07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 9, 2008

வேண்டாம்..வேண்டாம் என்று சொன்னாலும் விடாமல் குழப்பச் சொன்னதால்.. : மாற்று எழுத்துக்கள்

முதல் இரண்டு பதிவுகளைப் பார்த்து..(படித்துன்னு சொல்லலாமின்னா, தலைப்பு மட்டும் தான் படிப்பேன்னு ஒருத்தர், பி.கு மட்டும் தான் படிப்பேன்னு இன்னோருத்தர்ன்னு சுத்தி சுத்தி அடிக்கிறாங்க)தெளிவா எழுதியிருக்கீங்க அப்படின்னு என்னைச் சொல்லிட்டுப் போயிட்டாங்க. எனக்குத் தான் புரியல்ல. தயவு செய்து விளக்கவும் என்று சொன்னேனே ஒழிய, நான் எழுதுவதும் உங்களுக்கு புரியாது என்றா சொன்னேன். ;)

ஆனா, வம்பை விலைக்கு வாங்கி, நடு வீட்டுல வச்சி, பூப் போட்ட கதையா ஆகப் போகுது. இன்னைக்கு தலைப்பு மாற்று எழுத்துக்கள். அது என்ன மாற்று எழுத்துக்கள், யூனிக்கோடில் தானே எழுதுறோமின்னு ஆரம்பிக்காதீங்க. வலைப்பதிவில் புழங்கும் ஒரு சில பதிவர்களின் எழுத்துக்கள் மேம்போக்காக படித்தால், அர்த்தம் விளங்காமல் தவிப்போம். ஏண்டா இப்படி எழுதுறாங்க அப்படின்னு. அந்த வகையறாவைச் சேர்ந்த எழுத்துக்களை தொகுத்து உங்களை எல்லாம், குழுப்பலாம் என்றே இந்த பதிவு. :D

முதலில், ஒரு புதுப் பதிவரில் இருந்து ஆரம்பிக்கிறேன். ஜ்யோவ்ராம் சுந்தர் , இவர் ஒரு சிறுப்பத்திரிக்கையில் எழுதி, அவர்களை இம்சித்தது போதாது என்று வலையுலகிற்கு வந்திருக்கிறார். இவர் எழுதியிருக்கும், இந்த ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளும் தொன்மக் கதைகளும் என்ற கதையயை புரிந்த ஒரு சிலர் மட்டுமே பின்னுட்டம் இட்டுயிருக்கிறார்கள். இந்தக் கதை புனனவு மற்றும் அ-கதை வகையாம். புனைவு என்றால் என்ன என்று நான் கேட்டுப் பெற்ற பதில் மெட்டா- பிக்ஷன்க்கு வெகு அருகில் வரும் எழுத்தாம். அ-கதை என்றால, கதையற்ற கதையாம். விளக்கம் கேட்காமல் படிச்சு அர்த்தம் புரியதா பாருங்க ;)

இதுப் போன்ற சிறுப்பத்திரிக்கை எழுத்துக்கள் இனையத்தில் உலாவ ஆரம்பித்து கொஞ்ச காலம் ஆகிவிட்டது. அதுப் பற்றி, ஜெயமோகன் என்ன சொல்லுறார், அதுக்கு அவரை ஒரு பதிவர் எப்படி டார் டாரா கிழிக்கிறார் *(பின்னுட்டத்தில்) என்று இங்கேப் பாருங்கள்.

சமீபத்தில்..(அந்த சமீபத்தில் இல்லை ) படித்த ஒரு பதிவின் துனைக் கொண்டு, இந்தக் கதையயைப் படித்தேன். பிறக்கும் போதே 60 வயது கிழவியாக பிறந்து, வளரும் ..இல்லை, இல்லை தேயும் ஒரு பெண் பற்றிய புனைவு. (ஐய்யா, நானும் இந்த வார்த்தையயை உபயோகிச்சிட்டேன்).

புனைவு என்றால், நமக்குப் பரிச்சியமான அய்யனாரை நாம் குறிப்பிடாமல் போக முடியாது. குசும்பனை ரொம்ப காலமாக குழப்பத்தில் ஆழ்த்தி இம்சித்து வருவது அய்யனார் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால், சமீபத்தில் அய்யனார் எழுதிய கவிதை ஒன்று சிறுமி விளையாட்டு. இந்தக் கவிதை மேஜிக்கல் ரியாலிசம் என்ற வகையில் வருகிறதாம். நான் படித்த முதல் மேஜிக்கல் ரியாலிசம் இது தான். ( ஏன்னா, அன்னைக்குத் தான் இப்படி ஒரு எழுத்து இருக்கு என்றே அறிந்துக் கொண்டேன் ).

இப்போ நான் சொன்னதை எல்லாம்..ஹே ராமில் நம்ப கமல் எடுத்தாண்டுயிருக்காராம். அதை விரிவான முறையில் நமக்கு ஜமாலன் விமர்சித்து இருக்கிறார். அந்தப் படம் பலப் பேர்க்கு புரியாத புதிர். அதை புரிய வைக்க முயற்சித்திருக்கிறார்.

இவற்றை எல்லாம் ஒரே நாளிலே படித்து புரிந்துக் கொள்ள முடியாதாம். பயிற்சி வேண்டுமாம். இப்படி வித விதமான எழுத்துக்கள் இருக்கிறதை நாம் தெரிஞ்சிக்கலாம், என்று தான் இந்த பதிவு.

பி.கு:-

1.
2.
3. முதலிரண்டு குறிப்பு எழுத மறக்கவில்லை.
4. குறிப்புகள் கொடுத்து விளங்க வைக்க முடியாதவைகள் நிறைய இருக்கு.
6. எல்லாம், மேலேச் சொன்னதைப் படிச்சதின் விளைவு என்று நீங்கள் நினைத்தால், அது சரியாகவும் இருக்கலாம். ;)

18 comments:

  1. ஸ்ஸ்ஸ்........யப்பா.....கண்ணைக் கட்டுதே.............

    ReplyDelete
  2. //துளசி கோபால் said...

    ஸ்ஸ்ஸ்........யப்பா.....கண்ணைக் கட்டுதே.............
    //
    ரிப்பீட்ட்டே......

    ஸ்ஸ்ஸ்........அம்மா.....கண்ணைக் கட்டுதே.............

    ReplyDelete
  3. புனைவு, பின், முன் நடு நவீனத்துவம் எல்லாம் பற்றி எழுதினா இப்படி கும்மி அடிக்கமாட்டாங்க சித்தம் கலங்கி சிவலோக பதவி அடைந்துவிடுவார்கள் என்று அய்யானார் சொன்னாரா?

    ReplyDelete
  4. நான் பார்க்காத புனைவு கதையா? வாங்க சோடி போடுவோமா சோடி?

    ReplyDelete
  5. அ-கதை வகையாம். அப்ப ஆங்கிலத்தில் என்றால் A - கதையா? ஆமா இந்த A யை சுற்றி ஒரு வட்டம் போடுவது எப்படி?

    ReplyDelete
  6. ///குசும்பனை ரொம்ப காலமாக குழப்பத்தில் ஆழ்த்தி இம்சித்து வருவது அய்யனார் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.///

    தெரிஞ்சும் எல்லாம் சும்மாவே வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தீங்களா? நல்ல மனசுய்யா உங்களுக்கு!!!

    இம்சித்து மட்டும் அல்ல துன்பப்படுத்தி என்று பல சொல்லலாம்!!!

    ReplyDelete
  7. பிகு படிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கணும்ன்னு நீங்க சொல்லவே இல்லையே? :-))

    ReplyDelete
  8. .:: மை ஃபிரண்ட் ::. said...
    பிகு படிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கணும்ன்னு நீங்க சொல்லவே இல்லையே? :-))///

    அப்புறம் என்னா கமெண்ட்ஸ் படிக்கனும் அப்புறம் என்னா செய்யனும் என்று உங்களுக்கு சொல்லியா கொடுக்கனும், கும்மு கும்முன்னு கும்மிடனும்:))))

    ReplyDelete
  9. ஆமா, அந்த 5-வது பி.கு எங்க போச்சு????

    ReplyDelete
  10. //குசும்பன் said...
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    பிகு படிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கணும்ன்னு நீங்க சொல்லவே இல்லையே? :-))///

    அப்புறம் என்னா கமெண்ட்ஸ் படிக்கனும் அப்புறம் என்னா செய்யனும் என்று உங்களுக்கு சொல்லியா கொடுக்கனும், கும்மு கும்முன்னு கும்மிடனும்:))))//

    மீத பர்ஸ்டு போட முடியாத கோபமாகூட இருக்கலாம்...

    ReplyDelete
  11. //1.
    2.
    3. முதலிரண்டு குறிப்பு எழுத மறக்கவில்லை.
    4. குறிப்புகள் கொடுத்து விளங்க வைக்க முடியாதவைகள் நிறைய இருக்கு.
    6. எல்லாம், மேலேச் சொன்னதைப் படிச்சதின் விளைவு என்று நீங்கள் நினைத்தால், அது சரியாகவும் இருக்கலாம்.//
    ஒரு அனில் கபூர் படத்தில் நடிகர் காதர்கான் அடிக்கடி கூறுவது நினைவுக்கு வருகிறது. "நான் இவ்வாறு கூறுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் அவ்வளவு விசேஷம் இல்லை, இரண்டாவதை நான் மறந்து விட்டேன்".

    //சமீபத்தில்..(அந்த சமீபத்தில் இல்லை ) படித்த ஒரு பதிவின் துணைகொண்டு, இந்தக் கதையைப் படித்தேன்.//
    நிறைய பேர் இந்த ”சமீபத்தில்” விஷயத்தால் பாதிக்கப்பட்டாங்க போலிருக்கே.

    பை தி வே நான் குறிப்பிட்ட அனில் கபூரின் அப்படம் சமீபத்தில் 1988-ல் வந்தது. ;)

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. //
    கோவி.கண்ணன் said...
    //துளசி கோபால் said...

    ஸ்ஸ்ஸ்........யப்பா.....கண்ணைக் கட்டுதே.............
    //
    ரிப்பீட்ட்டே......

    ஸ்ஸ்ஸ்........அம்மா.....கண்ணைக் கட்டுதே.............
    //
    ரிப்பீட்டேய்

    ஸ்ஸ்ஸ்........ஆயா.....கண்ணைக் கட்டுதே.............

    ReplyDelete
  13. பின் குறிப்பு 1,2,5 சூப்பர்

    ReplyDelete
  14. ஐயனார் நான் மூன்று மாதம் முன்பு போட்ட ஒரு கமெண்டை இன்று வரை பப்ளிஸ் செய்யவில்லை அதனால் அவர் பதிவை புறக்கணிக்கிறேன்!!

    ReplyDelete
  15. //மங்களூர் சிவா said...

    பின் குறிப்பு 1,2,5 சூப்பர்
    //

    கொள்கைக்கு விரோதமாக,
    பதிவை திருட்டுத்தனமாக படித்து பின்னூட்டமிட்ட சிவாவுக்கு கண்டனம்

    ReplyDelete
  16. //
    கோவி.கண்ணன் said...
    //மங்களூர் சிவா said...

    பின் குறிப்பு 1,2,5 சூப்பர்
    //

    கொள்கைக்கு விரோதமாக,
    பதிவை திருட்டுத்தனமாக படித்து பின்னூட்டமிட்ட சிவாவுக்கு கண்டனம்
    //
    கொள்கை விரோதம் இல்லை ஐயா படித்தா மாதிரி ஒரு ஆக்ட் என்பதை இங்கு கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  17. என் ராசா! இவ்வளவு குழம்பியா போயிருக்கே!

    ReplyDelete
  18. \\துளசி கோபால் said...
    ஸ்ஸ்ஸ்........யப்பா.....கண்ணைக் கட்டுதே.............\\

    ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது