‘ஸ்த்ரீ ஷக்தி’ சிறப்புச்சரம் - செவ்வாய்
➦➠ by:
ராமலக்ஷ்மி
இன்று மகளிர் தினம்.
“அறிவு, திறமை மட்டுமில்லாமல் வாய்ப்பும் வசதியும் இருக்கும் பெண்கள் வாழ்வில் சாதனைகள் புரிந்து முன்னணியில் இருப்பது பெரிய விஷயமில்லை.
மேற்சொன்ன விஷயங்கள் ஏதும் இல்லாமல் துணிச்சல் ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் தான் வாழும் சமூகத்தையும் சுற்றுப்புறத்தையும்.....ஏன் நாட்டையும் வளமாக்கப் போகும் பெண்களுக்குத்தான், இந்த உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!!!”
வாழ்த்துகிறார் ‘ninewest’ நானானி. பிரதம மந்திரி வாஜ்பாய் அவர்களிடம் 'ஸ்த்ரீ ஷக்தி’ விருது வாங்கிய திருமதி சின்னப்பிள்ளை பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள் இங்கே.. ‘பெண்ணே! உலகின் கண்ணே!!’
***
“பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால் பெண்களின் பெருமையைப் பெண்களே உணராமல் இருக்கிறார்கள்.(அனுமனின் பலம் அவருக்கே தெரியாதது போல)....பெண் பலவீனமானவள் என்று சித்திரிக்கப்பட்டதை உடைத்து, பெண் என்பவள் வீரம், தீரம், செறிந்தவள், திடமனம் உடையவள், மனபலத்தால் உடல் பலம் பெற்றவள் என்பதை உணர்த்த வேண்டும்.” கேட்டுக் கொள்கிறார் ‘திருமதிப் பக்கங்கள்’ கோமதி அரசு ‘உன்னையே நீ உணர்’என.
“நான் வேலைக்கு அனுப்புறதுக்காக படிக்க வைக்கவில்லை. எங்களுக்கு தேவையும் இல்லை” இப்படிச் சொல்பவர் கண்டு வருந்துகிறார் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' அம்பிகா, ‘பெண்கள் வேலைக்குச் செல்வது கேவலமா?’
“ஆணின் கையிலா பெண் சுதந்திரம்? பெண் எடுத்துக் கொள்வதிலா பெண் சுதந்திரம்? பெண்ணே பெண்ணின் சுதந்திரத்தை தடுப்பதிலா பெண் சுதந்திரம்? இல்லை சுதந்திரம் என்பது நம்மிடம்தான் (பெண்களிடம்தான்) உள்ளது....பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் அதே நிலைதான்...
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நமக்கென்று ஒரு எல்லைக் கோட்டை விதித்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவளே சுதந்திரமான பெண்..” சொன்னபடியே வாழ்ந்தும் காட்டும் Will To Live ரம்யா தேவி முன் வைக்கிறார் வாதங்களை, மகளிர் தினத்துக்காக தன் நண்பரின் வலைப்பூவில், ‘பெண்கள் தினம்’ குறித்து.
“எங்கள் புகுந்த வீட்டுப் பாட்டி கோமளம்மாள்.
என் பிறந்த வீட்டுப் பாட்டி ருக்மணி.
என் அம்மா ஜயலக்ஷ்மி.
என் மாமியார் கமலா சுந்தரராஜன்.
குறுகிய வட்டத்துக்குள் இவர்களை நான் வைக்க விரும்பவில்லை. ஒவ்வொருவரும் தன் சுயத்தை இழக்கவில்லை. சுய மரியாதையை விட்டுக் கொடுக்கவில்லை. மற்றவர்களுக்கும் உதவியாய் இருந்துவிட்டுத்தான் விண்ணுலகம் சென்றார்கள். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'' இது பாடல். மாதரே மாதரை இழிவு செய்யாமல் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக இந்தத் தினத்தைக் கொண்டாடுவோம்.” கொண்டாடுகிறார் ‘நாச்சியார்’ வல்லிசிம்ஹன் ‘மகளிர் சக்தி’யை.
“கேரியர் மட்டும்தான் முக்கியம் என்றோ அல்லது வேலைக்கு செல்வது மட்டுமே பெண்களின் சுதந்திரம்/முன்னேற்றப்பாதை என்றோ நான் சொல்லவரவில்லை. வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.
இருந்தாலும்,பெற்றோரின் உடல் நலத்திற்காகவும், தனது குழந்தைகளுக்காகவும் சம்பாரிக்க வேண்டிய கடமை எப்படி ஆண்களுக்கிருக்கிறதோ அதே கடமை அவர்களுக்குமிருக்கிறது. சொந்தக்காலில் நிற்கவேண்டியது எப்படி ஆண்களுக்கு அவசியமாகிறதோ அதே அவசியம் அவர்களுக்குமிருக்கிறது.” என்கிறார் அருமையாக, அழுத்தம் திருத்தமாக சித்திரக் கூடம் சந்தனைமுல்லை , X X & X Y in IT.
சக பெண்பதிவர்களின் முன் அருமையான கேள்விகளை முன் வைத்து, சிந்திக்க வைக்கும் பதில்களைப் பெற்று, அவர்களுக்கு ‘சிறுமுயற்சி’ முத்துலெட்சுமி தானே வடிவமைத்து வழங்கிய வியல்*விருதுகள், பெற்றது வெள்ளிப் பதக்கத்தை தமிழ் மணம் விருது 2010 பெண்கள் பிரிவில். அச்சிறப்புக் கட்டுரையில் “இணையத்தில் வியத்தலுக்குரிய செயல்களைச் செய்யும் ஒவ்வொரு வரையும் பெருமைப்படுத்தி இப்பொன் விருதினை வழங்குகிறேன். இங்கு பதிலளித்தவர்களுக்கும் எனக்கு பதிவுகளில் பின்னூட்டம் இட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் என் சக பதிவாளர்கள் அனைவருக்கும் இவ் “ வியல் ’* விருதினை வழங்குகிறேன். நேர்மறை எண்ணங்களைப் பரப்ப வாழ்த்துகிறேன்.” என மகிழ்ந்து வாழ்த்துகிறார்.
“* கள்ளிப் பாலையும்
கருவை முள்ளையும்
கடந்து வந்தவள் நான்..
* முப்பத்து மூன்றே
முடிவாய்க் கொடுத்தாலும்
முக்காலம் ஜெயிப்பவள் நான்.
....
* நல்லதும் நன்மையும்
நிரம்பிக் கிடக்கும்
நாளையப் பெண்ணும் நான்..
* ஒளிவட்டம் சூடாமல்
உயர்வாய் உயரும்
உலகின் எதிர்காலம் நான்..”
‘சும்மா’ தேனம்மையின் முழக்கமாகிய ‘என் பெயர் பெண்.. சென்னை சங்கமம் கவிதை’யுடன் நிறைவு செய்கிறேன் இன்றைய ஸ்த்ரீ ஷக்தி சிறப்புச் சரத்தை.
மேலும் வாசிக்க...

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!!
***
***