07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 23, 2008

ஆன்மீகத்தில் புது வரவுகளும், ஒரு பெண் கவிஞரின் அறிமுகமும்!

ஆன்மீகப் பதிவுகளில் அடுத்துப் புதிதாக இப்போது கொஞ்ச நாட்களாய் எழுத ஆரம்பித்திருக்கும் மதுரையம்பதி! இவர் முதலில் என்னுடைய திருக்கைலைப் பயணத்தைத் தான் படிக்க ஆரம்பித்துள்ளார். அனானி ஆப்ஷனில் நான் பின்னூட்டம் அனுமதிக்காத காரணத்தால், மற்றப் பதிவுகளில் என்னைச் சந்திக்கும்போது, பின்னூட்டம் போட அனுமதி கேட்டுட்டு, பின்னர் வேறே வழியில்லாமல், வலைப்பக்கம் ஆரம்பிச்சு பின்னூட்டம் போட ஆரம்பித்தார். இவரை எழுத வைத்த பெருமை குமரன், கே ஆர் எஸ், திராச போன்றவர்களுக்கே உரியது. கூட்டுப் பதிவாய் ஆச்சாரிய ஹ்ருதயம் என்ற பதிவும் எழுதும் இவர், இன்னும் போக வேண்டிய தூரம் நிறையவே இருக்கின்றது. இவரின் அனுபவங்கள் கை கொடுக்கும் என நம்புகின்றேன். நேரமின்மை தான் முக்கிய காரணம் இவர் எழுத முடியாமைக்கு. நேரம் இருந்தால் இன்னும் எழுதுவார் என நம்புகின்றேன்.

அம்பிகை உபாசகர் ஆன இவர் எழுத ஆரம்பித்ததில் முதன்மையானது "செளந்தர்ய லஹரி" பற்றியே. பின்னர் மதுரையம்பதி என்ற பெயரிலும் ஒரு தனிப்பதிவு வைத்திருக்கின்றார். மொக்கை எல்லாம் இவரிடம் பார்க்க முடியாது. ஆனாலும் சாட்டிங்கில் பார்க்கும்போது என்னிடம் மொக்கை எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார். அந்த அளவுக்கு "மொக்கை ஆர்வலர்" என்றும் சொல்லலாம். அல்லது என்னை மாட்டிவிடப் போட்ட எதிர்க்கட்சிகளின் திட்டமோ என்றும் யோசிக்கலாம். அவங்க அவங்க இஷ்டம் அது! மெளலி, நேத்து நீங்க சொன்னாப்பலேயே எழுதி இருக்கேன். ஓகேயா? :P

. மதுரை மீனாட்சியின் திருக்கல்யாணம் பற்றிய இவரின் பதிவு இதோ!

http://maduraiyampathi.blogspot.com/2008/04/blog-post_17.html

//திருவிழாவின் எல்லா நாட்களும் ஈசன் தனியாக் ஒரு வாகனத்தில் ப்ரியாவிடையுடன் வருவார், அன்னை தனி வாகனத்தில் வருவார். ஆனால் பதினோராம் நாள் இரவு மிக விசேஷமான சப்தாவரணம். இதில் அன்னையும் ஈசனும் ஏக ஆசனத்தில் சப்பரத்தில் வருவர். இதனை வருடத்தில் இந்த ஒருநாள் மட்டுமே காண முடியும். மற்ற எல்லா திருவிழாவிலும் அன்னையின் வழி தனி வழிதான். இந்த சப்தாவரண ஸ்வாமி தரிசனம் எல்லா பாபங்களையும் தீர்க்கக் கூடியதாம்.//

செளந்தர்ய லஹரி பற்றிய வலைப்பூ இதோ, இங்கே!
http://sowndharyalahari.blogspot.com/

//இங்கு கூறப்பட்டுள்ள வசினி தேவதைகளே அன்னையின் சஹஸ்ரநாமத்தை உலகிற்கு அளித்தவர்கள். இந்த வசினி தேவதைகள் எண்மர். அவர்களாவது, வசினீ, காமேஸ்வரீ, மோதினீ, விமலா, அருணா, ஜயினீ, ஸர்வேஸ்வரீ, கெளலினீ. இந்த தேவதைகளே வாக்கைப் பிறப்பிக்கும் அன்னையர். ஆகவேதான் ஸவித்ரீபி: வாசாம் என ஆரம்பிக்கிறார். இவர்கள் எந்த வர்ணத்தவர் என்றால், சந்திர காந்த கல்லின் //

இதிலே எனக்கும், இவருக்கும் இன்னும் தீர்த்துக் கொள்ளாத ஒரு கணக்கும் இருக்கின்றது. லலிதா சஹஸ்ரநாமம் அருளியது யார் என்பதில்! வசினி தேவதைகள் அருளியதாய் அவரும், வசினிதேவதைகள் மூலம் ஹயக்ரீவர் பெற்று அகத்தியருக்கு அருளியதாய் நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். லலிதா த்ரிசதி தான் ஹயக்ரீவர் அருளியது என்பது மெளலியின் தீர்மானமான முடிவு, அதை நான் இன்னும் தீர்மானத்தோடு மறுத்துக் கொண்டிருக்கிறேன். யாராவது தெரிஞ்சவங்க இருந்தால் இதைத் தீர்த்து வைக்கலாம். அல்லது ஹயக்ரீவர் மூலம் வெளிப்படுத்தப் பட்டதா? அகத்தியர் மூலம் தான் உலகுக்கு தெரிய வந்ததுனு சந்தேகம் இல்லைனு நினைக்கிறேன். பார்க்கலாம். அடுத்து நாம் சிங்கப்பூர் சென்று மாதங்கியைப் பார்ப்போமா?

http://clickmathangi.blogspot.com/2008/04/blog-post_09.html
http://clickmathangi.blogspot.com/2008_03_01_archive.html


சிங்கப்பூரில் வசிக்கும் "மாதங்கி" சிறிதாக எல்லாம் கேட்கவில்லை, "பெரிதினும் பெரிது கேள்" என்கின்றார்.
திரு திவாவின் "நல்ல செய்தி" பதிவில் இருந்து இவர் பதிவுக்குப் போனேன். ஒரு வார்த்தையின் மூலத்துக்குப் போய் அதன் அர்த்தம் என்ன என்று ஆராயும் இவரின் தெளிந்த தமிழ் அறிவும், எழுதி இருக்கும் கவிதைகளும், கதைகளின் தேர்ந்தெடுப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. சிங்கப்பூரில் வசிக்கும் இவர் தற்சமயம் இந்தக் கதையைக் கொடுத்திருக்கின்றார். இம்மாதிரிப் பல கதைகள் வந்திருந்தாலும், இதுவும் படிக்கச் சுவையாகவே இருக்கிறது. எப்போது எழுத ஆரம்பித்தார்? ம்ம்ம்ம்ம்??2005 அக்டோபரில்? ஆமென நினைக்கிறேன், என்றாலும் எனக்கு இப்போது தான் தெரியும். ஆகவே அறிமுக இழையில் அறிமுகம் செய்கின்றேன். அவர் கொடுத்திருக்கும் கதை இதோ:

//எ·ப். கெ. லிம்மின் மூன்றாவது கண்

ஜேனட்டின் முன்குறிப்பு:

மலாக்கா, சிங்மாய், டோக்கியோ, எங்கு சென்றாலும் இறந்தவர்கள் என் கண்களில் பட்டுக்கொண்டேதான் இருந்தார்கள்.

என் கண்ணுக்குப் புலப்பட்ட எந்த ஆவியுமே என்னை எந்த விதத்திலும் இதுநாள்வரை தொந்தரவு செய்ததில்லை.

நான் ஆராய்ச்சித்துறையில் பணிபுரிந்த காலகட்டத்தில் எங்கள் மூத்த அதிகாரி ஒருவர்மூலம், ஆமாவின் தோழி குடியிருந்த பகுதிக்குச் செல்லும் வழி, சிங்கப்பூர், ஜப்பான் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், பிணக்கிடங்காக இருந்தது என்ற செய்தியைத் தெரிந்துகொண்டேன்.

என் அவதானிப்புகள் அதிகமாக ஆக , என் நண்பர்கள் குறைந்துகொண்டே வந்ததுதான் நடந்தது. ஏற்கனவே எனக்கு மிக மிக குறைவான நண்பர்களே, பல்கலையில் இருந்தனர்.


போததற்கு, முதுகலை இறுதியாண்டில் பயிலும்போது உடன் பயின்ற மாணவனின் தந்தை மாண்டு போனார். விடுப்பு எடுத்துக்கொண்டு அவனுடனே அன்று முழுவதும் இருந்தேன். முக்கியமான சில பத்திரங்களின் தகவல்களும் அவை எங்கே வைக்கப்பட்டிருந்தன என்பதும் தெரியாமல் அவன் தாயார் திண்டாடுவதாகக் கூறினான். மறுநாள் பின் அவன் தந்தையாரை நான் என் சோதனைகூட அறை முகப்பில் பார்த்தேன். அவர் பெட்டகச்சாவி இருக்கும் இடத்தை என்னிடம் கூறியதால், என் நண்பனை உடனே அழைத்து விவரத்தைச் சொன்னேன். நான் சொன்னது சரியான விவரமே என்று அவன் வீடு சென்றதும் உறுதி செய்து எனக்கு நன்றி தெரிவித்தான்.//

மூன்றாவது கண் என்ற கதையின் சில பகுதிகளை மேலே கண்டோம், அருமையான கதைத் தேர்வு. இவரின் படிப்பின் ஆழம் நன்றாய்ப் புரிய வருகின்றது. இனி கீழே இவரின் சில கவிதைகளைக் காண்போம். முதலில் ஒரு குழந்தையின் தோசை பற்றிய கவிதை!

குழந்தையின் தோசை


//எதனாலோ அந்த தோசையைப்//
பிடித்துப்போனது அந்தக் குழந்தைக்கு.
அப்பாவின் கையில் உட்கார்ந்துகொண்டு
அந்த தோசையைச் சுட்டிக்காட்டி
அது தன்னுடையது என்று
முன்பதிவு செய்துகொண்டது.
இதை கவனிக்காமல் அந்த தோசையை
என் பார்சலில் வைத்துக்
கட்டிக் கொடுத்தார் கடைக்காரர்.
மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு
வெளியே வரும்வரை
திருட்டுப் பொருளை வைத்திருப்பதைப் போல்
என் கை நடுங்கிக்கொண்டிருந்தது.//

இந்தக் கவிதையைப் படித்த எனக்கும் சற்று நேரம் அன்றும் கை நடுங்கியது, இப்போதும்! அடுத்து இன்னோரு கவிதை!வேறொரு வெயில் நாளில் கவிதையில் இருந்து:

//'நான் பார்க்கவந்தது உன்னைத்தான்
உன் வீட்டையில்லை'
என்றபோது உன் கண்ணில் தெரிந்த
பரவசம்
பத்துநாட்களுக்குப் போதுமானதாக
உனக்கு இருக்கலாம்
இப்போது நான் யோசிக்கிறேன்
உறுத்தாத மௌனங்களின் மொழியை
நிழலின் அடியில் அசைபோட்டபடி
உன் பயங்களைக் களைவது எப்படியென்று//

இங்கேயும் மெளனத்தின் மொழிதான் என்றாலும், உணர்வுகளைப் புரிந்து கொண்ட திருப்தியும் வருகின்றதல்லவா? பயங்களைக் களைவது ஒன்றும் அவ்வளவு சிரமமாய் இருக்கப் போவதில்லை என்ற நிச்சயமும், அதனால் விளையும் ஆனந்தமும் தென்றல் காற்றுப் போலவே மனதை மெல்லியதாய், இதமாய் வருடிச் செல்கின்றது. அழகாய் உணர்வுகளை, தேர்ந்தெடுத்த வார்த்தைகளால், மிக, மிகச் சிக்கனமாயும், தீர்மானமாயும் தெரிவிக்கின்றார்.

அடுத்துச் சமீபகாலமாய் ஆன்மீகம் எழுத ஆரம்பித்திருக்கும் திரு திவா அவர்கள். இவர் "இல்லம்" குழுமத்திலும் எழுதுவதால் ஏற்கெனவே அறிமுகம் ஆனவரே, ஆனால், வலைப்பூக்கள் இப்போ சமீபத்தில் தான் ஆரம்பித்திருக்கிறார் என நினைக்கின்றேன். இவரின் வலைப்பூக்கள்:

My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

மூன்று வலைப்பூக்கள் ஆரம்பித்திருக்கும் இவர் அதிகம் கவனம் செலுத்துவது ஆன்மீகம் தான் என நினைக்கின்றேன். நல்ல செய்தியில் கடைசியாக துளசி பற்றி தினமலரில் வந்ததோடு அதன் பின்னர் ஒன்றும் காணமுடியவில்லை. அடுத்து கதை கதையாம் என்ற வலைப்பூ. (க்ர்ர்ர்ர்ர்., இதைத் தான் நான் காப்பிரைட் கொடுக்காமல் என்னோட ராமாயணம் தொடருக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர் எண்ணம், ) இந்தக் "கதை கதையாம்" பதிவில் கதைகள் பலவும் சொல்வார்னு நினைச்சால், முதல் கதை என்னமோ நல்லாவே இருந்தது. அதுக்கு திருஷ்டிப் பரிகாரம் போல மற்ற கதைகள். ரொம்பவே சாதாரணமான கதைகள், மெகா சீரியல்களின் வழக்கமான நடை போல். :( ஒருவேளை கற்பனை வரண்டுவிட்டதோ? தெரியலை! அதுக்கு நான் கொடுத்த பின்னூட்டம், "முடிவை முன்னாலேயே ஊகிக்கும்படி இருக்கேனு கேட்டதுக்கு, இனிமேல் உங்களுக்குக் கதையே சொல்லலைனு சொல்லி ஜகா வாங்கிட்டார்! :P முதல் கதையில் இவரின் தொழிலான பொறிதுயில் ஆழ்த்துதலின் தாக்கம் இருந்தது என்றால், மற்றவைகளின் முடிவை ஊகிக்கும்படியாகச் சாதாரணமான ஒன்றாகி விட்டது. அதனால் கதை சொல்லுவதையே விட்டு விடலாம்னு முடிவு பண்ணிட்டார் போலிருக்கு! :P கதை சொல்லுவதோடு கூடவே தலைவலி மாத்திரையும்,காபியும் தயாராகத் தருகின்றார். எனக்கு இரண்டுமே ஒத்துக்காது. அதனால் கதையே வேண்டாம்னு வந்துட்டேன்! :P

அதனாலோ என்னமோ ஆன்மீகம் பக்கம் முழுக்கவனத்தையும் செலுத்தி இருக்கின்றார் இப்போது. http://anmikam4dumbme.blogspot.com/ இந்த வலைப்பூவில் ஆன்மீகம் பற்றியும், அதிலும் யோகவழிகள் பற்றியும் தெளிவான எளிமையான நடையில் எழுதி வருகின்றார். தற்சமயம் பக்தி மார்க்கத்தில் இறைத் தத்துவத்தை உணருவது எவ்வாறு எனக் கூறுகின்றார். படிக்கும்போது எளிமையாகவே இருக்கின்றது. அதிலும் மனிதர்களின் பொறிகளைத் துயிலில் ஆழ்த்தும் தொழிலைச் செய்யும் ஒருவர், தன் தொழிலுக்கு மாறாக இங்கே பொறிகளைத் தட்டி எழுப்பி, இதான் உங்கள் மனக்கவலைகள் போக்கும் வழினு காட்டுவதைப் போய்ப் பாருங்கள். இதோடு நில்லாமல், இந்தப் பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு "ஆனை" இலவசமாயும் அளிக்கின்றார். கூடவே யானைத் தீனிக்குப் பணமும் கொடுக்கின்றார். சமீபத்தில் இதைப் பெற்ற துளசியைக் கேட்டுக்கலாம். :))))))))))

http://anmikam4dumbme.blogspot.com/2008/04/blog-post.html ஹிஹிஹி, நம்ம அருமை நண்பர், விநாயகர் இங்கே குழந்தை வடிவில் உட்கார்ந்திருக்கார். அவர் உட்கார்ந்திருக்கும் அழகே அழகு.

7 comments:

  1. முன்பு சீனா சார் ஆன்மீகப்பதிவர்க்ளை ஊக்கப்படுத்தும் விதமாக பதிவுகள் இட்டார்,அதே பணியை தாங்களும் தொடர்கின்றிர்கள் . நன்றி கீதா அம்மா. நிறைய புதுப்பதிவுகள் இட்டுள்ளேன் சென்று தரிசியுங்கள்.

    ReplyDelete
  2. மௌலி இன்னும் கொஞ்சம் அதிகமா எழுதனும்.
    தோசை கவிதையை நானும் ரொம்பவே ரசித்தேன்!

    //கடைசியாக துளசி பற்றி தினமலரில் வந்ததோடு அதன் பின்னர் ஒன்றும் காணமுடியவில்லை.//
    இதில நிறையவே பிரச்சினைகள் .
    முக்கியமா நல்ல செய்திகளை பாக்க முடியலை என்பதுதான். அப்புறம் எனக்கு நேரம் இருக்கணும். அப்படி நேரம் இருக்கும்போது இணையம் ஒத்துழைக்கணும்.

    நானே இப்படி வலைப்பூ ஆரம்பித்து கொஞ்ச நாள் ஆகும் வரை இந்த செய்தி வரட்சி இவ்வளவு மோசம்னு நினைக்கலை. ஒரு ப்ளாக்- ஆரம்பிச்சு அப்புறம் குழு ஆக்கலாம்னு நினைச்சேன். அப்படி நடக்கலை. ஆண்டவன் சித்தம்.
    இருந்தாலும் மூடு விழா நடத்த மனசில்லை.

    //இனிமேல் உங்களுக்குக் கதையே சொல்லலைனு சொல்லி ஜகா வாங்கிட்டார்!//
    ஓஹோ அப்படியா நினைப்பு உங்களுக்கு?
    இருங்க இருங்க, தொடர் கதை பாதி முடிஞ்ச்சாச்சு. போட்டு வதைக்கிறேன் சீ கதைக்கிறேன்!

    //இந்தப் பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு "ஆனை" இலவசமாயும் அளிக்கின்றார். கூடவே யானைத் தீனிக்குப் பணமும் கொடுக்கின்றார்.//
    போச்சுடா!
    மாட்டி விட்டுட்டீங்களா! முதல்ல நீங்க வாங்கின பணத்துக்கு கணக்கே காணோமே இன்னும்?
    :-))

    ReplyDelete
  3. Thankyou Geetha (sorry unicode tharsamayam velai seyyavillai)

    Just happened to see this post. Surprised to see your introduction and invitation to my blog. Thankyou verymuch.

    The dosai kavithai is not mine. It belongs to Mukundh Nagarajan. I have mentioned it in my blog.
    thankyou once again.

    ReplyDelete
  4. //எல்லாம் இவரிடம் பார்க்க முடியாது. ஆனாலும் சாட்டிங்கில் பார்க்கும்போது என்னிடம் மொக்கை எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார். அந்த அளவுக்கு "மொக்கை ஆர்வலர்" என்றும் சொல்லலாம்.//

    ஆஹா.. மதுரை மாம்ஸ் நல்ல காரியம் தான் செஞ்சிருக்காரு:))

    ReplyDelete
  5. பதிவு சுட்டிகள் நல்லாயிருக்குங்க அக்கா,நல்ல தொகுப்பு:)

    ஆன்மீகப் பதிவுகள் தவிர ,பல்சுவையா எல்லாத்தையும் எழுதுங்களேன் அக்கா.

    ReplyDelete
  6. நல்ல அறிமுகத்திற்கு நன்றிகள்!

    ReplyDelete
  7. அறிமுகங்கள் அருமை!

    மெளலி அண்ணாவைப் பற்றிய தனிப்பதிவு தயாராகிக்கிட்டு இருக்கே! :-))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது