07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 8, 2011

‘ஸ்த்ரீ ஷக்தி’ சிறப்புச்சரம் - செவ்வாய்

இன்று மகளிர் தினம்.

“அறிவு, திறமை மட்டுமில்லாமல் வாய்ப்பும் வசதியும் இருக்கும் பெண்கள் வாழ்வில் சாதனைகள் புரிந்து முன்னணியில் இருப்பது பெரிய விஷயமில்லை.

மேற்சொன்ன விஷயங்கள் ஏதும் இல்லாமல் துணிச்சல் ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் தான் வாழும் சமூகத்தையும் சுற்றுப்புறத்தையும்.....ஏன் நாட்டையும் வளமாக்கப் போகும் பெண்களுக்குத்தான், இந்த உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!!!
”

வாழ்த்துகிறார் ‘ninewest’ நானானி. பிரதம மந்திரி வாஜ்பாய் அவர்களிடம் 'ஸ்த்ரீ ஷக்தி’ விருது வாங்கிய திருமதி சின்னப்பிள்ளை பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள் இங்கே.. ‘பெண்ணே! உலகின் கண்ணே!!’
***


“பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால் பெண்களின் பெருமையைப் பெண்களே உணராமல் இருக்கிறார்கள்.(அனுமனின் பலம் அவருக்கே தெரியாதது போல)....பெண் பலவீனமானவள் என்று சித்திரிக்கப்பட்டதை உடைத்து, பெண் என்பவள் வீரம், தீரம், செறிந்தவள், திடமனம் உடையவள், மனபலத்தால் உடல் பலம் பெற்றவள் என்பதை உணர்த்த வேண்டும்.” கேட்டுக் கொள்கிறார் ‘திருமதிப் பக்கங்கள்’ கோமதி அரசு ‘உன்னையே நீ உணர்’என.

“நான் வேலைக்கு அனுப்புறதுக்காக படிக்க வைக்கவில்லை. எங்களுக்கு தேவையும் இல்லை” இப்படிச் சொல்பவர் கண்டு வருந்துகிறார் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' அம்பிகா, ‘பெண்கள் வேலைக்குச் செல்வது கேவலமா?’

“ஆணின் கையிலா பெண் சுதந்திரம்? பெண் எடுத்துக் கொள்வதிலா பெண் சுதந்திரம்? பெண்ணே பெண்ணின் சுதந்திரத்தை தடுப்பதிலா பெண் சுதந்திரம்? இல்லை சுதந்திரம் என்பது நம்மிடம்தான் (பெண்களிடம்தான்) உள்ளது....பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் அதே நிலைதான்...

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நமக்கென்று ஒரு எல்லைக் கோட்டை விதித்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவளே சுதந்திரமான பெண்..” சொன்னபடியே வாழ்ந்தும் காட்டும் Will To Live ரம்யா தேவி முன் வைக்கிறார் வாதங்களை, மகளிர் தினத்துக்காக தன் நண்பரின் வலைப்பூவில், ‘பெண்கள் தினம்’ குறித்து.
“எங்கள் புகுந்த வீட்டுப் பாட்டி கோமளம்மாள்.
என் பிறந்த வீட்டுப் பாட்டி ருக்மணி.
என் அம்மா ஜயலக்ஷ்மி.
என் மாமியார் கமலா சுந்தரராஜன்.
குறுகிய வட்டத்துக்குள் இவர்களை நான் வைக்க விரும்பவில்லை. ஒவ்வொருவரும் தன் சுயத்தை இழக்கவில்லை. சுய மரியாதையை விட்டுக் கொடுக்கவில்லை. மற்றவர்களுக்கும் உதவியாய் இருந்துவிட்டுத்தான் விண்ணுலகம் சென்றார்கள். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'' இது பாடல். மாதரே மாதரை இழிவு செய்யாமல் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக இந்தத் தினத்தைக் கொண்டாடுவோம்.
” கொண்டாடுகிறார் ‘நாச்சியார்’ வல்லிசிம்ஹன் ‘மகளிர் சக்தி’யை.
“கேரியர் மட்டும்தான் முக்கியம் என்றோ அல்லது வேலைக்கு செல்வது மட்டுமே பெண்களின் சுதந்திரம்/முன்னேற்றப்பாதை என்றோ நான் சொல்லவரவில்லை. வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.

இருந்தாலும்,பெற்றோரின் உடல் நலத்திற்காகவும், தனது குழந்தைகளுக்காகவும் சம்பாரிக்க வேண்டிய கடமை எப்படி ஆண்களுக்கிருக்கிறதோ அதே கடமை அவர்களுக்குமிருக்கிறது. சொந்தக்காலில் நிற்கவேண்டியது எப்படி ஆண்களுக்கு அவசியமாகிறதோ அதே அவசியம் அவர்களுக்குமிருக்கிறது.
” என்கிறார் அருமையாக, அழுத்தம் திருத்தமாக சித்திரக் கூடம் சந்தனைமுல்லை , X X & X Y in IT.
சக பெண்பதிவர்களின் முன் அருமையான கேள்விகளை முன் வைத்து, சிந்திக்க வைக்கும் பதில்களைப் பெற்று, அவர்களுக்கு ‘சிறுமுயற்சி’ முத்துலெட்சுமி தானே வடிவமைத்து வழங்கிய வியல்*விருதுகள், பெற்றது வெள்ளிப் பதக்கத்தை தமிழ் மணம் விருது 2010 பெண்கள் பிரிவில். அச்சிறப்புக் கட்டுரையில் “இணையத்தில் வியத்தலுக்குரிய செயல்களைச் செய்யும் ஒவ்வொரு வரையும் பெருமைப்படுத்தி இப்பொன் விருதினை வழங்குகிறேன். இங்கு பதிலளித்தவர்களுக்கும் எனக்கு பதிவுகளில் பின்னூட்டம் இட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் என் சக பதிவாளர்கள் அனைவருக்கும் இவ் “ வியல் ’* விருதினை வழங்குகிறேன். நேர்மறை எண்ணங்களைப் பரப்ப வாழ்த்துகிறேன்.” என மகிழ்ந்து வாழ்த்துகிறார்.
“* கள்ளிப் பாலையும்
கருவை முள்ளையும்
கடந்து வந்தவள் நான்..

* முப்பத்து மூன்றே
முடிவாய்க் கொடுத்தாலும்
முக்காலம் ஜெயிப்பவள் நான்.
....

* நல்லதும் நன்மையும்
நிரம்பிக் கிடக்கும்
நாளையப் பெண்ணும் நான்..

* ஒளிவட்டம் சூடாமல்
உயர்வாய் உயரும்
உலகின் எதிர்காலம் நான்..
”

‘சும்மா’ தேனம்மையின் முழக்கமாகிய ‘என் பெயர் பெண்.. சென்னை சங்கமம் கவிதை’யுடன் நிறைவு செய்கிறேன் இன்றைய ஸ்த்ரீ ஷக்தி சிறப்புச் சரத்தை.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!!
***
மேலும் வாசிக்க...

Monday, March 7, 2011

முத்துச்சரம் ஒரு அறிமுகம் - வலைச்சரம் திங்கள்

வலைச்சரம் மூலமாக உங்களை இந்த ஒருவாரமும் சந்திக்க இருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி. பதிவுலகம் வந்த மூன்று மாதங்களிலேயே சீனா சார் இந்த வாய்ப்பை வழங்கிய போது அதிகம் பேரை அறிந்திராத நிலையில் 'இன்னும் சிலகாலம் செல்லட்டுமே’ எனக் கேட்டுக் கொண்டது சரியா தவறா தெரியவில்லை. ஏனெனில் அதன் பிறகு வெவ்வேறு சமயங்களில் மூன்று முறை வாய்ப்பு தேடிவந்த போதும் ஏற்றுக் கொள்ள இயலாத சூழல். புரிந்தணர்வுடன் 'வலைச்சரம் காத்திருக்கும்’ எனப் பெருந்தன்மையுடன் சொன்ன சீனா சாரின் ஆசிகளுடன் ஆசிரியர் பொறுப்பைத் தொடங்குகிறேன். ஒருவகையில் தாமதமாகச் செய்வதன் பலன் இரண்டரையாண்டு வலையுலக வாசிப்பில் கூடுதலாகச் சிலரை அறிமுகப் படுத்தக் கிடைத்த நல்வாய்ப்பு என்றே கருதுகிறேன்.

மகளிர் தினம் இடம் பெறும் இவ்வாரத்தில், முதல் சில நாட்களை மகளிர் சிறப்புச் சரமாகத் தொடுக்க இருப்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி, என்னைப் பற்றிய அறிமுகமாய் முத்துச்சரத்தின் சில முத்துக்கள்:

தீராத ஆர்வம்..பேனாவும் காமிராவும்..: “முடிவற்ற தேடலிலும், கற்றலிலுமே கலைகள் வளருகின்றன.”

சென்ற வருட இறுதியில் கடந்த வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் ஒரு டைரிக்குறிப்பாக எழுதியது. இதுவே ஓரளவு என்னைப்பற்றிய அறிமுகத்தைத் தந்து விடும்.

மனதுக்குப் பிடித்தமான பதிவுகள் என பல இருப்பினும், சமூகம் மற்றும் வாழ்வு சார்ந்ததாக எழுதியவற்றில் சிலவற்றை முன் நிறுத்த விரும்புகிறேன்.

கட்டுரைகள்:

இவர்களும் நண்பர்களே:. “கடவுள் நம் மீது கொண்ட கருணையினால் நல்ல குடும்பம் பெற்றோர் குழந்தைகள் அமைய பெறுகிறோம். ஆனால் அப்படி அமையப் பெறாதவர்... ஏதோ ஒரு சமயத்தில் கடவுளின் கருணை சற்றே குறைந்ததனால் இப்போது ஆதரவற்றோர் இல்லங்களில். இருப்பினும் இவர்களை என்றைக்கும் கடவுளின் குழந்தைகளாகவே அறியப் பட வைத்து பாசம் காட்டுவதும் கடவுள்தான். அவரது தேவைகளை உணர்ந்து தீர்த்து வைக்கத் தூதுவர்களாய் பிற மனிதர்களாகிய நம்மை அனுப்புவதும் கடவுள்தான்.”

இடுகையின் நோக்கம் தமிழ்மணம் விருது 2009-ல் சமூகம் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றதன் மூலம் பலரையும் சென்றடைந்ததில் மனதுக்கு ஒரு நிறைவு.

செல்வக் களஞ்சியங்கள்
: “எந்த எதிர்பார்ப்புகளுமின்றி குழந்தைகளுக்கு நாம் தரும் அன்பே பரிசுத்தமானது. அதில் ஆண் என்ன பெண் என்ன என நினைத்துப் பார்ப்போம்.”

இக்கருத்தை பலரிடம் எடுத்துச் சென்ற இணைய இதழ்களுக்கும், லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகைக்கும் நன்றி.
***
சதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்...: “சதுரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்?”

யூத்ஃபுல் விகடனில் வெளியாகி, பின்னர் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் புத்தாண்டு சிறப்பிதழ் மூலமாக ‘பெண்ணுக்குப் பேதம் வேண்டாம்’ எனப் பலரைச் சென்றடைந்த இக்கட்டுரை ‘பெண்ணியம்’ தளத்திலும்.
***
நல்வாழ்வு தந்தாயே நீயே!:“அம்மாக்கள் என்றைக்கும் அம்மாக்களாகவே இருக்கிறார்கள் தன்னலமற்ற பாசத்தைப் பொழிந்து கொண்டு. அதை நாம் பயன்படுத்திக் கொள்கிற மாதிரி எந்த சமயத்திலும் நடந்திடக் கூடாது. நாமும் ஆகி விட்டோம் பெற்றோராய்.”

‘அம்மா அருமை எப்போ தெரியும்?’ ஆக லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையிலும், யூத்ஃபுல் விகடன் அன்னையர் தினச் சிறப்புப் பரிந்துரையிலும்.
***
உலகம் உய்ய..-தண்ணீர் தினத்துக்காக..:“அழிக்கப்பட்டு வரும் காடுகரைகள், காணாமல் போய்க் கொண்டிருக்கும் விளை நிலங்கள், வெட்டி வீழ்த்தப்பட்டு வரும் மரங்கள், நதிகளில் கலக்கும் ஆலைக்கழிவுகள், மாசாகும் சுற்றுப்புறம் என ஒன்றை அடைய ஒன்றை அழித்து ஓடிக் கொண்டேயிருக்கிறோம்.., மேலேயும் போக முடியாமல் எந்தப் பக்கமும் திரும்ப வழியற்ற ஒருபுள்ளியில் நின்றுவிடக் கூடிய அபாயத்தை உணராமல்.”

வந்து விட்டது கோடை. இந்நேரம் அவசியம் பகிர வேண்டிய பதிவுகளில் ஒன்றாக எண்ணுகிறேன். யூத்ஃபுல் விகடன் பரிந்துரையிலும், வெள்ளி நிலா இதழிலும்..
***
திண்ணை நினைவுகள்-கயல்விழி முத்துலெட்சுமிக்கு ராமலெட்சுமியின் கடிதம்

இக்கட்டுரையைக் குறிப்பிடாமல் கடந்து விட முடியாது. என் வலைப்பூவைப் பற்றி பேச ஆரம்பிக்கையில் பலரும் குறிப்பிட்டு சிலாகிக்கும் முதல் இடுகை இதுவாகவே இருக்கிறது பெரும்பாலும். பதிவிலிருக்கும் கடைசி பின்னூட்டங்களில் someone like you என்பவரின் ஒருசில வார்த்தைகள் மட்டும் இங்கே: “அந்தக் காலத்து classics திருவிளையாடல், காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம்.........வரிசையில் இந்தக் கடிதமும் ஒரு classic, ஒரு காவியம்.”

கலைமகள் மாத இதழின் வலைப்பதிவர் அறிமுகத்திலும் பரிந்துரைக்கப் பட்ட இப்பதிவு, கலாச்சாரம் பிரிவில் தமிழ்மணம் விருது 2008-ன் இறுதிச் சுற்றை எட்டிய ஒன்றும் ஆகும்.

கவிதைகள்:
அழகிய வீரர்கள், ராணித்தேனீ - நவீன விருட்சம்

முகமூடிகள், நட்சத்திரங்கள் - உயிரோசை

பிறழாத பிரவாகம், கேள்விகளைத் தேடி..
- அகநாழிகை

ஒற்றைப் பேனாவின் மை - திண்ணை

நோட்டு மாலைகள், சீற்றம், பால்நிலா - யூத்ஃபுல் விகடன்

ஒரு நதியின் பயணம்
, பவனி - வடக்கு வாசல்

குழந்தைகளை அவதானித்தவையாக, ஆனந்த விகடன் சொல்வனத்தில் ‘பொம்மையம்மா’, கல்கி கவிதை கஃபேயில் ‘தவிப்பு’,‘குளிர்நிலவு’!


சிறுகதைகள்:
வயலோடு உறவாடி..- தினமணி கதிர்: “தோட்டத்தில் பம்பு செட்டுக் குளியல், பண்ணையில் துள்ளும் கன்றுகளோடு ஆட்டம், வயலில் வைக்கோற் போரையே சறுக்கு மரமாக்கி வழுக்கி ஆடியது, வாழை கொய்யா பப்பாளி இளநீர் என பறித்த கையோடு குளிரக் குளிர வயிற்றை நிரப்பியது எல்லாம் எப்போது நினைத்தாலும் மனது குளிர்ந்து போகும்.”
***
பொட்டலம் : லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்:. “தம் போன்ற மக்களுக்கும் இதெல்லாம் சாத்தியம் எனக் கண்ட கனவு எல்லாம் கானல் நீரேதானா என்ற கேள்வி எழும்பியது.”
***
உலகம் அழகானது - கலைமகள் தீபாவளி மலர்:“விலங்குகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? இவர்கள் போன்ற கடைக்கோடி மனிதர் முதல் கோடானு கோடீஸ்வரர் வரை ‘சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்’ என சொல்லித் தங்களை நியாயப்படுத்திக் கொண்டு, இவ்வுலகையே போட்டியும் பொறாமையும் நிறைந்ததாக்கி விட்டார்கள் என்றே தோன்றியது.”
***
கைமாறு - தினமணி கதிர்:“தேவைக்கு உதவியா பெறப்படுற.. உயிர் காக்குற.. திரவம்..... பணம் கட்டி வாங்கினாலும் இது நீங்க இலவசமா எடுத்துக்கற மாதிரிதான். ஏன்னா நம்ம நாட்டில எல்லோருமே எதையுமே இலவசமா வாங்கி ருசி கண்டுட்டோம்.”
***

ஆயர்ப்பாடி மாளிகையில்.. - தினமணி கதிர்
: “ஆயர்ப்பாடி மாளிகைகள் அன்பாலே நிறைந்து விட்டால் அங்கே கிருஷ்ணன், பலராம் மட்டுமில்லாமல் அவர்கள் நண்பர்களும் யசோதைக்கு தாய்மையைத் தர முடிகிற அதிசயமும், குடும்பத்தையே குதூகலிக்க வைக்க முடிகிற அற்புதமும்..”
***
விசுவாசம் - கலைமகள்
“விசுவாசங்கிறது ஒருவரோடு உயர்விலேயும் தாழ்விலேயும் கூடவே இருக்கிறது மட்டுமில்ல. நம்ம நலனுக்கு ஒவ்வாததாய் ஏதும் நடக்கையில் பெரிசு பண்ணாத இருக்கிறதுந்தான்.”
***

நூல் விமர்சனங்கள்:
யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - நிலாரசிகன் சிறுகதைத் தொகுப்பு: “ . “..மாறுபட்ட களங்களில் இயல்பான அழகான எழுத்து நடையில். சிறுகதைப் பிரியர்களின் சேகரிப்பில் அவசியம் இருக்க வேண்டிய தொகுப்பு.”
***
கோவில் மிருகம் - விநாயக முருகன் கவிதைத் தொகுப்பு :“அன்றாட அவலங்களை, மனிதரின் மறுபக்கங்களை, மடிந்து வரும் நேயங்களை ஒரு நெடும் பயணத்தில், பாரதியின் சீற்றம் கலந்த எள்ளலுடன், சமூக அக்கறையும் ஆதங்கமும் தொனிக்க..”
***

இந்தத் தளத்தில் தொடர்ந்து இயங்க ஆசை. நேரமின்மையால் இயலவில்லை. வாசிப்புக்காக அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்கிற புதுவருட நிலைப்பாட்டினை செயல்படுத்த இயலாமல் இரண்டு மாதங்கள் ஓடிவிட்டிருந்தாலும் நம்பிக்கை உள்ளது:)!


புகைப்படங்கள்:
புகைப்படங்களை முத்துச்சரத்தில் PiT மாதாந்திரப் போட்டிப் பதிவுகளாகவும், பேசும் படங்களாகவும், ஃபிளிக்கர் தளத்தில் [http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/] காட்சிக் கவிதைகளாகவும் பகிர்ந்து வருகிறேன். போட்டிக்காக படத்தைக் கொடுப்பதுடன் நின்று விடாமல் ஒவ்வொரு முறையும் இயன்றவரை ஒன்றுக்கும் மேலான படங்களை ஆர்வத்துடன் தொகுத்து வழங்கியது நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் அவற்றில் பல யூத்ஃபுல் விகடன் பரிந்துரையில் இடம்பெற்றன. காட்சிப் படைப்புகளுக்காகத் தொடர்ந்து 2009 மற்றும் 2010-ல் கிடைத்த தமிழ்மணம் விருதுகளை மிகச் சிறந்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்!

தேவதை பத்திரிகை தனது ‘வலையோடு விளையாடு’ பக்கத்துக்காக முத்துச்சரத்தை அறிமுகம் செய்த வேளையில் இரண்டு பக்கங்களுக்கு நான் எடுத்தப் புகைப்படங்களை வெளியிட்டுச் சிறப்பித்திருந்தது.

மேலும்,

‘இந்த வார சிறந்த படம்’ ஆக PiT தளம் கெளரவித்த படம், “கடல வாங்குங்க”

PiT தளத்தில் கற்ற பாடத்தால் பிற்தயாரிப்பு செய்ததில் பொலிவு பெற்று, பரிசாக ‘இந்த வார சிறந்த படமாய்’ தனிக்கவனம் பெற்ற “போகுமிடம் வெகு தூரமில்லை”. இப்பதிவில் ஃப்ளிக்கர் தளத்தில் எப்படிச் சேர வேண்டும் என்பது குறித்த விவரங்களையும் தந்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்களுக்குப் பயனாகலாம்.

Land Mark{PiT]: தமிழ்மணம் விருது 2009-ல் வெள்ளிப் பதக்கம், யூத்ஃபுல் விகடன் பரிந்துரை

ஏரிக்கரைப் பூங்காற்றே-குமரகம் புகைப்படங்கள்
[PiT}: தமிழ்மணம் விருது 2010-ல் வெள்ளிப் பதக்கம், யூத்ஃபுல் விகடன் பரிந்துரை

தண்ணி காட்டறேன்[PiT]:கடல், ஏரி, குளம்,அருவி, வாய்க்கால், கிணறு, ஊற்று, பம்ப் செட் எதையும் விட்டு வைக்கவில்லை.

ஒற்றை[PiT]: சிங்கிள் சிங்கிளாய் சிலிர்ந்து நிற்கும் விலங்கு பறவைகளின் அணிவகுப்பு

உதய கீதங்களும் அந்தி ராகங்களும்
[PiT, யூத்ஃபுல் விகடன் பரிந்துரை]: வானின் வர்ண ஜாலங்கள்

இந்திய சிற்பக்கலையின் பெருமையை உலகுக்குக் காட்டும் வாய்ப்பாக அமைந்த பதிவுகள்:
1.வழிப்பாட்டுத் தலங்கள்[PiT, யூத்ஃபுல் விகடன் பரிந்துரை]
2.இறையும் கலையும் - நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள்

மலர்களைக் கண்டு மயங்காத மனமும் உண்டோ..!?!
1.பெங்களூரு லால்பாக்-குடியரசுதின மலர் கண்காட்சி 2010
2.2011 பெங்களூரு குடியரசு தின மலர் கண்காட்சி புகைப்படங்கள்
3.மொட்டு ஒண்ணு மெல்ல மெல்ல..

சமீபத்தில் ஓடும் [ஜெட் வேகத்தில் பறந்த என்றும் சொல்லலாம்] வண்டியிலிருந்து செய்த முயற்சியாக, அதிவேகத்தில் சிறையான எழிலோவியப் படங்கள்-கிருஷ்ணகிரி மாம்பழங்கள்.

சுய அறிமுகம் சுய புராணமாகி விட்டது! இருக்கட்டும் விடுங்களேன், மகளிர் தின வாரத்தில் எங்கள் சக்தியை நாங்களே கொண்டாடிக் கொள்ளாவிட்டால் எப்படி:)?

அதுவுமில்லாமல், புதிதாக எழுத வருபவர்களுக்கு இணைய இதழ்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு முயன்றிடவும், புகைப்படக் கலையில் ஆர்வம் உள்ளவர்கள் PiT, Flickr மூலமாகத் தம்மை மேம்படுத்திக் கொள்ள ஒரு தூண்டுதலாகவும், இப்பதிவு இருக்கும் என மனப்பூர்வமாக நம்புகிறேன்.

நாளை சந்திப்போம்!
*****
மேலும் வாசிக்க...

பாரி நன்றி - வருக ராமலக்ஷ்மி

வலைச்சரத்தின் நோக்கம் வார ஆசிரியர்கள் முதலில் தன்னை அறிமுகம் செய்யுதுகொள்ளும் போது அவர்கள் தங்கள் பதிவுகளை ஒருமுறை சீர்தூக்கிப் பார்த்துக்கொள்வதாயும் தங்கள் வாசிப்பின், நேரத்தின் அருமையை உணர்ந்து கொள்வதாயும் இருப்பதாகவே உணர்கிறோம்.

சிறுவன் என்று பாரி தாண்டவ மூர்த்தி தன்னை இங்கே அறிமுகத்தில் சொல்லிக்கொண்டு தன்னடக்கத்தோடு ஆரம்பித்தார். பழைய, புதிய பதிவர்களின் பதிவுகளை புதுமையான முறையில் அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் பல பதிவர்களையும் அவர்களின் சிறந்த இடுகைகளையும் அழகாக தொகுத்துத் தந்தார் . வலைச்சரக்குழு சார்பில் அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். நன்றி.
---------------------------------------

அடுத்ததாக தொடங்க இருக்கும் இவ்வாரத்தை சிறப்பிக்கவருபவர் முத்துச்சரம் ராமலக்ஷ்மி
. 80-90 களிலிருந்தே இவருடைய எழுத்து ’நண்பர்வட்டம்’ ’திண்ணை’ தொடங்கி இன்று பல பத்திரிக்கைகளில் படைப்புக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. புகைப்படக்கலையில் ஆர்வமிக்கவர். தன்னுடைய வாசிப்பில் நினைவில் நின்ற பதிவுகளை நம்முடன் பகிர வருகிறார். வருக ராமலக்‌ஷ்மி .. வாழ்த்துக்கள்.
மேலும் வாசிக்க...

Sunday, March 6, 2011

நன்றி அறிவிப்பு



இறுதியாக எனக்கு கொடுத்த ஒருவார எழுத்தர் பதவி இன்றுடன் முடிவடைகிறது. நானும் அப்படியே ஏழு பதிவு போட்டுட்டேன். எனக்கு இந்த வாய்ப்பு அளித்த சீனா ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

     இந்த ஒருவாரம் தினமும் வந்து என்னை ஆதரித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றிகள். கொடுத்த பணியை முடித்துவிட்டேன். ஆனால் அது சிறப்பாக இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை. நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

மீண்டும் ஒரு முறை சீனா ஐயா அவர்களுக்கும் வலைச்சரம் குழுவிற்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டு நான் விடைபெறுகிறேன். அடுத்த வாரம் வரப்போகும் ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்.
அப்படியே இன்றைய அறிமுகங்களை பார்த்திட்டு போங்க.
*************************************************************************************************************************************
அன்புள்ள வலைச்சர வாசகர்களுக்கு,


இது நம் சக பதிவர் திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் முயற்சி.

உங்களுக்கு தோன்றும் கேள்விகளை அனுப்புங்கள். சீனா ஐயாவிடன் இருந்து பதில் பெறுங்கள்.
மேலும் விபரங்களுக்கு மேலே உள்ள லின்கை அழுத்தவும்
*************************************************************************************************************************************

இப்படிக்கு என்றும் அன்புடன்,
உங்கள்


வரும் மார்ச் 8ஆம் தேதி உலக பெண்கள் தினம். அதனால அனைத்து பெண் பதிவர்களுக்கும் பெண் வாசகர்களுக்கும் என் இனிய பெண்கள் நாள்  நல்வாழ்த்துக்கள்


.
மேலும் வாசிக்க...

பதிவர்களும் பதிவுகளும் பகுதி-6



*************************************************************************************************************************************

1.   வலைபூவின் பெயர் : ஞாஞளஙலாழன்

பதிவரின் பெயர் : ஞாஞளஙலாழன்

எழுதியவை: 13
பின்தொடர்பவர்கள் : 21
எனக்கு பிடித்த பதிவு: 
               வெள்ளை தான் அழகா? 
*************************************************************************************************************************************

2.   வலைபூவின் பெயர் : மூங்கில் வனம்

பதிவரின் பெயர் : Surendirakumar

எழுதியவை: 20
பின்தொடர்பவர்கள்: 35 
எனக்கு பிடித்த பதிவு:
*************************************************************************************************************************************

 

3.   வலைபூவின் பெயர் : என்னுள்ளே இருந்து 

பதிவரின் பெயர் : என்னுள்ளே இருந்து

எழுதியவை: 32
பின்தொடர்பவர்கள்: 6
எனக்கு பிடித்த பதிவு:

*************************************************************************************************************************************

4.   வலைபூவின் பெயர் : எண்ணாச் சிறகுகள்

பதிவரின் பெயர் : சுடர்விழி

எழுதியவை: 32
பின்தொடர்பவர்கள்: 61 
எனக்கு பிடித்த பதிவு:
*************************************************************************************************************************************

5.   வலைபூவின் பெயர் : பொட்டலம்

பதிவரின் பெயர் : கார்த்தி

எழுதியவை: 43
பின்தொடர்பவர்கள்: 53
எனக்கு பிடித்த பதிவு: 

*************************************************************************************************************************************

6.   வலைபூவின் பெயர் : Sundaravadivelu’s Blog

பதிவரின் பெயர் : Sundaravadivelu

எழுதியவை: 178
பின்தொடர்பவர்கள்: 19
எனக்கு பிடித்த பதிவு: 
               காலக்கைதி 

*************************************************************************************************************************************

7.   வலைபூவின் பெயர் : என் கவிதைகள்

பதிவரின் பெயர் : கயல்விழி

எழுதியவை: 51
பின்தொடர்பவர்கள்: 20
எனக்கு பிடித்த பதிவு:
       அழகு 

      
*************************************************************************************************************************************

8.   வலைபூவின் பெயர் : கவிதையின் சந்திப்புகளில்

பதிவரின் பெயர் : மகேஷ்

எழுதியவை: 109
பின்தொடர்பவர்கள்: 39
எனக்கு பிடித்த பதிவு: 

*************************************************************************************************************************************

9.   வலைபூவின் பெயர் : விஜய்கோபால்சாமி

பதிவரின் பெயர் : விஜய்கோபால்சாமி

எழுதியவை: 46
பின்தொடர்பவர்கள்: 13
எனக்கு பிடித்த பதிவு: 

*************************************************************************************************************************************

10.  வலைபூவின் பெயர் : சாமக்கொடை

பதிவரின் பெயர் : வித்யாஷங்கர்

எழுதியவை: 111
பின்தொடர்பவர்கள்: 22
எனக்கு பிடித்த பதிவு:
*************************************************************************************************************************************

அன்புள்ள வலைச்சர வாசகர்களுக்கு,


இது நம் சக பதிவர் திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் முயற்சி.

உங்களுக்கு தோன்றும் கேள்விகளை அனுப்புங்கள். சீனா ஐயாவிடன் இருந்து பதில் பெறுங்கள்
மேலும் விபரங்களுக்கு மேலே உள்ள லின்கை அழுத்தவும்
*************************************************************************************************************************************

அப்படியே பச்சைத்தமிழனில் போட்டிருக்க பெயர் சரித்திரம் போய் பார்த்திட்டு போங்க

இப்படிக்கு என்றும் அன்புடன்,
உங்கள்
பச்சைத்தமிழன் பாரி தாண்டவமூர்த்தி

      குறைகளோ, ஆலோசனைகளோ இருந்தால் தெரிவிக்கவும். என் மின்னஞ்சல் முகவரி-tpari88@gmail.com

******************************************ஆறாம் நாள் முடிவு*******************************************

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது