மூன்று முக்கிய தோழிகளின் எழுத்துக்கள் பற்றிய என் கருத்து!
அதுக்காக மத்தவங்க தோழி இல்லைனு நினைக்கக் கூடாது. அனைவருமே தோழிகள் தான் என்றாலும் என் மனத்தளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றி மட்டுமே இங்கே சொல்கின்றேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இதில் வேதாவை மட்டுமே நான் சந்தித்துள்ளேன், மற்ற இருவரையும் சந்தித்ததே இல்லை. துளசி பதிவுலகில் மிகவும் எனக்கு சீனியர் என்றாலும் மனதில் ஒத்த தோழியே! அவரின் பயணக்கட்டுரைகளே என்னையும் பதிவுலகுக்கு இழுத்தது என்பது ஓரளவு உண்மையே!(இந்த யானைக்குக் காப்பிரைட் வாங்கினது மட்டும் தான் கொஞ்சம் பிடிக்கலை, என்றாலும் உயிலை மாத்தறேனு சொல்லி இருக்காரே! :))))))) அடுத்து கவிதா! கிட்டத் தட்ட நானும், இவரும் ஒன்றாகவே ஆரம்பித்திருக்கின்றோம் எழுதுவதற்குனு நினைக்கின்றேன். என்றாலும் இவர் பெரும்பாலும் சமூகப் பிரச்னைகள், பெண்கள் பிரச்னைகள் என்றே தொட்டுக் கொண்டிருப்பார். அடுத்து வேதா, வயதில் இளையவர் என்றாலும் பதிவுலகில் எனக்கு மூத்தவர், என்பதோடு நாங்கள் பல்வேறு விஷயங்களையும் பரிமாறிக் கொள்வதுண்டு. வயது கடந்த ஒரு நட்பு எனக்கு வேதாவோடு. நான் எங்காவது சென்றாலும், உடல்நிலை சரியில்லை என்றாலும் என் வலைப்பக்கங்களைக் கவனித்துச் சில சமயம் பதிவுகளை நான் அனுப்ப, அவர் போட்டு, பின்னூட்டங்கள் வெளியிட்டு, எனக்காகப் படங்களை வெளியிட்டு என்று அம்பி சொல்வது போல் எனக்கு ஒரு பினாமியாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது அவரால் வர முடியவில்லை என்பது எனக்குக் கொஞ்சம் இழப்பே! முக்கியமாய் ஒரு அந்தரங்கமான தோழி பரிமாற்றங்களுக்கு இல்லை என்பதே! பேசி எவ்வளவு நாளாச்சு? ம்ம்ம்ம்ம், என்றாலும் அவருக்குக் கல்யாணம் என்பது ஒரு சந்தோஷமான விஷயமே அல்லவா!
முதலில் நாம் பார்க்க இருப்பது கவிதா: இவர் இப்போது பதிவுலகின் கதவுகளை இறுக்க மூடிக் கொண்டு ஒரு இரும்புத் திரையைத் தொங்க விட்டுக் கொண்டிருக்கின்றார் என்றாலும் என்னால் தவிர்க்க முடியாதவர்.
எனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னா அது கவிதாவின் என் பார்வையில் தான். அதிலே அவங்க எழுதும் கருத்துக்களும், அவங்களோட தெளிவான, அதே சமயம் உறுதியான நிலைப்பாடுகளும் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றது. என்னோட கருத்துக்களும் அவங்க கருத்தோட ஒத்துப் போறதும் ஒரு காரணம் என்றாலும் சில சில விஷயங்களில் முரணும் உண்டு. என்றாலும் ஒருமித்த ஒத்த எண்ண அலை வரிசை இருப்பதை நான் உணர்ந்திருக்கின்றேன், அதை நம் கைப்புள்ளயும் உணர்ந்ததோடு அல்லாமல் என்னிடம் சுட்டியும் காட்டி இருக்கின்றார். பெண் வேலைக்குச் செல்வதில் ஆகட்டும், கணவனை வேலைக்குச் செல்லும் பெண் நடத்தும் விதத்தில் ஆகட்டும் அவர் எழுதிய பதிவுகளின் கருத்துக்களே பெரும்பாலும் என்னுடைய கருத்துக்களாகவும் இருக்கும். மனைவியைக் கணவன் அடிமையிலும், அடிமையாக ஒரு புத்தகம் கூட வாங்கிப் படிக்க விடாமல் நடத்தும் ஒரு ஆணைப் பற்றிய அவர் பதிவிலும் அவர் பொங்கி எழுந்தது போல் எனக்குள்ளும் கோபம் கிளர்ந்தது. பெண் ஈமச் சடங்குகள் செய்வதைப் பற்றி அவர் எழுப்பிய சந்தேகங்களும், அதற்கு வந்த வித விதமான பதில்களுக்கு நடுவில், நான் கொடுத்த பதில்களை அவர் ஏற்றுக் கொண்ட விதமும் அவருடைய மன முதிர்ச்சியைக் காட்டியது. அதே சமயம் ஹெல்மெட் போடுவது பற்றிய அரசாணை வந்தபோது அதில் எனக்கும் உடன்பாடு இல்லை எனினும், அது குறித்த பதிவிற்கு அவர் கொடுத்த தலைப்பு அதிர வைத்தது. அதற்குப் பின்னர்? விழுந்தது ஒரு இரும்புத் திரை! அழைக்கப் பட்டவர்களுக்கு மட்டுமே தன் கருத்துக்களைக் கொடுத்து வருகின்றார் அவர். இது என் வரையிலும் ஒரு பேரிழப்புத் தான் என்றாலும் அவர் தரப்பிலும் ஒரு நியாயமும் இருக்கும். என்னால் மறக்க முடியாத, ஆனால் இது வரை சந்திக்காத ஒரு தோழி கவிதா!
அடுத்துப் பதிவுலக "மாதாமகி" என இ.கொ. அவர்களால் பட்டம் சூட்டப் பட்டிருக்கும் துளசி அவர்கள். ஒரு வகையில் இவர் பதிவுகள் பற்றிய குறிப்புக்களைத் தினமலர் பத்திரிகையில் பார்த்துவிட்டே நானும் எழுத வந்தேன் என்றால் மிகை இல்லை. இவர் எழுதிய பல பயணக்கட்டுரைகளையும், நியூசிலாந்து பற்றிய கட்டுரைகளையும் விட மிகவும் என்னைக் கவர்ந்தது "திருவேங்கடம் ஹரியானது இப்படித் தான்" கதை தான். வாழ்க்கையில் உறவுகளின் முக்கியத்துவத்தைக் கூறும் இந்தக் கதையில் திருவேங்கடம் ஹரியானதோடு நிற்கவில்லை, மீண்டும் திருவேங்கடமாகவும் ஆகிவிட்டானே? :((( ஒரு பெண் இல்லை எனில் அவள் குழந்தைகள் வாழ்க்கை எவ்வாறு கேட்பாரின்றிப் போய்விடும் என்பதற்கும், உறவுகள் இருந்தும் கவனிக்காததால் திருவேங்கடம் பஞ்சாபிலேயே வளர்ப்புப் பெற்றோரிடமே வளர்ந்தாலும், தன் குடும்பமும் நினைவில் மோதத் திரும்பவும் தமிழ்நாட்டுக்கு வந்து தங்கைகளை அழைத்துச் செல்கின்றான். வளர்ப்புப் பெற்றோரிடம் உள்ள நம்பிக்கைதான் இதற்கு முழுக்காரணம் என்றாலும் சென்றவர்களில் அனைவருமா சுகம் அனுபவித்தனர்? இல்லையே? அவன் தங்கை பிஜயா, தனக்குக் கிடைத்த நல்வாழ்வைப் பாழடித்துக் கொண்டதோடு அல்லாமல் அவள் குழந்தைகளையும் தவிக்க விடுகின்றாள். நல்லவேளையாகக் கஸ்தூரி போல ஒரு தங்கை கிடைத்ததால் குழந்தைகள் பாடு பரவாயில்லை. கிடைத்த உறவைக் கைப்பற்றிக் கொண்ட கஸ்தூரி போல் திருவேங்கடத்தின் மனைவியால் இருக்க முடியவில்லை. அவளுக்கு அங்கே பொருந்தவே இல்லை. ஒருவேளை அவனும் பஞ்சாபிலேயே பெண் பார்த்துக் கொண்டிருக்கலாமோ என்ற நினைப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. மனைவியின் நச்சரிப்பால் தமிழகம் திரும்பும் திருவேங்கடம் மூட்டை தூக்கிப் பிழைக்க வேண்டி உள்ளது. மனைவிக்கு உறவுகள் திரும்பக் கிடைக்கின்றது ஒன்றே லாபம். பல கோணங்களிலும் அலச வேண்டும் இந்தக் கதையை என்றாலும் நேரமின்மையாலும் பெரிதாய்ப் போய்விடும் என்பதாலும் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டி இருக்கின்றது. இதோ இங்கே பாருங்கள் துளசியின் கதையை
அடுத்து இனிய தோழி வேதாவின் மனம் உண்மை முகம். உண்மைதான். நம் மனமே நம் உண்மை முகமாகின்றது. வேதாவின் கவிதைகளும் அவர் மனதின் அப்போதைய தன்மையைப் பிரதிபலிக்கின்றதோ? பெரும்பாலும் சோகமாகவே கவிதைகள் எழுதுகின்றார். சில பொது நண்பர்கள் என்னிடம் ஏன் இப்படி என்றும் கேட்டிருக்கின்றார்கள். கவிதைக்கு சோகம் ஒரு அழகு என்பதாலோ என்னமோ தெரியலை! தன் சோகத்தை(?) இவ்வாறு வர்ணிக்கின்றாரோ என்று அனைவரும் எண்ணும் வண்ணமே சொல்லி இருக்கின்றார் இந்தக் கவிதையில்! கவிதையின் தலைப்பு "புரிதல் என்பது!
குத்திக் கிழித்தன
உன் வார்த்தைகள்,
என் இதயத்தில்
இறங்கிய கத்தியாய்.
புரிதல் என்பது,
புரிந்துக்கொள்ளப்படாமல் போகும் பொழுது
கண்களில் நிரம்பி,
என் கன்னங்களில் வழிந்து,
வலியின் சுவடுகளை
விட்டுச் சென்றது,
என் கண்ணீர் துளிகள் அல்ல,
கிழிந்த என் இதயத்தின்,
ரத்த துளிகள்...
இன்று
காலம் பறந்து
நினைவுகள் கடந்து
சுவடுகள் மறைந்தாலும்
என் மீதான உன் புரிதலை
உலகுக்கு
நீ உரத்துச் சொல்லும்
ஒவ்வொரு நொடியும
நினைவுப்படுத்துகின்றது
அன்று
ஒரே நொடியில்
உன் மீதான என் புரிதலை
நீ பொய்யாக்கியதை..
இதே வேதா தன் மன மகிழ்வையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றார் பாருங்கள் "இனி வண்ணங்கள் மட்டுமே!"என்ற தன் கவிதையில்.
மரித்துப் போன நினைவுகள் படிந்த
இலையுதிர் காலத்துச் சருகுகள்
இடறிக்கொண்டே இருந்தன என் காலடியில்..
வசந்தம் வந்த நேரத்தில்
துளிர்த்தன புதிய இலைகள்..
கர்வத்துடன் பச்சிலைகளும்
அனுபவத்துடன் சருகுகளும்
மாறி மாறி படபடத்தன..
பச்சையும் பழுப்பும்
சண்டையிட்டு கொண்டாலென?
காலத்தின் கட்டாயத்தில் இலையுதிர்தல்
மீண்டும் துளிர்ப்பதற்கே...
மெல்லிய முறுவல் என் இதழ்களில் பூக்க
மனத்தீ வளர்த்து சருகுகள் எரித்தேன்..
நினைவுகள் புகையாய் மேலெழும்பி
வசந்தத்தின் நினைவிலைகளின்
மென்காதுகளில் ஓதி விட்டுச் சென்றன (,
வாழ்வின் ரகசியத்தை..
(இந்த இடத்தில் எத்தனை நளினமாயும், அதே சமயம் மென்மையை உணரும்படியாகவும், ரகசியம் புகையாய் வந்து மோதுகின்றது? உணர முடிகின்றதல்லவா? அவர் சுமக்கும், அல்லது சுமக்கப் போகும் வண்ணம் அவரின் கவிதையில் மட்டுமில்லாமல், அவர் நெஞ்சத்திலும், நம் அனைவரின் நெஞ்சிலும், வாரித் தெளிப்பதையும் உணருகின்றோம்.)
வானவில்லின் வண்ணம் சுமந்து
வசந்தத்தின் பாதையில் அடிவைத்தேன்
இனி வண்ணங்கள் மட்டுமே...
Posted by வேதா at 9:20 AM
ஒரு கவிதை அனைவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இவர் கவிதைகள் சொல்கின்றன. எழுத்திலும் இவர் மிகத் திறமை வாய்ந்தவரே! சமூகப் பிரச்னை ஆனாலும் சரி, மற்ற மொக்கைகள் ஆனாலும் சரி இவரின் எழுத்துத் திறன் மெச்சும் தகுதி வாய்ந்ததே! இவரும் பல பயணக் கட்டுரைகள் எழுதி உள்ளார். நட்புகளின் மேன்மை பற்றிய தெளிவான ஒரு எண்ணமும் இவரிடம் உள்ளது. இவரின் தோழமை மூலம் நாங்கள் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. தற்சமயம் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருப்பதால் சற்றே மெளனம். திருமணம் முடிந்து பின்னர் வரும் நாளுக்கு ஆவலுடன் காத்திருக்கின்றேன். திருமணம் நிச்சயிக்கப் பட்டபின்னர் உள்ள நிலையை மறைமுகமாய்ச் சொல்லும் மொழி (மெளனம்) இதுவோ? இதோ இந்தக் கவிதை என்ன சொல்கின்றது? அப்பட்டமாய் அவர் நிலையைச் சொல்லுகின்றது அல்லவா? மெளன மொழி என்னும் இக்கவிதையைப் பாருங்கள்: ஒரு கல்யாணப் பெண்ணின் இயல்பான நாணமும், மகிழ்ச்சியும், அதனால் வரும் நிம்மதியும், மன நிறைவும் நம் மனதிலும் இழை ஓடுகின்றது அல்லவா? அதிலும் அந்த மணமகன் பேசிவிட்டால்? அப்பா! இப்போதைய பெண்களின் இந்த எதிர்பார்ப்பு அநேகமாய்ப் பொய்யாவதே இல்லை, என்றாலும் வேதா ரொம்பவே பக்குவமான ஒரு பெண். ஆகையாலேயே மெளனத்தையும் புரிந்து கொள்ள முடிந்திருக்கின்றது அவரால்.
மெளன மொழி என்ற அவரின் சமீபத்திய கவிதையில்:
//வார்த்தைகள் மட்டுமே நேசம் தரும் என நினைத்திருந்தேன்
அருவியாய் கொட்டும் வார்த்தைகளுக்கிடையே
அங்கங்கே தேங்கி நிற்கும்
உன் சில மெளனங்கள் அறியும் வரை...
மெல்ல மெல்ல உடையும் நம்மிடையேயான
மெளன நொடிகளுக்குள் புகுந்து புறப்படுகின்றன
சில நேச சொற்கள்
உன்னை என்னிடமும் என்னை உன்னிடமும்
அறிமுகப்படுத்த...
பிரம்மபிரயத்தனத்தோடு அலையும்
அச்சொற்கள் பாவம் அறிந்திருக்கவில்லை,
கண்களின் மொழியை விடவும்
இதயத்தின் மொழியை விடவும்
சக்தி வாய்ந்தது
நம் மெளன மொழி என்று...//
உண்மை மெளனமே ஒரு கவிதைதான் என்றாலும், என்னால் தவிர்க்க முடியாத ஒரு நினைப்பு, அட, அங்கேயுமா, இப்போ, இந்தக் காலத்திலுமா, இன்னுமா என்பதே! :))))))))))))))))))
|
|
//அம்பி சொல்வது போல் எனக்கு ஒரு பினாமியாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.//
ReplyDeleteம்ம்ம், உண்மை எல்லாம் வெளிய வருது போல, வெரிகுட். அப்படியே தற்போதைய பினாமி பெயரையம் சொல்லி இருக்கலாம். :D
A small suggestion:
ReplyDeleteநீங்கள் சுட்டும் ஆட்களின் உரலை(URL address) குறிப்பிட்டு இருந்தால் மக்கள் அவர்களது பதிவுபக்கங்களுக்கு சென்று வர வசதியாய் இருக்குமே!
உரல் குடுப்பது ரொம்ப ஈசி. இவ்ளோ டெக்னிகலா கலக்கறீங்க, இதுவும் செஞ்சு பாருங்க. :))
வாயடைச்சு நிற்கிறேன்
ReplyDeleteவார்த்தை இன்றித் தவிக்கிறேன்.
நன்றி கீதா.
உயிலை மாத்தியாச்சு:-)))))
சூப்பர் கீதா.
ReplyDeleteகவிதா எழுதாத தமிழ்மணம் என்னவோ மாதிரி தான் இருக்கிறது.
நல்ல துணிவுள்ள எழுத்தாளி.
துளசி பத்திக் கேட்கவே வேண்டாம்.
நல்ல தேர்வு.
அழகாக விவரம் கொடுத்து இருக்கிறீர்கள்.
@அம்பி எனக்குக் கூட இந்த உரல் கொடுக்கிறது தெரியாது. நீங்க அதைப் பற்றி எழுதலாமே.:)
நன்றாக, அழகாக ஒவ்வொருவரை பற்றியும் சொல்லியிருக்கிங்க தலைவி ;))
ReplyDelete\\ ambi said...
A small suggestion:
நீங்கள் சுட்டும் ஆட்களின் உரலை(URL address) குறிப்பிட்டு இருந்தால் மக்கள் அவர்களது பதிவுபக்கங்களுக்கு சென்று வர வசதியாய் இருக்குமே!
\\
வழிமொழிகிறேன்..;)
பதிவு ரொம்ப சின்னதா இருக்கு. கண்ணை கட்டுது :(
ReplyDeleteஅட்டெண்டன்ஸ் மட்டும் இப்ப.
ஆகா, யானையை உயில் மாத்தியாச்சு, அப்ப எனக்கு என்ன பூனையா? நடத்துங்க. நானாவது பரவாயில்லை தெனாலிராமன் மாதிரி சூடா பால் வச்சு பூனையை சமாளிச்சுடுவேன். நீங்க யானையை வச்சுகிட்டு என்ன செய்வீங்க:-))
ReplyDeleteகவிதா பத்தி சொன்னீங்க, அணில் குட்டியை பத்தி மூச்சு விடலையே என்ன ஒரு ஓரவஞ்சனை:-))
ReplyDeleteகவிஞர் வேதாவின் கவிதைகளை அருமையா சுட்டிக்காட்டியிருக்கிங்க:)
ReplyDeleteநல்லாயிருக்குங்க கீதா அக்கா.
ஆனா அதை இங்கேயே ஜி3 செய்யாமல் பதிவுக்கு சுட்டி கொடுத்திருந்தால்,அவரது பதிவுக்கே போய் படிச்சு ,அங்கிருக்கும் மற்ற கவிதைகளையும் ரசிக்க வாய்ப்பாக இருக்குமே:)