07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label TBCD. Show all posts
Showing posts with label TBCD. Show all posts

Monday, January 14, 2008

கோரிக்கையுடனும் , நன்றியுடன் விடைப் பெறுகிறேன்

இன்றே இப்படம் கடைசி... !!!

இந்த ஒரு வாரக் காலம், உங்களுக்கு ஒருச் சிறப்பான வலைசரத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் தொடங்கி, முடிப்பதற்குள் முழிp பிதுங்கி விட்டது.

நான் தொகுத்தப் பதிவுகள் எல்லாம், சிறப்பானவை என்றால், நான் தொகுக்காமல் விட்டப் பதிவுகள் மிகச் சிறப்பானவை என்றே நான் கருதுகிறேன். இடைவிடாதச் சமூகப் பணிக் (!!! ;) )காரணமாக நான் எழுத நினைத்த வலையுலக நன்பர்களின் சிறப்புப் பூங்கொத்து-2 எழுதாமலே கிளம்புகிறேன் :(


இந்த வேளையில், ஒரு கோரிக்கை வைக்க விழைகிறேன். நாம் பதிவு எழுதுவது என்பது மற்றவர்களும் படிக்கவே. அப்படியிருக்கும் போது, நாம் எழுதிய பதிவுகள் சிரமம் இல்லாமல், மற்றவர்கள் படிக்க ஏதுவாக இருந்ததல், சிறப்பாக இருக்கும். நான் இந்த வலைச்சரத்தில் தொடுக்க பழைய பதிவுகளை புரட்டும் போது, பல வலைத் தளங்களில், ஆர்கைவிங்க் என்பது, பதிவு எழுதப்பட்ட காலத்தின் அன்மைய பதிவுகளை மட்டும் காட்டுவதுப் போல் அல்லது, பதிவு எழுதிய மாதத்திலோ,அல்லது பதிவு எழுதிய தினத்திலோ, தொகுக்கப்பட்டுயிருந்தது. இப்படி கொடுக்கப்பட்டு இருக்கும், இடங்களில் பழைய பதிவுகள் தேர்ந்தெடுத்து படிப்பது என்பது வெகு சிரமமாக இருந்தது. அதனால், நான் பரிந்துரைப்பது, நீங்கள் எழுதிய அனைத்து பதிவுகளின் தலைப்பையும், ஒரே பக்கத்தில் பார்க்கும் வண்ணம், தொகுத்தால், சிறப்பாக இருக்கும் (உ.தா. கோவியாரின் பதிவில் இருப்பதைப் பாருங்கள் ). சரி...நன்றி நவிலும் நேரம் ஆச்சு..


ஒரு வார காலம், எனக்கு இங்கே வாய்ப்பளித்த வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், ஆகியோருக்கு நன்றி.

தொடர்ந்து நான் போட்ட பதிவுகளை (மொக்கை) படித்தோ, படிக்காமலோ, பின்னுட்டமிட்டோ, வாசித்தோ ஊக்குவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றி.

என் பதிவுகளைப் படித்து, ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு, தனிப்பதிவு எழுதி தன் கருத்தைத் தெரிவித்த வெட்டிப்பயலுக்கும் என் நன்றி. :D

என்னைத் தொடர்ந்து எழுதப் போகும் ஆசிரியர்களுக்கும் சிறப்பான வலைச்சரம் தொடுக்க என் வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்.

உங்களை அடுத்த ஒரு வார காலம், சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதால், அனைவரும், பின்னுட்டப் பெட்டியருகே, பத்திரமாகப் போய்ச் சேருமாறு வேண்டிக் கொள்கிறேன். :P


அன்புடன்,

டிபிசிடி / TBCD
மேலும் வாசிக்க...

Saturday, January 12, 2008

வலையுலக நன்பர்கள் சிறப்பு பூங்கொத்து - 1

மு.கு:-
1. பி.குவைத் தவறாமல் படிக்கவும்

தமிழ்பதிவு எழுத ஆரம்பிக்கும் முன், (ஆமா, அப்படியே 1000 பதிவு ஆங்கிலத்தில் எழுதித் தள்ளிட்டீங்களா என்று கேட்கக்கூடாது, 5 பதிவு தங்கிலிஷிலே இருக்கு..அதை படிச்சி, அதனன அர்த்தம் புரிந்தவர்கள், இதுவரை யாரும் இல்லை.) கண்ணிலே பட்டது எல்லாம், வாசிப்போமே, அது போல தான், மலேசியா என்றவுடன் ஆகா, தமிழ் வலைப்பதிவர்கள் இங்கேயும் இருக்காங்களா என்று படித்தேன். பதிவு மலேசியப் பழங்கள் பற்றியது. அதில் Penang Indian என்றப் பெயரில் ஒரு பெரிய மகான் பின்னுட்டியிருக்கிறார். அவர் யார் என்று கண்டுப்பிடிப்பவர்களுக்கு "ஜில்லுன்னு...." வலைப்பதிவின் முக்கிய கையான தூர்கா பரிசுகள் வழங்குவார். அப்போ தமிழ் மணமே, வலைப்பதிவர் பட்டறை நடந்து, அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டியிருந்தது. அதன் பாதிப்பை, அந்தப் பதிவின் பின்னுட்டத்தில் நீங்கள் அந்த மகானின் பின்னுட்டத்தில்ப் பார்க்கலாம்.

சரி, மலேசிய வலைப்பதிவர் சந்திப்பு போடலாம் என்றுக் கேட்டால், ஏற்கனவே முடிச்சாச்சு, வேண்டும் என்றால், மலேசியா வந்தாப் பார்க்கலாம், என்று தெனாவெட்டாக பதில் கிடைத்தது. சொன்னது, நான் ஒரு அப்பாவி © என்று காப்புரிமை வைத்திருக்கும் ஒரு பதிவர். யாருன்னு சுட்டிய அமுக்காமச் சொன்னா, நீங்க வலைப்பதிவில், பழம் தின்றுக் கொட்டைப் போட்டவர்.
அப்பறம் தெளிவாக கேட்டப் பின்னாடி, அவங்க நடத்தின, வலைப்பதிவர் சந்திப்பைச் சொன்னாங்க. அசந்துட்டேன். நீங்களும் படிச்சுப் பாருங்க. என்னே ஒரு சமூக நோக்கு, எம்புட்டு தீர்மாணங்கள். அட அடடடடா.

அப்பறம், அதே சமயம், தமிழ் மணத்திலே, ஏகக் கொண்டாட்டாம், பிறந்த நாள் வாழ்த்துக்கள்,என்று ஏக அலப்பரை, நானும் யாரோ பெரிய கை என்று நினைத்தேன். ஏன்னா, பாய்ஸ் படத்திலே, வந்துப் போன, ஒரு நடிகரே கவிதை எல்லாம்
போட்டு இருந்தார். எல்லாப் பக்கமும், வாழ்த்து என்று அமர்க்களம் பண்ணிக்கிட்டு இருக்கனுமின்னு உத்தரவு போட்டுட்டு, ஒன்னும் தெரியாத மாதிரி, மற்றொமொரு அப்பாவி வேசத்திலே சுத்துறது, வேற யாரும் இல்லை, பச்ச சட்டை, மஞ்ச பேண்டுக்கு அடிமையான, மை ஃபிரண்டு. இன்னைக்கு, புதுப் பதிவர்களும் கும்மியடிக்கிறாங்கன்னா, அதுக்கு ஒரு முழு முதல், முக்கிய காரணம், இவங்க தான். ஆமாங்க ,ஆமாம், உதாரண பதிவு எல்லாம், காண்பிச்சு, கும்மின்னா, என்ற மகத்தான பாடத்தை, அவங்க மலாய் பாடம் நடத்துற மாதிரியே நடத்தினாங்க. வாழ்க அவர்கள் தமிழ் சேவை. நன்பர்கள் தினத்தில், இவங்க எழுதின இந்தக் கதை சிம்பிளி சூப்பர்ங்கோ.

அப்படியே, மெதுவா, பதிவு போடும், போது, நன்பர் பாரியயை சும்மாக்காச்சிக்கும், கலாய்க்கும், ஒரு மின்னஞ்சல் தட்டி, அப்படியே நட்பு வட்டத்தில் வந்து சேர்ந்தார். ரொம்பவும், சீரியஸ் பதிவர் என்ற போர்வைக்குள்ளே வசிக்கும், ஒரு ஜீவன். அவரின் விசுவரூபம் பினாங்க்க்கு பதிவர்களுடன் வந்தப் போது தான் தெரிந்தது. இவர்க்கும் இந்தப் பதிவிற்கும் சம்பந்தமே இல்லை என்பது வெள்ளிடை மலை. தனி மனித பாதுகாப்பைப் பற்றிய இந்தப் பதிவு அவசியம் படிக்கப்பட வேண்டியப் பதிவு. மொழிப் பற்றிய இந்தப் பதிவு, பனியாக்களைப் பற்றிய இந்தப் பதிவு நமக்குச் சொல்லும், சேதிகள் பல. இவரோட பெரியத் தொல்லை என்னான்னா, முடிக்க மாட்டார், பத்த வச்சிட்டு, எப்ப அடுத்த பகுதி என்று கேட்க விட்டுருவார்.தமிழ்மணம் வாசிப்பில் என்று இவர் தமிழ்மணம் கேட்டுக் கொண்டதாக எழுதிய பதிவு இங்கே. அப்படி ஒரு வழக்கம் இருக்கிறதா. இருந்தால், பாரியோடு நின்று விட்டதற்கு பாரி எவ்விதத்தில் காரணம் ;) புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.

அப்பறம், அரசியல் பதிவுகளில் புகைவண்டி, மகேந்திரன் வந்தாருங்க. பாவம், ஏண்டா, இவன் கூட பேச ஆரம்பிச்சேன் என்று நொந்துப் போகும் அளவிற்கு கொஞ்ச காலம், தாளிச்சிட்டேன். இப்போது கொஞ்ச காலம், மறைந்து (?!!) இருக்கும் அவர் மீண்டும், சூடான இடுகைகளில் மினு மினுப்பார் என்று எதிர்ப்பார்ப்போம். ரஜினி ரசிகர்களை அன்புடன் அறிவுறுத்தும் இந்தப் பதிவு சூப்பர்..யோனி, குறி, இத்யாதிகளுடன் எழுதப்படும் கவிதைகளை (நகலெடுத்து) போட்டு, நம்மளை அப்ப அரள வைப்பார்.

அப்பறம், படாத பாடுப்பட்டு, கோவியாரை நட்பு வட்டத்தில் சேர்த்து, சுற்றூலா வரைக்கும் போயாச்சு. அவர் பதிவெழுதும் வேகம் , நம்மால் ஈடுக் கொடுக்க முடியாது. புதுப்பதிவர்களே, சூடான இடுகைகளில் இடம் பெறுவது எப்படி என்று இவர் பதிவு போட்டாலும், சரக்கிருப்பதால், தினமும் அங்கே மிளிருகிறார். ஆன்மிகம் பற்றி, ஆத்திகர்களை விட நாத்திகர்கள் நிறைய படிக்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம். . சமூக அவலங்கள்,
பகுத்தறிவும் இவரது களம் என்று குறுக்கிவிட முடியாது.

கோவியாரால், இந்த சைலண்ட் கில்லார் அறிமுகம். நச்சுக்கதையில் இரண்டாம் நிலை பெற்ற இவர் வெகு குறைவாகவே எழுதுவார். ஆனா, எப்படா பதிவு வரும் என்று காத்திருக்கும், மங்களூர் சுனாமிக்கு போட்டியா வருகிறார், எதில் பின்னுட்டமிடுவதில். இவரின் குல்லுகப் பட்டர் பற்றிய, சுவாரசியமான உரையாடலகள் உடைய இப்பதிவு படிச்சுப் பாருங்க. சிவகாசியயைச் சார்ந்த மண் மனம் வீசும் பதிவுகள் மேலும் வரும் என்று நம்புவோமாக.

பி.கு :-
1. ந.குவில் இருப்பதை தவறாமல் படிக்கவும்.

(தொடரும்)
மேலும் வாசிக்க...

Friday, January 11, 2008

சில சமயங்களில் சில சமயங்கள் : அதிர்வுகள் - 2

நான், மதுரையில் வளர்ந்தாலும், என் பெற்றோர் இருவருமே கிராமத்திலே வளர்ந்தவர்கள்.(மதுரையும் நிறைய மக்கள் இருக்கிற சிறு நகரம் தான்)கிராமங்களில் சிறு தெய்வ வழிபாடு என்பது வாழ்க்கையில் கலந்துவிட்ட ஒன்று. வீதி தெய்வம் என்று என் தாத்தாவின் தாத்தா அந்த கிராமத்துக்கு வந்தப் போதும், பெட்டியில் சாமியயை எடுத்து வந்து பின்னர், அங்கே சாமியயை நிறுவி வழிப்பட ஆரம்பித்ததாக என் தந்தை சொல்லியிருக்கிறார். இது போன்ற சிறு தெயவ வழிபாடுகள் இன்றைய காலக் கட்டத்தில் மெதுவாக வழக்கொழிந்துக் கொண்டோ, அழிக்கப்பட்டோ வந்துக் கொண்டுயிருக்கிறது. சிறு தெய்வ வழிபாடுக் குறித்து கற்ப விநாயகத்தின் இந்தப் பதிவு ஒரு அருமையான பதிவு என்பதில் ஐயமே இல்லை.

தமிழகத்தில் பல மதங்கள் ஒரே சமயத்தில் இருந்து, பின்னர், ஒன்றன் பின் ஒன்றாக அழிக்கபப்ட்டு இன்று ஒரு சிலவனவே எஞ்சி இருக்கிதது. இப்படி அழித்தொழிக்கப்பட்ட மதங்களில் சமணமும் ஒன்றாகும். திருவள்ளுவர் சமண மதத்தராக இருக்கக்கூடும் என்று இந்தப் பதிவு பல பாடல்களை ஆராய்ந்து நமக்குச் சொல்லுகிறது. சமணக் கோவில்கள்,தமிழகத்தில் ஆகரமிக்கப்பட்டு இன்று அவை வேறுப் பெயரில் சுற்றி வருகிறது என்று இந்தப் பதிவு நமக்குச் சொல்கிறது. திருப்பரங்ககுன்றம் சமணக்கோவிலாக இருக்குக்ம் என்று கேள்வியயை எழுப்பும் மற்றொமொரு பதிவு.

கோவில்களை அழித்து வரலாற்றை மாற்றி எழுதுவது ஒரு பக்கம் இருக்க, சில சமயம் வரலாற்றை ஒற்றுமைப்படுத்தில் சில குழுப்பங்களுக்கு வழிவகை செய்வார்கள். ஹரப்பா, ஆரியர், திராவிடர் என்று இந்தப் பதிவில் நடக்கும் விவாதங்களை கவனியுங்கள்.

ந.கு: புது முயற்சி

தமிழகத்தில் கோவில் வழிபாடுகளில் மாறுதல் கொணர முயற்சித்த மதுரை ஆதினம் பற்றியும், அவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்த காஞ்சிப் பெரியவர் பற்றியும், இங்கேப் பார்க்கலாம். கூடுதல் தகவல்கள் தமிழ்ப் பெயர்களில் இருந்து வடமொழிப் பெயர்களாக மாறிய ஊர் பெயர்கள். கூடுதலாக சிறியவர் பற்றிய குறிப்பு இங்கே.

மாற்றம் என்ற ஒன்றே மாற்றமில்லாதது. மாற்றங்களை கலாச்சாரப் போர்வையில் சில கலாச்சாரக் காவலர்கள் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்குவதை நாம் பார்த்து வருகிறோம். கலாச்சாரக் காவலர்களின் முழுத்திரையயையும் விலக்காவிட்டாலும், ஒரு சிறிய சாளரத்தை திறக்கும் இந்தப் பதிவு. மனிதனை இழிவுப்படுத்தும் நிலை இருக்கும் வரை நமக்கு கலாச்சாரம் என்ற வார்த்தையயை சொல்ல அருகதை கிடையாது. இது போன்ற சமூகப் கோபங்களைப் பற்றிய ஒரு அருமையான நூல் அறிமுகம் இங்கே. மக்களிடையே இயல்பான சமூக மாற்றத்திற்கானா ஒரு வேண்டுதலாக இந்தப் பதிவு.
மேலும் வாசிக்க...

Thursday, January 10, 2008

சும்மா அதிருதுல்ல : அதிர்வுகள்

மு.கு :-
1. பின் குறிப்பு மட்டுமே படிப்பேன் என்று சிலர் அடம் பிடிப்பதால், இந்தப் பதிவில் பி.கு
கிடையாது.
2.பதிவே குறிப்பு தான் இதுக்கு எதுக்கு முன் குறிப்பு, எனவே நேரா பதிவையே படிங்க.

நம்ம திரை ரசிக கண்மனிகளை விட, அதில் தோன்றும் பிம்பங்கள், அடிக்கடி, ஆங்கிலப் படம் போன்று இருந்தது, ஹாலிவுட் ஸ்டைல் என்று எல்லாம் சொல்லி ஒரு பார்வையயை சில படங்களுக்கு அளிப்பதுண்டு. அந்தப் படங்களுக்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறதோ இல்லையோ, சுவாரசியமான பல படங்கள் பிரம்மாணடம் இல்லாமல் அங்கே வந்து பெயர் பெற்றியிருக்கிறது. அப்படி உலக திரைப்படங்களில் நான் கண்டு குழும்பிய ஒரு படம் முல்ஹோலேண்டு டிரைவ். படம் பார்க்கும் போதும், பார்த்தப் பின்னும், ரசிகர்களை படத்தை ஆராய வைத்து, படத்தில் குறியீடுகள் (codes) வைத்து ரசிகர்களை குழப்பிய ஒரு அருமையான படம்.

இந்தப் படத்தை பார்த்து அதை ஆராய்ந்து ரசிகர்கள் வைத்திருக்கும் வலைத்தளத்தில் போய் பார்த்தால், ஒரு படத்தில் இவ்வளவு தூரம் சொல்ல முடியும்மா, அதாவது சொல்லாமல், சொல்ல முடியும்மா என்று வியந்தூப் போனேன். இது இயக்குனர் வலிந்து செய்தது, ஏதோ இயக்குனர் இப்படி நினைத்து தான் படத்தை எடுத்தாரோ என்று தப்பிக்கும் வாதம் எடுப்படமால் போக, டிவிடியுடன், படத்தைப் பற்றிய 10 க்குளுக்கள் தந்திருக்கிறார் இயக்குனர்.

ஆக, திரைப்படங்கள் என்பது ஒரு படி கீழேயும் சென்று வாசிக்க தகுதியுடையவை, புத்தகங்கள் போலவே. புத்தகங்கள் வாசகனின் கற்பனனக்கேற்றவாறு வடிவம் கொடுக்கும். ஆனால், பெரும்பாலான திரைப்படங்கள் ஒன்றும் சொல்லாமலே போய்விடும். சிந்தனனயயை மறக்கடிக்கும், மழுங்கடிக்கும் திரைப்படங்கள் ஒரு நல்ல படமாக இருக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. ஆனால், அப்படிப்பட்ட படங்களே, தமிழ் நாட்டில் வனிகரீதியாக தொடர்ந்து வெற்றிப் பெறுவது, ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை என்றூ நாம் கொள்ளாலாம். காதல் என்ற திரைப்படம், தமிழகத்தில், ஒரு போற்றப்படுகின்ற படம், படமாக்கிய விதத்தில், வாசகனை கட்டிப் போடுவதில் அது வெற்றிப் பெற்றது. எங்கே சறுக்கியது என்று வளர்மதி சொல்லுவதைப் படியுங்கள்.

உருப்படாததுவின் புதுப்பேட்டைப் பற்றிய பதிவை என் அறிமுகத்தில் கொடுத்திருந்தேன். அதனனத் தொடர்ந்து, வட சென்னையயைப் பற்றிய அவரது பதிவு,அந்த திரைப்படத்தின் அதிர்வு என்று சொல்லலாம். இதுப் போன்ற அதிர்வுகளை கிளப்பும் படங்கள் நம் போன்ற வாசகர்களுக்கு சுவாரசியமான வலைப்பக்கங்களை தருகிறது. :). நிழலுலகம் பற்றிச் சொல்லும் போது, நேரிடையான பதிவுகள் என்பது திரைப்படத்தில் மட்டுமே கண்ட நமக்கு, உன்மை நிகழ்வை தொடர்புபடுத்தி, அபுசலிம் பற்றிய இப்பதிவு சுவாரசியமானது.

வேதம் புதிது தமிழ்ப்படங்களில், மொக்கையான முடிவுகளுக்கு ஆரம்பம் என்று சொல்ல முடியாது. அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஆரம்பித்து, வேதம் புதிது, இந்திரா வரை சாதி பிரச்சனைக்கு தீர்வு சொல்ல முடியாமல் போன படங்கள் நிறைய இருக்கிறது. ஆனா, வேதம் புதிது கிளப்பிய ஒரு அருமையான அதிர்வு இங்கே.

அதிர்வுகள் என்பது திரைப்படங்கள் மட்டும் தருவதில்லை. ஒரு சாதாரண செய்தி கூட ஒரு அதிர்வுகள் கிளப்பும் என்பதற்கு இந்தப் பதிவைப் படியுங்கள். படித்தவர்கள் பலரும் பேசத் தயங்கும், ஒரு விசயம் கலவிக்குப் பின், மாதவிலக்கு மற்றும் அதன் தொடர்பானவை. இயல்பான, ஒரு சமூதாயக் கோபம், இந்தப் பதிவில் இருக்கு எனக் கொள்ளலாம். சில சமயம் நாம் வாசிக்கும் சில வரிகள் அதிர்வுகள் கிளப்பும் தன்மையில் இருந்தும் கவணியாது போய் விடுவோம். அதன் காரணம் நாம் சரியாக வாசிக்கவில்லை என்பதல்ல, பல காலமாக நம் கண் முன்னே அவைகளை நியாயப்படுத்தியோ, இல்லை, அது தான் ஒழுங்கு முறை என்றோ போதிக்கப்பட்டுவிட்டதால்.

(தொடரும் )
மேலும் வாசிக்க...

Wednesday, January 9, 2008

வேண்டாம்..வேண்டாம் என்று சொன்னாலும் விடாமல் குழப்பச் சொன்னதால்.. : மாற்று எழுத்துக்கள்

முதல் இரண்டு பதிவுகளைப் பார்த்து..(படித்துன்னு சொல்லலாமின்னா, தலைப்பு மட்டும் தான் படிப்பேன்னு ஒருத்தர், பி.கு மட்டும் தான் படிப்பேன்னு இன்னோருத்தர்ன்னு சுத்தி சுத்தி அடிக்கிறாங்க)தெளிவா எழுதியிருக்கீங்க அப்படின்னு என்னைச் சொல்லிட்டுப் போயிட்டாங்க. எனக்குத் தான் புரியல்ல. தயவு செய்து விளக்கவும் என்று சொன்னேனே ஒழிய, நான் எழுதுவதும் உங்களுக்கு புரியாது என்றா சொன்னேன். ;)

ஆனா, வம்பை விலைக்கு வாங்கி, நடு வீட்டுல வச்சி, பூப் போட்ட கதையா ஆகப் போகுது. இன்னைக்கு தலைப்பு மாற்று எழுத்துக்கள். அது என்ன மாற்று எழுத்துக்கள், யூனிக்கோடில் தானே எழுதுறோமின்னு ஆரம்பிக்காதீங்க. வலைப்பதிவில் புழங்கும் ஒரு சில பதிவர்களின் எழுத்துக்கள் மேம்போக்காக படித்தால், அர்த்தம் விளங்காமல் தவிப்போம். ஏண்டா இப்படி எழுதுறாங்க அப்படின்னு. அந்த வகையறாவைச் சேர்ந்த எழுத்துக்களை தொகுத்து உங்களை எல்லாம், குழுப்பலாம் என்றே இந்த பதிவு. :D

முதலில், ஒரு புதுப் பதிவரில் இருந்து ஆரம்பிக்கிறேன். ஜ்யோவ்ராம் சுந்தர் , இவர் ஒரு சிறுப்பத்திரிக்கையில் எழுதி, அவர்களை இம்சித்தது போதாது என்று வலையுலகிற்கு வந்திருக்கிறார். இவர் எழுதியிருக்கும், இந்த ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளும் தொன்மக் கதைகளும் என்ற கதையயை புரிந்த ஒரு சிலர் மட்டுமே பின்னுட்டம் இட்டுயிருக்கிறார்கள். இந்தக் கதை புனனவு மற்றும் அ-கதை வகையாம். புனைவு என்றால் என்ன என்று நான் கேட்டுப் பெற்ற பதில் மெட்டா- பிக்ஷன்க்கு வெகு அருகில் வரும் எழுத்தாம். அ-கதை என்றால, கதையற்ற கதையாம். விளக்கம் கேட்காமல் படிச்சு அர்த்தம் புரியதா பாருங்க ;)

இதுப் போன்ற சிறுப்பத்திரிக்கை எழுத்துக்கள் இனையத்தில் உலாவ ஆரம்பித்து கொஞ்ச காலம் ஆகிவிட்டது. அதுப் பற்றி, ஜெயமோகன் என்ன சொல்லுறார், அதுக்கு அவரை ஒரு பதிவர் எப்படி டார் டாரா கிழிக்கிறார் *(பின்னுட்டத்தில்) என்று இங்கேப் பாருங்கள்.

சமீபத்தில்..(அந்த சமீபத்தில் இல்லை ) படித்த ஒரு பதிவின் துனைக் கொண்டு, இந்தக் கதையயைப் படித்தேன். பிறக்கும் போதே 60 வயது கிழவியாக பிறந்து, வளரும் ..இல்லை, இல்லை தேயும் ஒரு பெண் பற்றிய புனைவு. (ஐய்யா, நானும் இந்த வார்த்தையயை உபயோகிச்சிட்டேன்).

புனைவு என்றால், நமக்குப் பரிச்சியமான அய்யனாரை நாம் குறிப்பிடாமல் போக முடியாது. குசும்பனை ரொம்ப காலமாக குழப்பத்தில் ஆழ்த்தி இம்சித்து வருவது அய்யனார் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால், சமீபத்தில் அய்யனார் எழுதிய கவிதை ஒன்று சிறுமி விளையாட்டு. இந்தக் கவிதை மேஜிக்கல் ரியாலிசம் என்ற வகையில் வருகிறதாம். நான் படித்த முதல் மேஜிக்கல் ரியாலிசம் இது தான். ( ஏன்னா, அன்னைக்குத் தான் இப்படி ஒரு எழுத்து இருக்கு என்றே அறிந்துக் கொண்டேன் ).

இப்போ நான் சொன்னதை எல்லாம்..ஹே ராமில் நம்ப கமல் எடுத்தாண்டுயிருக்காராம். அதை விரிவான முறையில் நமக்கு ஜமாலன் விமர்சித்து இருக்கிறார். அந்தப் படம் பலப் பேர்க்கு புரியாத புதிர். அதை புரிய வைக்க முயற்சித்திருக்கிறார்.

இவற்றை எல்லாம் ஒரே நாளிலே படித்து புரிந்துக் கொள்ள முடியாதாம். பயிற்சி வேண்டுமாம். இப்படி வித விதமான எழுத்துக்கள் இருக்கிறதை நாம் தெரிஞ்சிக்கலாம், என்று தான் இந்த பதிவு.

பி.கு:-

1.
2.
3. முதலிரண்டு குறிப்பு எழுத மறக்கவில்லை.
4. குறிப்புகள் கொடுத்து விளங்க வைக்க முடியாதவைகள் நிறைய இருக்கு.
6. எல்லாம், மேலேச் சொன்னதைப் படிச்சதின் விளைவு என்று நீங்கள் நினைத்தால், அது சரியாகவும் இருக்கலாம். ;)
மேலும் வாசிக்க...

Tuesday, January 8, 2008

எப்படி இருக்க வேண்டிய நாம்..ஏன் இப்படி ஆயிட்டோம்

தென் ஆப்பிரிக்காவில், நெல்சன் மண்டேலாவை கைது பண்ணி சிறையில் தள்ளிய போது, இனவெறி/நிறவெறி ஏன் இன்னும் உலகத்தில் இருக்கிறது எனத் தோன்றியது. ஆனால், அந்த நாட்டில் நடப்பவைக்கும் நமக்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லை . பழங்குடியினர்களை அழித்தெடுத்த அமெரிக்காவிற்கும் , ஆஸ்துரேலியாவிற்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. நம் பழங்குடிகளை போற்றி பாதுகாத்து அவர்களை நம் சமூகத்திற்குள் கொண்டு வர முயற்சிகள் செய்யாவிடிலும், அவர்களை எக்ஸ்பிளாட் செய்யாமல் இருக்கலாமே. இந்த சுட்டியில் இருளர்களுக்கு நடந்தக் கொடுமைகள் பதிவேற்றப்பட்டுள்ளது. நாம் இன்னும் மாற்ற வேண்டியவை நிறைய என்பதை மீண்டும் உணர்த்தும் பதிவு. இங்கே இருளர்கள் பற்றிய சிறு குறிப்பு.

தமிழர்கள் இதுப் போன்ற பிரச்சனைகளை கண்டுக் கொளவதில்லை. ஏன் என்றால், அவர்களின் ஆக்கமும் , ஊக்கமும், இந்த வாரம் என்ன படம் வருகிறது, எப்படி போய் பார்ப்பது என்பதிலே. தமிழர்கள் ஏன் இன்னும் திரையிலே தங்கள் தலைவர்களைத் தேடுகிறார்கள் என்று உலகின் பல மூலைகளிலும் ஆரய கிளம்பியிருக்கிறார்களாம். . தமிழகத்தில் குஷ்புவிற்கு மட்டும் கோவில் கட்டவில்லை. நடிகர்களுக்கும்/நடிகைகளுக்கும் அர்பணிப்பு என்ற அளவிற்குப் போகும் முட்டாள் தமிழர்களைப் பற்றிய ஒரு பதிவை இங்கேப் பாருங்கள். சரியப்பா, படிக்காதவர்கள் தானே இப்படி, படித்தவர்கள் அப்படி இல்லை என்பவர்கள் கொஞ்சம் பொறுங்கய்யா. இன்னைக்கு விஜய்க்கும், அஜிக்கும், திரைஅரங்குக்கு வெளியே கொடி கட்டுவது வேண்டும் என்றால், படிக்காதவனா இருக்கலாம், ஆனா, மல்டிப்பிளெக்ஸ் திரைஅரங்குகள் எவ்வளவு தூரம் புக் ஆகின்றது, ஓப்பனிங்க் கலெக்ஷ்ன் என்ன, படம் ஹிட் ஆகுமா, ஆகாதா என்று ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை செலவழிப்பது படித்த இளைஞர்கள் என்பது வேதனைக்குரியது. ஒரு திரைப்படம் வெளி வரும் முன்னும், வந்த பின்னும் இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக விவாதிப்பதை காணுங்கள்.

இப்படி எல்லோரும் திரைப்படத்தில் தங்களை ஆழ்த்திக் கொண்டு இல்லை என்பது ஆறுதலான செய்தி. தமிழகத்தில் இரட்டைக் குவளை முறை இன்னும் வழக்கில் உள்ளது என்பதை முகத்திலடித்தவாறு கொண்டு வந்ததோடு நில்லாமல், அதனை ஒழிக்கும் முயற்சியில், இன்னும் தமிழர்களில் ஒரு சிலராவது முனைப்போடு செயலபடுவது மகிழ்ச்சி.

வலையுலகம் என்பது ஒரு அறிவுச் சுரங்கம் மட்டுமல்ல, தெளிவற்று இருக்கும், மக்களுக்கு பல வகையான தகவல்களை அள்ளித் தரும் இடமும் கூட. இப்படி இருக்கும் காலக்கட்டத்தில், பிரச்சனைகளை திசை திருப்பி, மக்களை மழுங்கடிக்கும் சில முயற்சிகள் நடைப்பெறும். வலையுலகத்தில் தமிழ் துள்ளி விளையாடுவதால், இப்படிப் பட்ட முயற்சிகளுக்கு எதிர் வினைகள் சட்டென்று உருவாகி, பரவலாகவும் அறியப்படுகிறது. சுஜாதாவின் அயோத்தியா மணடபம் என்ற ஒரு கதையில் உள்ள அரசியலை பதிவர்கள் பிச்சி கொத்துப் புரோட்டா போடுவதை கில்லி தொகுத்து தந்திருக்கிறதுப் பாருங்கள்.


பி.கு:

1.முதல் பதிவில் கும்மியடித்து விளையாண்ட நன்பர்களுக்கு நன்றி.
2.இந்தப் பதிவிலாவது, சுட்டிகளை அமுக்கிப், படித்துப் பின் பின்னுட்டம் போடவும். :D
மேலும் வாசிக்க...

Monday, January 7, 2008

புரியல்ல ..? தயவு செய்து விளக்குறேன்..

வணக்கம்.

நான் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல், என்னை வலைச்சரம் ஆசிரியர் ஆக்கியே தீருவேன் என்று அடம்பிடித்த முத்துலெட்சுமி அவர்களுக்கு என் நன்றிகள்.

இது மாதிரி ஆரம்பிக்க ஆசை தான்..ஆனாப் பாருங்க..உங்க நல்ல (கெட்ட) நேரம்..அவங்க கேட்டதும், நான் உடனே சரி என்று சொல்லிவிட்டேன். வேண்டாம் என்று ஒரு பிகு பண்ணி அவங்க நேரத்தை ஏன் கெடுக்கனும். ஆனாலும், பிகு பண்ணாம இல்லை. கொஞ்ச கால அவகாசம் வேண்டும், குறைந்தது 1~2 வாரம் என்று கேட்டு, அதுவும் கொடுத்தார்கள்.

கால அவகாசம் கேட்டு அப்படியே சுமார் 20 பதிவு எழுதி தயாரா இருக்கும் என்று நினைத்துக் கொண்டியிருந்தால், என்னை பொறுத்தருள வேண்டும். அது என்னவோ, கெடு முடியும் போது, அட்ரனலின் சுரக்க சுரக்க எழுதினா தான் பிடிக்குது.

2004ல் பிளாக் பற்றிப் பரவலான எழுத்து வலையில் தொடர்ந்து வர ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். நான் முதலில் தமிழகத்தைச் சேர்ந்தாவர்கள் பதிவைப் படிக்கலாம் என்று ஆங்கிலப்பதிவில் ஆரம்பித்தேன். லேசி கீக் என்ற சென்னைப் பதிவர். பின் அவரின் பிளாக் ரோலில் உள்ளவர்கள் என்று மெதுவாக நேரம் வாய்க்கும் போது மட்டும் பார்த்துக் கொண்டியிருந்தேன்.

அக்டேபர்'05ல் நான் பணியில் சேர்ந்தப் போது, மடிக்கணிணி தரப்பட்டது. அது வரை வீட்டிலே கணிணி இருந்தாலும், பெரும்பாலும், சினிமா சம்பந்தப் பட்ட, உரையாடி மற்றும் இன்ன பிற நல்ல வெட்டி வேலைகளுக்கு மட்டுமே உபயோகித்துக் கொண்டியிருந்தேன். இந்த மடிக்கணிணி என் வாழ்வில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்ப்படுத்தியது. ;)

அது வந்து சேர்ந்தப் பின் மணிக்கனக்கான உபயோகமற்ற அலுவக சந்திப்புகள் நடக்கும் போது, பொழுது போகாமல், வலையிலே உலாவும் போது, இந்த தமிழ் வலைப்பதிவர்கள் தொகுப்பில் வந்து சேர்ந்து, தமிழ் படிக்க கணிணியயை மேம்படுத்திக் கொண்டேன். அப்படியே, சுவாரசியமாக பெயர், விவரம் இருந்த வலைப்பதிவுகளை மட்டும் சொடுக்கி, பார்த்துக் கொண்டியிருந்தேன்.


நான் திரைப்படம் பார்த்தப் பின், விமர்சனம் படிப்பது வழக்கம். நான் கவனிக்காததை ஏதாவது ஒன்றை மற்ற விமர்சகர்கள் கவனித்திருப்பார்கள். சில சமயம் இப்படி ஓரு கோனம் இருப்பதே நமக்கு தெரிந்திருக்காது.

புதுப்பேட்டை படம் வெளியான புதிதில், இந்த விமர்சனத்தின் மீது எப்படியோ போய் சேர்ந்தேன். (அவர் எந்தப் பதிவர் என்று கூட நினைவு இல்லை. எப்படியோ நினைவு இருக்கும் வார்த்தைகளை வைத்து கூகிளாண்டவரைப் பிடித்து பிடித்து விட்டேன்). உருப்படாதது நாராயின் என்ற பதிவர் எழுதிய தான் அது. விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி, அவரின் அனுபவத்தையும் அசைப் போட்டு அருமையாக எழுதியிருப்பார். அதை ஒற்றி காலச்சுவடில் இந்த விமர்சனமும் கண்ணில் பட்டது. இவை பொதுவான விமர்சனம் படித்து வந்த வாசகர்களுக்கு ஒரு மாறுப்பட்ட கோணத்தில் படத்தை அறிமுகம் செய்யும்.

பெரியார் பற்றி ஏதோ தேட ஆரம்பித்து, விடாது கருப்பு பதிவில் போய்ச் சேர்ந்தேன். அப்போதும், ஏதோ வித்தியாசமான பெயராக இருக்கே என்று போய்ப் பார்த்தால், பெரியார் முழக்கம் ரொம்ப ஜோராக போய்க் கொண்டியிருந்தது. பின் அவரின் பதிவில் சுட்டிகளாக வரும் பதிவர்களை போய் படித்துக் கொண்டியிருந்தேன்.

கருப்புவின் பிளாக ரோலில், அனைத்து வலையுலக வித்தகர்களும் இருந்தனர். ஆனால், அசுரன் என்ற வித்தியாசமான பெயரால் இழுக்கப்பட்டுப் போனால், முத்துராமலிங்கத் தேவர்ப் பற்றிய பதிவு. எந்த ஒரு விசயத்துக்கும் வேறு கோணம் இருக்கும் என்று திடமான எண்ணம் தோன்றக்கூடிய ஒரு பதிவு. மதுரையில் ஒரு கல் விழுந்தாலே பற்றிக் கொள்ளும், ஆனால், இதுலே தீப் பொறிப் பறக்க விவாதமும் பின்னுட்டத்தில். .

2007 மே மாதம் மலேசியாவிற்கு பணி மாற்றமாக வந்தேன். வீட்டில் கணிணி முன் மணிக்கனக்காக அமரும் வாய்ப்புக் கிட்டியது. தமிழ் கூறும் நல்லூகத்திற்கு கெட்ட காலம் ஆரம்பித்தது. தமிழ் வலைப்பதிவு திரட்டியில் வாசிக்க ஆரம்பித்தேன். பின்னுட்டங்களை கவணிக்க ஆரம்பித்தேன். இகலப்பை பல முறை தரவிறக்கம் செய்தும், அதில் எப்படி எழுதுவது என்று தெரியாததினால், அதைப் பயன்படுத்தவில்லை.

சுரதா வலைத்தளம் தான் முதலில் கணிணித் தமிழ் எழுதும் அனுபவத்தை தந்தது. அதனை வைத்து என் பின்னுட்ட கணக்கை ஆரம்பித்தேன். முதலில் TBCD (Tamilnadu Born Confused Dravidian) என்ற பெயரில், ஆரம்பித்துப் பின்னர், ரொம்பவும் பெரிது என்று கருதி, TBCDயாக மாறி, தமிழில் தப்புந்தவறுமாக எழுதி பதிவர்களை சோதிக்க ஆரம்பித்தேன்.


தமிழ் மணத்தில் சேர்ந்து பதிவு எழுதி அதை சேர்த்து, புதுப் பதிவுகள் முகப்பில் வரவைப்பது வரை எனக்குப் பெரிதும் உதவிய மை பிரண்டுக்கும், தமிழ் எழுதும் முயற்சிக்கு துனைப் புரிந்த துர்காவிற்கும் என் நன்றிகளை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.


பெரும்பாலும், என் பதிவுகள், ஏதாவது ஒன்றிற்கு எதிர் வினையாகவே வந்திருக்கிறது. தனியாகக் படித்தாலும், பொரூளுடன் நிற்கும் பதிவுகள் வெகு சில. ஜூலை'07 மாதம் எழுதத் துவங்கி இன்று வரை (ஜன'08) , 99 பதிவுகளை புரியல்ல.தயவு செய்து விளக்கவும். என்றப் பதிவில் எழுதியாச்சு. இதற்கிடையில் பொங்கி வந்த சிறு கதைகளை தனி பதிவு(குழு) கண்டு அங்கேயும் கொஞ்சம் கிறுக்கியாச்சு.


என் அளவில் அவை அனைத்தும்மே படித்துப் போற்றிப் பாதுக்காக்கப்பட வேண்டியவை ;)


ஆனால் அத்தனையும் இங்கேச் சுட்டிக் கொடுத்து மாளாது. சில பதிவுகளை உங்கள் பார்வைக்கு (மீண்டும் ) வைக்கிறேன்.

  1. தமிழ் மொழி : நல்லா திட்டுறதுன்னா என்ன..? : வழக்கில் உள்ள சில வார்த்தைகளூக்கு நினைத்தேப் பார்க்க முடியாத விளக்கங்கள்

  2. சிறு கதை : யார் அவள்...? : அவள் யார் என்ற கேள்விக்கு உங்களால் விடை காண முடியுதா பாருங்க..

  3. சமூகம் : கருப்பு நிறத்ததொருப் பூனை - எங்கள் வீட்டில் வளருது கண்டீர். : தமிழர்களின் நிறம் சார்ந்த கட்டமைப்பைப் பற்றிய பதிவு.

  4. திரைப்படம் : எவனோ ஒருவன் : ஒரு பார்வை : வெகு மக்கள் ஊடகப் பார்வையில் இருந்து மாறுப்பட்ட பார்வையில் திரை விமர்சனம்.

  5. கவிதை : கவிதை/கவிஜ

  6. அனுபவம் : மாஸ்டர் ஒரு வியட்னாம் டீ பார்சல் : ஒரு வியட்னனம்வாசியுடன் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம்

அறிமுகம் எழுதிக் கொள்ளலாம் என்று சொன்ன இடத்தில், சுய புராணம் பாடி விட்டதாகவே நான் நினைக்கிறேன். Blowing your own trumphets என்று சொல்லுவார்கள், அதற்கு பிற்காலத்தில், வலைச்சர ஆசிரியர்கள் இதற்கு சுட்டிக் கொடுத்தால், எனக்கு ஆட்சேபனை இல்லை. ;)

நான் பதிவுவெழுத வந்த கதையயைச் சொல்லி, இந்த வாரம் முழுதும் நீடிக்கப் போகும் குழப்பமான வலைச்சரத்தை ஆரம்பிக்கிறேன். தவறு இருந்தால் வழக்கம் போல் சுட்டுங்கள். கொட்டியே பழகியவர்கள் கொட்டலாம் ;)

அன்புடன்,

டிபிசிடி

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது