வாழ்க்கையில் மிக அடிப்படையான தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இருப்பிடம் இந்த மூன்றுக்குமே அடிப்படை தேவை பணம்.
இல்லானை இல்லாளும் வேண்டா
ஈன்றெடுத்த தாய்க்கும் வேண்டா
செல்லாதவன் வாயின் சொல்
அருளிலார்க்கு அவ்வுலகு இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகில்லைன்னு சும்மாவா சொன்னாங்க.
பத்தாவது படிக்கிறப்ப ஒரு கட்டுரைங்க இந்த உலகம் ஒரு ஓட்டப்பந்தயம் நடக்குமிடம் நாம் அனைவரும் அதில் ஓடிக்கொண்டேயிருக்கிறோம் அப்படின்னு, திறமையும் புத்திசாலித்தனமும் அதிர்ஷ்டமும் இருப்பவர்கள் முன்னேறுகிறார்கள் இல்லாதவர்கள் பின் தங்குகிறர்கள். இதில் அதிர்ஷ்டம் அப்படிங்கிறத இப்பத்தைக்கு விட்டுடுவோம்.
கொஞ்சம் பணமும் நிறைய பொறுமையும் கொஞ்சூண்டு புத்திசாலித்தனமும் இருந்தால் இந்த பணத்தை மிக எளிதாக உட்கார்ந்த இடத்திலிருந்தே சம்பாதிக்கலாம்னு சொல்றாங்க அனுபவசாலிகள் என் தனிப்பட்ட அனுபவ உண்மையும் கூட.
பங்குசந்தை அப்படின்ன உடனே பல பேர் பயப்படறாங்க அது என்னன்னு தெரிந்து கொள்ளும் முன்பாகவே. நண்பி ஒருவரிடம் சாட் செய்யும் போது உதாரணத்திற்கு இதை சொன்னேன் வீட்டுல தோசை சுடறதையே எடுத்துக்கங்க எல்லா தோசையும் எல்லாருக்கும் ரவுண்டா ஒரே அளவில் ஒரே மாதிரி வருதா இல்லையில்ல அதுக்கு பல காரணிகள் மாவின் தன்மை, கல்லின் சூடு, etc.. etc.. ஆனால் கொஞ்சம் ப்ராக்டீஸ் ஆன பிறகு ஏறக்குறைய அதாவது 80% கரெக்டா வந்திருதில்ல. அதே ஒரு ஹோட்டலில் தோசை போடும் மாஸ்டருக்கு 95% கரெக்டா வருதில்ல Practice makes a man perfect (women too). ஆனால் என்னதான் ஹோட்டல் மாஸ்டராக இருந்து தினைக்கும் 500 தோசை போட்டாலும் 100% கரெக்டா போட முடியுமா? கண்டிப்பாக முடியாது ஆனால் தவறுகளின் அளவு மிக மிக மிக குறைவக இருக்கும். அது போல தான் பங்குவர்த்தகமும் எவ்வளவு எக்ஸ்பர்டாக இருந்தாலும் எல்லா ட்ரேட்களிலும் லாபம் செய்ய முடியாது ஆனால் நஷ்டமடையாமல் செய்யலாம்.
வாங்க சுட்டிகளுக்கு போவோம்
ம்யூச்சுவல் பண்ட்கள் அதாவது ஷேர் பத்தி எனக்கு எதுவும் தெரியாது ஆனா ஷேர் மார்க்கெட்ல ஈடுபடனும் லாபம் சற்று குறைவாக இருந்தாலும் பரவாயில்லை அப்படிங்கிறவங்களுக்கு இது ஒரு safe avenue.
இந்த ம்யூச்சுவல் ப்ண்ட்களிலேயே பல வகைகள் ஈக்விடி பண்ட், பாலண்ஸ்ட் பண்ட், டெப்ட் பண்ட் இந்த மூன்றிலும் பல சப் க்ளாஸிபிகேசன்ஸ். உதாரணத்திற்கு ஈக்விடி பண்ட்களை எடுத்துகிட்டா செக்டோரியல் பண்ட், இன்டெக்ஸ் பண்ட், டேக்ஸ் ஸேவர் பண்ட், தீம் பண்ட் இப்படி டெப்ட் பண்டை(debt fund) எடுத்துக்கொண்டால் மணி மார்க்கெட் பண்ட், லிக்விட் பண்ட், கில்ட் பண்ட், பாண்ட் பண்டு போன்று பல.
இதை பற்றி எல்லாம் மிக விரிவா அழகா எழுதிகிட்டு வர்றார் தென்றல் நாணயம் எனும் வலைப்பூவில் இதில் பதிவுகள் மட்டுமல்லாமல் கமெண்டுகளும் படிக்கப்பட வேண்டியவை.
தென்றலின்
நாணயம்இது உங்க பெரும்பாலோனோருக்கு தெரிந்த வலைப்பூதான். ‘பங்குவணிகம்’ இதில் மீன் பிடித்து கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்தது என இப்போது திமிங்கல வேட்டை என்ற பெயரில் ஒரு தொடர் சமீபத்தில் எழுதியிருக்கிறார் அதில் திட்டமிடல் பற்றி மிக அழகாக திட்டமிடலின் தேவை, அதற்கான தகுதி, ஆசை, நிஜம், திட்டம் என விளக்கியிருக்கிறார் பங்காளி.
திமிங்கல வேட்டைஅதுமட்டுமல்லாமல் தினமும் பங்குசந்தையின் போக்கு பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். இதில் தின வர்த்தகத்திற்கான குறிப்புகளும் கொடுத்து வருகிறார்.
பங்காளியின்
பங்குவணிகம்இவரின் மற்றொரு ஆங்கில வலைப்பூ
பைசாபவர்பங்கு சந்தை பற்றி எழுதிவரும் இன்னொருவர் பாரதி இவர் அமெரிக்காவிலிருந்து எழுதிவருகிறார். அமெரிக்க சந்தைகளின் போக்கு மற்றும் நிலவரங்கள். சந்தையில் எவ்வாறு ஈடுபடவேண்டும் என பல பதிவுகள் எல்லாமே படிக்க வேண்டியவை.
பாரதியின்
தமிழ் நிதிநம் நாட்டில் ரியல் எஸ்டேட் விலை தாறுமாறாக எகிறி வரும் இந்நிலையில் இவர் அமெரிக்க ரியல் எஸ்டேட் நிலவரம் பற்றிய
இருபதாயிரம் டாலருக்கு வீடுகள் என்ற இந்த பதிவும் குறிப்பிடதக்கது.
ப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்’ல் ஈடுபட நினைப்பவர்களுக்கு இவர் எழுதிய தொடர் ஆப்ஷன்ஸ்.
பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6,
பாகம் 7-தொடரும்-