07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 21, 2008

சுய அறிமுகம் - கீதா சாம்பசிவம்

அறிமுகம் செய்து சொல்லிக்கும்படியா சாதனைகள் ஒன்றும் செய்யவில்லை, இனியாவது செய்யணும். என்றாலும் இந்த அளவுக்குச் சிலருக்காவது என்னைத் தெரிந்திருக்கின்றது என்றால் நண்பர்களே காரணம். அத்தகைய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்து விட்டு ஆரம்பிக்கின்றேன். இந்த வாரத்தில் எனக்குப் பிடிச்ச பதிவுகளின் சுட்டிகளைச் சுட்டுவதோடு மட்டுமில்லாமல், அதில் சிலவற்றில் இருந்து எனக்குப் பிடித்த பகுதிகளையும் கொடுக்கப் போகின்றேன்.


பதிவுகள் எழுத ஆரம்பிச்சபோது கூட இவ்வளவு கவனமா இல்லை. இப்போ இன்னும் அதிகக் கவனம் எடுத்துக்க வேண்டி இருக்கு. சொல்லும் ஒவ்வொரு சொல்லும், எழுதும் ஒவ்வொரு எழுத்தும், யோசிச்சு, யாரையும் எந்தவிதத்திலும் காயப் படுத்தாம இருக்கணுமேன்னு நினைக்க வேண்டி இருக்கு. இந்த "வலைச்சரம்" தொடுக்க ஏற்கெனவே அழைப்பு வேறு ஒருவர் மூலம் வந்தது. என்றாலும் மறுத்து வந்தேன். இப்போ முத்துலட்சுமியிடம் அவ்வாறு சொல்ல முடியவில்லை.


எப்படியோ தப்பிச்சுட்டு இருந்தேன், இப்போ முத்துலட்சுமி நல்லா மாட்டி விட்டுட்டாங்க, நம்மாலே ஆகாத வேலைனு சொல்லிப் பார்த்தும் விடலை! ஒரு வேளை அபி அப்பாவின் சதியாக இருக்குமோனு சிபி ஞாயிறு அன்று வீட்டுக்கு வந்தப்போ சொல்லிட்டுப் போனார். அப்படித் தான் இருக்கும்னு நானும் நினைச்சேன். அது சரி என்னோட பதிவுகளை அறிமுகப் படுத்திக்கணுமாமே? இந்தப் பதிவுலகுக்கே அறிமுகம் நான் "மொக்கை ஸ்பெஷலிஸ்ட்"னு இதிலே அறிமுகம் வேறே தேவையா என்ன? அதான் சிஷ்யகேடிங்க எல்லாம் வரிசையா வந்து அறிமுகம், அரியா முகம்னு எல்லாம் சொல்லிட்டுப் போயாச்சே?


என்னோட பதிவுகளிலே முக்கியமானதுனு எதைச் சொல்றது? அதான் ஒரே குழப்பம்! நல்ல பதிவுகள்னு எண்ணினாப்பலே தானே இருக்கு! ம்ம்ம்ம்ம் எதைச் சொல்லலாம்? இருங்க வரேன், இந்த பாரதி பத்தின பதிவுகளைச் சொல்லலாமா? ம்ம்ம்ம் ஓகே! அதை எடுத்துக்கலாமே!


http://sivamgss.blogspot.com/2007/02/221.html


http://sivamgss.blogspot.com/2007/03/222.html


http://sivamgss.blogspot.com/2007/02/218.html


பாரதி பற்றிய என் நினைவுகள் பள்ளி நாட்களிலேயே ஆரம்பிக்கின்றன. பாரதியின் பாடல்களை அறிமுகம் செய்து வைத்த என் ஆசிரியர் திரு ஈஸ்வர வாத்தியார், மிகவும் உணர்ச்சிகரமாய், வீரத்துடனும், கம்பீரத்துடனும், கணீர் என்ற குரலிலும் பாரதியின் பாடல்களைச் சொல்லித் தருவார். 5-ம் வகுப்பு வரையிலும் அநேகமாய்ப் பாரதியின் பாடல்களை நிறையவே சொல்லித் தந்திருக்கின்றார். பாரதி கண்ட கனவுகள் இன்னும் எதுவும் நனவாகவே இல்லை, முக்கியமாய்ப் பெண் விடுதலை. பாரதி கண்ட பெண் விடுதலையா இப்போது இருக்கின்றது? இதோ சமீபத்தில் நான் மகளிர் தினத்தில் எழுதிய கட்டுரை ஒன்று அது பற்றிக் கொஞ்சம் அதிகமாகவே பேசும். இதோ அதன் சுட்டி!:


http://sivamgss.blogspot.com/2008/03/blog-post_9940.html



மற்றபடிக்குச் சொல்லிக்கிறாப்போல் எதுவும் எழுதவில்லை என்பதே நிஜம். சிலசமயம் வந்துட்டு ஏதோ போஸ்ட் போடணும்னு எழுதிட்டுப் போகிறதும் உண்டு இல்லையா? அம்மாதிரியான பதிவுகளே அதிகம், அப்புறம் சில பதிவுகள் பாதியிலேயே நிற்கும். அது பற்றிப் பலரும் கேட்டிருக்கின்றார்கள். சில பதிவுகள் பல்வேறு காரணங்களால் தொடரவேண்டாம் என முடிவு செய்து தொடரவில்லை, சில பதிவுகள் வேறு குழுக்களிலும் தொடர்கின்றன. அமெரிக்கா பற்றிய பதிவு அப்படித் தான். வேறு குழுவில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது. அது போல் பிரயாணங்கள் பற்றிய பதிவுகள் அலுப்பைத் தருவதாய்ச் சிலர் சொன்னதால் அனுபவம் புதுமையை நிறுத்தி விட்டேன். என்றாலும் மீனாட்சி கோயில் சென்ற அனுபவமும், பழநி சென்ற அனுபவமும் மட்டும் சொல்லி விட்டேன். பொதுவாகவே மனித மனம் மாறுதலை எதிர்பார்க்கும். மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே பதிவுகளும் அமையவேண்டும் என்பதால் ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கின்றது. பெண் விடுதலை, பெண்ணிற்கு நடக்கும் அநியாயங்கள் என்று நிறையவே எழுதலாம் தான். ஆனால் ஒரு பக்கம் இவ்வாறு பேசிக் கொண்டு இன்னொரு பக்கம் பெண்கள் நடந்து கொள்ளும் விதமும் சரியாக இல்லாததால் பேசிப் பயன் இல்லை என்றே தோன்றுகின்றது.

உண்மையான பெண் விடுதலை என்பது என்ன என்று யாருமே புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்றால், உரிமையைக் கேட்டுப் பெறுவது இல்லை. உரிமை நமக்கும் உண்டு. பெண்ணுக்கு 33% ஒதுக்கீடு என்று போராடுவது தான் பெண்ணின் உரிமை என்றால் அது தவறு. அதுக்கும் மேலே நமக்கு உண்டு என்று உணரவேண்டும். பெண்ணின் உடல் அழகைக் காட்டும் விளம்பரங்களில் நடிக்க முடியாது என்று சொல்லவேண்டும். இது கொஞ்சம் நடக்கக் கூடியதா என்று யோசிக்க வேண்டியது. ஆனாலும் ஒரு பக்கம் பெண்கள் அதுவும் சினிமா நடிகைகள் குட்டைப் பாவாடை அணிந்து வருவதைக் கேலி பேசும் நாம், இன்னோரு பக்கம் பெண்ணைக் கவர்ச்சியாகக் காட்டி ஒரு பொருளை விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம்? பெண் உடை அணிவது கண்ணியமாகவும், இருக்கவேண்டும் அல்லவா? திரைப்பட நடிகையாக இருந்தாலும் பொது இடங்களில் கண்ணியக் குறைவாக உடை அணிந்து வருவதை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை!

வெளிநாடுகளில் உடை அணிவதற்கெனச் சில வரைமுறைகள் இருப்பதாயும் அதை இங்கேயும் கொண்டு வரலாமே எனவும் சிலர் சொல்கின்றனர். நம் நாட்டில் இல்லையா என்ன? கோயிலுக்குச் செல்வதென்றால் ஜீன்ஸும் டீஷர்ட்டும் அணிந்து போவதை விரும்புவோமா என்ன? ஆனால் காலப் போக்கில் இவையும் மாறியே வருகின்றது. இன்று பெரும்பாலான தமிழ்நாட்டுக் கோயில்களில் அனுமதிக்கின்றார்கள். ஆனால் கேரளம், கர்நாடகாவில் அனுமதிப்பது இல்லை. உடை அணிவது அவர்கள் சுதந்திரம் என்றொரு பேச்சும் இருக்கின்றது. எலிசபத் ராணியாகவே இருந்தாலும் கவர்ச்சியாக உடை அணிந்தால் கெளரவக் குறைவு என்றொரு எண்ணம் அனைவருக்குமே உண்டு. சுதந்திரத்தை இதிலே காட்டவேண்டுமா என்ன? "பெப்சி" புகழ் இந்திரா நூயி தன் உடை புடவை என்பதில் பெருமிதம் தான் கொண்டிருக்கின்றார். உலகப் புகழ் கிடைத்தும் அவர் ஒன்றும் மாறவில்லை. புடவை தான் அணிகின்றார் அலுவலகத்துக்குக் கூட. படிப்பிலும், புரிந்துணர்விலும் வரவேண்டிய மாற்றத்தை உடையில் மட்டுமே கொண்டு வந்துவிட்டோமோ? சரி, சரி, போரடிக்குதுனு சொல்றீங்க இல்லையா இன்னிக்கு இதை நிறுத்திக்கிறேன். நாளை பார்க்கலாம்.

கீதா சாம்பசிவம்

-----------------------

18 comments:

  1. நல்வருகைகள் கீதா அக்கா:)

    //ஒரு வேளை அபி அப்பாவின் சதியாக இருக்குமோனு //

    அவ்வ்வ் ஆரம்பிச்சாச்சா??? :)))))
    கலக்குங்க:))

    ReplyDelete
  2. கீதா நல்வாழ்த்துகள். உங்களுக்கு எழுத அநேக விஷயங்கள் இருக்கின்றன.
    பொறுமையாக எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. தலைவிக்கு கீதா பாப்பாவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. சுதந்திரத்தை இதிலே காட்டவேண்டுமா என்ன?
    ரிப்பீட்டேய்..

    சுதந்திரத்தை இதிலே காட்டவேண்டுமா என்ன?

    "பெப்சி" புகழ் இந்திரா நூயி தன் உடை புடவை என்பதில் பெருமிதம் தான் கொண்டிருக்கின்றார். உலகப் புகழ் கிடைத்தும் அவர் ஒன்றும் மாறவில்லை. புடவை தான் அணிகின்றார்

    எல்லோரும் இந்த மாதிரி இருந்தால் நலமே

    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  5. வாங்க கீதா..
    நல்ல பதிவுகளையும் உங்கள் வாசிப்பனுபவத்தையும் இனம் காட்டுங்க.
    நல்வரவு.

    ReplyDelete
  6. வந்துட்டோம்ல! டாம் இருக்கும் இடமே ஜெர்ரிக்கு மகிழ்ச்சியான இடம், ஹிஹி. :)


    //இந்தப் பதிவுலகுக்கே அறிமுகம் நான் "மொக்கை ஸ்பெஷலிஸ்ட்//

    ஆஹா! படிச்சவுடனே தேன் குடிச்ச மாதிரி இருக்கு. :)))

    வலைசரம் எப்படி தொடுக்கறிங்கனு கவனமா பார்ப்போம். அதனால பாத்து எழுதுங்க. :))

    ReplyDelete
  7. உடை விஷயத்தில் பெண்கள் தம் சவுகரியம் போல் ஆனால் கண்ணியமாக அணிந்தால் யாருக்கும் எந்த ப்ரச்சனையும் இல்லை.

    புடவை தான் அணியனும்!னு எல்லாம் சொல்ல முடியாது.

    இந்திரா நூயியை புடவை அணிந்து ஒரு வாரம் பல்லவன் பஸ்ல ஆபிஸ் போக சொல்லுங்க, அப்புறம் தெரியும் விஷயம். :))

    சுடிதார் அணிந்தாலும் துப்பட்டாவை காறி துப்பட்டா?னு மத்தவங்க கேக்கற ரேஞ்சுக்கு அணிய கூடாது. :D

    ReplyDelete
  8. அப்புறம் மிக முக்யமான விஷயம், எல்லா தங்கமணிகளும் புடவை அணிய ஆரம்பித்து விட்டால் ரங்குக்கள் பாடு (சாம்பு மாமாவையும் சேர்த்து தான்) திண்டாட்டம். :p

    துவைக்கறது வாஷிங்க் மிஷின் என்றாலும் உலர்த்துவது எவ்ளோ கஷ்டம்னு உலர்த்தி பாத்தால் தான் தெரியும். :))

    ReplyDelete
  9. ///ரசிகன் said...
    நல்வருகைகள் கீதா அக்கா:)///



    ரசிகன் மாம்ஸ் நீங்க அடிக்கடி சொல்லுற உங்க தமிழ் டீச்சர் கீதா மேடம் தானா?

    ReplyDelete
  10. ////ஒரு வேளை அபி அப்பாவின் சதியாக இருக்குமோனு சிபி ஞாயிறு அன்று வீட்டுக்கு வந்தப்போ சொல்லிட்டுப் போனார்.////


    சதி செய்றதுதான் இவருக்கு முழுநேர வேலையா இருக்குமோ:)

    ReplyDelete
  11. /////ரசிகன் said...
    அவ்வ்வ் ஆரம்பிச்சாச்சா??? :)))))
    கலக்குங்க:))///

    ரசிகன் நீங்க குருவை மிஞ்சிய சிஷ்யன் தான்.
    பின்னே நீங்க வலைச்சரம் தொடுத்த பிறகு தானே உங்க குருவே வலைச்சரம் தொடுக்குறாங்க:)

    ReplyDelete
  12. முதலில் எனக்காக இன்றைய இடுகையை இட்ட திரு சீனா சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. செர்வர் பிரச்னையால் மூன்று நாட்களாய் இணைய இணைப்பு இல்லாமல், இப்போவும் ஏதோ பேருக்கு வந்துட்டு இருக்கு. இந்த அழைப்பும் உடனே வரலை. கொஞ்சம் தாமதம் ஆனது. இனி வரும் நாட்கள் அனைத்தும், நல்லவையே, என்ற நம்பிக்கையுடன், அனைவருக்கும் பின்னர் பதில் சொல்கின்றேன், என்ற வேண்டுகோளுடன், சந்திப்போம், ஒரு வாரம்.

    ReplyDelete
  13. நல்வரவு கீதா..வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. உங்களுடைய சில பதிவுகளை படித்துவிட்டு எங்கே இத காணோம் அத காணோம் இது என்னாச்சு அது என்னாச்சு என்று கேட்டுக்கிட்டு இருந்தேன். விஷயம் இப்ப புரியுது!

    சாரி!
    :-)))))))

    ReplyDelete
  15. வாழ்க தலைவி...;))

    தலைவிக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  16. வந்துட்டோம்ல! டாம் இருக்கும் இடமே ஜெர்ரிக்கு மகிழ்ச்சியான இடம், ஹிஹி. :)


    //இந்தப் பதிவுலகுக்கே அறிமுகம் நான் "மொக்கை ஸ்பெஷலிஸ்ட்//

    ஆஹா! படிச்சவுடனே தேன் குடிச்ச மாதிரி இருக்கு. )

    வலைசரம் எப்படி தொடுக்கறிங்கனு கவனமா பார்ப்போம். அதனால பாத்து எழுதுங்க.

    ReplyDelete
  17. உங்களுக்கு எல்லாம் அறிமுகம் எதும் தேவையே இல்லை

    டாப் கியர் போட்டு தூக்குங்க!!!!

    ReplyDelete
  18. வாங்க கீதா! நல்வரவு! வலைச்சரம் தொடுப்பதை நானும் ஆர்வமாய் படிக்கக் காத்திருக்கிறேன்.
    ஷைலஜா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது