்துவிட்டு வந்தேன். உங்களுக்கும் எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
வலைச்சர ஆசிரியராகப்பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்! சுய அறிமுகம் அருமை!
ReplyDeleteவாங்க மனோ.
Deleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி.
வாழ்துக்களும்,ஆசிகளும் கூறி வரவேற்கிறேன். அன்புடன்
ReplyDeleteவாங்கோ காமாக்ஷிமா!
Deleteவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் நன்றி.
வாருங்கள் அம்மா ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க உமையாள்!
Deleteமிகச் சிறப்பாக சென்ற வாரத்தை வலைச்சரத்தில் தொடுத்திருக்கிறீர்கள். அதற்கு பாராட்டுக்கள். உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
வாங்க...வாங்க...
ReplyDeleteவலைச்சரத்துல கலக்குங்க!
வாங்க ஸ்ரீராம்.
Deleteவருகைக்கும், கலகலப்பான வரவேற்பிற்கும் நன்றி!
வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று சிறப்பாக பணிசெய்து நேற்றுடன் விடைபெறும் திருமதி. உமையாள் காயத்ரி அவர்களுக்கு நம் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்று முதல் வலைச்சர ஆசிரியராக, மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்து, புதிய பொறுப்பேற்க உள்ள திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்களுக்கும் நம் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.
வருக! வருக!! வருக!!! என வரவேற்று மகிழ்கிறோம்.
அன்புடன் VGK
வாங்கோ கோபு ஸார்!
Deleteவருகைக்கும், பாராட்டுக்கள்+வாழ்த்துக்களுக்கு நன்றி.
வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள். அருமையான வலைச்சரம் தொடுக்கவும் பாராட்டுகள். பதிவை ஷெட்யூல் பண்ண சரியா வந்ததா? நேத்து மத்தியானம் இணையத்தில் அமரவே முடியலை! :( அப்புறமா மறந்தும் போச்சு!
ReplyDeleteவாங்க கீதா!
Deleteஎன் பிள்ளை உதவியுடன் கற்றுக் கொண்டு விட்டேன். இந்திய நேரத்திற்கே மாற்றிக்கொண்டு விட்டேன்.
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் ரஞ்சனி.. அசத்தலான அறிமுகப் பதிவு. எத்தனை எத்தனை வார மாத இணைய இதழ்களில் உங்கள் எழுத்துக்கள் வலம் வருகின்றன. உங்களைப் பார்த்துப் பொறாமைப் படாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அதே சமயத்தில் நீங்கள் என் தோழி என்று பெருமையாகவும் இருக்கிறது ரஞ்சனி.
ReplyDeleteவாழ்த்துக்கள் ரஞ்சனி.
வாங்க ராஜி!
Deleteதோழியான உங்கள் பொறாமை எனக்கு நன்மையே செய்யும். வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
வலைச்சரம் தொடுக்கவரும் திருமதி. ரமணி நாராயணன் அவர்களை வரவேற்கின்றேன்.
ReplyDeleteதமிழ் மணம் – 6
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
//திருமதி. ரமணி நாராயணன் அவர்களை வரவேற்கின்றேன்.
Deleteதமிழ் மணம் – 6 //
கில்லர்ஜி, அவர் ரஞ்சனி நாராயணன். ரமணி நாராயணன் இல்லை. :)
வாங்க கில்லர்ஜி!
Deleteஎன்னுடைய பெயரை 'கில்' பண்ணிவிட்டீர்களே! பரவாயில்லை அந்தப் பெயரும் நன்றாகவே இருக்கிறது.
நன்றி கீதா.
வருகைக்கும் வரவேற்பிற்கும் நன்றி கில்லர்ஜி!
மன்னிக்கவும் தவறு நடந்து விட்டது இதையே சாக்காக வைத்து என்னை கொலைகாரனு சொல்லிட்டீங்களே....
Deleteநன்றி கீதா மேடம்
கில்லர்ஜி
.நான் வலைச்சர ஆசிரியராக இருந்த ஜனவரி கடைசி வாரத்தில் இரண்டாம் நாள் வாய்விட்டுச் சிரித்தால் என்ற நகைச்சுவை பதிவுகளின் தொகுப்பில் நீங்கள் எழுதிய இங்க திரிஷா யாரு என்ற பதிவை அறிமுகம் செய்தேன். http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html
ReplyDeleteநான்காம் நாள் தொகுப்பில் உங்களது ‘நான் ஒரு பெண் நான் பாதுகாப்பாக இல்லை,’ என்ற கட்டுரையை அறிமுகம் செய்தேன்.
http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_29.html
உங்கள் எழுத்தை ஏற்கெனவே நான் வாசித்திருக்கிறேன். வல்லமையில் நடந்த கடித இலக்கிய போட்டியில் நீங்கள் எழுதிய கடிதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அம்மாவுக்கு எழுதிய கடிதத்தின் கடைசியில் யாரோ ஒரு பையன் காலடியில் அமர்ந்து என்னைத் தாத்தா தாத்தா என்கிறான்; அவன் யாரென்று தெரியவில்லை என்று எழுதியிருந்ததைப் படித்தவுடன் மனம் மிகவும் பாரமாகி விட்டது.
டாலர் நகரம் புத்தக விமர்சனப்போட்டிக் கட்டுரையையும் வாசித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற கட்டுரைகளை இனிமேல் தான் வாசிக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு பற்றி 80 வாரங்களாகத் தொடர்ந்து எழுதவது அறிந்து மலைப்பாக இருக்கிறது.
இந்த வாரம் சிறப்பாக ஆசிரியர் பணியாற்ற வாழ்த்துக்கள்!
ஞா. கலையரசி.
வாங்க கலையரசி.
Deleteநீங்கள் என் பதிவுகளை அறிமுகம் செய்ததே எனக்குத் தெரியவில்லை. இன்று உங்கள் மடல் மூலம் தெரிந்துகொண்டேன். மன்னியுங்கள்.
எப்போதும் வலைச்சர ஆசிரியர்கள் அறிமுகம் செய்பவர்களின் வலைத்தளத்திற்குச் சென்று செய்தி சொல்லுவார்கள். நீங்கள் எனக்குப் புதியவர் ஆதலால் என் அறிமுகம் இருக்காது என்று நினைத்துவிட்டேன். எத்தனை பெரிய தவறு என்று இப்போது வருந்துகிறேன். மறுபடியும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி கலையரசி!
மன்னிப்பெல்லாம் மிகப் பெரிய வார்த்தை ரஞ்சனி மேடம்! நான் உங்கள் தளத்துக்கு வந்து அறிவிப்பு கொடுக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. உங்கள் தளத்தில் பின்னூட்டம் எங்குக் கொடுப்பது என்று தெரியாததால் விட்டுவிட்டேன். அதனால் பரவாயில்லை. ஒரு வாரத்தில் இரண்டு தடவை உங்கள் பதிவுகளைச் சொல்லும் அளவுக்கு உங்கள் எழுத்து என்னைக் கவர்ந்திருக்கிறது என்பதைச் சொல்வதற்காகவே இன்று தெரிவித்தேன். மீண்டும் வாழ்த்துக்கள்!
Deleteஅட்டகாசமான அறிமுகம். உங்களைப்பற்றி உங்கள் எழுத்தைப் பற்றி தெரியாத பல தகவல்கள். அவை நிச்சயம் சுய தம்பட்டம் இல்லை. வலைச்சர ஆசிரியப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க கவிப்ரியன் கலிங்கநகர்!
Deleteவேர்ட்ப்ரஸ் -இல் எழுதுவதால் அதிகம் பேர்களுக்குத் தெரியாது என்னை.
உங்கள் வருகைக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் நன்றி!
அருமையான சுயவிவரம் அக்கா , தங்களைப்பற்றி படிக்கும்போது , நாமும் இதுபோலவே எழுதவேண்டும் என்ற ஆர்வம் உள்ளுக்குள் பீறிட்டு வந்தாலும் , வேண்டாம் விபரீத முயற்சி என்று ஆர்வத்தை அடக்க்கொள்ள வேண்டியிருக்கிறது . தங்களின் பதிவுகளை இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் . படித்துமுடித்துவிட்டு மீண்டும் கருத்துரைப்பெட்டிக்கு வருகிறேன் . பாராட்ட .
ReplyDeleteவாங்க megneash கே. திருமுருகன்.
Deleteஉங்கள் முதல் பெயரை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. அப்படியே ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன்.
நீங்களும் நிச்சயம் என்னைப்போல் எழுதலாம்.
நானும் உங்கள் பாராட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
வருகைக்கும், படித்துப் பார்த்ததற்கும் நன்றி
மெக்னேஷ் அக்கா , :-) கொஞ்சம் குழப்பமான பெயர்தான் .
Deleteஉங்கள் பெயரை சரியான முறையில் எழுதக் கற்றுக் கொண்டேன். நன்றி.
Deleteவாழ்த்துக்கள் அம்மா! தொடருங்கள்!
ReplyDeleteவாங்க சுரேஷ்!
Deleteவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
அறிமுக உரை அருமை.
ReplyDeleteபன்முக வித்தகி நீங்கள்.
சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போகிறீர்களா?
நாளை அறிய ஆவல்.
வாங்க கோமதி,
Deleteஆமாம் கண்டுபிடித்துவிட்டீர்களே!
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
வாங்க, வாங்க, வரும் வாரம் முழுவதும் கலக்கலாக இருக்கப்போகிறது. சுயஅறிமுகம் அருமை. மீண்டும் வலைச்சர ஆசிரியரானதற்கு பாராட்டுக்கள் !
ReplyDeleteவாங்க சித்ரா!
Deleteவருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!
சுய அறிமுகம் சிறப்பாக உள்ளது. இவ்வாரம் முழுவதும் உங்களது பதிவுகளைக் காண ஆவலாக உள்ளேன். இரண்டாம் முறையாக ஆசிரியர் ஆவது அறிந்து மகிழ்ச்சி. அறிமுகம்அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க டாக்டர் பி. ஜம்புலிங்கம்!
Deleteஉங்கள் வருகை மகிழ்ச்சியைக் கொடுக்கிறது, ஐயா.
இன்றைக்கு என்னுடைய அறிமுகம் மட்டுமே. நாளையிலிருந்துதான் அறிமுகங்கள் ஆரம்பம்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteகலக்குங்க...
வாங்க 'பரிவை' சே. குமார்,
Deleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
வாழ்த்துக்கள் அம்மா தொடர்க பணி.
ReplyDeleteவாங்க தனிமரம்,
Deleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
அருமை அம்மா. கிட்டத்தட்ட எல்லா விஷயங்களையும் தொட்டிருக்கிறீர்கள்....வலைச்சரப் பணி சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க கவிநயா
Deleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
.வலைச்சரஆசிரியருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க மாதேவி!
Deleteவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
சிறப்பான சுய அறிமுகம். பாராட்டுகள் ரஞ்சனிம்மா.....
ReplyDeleteவாங்க வெங்கட்,
Deleteவருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி!
கணினி பிரச்சினையால் வர இயலவில்லை சகோதரி மன்னிக்கவும். இன்றுதான் அற்ஹ்டுவும் வேறு ஒரு கணினி மூலம் பார்க்கின்றோம்.
ReplyDelete