07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ரசிகன். Show all posts
Showing posts with label ரசிகன். Show all posts

Monday, April 21, 2008

கத்தார் கதாநாயகர்கள்

விடைப்பெறுகிறேன்.(யாரு கேள்வி கேட்டது? விடை பெறுவதுக்குன்னு எடக்கு முடக்கால்லாம் கேக்கப்டாது:P))



எல்லா வலைப்பதிவுகளையும் சொல்லிட்டு நம்ம ஊர்க்காரங்களைப் பத்தி சொல்லாம இருக்க முடியுமா?


எனது சக கத்தார் வாழ் கதாநாயகர்களைப் பற்றி பகிர்ந்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்:)


இதோ கத்தார் கதாநாயகர்கள்
என்னைப் பற்றி ( உன்னிய பத்திதான் மொத பதிவுலயே சுயப் புராணம் பாடியாச்சேன்னு கேக்கறது புரியுது.எதுக்கு அவசரப் படறிங்க?) சொல்லறதுக்கு இன்னும் என்ன இருக்கு?.. அதனால நேரடியா நம்ம நண்பர்களைப் பத்தி சொல்லறேன்னு சொல்ல வந்தேன்:P

நம்ம கானகம் மாம்ஸ், பழகுவதற்க்கு இனிமையானவர்.பயணக்கட்டுரைகளை இவரைத்தான் எழுத சொல்லனும்.
அம்புட்டு அருமையா ஒன்னுவிடாம ஆர்வமூட்டும் வகையில் எழுதுவார்.கத்தாரைப் பற்றி யாராவது கேட்டால்,இவரின் இவர் எழுதிய இந்த இடுகையை அப்படியே அனுப்பிடலாம்

கத்தார் ஒரு அறிமுகம்


நான் ஏற்கனவே படித்திருந்து ஒரு ஃபார்வேர்ட் மெயிலுக்கு இவர் கத்தாரை கம்பேர் செய்து எழுதிய கமெண்ட்ஸ் ரொம்பவே ரசித்தேன். இவையே போதும் எங்க ஊரைப் பத்தி தெரிஞ்சுக்க:)

அரபு நாடுகளில் வேலை செய்வது பற்றிய நகைச்சுவையான உண்மைகள்.


நம்ம நவின பாரதிய இளவரசர்.அப்பப்பா.. எவ்ளோ கலைரசனை உடையவர்.,திரைப்படம் ,புத்தகம்,தமிழ் ,மலையாளம்,விழாக்கள் என எதையும் விட்டு வைப்பதில்லை.தான் ரசித்தவற்றை அவ்வளவு அருமையா பதிபு செய்கிறார். இவருடைய பதிவுல ஒரு சிறப்பம்சம் என்னன்னா?. தான் சொல்லும் விஷயத்தைப் பற்றிய முழு சுட்டிகளையும் இணைத்து பதிவை முழுமைப் படுத்தியிருப்பார்.

திருவனந்தபுரம் பத்மநாத ஸ்வாமி கோவில்

IT நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் பற்றி அலசி ஆராய்ந்திருக்கிறார்.


நம்ம ஆயில்யன் மாம்ஸ்,இவரப் பற்றி சொல்லனும்ன்னா , தினமும் ஒரு பதிவு போட்டுட்டுதான் தூங்கவே போவாரு. மங்கையர் தினம்,குழந்தைகள் தினம்,தந்தையர் தினம்,விழிப்புணர்வு தினம் என தினமும் இன்றைக்கு என்ன தினமாய் உலகலவில் கொண்டாடறாங்கன்னு இவர் பதிவில் பார்த்து தான் தெரிந்துக்கொள்கிறோம்ன்னா பாத்துக்கோங்களேன். அது மட்டுமின்றி, ஊரில் இருந்த போது நடந்த மலரும் நினைவுகள்.இவர் படித்தவற்றில் இவரைக் கவர்ந்த செய்திகளைப்பற்றிய இவர் பார்வை என ஒன்றையும் விட்டு வைப்பதில்லை.


PIT போட்டியில் இவருக்கு நேரம் கொடுக்காமல் சீக்கிரம் மூடிட்டாங்கன்னு அதுக்கு எதிரா இவர் பண்ணிய குறும்பு பாருங்களேன்:P

நிதி நிர்வாகவியல்

அரசியல்



மக்கள்ஸ், எதிர்பாராத வேலைப் பளுவின் காரணமா வலைசரத்துல நமக்கு பிடித்த சுட்டிகளை பகிர்ந்துக்க கிடைச்ச வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்க இயலாமல் போனாலும், பிடித்த சில பதிவுச் சுட்டிகளை அறிமுகப் படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த இனிய வாய்ப்பையும் ,ஆலோசனைகளையும் எனக்கு வழங்கிய முத்துலஷ்மி அக்காவுக்கும் ,வலைச்சர பொறுப்பாசிரியராய் வழி நடத்திய சீனா ஐயாவுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்:)


இந்தப் பதிவில்,தனி மடலில்,சாட் குறுஞ்செய்தியில்,அலைபேசி உரையாடல்களுக்கிடையில் வாழ்த்தும்,பாராட்டும் சொன்ன அத்துணை நெஞ்சங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டுள்ளேன்.

நன்றி......................நன்றி......................... நன்றி :)

என்றும் அன்புடன்
உங்கள் ரசிகன்

















மேலும் வாசிக்க...

Sunday, April 20, 2008

சரவெடிக் கதம்பம்



இணைப்பு வேலை செய்யலைன்னா நேரா இங்க போய் பாருங்களேன்:)

நகைச்சுவை..



இவர்,நம்ம வலையுலக நம்ம வீட்டுப் பிள்ளை.முதல்முதலில் வலையுலகம்ன்னு ஒன்னு இருக்கறதையே இவரோட பதிவை பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்.எனவே எனது வலையுலக பிரவேசத்திற்க்கும்,மொக்கை கொடுமைக்கும் குருன்னே சொல்லலாம்.இவரது மொக்கை எழுத்துக்களில்கூட நகைச்சுவை தாண்டவமாடும்.இவரது ஞானக் கண்களை திறந்து வைத்த இவரது நண்பர் குரங்கு ராதாவுக்கு நன்றியுணர்ச்சியுடன் இவர் எழுதும் கடிதத்தை பாருங்களேன்.:)

அன்புள்ள குரங்கு ராதா.




நம்மோட கவிதாயினி காயத்ரியின் நகைச்சுவை கொண்டாட்டம், பாருங்க.. இதுக்கு மேல, பதிவே உங்களுக்கு சொல்லும்.

பேய்க்கிட்ட பேசியிருக்கிங்களா?



சினிமாவுக்கு ரசிகர்கள் இருக்காங்களோ ?இல்லையோ? இவரின் சினிமா விமர்சனத்திற்க்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

கொலைவெறி ஏனடா?


வருத்தமில்லா வாலிபர் சங்கம்.வாலிபர் சங்கத்துல சேர்ந்துட்டாலே வாலிபராகிடறோம்ன்னு சில பெரியவங்கள்ல்லாம் நினைச்சுக்கிட்டு அங்கே இருந்தாலும்(ஹிஹி.. யாரென்னெல்லாம் கேக்கப்டாது:P) எழுத்துக்களில் இளமை விளையாடுகிறது.அடிக்கடி நகைச்சுவை பூக்கள் மலரும் ஒரு இடமாக இருக்கிறது.

ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு சிங்கம் பிளிறரதால, (பயப்படாதிங்க பிளிறரதோட சரி, ரொம்ப ஜாலி டைப்பு:P)மொத்தமா அங்கயே போய் பாத்துக்கோங்கJ

வ.வா சங்கம்


இது சாம்பிளுக்கு



இவரின் பதிவுக்கு எப்போ போனாலும்,குண்டலகேசி,சூடாமணின்னு நமக்கு தெரியாத அந்தகால இலக்கிய/காவியத்துலருந்தெல்லாம் கேள்விகளை கேட்டு பயப்படுத்துவார்.எனக்கு கேள்விகள் கேற்க்க மட்டும்தான் தெரியும்.கேள்வி கேக்கறது ஈஸி பதில் சொல்லறது எம்புட்டு கஷ்டம் தெரியுமான்னு கேட்டுட்டு பின்னூட்டத்த பாத்தா,அவ்வ்வ்வ்வ்வ் இதற்க்கும் போட்டி போட்டுக்கிட்டு பதில் சொல்லறாங்கப்பா... அடடா.. பரவாயில்லையே விஷயம் தெரிஞ்சவங்க நெறய பேரு இருக்காங்களே.எங்க போய் பதில் தேடறாங்கன்னு தான் தெரியலைன்னு நெனைச்சுக்கிட்டு வந்துருவேன்.ஆனா இவரோட இந்த பதிவை படிச்சப்போது தான்,இவருக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டிருக்குற ஒரு அருமையான நகைச்சுவை உணர்வை தெரிந்துக்கொள்ள முடிந்தது.வசணங்களை படிக்கும்போது நிஜமாகவே கண்ணெதிரே கவுண்டமணி,செந்தில் போன்ற கதா பாத்திரங்கள் நடமாடுவது போன்ற ஒரு உணர்வு.

கவுண்டரின் வார்த்தைகளை கவனிச்சுப்பாருங்களேன்.


கவுண்டர் –ஆன்மீகப் பதிவர்கள் ஒண்டிக்கு ஒண்டி



கீதா அக்கா,இவர்தான் என்னுடைய தமிழ்டீச்சர்ங்கறதை யார்க்கிட்டையும் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்.அதனாலதான் வலைச்சரத்துல கூட தனியா சொல்லலை. இவரது வீட்டில் நாய் பூனை எலி குருவிகள்களுடனான கூட்டுக்குடும்ப வாழ்க்கையைப் பற்றிய பதிவுகளை படித்தால் சிரிப்பு காரண்டி.எம்புட்டு ரசனையாய் எழுதுகிறார்.

எப்படி எழுதினாலும் எங்கேயாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுபிடிச்சு

திட்டுவது இவரது ஸ்பெஷாலிட்டி.



பிரசவத்துக்கு இலவசம்



கருஞ்சாம்பல் நிறத்தில் ஒரு குட்டி


நம்ம தோழி”மின்னல்” சுமதி அவர்கள், அடிக்கடி தான் ரசித்த கவிதைகளையும்,வாழ்த்து வாசகங்களையும் நம்மோட பகிர்ந்துக்கொள்வதோட,தனது அனுபவங்களையும் அருமையா எழுதி நம்மை மகிழ வைக்கிறார்.நீங்களும் பார்த்து ரசியுங்க.

அவரோட தம்பியை வைச்சே கலாய்ச்ச பதிவு இது.


டீடீ அக்கா எனக்கு புளியோதரை தரலைன்னு புலம்பிய பதிவு இது.

அன்புடன் அருணா , இவங்க எழுதிக்கிட்டிருக்கும்,”அன்றோருநாள் ஆகிட்டோம்ல்ல” தொடர் பதிவுகளைப் பாருங்களேன்.எவ்ளோ கலக்கலா எழுறாங்கன்னு.

நம்ம கோமதி நடராஜன் அக்காவின் ஹைக்கூ கற்பனைகளை பாருங்களேன்.எவ்வளவு ”நச்” மூணு வரியில,ஒவ்வொன்னும் கலக்கல்.எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு:).நீங்களும் பாருங்களேன்:)
ஹைக்கூ கலக்கல்

டுபுக்கு,இவரது ஜொள்ளித் திரிந்த காலம்,தொடர் (11 பாகம்)படிச்சு ரொம்ப ரசிச்சுயிருக்கேன்.வார்த்தைகளில் இயல்பாய் எள்ளாடுகிறார்.

மலரும் நினைவுகளை இப்படியும் கலக்கலா எழுத முடியுமா?ன்னு ஆச்சர்யப்பட வைக்கிறார்.படிச்சுப் பாருங்கJ

ஜொள்ளித் திரிந்த காலம் (முதல் பாகத்துலருந்து படிச்சுப்பாருங்கJ


டிப்ஸ் கார்னர் –எக்ஸ்பர்ட்ஸ் / ஆலோசகர்கள்.



திவ்யா மாஸ்டர்.இவர் வயசுக்கு, ரிசர்ச்சே பண்ணியிருக்கார் இதைத்தான் ஜீனியஸ்ம்பாங்களோJ). படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க.



பெண் பார்க்க போகலாமா?



புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க?


மனைவியின் மனதைக் கவர்வது எப்படி?


பினாத்தலார். இவருடைய –வைஃபாலஜி இல்லறவியல் டிப்ஸ் & பரிட்சை பாருங்க



புதுகைத் தென்றல்

இவருடைய மாண்டிச்சோரி பாத்துட்டு அட.. குழந்தைகளுக்கு இப்டி கூட பயிற்சி கொடுக்க முடியுமான்னு ஆச்சர்யமா இருந்துச்சு.குழந்தையின் திறமைகளுக்கான அடித்தளம் அமையும் சமயம் இந்த பயிற்ச்சிகள் பேருதவியாக இருக்கும்ன்னு தோனுது

மாண்டிச்சோரி



இவரது ஹஸ்பண்டாலஜி பாத்து ரசியுங்களேன்



குரலமுதம்


வலைப்பதிவுகளில் சமிப காலமாய் தான் ஒலிப் பதிவுகள் வலம்வரத் துவங்கியிருக்கின்றன.இதில் இந்த குழந்தையின் குரலில் பாடலைக் கேட்டு வியந்துபோனேன். பெரியவங்க மாதிரியே, எவ்ளோ ஷார்ப்பா,பிசிரில்லாமல் தெளிவா பாடுகிறாள் இந்த குழந்தை.கேட்டுப்பாருங்களேன்J



ஸரிகமபதநிஸா


சேவைப் பதிவுகள்

எல்லாருக்கும் பயன்படும் வகையில் தானங்களைப் பற்றி விபரங்களை பகிர்ந்துக்கொண்ட வகையில் இவர்களது பதிவுகள் என்னைக் கவர்ந்தன.



அறிவுக்கொடை-இம்சை வெங்கி மாம்ஸ்


இலவச இதய அறுவை சிக்கிச்சைக்கு-ஜி3


எலும்பு மஞ்ஜை தானம்- கே.ஆர்.எஸ்


புகைப்படக் கலை.


நம்ம சீ.வீ.ஆரும்,ஜீவ்ஸ் மாம்ஸும் சேர்ந்து எனக்கு செலவு வைச்சுட்டாங்க:P .


ஆரம்பத்துல நம்ம சீ.வீ.ஆர்,புகைப்படக்கலையைப்பத்தி உதாரணப் படங்களோட விளக்குனதை வைச்சு ஆர்வப்பட்டு டிரைப் பண்ணிப்பாத்திருக்கேன். அருமையா ( புகைப்பட கலையின் தொழில்நுட்பங்களை விளக்குகிறார்.ஆரம்ப கட்டங்களில் இருப்பவர்களுக்கு,இவரது பதிவு நிச்சயம் பேருதவியாய் இருக்கும்.

இவரோட டபுள் ரோல் ஜடியா பாருங்களேன்


அதுக்கப்பறம், நம்ம ஜீவ்ஸ் மாம்ஸ் சும்மா கிடந்த என்னிய அவர் புதுசா எடுத்த படங்களால, உசுப்பி விட்டுட்டார்.ஒவ்வொரு படத்துலயும் ஏதோ ஒரு பாயிண்ட் ஆர்வமூட்டியதால, நமக்கும் படம் எடுக்க ஆசை வந்து ஒரு கேமரா வாங்கிட்டேன்(மக்களே ,நல்லா கவனிச்சுக்கோங்க,இனி நான் போட்டோ எடுக்கறேன் பேர்வழின்னு ஏதாவது கொடுமைப் படுத்தினா,அதுக்கு நான் காரணமல்ல:P) .ஜீவ்ஸ் மாம்ஸ் ஒரு ஒரு கவிஞரும் கூட, அவரது கவிதைகளை ரசிக்க

மதரீதியான வேறுபாடுகளை களைய முயலும் இவரது பதிவு

தமிழில் புகைப்படக்கலையில் கூட்டுச்சேர்ந்து கலக்குகிறார்.திண்ணை.காம்'ல் இவரது படைப்புக்களை ஐயப்பன் (இதுதான் நெசப்பேரு)என்ற பெயரில் காணலாம்.

செம கிரியேட்டிவ் மொக்கைகள்

ஹலோ மொக்கைன்னா உங்களுக்கு அம்புட்டு இளகாரமா போயிருச்சா? சீரியஸ் பதிவை விட,மொக்கை பதிவு போட எம்புட்டு கிரியேட்டிவிட்டி வேணும் தெரியுமா?.இந்தப் பதிவுகளைப் படிச்சுப்பாருங்களேன்.உங்களுக்கே புரியும்.:P

எப்படில்லாம் யோசிச்சிருக்காங்கன்னு



மைபிரண்டு

மொக்கை


நாமக்கல் சிபி மாம்ஸ்

போஸ்ட்

கிறுக்கல்கள்


இதில் கொடுத்த ஒவ்வொரு வகைக்கும் ஒரு பதிவு போடனும்ன்னு நினைச்சேன்(பயப்படாதிங்க.. தப்பிச்சிங்க:P :))

எதிர்பாராத வேலை பளு வந்துவிட்டதால, எடிட் செஞ்சு ,முடிந்தவரை பகுதி சுட்டிகளை குவிச்சிருக்கேன். மெதுவா படிச்சு ரசியுங்கJ



என்றும் அன்புடன்

உங்கள் ரசிகன்
மேலும் வாசிக்க...

Saturday, April 19, 2008

அறிவுத் தேடலில்...

மனிதனின் ஆர்வமும், தேடல்களும் நின்றுபோகும்போது,உயிர்மை என்பதும் நின்றுபோகிறது.உயிர்வாழ்தலின் நாடித்துடிப்பே,இந்த தேடல்கள் தான். மனிதன் மட்டுமின்றி எல்லா உயிர்களும் அவற்றின் உயிர்வாழ்தலுக்கேற்ப அறிந்துக்கொள்ள முயல்கின்றன என சொல்லலாம்.

கடவுளை நோக்கிய மனிதனின் பயணப்பாதைதான் அறிவியல்ன்னு தோனுது. என்றைக்கு,அண்டத்தின் எல்லா புதிர்களையும்/ இயற்க்கையின் எல்லா ரகசியங்களையும் மனிதன் அறிந்துக்கொள்கிறானோ? அன்று மனிதன் கடவுளாகிறான்.தான் இத்தனை நாள் தேடிவந்த கடவுள், ”தான்” தான் என்று உணர்வான்.


ஆனால் கடவுளுக்கும் மனிதனுக்குமான இடைவெளி எப்போதுமே மாறாமல் இருக்கிறது என தோன்றுகிறது.எப்போதும் மாறாத வட்டத்தின் சுற்றுப் பாதைக்கும், விட்டத்திற்க்கும் உள்ள விகிதமான ”பை” அளவு போல.

மனிதனின் அறிந்துக்கொள்ளும் ஆற்றல்,வேகம் அதிகரிக்கும் தோறும்,அதைவிட,அவனது அறியும் திறனுக்கு அப்பால், வேகமாய் புதிய புதிர்களும் சவால்களும் விந்தைகளும் தோன்றிக்கொண்டே/புலப்பட்டுகொண்டே இருக்கின்றன.

மிகப்பெரிய விஞ்ஞானிகளும் கூட,ஒரு இறுதிப் புள்ளியில், தமது ஆய்வு எல்லைக்கு அப்பாட்பட்ட சக்திகளை/புதிர்களை ”கடவுளின் எல்லை” என ஏற்றுக்கொள்கிறார்கள்ன்னு தான் தோனுது. நாளை ,ஒருவேளை அறிவின் தேடலில் அந்த எல்லைகள் கண்டறியபடலாம்.புதிய எல்லைகள் உருவாகலாம்.நேற்றுவரை கடவுளாய் இருந்து புவியின் செயல்களை நடத்திக்கொண்டிருந்த சக்திகளை அறிவியல் அறியச் செய்தபிறகு,கடவுளின் அதிகார எல்லைகள்,புதிய எல்லைகளுக்கு இடம் பெயர்ந்தன.

விஞ்ஞானம் ஆன்ம ஞானத்திற்க்கு எதிரானது அல்ல. இரண்டுமே ஒரே புள்ளியில் தோன்றி,ஒரே புள்ளியில் மறைபவை.இரண்டும் ஒரு முழுமையான வாழ்விற்க்கு அவசியம் எனலாம்.

எப்படி இருவேறு கருத்துக்கள் ஒரே வாழ்வில் ஒன்றாய் வைப்பது?என்கிறீர்களா? மிகவும் சுலபம். நமது மூளையில் கூட வலது மூளை உணர்வுப்பூர்வமான முடிவுகளை எடுக்க உதவுவது.இடது மூளை அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுக்கத் தூண்டுவது.இவை இரண்டும் சரியான விகிதத்தில் நம் வாழ்வியலுக்குத் தேவையான சரியான முடிவை எடுக்க வைப்பது போல. இரண்டும் வட்டத்தின் இருவேறு திசைகளில் பயணித்து,ஒன்று சேர்பவை.


கடவுள் என்றுமே மறைவதில்லை, புதிய புதிர்களுக்கு இடம் மாறுகிறார். நம்முடன் விளையாடுகிறார்.தொடுதல் விளையாட்டில், நாம் தொட நெருங்கும் போது விலகிப் போவதிப் போல. தரையில்,வானம் தொடும் அடிவானத்தை நோக்கி அடைய நடந்தால் அந்த மாயப் புள்ளி நம் வேகத்திற்கேற்ப நம்மை விட்டு விலகிச் செல்வது போல. இதில் ஒரு உண்மை நாமும் வானமும் நமது பூமியும் வெவ்வேறல்ல, அண்டத்தின் பகுதிகளாய் இருக்கிறோம் எனபதுதான்.நம்மை நாமே தேடுவது.

நேற்று வரை மனிதனின் யூகங்களுக்கு இடமளித்த சூரிய மண்டல விளிம்பு, இன்று பால்வெளி மண்டல விளிம்புக்கு மாற்றப்பட்டுள்ளது. நாளை கேலக்ஸிகளின் ஆரம்ப/இறுதி விளிம்புகளாக மாறும்.

அதுவரை எனது அறியும் எல்லைக்கு அப்பாட்பட்ட ஆர்வமூட்டும் புதிரை/சக்தியை/கடவுளை வணங்குகிறேன்:).


அவ்வ்வ்வ்.... pin நவீனத்துவம் ,குண்டூசி நவினத்துவம்பாங்களே பேசிக்கிட்டே, அதுக்கு கிட்ட வந்துட்டேனோ?

எல்லாரும் தூங்கிட்டிங்களா? குறட்டை சப்தமெல்லாம் கேக்குதே:P

சரி கொஞ்சம் மொக்கைக்கு வந்துருவோம்.

மனித மூளையில் தாய்மொழிக்கு(குழந்தையாய் இருக்கும் போது,மூளை செல்கள் வாயசைவுகளையும் ஒலிகளையும் உணர்ந்து வடிவமைக்கும் தருணத்தில் பழகும் மொழி) தனி இடமுங்க.,நீங்க கத்துக்கற மத்த மொழிகளுக்கு வேற இடம்.நாம வேற நாட்டுல வேற பாஷை பேசறவங்க கூட வேலைக்கு வந்தாலும்,நம்ம சிந்தனைகள் தாய் மொழில தான் தோன்றும்.அதை மொழிப்பெயர்த்துதான் வார்த்தைகளா வெளியிடுவோம்.அதேப் போல , வேற்று மொழில படிச்சாலும்,படிக்கும்போது,மூளையில் டிஸ்னரி, டிராஸ்சுலேஷன் செஞ்சு தாய் மொழியில் தான் புரிந்துக்கொள்ளப் படுகிறது.

நேரடியா தாய் மொழியில் படிக்கிற அனுபவமே தனி தான் போங்க..நேரடியான மூளை உணர்வுகள் ,படிக்கும் போதே ,இயல்பாய் சிந்தனையை தூண்டும். நீங்க எவ்வளவு ஆங்கில புலமை படைச்சவராயிருந்தாலும் ,ஒரே பொருள் தர்ர, ஆங்கில கவிதையையும் ,தமிழ்க் கவிதையையும் படிச்சுப்பாருங்க. வித்தியாசம் விளங்கும்.

பலர் அறிவியலை தமிழ்படுத்துகிறேன் பேர்வழின்னு இல்லாத வார்த்தைகளை கண்டுபிடித்து,நமக்கு அறிவியலையே அலர்ஜியாக்கும் வேலையைத்தான் செய்து வருகிறார்கள்.


நம்ம தமிழில் சமீபத்துல தான் தரமான,அறிவியல் புத்தகங்கள் அதிகமாகியிருக்கு. சமீபத்தில் மறைந்த ரங்கராஜன் என்கிற சுஜாதா(அவர் மனைவி பெயர்?) அவர்களின் “அறிவியலைத் தமிழ்படுத்தி பெருவாரியான பொது மக்களிடம் சேர்த்த” தொண்டு என்னைக் கவர்ந்தது.
என் சிறுவயதில்,ரஷ்ய விஞ்ஞான எழுதாளர் பெரல்மான் அவர்களின் அறிவியல் தமிழாக்கத்தை தந்த மீர் பதிப்பகம் இன்னமும் என் நினைவில் உள்ளது.

மெயின் மேட்டருக்கு வந்தாச்சுங்கோ..:P


விஞ்ஞானி ஜெயபாரதன் ஐயா அவர்கள்(சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா).கட்டுரைகளாய் பாதுகாக்க வேண்டிய விஞ்ஞான விளக்கங்களை அழகுத் தமிழில் இலவசமாய் எழுதி வலையேற்றியிருக்கிறார்.ஒவ்வொன்றும் மிகச்சாதாரணமானவர்களுக்கும் கூட புரியும் வகையில்,இயல்பான அறிவியல் சொற்களையும்,அழகான இணையான தமிழ்சொல்லையும் கோர்த்து ஆச்சர்யப் படுத்துகிறார்.அணு சக்தி நிர்வாகவியல்,விஞ்ஞானிகள் பற்றிய கட்டுரைகளும்,அண்டத்தை பற்றிய அறிவியலையும் பகிர்ந்துக்கொள்கிறார்.இவரது வயதில் ,இளைய சமுதாயத்திற்க்கு இந்த சேவை பாராட்டுக்குறியது.இடையிடையே கவிதைகளையும் எழுதுகிறார்.திண்ணை போன்றவற்றில் எழுத்து என தன்னை இடைவிடாமல் பிஸியாகவே வைத்துக்கொள்ளும் இவரது மனது நம்மை விட இளமைன்னு சொல்லத்தான் வேண்டுமோ?.

அண்டத்தின் பிரமாண்டத்தை ,பகுதி பகுதியாக தொடர் விஞ்ஞான கட்டுரைகளால் ,இவர் எளிமையாக விளக்குவதை படித்துப்பாருங்க,,
இது நீங்க பாதுக்காக வேண்டிய விஷயங்கள் உங்கள் எதிர்கால சந்ததிகளுக்கு விளக்க, அவர்கள் காலத்தில், ஐய்யோடா.. உங்களுக்கு இதுக்கூட தெரியாதா? பழைய ஜெனரேஷன்னு அவர்கள் கேலி செய்வதை தவிற்க வேண்டுமாயின்.(இனி வரும் சந்ததிகளுக்கு நிலாவில் பாட்டி வடை சுட்ட கதையோடு நிலவைப்பற்றி நமக்கே ஆச்சர்யமான விஷயங்களையும் சேர்த்தே சொல்லுங்க:P)

இவரின் பதிவில் எந்தக் கட்டுரையை குறிப்பிடுவதுன்னு புரியலை. எல்லாமே அருமை. ஒன்றுக்கொன்று தொடர்புடைய தொடர் கட்டுரைகள்.
நேரடியாக ஒரு கொள்கையை முக்கியத்துவமாய் சொல்லாமல், மற்ற விஞ்ஞானிகளின் மாற்றுக்கொள்கைகளையும் விளக்கி,அவற்றில் உள்ள நிறை குறைகளையும் அலசி,முடிவில் எந்த கொள்கை பெருமளவில் எற்றுக்கொள்ளப் பட்டதுன்னு பொருத்தமான படங்களுடன் இவர் சொல்லும் விதமே தனி.

அறிவியல் மட்டுமில்லாது,கதை கவிதை,கட்டுரைகள்ன்னு கலக்குகிறார். திண்ணை,அன்புடன்,நதியலை.பதிவுகள் என எல்லாவற்றிலும் பங்கேற்கிறார்.இவரது அறிவியல் சேவையை பற்றி பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.எந்த சுட்டியை கொடுப்பதுன்னு யோசிக்காததால் பொதுவா கண்ணில் பட்டதை சாம்பிளாய் கொடுத்திருக்கிறேன்.அறிவியல் ஆர்வம் உள்ளவங்க. அவரோட பதிவின் ஆரம்பத்துல உள்ள இடுகையிலருந்து துவங்கினா பொருத்தமா இருக்கும்.


பிரமாண்ட அகிலம்

ஐன்ஸ்டீனின் கொள்கை


அணுக்கழிவுகள் மேலாண்மை


புவியில் விழும் அகிலக் கற்கள்



அடுத்த தலைமுறை மனிதன் வாழ தேர்ந்தெடுக்க முயலும் செவ்வாய் கோள்


காஸ்மோஸ்


விஞ்ஞானி ஜெயபாரதன் ஐயா அவர்கள் தன்னுடைய எல்லா பதிவுகளையும் புத்தகமாக வெளியிட்டால், வலை வாய்ப்பு இல்லாத பலரும், படித்து பயனடைய ஏதுவாக அமையும் :).

கைகால்கள் முடமாய்,வாய் பேச இயலாமல் உடலலவில் எந்த செயலையும் செய்ய இயலாமல் யாராவது இருந்தால் அவரை நாம் என்னவென்று சொல்லுவோம்?. இதோ ஒருவர் அப்படி. ஆனால் உலகின் மாமனிதராய் அவர் உயர ,இந்த குறைகள் அவரை தடை செய்ய முடியவில்லை.

ஆம் ... டாட்வின்,ஜன்ஸ்டின் போன்ற விஞ்ஞான மாமேதைகளுடன் ஒப்பிட தக்க,நம் வாழும்காலத்திலேயே உள்ள அறிவியல் மாமேதை ஸ்டீவன் ஹங்கிஸ் அவர்களை பற்றி ஜெயபாரதன் ஐயா தனது தனி நடையில் , திண்ணைக்கு எழுதிய ஆவணம் இது.

பிரபஞ்ச விஞ்ஞான மேதை ஸ்டிவன் ஹங்கிஸ் . இதைப்போன்ற கட்டுரைகளை ,இந்திய அரசு மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொண்டால், வாழும் உதாரணமாய் மிளிரும் ஸ்டீவன் ஹங்கிஸ் அவர்களைப் பார்த்து, தன்னம்பிக்கையை மாணவர்கள் வளர்த்துகொள்ள பேருதவியாய் இருக்குமில்லையா? முயற்சி எடுக்குமா அரசு?


............


தான் படிக்கும் விஞ்ஞான செய்திக்குறிப்புக்களை ,தமிழில் வழங்கும் சேவையை செய்து வருகிறார் விஞ்ஞானக் குருவிகள்.ஃபேண்டசி சையன்ஸ்(அதாவது இன்னும் நிருபிக்கப்படாத ,ஆய்வு நிலையிலேயே உள்ள விஞ்ஞான கொள்கைகள்) பற்றிய செய்திகளும் இவரது பதிவில் காணலாம். ஃபேன்டசி சையன்ஸ்ன்னா சிரிக்கப்டாது:P மனிதன் வானத்துல பறக்க முடியும்ன்னு ரைட் சகோதரர்கள் சொன்னபோது கூட மத்தவங்களுக்கு சிரிப்பாத்தான் இருந்திருக்கும். கற்பனை எல்லைகளை தாண்டி,முடியாது என்பவைகளும் ஒரு சந்தர்ப்பத்தில் சாத்தியப்படக்கூடியவையே என வரலாறு நமக்கு கொடுத்திருக்கும் பாடம். அதனால ஜாலியா படியுங்க.,புதிய ஆய்வுகளும்,அவற்றின் தொடக்க வெற்றிகளையும்,எதிர்கால எதிர்பார்ப்புகளும் பற்றி நிறைய செய்திகளை பார்க்கலாம்.,


விஞ்ஞானக் குருவிகள்


இவர்கள் இருவரும் விஞ்ஞானத்துக்கென்றே பதிவுகளை தனியா வைச்சிருக்காங்க:) அதனால தான் நிரந்தர சுட்டியா தந்துட்டேன்:).உங்க அறிவுத்தேடலுல இவற்றையும் சேர்த்துக்கோங்க:)


என்றும் அன்புடன்
உங்கள் ரசிகன்
மேலும் வாசிக்க...

Friday, April 18, 2008

வலையுலகில் அ(ட)ப்பாவி சிறுமிகளின் அட்டகாசங்கள்:P

குறும்புக்கார சிறுமிகளுக்கெல்லாம் வீட்டுல கணிணி வாங்கிக்கொடுத்துட்டு கண்டுக்காம விட்டாலும் விட்டுட்டாங்க,வலையுலகத்துல வந்து,இவங்க அடிக்கற லூட்டி தாங்க முடியலைப்பா...இவங்களைப் பத்தி பயோடேட்டா பார்ப்போமா?


அ(ட)ப்பாவி சிறுமிகளில் ரொம்ப சின்னவர்.ஒரிஜினல் மலேஷியா மாரியாத்தா என்பதை தனிப்பதிவு போட்டு நிருபித்தவர்.பேச்சில் கூட சார்மிங்ம்பாங்களே,அப்படி ஒரு குழந்தை.ஓவரா ஓட்டினா நான் அழுதுருவேன்னு சொல்லும் இவர்,மூடு வந்துவிட்டால்,கும்மியில் மத்தவங்களை அழ வைத்துவிடுவார்.அதென்னமோ இவர் கலந்துக்கொள்ளும் குருப் சாட்டிலெல்லாம் எல்லாருமே இவரையே குறிவைத்து வம்புக்கு இழுக்கிறார்கள் என்பது இதுவரை இவருக்கே புரியாத புதிர்.


இவரது கும்மியை கட்டுப்படுத்த அவரது பள்ளிக்கூடமே நேரங்கெட்ட நேரங்களில் காலேஜ் வைச்சாலும் (பள்ளிக்கூடத்துல காலேஜா?ன்னெல்லாம் கேக்கப்டாது ஆமா)அங்கே போயும் கதை எழுதுவார். சீரியஸ்ஸான சமயங்களில் ,மிக தெளிவாக யோசிப்பார் என்னோட இந்த குட்டி வயசு ஃபிரண்டு:)

பள்ளிக்க்கூடத்தில் ஒழுங்காய் படிக்கும் மற்ற”அப்பாவி”சிறுமிகளுக்கு, ”அடப்பாவி”சிறுமியாக மாற டிரைனிங் கொடுத்து தனக்கு அணி சேர்க்கிறார் இந்த பதிவில்,. இவரது கிளாஸில் தூங்குவது எப்படி? படிச்சு பாருங்க.



தன் அண்ணன் பசங்களுக்கு ,இவர் அம்மா சப்போட் பண்ணதை பொறுத்துக்க முடியாமல் பாட்டியாகிய அம்மான்னு பழிவாங்கிய பதிவு

உண்மையிலேயே தனக்கு வயசாகிருச்சா?ன்னு ஃபீல் பண்ணி எழுதிய கொசுவத்தி ஃபிளாஷ்பேக் பதிவு.
தீபாவளி(லி)


தான்தான் ஒரிஜினல் மலேஷியா மாரியாத்தா என்பதை ஆதாரங்களுடன் நிருபித்த பதிவு . ஃமைபிரண்டு என்னும் போலி


கவிதையையும் விட்டு வைக்க வில்லை நம்ம துர்கா.
மக்கள்ஸ் இதைப்படிச்சிப் பாருங்க இதை எழுதியவரை அப்பாவின்னா சொல்லுவிங்க???
கவிதை என்னும்



கதைன்னு யோசிக்க ஆரம்பிச்சா,அருவியா கற்பனை வழியும் இவருக்கு.அதை அப்படியே நாலு பக்கெட் புடிச்சி ஒரு பதிவாக்கிடுவார்.இவரது காதல் கதை வர்ணனைகளைப் படித்துப்பாருங்களேன்.எம்புட்டு ரசிக்கும்வண்ணம் எழுதியிருக்கிறார்ன்னு.
இது காதல் செய்யும் நேரம்

கதையின் 7 பாகங்களின் லிங்கும் இதில் உண்டு.சுவாரஸ்யத்திற்க்கு முதல்பாகத்திலிருந்து படியுங்கள்.






ஃமைபிரண்டு எனப்படும் இந்த குழந்தைதான் பல பசங்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கிட்ட புண்ணியவதி.இவரது சித்து புராணத்தை கேட்டாலே கோவம் கோவமாக வரும். அப்படியென்ன கிழிச்சிப்புட்டான் அந்த சொங்கி பையன்ன்னு, எந்தனை முறை சொன்னாலும் கேக்கறதில்லை.பதிவுல ,சாட்டிங்குல கூட அந்த சோவைப்புட்டா பையன் போட்டோ.கடுப்பாகி கேட்டா, சிரிப்புத்தான்.இந்த பதிவுல பாருங்க .இதுல ”சிச்சுவேஷன்”ங்கர வார்த்தையைக்கூட ”சித்து”வேஷன்னு எழுதற அளவு இருந்த இவர்,இந்த பதிவுல சித்துவுக்கு முதல் இடம் கொடுக்காம, ரெண்டாவது இடம் கொடுத்திருக்கறது தான் ரொம்ப மகிழ்ச்சியான விஷயம்,


கொஞ்ச நாளா புள்ளைக்கு ஞானம் வந்து ஏதோ குழந்தைகள் படமாக போட்டு பரிகாரம் தேடிக்கொள்கிறார்.(இந்த ஞானத்துக்கு காரணமான புண்ணியவான் யாராயிருந்தாலும் ,நன்றிகள்: ).தனது சித்து புராண பதிவுகளுக்கு நடுவே நல்ல கதைகளையும் வழங்குகிறார்.


தேன்கிண்ணத்தில் பாடல்கள்,ப(பாப்)பா சங்கங்கத்தில் கும்மி என எப்படிதான் இம்புட்டு நேரம் கிடைக்குதுன்னு தெரியலை.டசன் கணக்குல வலைப்பூக்களை வைத்துள்ளார். ஆபிஸ்ல ‘நீ கும்மி ஸ்டெயிலுல வேலை செஞ்சு ஒழுங்கா இருக்கறவங்களை கெடுக்காம எப்படியாவது போ’ன்னு தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களான்னு தெரியலை,

சாதாரணமா பேசினால்கூட நிமிஷத்துக்கு ஒரு ஆப்பு வைக்கறதை தனது தலையாய கடமையாக வைத்துள்ளார்.
இப்படிப்பட்ட எங்க ஃமைபிரண்டுக்கே ஆப்பு வைச்ச சீனாகார ஹோட்டல் பத்தி பாருங்களேன்.,

ஏப்ரல் 1ம் தேதி தனக்கு போலி கல்யாண இன்விட்டேஷனை அனுப்பி, எல்லாரையும் ஏமாற்றுகிறேன்ங்கற சாக்குல அப்பா அம்மாவுக்கு மறைமுகமாக,லேட்டாக்காதிங்கன்னு மிரட்டல் சிக்னல் கொடுத்தார்.

முள்ளை முள்ளால் எடுப்பது போல ,இவரது லொள்ளுகளால் கோபப் படறவங்களையும் ,இன்னொரு லொள்ளு செஞ்சு சிரிக்க வைச்சிருவார்.
தன்னைப்பற்றி இவரே சொல்லிக்கிட்ட 5 விஷயங்கள்


அன்பர் தின வாழ்த்துக்களுக்கு இவர் புலம்புறத கேளுங்க


ஆயிரம் குறும்புகள் இருந்தாலும் மைபிரண்டுங்கர பேருக்கு ஏத்த மாதிரி எல்லாருக்கும் தோழியாக இருப்பதே இவரது சிறப்பு. வாழ்த்த வயதில்லை.. பாராட்டுகிறேன்.( என்னது? வணங்குறேன்னு சொல்லனுமா? ஆசை தோசை அப்பளம் வடை:P)






அதென்னமோ தெரியலை,அப்பாவி சிறுமிகளுக்கும் மலேஷியா/சிங்கைக்கும் உள்ள ஒரு தொடர்பு.இவரும் சிங்கை சிறுமிதான்.தான் ஜிம்முக்கு போவதை சைக்கிள் கேப்புல சொல்லி எல்லா சின்னப் பசங்களையும் மிரட்டுற இவர் தமிழ் குழுமங்களில் கலக்குகிறார்.அருமையா கவிதைகளும் எழுதிக் குவிக்கிறார்.

டும் டும் டும்


ஏப்ரல் 1ம் தேதி ஏமாந்தவங்க தலையில மிளகாய் அரைச்சதை சொல்லி சந்தோஷப் படுகிறார்.

நான் அடித்த அட்டகாசங்கள்


தேநீர் வித் வைர முத்து –காமெடிஸ்பெஷல் பாருங்க.



பரிட்சை சமயத்தில் கடுப்பாகி “எவண்டா இந்த பரிட்சைய கண்டுபுடிச்சான்?” என பொங்கும் வீராங்கனை. (இது என்னோட பேவரைட், காலேஜ் படிக்கும்போது நானும் இப்டியெல்லாம் புலம்பியதுண்டு:P)

எவண்டா அது?


புள்ளைக்கு இன்னிக்கும் பரிட்சையாம்ல்ல ,எழுதிட்டு வந்து இன்னொரு கலக்கல் புலம்பல் பதிவு போடுவாரு பாருங்க:P.
மேலும் வாசிக்க...

Wednesday, April 16, 2008

கொஞ்சம் கவிதாயினிகள்,கொஞ்சம் கவிஞர்கள் & கொஞ்சும் கவிதைகள்.

ஆரம்பத்தில் ஹைக்கூ டைப் கவிதைகள் தான் என்னைக் கவருபவையாக இருந்தன.பெரும்பாலும் காதல் கவிதைகள் படிக்க/உணர எளிமையாக இருக்கும்.


கவிஞர் நவின்பிரகாஷ் கவிதைகளை படித்த போது ,உரையாடல் போன்ற எளிமையான வரிகளில் காதல் ரசம் சொட்ட சொட்ட கொடுத்திருப்பார்.ரொம்ப கஞ்சத்தனமா(சிக்கனம்?), மாசத்துக்கு ஒரு கவிதை தான் எழுதுவார்:P. காதலன் காதலியின் வினாவையும் அதற்கான தனது விடையையும் சொல்லும் ரீதியிலான இந்த கவிதைகளை படித்தால் யாருக்கும் காதலிக்கும் ஆசை வரும்ன்னு தோனுது,.:P.

(கல்யாணம் ஆனவங்க –நிச்சயம் படிக்கனும்.மனைவியை எப்படி காதலிக்கறதுன்னு தெரிஞ்சுக்க..).சாம்பிளுக்கு மூனு கொடுத்திருக்கேன்.
எல்லாத்தையுமே படியுங்க:))

நட்போடு காதலித்து

கொஞ்சம் நானும் கொஞ்சம் நீயும்

கொஞ்சுவது சினம்


முன்பெல்லாம் , ஆழமான வார்த்தைகளால் வீரியமான கருத்துக்களை சொல்ல முயலும் கவிதைகளின் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன்.
அதுலயும் அழுவாச்சி கவிதைகள்ன்னா ரொம்ப தூரம் ஓடியிருப்பேன்.
கவிதைகளின் வார்த்தை விளையாட்டுக்கள், நமது வலது மூளையின் ஹெமிஸ்பியரின் ஆதிக்கம் என்பேன். ஆனாலும் பாரதி,சித்தர் பாடல்கள்,வைரமுத்துவின் கவிதைகள் போன்றவை ஏனோ எனக்கு பிடித்துப்போனது. வார்த்தை அலங்காரங்களைத்தாண்டி சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள் இடம்பெற்றதாலோன்னு தோனுது.





பலகாலமாக நான் அனுபவிக்கத் தவறிய ஆழமான கவிதை வகையை எனக்கு அறிமுகப் படுத்தியது கவிஞர் வேதாவின் கவிதைகள்ன்னு சொல்லலாம்
கவிஞர் வேதாவின் “தேடத்தான் முயல்கிறேன்

அதைப் படிக்கும்போது விசுவின் ஸ்டெயிலுல தான் ஆரம்பத்துல தோனுச்சு.ஆனா ரெண்டு மூனு முறை யோசிச்சப்பத்தான் அந்த கவிதையில ஏதோ ஒருக்கறதா தோனுச்சு.(எழுதனவங்களுக்கே தோனாத மீனிங்கெல்லாம் படிக்கறவங்களுக்குத்தானே தோனும்.:)))) .(சுத்தம். மூனு முறை யோசிப்பப்பறம் தான் ,டவுட்டே வந்துச்சா?ன்னு கேக்கறது எனக்கு புரியுது.).அவரோட பல கவிதைகள்ல ஆழமான உணர்வுகள் புதைந்திருகிறதா உணர முடியுது.

புரிதல் என்பது


சீக்கிரம் கேட்டுவிடு எனக்கான கேள்வியை



கவிதைகளின் ஒருவிதம், மார்டன் ஆர்ட்ஸ் போல சிந்தனையை தூண்ட ஒரு ஊக்கியாக செயல்படனும்.ஆனா சிந்தனையின் திசையை கட்டுப்படுத்தாம படிக்கறவங்க சுதந்திரமா சிந்திக்க வாய்ப்புக்கள் நிறைந்திருக்கனும்.
அதுக்கப்பறம் இப்டிப்பட்ட இலைமறை குழப்ப கவிதைகளை தேடிப்படிக்கும் அளவு கொஞ்சம் ”சீரியஸ் டைப்” கவிதைகளின் ரசிகனானேன்.
அப்போது ஆரம்பித்த அந்த கவிதைப் பயணத்தில் இன்று பல பல கவிஞர்/கவிதாயினிகளின் படைப்புக்களுடன் சுவாசிக்கிறேன்.







கவிதாயினி காயத்ரி.இவரை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை..., என்றோ இவரது நகைச்சுவை பதிவை படிச்சுப்புட்டு விழுந்து விழுந்து சிரித்தது ஞாபகம் இருக்கு.அப்புறம் இன்னொரு முறை இவங்க சீரியஸ் பதிவை படிச்சுப்பார்த்தா..

பெரிய பெரிய எழுத்தாளர்களின் கைத்தேர்ந்த எழுத்துக்களை படிக்கும் ஒரு உணர்வு,.எண்ணங்களை எழுத்துக்களாய் வடித்தெடுக்கும் கலை இவருக்கு இயல்பாகவே வருகிறது.சாதாரண விஷயங்களிலும் சுலபமாய் நகைச்சுவையை பொருத்தி ரசனையாய் சொல்ல வருகிறது.

தற்போது பின்னூட்டதிற்கு பதில் சொல்லா விரதம் இருந்து வருகிறார். படத்துல கமலை நீங்க நல்லவரா? கெட்டவரா?ன்னு கேட்ட மாதிரி இவர் காமெடியா? சீரியஸ்ஸான்னு யோசிச்சிக்கிட்டிருக்கும்போதே.. சின்ன சின்ன கவிதைகளில் ஆழமான அர்த்தங்கள் கொடுத்து மிரட்டுகிறார்:P .கோலம் போடும்போது வேணுமின்னே ஒரு புள்ளி எக்ஸ்ராவா வைச்சுட்டு ,எப்டி ஃபீல் பண்ணறாங்கன்னு பாருங்களேன்:P

புள்ளி

பிய்த்தெரியப்படும் இதழ்கள்

வனம்

இதுல சொற்களை மனங்களுக்கான விதைகளாய் சொல்லற கற்பனை ஏதோ என்னைக் கவர்ந்தது,.என்னா ஒரு இமாஜினேஷன்,ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ?








நம்ம டிரிம்ஸ் மாம்ஸ். இவரின் தொகுப்புக் கவிதைகள் நமக்குள் கனவுகளை விதைப்பது என்னவோ உண்மை.சில சமயம் அவர் தன் நிஜ வாழ்க்கைக்கு பிளாக் விடு தூதுவாக கவிதையை யூஸ் பண்ணுகிறாரான்னு கூட தோனும். அவ்வளவு ரசனையா கவிதை சொல்லுவார்.திடீருன்னு ஏதாவது தத்துவத்தை எடுத்துக்கிட்டு ஆராய்ச்சி பதிவு செய்ய கிளம்பிடுவார்.சின்ன வயதுதான்னாலும்,தெளிவான சிந்தனை.நட்பான குணம் உடையவர்.திகட்ட திகட்ட கவிதைத் தொடர்களை எழுதி கலக்குகிறார்.

இவரது மொத்தம் 7 தேவதைக் கவிதைத் தொடர்களின் லிங்க் இந்த சுட்டியின் கடைசியில் உள்ளது.படித்து ரசியுங்கள்.
தேவதைப் பிரிவு






தமிழ்நதி அக்காவின் கவிதைகள் ஒரு பல்சுவை எனலாம்,சில நவீனத்துவ வகையைச் சேர்ந்தவை. சமுகம்,காதல்,யதார்த்தம் என எதையும் விட்டு வைப்பதில்லை. சமிபத்தில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட இவரது பேட்டியின் தன்னிலை விளக்கத்தையும் இவர் பதிவில் வெளியிடவேண்டிய சூழ்நிலையை பத்திரிக்கை வியாபார யுத்திகள் உருவாக்கியதை நினைத்து வருந்த வேண்டியுள்ளது.இவரது தீபாவளி(லி) கவிதையைக் பாருங்களேன்J.





நம்ம செல்வி ஷங்கர் அக்கா.. எளிய சுருக்கமான அதே சமயம் தெளிவான விளக்கத்தோடு திருக்குறள் பொழிப்புறை எழுதியிருக்காங்க. தண்ணீரால் வேறுபட்டு கண்ணீரை பெருக்கிக்கொண்ட சமுதாயங்களுக்காக, வன்முறை இல்லாத அழகான அறிவுறையை பாருங்க இந்த கவிதையில்,இதை யாராவது கன்னடத்தில் மொழிப்பெயர்த்து வெளியிடுவார்களா?
ஈரத்தோடு இணைந்திடுவோம்









எல்லா நண்பர்களின் பிறந்தநாளுக்கும் வாழ்த்து பதிவு போட்டு, அவங்களை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி,சந்தோஷப்படும் நம்ம தோழி ஜி3 .நட்புக்கு வாழ்த்து சொல்லவே வலைப்பதிவு வைச்சிருக்கும் ஜி3க்குள்ளே ஒரு கவிதாயினி தூங்கிக்கிட்டிருக்கான்னு தெரிஞ்ச போது ஆச்சர்யப்பட்டு போனேன்.ஜி3யின் சின்ன சின்ன கவிதைகளாலான தொகுப்பை பார்க்க நேர்ந்த போது நிஜமாகவே வியப்பு.

நேரமில்லாமையாலோ இல்லை வேறு காரணங்களாலோ ஜி3 தனக்குள்ள இருக்குற அந்த கவிதாயினிய முழுமையா எழுப்பி விடாம,இன்னும் தூங்க விட்டுக்கிட்டிருக்கறதுக்கு (ஜி3க்கு பொறாமை.. பொறாமை..) நமது பலமான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வோம்.வாங்க..:)
அவரது இந்த கவிதையைப் படித்துப் பாருங்களேன்.

காதல் கவிதைகள்








கவிஞர் சகாராவின் கவிதைகள் பலசமயங்களுல சோகங்களை தன்னுள் அடக்கியவாறு இருந்தாலும். காதலைத் தவிர சமுகப் பிரச்சனைகளை / அவலங்களை கண்டு வருந்தும் மனதின் வடிகாலாய் கவிதையை பயன்படுத்துவது என்னைக் ரொம்ப கவர்ந்தது..சராசரியாய் நான் தினமும் காணும் வறுமையின் பல வடிவங்கள் ,இவரது பார்வையில் மட்டும் ஏன் இப்படி ஆழமாக கவனிக்கத் தக்கவையாக இருக்கின்றன?. இவற்றை கண்டும்,நாம் இதை ஒரு இயல்பான அன்றாட காட்சியாக ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோமா? என நான் பலமுறை யோசித்திருக்கிறேன்.
இப்போது கவிதைகளை மட்டுமில்லாது தனது எண்ணங்களையும் தனிப் பதிவாக துவங்கி சமுக அவலங்களைச் சாடுவது மட்டுமில்லாமல் மனித உறவுகள்(human relationships)ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.

கவிதை நீ நான்...

காதல் காதல்








கவிஞர் அருட்பெருங்கோ.இவரது எழுத்துக்கள் சமீபத்தில்தான் எனக்கு அறிமுகம் ஆனாலும்,கவிதைகள் ஆர்வமூட்டுபவையாக இருக்கின்றன.வரிகள் காதல் தேன் தடவியவையாய் இருக்கின்றன.இவரது காதல் வாரம் தொடரில்,நீங்களே ஒரு சாம்பிள் பாருங்களேன்.

காதலும் கடைசியுமாய்

சிறப்புக்கவிதை-பிப்ரவரி 14









நம்ம இம்சை அரசி. வலை(விளை)யாடிக்கொண்டிருந்த போது இவருடைய இந்த கவிதையைப் படிக்க நேர்ந்தது. அடடா.. எம்புட்டு சிம்பிள் & டச்சிங்ன்னு தோனுச்சு. படிச்சுப் பாருங்களேன்.
காதலர் தினம்

இம்சை அரசியின் பதிவுல,கதைகளை எந்த சூழ்நிலையிலும் நம்பி படிக்கலாம்.கதை முடிவில் அழுவாச்சியாய் ஏதும் இருக்காது என்பதால்.
எல்லா கதைகளிலும் நல்ல முடிவை கொடுக்கும் இவரது பாஸிடிவ் திங்கிங் பாராட்டுக்குரியது.

கண்மணி இதழில் இவர் 2 நாவல்கள் எழுதியிருக்கிறார்ன்னு அறிந்ததில் வியப்பு இல்லை.இவரது எழுத்துக்களே அவரை நிருபிக்கின்றன. இம்சையின் இம்சையை வர்ர, மே மாசத்துலருந்து தாங்கிக்க ஒருத்தர் மாட்டிக்கிட்டாருங்கோ:P. ஆமாம் நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறிவிட்டது.
மாப்பிள்ளை,மணப்பெண்ணின் இம்சைகளுக்கு சரண்டராகிவிட்டதா மேலதிக தகவல் வந்துள்ளது.தினமும் எழுந்ததும் மணப்பெண்ணின் பிளாகில் ரெண்டு பதிவுகளை படிச்சுட்டுதான் பல்விளக்கவே போறாராம்ல்ல...(காரணம்-மாப்பிள்ளை தன்னோட பதிவெல்லாம் படிச்சுட்டாரான்னு டெஸ்ட் பண்ண,பதிவுலருந்து கேள்விகள் கேட்கப்படும்ன்னு மணப்பெண் போட்ட கட்டளை தானாம்).

திருமண நாளை எதிர்நோக்கி தினமும் ஆபிஸ்ல கனவுல டூயட் பாடிக்கிட்டிருக்கற தோழி இம்சை அரசி என்கிற நம்ம ஜெயந்திக்கு நம்ம எல்லாருடைய சார்புலயும் வாழ்த்துக்களை சொல்லிக்குவோம்.:)










கவிஞர் எழில்பாரதி,இயல்பா அன்றாடம் நிகழும் நிகழ்ச்சிகளை,ரசனையா பதித்துக்கொண்டிருக்கும் இவர் ஒரு கதாசிரியரும் கூட,அன்றாடம் வாழ்வில் நாம் காணும் சராசரி விஷயங்கள் இவரது கதைகளின் கருவாகும்போது ,அதன் பார்வையே தனியாகிவிடுகிறது.அவ்வப்போது இவரிடம் வலைத்தோட்டத்தில் கவிதைப் பூக்களும் பூக்கின்றன.பாருங்களேன் இவரது கவிதைகள் எவ்வளவு அருமையா இருக்குன்னு.
குறும்புகள் + வெட்கங்கள் =காதல்



இன்னும் பிற்கால நவினத்துவம்,முற்கால நவினத்துவம்,நடுக்கால நவினத்துவம்,mixed&fractionன்னு நெறய ரேஞ்சுல கவிஞர்கள்/கவிதாயினிகள் படைப்புக்களை ரசித்திருந்தாலும்.பட்டென்று நினைவிற்கு வந்த,பொதுவா எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய படைப்புக்கள் சிலவற்றை உங்களுக்கு வழிமொழிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

எனது நினைவிற்க்கு வராத/என் பார்வை படாத,நீங்க ரசித்த கவிதைதோட்டங்களை அறிந்திருப்பீர்களானால், கொஞ்சம் அறிமுகப்படுத்துங்களேன்:)

என்றும் அன்புடன்
உங்கள் ரசிகன்.
மேலும் வாசிக்க...

இன்று குடும்பஸ்தராகும் குசும்பரை வாழ்த்தலாம் வாங்க...






நண்பர்களே,தனது குசும்புகளால் வலைப்பதிவு மக்களின் அன்பை பெற்றவர் நம்ம R. சரவணவேல் (எ) குசும்பன் மாம்ஸ். யார் மனதையும் புண்படுத்தாது எல்லோரும் ரசிக்கும்படியாக கலாய்ப்பது இவரது தனிச்சிறப்பு.





இப்படி ஜாலியா நடனமாடிக்கிட்டிருந்தவர், வீட்டில பெரியவங்க வழிகாட்டுதலில் வாழ்க்கையின் நியதிகளுக்கேற்ப இல்லற வாழ்வில் இன்று(16-04-08) நல்லநேரம் காலை (இந்திய நேரம் ) 9-30 லிருந்து 10-30 மணிக்குள் ,பெரியவர்கள்,உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லாரின் முன்னினையில் திருவளர் செல்வி R. மஞ்சுவிடம் சரண்டர் ஆகிறார்.

வேலைக் காரணங்களால,மாம்ஸ்சோட கல்யாணத்துக்கு இந்தியா போக முடியலைனாலும் ,வாழ்த்து சொல்லி ஆறுதல் அடைஞ்சுக்குவோம் வாங்க..:))

அப்புறம் ஒரு மேட்டர். ஆளுக்கு கல்யாணம் முடிஞ்சதும்,போன்ல நாம சொல்ல வாழ்த்துக்களுக்கு பதில் சொல்லவே தம்பதிகளுக்கு நேரம் சரியா இருக்கனும்.என்ன?.அவர் அனுப்பின கல்யாண பத்திரிக்கைய அவர் சார்பா வெளியிடறேன்.அதுலயே அவரது போன் நம்பரும் இருக்கு.கும்மிய இங்க ஸ்டார் பண்ணுங்க.. வாழ்த்துக்களை அங்க சொல்லிருங்க.. :)))


Love fills a moment, A moment fills a lifetime

A life time begins eternity and our Eternity begins here

You are a part of our lives

Please be a part of our celebration of life and commitment.

Together with our parents, we

R. Saravanavel

and

R. Manju

Request the pleasure of your company at our marriage on

Wednesday, the 16th April 2008

Date & Timing : 16-04-2008, 9.00 am to 10.30 am

Place: A.K.M. Kasinathan Thirumana Arangam,

South Street,Thiruvarur.

Bus Stop: Municipality Stopping.

India Mobile Number: 9486614890



அப்படியே அவரது பதிவர்களைப் பற்றிய கிசுகிசு பதிவுல,சைக்கிள் கேப்புல, எம்புட்டு சூப்பரா,தன்னோட கல்யாண ஏற்பாடுகளைப் பற்றியும் மறைமுகமா (???) கிசு கிசு நமக்கெல்லாம் சொல்லறாரு பாருங்க:P.


கல்யாண அழைப்பு வைச்சு ஊருக்கு போற அவசர நேரத்துலயும் அவரது குசும்பு பாருங்களேன்:))))


கார்டூன் படங்கள் இவர் கைப்பட்டா ,எவ்ளோ நகைச்சுவையா மாறுதுன்னு பாத்து ரசியுங்களேன்.


கார்டூன் ஸ்பெசல் -1

கார்டூன் ஸ்பெசல் -2

கார்டூன் ஸ்பெசல் -3

கார்டூன் ஸ்பெசல் -4

கார்டூன் ஸ்பெசல் -5






தமிழ் வலையுலக நண்பர்கள் சார்பா.. நம்ம வலைகுடும்ப குசும்பர் மாம்சுக்கும் அவரது ஹோம்மினிஸ்டராகப் போற மஞ்சுவுக்கும்

னி திரு ல்வாழ்த்துக்ள்.



அன்புடன் ரசிகன்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது