07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 2, 2008

கதைச்சரம்

சின்னவயசுல இருந்தே கதை கேட்குறதுன்னா ரொம்ப ஆர்வம். அம்மா தூங்கும்போது அவங்க சொந்த கதை கொஞ்சம் உல்டா பண்ணி சொல்லி தூங்க வைப்பாங்க. அப்போதிலிருந்து யாராவது கதை சொன்னா போதும். வாயில ஈ நுழைஞ்சாலும் கவலைப்படாம கேட்பேன். சுவாரஸ்யமாகவும், வித்தியாசமாகவும் சொன்ன சில கதைகள் தான் இன்னிக்கு நாம பார்க்க போறோம்.

ராகவன்

இவரோட கதைகள்னாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரோட எழுத்து நடை ரொம்ப நன்றாக இருக்கும். அதே நேரத்தில் இவர் எடுக்கும் கதையின் கருக்கூட வித்தியாசமானதாகவும் வியப்பாகவும் இருக்கும். இவரோட பதிவில் எனக்கு பிடித்த கதை விடுதலை.
மிகவும் கவனமாக சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லி நமக்கு உணர்த்தியிருப்பாரு. அதே போல பூர்ணிமா கதையும், கள்ளியிலும் பால் தொடரும் கூட.

தேவ்

அண்ண‌ணோட இடத்துல கவிதைகளுக்கும், கதைகளுக்கும் பஞ்சமே இல்ல. கலாய்க்கிறதுல‌யும் சரி, கதையிலும் சரி, அண்ணோட வழி தனிவழி...அவரோட வசனங்கள், வர்ணனைகள் அந்த கதையின் சூழலை சுலபமாக கற்பனை செய்து பார்க்க முடியும்.
அவரோட சின்னக்குளமும் சில விடுமுறைகளூம் - மொத்தம் ஏழுபாகம் ஒண்ணு ஒண்ணும் அட்டகாசமாக இருக்கும்.
இவரு சமீபத்தில் எழுதிய என்கவுண்டர்/ENCOUNTER கதையும் ரொம்ப பிடித்த ஒன்று.


அரைபிளேடு

பேரு தான் அரைபிளேடு ஆனால் போடுகிற கதை எல்லாம் பிளேடு கிடையாது.
கதையும் சரி அஜால் குஜால் கவிதையும் சரி எதுக்கும் ரெடியான ஆளு.
ஒவ்வொரு கதையும் வித்தியாசமாகவும், நகைச்சுவையுடனும் எழுதக்கூடியவர்.
அவரோட நாம பிரிஞ்சிடலாம் ஒரு உளவியல் சிறுகதை இப்படி கூட நடக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லற கதை.
அவன் சாமியார் ஆனது ஏன்? கதையும் பிடித்த ஒன்னு.


வா.மணிகண்டன்

பேசலாம்ன்னு போடு போட்டு ஆளு அடிக்கடி எஸ்கேப்பு ஆயிடுவாரு. சிறுகதையில புலின்னு சொல்லாம் இவரை.

என் பிரச்சினை எனக்கு






என் த‌ற்கொலைக்கான‌ வாக்குமூல‌ம்






எனக்கு பிரம்மச்சாரி ராசி







இந்த மூன்று கதைகளும் அட போட வைக்கும் கதைகள்.


முத்துலெட்சுமி

எங்க பாசக்கார குடும்பத்தின் உறுப்பினர். சிறுமுயற்சின்னு சொல்லி தன்னடக்கத்தோட இருக்காங்க. இவங்களோட சுற்றுலா பதிவுகள் எல்லோருக்கும் பிடித்தமான ஒண்ணு.
ஆனால் எனக்கு இவுங்க கதைகள் ரொம்ப பிடிக்கும்.
நானா ரசனை இல்லாதவன்?
ஒரு கணவனின் பார்வையில் இருந்து எழுதியிருப்பாங்க.
உதிர்ந்த நட்சத்திரங்கள் ஒரு பெண்ணின் மெல்லிய சோகம் தவழும் கதை.


ராயல் ராம்

மாப்பி மருத தமிழ்ல எது போட்டாலும் சும்மா நச்சுன்னு இருக்கும். மாப்பி எழுதிய
சவடன் கதை கதையில சும்மா மருத தமிழுல புகுந்து விளையாடியிருப்பான். சமீபத்தில் எழுதிய காமக் கடும்புனல் தலைவர பார்த்து சூப்பர்ன்னு சொல்ல வச்ச கதை.
கவிதைகளை இடையில் சொல்லி ரொம்ப அழகாக எழுதியிருப்பாரு ராம்.

ஜி3

ஜி3 இந்த பெயருக்கு பின்னாடி ஒரு கதையே இருக்கு. நண்பர்களுக்கு பிறந்தநாளுன்னா போதும் பதிவு போட்டு கேக் எல்லாம் (எல்லாம் பதிவுல தான்) வெட்டி கலக்கிடுவாங்க. சமீபத்தில் இவுங்க எழுதிய கதை ஜி3யா இதுன்னு பல பதிவர்களை வாய் பிளக்க வைத்த ஒண்ணு. அம்புட்டு நல்லாயிருக்கும்.

அவள் டைரியிலிருந்து சில குறிப்புகள் 1..






அவள் டைரியிலிருந்து சில குறிப்புகள்.. - II


செல்வன்

செல்வனோட கதைகளை படிக்கும் போது எப்படி தான் இந்த மனுசன் இப்படி எல்லாம் யோசிக்கிறாரேன்னு தோணும் நாம யூகிக்க முடியாதா தளத்தில் இருந்து கதையை எழுதியிருப்பாரு அதில் சில...

அம்மா பிள்ளை 1

அம்மா பிள்ளை 2,

மது மங்கை மாமிசம்

தூயா

தூயா ஈழத்து பதிவர்களில் முக்கியமான நபர். இவரின் நானும் என் ஈழமும் பகுதி நான் தவறாமல் படிக்கும் பகுதி. அதில் இவுங்க சமீபத்தில் எழுதிய பகுதி இது
நானும் என் ஈழமும் 7 மாவீரர்களின் நினைவினை ஒட்டி எழுதியது.
இவுங்க எழுதிய விதையானால் முளையாகும் சிறந்த சிறுகதை. ஈழத்து தமிழில் படிக்கும் போதும் மனசு கன‌க்கும். இது ஒரு பத்திரிக்கையில் வெளிவந்த கதையும் கூட.

J.K. ஞானசேகர்

ரசிக்கும் படியான எழுத்துக்கு சொந்தக்காரர். இவரோட எழுத்து நடை மிகவும் அழகாக இருக்கும். இவரோட அத்தைமார் முத்தம் கதைன்னு சொல்லறதை விட வாழ்க்கையின் பதிவுன்னு சொல்லாம் அவ்வளவு அழகாக எழுதியிருப்பாரு.

போனஸ் கதையாக ஒன்று இவர் பேரு சரவ் வலையில மேஞ்சிக்கிட்டு இருக்கும் போது படிச்ச கதை இது முடிவில் ஒரு புதிய முயற்சி ஒன்னு செய்திருக்கிறார் பாருங்கள்
கதையில் அமைத்து எழுது!!


விட்டா இன்னும் போயிக்கிட்டே இருக்கும்...அதனால இப்போதைக்கு எஸ்கேப்பு ;)

20 comments:

  1. தல

    கடமையுணர்ச்சியோடு நல்ல பதிவுகளாக அடையாளப்படுத்துகின்றீர்கள். மிக்க நன்றி

    ReplyDelete
  2. கோபி நீயா
    நம்பமுடியவில்லை...

    ReplyDelete
  3. ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    சர்வேசன் அவர்களின் நச் சிறுகதை போட்டியின் இறுதி சுற்றில் வாக்களித்து விட்டீர்களா?
    இல்லையெனின் என் இந்த
    பதிவை படித்துவிட்டு வாக்களிக்க செல்லுங்கள்..

    அன்புடன்
    வீ எம்

    ReplyDelete
  4. கோபி,

    கதை சித்தர் அமிரகத்து சிங்கம்,அழுத்தமான எழுத்துகளின் சுரங்கம், அண்ணன் கதிரு அவர்களின் கதைகளை பத்தி எழுதாத உன்னை கண்டிக்கிறேன்... :)

    ReplyDelete
  5. அவ்வ்வ்வ்வ்வ்.. கதைச்சரத்துல என் கதையுமா?? ரொம்ப நன்றி :)

    நீங்க சொல்லியிருக்கற மத்த கதையெல்லாம் ஒரு ரவுண்ட் படிச்சிட்டு வரேன் :)

    ReplyDelete
  6. //யாராவது கதை சொன்னா போதும். வாயில ஈ நுழைஞ்சாலும் கவலைப்படாம கேட்பேன்.//

    அது எனக்கு தெரியுமே :)) நம்புங்க மக்களே.. கோபி சொல்றது சத்தியமான உண்மை :)

    ReplyDelete
  7. //தம்பி said...
    கோபி நீயா
    நம்பமுடியவில்லை...//

    தம்பி...நம்பியாக வேண்டிய கட்டாயம் உனக்கு... :))

    ReplyDelete
  8. //இராம்/Raam said...
    கோபி,

    கதை சித்தர் அமிரகத்து சிங்கம்,அழுத்தமான எழுத்துகளின் சுரங்கம், அண்ணன் கதிரு அவர்களின் கதைகளை பத்தி எழுதாத உன்னை கண்டிக்கிறேன்... :)//

    மாமு.. சாரி ராமு... கோபி பதிவெழுதறதே சந்தோஷமான விஷயம்.. இங்கயெல்லாம் போராட்டம் செய்யக்கூடாது. எதுவாயிருந்தாலும் பர்சனலா மெயில் பண்ணு. பஞ்சாயத்து பேசி முடிச்சுக்குவோம்.. :))

    ReplyDelete
  9. //வீ. எம் said...
    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    சர்வேசன் அவர்களின் நச் சிறுகதை போட்டியின் இறுதி சுற்றில் வாக்களித்து விட்டீர்களா?
    இல்லையெனின் என் இந்த
    பதிவை படித்துவிட்டு வாக்களிக்க செல்லுங்கள்..

    அன்புடன்
    வீ எம்//

    தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்தன் மீண்டும் முருங்கை மரம் ஏறி வேதாளத்தை பிடித்து தோளில் தூக்கிச்சென்றான்.

    ReplyDelete
  10. @ கானா பிரபா

    \\தல

    கடமையுணர்ச்சியோடு நல்ல பதிவுகளாக அடையாளப்படுத்துகின்றீர்கள். மிக்க நன்றி\\

    நன்றி தல ;)

    @ தம்பி

    \\கோபி நீயா
    நம்பமுடியவில்லை...\\\

    காலத்தின் கட்டாயம் ராசா...;)

    ReplyDelete
  11. @ ராம்
    \\கோபி,

    கதை சித்தர் அமிரகத்து சிங்கம்,அழுத்தமான எழுத்துகளின் சுரங்கம், அண்ணன் கதிரு அவர்களின் கதைகளை பத்தி எழுதாத உன்னை கண்டிக்கிறேன்... :)\\

    மாப்பி கதிரு உனக்கு அண்ணனா? இதுக்கே உன்னை கண்டிக்கானும்..;)

    @ ஜி3

    \\அவ்வ்வ்வ்வ்வ்.. கதைச்சரத்துல என் கதையுமா?? ரொம்ப நன்றி :)\\

    இதுக்கு எதுக்கு அழுவுறிங்க!? நன்றிக்கு நன்றி ;)

    \\நீங்க சொல்லியிருக்கற மத்த கதையெல்லாம் ஒரு ரவுண்ட் படிச்சிட்டு வரேன் :)\\

    கண்டிப்பாக படிங்க ;)

    ReplyDelete
  12. @ சென்ஷி

    மச்சி உன் கடமைக்கு மிக்க நன்றி ;))

    ReplyDelete
  13. )அட.. இதுல சில கதன்கள் படிக்காமல் இருக்கே! அண்ணன் இப்படித்தான் லேட்டா சொல்றதா? :-)

    ReplyDelete
  14. //தம்பி said...
    கோபி நீயா
    நம்பமுடியவில்லை...
    //

    ம்ம்.. நம்பித்தான் ஆகணும்.. இதுதான் 2008 new year resolution?? ;-)

    ReplyDelete
  15. //மாப்பி கதிரு உனக்கு அண்ணனா? இதுக்கே உன்னை கண்டிக்கானும்..;)//

    கரேக்ட்.. இந்த மூனு பதிவை எழுதுனது எங்கண்ணனான்னு எனக்க்கே கொஞ்சம் டவுட் இருந்தூச்சு.. ஏன்னு கேட்குறீங்களா? ஒரு ஸ்பெல்லிங் ஏர்ரோரும் தெரியல.. பட் பின்னூட்டத்துல இருக்கே.. என்னை மாதிரியே ச்பெல்லிங் எர்ரோர் செய்வதை பர்த்தவுடன் இதை எழுதியது கோபிநாத் கோபிநாத் கோபிநாத்தான்னு ஒத்துக்கிறோம். :-P

    ReplyDelete
  16. Very good selection of stories.

    ReplyDelete
  17. @ மை ஃபிரண்ட்

    //தம்பி said...
    கோபி நீயா
    நம்பமுடியவில்லை...
    //

    ம்ம்.. நம்பித்தான் ஆகணும்.. இதுதான் 2008 new year resolution?? ;-)\\

    அப்படி தப்பான முடிவுக்கு எல்லாம் வந்துடாதிங்க இது வலைச்சரத்துக்கு மட்டும் தான் ;))


    //மாப்பி கதிரு உனக்கு அண்ணனா? இதுக்கே உன்னை கண்டிக்கானும்..;)//

    கரேக்ட்.. இந்த மூனு பதிவை எழுதுனது எங்கண்ணனான்னு எனக்க்கே கொஞ்சம் டவுட் இருந்தூச்சு.. ஏன்னு கேட்குறீங்களா? ஒரு ஸ்பெல்லிங் ஏர்ரோரும் தெரியல.. பட் பின்னூட்டத்துல இருக்கே.. என்னை மாதிரியே ச்பெல்லிங் எர்ரோர் செய்வதை பர்த்தவுடன் இதை எழுதியது கோபிநாத் கோபிநாத் கோபிநாத்தான்னு ஒத்துக்கிறோம். :-P\\

    அவ்வ்வ்வ்வ்வ்வ்...உன் பாசத்துக்கு அளவே இல்லயா!! ;))

    நன்றியோ நன்றி ;))

    ReplyDelete
  18. @ சின்ன அம்மிணி

    \\Very good selection of stories.\\

    நன்றி ;)

    ReplyDelete
  19. ஆகா....இந்த வாரம் நீங்களா...

    அதெல்லாம் சரி. இப்பிடிப் போட்டுத் தாக்குனா எப்படிங்க? ஒங்க நம்பிக்கையக் காப்பாத்திக்கக் கஷ்டப்படனுமே!!!

    ReplyDelete
  20. @ ராகவன்

    \\ஆகா....இந்த வாரம் நீங்களா...

    அதெல்லாம் சரி. இப்பிடிப் போட்டுத் தாக்குனா எப்படிங்க? ஒங்க நம்பிக்கையக் காப்பாத்திக்கக் கஷ்டப்படனுமே!!!\\\

    அதெல்லாம் உங்களுக்கு ஈசியாக முடியும்..;))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது