அடைமழை ஒய்ந்தது!!!
ஒரு வாரத்தில் எத்தனை பதிவுகள் .. ஆம்..சுனாமிப்பதிவர் என்று சொன்னாலும் சொன்னார்கள் வலைச்சரமே ஒரு பெரிய சுனாமியைப்பார்த்தது போல் நிற்கிறது. வரும்பொழுது வலைச்சரத்துக்கு ஏழரை என்றார் சரி ஏழரை வந்த போது படுத்தினாலும் போகும் போது அள்ளிக்கொடுக்கும் என்று நினைத்துக்கொண்டேன் . பணச்சரம் என்றும் பிட்னெஸ் என்றும் எண்ணிக்கையிட்டு தொடராக வலைச்சரம் தொடுத்ததில் எத்தனை கவனம் எடுத்துக்கொண்டார் என்று தெரிகிறது.
கவிதைகள் கதைகள் சமையல் நகைச்சுவை என்று தான் வலையில் வாசிக்கத் தொடங்கிய பொழுதிலிருந்து (வாசிக்காது விட்டவைகள் உண்டோ ?) அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்.. நின்று நிதானித்து படிக்க வேண்டிய அளவு பதிவுகளும் சுட்டிகளுமாய் மழையாக கொட்டித்தீர்த்த மங்களூர் சிவாவிற்கு நன்றிகள்.
------------------
"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....." - இப்படி அறிமுகப்படுத்திக்கொள்ளும் நண்பன் அவர்கள் இந்த வார வலைச்சரத்தைத் தொடுக்க இருக்கிறார். அரசியல் சினிமா விவாதம் என்று களைகட்டும் பதிவுக்கு சொந்தக்காரர் . அவர் ரசித்த நல்ல பதிவுகளின் சுட்டிகளை இந்த வாரம் வாசிக்கலாம்.
|
|
வலைச்சர வரலாற்றிலேயே முதன்முறையாக... ஒரு வாரத்தில் 18 பதிவுகள்!
ReplyDeleteவலைச்சர சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்.
பதினெட்டு பதிவுகளை சரமாகத் தொடுத்து நமக்கு அளித்து வலச்சரத்தில் ஒரு சாதனையை படைத்துவிட்ட நண்பன் சிவாவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
ReplyDeleteவலைச்சர நிர்வாகிகளுக்கும் நன்றி.
குடையை மடக்கி வச்சாச்சு!
ReplyDeleteவலைச்சர வரலாற்றிலேயே //முதன்முறையாக... ஒரு வாரத்தில் 18 பதிவுகள்!
ReplyDeleteவலைச்சர சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்//
கூறுவது வலைச்சரத்தின் ஆசிரியர் குழுவில் ஒருவர். பொறுப்பாசிரியர். உண்மையிலேயே நண்பர் சிவாவின் உழைப்பு பாராட்டத்தக்கது. 18 பதிவுகளும் பல்வேறு விதமான பதிவுகள். பங்குச்சந்தை, உடல் நலம், கதை, கவிதை, நகைச்சுவை என எதையும் விட்டுவைக்க வில்லை.
அத்தனை பதிவுகளையும் தேடிப் பிடித்து சுட்டி கொடுத்து நம் மனம் கவர்ந்திருக்கிறார். நல் வாழ்த்துகள்
//
ReplyDeleteசிந்தாநதி said...
வலைச்சர வரலாற்றிலேயே முதன்முறையாக... ஒரு வாரத்தில் 18 பதிவுகள்!
வலைச்சர சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்.
//
நன்றிங்க சிந்தாநதி
எண்ணிக்கைய சொல்லிட்டீங்க எப்பிடி இருந்ததுன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமே!!
//
ReplyDeleteமஞ்சூர் ராசா said...
பதினெட்டு பதிவுகளை சரமாகத் தொடுத்து நமக்கு அளித்து வலச்சரத்தில் ஒரு சாதனையை படைத்துவிட்ட நண்பன் சிவாவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
வலைச்சர நிர்வாகிகளுக்கும் நன்றி.
//
மஞ்சூரண்ணே நல்லா இருந்ததா சரமெல்லாம்!?
நன்றி
சீனா சார் நன்றி
ReplyDelete//
ReplyDeleteதுளசி கோபால் said...
குடையை மடக்கி வச்சாச்சு!
//
நீங்க எங்க மழை பக்கம் ஒதுங்கவே இல்லை இப்ப குடைய மடக்கீட்டீங்க!!
நன்றி