02 - வலைச்சரம் - இசையால் உருகாத இதயமெது?
இசை கேட்டால் புவியே அசைந்தாடுமாம். இசையால் உருகாத இதயமே இல்லையாம். அது உண்மை தானுங்களே!
சின்ன வயசுல ரேடியோவில " மிலே சுரு" ஆரம்பிக்கும் மதியம் 12 ன்னு நினைக்கிறேன். அதைக் கேட்டுக்கிட்டே பின்னாடி கிழிஞ்ச டவுசரை ( லக்கி கிழிச்சது இல்லைங்க - நிஜம்மாவே கிழிஞ்ச ) பெரிய சட்டைய இழுத்து விட்டு மறைச்சுக்கிட்டு சுடும் தார் சாலையில வெறும் காலால பள்ளிக் கூடத்துக்கு ஓடிய சுகம் இன்னைக்கு எத்தனைப் பேருக்கு கிடைக்கும் சொல்லுங்க.
திருச்சி வானொலி, இலங்கை வானொலி, விவித பாரதி, சென்னை வானொலி அப்படின்னு வளந்தவங்களுக்குத் தான் தெரியும் அதோட அருமை.
எனக்கு ரொம்ப பிடிச்சது "நேயர் விருப்பம் " மற்றும் தேன் கிண்ணம்.
" இந்தப் பாடலை விரும்பிக் கேட்டவர் ****, படம் **** பாடல் " **** " அப்படின்னு வரும். ( நம்ம பேரு ரேடியோவில சொல்லிட்டாங்கடோய்னு சவுண்டு விட்டவங்க எல்லாம் ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க இங்க )
கண்ணதாசனையே ஒருத்தர் " நீங்க பாடல் கண்ணதாசன் " தானே அப்படின்னு கேக்க, அட இது கவிஞர் கண்ணதாசனை விட நல்லாருக்கேன்னு சொன்னாராம். அவ்வளவு தாக்கம் இருந்தது மக்களிடையே.
இன்னைக்கு என்னதான் நம்ம கிட்ட பல பாடல்கள் கணினியிலோ அல்லது மற்ற பாட்டு கேட்கும் உபகரணத்தில் இருந்தாலும், நாம் கேட்டு அந்தப் பாடல் ஒலிபரப்பப் படும் போது கிடைக்கும் சுகமே தனி தாங்க.
அந்த வகையில நமக்கு வலைப்பதிவுல மத்தவங்க கேக்கற பாட்டு போடுற கானா பிரபாவோட றேடியோஸ்பதியும் கூட்டு வலைப்பதிவான தேன்கிண்ணமும் ரொம்ப பிடித்தமான ஒண்ணு.
றேடியோஸ்பதி பத்திச் சொல்லனும்னா ரொம்பவும் அழகான, அபூர்வமானப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து போடுவதாகட்டும், பாடல்கள் பற்றி எந்தக் கேள்வி இருந்தாலும் அதுக்கு சரியான பதில் தருவதாகட்டும், கானா பிரபா இசையிலே வாழுகிறார். தற்போது வாரம் ஒரு சிறப்பு நேயர் பகுதியை ஆரம்பித்து வைத்த போது என்னுடைய சிறப்பு விருப்பம் கேட்டு போட்ட பாடல்கள் இங்கே.
பாடல்கள் பற்றிப் பேசும் போது அபூர்வ வகைப் பாடல்கள் மற்றும் மறக்கப் பட்ட பாடகர்களின் பாடல்கள் என பொறாமைப் படும் அளவிற்கு தன்னுடைய பட்டியலை வைத்திருக்கும் புது மாப்பிள்ளை மரவண்டு ( ஹைக்கூ கணேஷ்) கணினியை அப்படியே அபேஸ் செய்ய ஆசை எனக்கு. பாடல்களோடு நிறைய விஷயங்களை அள்ளித் தருவதில் பெரிய கில்லாடி. மரவண்டு கணேஷ். கிருஷ்ணசந்தர் பாடல்கள் சிலது மட்டும் கேட்டிருக்கேன்.அதேப் போல யேசுதாஸ் பாடல்களின் பட்டியலை பாருங்க. இதுல எத்தனைப் பாடல்கள் நீங்க கேட்டிருக்கீங்க ?. மரவண்டு தன் பதிவில் கேட்டிருக்கும் கேள்வியை நானும் இளையராஜாவைப் பார்த்தால் கேட்க ஆசை. ஏன் தீபன் சக்கரவர்த்திக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படவில்லை. ஜெயச்சந்திரன் பாடல்கள் மட்டும் முன்னூறுக்கும் மேலாம். இப்ப சொல்லுங்க... அந்த கணினியை அப்படியே லவட்டிடலாம் தானே ?
ஆனாலும் சந்திரவதனா அளவுக்கு இல்லைன்னு சொல்லனும். பாட்டு போடறது மட்டும் இல்லாம ஒவ்வொரு பாட்டையும் வரிகளோட போடறதுக்காக அவங்களுக்கு ஒரு ஓ போட்டுடலாம் இங்க. அப்படியே உங்களுக்கு இசையரசி பி.சுசீலாவிடம் ஏதேனும் கேள்வி இருக்குங்களா .. இங்க வாங்க. ஒரு குழுவே உங்களுடைய கேள்விகளை அவங்களுக்கு அனுப்பி பதில் பெற்றுத் தரக் காத்திருக்கு.
உங்களுக்கு என்னப் பாட்டு எந்த ராகம்னு ஒரு பட்டியல் போட்டு புத்தகம் போட்டார் சிமுலேஷன். மோகன ராகத்துல எத்தனைப் பாட்டுனு இங்க வந்து பாருங்க. இவரோடப் பதிவு பெரும்பாலும் இசையைப் பற்றியே இருப்பது சிறப்பு.
சினிமா இசையைப் பற்றி சொல்லிட்டு பக்தியை விட்டுடலமா ? இதோ கண்ணன் பாடல்கள், முருகன் பாடல்கள் மற்றும் அம்மன் பாடல்கள் போற்றும் பதிவுகள்.
சரி இப்பச் சொல்லுங்க. இசையால் உருகாத இதயமெது?
தொடுக்க மறந்த இரு பூக்கள். சுட்டிகள் தந்துதவிய கானாபிரபா மற்றும் குமரனுக்கு என் நன்றி.
இசையின்பம் - ரொம்பவே ஆழமா அலசி ஆராய்ஞ்சு தொவச்சு காயப் போட்டு வச்சிருப்பாங்க. நம் ஆண்மீகப் பதிவரு இருக்கிற குழுமப் பதிவு.
சிவமுருகனோடது கீதம் சங்கீதம். இப்ப என்ன செய்யறார் இவர்? மறுபடி வாங்க சிவமுருகன்!
|
|
நல்ல பதிவு
ReplyDeleteகதாநாயகன் வசனம் கலக்கல்..
ReplyDeleteநெறியாளார் நல்லா செஞ்சியிருக்கார்..
ReplyDeleteதேன் கிண்ணம் நல்ல கிண்ணம் தான்..
ReplyDeleteஎன் விருப்பம் கூட ஒரு தடவை நிறைவேற்றினாங்க..
அதுக்கடுத்த விருப்பத்தைக் கேட்டுவிட்டு, சிபி ஓடியே போய் விட்டார்.. :(
கானா பிரபா, யாரையாச்சும் கலாய்க்கனும் என்றால் சிறப்பு நேயராக போட்டு விடுவார் போலிருக்கு.
ReplyDeleteஅந்த அளவிற்கு அங்க வைச்சு கும்முறாங்க..
சிறப்பா கும்மி வாங்கினவங்க, விசிஆர், டர்கா..போன்றோர்..
நெனச்சேன் கண்டிப்பா இப்படி ஒரு பதிவு வரும்ன்னு
ReplyDeleteநல்லா இருக்கு :)))
ReplyDelete//நிலா said...
ReplyDeleteநெனச்சேன் கண்டிப்பா இப்படி ஒரு பதிவு வரும்ன்னு
//
பாப்பா அடுத்த பதிவு பத்தி அவசரப்பட்டு எதுவும் சொல்லிப்புடாத?!!!
நம்ம கேமரா பார்ட்டீ இந்த ஒரு வாரமும் டெய்லி சீக்கிரமே ஆபிஸ்லேர்ந்து வீட்டுக்குப்போய் குப்புறபடுத்துக்கிட்டு நல்லா யோசிக்க வைக்கோணும்!
இது தான் நம்ம பிளான் ஒ.கேவா?
//TBCD said...
ReplyDeleteநெறியாளார் நல்லா செஞ்சியிருக்கார்..
//
இதுவும் நல்லா இருக்கு :)
நல்லா இருக்கு. :-)
ReplyDeleteஇன்னைக்கூ பதிவிட கொஞ்சம் லேட் ஆயிடுச்சு போல?
@TBCD:
ReplyDelete//
அதுக்கடுத்த விருப்பத்தைக் கேட்டுவிட்டு, சிபி ஓடியே போய் விட்டார்.. :(//
அப்படிப்பட்ட பாட்டே இல்லன்னு சொல்றாரே.. உண்மையா? :--)
இந்த பாட்டு போடறதுல முன்னோடிகள்ல ஒருத்தரான சிவபுராணம் சிவாவைக் கட்டாயம் இந்த நேரத்துல சொல்லணும். அவர் இப்ப வலைப்பதிவுகள்ல எழுதுறதுல்ல. ஆனா பல பேருக்கு பாட்டு போடறதுல ஊக்கமா இருந்தவர்கள்ல அவரும் ஒருத்தர். அவரோட வலைப்பதிவு உரல் இதோ:
ReplyDeletehttp://geethamsangeetham.blogspot.com/
ம் நல்ல தொடுப்புகள். நல்லா இருக்கு :)
ReplyDeleteகானா பிரபாவோட ரேடியோஸ்பதி, தேன்கிண்ணம் ரெண்டு பக்கத்திற்கும் போயிருக்கேன். ரேடியோஸ்பதி அண்மையில நேயர் விருப்பம்ன்னு தொடர்ச்சியா போடத் தொடங்கியதும் தான் அறிமுகம் ஆச்சு.
ReplyDeletenalla irukumnu ninaikiren unga listu... naan ellam padichitu solren ok va?
ReplyDelete//கானா பிரபா, யாரையாச்சும் கலாய்க்கனும் என்றால் சிறப்பு நேயராக போட்டு விடுவார் போலிருக்கு.
ReplyDeleteஅந்த அளவிற்கு அங்க வைச்சு கும்முறாங்க..//
;-))ஆகா ஆகா, நம்ம தொழில் ரகசியம் தெரிந்துபோச்சே
மரவண்டு நண்பர் போல அபூர்வமான பாடல்களையும், சிவாபுராணம் சிவா போல் பாடல்களின் சிறப்பைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தான் றேடியோஸ்பதி வந்தது. சக நண்பர்களின் ஊக்கம் தான் எந்த முயற்சிக்கும் வடிகால்.
நீங்கள் குறிப்பிட்ட சக இசைவலைப்பதிவர்கள் தனித்துவமானவர்கள். இசை இன்பமும் கூட்டுப் பதிவும் கூட.
18
ReplyDeleteTarget நீங்க பிக்ஸ் பண்ணீட்டிங்களா இல்ல நான் பிக்ஸ் பண்ணனுமா??
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDelete/
ReplyDeleteTBCD said...
தேன் கிண்ணம் நல்ல கிண்ணம் தான்..
என் விருப்பம் கூட ஒரு தடவை நிறைவேற்றினாங்க..
/
:(((
என் விருப்பம்லாம் கேக்கவே இல்லை
/
ReplyDeleteTBCD said...
அதுக்கடுத்த விருப்பத்தைக் கேட்டுவிட்டு, சிபி ஓடியே போய் விட்டார்.. :(
/
:)))))))
அதனாலதானோ!?!?!?
தேன்கிண்ணத்தை 'மளே'சியாவுக்கு குத்தகைக்கு விட்டுட்டாங்களாமே!!
ReplyDelete/
ReplyDeleteTBCD said...
கானா பிரபா, யாரையாச்சும் கலாய்க்கனும் என்றால் சிறப்பு நேயராக போட்டு விடுவார் போலிருக்கு.
/
நல்ல வேளை அப்பிடி ஒரு அசம்பாவிதம் எதும் நடக்கலை
/
ReplyDeleteTBCD said...
கானா பிரபா, யாரையாச்சும் கலாய்க்கனும் என்றால் சிறப்பு நேயராக போட்டு விடுவார் போலிருக்கு.
அந்த அளவிற்கு அங்க வைச்சு கும்முறாங்க..
/
ஏபிசிடி 'கும்மி என்றால் அன்பு'
/
ReplyDeleteTBCD said...
கானா பிரபா, யாரையாச்சும் கலாய்க்கனும் என்றால் சிறப்பு நேயராக போட்டு விடுவார் போலிருக்கு.
அந்த அளவிற்கு அங்க வைச்சு கும்முறாங்க..
சிறப்பா கும்மி வாங்கினவங்க, விசிஆர், டர்கா..போன்றோர்..
/
:)))))))))
நெனச்சேன் கண்டிப்பா இப்படி ஒரு பதிவு வரும்ன்னு
ReplyDeleteஆனா நல்லா இருக்கு :)))
ReplyDelete/
ReplyDeleteஆயில்யன். said...
//நிலா said...
நெனச்சேன் கண்டிப்பா இப்படி ஒரு பதிவு வரும்ன்னு
//
பாப்பா அடுத்த பதிவு பத்தி அவசரப்பட்டு எதுவும் சொல்லிப்புடாத?!!!
நம்ம கேமரா பார்ட்டீ இந்த ஒரு வாரமும் டெய்லி சீக்கிரமே ஆபிஸ்லேர்ந்து வீட்டுக்குப்போய் குப்புறபடுத்துக்கிட்டு நல்லா யோசிக்க வைக்கோணும்!
இது தான் நம்ம பிளான் ஒ.கேவா?
/
டபுள் ஓகே
இன்னைக்கூ பதிவிட கொஞ்சம் லேட் ஆயிடுச்சு போல?
ReplyDeletevery good.
ReplyDeleteநல்ல தொடுப்புகள். நல்லா இருக்கு :)
ReplyDeleteஎன்ன யாரும் இல்லையா??
ReplyDeleteசிவமுருகனின் சுட்டியும், இசையின்பம் சுட்டியும் தேடிக் கொண்டிருந்தேன். பின்னூட்டத்தில் சொல்லி உதவிய குமரனுக்கும், கானாபிரபாவிற்கும் நன்றி. பதிவில் சேர்த்து விடுகிறேன்.
ReplyDeleteயார் யார் இருக்கா??
ReplyDelete//மங்களூர் சிவா said...
ReplyDeleteஇன்னைக்கூ பதிவிட கொஞ்சம் லேட் ஆயிடுச்சு போல?
//
ரொம்ப திங்கியிருப்பாரோ???
//மங்களூர் சிவா said...
ReplyDeleteயார் யார் இருக்கா??
April 8, 2008 4:57:00 PM IST
//
நான் இப்ப மட்டும்
நீங்க எப்பவும்
ஜீவ்ஸ் அப்பப்ப
அடடா.. இசை மழை சுட்டிகளில் நனைய வைச்சுட்டிங்களே:)
ReplyDeleteசூப்பர்.. தொடருங்க.. நன்றி:)
என்னாச்சி ஜீவ்ஸ்? தூங்கறிங்களா? :P
ReplyDelete