கத்தார் கதாநாயகர்கள்
விடைப்பெறுகிறேன்.(யாரு கேள்வி கேட்டது? விடை பெறுவதுக்குன்னு எடக்கு முடக்கால்லாம் கேக்கப்டாது:P))
எல்லா வலைப்பதிவுகளையும் சொல்லிட்டு நம்ம ஊர்க்காரங்களைப் பத்தி சொல்லாம இருக்க முடியுமா?
எனது சக கத்தார் வாழ் கதாநாயகர்களைப் பற்றி பகிர்ந்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்:)
இதோ கத்தார் கதாநாயகர்கள்
என்னைப் பற்றி ( உன்னிய பத்திதான் மொத பதிவுலயே சுயப் புராணம் பாடியாச்சேன்னு கேக்கறது புரியுது.எதுக்கு அவசரப் படறிங்க?) சொல்லறதுக்கு இன்னும் என்ன இருக்கு?.. அதனால நேரடியா நம்ம நண்பர்களைப் பத்தி சொல்லறேன்னு சொல்ல வந்தேன்:P
நம்ம கானகம் மாம்ஸ், பழகுவதற்க்கு இனிமையானவர்.பயணக்கட்டுரைகளை இவரைத்தான் எழுத சொல்லனும்.
அம்புட்டு அருமையா ஒன்னுவிடாம ஆர்வமூட்டும் வகையில் எழுதுவார்.கத்தாரைப் பற்றி யாராவது கேட்டால்,இவரின் இவர் எழுதிய இந்த இடுகையை அப்படியே அனுப்பிடலாம்
கத்தார் ஒரு அறிமுகம்
நான் ஏற்கனவே படித்திருந்து ஒரு ஃபார்வேர்ட் மெயிலுக்கு இவர் கத்தாரை கம்பேர் செய்து எழுதிய கமெண்ட்ஸ் ரொம்பவே ரசித்தேன். இவையே போதும் எங்க ஊரைப் பத்தி தெரிஞ்சுக்க:)
அரபு நாடுகளில் வேலை செய்வது பற்றிய நகைச்சுவையான உண்மைகள்.
நம்ம நவின பாரதிய இளவரசர்.அப்பப்பா.. எவ்ளோ கலைரசனை உடையவர்.,திரைப்படம் ,புத்தகம்,தமிழ் ,மலையாளம்,விழாக்கள் என எதையும் விட்டு வைப்பதில்லை.தான் ரசித்தவற்றை அவ்வளவு அருமையா பதிபு செய்கிறார். இவருடைய பதிவுல ஒரு சிறப்பம்சம் என்னன்னா?. தான் சொல்லும் விஷயத்தைப் பற்றிய முழு சுட்டிகளையும் இணைத்து பதிவை முழுமைப் படுத்தியிருப்பார்.
திருவனந்தபுரம் பத்மநாத ஸ்வாமி கோவில்
IT நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் பற்றி அலசி ஆராய்ந்திருக்கிறார்.
நம்ம ஆயில்யன் மாம்ஸ்,இவரப் பற்றி சொல்லனும்ன்னா , தினமும் ஒரு பதிவு போட்டுட்டுதான் தூங்கவே போவாரு. மங்கையர் தினம்,குழந்தைகள் தினம்,தந்தையர் தினம்,விழிப்புணர்வு தினம் என தினமும் இன்றைக்கு என்ன தினமாய் உலகலவில் கொண்டாடறாங்கன்னு இவர் பதிவில் பார்த்து தான் தெரிந்துக்கொள்கிறோம்ன்னா பாத்துக்கோங்களேன். அது மட்டுமின்றி, ஊரில் இருந்த போது நடந்த மலரும் நினைவுகள்.இவர் படித்தவற்றில் இவரைக் கவர்ந்த செய்திகளைப்பற்றிய இவர் பார்வை என ஒன்றையும் விட்டு வைப்பதில்லை.
PIT போட்டியில் இவருக்கு நேரம் கொடுக்காமல் சீக்கிரம் மூடிட்டாங்கன்னு அதுக்கு எதிரா இவர் பண்ணிய குறும்பு பாருங்களேன்:P
நிதி நிர்வாகவியல்
அரசியல்
மக்கள்ஸ், எதிர்பாராத வேலைப் பளுவின் காரணமா வலைசரத்துல நமக்கு பிடித்த சுட்டிகளை பகிர்ந்துக்க கிடைச்ச வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்க இயலாமல் போனாலும், பிடித்த சில பதிவுச் சுட்டிகளை அறிமுகப் படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த இனிய வாய்ப்பையும் ,ஆலோசனைகளையும் எனக்கு வழங்கிய முத்துலஷ்மி அக்காவுக்கும் ,வலைச்சர பொறுப்பாசிரியராய் வழி நடத்திய சீனா ஐயாவுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்:)
இந்தப் பதிவில்,தனி மடலில்,சாட் குறுஞ்செய்தியில்,அலைபேசி உரையாடல்களுக்கிடையில் வாழ்த்தும்,பாராட்டும் சொன்ன அத்துணை நெஞ்சங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டுள்ளேன்.
நன்றி......................நன்றி......................... நன்றி :)
என்றும் அன்புடன்
உங்கள் ரசிகன்
|
|
முதல் படம் விமானம் விண்ணில் எழும்புகிறது!
ReplyDeleteகடைசிபடம் அழகிய பெண்ணின் நன்றிகளுடன் கும்பிடுகிறது !
ம்ம்ம்....! எதோ சொல்லவர்றீங்க எனக்குப்புரியுதுப்ப்ப்பா :))))
முன்கூட்டிய வாழ்த்துக்கள் + நன்றிகளுடன்....
//ஆயில்யன். said...
ReplyDeleteமுதல் படம் விமானம் விண்ணில் எழும்புகிறது!
கடைசிபடம் அழகிய பெண்ணின் நன்றிகளுடன் கும்பிடுகிறது !
ம்ம்ம்....! எதோ சொல்லவர்றீங்க எனக்குப்புரியுதுப்ப்ப்பா :))))
முன்கூட்டிய வாழ்த்துக்கள் + நன்றிகளுடன்....//
ஆஹா...வாங்க ஆயில்யன்..எப்டில்லாம் கனெக்ஷன் கனெக்ஷன் குடுக்கிறிங்க மக்கா:)))
என்ன ஒரு இமாஜினேஷன் கெப்பாசிட்டி,ஒக்காந்து யோசிப்பிங்களோ?:)))))))))
வருகைக்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றிகள் மாம்ஸ்:)
நல்லா இருந்தது உங்கள் தொடர்புகளும்..இனைப்புகளும்.. இனிமேதான் நீங்க குடுத்த ஒவ்வொரு சுட்டியா போய்ப் படிக்கனும்...
ReplyDeleteபடங்கள் எல்லாம் கலக்கல்.. தோஹா ஷெராட்டன் ஹோட்டல் போட்டோ அருமை...
புகைப்படங்களோடு தொகுத்தீள்ளீர்களே.. அருமை!
ReplyDeleteஅந்த கடற்கரைக் களியாட்டக் காட்சியும், விமான நிலைய ட்யூட்டி-ஃப்ரீ காட்சியும் நீங்கள் க்ளூக்கிய படங்களா? அதற்கொரு ஓ போடுகிறேன்.
ஆயில்யனின் யூகம் சரிதானா?
சமாளிக்காம பதில் சொல்லுங்க மாப்ளே.
நிறைய்ய பொக்கேக்கள் காத்திருக்கின்றன :)
// கானகம் said...
ReplyDeleteநல்லா இருந்தது உங்கள் தொடர்புகளும்..இனைப்புகளும்.. இனிமேதான் நீங்க குடுத்த ஒவ்வொரு சுட்டியா போய்ப் படிக்கனும்...
படங்கள் எல்லாம் கலக்கல்.. தோஹா ஷெராட்டன் ஹோட்டல் போட்டோ அருமை...//
வாங்க கானகம் மாம்ஸ்... நன்றிகள்:)
//பாரதிய நவீன இளவரசன் said...
ReplyDeleteபுகைப்படங்களோடு தொகுத்தீள்ளீர்களே.. அருமை!
அந்த கடற்கரைக் களியாட்டக் காட்சியும், விமான நிலைய ட்யூட்டி-ஃப்ரீ காட்சியும் நீங்கள் க்ளூக்கிய படங்களா? அதற்கொரு ஓ போடுகிறேன்.
ஆயில்யனின் யூகம் சரிதானா?
சமாளிக்காம பதில் சொல்லுங்க மாப்ளே.
நிறைய்ய பொக்கேக்கள் காத்திருக்கின்றன :)//
வாங்க மாம்ஸ்,ஹிஹி.. இணையத்துல சும்மா தூண்டில் போட்டு சுட்ட படங்கள்:P அவை:)))))
அப்படி ஏதாவது நல்ல விஷயம்ன்னா உங்ககிட்டல்லாம் சொல்லாமலா? பின்ன மொய் பணம் வாங்காம விட்டுவேனா?:))))))))
வருகைக்கு நன்றிகள் மாம்ஸ்:)
ஆயில்யன் யூகம் சரிதான்:)
ReplyDeleteவாழ்த்துகள் ரசிகன்..நல்ல சரம்..
ReplyDeleteகலக்கிபுட்டப்பா ரசிகா!!
ReplyDelete