07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 20, 2008

கவிதை தோரணம்

ரத்தம் தோய்ந்த
வாட்கள்
யுத்தத்திற்கழகு !
முத்தம் தோய்ந்த
இதழ்கள்
காதலுக்கழகு !

எத்தனை முறை
படித்தாலும் மேலும்
மேலும் படிக்கத்
தூண்டுகிறது
உன் இதழ்கள் மட்டும்தான் !

புலம்புபவர் - நவீன் ப்ரகாஷ் "முத்தபூமி" யில் இவரின் வலைப்பூவில் படங்கள் கவிதைகளை மிஞ்சும் கவிதைகளோ படங்களை விஞ்சும் இவரின் வலைப்பூ ஆதலினால் .

கவிதைன்னு சொல்லீட்டு அருட்பெருங்கோவை விட்டுபுட்டா எப்பிடி

கரும்பும் சர்க்கரை பொங்கலும்
எதற்கு
கொஞ்ச நேரம்
பேசிக்கொண்டிரு
போதும்!

கோலப்போட்டியில்
உனக்குதான் முதல் பரிசா?
உன்னை வரைந்த உன் அம்மாவுக்கே கொடுத்திருக்கலாம்!

காதலிக்கு பொங்கல் வாழ்த்து - அருட்பெருங்கோ
இது போல பல கவிதைகளுக்கு இவரின் வலைப்பூ அமராவதி ஆத்தங்கரை.


அனைவரும்
உனக்கு அழகென்ற
திமிர் என்றனர்...
ஆனால் நான் சொன்னேன்,
திமிர்தான் உன் அழகு..!

குப்பைதொட்டி மனசு - சென்ஷி


வெகுதூரம் பின்னோக்கி
நகர்ந்துவிட்ட அப்பாவின்
கையிலுள்ள ஐஸ்க்ரீமை நோக்கி
நகர்த்திக்கொண்டேயுள்ளது
பிள்ளை
இன்னும் உலரத் தொடங்காத
தன் பிஞ்சு வாயை!

அப்பிடி என்னய்யா பேச்சு சுவாரஸ்யம் புள்ளைக்கு ஐஸ்கிரீம் ஊட்டறத விட இடைவெளி - சிவஸ்ரீ

வேலை கிடைக்கவில்லையென
வெட்டியாய் ஒரு நாளைத்
தள்ளிக் கொண்டு
வேடிக்கை பார்த்திருக்கும்
என்னைக் கடந்து...

எல்லாரும் "தள்ளிக்கொண்டு" போகிறார்கள் எதை!?!?!

கூலிக்கி பதிலா
சம்பளம் கிடைச்சென்ன
பதிலுக்குக் கூலியா
பிய்யாரும் கிடைச்சென்ன?

எல்லாத்துலயும் 'வெட்டு' தான். என்னத்தை படிச்சி பாருங்களேன். சிங்கப்பூர்ல இப்பிடித்தான் தமிழ் பேசுவாங்களா!?!?!

6 comments:

  1. சிவா - வாழ்த்துகள் சிவா - கடைசியில் ஒரு கவிதைச் சரம். அதற்குத் தேர்ந்தெடுத்த சுட்டிகளோ கவிதைகளின் சிகரம். அருமை அருமை. ஆசிரியர் பொறுப்பை அழகாக நிறைவேற்றியதற்கு நன்றி.

    ReplyDelete
  2. மங்களூர் சிவா,சரத்தை நல்லா தொகுக்கிறீங்க.

    ReplyDelete
  3. சிவா மாம்ஸ்.. தமிழ்பதிவுகள்ல இதுவரைக்கும் நீங்க படிக்காம விட்ட பதிவு எதாச்சும் இருக்கா? சும்மா பூந்து விளையாடறிங்க.

    ReplyDelete
  4. //
    cheena (சீனா) said...
    சிவா - வாழ்த்துகள் சிவா - கடைசியில் ஒரு கவிதைச் சரம். அதற்குத் தேர்ந்தெடுத்த சுட்டிகளோ கவிதைகளின் சிகரம். அருமை அருமை. ஆசிரியர் பொறுப்பை அழகாக நிறைவேற்றியதற்கு நன்றி.
    //
    நன்றி சீனா சார்.

    எல்லா பதிவுகளிலும் வந்து என்னை ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. //
    சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
    மங்களூர் சிவா,சரத்தை நல்லா தொகுக்கிறீங்க.
    //
    நன்றிங்க சிவப்ரகாசம்

    சரியா செய்யறமா அப்படின்னு எனக்கே டவுட்டா இருந்தது.

    நன்றி

    ReplyDelete
  6. //
    SanJai said...
    சிவா மாம்ஸ்.. தமிழ்பதிவுகள்ல இதுவரைக்கும் நீங்க படிக்காம விட்ட பதிவு எதாச்சும் இருக்கா? சும்மா பூந்து விளையாடறிங்க.
    //
    வாங்க சஞ்சய் வீராசாமி ச்ச சஞ்சய் காந்தி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது