கனவுச் சரம்
இணையத்துல படிச்ச ஒரு ரீமிக்ஸ் பாடல்
“சுடும் ஐஸ்கிரீம்
சுடாத காப்பி
பறக்கும் தட்டு – அதில்
பழைய சோறு
எல்லாம் எல்லாம்
எல்லாம் வேண்டுமா
கலியாணம் செஞ்சு பார்
கலியாணம் செஞ்சு பார்”
ஒருத்தன் பொண்டாட்டிக்கு கார் கதவை திறந்து விடறான்னா ஒண்ணு கார் புதுசா இருக்கணும் இல்ல பொண்டாட்டி புதுசா இருக்கணும் அப்பிடினு ஆங்கிலத்துல ஒரு ப்ரோவெர்ப் உண்டு!!. தூரத்து பச்சைதான்பா கண்ணுக்கு குளிர்ச்சி கல்யாணம் ஆன எங்க கதையெல்லாம் கேட்டா கண்ணுல ரத்தம்தான் வரும் அப்படின்னும் பலர் சொல்லறாங்க.
கல்யாண கனவில இருக்கிற இளைஞர்களுக்கும், சரி கல்யாணம் ஆயிடிச்சி என்னென்ன பிரச்சனைகள் வரும், எப்பிடி சமாளிச்சி பயப்படாமல் வாழறது, அதை பண்ணுங்க இதை பண்ணுங்க எனும் ‘டார்ச்சர்’ களில் இருந்து தப்பிப்பது எப்படி, கேட்டதெல்லாம் வாங்கி குடுக்காமல் அதுக்காக அடியும் வாங்காமல் வாழ்க்கை வாழ்வது எப்படின்னு கல்யாணம் பண்ணவங்களுக்கும் ஆபத்பாந்தவனாய் அனாத ரட்சகனாய் வைஃபாலஜி பாடம் எடுக்கிறார். பெனாத்தல் சுரேஷ் வைஃபாலஜி
ஏன் திருமணம், இதுக்கு விடையே கிடையாது நானே மாட்டிகிட்டு புரியாம முழிக்கிறென் என்கிட்ட வந்து கேக்குறியே” அப்படின்னு கண்ணதாசன் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறதாம் சரி வேற என்ன சொல்லியிருக்கார் இந்த சுட்டியில் ஏன் திருமணம் ?
பெண்கள் சொல்வதும் அதன் நிஜ அர்த்தங்களும். கல்யாணம் பண்ணி வாழப்ப்போற பையா, பாவப்பட்ட பையா.. சில புத்திமதிகளைச் சொல்லப்போறார் ஐயா.. கேட்டுக்கோ மெய்யா.. “தயார் ஆகுங்க மக்களே”.
உண்மையா இருக்க வேண்டியதுதான் அதுக்காக சம்பளம் முழுசும் குடுத்துட்டா உன் சின்ன சின்ன செலவுக்கெல்லாம் கை ஏந்துற நிலமை ஆயிடும் அதனால “கருப்பு பணம் காப்போம்”.
“வேலை செய்யாதவன்தான் வீரமான வேலைக்காரன்” இதில் உப்புமா செய்வது எப்படின்னு சொல்லியிருக்கார் தவறவிடாதீர்கள் கல்யாணம் ஆன ஆகப்போகும் ஆண்களேஏஏஏஏஏஏஏ
கல்யாணம் ஆன உடனேயே எல்லாமே முடிஞ்சி போச்சு ப்ரெண்ட்ஸ் கூட அரட்டை, விருப்பம் போல வெளில போறது எல்லாமே. அப்படி இருக்கிறவங்களுக்கு மனைவிக்கு தெரியாமல் “சைட் அடிப்பது எப்படி”
மனைவி கேக்கறதை மறுக்கறது எப்படின்றது. இல்லைன்னு சொல்றது சுலபமான வேலைன்னு சிலரும் முடியவே முடியாத மேட்டர்னு சிலரும் நினைச்சிருப்பாங்க.. அவங்கவங்க அனுபவம் அப்படி. மறுப்பது எப்படி?
சிபிஐ, எஃப்பிஐ எல்லாம் விட மிஞ்சும் மனைவியின் தீவிர கண்கணிப்புக்கு இடையே "போன் பேசுவது எப்படி"
இந்த எல்லா பாடங்களுக்கும் ஒரு எக்ஸாம் விடையுடன்.
எல்லா சீக்ரெட்டையும் இப்பிடி வெளில சொல்லிபுட்டா தங்கமணிகளுக்கு தெரிஞ்சிடாதா அப்புறம் ரங்கமணிகளுக்குதானே கஷ்டம் வைப்ஃபாலஜிக்கு ‘கச்சேரி தேவி’ன் எதிர்ப்பு
‘கச்சேரி தேவ்’க்கு பெனாத்ஸ் பதில் பதிவு.
|
|
aakaa - சிவா, கனவுச்சரம் சூப்பர் - இத்தனை சுட்டிகளா - விளக்கங்களுடன் - ரொம்ப நல்லா இருக்கு - வாழ்த்துகள்
ReplyDeleteஇவரு குடுதிருக்கிற சுட்டிகள அமுக்கி அந்த பதிவுங்கள எல்லாம் படிச்சி அப்டியே ஃபாலோ பண்ணுங்க. வீடு வெளங்கிடும்.இருடி இரு.. இந்த பதிவுகள எல்லாம் ப்ரிண்ட் எடுத்து உங்க கல்யாணத்துக்கு வந்து அக்காகிட்ட குடுக்கிறேன். அப்புறம் தெரியும் சங்கதி. நீங்க எப்டி கல்யாணதுக்கபுறம் சைட் அடிக்கிறிங்க, போன் பேசறிங்க, கேக்கறத மறுக்கிறிங்கனு பாக்கறேன். :)
ReplyDeleteவாங்க சீனா சார்.
ReplyDeleteநன்றி
//
ReplyDeleteSanJai said...
இவரு குடுதிருக்கிற சுட்டிகள அமுக்கி அந்த பதிவுங்கள எல்லாம் படிச்சி அப்டியே ஃபாலோ பண்ணுங்க. வீடு வெளங்கிடும்.இருடி இரு.. இந்த பதிவுகள எல்லாம் ப்ரிண்ட் எடுத்து உங்க கல்யாணத்துக்கு வந்து அக்காகிட்ட குடுக்கிறேன். அப்புறம் தெரியும் சங்கதி. நீங்க எப்டி கல்யாணதுக்கபுறம் சைட் அடிக்கிறிங்க, போன் பேசறிங்க, கேக்கறத மறுக்கிறிங்கனு பாக்கறேன். :)
//
தம்பி நாங்கல்லாம் தலைல பாறாங்கல் விழுந்தாலே ப்பூன்னு ஊதிட்டு அப்பால போயிட்டே இருப்போம்.
எல்லாமே நல்லாயிருக்கு.. தொடரட்டும் உங்கள் சேவை
ReplyDeleteஉள்ளேன் அய்யா
ReplyDeleteநன்றி சிவா! சும்மா சுத்தி அடிச்சிருக்கீங்க!
ReplyDeleteஉங்கள் சேவை தொடரட்டும்!!!!!
அருணா
முழுவதும் பினாத்தலார் ஸ்பெசலா? கல்யாணம் ஆகபோகிறது போல :))
ReplyDeleteபினாத்தலார் கொஞ்சம் டிப்ஸ் சொல்லி கொடுங்க:)
//பினாத்தலார் கொஞ்சம் டிப்ஸ் சொல்லி கொடுங்க//
ReplyDeleteகொடுத்த டிப்ஸ் போதாதா?
என்ன சிவா... ரொம்ப பெரீஈஈஈய முன்னூட்டமா இருக்கு... ஆனாலும் அனுபவம் இன்னும் அதிகம் சொல்லித்தரும்... வாழ்த்துக்கள்....
ReplyDelete//
ReplyDeleteரூபஸ் said...
எல்லாமே நல்லாயிருக்கு.. தொடரட்டும் உங்கள் சேவை
//
வாப்பா ரூபஸ் நன்றி!
//
ReplyDeleteBaby Pavan said...
உள்ளேன் அய்யா
//
ஓகே நோட்டட்
//
ReplyDeletearuna said...
நன்றி சிவா! சும்மா சுத்தி அடிச்சிருக்கீங்க!
உங்கள் சேவை தொடரட்டும்!!!!!
அருணா
//
வாங்க அருணா நீங்க இப்பிடி போடற ஒரு கமெண்ட்தான் எனக்கு அடுத்த பதிவு போட உற்சாக ('பானம்') டானிக்.
///
ReplyDeleteகுசும்பன் said...
முழுவதும் பினாத்தலார் ஸ்பெசலா? கல்யாணம் ஆகபோகிறது போல :))
பினாத்தலார் கொஞ்சம் டிப்ஸ் சொல்லி கொடுங்க:)
//
படிச்சி வெச்சிக்கப்பு நமக்கு வேண்டிய மேட்டர்தான்!
//
ReplyDeleteபாச மலர் said...
//பினாத்தலார் கொஞ்சம் டிப்ஸ் சொல்லி கொடுங்க//
கொடுத்த டிப்ஸ் போதாதா?
//
பதிவ கண்ணுல பாத்தீங்களா இல்லியா டைரக்டா சண்டை வலிக்கிறீங்க சின்ன பையன்கிட்ட!?!?!?
//
ReplyDeleteகிருத்திகா said...
என்ன சிவா... ரொம்ப பெரீஈஈஈய முன்னூட்டமா இருக்கு... ஆனாலும் அனுபவம் இன்னும் அதிகம் சொல்லித்தரும்... வாழ்த்துக்கள்....
//
எக்கா நீங்க சொல்லறத பாத்தா எனக்கென்னமோ பயம்மா இருக்கே!
அவ்வ்வ்