07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 16, 2008

கொஞ்சம் கவிதாயினிகள்,கொஞ்சம் கவிஞர்கள் & கொஞ்சும் கவிதைகள்.

ஆரம்பத்தில் ஹைக்கூ டைப் கவிதைகள் தான் என்னைக் கவருபவையாக இருந்தன.பெரும்பாலும் காதல் கவிதைகள் படிக்க/உணர எளிமையாக இருக்கும்.


கவிஞர் நவின்பிரகாஷ் கவிதைகளை படித்த போது ,உரையாடல் போன்ற எளிமையான வரிகளில் காதல் ரசம் சொட்ட சொட்ட கொடுத்திருப்பார்.ரொம்ப கஞ்சத்தனமா(சிக்கனம்?), மாசத்துக்கு ஒரு கவிதை தான் எழுதுவார்:P. காதலன் காதலியின் வினாவையும் அதற்கான தனது விடையையும் சொல்லும் ரீதியிலான இந்த கவிதைகளை படித்தால் யாருக்கும் காதலிக்கும் ஆசை வரும்ன்னு தோனுது,.:P.

(கல்யாணம் ஆனவங்க –நிச்சயம் படிக்கனும்.மனைவியை எப்படி காதலிக்கறதுன்னு தெரிஞ்சுக்க..).சாம்பிளுக்கு மூனு கொடுத்திருக்கேன்.
எல்லாத்தையுமே படியுங்க:))

நட்போடு காதலித்து

கொஞ்சம் நானும் கொஞ்சம் நீயும்

கொஞ்சுவது சினம்


முன்பெல்லாம் , ஆழமான வார்த்தைகளால் வீரியமான கருத்துக்களை சொல்ல முயலும் கவிதைகளின் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன்.
அதுலயும் அழுவாச்சி கவிதைகள்ன்னா ரொம்ப தூரம் ஓடியிருப்பேன்.
கவிதைகளின் வார்த்தை விளையாட்டுக்கள், நமது வலது மூளையின் ஹெமிஸ்பியரின் ஆதிக்கம் என்பேன். ஆனாலும் பாரதி,சித்தர் பாடல்கள்,வைரமுத்துவின் கவிதைகள் போன்றவை ஏனோ எனக்கு பிடித்துப்போனது. வார்த்தை அலங்காரங்களைத்தாண்டி சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள் இடம்பெற்றதாலோன்னு தோனுது.





பலகாலமாக நான் அனுபவிக்கத் தவறிய ஆழமான கவிதை வகையை எனக்கு அறிமுகப் படுத்தியது கவிஞர் வேதாவின் கவிதைகள்ன்னு சொல்லலாம்
கவிஞர் வேதாவின் “தேடத்தான் முயல்கிறேன்

அதைப் படிக்கும்போது விசுவின் ஸ்டெயிலுல தான் ஆரம்பத்துல தோனுச்சு.ஆனா ரெண்டு மூனு முறை யோசிச்சப்பத்தான் அந்த கவிதையில ஏதோ ஒருக்கறதா தோனுச்சு.(எழுதனவங்களுக்கே தோனாத மீனிங்கெல்லாம் படிக்கறவங்களுக்குத்தானே தோனும்.:)))) .(சுத்தம். மூனு முறை யோசிப்பப்பறம் தான் ,டவுட்டே வந்துச்சா?ன்னு கேக்கறது எனக்கு புரியுது.).அவரோட பல கவிதைகள்ல ஆழமான உணர்வுகள் புதைந்திருகிறதா உணர முடியுது.

புரிதல் என்பது


சீக்கிரம் கேட்டுவிடு எனக்கான கேள்வியை



கவிதைகளின் ஒருவிதம், மார்டன் ஆர்ட்ஸ் போல சிந்தனையை தூண்ட ஒரு ஊக்கியாக செயல்படனும்.ஆனா சிந்தனையின் திசையை கட்டுப்படுத்தாம படிக்கறவங்க சுதந்திரமா சிந்திக்க வாய்ப்புக்கள் நிறைந்திருக்கனும்.
அதுக்கப்பறம் இப்டிப்பட்ட இலைமறை குழப்ப கவிதைகளை தேடிப்படிக்கும் அளவு கொஞ்சம் ”சீரியஸ் டைப்” கவிதைகளின் ரசிகனானேன்.
அப்போது ஆரம்பித்த அந்த கவிதைப் பயணத்தில் இன்று பல பல கவிஞர்/கவிதாயினிகளின் படைப்புக்களுடன் சுவாசிக்கிறேன்.







கவிதாயினி காயத்ரி.இவரை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை..., என்றோ இவரது நகைச்சுவை பதிவை படிச்சுப்புட்டு விழுந்து விழுந்து சிரித்தது ஞாபகம் இருக்கு.அப்புறம் இன்னொரு முறை இவங்க சீரியஸ் பதிவை படிச்சுப்பார்த்தா..

பெரிய பெரிய எழுத்தாளர்களின் கைத்தேர்ந்த எழுத்துக்களை படிக்கும் ஒரு உணர்வு,.எண்ணங்களை எழுத்துக்களாய் வடித்தெடுக்கும் கலை இவருக்கு இயல்பாகவே வருகிறது.சாதாரண விஷயங்களிலும் சுலபமாய் நகைச்சுவையை பொருத்தி ரசனையாய் சொல்ல வருகிறது.

தற்போது பின்னூட்டதிற்கு பதில் சொல்லா விரதம் இருந்து வருகிறார். படத்துல கமலை நீங்க நல்லவரா? கெட்டவரா?ன்னு கேட்ட மாதிரி இவர் காமெடியா? சீரியஸ்ஸான்னு யோசிச்சிக்கிட்டிருக்கும்போதே.. சின்ன சின்ன கவிதைகளில் ஆழமான அர்த்தங்கள் கொடுத்து மிரட்டுகிறார்:P .கோலம் போடும்போது வேணுமின்னே ஒரு புள்ளி எக்ஸ்ராவா வைச்சுட்டு ,எப்டி ஃபீல் பண்ணறாங்கன்னு பாருங்களேன்:P

புள்ளி

பிய்த்தெரியப்படும் இதழ்கள்

வனம்

இதுல சொற்களை மனங்களுக்கான விதைகளாய் சொல்லற கற்பனை ஏதோ என்னைக் கவர்ந்தது,.என்னா ஒரு இமாஜினேஷன்,ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ?








நம்ம டிரிம்ஸ் மாம்ஸ். இவரின் தொகுப்புக் கவிதைகள் நமக்குள் கனவுகளை விதைப்பது என்னவோ உண்மை.சில சமயம் அவர் தன் நிஜ வாழ்க்கைக்கு பிளாக் விடு தூதுவாக கவிதையை யூஸ் பண்ணுகிறாரான்னு கூட தோனும். அவ்வளவு ரசனையா கவிதை சொல்லுவார்.திடீருன்னு ஏதாவது தத்துவத்தை எடுத்துக்கிட்டு ஆராய்ச்சி பதிவு செய்ய கிளம்பிடுவார்.சின்ன வயதுதான்னாலும்,தெளிவான சிந்தனை.நட்பான குணம் உடையவர்.திகட்ட திகட்ட கவிதைத் தொடர்களை எழுதி கலக்குகிறார்.

இவரது மொத்தம் 7 தேவதைக் கவிதைத் தொடர்களின் லிங்க் இந்த சுட்டியின் கடைசியில் உள்ளது.படித்து ரசியுங்கள்.
தேவதைப் பிரிவு






தமிழ்நதி அக்காவின் கவிதைகள் ஒரு பல்சுவை எனலாம்,சில நவீனத்துவ வகையைச் சேர்ந்தவை. சமுகம்,காதல்,யதார்த்தம் என எதையும் விட்டு வைப்பதில்லை. சமிபத்தில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட இவரது பேட்டியின் தன்னிலை விளக்கத்தையும் இவர் பதிவில் வெளியிடவேண்டிய சூழ்நிலையை பத்திரிக்கை வியாபார யுத்திகள் உருவாக்கியதை நினைத்து வருந்த வேண்டியுள்ளது.இவரது தீபாவளி(லி) கவிதையைக் பாருங்களேன்J.





நம்ம செல்வி ஷங்கர் அக்கா.. எளிய சுருக்கமான அதே சமயம் தெளிவான விளக்கத்தோடு திருக்குறள் பொழிப்புறை எழுதியிருக்காங்க. தண்ணீரால் வேறுபட்டு கண்ணீரை பெருக்கிக்கொண்ட சமுதாயங்களுக்காக, வன்முறை இல்லாத அழகான அறிவுறையை பாருங்க இந்த கவிதையில்,இதை யாராவது கன்னடத்தில் மொழிப்பெயர்த்து வெளியிடுவார்களா?
ஈரத்தோடு இணைந்திடுவோம்









எல்லா நண்பர்களின் பிறந்தநாளுக்கும் வாழ்த்து பதிவு போட்டு, அவங்களை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி,சந்தோஷப்படும் நம்ம தோழி ஜி3 .நட்புக்கு வாழ்த்து சொல்லவே வலைப்பதிவு வைச்சிருக்கும் ஜி3க்குள்ளே ஒரு கவிதாயினி தூங்கிக்கிட்டிருக்கான்னு தெரிஞ்ச போது ஆச்சர்யப்பட்டு போனேன்.ஜி3யின் சின்ன சின்ன கவிதைகளாலான தொகுப்பை பார்க்க நேர்ந்த போது நிஜமாகவே வியப்பு.

நேரமில்லாமையாலோ இல்லை வேறு காரணங்களாலோ ஜி3 தனக்குள்ள இருக்குற அந்த கவிதாயினிய முழுமையா எழுப்பி விடாம,இன்னும் தூங்க விட்டுக்கிட்டிருக்கறதுக்கு (ஜி3க்கு பொறாமை.. பொறாமை..) நமது பலமான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வோம்.வாங்க..:)
அவரது இந்த கவிதையைப் படித்துப் பாருங்களேன்.

காதல் கவிதைகள்








கவிஞர் சகாராவின் கவிதைகள் பலசமயங்களுல சோகங்களை தன்னுள் அடக்கியவாறு இருந்தாலும். காதலைத் தவிர சமுகப் பிரச்சனைகளை / அவலங்களை கண்டு வருந்தும் மனதின் வடிகாலாய் கவிதையை பயன்படுத்துவது என்னைக் ரொம்ப கவர்ந்தது..சராசரியாய் நான் தினமும் காணும் வறுமையின் பல வடிவங்கள் ,இவரது பார்வையில் மட்டும் ஏன் இப்படி ஆழமாக கவனிக்கத் தக்கவையாக இருக்கின்றன?. இவற்றை கண்டும்,நாம் இதை ஒரு இயல்பான அன்றாட காட்சியாக ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோமா? என நான் பலமுறை யோசித்திருக்கிறேன்.
இப்போது கவிதைகளை மட்டுமில்லாது தனது எண்ணங்களையும் தனிப் பதிவாக துவங்கி சமுக அவலங்களைச் சாடுவது மட்டுமில்லாமல் மனித உறவுகள்(human relationships)ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.

கவிதை நீ நான்...

காதல் காதல்








கவிஞர் அருட்பெருங்கோ.இவரது எழுத்துக்கள் சமீபத்தில்தான் எனக்கு அறிமுகம் ஆனாலும்,கவிதைகள் ஆர்வமூட்டுபவையாக இருக்கின்றன.வரிகள் காதல் தேன் தடவியவையாய் இருக்கின்றன.இவரது காதல் வாரம் தொடரில்,நீங்களே ஒரு சாம்பிள் பாருங்களேன்.

காதலும் கடைசியுமாய்

சிறப்புக்கவிதை-பிப்ரவரி 14









நம்ம இம்சை அரசி. வலை(விளை)யாடிக்கொண்டிருந்த போது இவருடைய இந்த கவிதையைப் படிக்க நேர்ந்தது. அடடா.. எம்புட்டு சிம்பிள் & டச்சிங்ன்னு தோனுச்சு. படிச்சுப் பாருங்களேன்.
காதலர் தினம்

இம்சை அரசியின் பதிவுல,கதைகளை எந்த சூழ்நிலையிலும் நம்பி படிக்கலாம்.கதை முடிவில் அழுவாச்சியாய் ஏதும் இருக்காது என்பதால்.
எல்லா கதைகளிலும் நல்ல முடிவை கொடுக்கும் இவரது பாஸிடிவ் திங்கிங் பாராட்டுக்குரியது.

கண்மணி இதழில் இவர் 2 நாவல்கள் எழுதியிருக்கிறார்ன்னு அறிந்ததில் வியப்பு இல்லை.இவரது எழுத்துக்களே அவரை நிருபிக்கின்றன. இம்சையின் இம்சையை வர்ர, மே மாசத்துலருந்து தாங்கிக்க ஒருத்தர் மாட்டிக்கிட்டாருங்கோ:P. ஆமாம் நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறிவிட்டது.
மாப்பிள்ளை,மணப்பெண்ணின் இம்சைகளுக்கு சரண்டராகிவிட்டதா மேலதிக தகவல் வந்துள்ளது.தினமும் எழுந்ததும் மணப்பெண்ணின் பிளாகில் ரெண்டு பதிவுகளை படிச்சுட்டுதான் பல்விளக்கவே போறாராம்ல்ல...(காரணம்-மாப்பிள்ளை தன்னோட பதிவெல்லாம் படிச்சுட்டாரான்னு டெஸ்ட் பண்ண,பதிவுலருந்து கேள்விகள் கேட்கப்படும்ன்னு மணப்பெண் போட்ட கட்டளை தானாம்).

திருமண நாளை எதிர்நோக்கி தினமும் ஆபிஸ்ல கனவுல டூயட் பாடிக்கிட்டிருக்கற தோழி இம்சை அரசி என்கிற நம்ம ஜெயந்திக்கு நம்ம எல்லாருடைய சார்புலயும் வாழ்த்துக்களை சொல்லிக்குவோம்.:)










கவிஞர் எழில்பாரதி,இயல்பா அன்றாடம் நிகழும் நிகழ்ச்சிகளை,ரசனையா பதித்துக்கொண்டிருக்கும் இவர் ஒரு கதாசிரியரும் கூட,அன்றாடம் வாழ்வில் நாம் காணும் சராசரி விஷயங்கள் இவரது கதைகளின் கருவாகும்போது ,அதன் பார்வையே தனியாகிவிடுகிறது.அவ்வப்போது இவரிடம் வலைத்தோட்டத்தில் கவிதைப் பூக்களும் பூக்கின்றன.பாருங்களேன் இவரது கவிதைகள் எவ்வளவு அருமையா இருக்குன்னு.
குறும்புகள் + வெட்கங்கள் =காதல்



இன்னும் பிற்கால நவினத்துவம்,முற்கால நவினத்துவம்,நடுக்கால நவினத்துவம்,mixed&fractionன்னு நெறய ரேஞ்சுல கவிஞர்கள்/கவிதாயினிகள் படைப்புக்களை ரசித்திருந்தாலும்.பட்டென்று நினைவிற்கு வந்த,பொதுவா எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய படைப்புக்கள் சிலவற்றை உங்களுக்கு வழிமொழிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

எனது நினைவிற்க்கு வராத/என் பார்வை படாத,நீங்க ரசித்த கவிதைதோட்டங்களை அறிந்திருப்பீர்களானால், கொஞ்சம் அறிமுகப்படுத்துங்களேன்:)

என்றும் அன்புடன்
உங்கள் ரசிகன்.

56 comments:

  1. ///ஆனாலும் பாரதி,சித்தர் பாடல்கள்,வைரமுத்துவின் கவிதைகள் போன்றவை ஏனோ எனக்கு பிடித்துப்போனது.///


    மாம்ஸ் என்னோட கவிதை பிடிக்குமா உங்களுக்கு? சொல்லவே இல்லை.

    ReplyDelete
  2. நான் தான் பர்ஸ்ட்டா?

    ReplyDelete
  3. ரசிகன்,

    அருமையான பதிவு = அனைத்துச் சுட்டிகளுமே அழகுக் கவிதைகளைச் சுட்டுகின்றன. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. ///cheena (சீனா) said...

    ரசிகன்,

    அருமையான பதிவு = அனைத்துச் சுட்டிகளுமே அழகுக் கவிதைகளைச் சுட்டுகின்றன. பாராட்டுகள். ///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே...
    கடுமையான ஹோம் ஒர்க்கால் அட்டகாசமாக வந்திருக்கிறது...வெல்டன்

    ReplyDelete
  5. //நிஜமா நல்லவன் said...

    ///ஆனாலும் பாரதி,சித்தர் பாடல்கள்,வைரமுத்துவின் கவிதைகள் போன்றவை ஏனோ எனக்கு பிடித்துப்போனது.///


    மாம்ஸ் என்னோட கவிதை பிடிக்குமா உங்களுக்கு? சொல்லவே இல்லை.//

    ஆஹா... மாம்ஸ் ,சைக்கிள் கேப்புல ஹெலிக்காப்டரே ஓட்டறிங்களே :)))))

    ReplyDelete
  6. //நிஜமா நல்லவன் said...

    நான் தான் பர்ஸ்ட்டா?//

    யெஸ்சு,புடிங்க ஒரு பார்சல் . முதல் வருகைக்கு நன்றிகள்:)

    ReplyDelete
  7. //cheena (சீனா) said...

    ரசிகன்,

    அருமையான பதிவு = அனைத்துச் சுட்டிகளுமே அழகுக் கவிதைகளைச் சுட்டுகின்றன. பாராட்டுகள்.//

    நன்றிகள் சீனா ஐயா:)

    ReplyDelete
  8. // Dreamzz said...

    ahaaaa aahaaa! :)//

    நன்றி நன்றி:D

    ReplyDelete
  9. // தமிழ் பிரியன் said...

    ///cheena (சீனா) said...

    ரசிகன்,

    அருமையான பதிவு = அனைத்துச் சுட்டிகளுமே அழகுக் கவிதைகளைச் சுட்டுகின்றன. பாராட்டுகள். ///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே...
    கடுமையான ஹோம் ஒர்க்கால் அட்டகாசமாக வந்திருக்கிறது...வெல்டன்//

    ரொம்ப நன்றிகள் நண்பரே.வீட்டுப்பாடம்ல்லாம் செய்ய டைம் கிடைக்கலை.இன்ஸ்டண்டா ஞாபகம் இருக்குற கவிதை பதிவுகளை கொடுக்க முடிஞ்சுது.உங்களுக்கும் பிடிச்சிருந்தா எனக்கு சந்தோஷமே. நன்றிகள்:)

    ReplyDelete
  10. மாம்ஸ் ஒண்ணா ரெண்டா தாங்க முடியல. ஒழுங்கா நான் சொன்னதெல்லாம் செய்ங்க முதல்ல. இல்லன்னா போட்டு கொடுக்கவேண்டியிருக்கும்:)

    ReplyDelete
  11. ///ஆரம்பத்தில் ஹைக்கூ டைப் கவிதைகள் தான் என்னைக் கவருபவையாக இருந்தன.பெரும்பாலும் காதல் கவிதைகள் படிக்க/உணர எளிமையாக இருக்கும்.////



    நம்மள மாதிரி தானா?

    ReplyDelete
  12. ///(கல்யாணம் ஆனவங்க –நிச்சயம் படிக்கனும்.மனைவியை எப்படி காதலிக்கறதுன்னு தெரிஞ்சுக்க..).///


    குசும்பா படிச்சுக்கப்பா:)

    ReplyDelete
  13. ////முன்பெல்லாம் , ஆழமான வார்த்தைகளால் வீரியமான கருத்துக்களை சொல்ல முயலும் கவிதைகளின் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன்.
    அதுலயும் அழுவாச்சி கவிதைகள்ன்னா ரொம்ப தூரம் ஓடியிருப்பேன்.///


    நானும் இப்படித்தான் ஓடி ஓடி கடைசில பார்த்தா வேற நாட்டுல இருக்கேன். அப்புறம் அப்படியே செட்டில் ஆகிட்டேன்:)

    ReplyDelete
  14. /////(எழுதனவங்களுக்கே தோனாத மீனிங்கெல்லாம் படிக்கறவங்களுக்குத்தானே தோனும்.:))))////


    அது சரி:)

    ReplyDelete
  15. ////(சுத்தம். மூனு முறை யோசிப்பப்பறம் தான் ,டவுட்டே வந்துச்சா?ன்னு கேக்கறது எனக்கு புரியுது.)///


    அதுக்குல்ல புரிஞ்சுடுச்சா?

    ReplyDelete
  16. ///கவிதாயினி காயத்ரி.இவரை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை...,///



    நீங்களுமா?

    ReplyDelete
  17. ///சாதாரண விஷயங்களிலும் சுலபமாய் நகைச்சுவையை பொருத்தி ரசனையாய் சொல்ல வருகிறது.///



    சரியா சொல்லி இருக்கீங்க மாம்ஸ்.

    ReplyDelete
  18. ///ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட இவரது பேட்டியின் தன்னிலை விளக்கத்தையும் இவர் பதிவில் வெளியிடவேண்டிய சூழ்நிலையை பத்திரிக்கை வியாபார யுத்திகள் உருவாக்கியதை நினைத்து வருந்த வேண்டியுள்ளது.///


    நானும் படிச்சேன். வருத்தமா தான் இருக்கு.

    ReplyDelete
  19. ///இதை யாராவது கன்னடத்தில் மொழிப்பெயர்த்து வெளியிடுவார்களா?///


    யாரவது செய்தால் நல்லா இருக்கும்.

    ReplyDelete
  20. ///நேரமில்லாமையாலோ இல்லை வேறு காரணங்களாலோ ஜி3 தனக்குள்ள இருக்குற அந்த கவிதாயினிய முழுமையா எழுப்பி விடாம,இன்னும் தூங்க விட்டுக்கிட்டிருக்கறதுக்கு (ஜி3க்கு பொறாமை.. பொறாமை..) நமது பலமான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வோம்.வாங்க..:)/////


    என்னோட பலமான கண்டனங்கள் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

    ReplyDelete
  21. ///சமுகப் பிரட்சனைகளை / அவலங்களை கண்டு வருந்தும் மனதின் வடிகாலாய் கவிதையை பயன்படுத்துவது என்னைக் ரொம்ப கவர்ந்தது..சராசரியாய் நான் தினமும் காணும் வறுமையின் பல வடிவங்கள் ,இவரது பார்வையில் மட்டும் ஏன் இப்படி ஆழமாக கவனிக்கத் தக்கவையாக இருக்கின்றன?. இவற்றை கண்டும்,நாம் இதை ஒரு இயல்பான அன்றாட காட்சியாக ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோமா? என நான் பலமுறை யோசித்திருக்கிறேன்./////



    நானும் பலமுறை யோசித்திருக்கிறேன். யோசிப்பை தவிர வேறெதுவும் செய்யாததை நினைக்கும் போது கொஞ்சம் அவமானமாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  22. ///கவிஞர் அருட்பெருங்கோ.இவரது எழுத்துக்கள் சமிபத்தில்தான் எனக்கு அறிமுகம்////


    நல்ல விஷயம் கொஞ்சம் லேட்டா தான் தெரியும்:)

    ReplyDelete
  23. ////திருமண நாளை எதிர்நோக்கி தினமும் ஆபிஸ்ல கனவுல டூயட் பாடிக்கிட்டிருக்கற தோழி இம்சை அரசி என்கிற நம்ம ஜெயந்திக்கு நம்ம எல்லாருடைய சார்புலயும் வாழ்த்துக்களை சொல்லிக்குவோம்.:)/////


    வாழ்த்துக்கள் ஜெயந்தி.

    ReplyDelete
  24. தல

    கலக்கல் போஸ்ட்..நீங்க ஒரு சிறந்த ரசிகன்னு நிருப்பிச்சிட்டிங்க ;))

    ReplyDelete
  25. நன்றாக தொடுக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் ரசிகன்.

    ReplyDelete
  26. மெய்யாலுமே நீ ரசிகன்தாம்பா...

    ReplyDelete
  27. நிஜமா நல்லவன்...said...

    ///ஆனாலும் பாரதி,சித்தர் பாடல்கள்,வைரமுத்துவின் கவிதைகள் போன்றவை ஏனோ எனக்கு பிடித்துப்போனது.///


    மாம்ஸ் என்னோட கவிதை பிடிக்குமா உங்களுக்கு? சொல்லவே இல்லை///


    ரசிகனின் தலைவிதி...????:)))

    ReplyDelete
  28. நிஜமா நல்லவன்..said..

    /////ஆரம்பத்தில் ஹைக்கூ டைப் கவிதைகள் தான் என்னைக் கவருபவையாக இருந்தன.பெரும்பாலும் காதல் கவிதைகள் படிக்க/உணர எளிமையாக இருக்கும்.////



    நம்மள மாதிரி தானா?///


    பொய் பொய்....

    ReplyDelete
  29. நிஜமா நல்லவன்...said...

    ///(கல்யாணம் ஆனவங்க –நிச்சயம் படிக்கனும்.மனைவியை எப்படி காதலிக்கறதுன்னு தெரிஞ்சுக்க..).///


    குசும்பா படிச்சுக்கப்பா:)/////

    ரிப்பீட்டு...

    ReplyDelete
  30. நல்ல ரசிகன் என்பதை மற்றொரு முறை நிருபிச்சிக்கிறிங்க வாழ்த்துக்கள்...///

    ReplyDelete
  31. நல்ல ரசிகன் என்பதை மற்றொரு முறை நிருபிச்சிருக்கிறிங்க வாழ்த்துக்கள்...///

    ReplyDelete
  32. Dear Rasikan,

    really good compilation of Love poems.. Your writing also fine.. Do you think this many smilies are necessary???

    All the Photos are nice.. than Poems..

    Great going Rasikan...

    ReplyDelete
  33. ரசிகன்,

    இரசிச்சு எழுதியிருக்கீங்க...நல்லா இருக்கு.

    இப்பத்தான் கவிஞர் நவீன்பிரகாஷின் சுட்டிக்குள் நுழைந்திருக்கிறேன்.

    //நானெல்லாம் தொலையவே
    மாட்டேன் காதலில்
    என இறுமாந்திருந்தபோதுதான்
    நீ வந்து தொலைத்தாய்//

    என்று ஆரம்பித்து எல்லாமே அருமை.

    மற்ற சுட்டிகள் ரசித்து விட்டு வருகிறேன்.:)

    ReplyDelete
  34. சூப்பர் பதிவு...

    கலக்கலா அதுக்கு போட்டோஸ் கொடுத்து கலக்கிட்டீங்க ரசிகன்..

    கோபிநாத்துக்கு ஒரு ரிப்பீட்டே

    ReplyDelete
  35. //நிஜமா நல்லவன் said...

    மாம்ஸ் ஒண்ணா ரெண்டா தாங்க முடியல. ஒழுங்கா நான் சொன்னதெல்லாம் செய்ங்க முதல்ல. இல்லன்னா போட்டு கொடுக்கவேண்டியிருக்கும்:)//
    அவ்வ்வ்வ்.... ஸ்பெல்லிங் சரி செஞ்சுட்டேனுங்க மாமேய்.. நன்றிகள்:).பாருங்க மக்கள்ஸ் ,லிங்க் தவிர எதையெல்லாம் கவனிக்கறாங்கன்னு:P:)))

    ReplyDelete
  36. //நிஜமா நல்லவன் said...

    ///(கல்யாணம் ஆனவங்க –நிச்சயம் படிக்கனும்.மனைவியை எப்படி காதலிக்கறதுன்னு தெரிஞ்சுக்க..).///


    குசும்பா படிச்சுக்கப்பா:)//

    ஹலோ.. இது உங்களுக்கும் சேத்து தான்:) .தங்கச்சி கிட்ட மாட்டி விடனுமா?:P:P:P

    ReplyDelete
  37. // நிஜமா நல்லவன் said...

    ////முன்பெல்லாம் , ஆழமான வார்த்தைகளால் வீரியமான கருத்துக்களை சொல்ல முயலும் கவிதைகளின் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன்.
    அதுலயும் அழுவாச்சி கவிதைகள்ன்னா ரொம்ப தூரம் ஓடியிருப்பேன்.///


    நானும் இப்படித்தான் ஓடி ஓடி கடைசில பார்த்தா வேற நாட்டுல இருக்கேன். அப்புறம் அப்படியே செட்டில் ஆகிட்டேன்:)//
    ஹா..ஹா..

    ReplyDelete
  38. // நிஜமா நல்லவன் said...

    ///கவிதாயினி காயத்ரி.இவரை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை...,///



    நீங்களுமா?//

    அப்போ நீங்களுமா?:)))))

    ReplyDelete
  39. //நிஜமா நல்லவன் said...

    ///சாதாரண விஷயங்களிலும் சுலபமாய் நகைச்சுவையை பொருத்தி ரசனையாய் சொல்ல வருகிறது.///



    சரியா சொல்லி இருக்கீங்க மாம்ஸ்.//

    நன்றி :))

    //என்னோட பலமான கண்டனங்கள் இங்கு பதிவு செய்யப்படுகிறது//

    செஞ்சுடுவோம்:)

    //
    நானும் பலமுறை யோசித்திருக்கிறேன். யோசிப்பை தவிர வேறெதுவும் செய்யாததை நினைக்கும் போது கொஞ்சம் அவமானமாகவும் இருக்கிறது.//
    சேம் பிளட்:(

    //நிஜமா நல்லவன் said...

    வாழ்த்துக்கள் ஜெயந்தி.//
    தோழியோட சார்புல நன்றி சொல்லிக்கறேன்:)

    ReplyDelete
  40. //கோபிநாத் said...

    தல

    கலக்கல் போஸ்ட்..நீங்க ஒரு சிறந்த ரசிகன்னு நிருப்பிச்சிட்டிங்க ;))//

    ஹிஹி.. நன்றிகள் மாம்ஸ்.லிங்க் பதிவுகளை ரசிச்சதுனால நீங்களும் அருமையான ரசிகர்ன்னு காட்டிட்டிங்க:)
    மறுபடியும் நன்றிகள்:)

    ReplyDelete
  41. //நிலாரசிகன் said...

    நன்றாக தொடுக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் ரசிகன்//

    நல்வருகைகள் நிலாரசிகன். உங்களுடைய யதார்த்தக் கவிதைகள் என்னை கவர்ந்தவை. உங்களுடைய தூக்கம் விற்ற காசுகள் அருமை.என் பதிவிலேயே நிரந்தர லிங்க் கொடுத்திருக்கேன்:)

    கவிஞரின் வாயால் வாழ்த்து பெறுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு:)
    நன்றிகள்.

    ReplyDelete
  42. //தமிழன்... said...

    மெய்யாலுமே நீ ரசிகன்தாம்பா...//

    டாங்கியு டாங்கியு மாமேய்..:))

    ReplyDelete
  43. // நிஜமா நல்லவன்...said...

    மாம்ஸ் என்னோட கவிதை பிடிக்குமா உங்களுக்கு? சொல்லவே இல்லை///

    தமிழன்... said...


    ரசிகனின் தலைவிதி...????:)))//

    நிஜமா நல்லவன்...said...

    நம்மள மாதிரி தானா?///

    தமிழன்... said...
    பொய் பொய்...
    //
    ஹா..ஹா...எதிர்ப்பு ரொம்ப பலமா இருக்கே))). நம்ம நி.ந மேல உங்களுக்கு அப்டி என்ன கொலைவெறி???:P:P:P

    ReplyDelete
  44. // தமிழன்... said...

    நல்ல ரசிகன் என்பதை மற்றொரு முறை நிருபிச்சிருக்கிறிங்க வாழ்த்துக்கள்...//

    மிக்க நன்றிகள் நண்பரே:)

    ReplyDelete
  45. //கானகம் said...

    Dear Rasikan,

    really good compilation of Love poems.. Your writing also fine.. Do you think this many smilies are necessary???

    All the Photos are nice.. than Poems..

    Great going Rasikan...//

    வாங்க வாங்க கானகம் மாம்ஸ்..:)
    ஹிஹி.. சாட்டிங் பழக்கதோஷம்P
    வாழ்த்துக்களுக்கு நன்றிகள்:)

    ReplyDelete
  46. //NewBee said...

    ரசிகன்,

    இரசிச்சு எழுதியிருக்கீங்க...நல்லா இருக்கு.

    இப்பத்தான் கவிஞர் நவீன்பிரகாஷின் சுட்டிக்குள் நுழைந்திருக்கிறேன்.

    //நானெல்லாம் தொலையவே
    மாட்டேன் காதலில்
    என இறுமாந்திருந்தபோதுதான்
    நீ வந்து தொலைத்தாய்//

    என்று ஆரம்பித்து எல்லாமே அருமை.

    மற்ற சுட்டிகள் ரசித்து விட்டு வருகிறேன்.:)//

    நல்வருகைகள் நண்பரே:)
    அருமையான ஆரம்பம்.கலக்குங்க.:)
    நன்றிகள்:)

    ReplyDelete
  47. //சென்ஷி said...

    சூப்பர் பதிவு...

    கலக்கலா அதுக்கு போட்டோஸ் கொடுத்து கலக்கிட்டீங்க ரசிகன்..

    கோபிநாத்துக்கு ஒரு ரிப்பீட்டே//

    வாங்க சென்ஷி சார், பாராட்டுகளுக்கு மிக்க நன்றிகள்:)

    ReplyDelete
  48. //உங்களுடைய தூக்கம் விற்ற காசுகள் அருமை.என் பதிவிலேயே நிரந்தர லிங்க் கொடுத்திருக்கேன//

    ரசிகன்,

    தூக்கம் விற்ற காசுகள் எழுதியது ரசிகவ் ஞானியார்(நிலவுநண்பன் என்கிற பெயரில் வ்லைப்பூ வைத்திருக்கிறார்)

    நன்றி :)

    ReplyDelete
  49. /////ரசிகன் said...

    // நிஜமா நல்லவன் said...

    ///கவிதாயினி காயத்ரி.இவரை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை...,///



    நீங்களுமா?//

    அப்போ நீங்களுமா?)))////



    அட இன்னும் யார் யார் இருக்காங்களோ இந்த லிஸ்ட்ல. அவங்க நல்லாத்தான் எழுதுறாங்க நமக்குத்தான் புரிஞ்சுக்குற அளவுக்கு மேல ஒண்ணும் இல்ல(தப்பிக்க வழி தேடியாச்சு)

    ReplyDelete
  50. நல்ல கவிதை தொகுப்பு ஸ்ரீதர். :-)

    ReplyDelete
  51. // நிலாரசிகன் said...

    //உங்களுடைய தூக்கம் விற்ற காசுகள் அருமை.என் பதிவிலேயே நிரந்தர லிங்க் கொடுத்திருக்கேன//

    ரசிகன்,

    தூக்கம் விற்ற காசுகள் எழுதியது ரசிகவ் ஞானியார்(நிலவுநண்பன் என்கிற பெயரில் வ்லைப்பூ வைத்திருக்கிறார்)

    நன்றி :)//

    ஆஹா... மன்னிக்கவும்.விபரங்களுக்கு நன்றிகள்.,தங்கள் பதிவுகளிலும் அழகான கவிதைப் பூக்கள் மணம் வீசுகின்றன.புதிய வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றிகள் நண்பரே:)

    ReplyDelete
  52. //நிஜமா நல்லவன் said...

    அட 50 ம் நான் தானா?//

    அடடா.. எவ்ளோ கும்மில கவனமாயிருந்தாலும் ,கவுண்டிங் மிஸ் பண்ண மாட்டீங்கறிங்களே மாம்ஸ்:)))

    அதுதான் உங்க ஸ்பெஷாலிட்டி:)))

    நன்றிகள்.

    ReplyDelete
  53. //.:: மை ஃபிரண்ட் ::. said...

    நல்ல கவிதை தொகுப்பு ஸ்ரீதர். :-)//

    வாங்க ஃமைபிரண்டு:) தினமும் தேன்கிண்ணத்திற்க்கு ரசிச்சு பாட்டெழுதுற
    நீங்களே சொல்லிட்டா,ரொம்ப சந்தோஷம்தான் .நன்றிகள்:D.

    ReplyDelete
  54. 情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,A片,A片,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品,視訊聊天室,聊天室,視訊,ut聊天室,聊天室,視訊聊天室,成人電影,

    A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色,色情,情色電影,色情網站,av女優,av,自拍,成人,視訊聊天室,視訊交友網,AV女優,成人,聊天室,ut聊天室,av女優

    免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

    色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,av dvd,情色論壇,視訊美女,AV成人網,情色文學,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,成人論壇,色情


    免費A片,日本A片,A片下載,線上A片,成人電影,嘟嘟成人網,成人貼圖,成人交友,成人圖片,18成人,成人小說,成人圖片區,微風成人區,成人文章,成人影城,情色貼圖,色情聊天室,情色視訊,情色文學,色情小說,情色小說,臺灣情色網,色情遊戲,嘟嘟情人色網,麗的色遊戲,情色論壇,一葉情貼圖片區,做愛,性愛,美女視訊,辣妹視訊,免費視訊聊天,美女交友,做愛影片

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது