சரவெடிக் கதம்பம்
இணைப்பு வேலை செய்யலைன்னா நேரா இங்க போய் பாருங்களேன்:)
நகைச்சுவை..
இவர்,நம்ம வலையுலக நம்ம வீட்டுப் பிள்ளை.முதல்முதலில் வலையுலகம்ன்னு ஒன்னு இருக்கறதையே இவரோட பதிவை பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்.எனவே எனது வலையுலக பிரவேசத்திற்க்கும்,மொக்கை கொடுமைக்கும் குருன்னே சொல்லலாம்.இவரது மொக்கை எழுத்துக்களில்கூட நகைச்சுவை தாண்டவமாடும்.இவரது ஞானக் கண்களை திறந்து வைத்த இவரது நண்பர் குரங்கு ராதாவுக்கு நன்றியுணர்ச்சியுடன் இவர் எழுதும் கடிதத்தை பாருங்களேன்.:)
அன்புள்ள குரங்கு ராதா.
நம்மோட கவிதாயினி காயத்ரியின் நகைச்சுவை கொண்டாட்டம், பாருங்க.. இதுக்கு மேல, பதிவே உங்களுக்கு சொல்லும்.
பேய்க்கிட்ட பேசியிருக்கிங்களா?
சினிமாவுக்கு ரசிகர்கள் இருக்காங்களோ ?இல்லையோ? இவரின் சினிமா விமர்சனத்திற்க்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
கொலைவெறி ஏனடா?
வருத்தமில்லா வாலிபர் சங்கம்.வாலிபர் சங்கத்துல சேர்ந்துட்டாலே வாலிபராகிடறோம்ன்னு சில பெரியவங்கள்ல்லாம் நினைச்சுக்கிட்டு அங்கே இருந்தாலும்(ஹிஹி.. யாரென்னெல்லாம் கேக்கப்டாது:P) எழுத்துக்களில் இளமை விளையாடுகிறது.அடிக்கடி நகைச்சுவை பூக்கள் மலரும் ஒரு இடமாக இருக்கிறது.
ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு சிங்கம் பிளிறரதால, (பயப்படாதிங்க பிளிறரதோட சரி, ரொம்ப ஜாலி டைப்பு:P)மொத்தமா அங்கயே போய் பாத்துக்கோங்கJ
வ.வா சங்கம்
இது சாம்பிளுக்கு
இவரின் பதிவுக்கு எப்போ போனாலும்,குண்டலகேசி,சூடாமணின்னு நமக்கு தெரியாத அந்தகால இலக்கிய/காவியத்துலருந்தெல்லாம் கேள்விகளை கேட்டு பயப்படுத்துவார்.எனக்கு கேள்விகள் கேற்க்க மட்டும்தான் தெரியும்.கேள்வி கேக்கறது ஈஸி பதில் சொல்லறது எம்புட்டு கஷ்டம் தெரியுமான்னு கேட்டுட்டு பின்னூட்டத்த பாத்தா,அவ்வ்வ்வ்வ்வ் இதற்க்கும் போட்டி போட்டுக்கிட்டு பதில் சொல்லறாங்கப்பா... அடடா.. பரவாயில்லையே விஷயம் தெரிஞ்சவங்க நெறய பேரு இருக்காங்களே.எங்க போய் பதில் தேடறாங்கன்னு தான் தெரியலைன்னு நெனைச்சுக்கிட்டு வந்துருவேன்.ஆனா இவரோட இந்த பதிவை படிச்சப்போது தான்,இவருக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டிருக்குற ஒரு அருமையான நகைச்சுவை உணர்வை தெரிந்துக்கொள்ள முடிந்தது.வசணங்களை படிக்கும்போது நிஜமாகவே கண்ணெதிரே கவுண்டமணி,செந்தில் போன்ற கதா பாத்திரங்கள் நடமாடுவது போன்ற ஒரு உணர்வு.
கவுண்டரின் வார்த்தைகளை கவனிச்சுப்பாருங்களேன்.
கவுண்டர் –ஆன்மீகப் பதிவர்கள் ஒண்டிக்கு ஒண்டி
கீதா அக்கா,இவர்தான் என்னுடைய தமிழ்டீச்சர்ங்கறதை யார்க்கிட்டையும் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்.அதனாலதான் வலைச்சரத்துல கூட தனியா சொல்லலை. இவரது வீட்டில் நாய் பூனை எலி குருவிகள்களுடனான கூட்டுக்குடும்ப வாழ்க்கையைப் பற்றிய பதிவுகளை படித்தால் சிரிப்பு காரண்டி.எம்புட்டு ரசனையாய் எழுதுகிறார்.
எப்படி எழுதினாலும் எங்கேயாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுபிடிச்சு
திட்டுவது இவரது ஸ்பெஷாலிட்டி.
பிரசவத்துக்கு இலவசம்
கருஞ்சாம்பல் நிறத்தில் ஒரு குட்டி
நம்ம தோழி”மின்னல்” சுமதி அவர்கள், அடிக்கடி தான் ரசித்த கவிதைகளையும்,வாழ்த்து வாசகங்களையும் நம்மோட பகிர்ந்துக்கொள்வதோட,தனது அனுபவங்களையும் அருமையா எழுதி நம்மை மகிழ வைக்கிறார்.நீங்களும் பார்த்து ரசியுங்க.
அவரோட தம்பியை வைச்சே கலாய்ச்ச பதிவு இது.
டீடீ அக்கா எனக்கு புளியோதரை தரலைன்னு புலம்பிய பதிவு இது.
அன்புடன் அருணா , இவங்க எழுதிக்கிட்டிருக்கும்,”அன்றோருநாள் ஆகிட்டோம்ல்ல” தொடர் பதிவுகளைப் பாருங்களேன்.எவ்ளோ கலக்கலா எழுறாங்கன்னு.
நம்ம கோமதி நடராஜன் அக்காவின் ஹைக்கூ கற்பனைகளை பாருங்களேன்.எவ்வளவு ”நச்” மூணு வரியில,ஒவ்வொன்னும் கலக்கல்.எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு:).நீங்களும் பாருங்களேன்:)
ஹைக்கூ கலக்கல்
டுபுக்கு,இவரது ஜொள்ளித் திரிந்த காலம்,தொடர் (11 பாகம்)படிச்சு ரொம்ப ரசிச்சுயிருக்கேன்.வார்த்தைகளில் இயல்பாய் எள்ளாடுகிறார்.
மலரும் நினைவுகளை இப்படியும் கலக்கலா எழுத முடியுமா?ன்னு ஆச்சர்யப்பட வைக்கிறார்.படிச்சுப் பாருங்கJ
ஜொள்ளித் திரிந்த காலம் (முதல் பாகத்துலருந்து படிச்சுப்பாருங்கJ
டிப்ஸ் கார்னர் –எக்ஸ்பர்ட்ஸ் / ஆலோசகர்கள்.
திவ்யா மாஸ்டர்.இவர் வயசுக்கு, ரிசர்ச்சே பண்ணியிருக்கார் இதைத்தான் ஜீனியஸ்ம்பாங்களோJ). படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க.
பெண் பார்க்க போகலாமா?
புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க?
மனைவியின் மனதைக் கவர்வது எப்படி?
பினாத்தலார். இவருடைய –வைஃபாலஜி இல்லறவியல் டிப்ஸ் & பரிட்சை பாருங்க
புதுகைத் தென்றல்
இவருடைய மாண்டிச்சோரி பாத்துட்டு அட.. குழந்தைகளுக்கு இப்டி கூட பயிற்சி கொடுக்க முடியுமான்னு ஆச்சர்யமா இருந்துச்சு.குழந்தையின் திறமைகளுக்கான அடித்தளம் அமையும் சமயம் இந்த பயிற்ச்சிகள் பேருதவியாக இருக்கும்ன்னு தோனுது
மாண்டிச்சோரி
இவரது ஹஸ்பண்டாலஜி பாத்து ரசியுங்களேன்
குரலமுதம்
வலைப்பதிவுகளில் சமிப காலமாய் தான் ஒலிப் பதிவுகள் வலம்வரத் துவங்கியிருக்கின்றன.இதில் இந்த குழந்தையின் குரலில் பாடலைக் கேட்டு வியந்துபோனேன். பெரியவங்க மாதிரியே, எவ்ளோ ஷார்ப்பா,பிசிரில்லாமல் தெளிவா பாடுகிறாள் இந்த குழந்தை.கேட்டுப்பாருங்களேன்J
ஸரிகமபதநிஸா
சேவைப் பதிவுகள்
எல்லாருக்கும் பயன்படும் வகையில் தானங்களைப் பற்றி விபரங்களை பகிர்ந்துக்கொண்ட வகையில் இவர்களது பதிவுகள் என்னைக் கவர்ந்தன.
அறிவுக்கொடை-இம்சை வெங்கி மாம்ஸ்
இலவச இதய அறுவை சிக்கிச்சைக்கு-ஜி3
எலும்பு மஞ்ஜை தானம்- கே.ஆர்.எஸ்
புகைப்படக் கலை.
நம்ம சீ.வீ.ஆரும்,ஜீவ்ஸ் மாம்ஸும் சேர்ந்து எனக்கு செலவு வைச்சுட்டாங்க:P .
ஆரம்பத்துல நம்ம சீ.வீ.ஆர்,புகைப்படக்கலையைப்பத்தி உதாரணப் படங்களோட விளக்குனதை வைச்சு ஆர்வப்பட்டு டிரைப் பண்ணிப்பாத்திருக்கேன். அருமையா ( புகைப்பட கலையின் தொழில்நுட்பங்களை விளக்குகிறார்.ஆரம்ப கட்டங்களில் இருப்பவர்களுக்கு,இவரது பதிவு நிச்சயம் பேருதவியாய் இருக்கும்.
இவரோட டபுள் ரோல் ஜடியா பாருங்களேன்
அதுக்கப்பறம், நம்ம ஜீவ்ஸ் மாம்ஸ் சும்மா கிடந்த என்னிய அவர் புதுசா எடுத்த படங்களால, உசுப்பி விட்டுட்டார்.ஒவ்வொரு படத்துலயும் ஏதோ ஒரு பாயிண்ட் ஆர்வமூட்டியதால, நமக்கும் படம் எடுக்க ஆசை வந்து ஒரு கேமரா வாங்கிட்டேன்(மக்களே ,நல்லா கவனிச்சுக்கோங்க,இனி நான் போட்டோ எடுக்கறேன் பேர்வழின்னு ஏதாவது கொடுமைப் படுத்தினா,அதுக்கு நான் காரணமல்ல:P) .ஜீவ்ஸ் மாம்ஸ் ஒரு ஒரு கவிஞரும் கூட, அவரது கவிதைகளை ரசிக்க
மதரீதியான வேறுபாடுகளை களைய முயலும் இவரது பதிவு
தமிழில் புகைப்படக்கலையில் கூட்டுச்சேர்ந்து கலக்குகிறார்.திண்ணை.காம்'ல் இவரது படைப்புக்களை ஐயப்பன் (இதுதான் நெசப்பேரு)என்ற பெயரில் காணலாம்.
செம கிரியேட்டிவ் மொக்கைகள்
ஹலோ மொக்கைன்னா உங்களுக்கு அம்புட்டு இளகாரமா போயிருச்சா? சீரியஸ் பதிவை விட,மொக்கை பதிவு போட எம்புட்டு கிரியேட்டிவிட்டி வேணும் தெரியுமா?.இந்தப் பதிவுகளைப் படிச்சுப்பாருங்களேன்.உங்களுக்கே புரியும்.:P
எப்படில்லாம் யோசிச்சிருக்காங்கன்னு
மைபிரண்டு
மொக்கை
நாமக்கல் சிபி மாம்ஸ்
போஸ்ட்
கிறுக்கல்கள்
இதில் கொடுத்த ஒவ்வொரு வகைக்கும் ஒரு பதிவு போடனும்ன்னு நினைச்சேன்(பயப்படாதிங்க.. தப்பிச்சிங்க:P :))
எதிர்பாராத வேலை பளு வந்துவிட்டதால, எடிட் செஞ்சு ,முடிந்தவரை பகுதி சுட்டிகளை குவிச்சிருக்கேன். மெதுவா படிச்சு ரசியுங்கJ
என்றும் அன்புடன்
உங்கள் ரசிகன்
|
|
மாம்ஸ் வந்துட்டேன்.
ReplyDeleteமச்சி வந்துட்டேன்
ReplyDeleteவலைச்சரத்துல விடியோ காமிச்ச மொத ஆள் நீயாதான் இருப்ப வாழ்த்துக்கள்!!
ReplyDelete/
ReplyDeleteஎதிர்பாராத வேலை பளு வந்துவிட்டதால
/
நம்பறேன்
/திவ்யா மாஸ்டர்.இவர் வயசுக்கு, ரிசர்ச்சே பண்ணியிருக்கார் இதைத்தான் ஜீனியஸ்ம்பாங்களோJ). படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க.
ReplyDelete/
அந்த 'அம்மா' அமெரிக்காவுக்கு படிக்க போயிருக்கா இல்ல இந்த ரிசர்ச் பண்ண போயிருக்கான்னு எனக்கும் ரொம்ப நாளா டவுட் இருக்கு!!!!
// நிஜமா நல்லவன் said...
ReplyDeleteமாம்ஸ் வந்துட்டேன்.//
வாங்க மாம்ஸ். நல்வருகைகள். முதல் வருகைக்கு:)
// மங்களூர் சிவா said...
ReplyDeleteமச்சி வந்துட்டேன்//
ஹா..ஹா..:)))))
நன்றிகள் மாம்ஸ்
//மங்களூர் சிவா said...
ReplyDeleteவலைச்சரத்துல விடியோ காமிச்ச மொத ஆள் நீயாதான் இருப்ப வாழ்த்துக்கள்!!//
அப்டியா? சரித்திரத்துல இடம்புடிச்சிட்டோமோ?:P
// மங்களூர் சிவா said...
ReplyDelete/திவ்யா மாஸ்டர்.இவர் வயசுக்கு, ரிசர்ச்சே பண்ணியிருக்கார் இதைத்தான் ஜீனியஸ்ம்பாங்களோJ). படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க.
/
அந்த 'அம்மா' அமெரிக்காவுக்கு படிக்க போயிருக்கா இல்ல இந்த ரிசர்ச் பண்ண போயிருக்கான்னு எனக்கும் ரொம்ப நாளா டவுட் இருக்கு!!!!/
சேம் பிளட்:))))
\\// மங்களூர் சிவா said...
ReplyDelete/திவ்யா மாஸ்டர்.இவர் வயசுக்கு, ரிசர்ச்சே பண்ணியிருக்கார் இதைத்தான் ஜீனியஸ்ம்பாங்களோJ). படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க.
/
அந்த 'அம்மா' அமெரிக்காவுக்கு படிக்க போயிருக்கா இல்ல இந்த ரிசர்ச் பண்ண போயிருக்கான்னு எனக்கும் ரொம்ப நாளா டவுட் இருக்கு!!!!/
சேம் பிளட்))\\
அடபாவிங்களா((:
//Divya has left a new comment on the post "சரவெடிக் கதம்பம்":
ReplyDelete\\// மங்களூர் சிவா said...
/திவ்யா மாஸ்டர்.இவர் வயசுக்கு, ரிசர்ச்சே பண்ணியிருக்கார் இதைத்தான் ஜீனியஸ்ம்பாங்களோJ). படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க.
/
அந்த 'அம்மா' அமெரிக்காவுக்கு படிக்க போயிருக்கா இல்ல இந்த ரிசர்ச் பண்ண போயிருக்கான்னு எனக்கும் ரொம்ப நாளா டவுட் இருக்கு!!!!/
சேம் பிளட்))\\
அடபாவிங்களா((: //
ஹிஹி....நல்வருகைகள் திவ்யா மாஸ்டர்:)
//அன்புடன் அருணா , இவங்க எழுதிக்கிட்டிருக்கும்,”அன்றோருநாள் ஆகிட்டோம்ல்ல” தொடர் பதிவுகளைப் பாருங்களேன்.எவ்ளோ கலக்கலா எழுதுறாங்கன்னு///
ReplyDeleteஅச்சசோ!!! என்னப்பா இது?? கொஞ்சம் பிசியாக இருந்துட்டால்....இப்பிடியா ?என்னைப் பற்றி எழுதினதையே மிஸ் பண்ணிட்டேனே....நன்றி ரசிகன்....
அன்புடன் அருணா