07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 29, 2009

வலைச்சரத்தில் முருவின் நான்காம் பதிவு

பூக்கடை


தூரத்தில் இருந்து பார்க்கும் போதே பளபளப்பாக பல வண்ணங்களில் கண்களுக்கு குளிர்ச்சியாகத் தென்படும் தொகுப்பு, அருகில் நெருங்க, நெருங்க மனதை மயக்கும் வாசம், மல்லிகையா? ரோஜாவா? இல்லை மருகுவா? என்றால், ஒவ்வொரு அடி நடைக்கும் ஒவ்வொரு வாசனை. அந்தக் கடையைக் கடந்து செல்கையில் மனம்மாறி, வீட்டம்மாவுக்கு ஒருமுழமாவது மறுக்காமல் வாங்கிச் செல்பவர்கள் தான் அதிகம்.





விளம்பரமே இல்லாமல் எப்படி இந்த வியாபாரம்?



வண்ணமயமான பூக்களின் தொகுப்பா?, மனதை மயக்கும் மலரி நறுமணமா? இல்லை மனிதனின் மனதின் அடிஆழத்தில் மலருக்கும், அதன் நறுமணத்திற்கு மயங்கும் படி எழுதிவைக்கப்பட்ட மென்பொருளா? எனக் கேட்டால் நிச்சயம் விடை காண்தல் அறிது!



அதுபோல தமிழ்நாட்டு கிராமங்களின் புழுதி மண்ணின் வாசத்தைக் கொண்ட இடுக்கைகளை எழுதும் பதிவர்களின் பதிவை ஒரு முறை படித்தாலே, உடலை விட்டு மனம் தனியே பிரிந்து தான் சிறுவயதில் விளையாடிய தெருக்களில் போய் உட்கார்ந்து கொள்ளும் அனுபவத்தை உணரமுடிம்.


**********************************


தீராத பக்கங்கள்



என்ற பதிவை எழுதிவரும் மாதவராஜ் அவர்கள். பெயருக்கு ஏற்றபடியே மா + தவ + ராஜ் தான். கிராமவங்கியின் பணியாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தவர், ஞானபீடம் ஜெயகாந்தன் அவர்களின் பெண்ணை மணந்தவர் என்ற அடையாளங்களை எல்லாம் தாண்டிய மிக எளிமையான மற்றும் தரமான எழுத்துக்கு சொந்தக்காரர். வாழ்வில் நடக்கும் சின்ன, சின்ன விசயங்களில் கூட அழகுணர்வைக் காண்பதும், நவீனத்துவத்தால் எதார்த்ததை விட்டு விலகி வந்துள்ளதைப் பற்றி பல இடுக்கைகள் எழுதிவருபவர்.



அவற்றில் சில இடுக்கைகள்…(ஊரரிந்த பதிவருக்கு (பூக்கடைபோல்) விளக்கமோ, விமர்சனமோ கொடுக்கத் தேவையில்லை)



மனிதர்களும் மிருகங்களும் அல்லது மிருகங்களும் மனிதர்களும்


கொஞ்சம் நிர்வாணமாய் நின்று பாருங்கள்!


எங்கள் காதலில் எழுத்தாளர் ஜெயகாந்தன்!


இந்தக் கவிதைகள் உங்களை என்ன செய்கின்றன?




******************************





தமிழ் வீதி




எனும் பதிவை எழுதிவரும் ச.தமிழ்செல்வன் அவர்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தவர். பிறந்து வளர்ந்த புழுதி மண்ணுக்கு எல்லோரும் பெருமதிப்பு கொடுக்க வேண்டும் என நினைக்கிறார். இடுக்கைகளில் தெக்கத்தி கிராமங்களும், கிராம திருவிழாக்களும், திருவிழாக்களில் நடக்கும் நாடகங்களும் விளக்கப்பட்டிருக்கின்றன.



கிடாக்கறிச்சோறும் உறுமி மேளமும்....



கோடையும் அப்படித்தான்...



நாக்கின் திசைநோக்கி...







போன்றவை எனக்கு மிகவும் பிடித்த இடுக்கைகள்.
மேலே சுட்டப்பட்ட இருவரும் அரசியல் சார்ந்தவர்கள் என்பதால், அவ்வப்போது அரசியல் அடிக்கும் இடுகைகளும் வெளிவரும். நமக்கு தேவையானதை நாம் கவனமாக் எடுத்துக் கொள்வது நமது திறமை.





****************************








ருத்ரனின் பார்வை

எனது அடுத்த பெருமை மிகு அறிமுகம் மனநல மருத்துவர் ருத்ரன் அவ்ர்கள் தமிழில் எழுதும் வலைப்பூ, ருத்ரனின் பார்வை.



மேலும் விளக்கம், விமர்சனம் கொடுக்கவும் தேவையில்லை எனபதால் எனக்கு பிடித்த இடைக்கைகளின் வரிசை…



சில நேரத்து வார்த்தைகள்


உள்


*************************************




வலைசரத்தின் நான்காம் நாளை பெரிய எழுத்தாளர்கள் எழுதும் பதிவுகளை சுட்டிக்காட்ட பயன்படுத்தியது பெருமையாக உணர்கிறேன்.


மீண்டும் சந்திக்கும் வரை விடை பெறுவது,


அப்பாவி முரு
மேலும் வாசிக்க...

Tuesday, April 28, 2009

வலைச்சரத்தில் முருவின் மூன்றாம் பதிவு.,



வாழ்க்கையில் சுவாரசியமான விசயங்களில் மிகமுக்கியமான ஒன்றாக நான் கருதுவது குழந்தைகளையும் தான்.





அம்மாவின் அணைப்பில் இருந்து மெதுவாக வெளிவரும் குழந்தை, தான் உயிர் வாழத் தேவையான வேலைகளை செய்தோடு, தன்னுடைய பிறப்பின் நோக்கத்தை உறுதிபடுத்துவதுடன் மற்றவர்களையும் சந்தோசப்படுத்த ஆரம்பிக்கும்.




ஆறு மாதமுதல் மூன்று வயது வரையிலான குழந்தையின் ஒவ்வொரு செயலும், ஒரு எழுத்தில் ஆரம்பித்து மெல்ல, மெல்ல வார்த்தையாவதும், கை, காலை அசைப்பது மெதுவாக தத்து நடையாவதும், பெற்றோரையும் தாண்டி உற்றார் உறவினர்களை அடையாளம் கண்டுகொள்ளும் அந்த நாட்கள், நமெக்கெல்லாம் அலுக்காத ஆனந்த நிமிடங்கள்.




அத்தகைய குழந்தைகளுக்கு ஒப்பானவர்கள், என்னைப் போன்ற புது பதிவர்கள். ஆர்வத்துடன் நாங்களின் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு கவிதைக்கு இணையான அழகு மிளிரத்தான் செய்கிறது. அதிலிருந்து சுவாரஸ்யமான் சில பதிவர்கள் உங்களின் பார்வைக்காக….


****************************************************


மாலத்தீவு

எனும் தலைப்பில் எழுதிவரும் ராது அவர்கள். மாலத்தீவில் இருப்பதால் தீவின் இயற்க்கை அழகை, வைகரையிலிருந்து அந்தி வரையிலான பல நேரங்களில், பல கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களை அழகாக இணைத்துள்ளார்

சென்ற வார சமையல் - 3

தலைப்பில் மாலத்தீவில் மீன் பிடிப்பதில் ஆரம்பித்து, அதை சுத்தம் செய்து சமைப்பது வரை தொடர் படங்கள் தான், படத்தைப் பார்த்து யாரும் ஏங்கினால், தொடர்பிற்கு திருவாளர் ராது....



**********************


பட்டிக்காட்டான்

என்ற தலைப்பில் எழுதிவரும் கிருஸ்னமணிவேல் என்பவர். எழுதியது கொஞ்சமே என்றாலும், இவரின் கவிதைகள் மிக அழுத்தமாக உள்ளன. படிக்க, படிக்க மிக சுவாரஸ்யமாக உள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமைப் பற்றிய அக்னி சிறகொன்று கண்டேன்! கவிதையில் டேன்…டேன்… என வரியை முடிப்பது, நமக்குள் டான், டான் என விழுகிறது.






***********************




இனியவன்

எனும் தலைப்பில் எழுதிவரும் லால்குடி என். உலகநாதன். தலைப்பிற்கு ஏற்றவாறே எழுத்துகளும் இருக்கின்றன. நல்ல சிந்தனையாளராக தென்படுகிறார்.

பணம், புகழ், சொத்து மட்டுமா, வாழ்க்கை? என்ற இடுக்கையில்,
//நாம் அடிக்கடி சொல்வதுபோல், "நமக்காக இல்லாவிட்டாலும், நம் குடும்பத்திற்காகவாவது உழைக்கவேண்டும்" என நம்மை நாமே ஏமாற்றி சந்தோசத்தை தொலைக்கிறோம்.அதற்காக யாரையும் உழைக்க வேண்டாம், சம்பாதிக்க வேண்டாம் என சொல்லவில்லை. பொன், பொருள், பதவியை நோக்கி எப்போதும் அலைய வேண்டாமே எனத்தான் சொல்கிறேன்.இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான் எழுதிகொண்டிருக்கிறேன்.//
என எழுதியுள்ளார். மேலும் விளக்கம் தேவையில்லை. அவசியம் படிக்க வேண்டிய பதிவர். தவறவிட வேண்டாம்.







அன்பு நண்பர்களே முத்தான மூன்று பதிவர்களை அறிமுகம் செய்து என்னுடைய மூன்றாவது பதிவிலிருந்து விடைபெறுகிறேன்.

நன்றி கூறி விடைபெறுவது.,



மேலும் வாசிக்க...

Monday, April 27, 2009

வலைச்சரத்தில் இரண்டாம் பதிவு.





தமிழ்…


இந்த உயிர் வார்த்தையிலிருக்கும் முதல் எழுத்திற்கு நான் கொள்ளும் விளக்கம்,


த – தர்க்கம் (வாதம் – விவாதம், கற்பனை…).,


ஆம், அன்பர்களே. தமிழ் மொழியின் மூலம் மனித வாழ்விற்கு தேவையான அனைத்தையும், அடுத்த மொழி கலப்பு இல்லாமலேயே, ஒவ்வொரு நொடியையும் மிக எளிதாக அழகுணர்வு மிளிர நடத்த முடியும்.

அதற்கும் மேலாக, வாழ்வை எளிமைபடுத்தத் தேவையான வளர்ச்சியை நாம், நம் தமிழ் மொழி புலமையின் மூலமாகவே, கற்பனையின் உச்சங்களையும் வெளிப்படுத்தியே, அறிவியல் ஆராச்சிகளையும் நம் தமிழ் மூலம் வளர்த்தது, உள்ளங்கை நெல்லிக்கனி.


கன்னியை, கற்பனையால், காதலால், கவிதையால் மனைவியாக ஆக்குவதும் தமிழ்,


அணுவை பிளந்து… என்ற கற்பனையால் அறிவியலை வளர்த்ததும் தமிழ்,


பல்லாயிரக்கணக்கான நோய்களுக்கு மருத்துவம் கண்டதும் தமிழ்.



இப்பிடி வாழ்வோடு இரண்டெனக் கலந்திருக்கும் தமிழை, நவீனம் மற்றும் நாகரீக வளர்ச்சியால் கடல்கடந்து எடுத்து வந்திருந்தாலும், நேரமில்லாதக் கொடுமையைச் சொல்லி தமிழுடனான தொடர்பை முற்றிலும் அழிக்காமல், தன்னால் முடிந்தளவு காப்பாற்றி, தமிழில் எழுதிவரும் அனைவருக்கு நன்றி கலந்த வணக்கம் சொல்லி,

இன்று சில பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன்.


பிரியமுடன்.... வசந்த்.

பாரமான மனதின் அழுத்தத்தை குறைக்க விரும்புபவர்களுக்கான சிறந்த பதிவர். பாதி எழுத்து, பாதி படம் என ரொம்ப எதார்த்தமான இடுக்கைகளை வெளியிடுபவர்.

வயசுப் பெண்களுக்கு எந்த உடை எடுப்பா இருக்கும் என ஆர்குட்டில் ஒரு கருத்துகணிப்பு நடத்தி, பெரும்பாலான ஆண்கள் விரும்புவது தாவணியேன்னு ஒரு இளமை துள்ளும் பதிவு, அழகான பெண்களின் படத்துடன் இடுக்கையிட்டிருக்கார்.


^^^^^^^^^^^^^^^^

ரசிகன்..

என்ற தலைப்பில் எழுதிவரும் மகேஸ் அவர்கள், மேலே சொன்னவருக்கு இணையான பதிவர்.

பின்நவீனத்துவ பிறந்தநாளும் இன்ன பிறவும்! இந்த இடுக்கையில் விடுதியில் நடந்த பிறந்தநாள் கொண்டாடிய விதத்தை படத்துடன் விளக்கியிருக்கிறார். படித்து, இதே போல் நண்பரின் பிறந்தநாளை கொண்டாட விரும்புகிறவர்கள் மேலதிக தகவல்களுக்கு அன்பர் மகேசை அணுகவும்.

நண்பர் மகேஸ், நாட்டிய பேரொளி பத்மினியின் தீவிர ரசிகர் எனபது நாட்டியப் பேரொளி என்ற பதிவில் பப்பியைப் பற்றி விலாவாரியாக எழுதியிருப்பதிலேயே தெரிகிறது.


^^^^^^^^^^^^^^^^^^^^^

என்ற தலைப்பில் எழுதிவரும் மலர் அக்கா. இதுவரை பத்து பதிவுகள் தான் எழுதியிருந்தாலும், பத்தும், பத்து ரகம். ஆனா, எல்லாமே சுவாரசியமோ, சுவாரசியம்...

நான் ஒரு கதை படித்தேன் (படித்ததில் பிடித்தது ) இந்தக்கதை மூலமா, வீட்டில் இருக்கும் பெண்கள் மீது போறாமைபடும் ஆண்களுக்கு மறைமுகமா எச்சரிக்கை விடுறாங்க.
படிங்க, கவனமா இருங்க...


நான் படித்ததில் பிடித்தது . இதில் நம் மலர் அக்கா எல்லாருக்கும் நல்புத்தி சொல்றாங்க.
ப்ப்போப்பான்னு சொல்லாம, இடுக்கையை படிச்சு பண்போடு நடந்துக்கங்க மக்களே...


பொன்னான நேரத்தை என்னோடு செலவழித்த நல் உள்ளங்களுக்கு,

நன்றி சொல்லி விடைபெறுவது..

அப்பாவி முரு.
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் முருவின் முதல் பதிவு.




அகர முதல எழுத்தெல்லாம், ஆதி


பகவன் முதற்றே உலகு.



அன்புடையோர் அனைவருக்கும் முதல் வணக்கம். அப்பாவியாய் காலத்தை தள்ளிக்கொண்டிருந்த என்னை, வலைச்சரம் தொடுக்க அழைத்த போது. இனம் புரியாத பயம், மின்னலால் மூளையின் ஓர் மூலையில் தோன்றி நொடியில் மறைந்தது.


அப்பரும், சுந்தரரும், எம்பெருமான் முருகனும் வீற்று அலங்கரித்த தமிழ்ச் சங்கத்தில், மதுரையம்பதியில் திருவிளையாட்டால் தமிழ் தராசு நக்கீரனுடன், பேரவா தருமியும், அவையில் வீற்று, சொல்லால் வாதடி? தோல்வியிலும், வெற்றி!(பொற்கிழி) கண்ட வரலாறு, பெரிய புராணமாய் தமிழில் இருக்கையில்,
நவீன அப்பர்களும், சுந்தரர்களும் அலங்கரித்த வலைச்சரத்தில், நாமறிந்த மதுரையம்பதி ( சீனா ஐய்யா) –வின் திருவிளையாட்டுகளின் நாம் ஒரு பகுதியாக்கப்பட்டோம். நவீன நக்கீரர்களால் நம் அவை நிறைந்திருந்தாலும், பாராட்டு – பரிசில் ஏதும் எதிர்பார்க்காமல், தயக்கமேதும் இல்லாமல், தருமியாய் வந்திருக்கிறேன்.



நக்கீரனின் வாதம், சொல்லில்(எழுத்து) பிழை இருந்தாலும், பொருளில் பிழை இல்லாத எழுத்து!.



என்பதை எனக்கு தாரகமாக்கி, நான் எழுதும் எழுத்துகளில்(பதிவுகளில்) என்றும் கருத்து பிழை (பிறர் மனதை நோகாமை) வராமல், பல பதிவுகள் பதிந்து வந்துள்ளேன். பெரிய தாக்கத்தையோ, பாதிப்பையோ, பரபரப்புகளையோ பதிவுலகத்தில் நாட்டாவிட்டாலும்,


என்பதிவில் அறுசுவை இருக்கிறதோ?, இல்லையோ?, அன்னையின் அணைப்பைப் போல், வலி தராத நெருக்கம் இருக்கிறது என நம்புகிறேன்.


அடித்து திருத்துவது என் நோக்கமல்ல. நீங்கள் உண்மையை உணர்வது மட்டுமே என ஓடிக்கொண்டிருக்கிறேன்.



பலரைப் போலவே, பின்னூட்டம் போடவே ப்ளாக்கர் ஆரம்பிதது, மடலில் வரும் புகைப்படங்களை, பதிவுளாக்கி வந்த நேரத்தில், நண்பர் கார்க்கியின் ஆலோசனையின் பேரிலேயே சொந்த கருத்துகளை எழுத ஆரம்பத்தேன். எப்படியோ அறுபது பதிவுகளுக்கும் மேல் ஓட்டம் நிற்க்காமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்.



பதிவுகள் பல எழுதியிருந்தாலும், சர்ச்சையில் இதுவரை சிக்கியதில்லை. காரணம், அத்தனையும் பாதிக்கப்பட்டர்களின் பார்வைகளையே எழுதியது தான். அவற்றில் சில பதிவுகளை உஙகளோடு பகிர்ந்து கொள்கிறேன்.





இலங்கையிலிருக்கும் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டும் காணாத, இந்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்க்காக, தீக்குளித்து இறந்து போன முத்துக்குமரனின் தந்தையின் தற்போதைய மனநிலை எத்தகையதாக இருக்கும் என்பதைப் பற்றியதான பதிவு... ·





உலகில் பல நாடுகளைத் மடடுமில்லாது, ஓவ்வொரு தனிமனிதனையும் தாக்கிய பொருளாதார நெருக்கடியை கண்டு நொந்து மூலையில் முடங்காமல், அதை எந்த வகையில் நமக்கு சாதகமாக்கலாம் என எழுதிய பதிவு... ·




குடிப்பழக்கத்தால் வாழ்வை முடமாக்கிக் கொண்டவரைப் பற்றிய பதிவு. சொந்த ஊர்க்காரர் என்பதால் அவரைப் பற்றியும், போதையில் அவருக்கு ஏற்பட்ட விபத்தினால் வந்த மாற்றங்களைப் பற்றி தெரிந்ததை முழுதாய் எழுதிய பதிவு... ·




சகமனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் கேவலமான பழக்கங்களினால் பணம் சம்பாரித்தது மட்டுமில்லாது, அடுத்தவரை கேலி பேசும் மனிதரை சாடும் பதிவு... மற்றும் பல பதிவுகள்...


பின்னூட்டங்களில் பலர் என் கருத்தை ஆதரிப்பதும், யூதஃபுல் விகடனில் எனது மூன்று பதிவுகளுக்கு இடம் கொடுத்து சுட்டி கொடுத்ததும், எனக்கே என்மேல் திருப்தியை ஏற்படுத்தியுள்ளன.



வலைச்சரத்தில் எனது முதல் நாளை தன்னிலை விளக்கத்தில் (நிச்சயம் தற்புகழ்ச்சி அல்ல, என்னைத் தெரியாதப்படுத்தவே) கடத்திவிட்டேன். இனி வரும் பதிவுகளில் எனக்கு பிடித்த பல பதிவர்களை (உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் பலர் இருக்கலாம்), எனது பார்வையில் அறிமுகம் செய்கிறேன். பொறுமைக்கு நன்றி கூறி, தற்காலிக விடை பெறுவது,


மேலும் வாசிக்க...

Sunday, April 26, 2009

பிரபுவினிற்கு நன்றியும் - முருவினிற்கு வாழ்த்துகளும்

அன்பின் பதிவர்களே

சென்ற ஒரு வாரமாக ஆசிரியர் பொறுப்பினை ஏற்றிருந்த பிரபு ஆறு பதிவுகள் இட்டு விடை பெறுகிறார். அறிமுகப் பதிவினில் கம்பரின் கூற்றினை இட்டு, படைப்பாளி அல்ல ரசிகன் தான் என அடித்துக்கூறி அறிமுகம் செய்த பிரபு பல சுவையான சுட்டிகளினை அளித்தார். பல புதிய பதிவர்களையும் அறிமுகப் படுத்தி அமர்க்களப் படுத்தினார். அவருக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகளைத் தெரிவித்து விடை அளிக்கிறோம்.

நாளை 27ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க வருகிறார் - சிங்கையில் வசிக்கும் முரு அவர்கள். தன்னை அப்பாவி என அழைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைபவர். கருத்து அல்லது செய்தி கூறுவதில் உடன்பாடில்லை என பதிவுகள் அனைத்தயுமே படிப்பவர்கள் கருத்தினிற்கே விட்டு விடுகிறார். அருமை நண்பர் முருவினை வருக வருக நல்ல அறிமுகங்கள் தருக தருக என வாழ்த்தி வரவேற்கிறோம்

நட்புடன் ..... சீனா
---------------------
மேலும் வாசிக்க...

நன்றியுடன் விடைபெறுகிறேன்

வேலை நேர மாற்றத்தினால் ஏற்ப்பட்ட குழப்பத்தால் 6 வது நாள் பதிவு இடவில்லை . வலைச்சர ஆசிரியர் பணி எனக்கு புதிய அனுபவம் , இந்த வாய்ப்பினை தந்த சீனா அவர்களுக்கும் பின்னூட்டம் இட்ட அன்பர்களுக்கும் என் நன்றிகள் .
அடுத்த ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்
மேலும் வாசிக்க...

Friday, April 24, 2009

இனிய ஐந்தாவது நாள்



நான்கு வெவ்வேறு நாட்டை சேர்ந்த வியபாரிகள் ஒன்றாக பயணம் செய்தார்கள் அப்போது வழியில் அவர்களுக்கு பசி எடுத்தது , கையில் குறைந்த அளவே பணம் இருப்பதால் நால்வரின் பணத்தையும் சேர்த்து ஏதாவது வாங்கி அதை பங்கிட்டு சாப்பிட முடிவுசெய்தார்கள். அதில் அரேபியன் எனக்கு inab வேண்டும் என்றான் , கிரேக்கன் stafil வேண்டும் என்றான் , துருக்கியன் uzum வேண்டும் என்றான் , பெர்ஷியன் angkuur வேண்டும் என்றான் . இப்படி ஒவ்வொன்றாக சொல்ல அவர்களுக்குள் சண்டை வந்துவிட்டது . அப்போது அந்த வழியாய் வந்த ஒரு பெரியவர் அவர்களிடம் நடந்ததை கேட்டு தெரிந்துகொண்டார். பணத்தை என்னிடம் கொடுங்கள் உங்கள் நால்வரின் தேவையையும் பூர்த்திசெய்கிறேன் என்றார். பணத்தை பெற்று சென்று ஒரு கூடை நிறைய “திராட்சை” பழங்களோடு வந்தார் . அதை பார்த்த அரேபியன் நான்கேட்ட inab இதுதான் என்றான் , கிரேக்கன் தான் கேட்ட stafil அதுதான் என்றான் ,துருக்கியன் தான் கேட்ட uzum இதுதான் என்றான் , பெர்ஷியன் தான் கேட்ட angkuur இதுதான் என்றான் . ஆக அவர்கள் அனைவரும் தங்களுக்கு “திராட்சை”-தான் வேண்டும் என்று அவரவர் மொழியில் கேட்டுள்ளார்கள் , அதை புரிந்துகொள்ளாமல் சண்டை போட்டுக்கொண்டுள்ளார்கள்.

உலகில் உள்ள எல்லோருக்கும் அன்பான , அமைதியான வாழ்வு வேண்டும் என்பதே ஆசை , கடவுளும் மதமும் இதைத்தான் செல்கின்றன ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் , ஒருவர் உணர்சிகளுக்கு ஒருவர் மதிப்புகொடுக்காமலும் சண்டை போட்டுகொண்டுள்ளார்கள் . இதை புரிந்துகொண்டால் எல்லா நாளும் இனிய நாளே….

…………………………..

http://kinatruthavalai.blogspot.com/
கிணற்றுத் தவளை.... என்று எழுதி வருகிறார்
. 3 பதிவுகள் மட்டுமே இட்டுள்ளார் .


வாழ்ந்த நேரம் மட்டும்

வயதுக் கணக்கானால்
நான் இன்னும் கைக்குழந்தைதான்
- அருமையான வரிகள் . மேலும் நிறைய எதிர்பார்க்கலாம்.
மேலும் வாசிக்க...

Thursday, April 23, 2009

உலக புத்தக தினம்


' கற்க கசடற கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.'- குறள் எண்: 391.

நல்ல புத்தகத்தை வாசிப்பதும் , நல்ல படங்களை நேசிப்பதும் கவுரவமான விடயமாக மாற வேண்டும் – வெ . இறையன்பு

இன்று உலக புத்தக தினம். உலகப் புத்தக நாள் என்பது யுனெஸ்கோ நிறுவனத்தின் தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் ஏப்ரல் 23 அன்று புத்தகம் தொடர்பான விழிப்புணர்வுகளுக்காகக் கடைப்பிடிக்கப்படும் சிறப்பு நாளாகும்.

பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,

"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"

ஷேக்ஸ்பியரின் பிறந்ததினமான ஏப்ரல் 23 அன்று உலகப்புத்தக தினம் கடைப்பிடிக்கப்படுவதை பொருத்தமானதாகக் யுனெஸ்கோ மாநாடு கருதியது. ஷேக்ஸ்பியர் மறைந்த தினமும், செர்வான்டிஸ், இன்கா போன்ற இலக்கியவாதிகள் மறைந்த தினமும் இதுதான்.

உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
( நன்றி
விக்கிப்பீடியா )

புத்தகம்தான் என் முதல் நன்பன். சிங்கை நூலகங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் . பழக்கமில்லாத ஊர் , அறியாத நபர்கள் , புரியாத மொழி என எல்லாம் என்னை குழப்பிய நேரத்தில் எனக்கு ஆறுதல் தந்தது புத்தகங்கள்
தான்
“மனித மனம் ஒரு நாய் போல , அதற்க்கு சரியான உணவை நாம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த நாய் மலம் திண்ண சென்றுவிடும்” – (பிரபு)(????) . புத்தகங்கள்தான் சரியான உணவு
வலைப்பூக்களில் பலர் தங்களின் புத்தக அனுபவம்/விமர்சனம் எழுதுகிறார்கள் . நான் ஏற்க்கனவே கிருஷ்ணா பிரபு –வின் பதிவுகளை குறிப்பிட்டிருந்தேன் .
மேலும் சில பதிவுகள் இங்கே
புரட்டிப் போட்டு விட்டப் படைப்புகள் பற்றி எழுதிவருகிறார் சிவக்குமார்
http://bookimpact.blogspot.com/
ஜேஜே சில குறிப்புகள் , மோகமுள் - தி ஜானகிராமன் என்று பட்டியல் நீளும் படித்து பருங்கள்

திருத்தம் என்ற பெயரில் நல்ல பயனுள்ள பதிவுகளை இட்டுவருகிறார்
இளமுனைவர் பொன்.சரவணன் - http://thiruththam.blogspot.com

புத்தகM என்ற பெயரில் தன் புத்தக அனுபவங்களை விளக்கியுள்ளார் சேரல் - http://www.puththakam.blogspot.com/

மேலும் சில
யாழிசை ஓர் இலக்கிய பயணம்......
தமிழ் காமிக்ஸ் உலகம்
http://www.tamilbookreview.blogspot.com/

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி படிக்க
இங்கே செல்க
மேலும் வாசிக்க...

Wednesday, April 22, 2009

நாட்டுப்புற பாட்டு


நாட்டுப்புற பாட்டில் ஒரு அழகு இருக்கும் , எனக்கு பிடித்த ஒரு படல்
இங்கே

பெண் :
மாமனாரும் தண்ணிகொண்டு
மாமியாரும் சோறுபொங்கி
நாத்தனாரும் பரிமாற , மாமா
நானும் வந்து துண்னவேனும்

ஆண் :
எனக்கு என்ன வேலவெச்ச பொண்ணே
இருந்தா அதையும் சொல்லிவிடு
பிசகு இல்லாம சொல்லி வச்சா , நானும்
பொண்டாட்டிக்கு சேத்துக்குவேன் !

பெண் :
படுக்கநல்ல பாயப்போட்டு , மாமா
பக்கத்திலே நீயமர்ந்து
விசிறியெடுத்து வீச வேணும் , மாமா
வேணுமுன்னா காலப் பிடிக்கவேணும்

ஆண் :
உன்னப்போல நூறு பெண்கள்
ஊருக்குள்ள இருந்தா போதும்
பொண்டாட்டியே எனக்கு வேணாம் பெண்ணே
போயிட்டுவாயுன் தாய் வீட்டுக்கு


எங்கேயோ படித்தது , எப்படியிருக்கு ?
….

பழமைபேசி அவர்களின் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் , எழுத்தாற்றல் அவருக்கு இயல்பாகவே/இயற்க்கையகவே இருந்திருக்க வேண்டும் . அவரிம் ஒவ்வொரு பதிவிலும் பல புதிய வார்த்தைகளை நமக்கு கற்றுதருவார் . பல வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுக்க கனவில் கவி காளமேகம் என்று தொடர்ந்து எழுதிவருகிறார் . எல்லா பதிவுகளுமே அருமையானவை . சென்று பார்த்து பயனடையுங்கள்

அப்பாவி சிங்கை பதிவர் , விவகாரமான விடயங்களையும் விளையாட்டாய் எழுதுகிறார் .
முரு என்ற நான்... பதிவை பாருங்கள் . உங்களுக்கு பிடிக்கும்

அம்மா அப்பா – ஆ.ஞானசேகரன் சொல்லதான் நினைக்கின்றேன்.... என்று ஒரு குரங்கு கதை சொல்லி பங்குசந்தை பற்றி விளக்கியுள்ளார்
மேலும் படிக்க
சொல்லதான் நினைக்கின்றேன்....
மேலும் குழந்தையும்; கணணியும்..... பதிவும் சிறப்பாக இருக்கும்

மேலும் வாசிக்க...

Tuesday, April 21, 2009

தேனீர் கோப்பையும் உபதேசமும்

ஒரு கதை

ஒருத்தர் உபதேசம் கேட்பதற்க்காக ஒரு ஞானியிடம் சென்றார் , அவர் முகத்தை உற்று பார்த்த அந்த ஞானி “இன்று போய் நாளை வா” என்று கூறிவிடுகிறார் .மேலும் சில நாட்கள் தொடர்ந்து அவர் வந்தும் ஞானி அதே பதிலை கூறுகிறார் . அதனால் வெறுப்படைந்த அவர் ஒரு நாள் “இன்று கண்டிப்பாக உபதேசம் செய்யனும்” என்று கூறினார். உடனே ஞானி தன் சீடனை அழைத்து இருவருக்கும் தேனீர் கொண்டுவர சொன்னார் . அந்த தேனீரை ஒரு சிறு கோப்பையில் ஊற்றுகிறார் அப்போது அந்த கோப்பை நிரம்பி தேனீர் கீழே வழிகிறது . அதை பார்த்த அந்த நபர் ஞானியின் கைகளை பிடித்து “அதுதான் நிரம்பி வழிகிறதே ஏன் இன்னும் ஊற்றுகிறீர்கள்” என்று கேட்டார் . அதற்கு அந்த ஞானி “இது போலத்தான் உன் மனமென்னும் கோப்பையும் நிரம்பியுள்ளது அதில் மேலும் என் உபதேசங்களை இட்டால் அது கீழே வழிந்து வீணாகிவிடும் , எனவே உன் மனதை காலியாக்கிகொண்டு வா நான் உபதேசிக்கிறேன்” என்று கூறினார்


மற்றவர்களிடம் கருத்து கேட்கும் போதும் , நம் நலம்விரும்பிகள் நமக்கான கருத்துக்களை சொல்லும் போதும் நம் மனதை காலியாக வைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டு பின்பு நம் கருத்துகளோடு ஒப்பிட்டு யோசித்து முடிவு எடுக்கலாம் அதுவே நலம் . ஒரு குழந்தையிடம் இருந்தும் நமக்கான பாடங்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு
…………….

அடுத்து சில அறிமுகங்கள்


நானே ஒரு அறிமுகம் , எனவே எனக்கு தெரிந்த , நான் ரசித்த பதிவுகளை இங்கே குறிப்பிடுகிறேன் . அவர்கள் “பிரபல” பதிவர்களாக கூட இருக்கலாம்

** குந்தவை http://kunthavai.wordpress.com

சின்ன சின்ன விடயங்களை கூட ஒரு பதிவாக இட்டுவிடுவார் . சற்று நகைச்சுவை உணர்வுடன் எழுத கூடியவர் . அவரின் கணவருக்கு விக்கல் வர , அதை நிருத்த குந்தவை அக்கா செய்த செயலை Shock என்ற இந்த பதிவில் பார்தால் தெரியும் (பிறகு நமக்கு விக்கலே வராது) . அப்படியே குழந்தை சொன்ன உண்மை. என்ற பதிவில் அவர் நடத்தும் அரசியலையும் கவனிக்கவும்


*** கிருஷ்ணா பிரபு
http://online-tamil-books.blogspot.com/

நிறைய புத்தகங்கள் படிப்பவர் . அந்த புத்தகங்களை பற்றி விளக்கமாக தன் கருத்துக்களை தன் வலைப்பூவில் பதிவிடுகிறார், Ezhaam Ulagam - Jeyamogan பற்றி கடைசியாக எழுதியுள்ளார் . இவற்றை படிக்கும் போது புத்தகங்களை அவர் எவ்வளவு ஆழமாக படிக்கிறார் என்பது நமக்கு புரியும் . அவரின் வலைப்பூவிற்கு முதல் பின்னூட்டம் இட்டவன் நான் என்பதை பெருமையாக சொல்வேன்
மேலும் சில புத்தகங்கள் பற்றி அவர்
நிலமெல்லாம் ரத்தம் – பா.ராகவன் , இந்தியா – சீனா எல்லை பிரச்சனை , ஹிட்லர் - முதல் உலகப் போர்: சாமி நாத சர்மா , முல்லை பெரியாறு - அணையா? நெருப்பா?: ஊரோடி வீரகுமார் , இப்படி பல உள்ளது.நீங்களே சென்று படித்து பாருங்கள் பயனுள்ள வலைப்பூ

***
நவின் பிரகாஷ் http://www.naveenprakash.blogspot.com/

கொஞ்சும் காதல் கவிதைகள் நிறைந்த பகுதி . ஒவ்வொரு வரியிலும் காதல் சொட்டும் . தபுசங்கரின் கவிதையை போல எளிய நடையில் இருக்கும்

மீண்டும் சந்திப்போம்

*******

முதல் நாள் - மாணவன் ஆசிரியராக !!

*******

மேலும் வாசிக்க...

Monday, April 20, 2009

ஒரு மாணவன் ஆசிரியராக !!!!


எனக்கு இந்த வார ஆசிரியர் பணி கொடுத்த சீனா அவர்களுக்கு என் நன்றி

அறையும் ஆடரங் கும்படப் பிள்ளைகள்
தரையிற் கீறிடில் தச்சருங் காய்வாரோ
இறையு ஞானமி லாத என் புன்கவி
முறையி நூலுணர்ந் தாரும் முனிவரோ ?


இது “தற்சிறப்பாயிரம்“ – ல் கம்பர் சொன்னது , இதையே சொல்லி நானும் என் ஆசிரியர் பணியை துவங்குகிறேன் . இது பணிவு அல்ல இதுதான் உண்மை . நான் ஆசிரியன் அல்ல மாணவன் . நான் படைப்பாளியல்ல ரசிகன் . என் படைப்புகள் எல்லாம் என் ரசனையின் பிரதிபளிப்பே

என் அறிமுகம்
எனது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் “ பொத்தனூர்" . இப்போது வேலைக்காக சிங்கப்பூரில் .வலைப்பூ என்றால் என்ன என்று தெரியாமலேயே அதை துவங்கினேன் , பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுகொண்டேன் . அதிகம் படிப்பதையே விரும்புகிறேன் அதனால்தான் வலைப்பூ துவங்கி 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை 37 பதிவுகள் மட்டுமே இட்டுள்ளேன்

இனி என் பதிவுகளின் அறிமுகம்
ஆனாலும் காதலிக்கிறோம் என்று ஆரம்பித்து காதல்....காதல்........ காதல்.......................... என்று ஒரே காதல் மழையாகதான் இருக்கும்
காதல் மனைவியும் காலண்டர் முருகரும் , என் மாமாவின் கலியாணம் முடிவானதும் மாமாவுக்கு கல்யாணம் என்று எழுதி அவருக்கு அனுப்பினேன் இவை இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தவை

காதல் கதை மற்றும் இதே நாள், இதே மண்டபம் என்று கதையெழுதவும் முயற்சித்துள்ளேன் , பெண்களை வர்ணிக்கும் காதல் கவிதைகள் மட்டுமே இருப்பதாக நன்பர்கள் சொன்னதால் நாய்களை கண்டால் பயம் எங்களுக்கு என்றும் எழுதியுள்ளேன் . சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் என்று தமிழ் திரைப்பட பாடல்களின் மெட்டுக்களுக்கு நான் பாடல் வரிகள் எழுதியுள்ளேன்

மீண்டும் சந்திப்போம்....
மேலும் வாசிக்க...

வழி அனுப்புதலும் - வரவேற்றலும்

அன்பின் பதிவர்களே



ஒரு வார காலம் நமது மாதங்கி அவர்கள் ஆசிரியராகப் பொறுப்பேற்று அமர்க்களமாகச் சரம் தொடுத்து அருமையான பதிவுகள் ஏழு இட்டு - புதிய பதிவர்கள் பலரையும் அறிமுகப் படுத்தி - பல அரிய பதிவுகளுக்குச் சுட்டியும் அளித்து - கொடுத்த பொறுப்பினை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார். அவருக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றி கூறி விடை அளிக்கிறோம்.

அடுத்து இருபதாம் நாள் துவங்கும் வாரத்திற்கு நண்பர் பிரபு ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் இலக்கணம் படித்ததில்லை - தலைக்கனமும் தன்க்கில்லை என்பதனை தலைப்பில் பொன்மொழியாகச் செதுக்கி வைத்து "பிரியமுடன் பிரபு " என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். "படித்ததில் பிடித்தது " மற்றும் "கிரிக்கெட் உலகம்" என்ற வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார். பட்டாம்பூச்சி விருது பெற்ற நண்பர் பிரபுவினை வருக வருக என வரவேற்று வாழ்த்துகிறோம்.

சீனா
மேலும் வாசிக்க...

Saturday, April 18, 2009

நன்றி விடைபெறுகிறேன்

பலருடைய பதிவுகளைப் படிக்கவும், பல புதியனவற்றைத் தெரிந்துகொள்ளவும் இந்த வலைச்சர ஆசிரியப்பணி உதவியது. வாய்ப்பு நல்கிய திரு. சீனாவிற்கும், வழிகாட்டிய பெயர் சொல்ல விரும்பாத நண்பருக்கும், இந்த ஒரு வாரமாக நான் இடும் பதிவுகளைப் படித்து வந்தும், கருத்துகளை தெரிவித்த உங்களுக்கும் என் நன்றி.


என் பதிவுகளில் சிலவற்றை இங்கே அளிக்கிறேன்.



1. சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் ஈழப்பெண்களின் கவிதைகள் என்ற நூலைப் படித்து பின் எழுதியவை.



http://www.clickmathangi.blogspot.com/2007/01/blog-post.html



2. உங்களுக்கு வயதாகிவிட்டது என்ற தலைப்பில்

ஒரு கவிதை



http://www.clickmathangi.blogspot.com/2008/02/blog-post.html



3. தேக்கா வெட்டவெளியில் என்ற கவிதை





http://www.clickmathangi.blogspot.com/2007/09/blog-post.html



4. இரண்டு கடிதங்கள்

http://www.clickmathangi.blogspot.com/2007/12/blog-post.html




5. http://www.clickmathangi.blogspot.com/2006/02/blog-post.html

நீங்க எப்படிங்க? கொஞ்சம் சொல்லுங்க

1.கைக்குழந்தை முதல் மூன்று அல்லது நான்கு வயது குழந்தையின் அம்மா அப்பாவைக் கேட்டால் சொல்வாங்க; சரியா அஞ்சு மணிக்கு எழுந்து ஊரைக் கூட்டும்;
அடுத்தவர் "அஞ்சா; நீங்க கொடுத்து வச்சவரு; எங்க வீட்டில நாலு மணிக்கு சவுண்ட் கொடுத்தால் அப்புறம் யாரும் தூங்கினாப்பலதான்". மூன்றாமவரோ " நீங்கல்லாம் ரொம்ப அலட்டறீங்க, எங்க வீட்டு வாண்டு மூணு மணிக்கு எழுந்து கொட்டை பாக்கு மாதிரி விழிச்சுக்கும்; அப்புறம் பாத்ரூம் போறது, பாலைக்குடிக்கிறதுன்னு, தினந்தோறும் தீபாவளிதான்; தூங்கு தூங்குன்னு கதை சொல்லி பாட்டு பாடி, மிரட்டி, நமக்கு தாவு தீர்ந்துரும்; ஆனா பாருங்க அது நல்லா தெம்பா விளையாடும்".


இதை அப்படியே கொஞ்சம் வருஷம் பாஸ்ட் பார்வேர்ட் பண்ணிப்பாருங்க; பையனோ பெண்ணோ பதினஞ்சு இருபது வயது ஆகியிருக்கும். காலைல மணி எட்டுதான் ஆகியிருக்கும்; அதுபாட்டு சிவனேன்னு தூங்கிட்டு இருக்கும்.; அதை நிம்மதி தூங்க விடமாட்டாங்க; எழுப்பு எழுப்புன்னு எழுப்பி, பயமுறுத்தி, வருங்காலத்தைக் காட்டி வசைபாடி எழுப்புவாங்க; ஆனா பசங்க எழுந்தாதானே. யாருக்கு ஊதற சங்கோன்னு நல்லா இழுத்து தலையோட போத்திட்டு தூங்கும். சிறிசா இருக்கசொல்ல சீக்கிரம் எழுந்தத்துக்கு பாராட்டினீங்கனா அதுங்க ஏங்க எட்டு வரைக்கு இழுத்து போத்திகிட்டுத் தூங்கப் பழகுது?



2. அடுத்து இந்த பல்லு விளக்கறது குளிக்கிறதும் பாருங்க; இப்படி பல்லுதேய், அப்படி பல்லுதேய், வாய ஆன்னு திற, நல்லா அழுத்து இல்லைனாக்க ஓட்ட வந்துரும், நல்லாத் துலக்கு, கண்ணாடியப் பாரு வாயோரத்தில் நுரை இருக்கு; நல்லா அதுல பாத்துகிட்டே விளக்கு, என்ன ஒரு நிமிசத்துல விளக்கிட்டன்னு ஒரு ஆறு ஏழு வயசாறப்போ போட்டு பிடுங்குவாங்க பாருங்க; அதுவும் வேற வழியில்லாம சொன்னபடி ஆடும், இல்லைன்னா அடின்னு வேறு அன்பால கொல்லுவாங்களே.


இதே ஒரு பதினேழு பதினெட்டு வயசுல பாருங்க, அதுங்க பாட்டு அம்மா அப்பா சொல்லித்தந்தபடி நல்லா கண்ணாடிய பாத்து பாத்து தேய்க்கும்; ஆ ன்னு காட்டி தேய்க்கும், ஈஈன்னும் சொல்லிக்கிட்டே தேய்க்கும், அப்படி தேய்ச்சிட்டு பல்லு நல்லா இருக்கா, முகம் சுத்தமா அழகா இருக்கான்னு ஒரு ரெண்டு மூணு வாட்டி கண்ணாடிய பாத்துக்கிட்டே தேய்க்கும்;
இந்த அம்மா அப்பா இருக்காங்களே பாராட்டுவாங்கன்னு நினைக்கிறீங்களா- அது என்ன எத்தனை வாட்டி கண்ணாடிய பாப்ப பொழுதன்னிக்கும் இதே வேலைதான்; சட்டுபுட்டுன்னும் வந்தமா பல்லு விளக்கினமான்னு போய்ட்டே இருக்கணும்ன்னு ஒரு அதட்டு போடுவாங்க பாருங்க, எல்லாம் சத்தமில்லாம ரூமில கைக்கண்ணாடில பாத்துகிட்டே இருக்கும்.


3. அஞ்சு வயசுல குழந்தைங்க குளிக்கற அழகை பாத்திருக்கீங்களா? அப்படி அழகா குளிக்கும்; நல்லா குழாய திறந்து விட்டுட்டு, இல்ல ரொப்பி வச்ச வாளிலேந்து எடுத்து எடுத்து ஊத்திக்கிட்டு, அம்மா வச்சிருக்கிற சோப்பை ஒருநாளைக்கு ஒரு சோப்பு போலிருக்குன்னு நெனச்சுகிட்டு எடுத்து அப்படி தேச்சுதேச்சு தண்ணிய ஊத்தி, நுரை நுரையா செஞ்சு, உடம்பெல்லாம் நல்லா தேய்ச்சு, கால்பாதத்துக்கடியில தேய்ச்சு, பாத்ரூம் தரைல சறுக்கு விளையாட்டு விளையாடி, ஷவர் கிவர் இருந்தா, பாத்ரூம் சுவரெல்லாம் அம்மாவோட ஷாம்புவால மணக்க மணக்க கழுவிவிட்டு, பாத்ரூம் கதவெல்லாம் சுத்தம் செய்து, அப்பாவின் சேவிங் சோப்பும் ப்ரஷ¤ம் எடுத்து தரையத் தேய் தேய்ன்னு தேச்சு அப்படி சுத்தம் செய்யுங்க-

ஆகா என்ன அழகா குளிச்சுகிட்டே வேலை செய்யறன்னு பாராட்டுவாங்கன்னு நெனக்கிறீங்களா, கிடையவே கிடையாது- நல்ல பூசை, தோசை கிடைக்கும். தோசைன்னா தின்னுற தோசைன்னு நெனச்சுக்காதீங்க. ஆசைப்படி குளிக்கவும் விடமாட்டாங்க; வீட்டு வேலை செய்யவும் விடமாட்டாங்க.

சரி அப்படியே இதெ பாஸ்ட். பார்வர்ட் பண்ணி இருபது வயசுக்கு வந்துருங்க- இதே அம்மா அப்பாதான், குளிப்பா, குளிம்மான்னு விதவிதமா கெஞ்சுவாங்க; அதுங்க தேமேன்னு உட்கார்ந்திருக்கும். புது சோப்பு , ஷவர் எல்லாம் இருக்கும் ஆனா பாவம் அதுங்களுக்கு குளிக்கற ஆசையே போய்டும். வீட்டுல ஒரு துரும்ப எடுத்துப் போடணும், பாத்ரூமையோ வீட்டையோ கழுவணும் அப்படிங்கற எண்ணமே போயிடும். இதுக்கு யாருங்க காரணம்?




4. கடைசிய இந்த சாப்பாடுன்னு ஒண்ணு இருக்கே; அதை வச்சு பசங்களை ஒரு வழியில்லங்க, ஒம்போது வழி பண்ணிடுவாங்க இவங்க;

குழந்தைக்கு ஒரு வயசு, ஒண்ணரை வயசு இருக்கும், ஏதோ சீரியல் (தின்ற சீரியலுங்க) கூழு, வேக வச்ச காய், இல்ல அத்தையும் இத்தையும் அரைச்சு கலக்கி ஒண்ணு, பருப்புப்கூழு இல்ல பருப்புசாதம், இட்டிலி அப்படின்னு எப்பவும் தின்னுகிட்டே இருக்கமே;

இந்தப் பெரியவங்க எல்லாம், நல்லா கலர் கலரா, காரக் குழம்பு சாதம், புளிசாதம், அவியல், கூட்டு, நான் (நான் இல்லீங்க நான், குல்ச்சா, பரோட்டா அதெல்லாம்) கலர்கலர் கோப்தா உருண்ட, மசாலான்னு வீட்டுலயும் ஹோட்டல்லையும் வெட்டுறாங்களே , அது என்னான்னு பாக்கலாம்னா- சும்மா பாக்கத்தாங்க- அத ஓரக்கண்ணால பாக்கக்கூட விடமாட்டாங்க; கண்ணு, செல்லம், வெல்லம், இதெல்லாம் ஒடம்புக்கு ஆகாது, உனக்கு பப்பு மம்மு இருக்கு, காரம்- இது வேணாம் அப்படின்னு கதையளக்கறாங்க- அப்ப நீங்க ஏன் சாப்புடறீங்கன்னு கேளுங்க- சொல்ல மாட்டாங்க அவங்களுக்கு ஒரு சேஞ்சு வேணுமாம்-

எங்களுக்கு அதே சப்பூன்னு பப்பு மம்மு, ஹோட்டல்ன்னாலும் ஒரு டப்பாவில தூக்கிட்டு வந்துருவாங்க, இல்ல அங்க வந்தும் இட்டிலி தின்னச் சொல்லுவாங்க.

நாங்களும் இந்தக் கொடுமையெல்லாம் சகிச்சுக்கிட்டே அஞ்சு வயசு அக்காவாகவோ ஆறு வயசு அண்ணனாகவோ ஆகிட்டோம்ன்னு வச்சுக்குங்க-அவங்க நெனச்ச அளவுக்கு சாப்படலனா அடி பின்னிடுவாங்க- சாலட் சாப்பிடு, காய் சாப்பிடுன்னு ஒரே ரோதனை;

விதியேன்னு நாங்க சாப்பிடசொல்ல இவங்க தட்டப் பாத்தா, அதுல, அப்பளம், சிப்ஸ் இதெல்லான்தாங்க நிறைய இருக்கு. இவுங்க வளந்துட்டாங்களாம்; அதனால பரவாயில்லையாம். அதுலானதாங்க பதினெட்டு வயசுல

ஒண்ணு எல்லாத்தையும் ஒரு வெட்டு வெட்டுவோம், ( எப்பப்பாத்தாலும் தின்னுகிட்டே இருந்தா எப்ப படிக்கறது ன்னு பேக்கிரவுண்ட் வேற)

இல்ல எல்லாத்தையும் நல்லால்ல தின்னன்னு விட்டுறுவோம்.

இப்படி எத்தனையோ இன்னும் நிறைய மனசுல இருக்குதுங்க, சொல்ல பயமா இருக்கு, ஆனா குழந்தைகள் சங்கத் தலைவர்ங்கற முறையில உங்களுக்கு நான் சொல்லித்தான் ஆகணும். ஆமா இதுக்கெல்லாம் நீங்க என்ன சொல்லறீங்க?
மேலும் வாசிக்க...

வலைச்சரம்- 6- ஆம் நாள் - பல்சுவை

எழுத்தாளர் பாவண்ணன் மொழிபெயர்த்த ஆயிரம் மரங்கள் ஆயிரம் பாடல்கள் என்ற நூலில் (அகரம் வெளியீடு) சித்தலிங்கையாவின் 'எங்க சனங்க' (கன்னடம்) இதோ
பசியாலே செத்தவங்க பட்டகல்லு சொமந்தவங்க
ஒதைபட்டுச் சுருண்டவங்க எங்க சனங்க
கைய கால புடிக்கறவங்க கைகட்டி நடக்கறவங்க
பக்தருப்பா பக்தருங்க எங்க சனங்க
.............................
..............................
மாளிகைய எழுப்பனவங்க பங்களாங்க கட்டனவங்க
அடிமட்டத்துல மாட்டனவங்க எங்க சனங்க
தெருவிலேயே உழுந்தவங்க சத்தாமில்லாம கெடந்தவங்க
மனசுக்குள்ளயே அழுதவங்க எங்க சனங்க


...........
தங்கத்த எடுக்கறவங்க சோத்தயே பாக்காதவங்க
துணிமணிய நெஞ்சவங்க எங்க சனங்க
சொன்னபடி கேக்கறவங்க எங்க சனங்க
காத்துலயே வாழறவங்க எங்க சனங்க


ஆகா இந்தக் கவிதை இன்றைக்கும் பொருத்தம்தான் என்று பெருமைப்பட முடியாது.நாம் வேறு


இடத்தில் வேறு வேளையில் பிறந்துவிட்டதால் நம் வாழ்க்கை வேறு மாதிரி அமைந்துவிட்டது.

தினசரி செத்துக்கொண்டிருப்பவர்களை எண்ணி ஏதோ ஒரு விதத்தில் அதற்கு நாமும் பொறுப்போ என்ற குற்ற உணர்வு எழாமல் இருக்காது.

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்

என்ற பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் வைரவன்
http://www.yennamviri.blogspot.com/
சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இவரது புன்னகைக்கும் இயந்திரங்கள்' (சிறுகதைத் தொகுப்பு) அண்மையில்
வெளியிடப்பட்டது.
சிங்கப்பூர் களமாகக் கொண்டு எழுதப்பட்ட
எல்லாம் அவன் செயலின் சுட்டி இதோ
படைப்புகளால் பயன் உண்டா? வைரவனின்
கருத்துகளை அறிய, இதோ அவருடைய
இன்னொரு வலைப்பூவில் பார்க்கலாம்.



ஹாங்காங்கிலிருந்து எழுதும் அருண், சளைக்காமல் ஆங்கிலப் பாடங்களை நடத்தி வருகிறார். தமிழ் மூலம் http://www.aangilam.blogspot.com/ என்ற வலைப்பூவில்

கற்பிக்கும் இவர் தெளிவாக இலக்கணத்தின் பல்வேறு கூறுகளைக் குறுந்தலைப்புகளாகப் பிரித்துக்கொண்டு சொல்லித்தருகிறார். கூடுதலாக

தமிழ் ஆங்கில அகராதி, ஆங்கில இலக்கிய வரலாறு, பாடதிட்டம் என்று உதவிப்பாடங்களும் உண்டு.

http://aangilam.blogspot.com/2008/09/list-of-fruits.html என்ற பதிவில் ஏராளமான காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் தமிழ் - ஆங்கிலப் பெயர்களை எழுதியிருக்கிறார். குழந்தைகளுக்குச் சொல்லித்தரவும் இவை பயன்படும்.


நகைச்சுவைக்கு என்றே வலைப்பூ துவக்கியிருக்கும் கிரிஜா மணாளன்
(http://www.humour-garden.blogspot.com/)

தான் எழுதிய துணுக்குகள் மட்டுமன்றி தன்னைக் கவர்ந்தவற்றையும் வலையேற்றி வருகிறார்,
நிகழ்சிகளுக்கும் அழைக்கிறார்.
http://humour-garden.blogspot.com/2008/08/blog-post_19.html


இனி ஆரம்பம்

http://pandiidurai.wordpress.com/ என்ற வலைப்பூ

சிங்கப்பூர் பாண்டித்துரை உடையது.

கவிதைகள், எண்ணங்கள், கதைகள் மட்டுமன்றி சிங்கப்பூரில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளின் விவரங்களையும் இவர் வலைப்பக்கத்தில் காணலாம். இந்தக் கவிதை

http://pandiidurai.wordpress.com/2009/02/ அனைவரும் படிக்கவேண்டியது.

ஜனரஞ்சக இதழ்களில் இலக்கியம் சார்ந்த படைப்புகள் வெளிவருகையில், அவற்றை அனைவரும் படிக்க ஏதுவாக, http://www.nagulan.wordpress.com/

நகுலன் என்ற பெயரில் இன்னொரு வலைப்பூவும் உள்ளது.

சில பதிவுகள் நாம் எப்பேர்ப்பட்ட உலகில் வாழ்கிறோம் என்பதை விட, வாய்ப்பு கிடைத்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பதை நெத்தியடியாகச் சொல்கிறது.

நண்பர்களுடன் இணைந்து பிரம்மா என்ற கவிதை நூல் வெளியிட்டுள்ள இவர், நாம் என்ற பெயரில் கலை இலக்கிய இதழையும் நடத்தி வருகிறார்.


பதிவுகள் என்ற வலைப்பூவில் வர்ஜீனியாவிலிருந்து எழுதும் சத்தியப்ரியன் நிகழ்வுகள், அனுபவம் போன்று பல தலைப்புகளில் எழுதி வருகிறார். இந்தியப் போர்கள் என்ற தலைப்பில் சியாச்சின் போர், கார்கில் போர் இன்னும் பல போர்களை விளக்கமான கட்டுரைகளாக எழுதியிருப்பது இவரது தனிச்சிறப்பு. ரங்கபவனம் என்ற தொடர்கதையின் சுட்டி இதோ

இன்றைய இளைஞரிடையே நடப்பவைகளை மிக சுவாரசியமாகவும் யதார்த்தமாகவும் (காதலும் கனவும் அசைத்துப்பார்க்கப்படுகிறது) ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதியிருக்கிறார்.

இளையர்கள் மனதை புரிந்துகொள்ளவும் அவர்களின்

மெல்லுணர்ச்சிகள் கலைக்கப்படுவதும் அப்படியே

காட்டப்படுகிறது.

தொடர்ச்சியாக எழுதி வந்த இவர், இனியும் தொடர்ந்து எழுதுவார் என்று நம்புவோம்.


மேலும் வாசிக்க...

Friday, April 17, 2009

வலைச்சரம் 5- ஆம் நாள் - அறிவியல்

ஐந்தறிவு படைத்தவை என்றால் விலங்குகள். ஆறறிவு என்றால் மனிதர். இதை தவிர மற்றவற்றை பற்றி என்றாவது நிதானித்து யோசித்துப் பார்த்ததுண்டா, என்னை நானே கேட்டுக்கொண்டேன். எப்போது? எதாவது என்சைக்கோபிடியாவைப் பார்க்கும் போதா ( எனக்குத் தெரிந்ததெல்லாம், என் சைக்கிளைப் பிடியா தான்) என்றால் இல்லை,

கீழ்கண்ட தொல்காப்பிய நூற்பாவைப் பார்த்தவுடன் தான் தோன்றியது.

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
எது ஓறறிவாம்? புல்லும் மரனும் ஓரறிவினவே
இரண்டு- நந்தும் முரளும் ஈரறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்து - நத்தை முதலியவை
முரள்- கிளிஞ்சல் முதலியவை
சிதலும் எறும்பும் மூவறிவினவே (அட்டை, எறும்பு போன்றவை-
நண்டும் தும்பியும் நான்கறிவினவே (தொடுதல்,சுவை, முகர்தல், பார்த்தல்)
இப்படி உயிர்களை பாகுபடுத்தியிருக்கிறார்.

இளம் விலங்குகளை எப்படி அழைக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

புறநானூறு முதலிய சங்க இலக்கிய நூல்களில் பல அறிவியல் செய்திகள் உள்ளன. யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை இறக்கும் நாளை ஒரு விண்மீன் விழுந்த தீ நிமித்தத்தால் முன் உணர்ந்ததாக பாடியதாம்.

ஆடுஇயல் அழற்குடத்து

ஆரிருள் அரையிரவின்

முடப்பனையத்து வேர்முதலாக்

கடைக்குளத்த்ஹுக் கயங்கயப்

பங்குனி உயர் அழுவத்து

தலைநாண்மீன் நிலைதிரிய

நிலைநாண்மீன் அதனெதிரேர்தரத்

தொல்நாண்மீன் துறைபடியப்

பாசிச்செல்லாத்(து) ஊசித்துன்னா(து)

அளக்கர்திணை விளக்காக

கனையெரிபரப்பக் காலெதிர்பு பொங்கி

ஒருமீன் வீழ்ந்தென்றால் விசும்பினானே

இதில் முடப்பனை என்பது விருச்சிகம். தேள்வடிவத்த்ஹின் தலைப்பகுதி பனைவேரில் டெல்டா ஸ்கார்பி ( ) எனப்படும் அனுஷம் உள்ளது. அதன் ஆடியில் கயமாகிய குளவடிவில் அமைவது விருச்சிக ராசியின் தேள் கொடுக்குப் பகுதி. இதில்தான் ஆல்ஃபா ஸ்கார்பி எனப்படும் கேட்டை (ஆங்கிலத்தில் அண்டாரஸ் எனப்படுவது) மற்றும் லாம்டா ஸ்கார்பி மூலம் ஆகிய விண்மீன்கள் அமைந்துள்ளன.

Ursa major எனும் விண்மீன் தொகுதியில் உள்ள ஏழு விண்மீன்களை சப்த ரிஷி மண்டலம் என்றனராம். பண்டைய தமிழர்கள் இவ்வேழு விண்மீன்களையும் ஏழு பத்தினிக் கடவுளாக வணங்கினராம்.

வடவயின் விளங்கால் உறைஏழு மகளிருள்

கடவுளொரு மீன்சாலினி---- பரிபாடல், இன்னும் பதிற்றுப்பத்து, பரிபாடல் என்று பல எடுத்துக்காட்டுகளுடன் எழுதியிருக்கிறார் நெல்லை சு. முத்து. இவர் ஒரு விஞ்ஞானி.

வானவூர்தி பற்றிய செய்திகள், நாம் தொலைத்துவிட்ட 'தமநூல்' (இது பொறி நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு பற்றியது ) சிந்தாமணியில் வரும் மயிற்பொறியின் செயல் திறன் (தற்கால் விமான கட்டமைப்பு முறையுடன்

ஒப்பிட்டுக் காட்டுகிறார்- நாம் பார்க்கவில்லை அதனால் மயிற்பொறியெல்லாம் கற்பனை என்று சொல்லவும் எனக்குத் தயக்கமாக இருக்கிறது)

பல்கிழி யும் பயினும், துகில் நூலோடூ

நல்லரக்கும் மெழுகும் நலஞ்சான்றன

வல்லன வும், அமைத் தான்ங்கு எழுநாளிடை

செல்வதொர் மாமயில் செய்தனன் அன்றெ

பலவகைசீலைத் துணிகளும், பற்றுதற்குர்ய பயின் (பைண்டர்) இனப் பசைகளும் (பேஸ்ட்), சரிகை முதலான வெள்ளி இழைகளும்(சில்வர் வயர்) , நல்ல அரக்கு வகை ரோசனங்களும் (ரெசின்) மெழுகு போன்ற கொழுப்பு பொருள்களும் அதில் பயன்படுத்தப்பட்டனவாம்.

பெருங்கதையிலோ மூவகை பசைப் பொருள்களைக் கூட்டித் தயாரித்த திரியோக மருந்தினால் கட்டப்பட்ட பொருள்கள் இன்னெதென்று அறிய வழியில்லாமல் போயிற்றே.

இன்று நாம் பார்க்கவிருக்கும் முதல் பதிவர்:

மும்பையிலிருந்து எழுதிவரும் மகிழ்நன்

அறிவியல்தமிழ் என்ற பெயரில் வலைப்பூ அமைத்து பல அறிவியல் செய்திகளையும் பொருத்தமான வரைபடங்களுடன் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.
உயிர் என்ற தலைப்பில் உள்ள மொழிபெயர்ப்பு என்னைக் கவர்ந்தவற்றில் ஒன்று
பல அறிவியல் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ப்பதங்களை எழுதியுள்ளார், காட்டுக்கு astronauts ஐ விண்செலவர்கள் என்கிறார், குடல்புண் பற்றிய விவரங்கள் இங்கே


அறிவியல் புனைக்கதைகளை வாசிக்க விருப்பமா? கதை எழுதுகிறேன் என்ற வலைப்பூவில் எழுதிவருகிறார்.
சிவநேசனிடம் நாட்டாண்மை முடிவை மாத்து என்கிறார் ஒரு பெண். சோதனைகளில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதங்களில் முடிக்கவெடுக்கவேண்டும் அப்போதுதான் எங்களுக்கு வெவ்வேறு தீர்மானங்கள் கிடைக்கும் என்ற பிற்சேர்க்கை வேறு. யாரிவர் பூமிபுத்திரரா?


இங்கு பார்க்கவும்.

இவரது பிற வலைப்பூக்களில் ஒன்று சிந்தனைகள் தார்மீக அடிப்படை கொண்ட புதிர் கேள்வியை இவர் பதிவில் படிக்கலாம்
வித்தியாசமாக யோசிப்பவர் நம் மூளை ஒரே நேரத்தில் RAM ஆகவும் ROM ஆகவும் செயல்படும் என்கிறார். தொடர்ந்து என்ற தலைப்பில்
இந்தச் சுட்டியின் கீழ் இவர் எழுதியிருப்பதைப் படியுங்கள்.


பூமகள் படைப்புக்களம் என்ற வலைப்பூவில் எழுதிவரும் பூமகள், இந்தச் சுட்டியில் பூமி மணித்துளி பற்றி எழுதியுள்ளார்.

சிறுகதைகள், கவிதைகள் (இதில்தான் எத்தனை வகை), திரைவிமர்சனம், சங்கத்தமிழ் விவரங்கள் என்று எழுதி வரும் பூமகள், ஒலி - ஒளி துறையையும் விட்டுவைக்கவில்லை. தமிழ்ப்பாடல்கள், பிறமொழிப்பாடல்களையும் (அல்கா, பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்ற) ஒலி-ஒளிவழியில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அல்கா யாக்னிக்கின் பாடல் என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு
கூகிலாண்டவர் மூலம் இப்பாடகரின் விவரங்களைத் தெரிந்துகொண்டு அயர்ந்தேன். பிறமொழிகளில் கேட்டு ரசித்தவற்றை தமிழுக்குகொண்டு வந்த பூமகளே, நன்றி.


தொடுவானம் என் உள்ளத்தில் என்ற பெயரில் வலைப்பூ அமைத்துக்கொண்டு
நான் முறையாகத் தமிழில் எழுதக் கற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லும் தீபா கணினி தொழிற்நுட்பத்தின் நுட்பங்களை பாகங்களாகப் பிரித்து கொண்டு தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
ஆங்கிலத்தில் ஏராளமாக எழுதிவரும் இவர் இதுதவிர அனுபவங்களையும் கவிதைகளையும் தமிழில் பதிவு செய்துள்ளார். தன் ஆதங்கத்தை (தமிழ்ப்பதிவில்) எழுதியுள்ளார். இந்தச் சுட்டியில் பார்க்கலாம்
மேலும் வாசிக்க...

Thursday, April 16, 2009

வலைச்சரம் நான்காவது நாள் - உயிர்ப்பு

ஒரு தாவோ கதை

யென் ஹுய் என்பவன் தன் எசமானிடம் விவசாயப் பணியில் தான் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாகச் சொன்னான்.

எப்படி ? எசமான் கேட்டான்.

சடங்குகள், இசை ஆகியவற்றை மறந்துவிட்டேன்.

நல்லது; ஆனால் இவை போதா; நீ இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.

சில நாட்கள் கழித்து மீண்டும் எசமானனிடம்கூறினான் 'இப்போது இன்னும் சிறப்பாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன், மனிதாபிமானம், நேர்மை இதெல்லாம் கூட மறந்துவிட்டேன்.

இதுபோதாது; நீ தொடர்ந்து உழைத்து வா என்றான் எசமான்.

சில நாட்கள் கழித்து மீண்டும் வந்து இம்முறை அடையவேண்டியவற்றை அடைந்துவிட்டேன்' என்றான்.

சரி இப்போது மணி என்ன- இது எசமான்

தெரியாது; ஏனெனில் உட்கார்ந்தவாறு என்னையே மறப்பதையும் கற்றுவிட்டேன்.

அதென்னது, உட்கார்ந்தவாறு மறப்பது எசமான் கேட்க,

சரிதான், அமர்ந்தவாறு என்னிலிருந்து என்னை விடுவித்துக்கொள்வேன், மனதை அமைதிப்படுத்திவிட்டு பரம்பொருளுடன் ஐக்கியமாவேன். இதைத்தான் சொன்னேன், என்கிறான் யென் ஹுய்

ஆகா, என்றவாறு யென் ஹுய் காலில் விழுந்தான்எசமான். வழியைக் கண்டுபிடித்துவிட்டாய். இனிநான் உன்னைத் தொடர்ந்து வருவேன் என்றான்.

'உயிர்ப்போட நான் இருப்பது சித்திரம் எழுதும்போதுதான்' அப்படின்னு வான்கா சொல்லியிருக்கார். எதையாவது புதியதாய் கற்றுக்கொள்ளும்போதோ நமக்குப் பிடித்ததைச் செய்யும் போதோ ஒரு புத்துணர்வு ஏற்படுவதை நாமும் உணர்ந்திருப்போம்.

சித்திரம் எழுதுதல், கைவேலை, கோலங்கள் இடுதல் இவை மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் கலை. மன அழுத்தத்தை நம்மை அறியாமல் குறைக்கும் அல்லது இல்லாமல் செய்துவிடும்.

கோலங்கள் என்றதுமே கமலாவின் அடுப்பங்கரை. இவரது அரிசியில் செய்த சுண்டலுக்கு இதோ சுட்டி

வண்ணப்படங்களுடன் கைப்பக்குவங்களும், திருத்தமான கோலங்களுமே என்னைக் கவர்ந்தவை. அதிலும் கிருஸ்துமஸ் கோலம்,

தும்பிக்கையான் கோலம் மற்றும் தேர்க்கோலம். கற்றுக்கொள்ள ஆசைப்படுபவர்களுகென்று, எளிய கோலங்களும் உள்ளன. ஆங்கிலத்திலும்
இணையான வலைப்பூ உள்ளது.

அடுத்தது சித்திரங்கள்
கபீரன்பனின் வலைப்பூவை முதல் முறை பார்த்தபோது அவரது கறுப்பு வெள்ளை ஓவியங்களின் துல்லியம் தெரிந்தது.
இன்னும் கொஞ்சம் இடுகைகளைப் பார்த்தபோது,வண்ணக்கலவை கொண்ட சித்திரங்களைக் கண்டேன் . மைசூர் ஓவியங்களை மகளுடன் சேர்ந்து பயிற்சி
வகுப்புக்குச் சென்று கற்றுக்கொண்டதை ஒவ்வொரு நிலையிலும் எழுதப்பட்ட படங்களுடனும்
, பூசுவேலைக்களின் ஒவ்வொரு நிலையையும் படம் பிடித்து எழுதியுள்ளார்.

கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிக எளிதாகத் தோன்றும் , மிகுந்த பொறுமை இவருக்கு இருக்கிறது. செய்வதற்கு மட்டுமன்றி படிப்படியாக அதை எழுதுவதற்கும் தான். வண்ணங்களைக் கையாள்வதற்கு, சில முக்கிய குறிப்புகளையும் தந்திருக்கிறார்.
அந்தக் குரங்காட்டி படம் மனதிலேயே நிற்கிறது.

அடுத்த பதிவர் :
சுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு, இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். இவற்றிலெல்லாம் மிகுந்த அக்கறை காட்டி வரும்

வின்சென்ட்டின் வலைப்பூ
நீர் மேலாண்மையைப் பற்றி அவ்வப்போது ஜுரம்
வருகையில் படிக்கிறோம். ஆனால் தனிமனிதராக நாம் செய்யக்கூடியது என்ன? சுருக்கமாக பட்டியல் இட்டுள்ளார்.

அவரது virtual water என்ற பதிவைப் பாருங்கள்.
நெத்தியடி.
நீர், முதலிய இயற்கையின் ஒவ்வொரு அம்சமும் இவரது நேசிப்பில் வருவது வியப்பு. இவரைப் போன்ற களப்பணியாளர்கள் வலைப்பூவில் எழுதுவது நமக்கு அறியாததை அறிந்துகொள்ள நல்லதொரு வாய்ப்பு
மேற்கண்ட சுட்டியில் தேனிக்களின் நடனத்தை ஒளிவழிக் காணலாம்.


அடுத்த பதிவர்:
தகவல் தொழில்நுட்பம் தொடர்புள்ள செய்திகளையும் அதில் நாம் கற்றுக்கொள்ளக்கூடியதையும் இந்த வலைப்பூவில், பாபு சொல்லித்தருகிறார்.

'தெரிந்ததும் தெரியாததும்' இல் பாபு சொல்லித்தருபவை வலைப்பூ வாசகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அனுப்பிய மின்னஞ்சலைத் திரும்பப் பெறுவது எப்படியாம்?

இணைப்பில் பாருங்கள்

கொஞ்சம் கனவு + நிறைய நம்பிக்கை=பாபு. வலை தளம் வடிவமைத்தல், கணினி பழுது நீக்கம், வலைப்பூ தொடங்குதல், மென்பொருள் நிறுவுதல், லினக்ஸ் குறித்து ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி தொடர்பு எண்கள், நேரம் முதற்கொண்டு கொடுத்திருக்கும் இவரது ஆர்வம் உள்ளங்கை செல்பேசி.

இப்பதிவில் இவர் எழுதிவரும் தெரிந்ததும் தெரியாததும்' ஐபடித்துப்பாருங்கள்.





மேலும் வாசிக்க...

Wednesday, April 15, 2009

வலைச்சரம் மூன்றாவது நாள் - குழந்தை

உங்கள் குழந்தைக்கு புத்தகம் வாசித்துக்காட்டப்போகிறீர்களா?

சில குறிப்புகள் :
கதைகள் மட்டும்தான் படிக்கவேண்டும் என்று இல்லை. செய்திதாளில் அவர்களுக்கேற்ற செய்திகளைப் படித்துக்காட்டலாம். கவிதைகள், பாடல்கள் படித்துக்காட்டலாம். நாம் படித்தவற்றில்

சுவையானவற்றை அவர்களிடம் பகிரலாம். சுவாரசியமான படங்களைக் காட்டலாம். அவர்களே அதைப் பற்றிக்கேட்பார்கள். குழந்தையிடம் நீயே படி என்பதை விட நாமிருவரும் சேர்ந்து படிக்கலாம் என்று சொல்லிப்பார்க்கலாம்.

குழந்தை படிக்கும்போது தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டவேண்டாம்.


(இதை எழுதும்போதே, பல மாதங்களுக்கு முன் நியூஸ்வீக் பத்திரிகையில் செல்லத்துக்குப் படித்துக்காட்டுதல் என்ற சிறு இயக்கம் பற்றி ஒரு கட்டுரை படித்தது நினைவுக்கு வந்தது. குழந்தை நாள்தோறும் ஏதேனும் ஒரு புத்தகத்தை சிறிதுநேரம் வாசித்துக்காட்ட வேண்டும் .

யாருக்கு - செல்லநாய்க்குட்டிக்கு

பக்கத்தில்- பெரியவர்கள் யாரும் இருக்கக்கூடாது.

விளைவு- (சில அமரல்களுக்குப் பின்) குழந்தை ஒரு நிமிடத்தில் வாசிக்கும் சொற்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததாம். முக்கியமாக

அதற்கு தன்னம்பிக்கை மிகக் கூடியதாம்( பாவம் நாய்க்குட்டிக்கு உச்சரிப்பு தெரியாதே )எல்லோரும் நாய்க்குட்டியை வளர்க்கமுடியாவிட்டாலும் குறைந்தபட்சம் பாய்ந்து பாய்ந்து தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் இருக்கலாம். வாசித்து முடித்தபின் நாசுக்காக சொல்லவேண்டுமாம்)

பொறுமையான சொற்களைப் பிரித்து உச்சரிக்கக் கற்றுக்கொடுக்கவும். இதை எத்தனை தரம் படிச்சாச்சி, இன்னும் தெரியலையா என்பதுபோல் பேச வேண்டாம். நிறைய தவறுகள் ஏற்பட்டால் குழந்தைக்கு அப்புத்தகம் கடினமானதாக இருக்கலாம். சற்று எளியதைத் தேர்ந்தெடுக்கலாம்.

குழந்தைக்குப் பிடித்த நூலாசிரியர்கள் யார் யாரென தெரிந்துகொள்ள முயலலாம்.

உங்கள் குழந்தைக்கு வாசிக்க வரும். இதை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். நீ வாசிக்கிறது போதாது போன்ற எதிர்மறை விமர்சனம் வேண்டாம்.

கதை படித்து/ சொல்லி முடித்தபின் கதையைப் பற்றிக் கேட்கலாம். நீ எப்படி முடித்திருப்பாய்? ஏன்?

எந்தப் பாத்திரம் உன்னைக் கவரவில்லை/கவர்ந்தது /பிடித்தது/பிடிக்காதது இப்படி மாறி இருந்தால் எப்படி ஆகி இருக்கும்,.நீ எப்படி கதையை முடித்திருப்பாய்..... இப்படி எதாவது கேட்கலாம்.

படித்து முடித்த புத்தகத்தை டைரியிலோ அல்லது முடித்த புத்தகங்கள் பட்டியலில் சேர்ப்பதற்காகவே படிக்கவேண்டும் என்பதை முன்னிறுத்தி படிக்கக்கட்டாயப் படுத்துவதோ, அவள்/அவன் உன் வயதுதான் எப்படிப்படிக்கிறாள் என்றோ யாருடனும் ஒப்பிடவேண்டாம்.

இவை எல்லாவற்றையும் விட மிக எளிய வழிஇருக்கிறது. குழந்தையைப் வாசிக்கச் சொல்லிவிட்டு நீங்கள்/நாம் ஐபோட், தொலைக்காட்சி, கணினி முதலியவற்றை தனியராய் இயக்கி மகிழ்ந்துகொண்டிராமல், ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் துவங்கலாம்.

இன்று நாம் பார்க்கப்போகும் பதிவர்கள்

http://sasipartha.blogspot.com/
உயிரெழுத்துகள் என்ற பெயரில் வலைப்பூ வைச்சிருக்கிற சசிரேகா ராமசந்திரன் இத்தாலிலேந்து அழகான படங்களுடன் பதிவு எழுதுறார்.
மழலை வகுப்பு நிகழ்வுகள் அனுபவங்களை

கேஜீ ஆரம்பம் என்ற தலைப்புல பல பதிவுகள்

போட்டிருக்கார். அதுல ஒன்று இதோ

ரொம்ப அனுபவித்து எழுதியிருக்கார்.

கவிதை மாதிரி அப்படின்னு நிறைய பதிவுகள் இருக்கு அதுல குழந்தை ங்கற தலைப்பில் நான்கு வரியில் எழுதியிருக்கும் ஒரு கவிதை ரொம்ப மென்மையாயிருக்கு. இதோ நீங்களும் படிச்சுப்பாருங்க கவிதைகள் ,

குழந்தைகளின் உலகம் பற்றிய கவிதைகள் அல்லது கவிதை உலகத்து குழந்தைகள் என்று நினைக்கும்போதே மனதில் வந்தமரும்
கவிதைகள் , முகுந்த் நாகராஜனோட கவிதைக்குழந்தைகள்.

முதல் கவிதைத் தொகுப்பு- அகி

இவரோட இரண்டாவது கவிதைத் தொகுப்பு -ஓர் இரவில் 21 செண்ட்டிமீட்டர் மழை பெய்தது.
ஒன்றாம் வகுப்புக்கு போலீஸ்காரர், நாயைக்கூட்டி வருகிறார் எதற்கு? என்ன ஆகிறது படியுங்கள்
மூன்றாவது கவிதைத் தொகுப்பும் (கிருஷ்ணன் நிழல்) இப்போது வெளிவந்திருக்கிறது.
இவரோட வலைப்பூ இங்கே

சொந்தமாக விழுந்து உடைந்த கோப்பை அப்படின்னு ஒரு கவிதை, குழந்தைகளின் மாயக்கற்பனையை அடையாளம் காட்டும்.

இதோ இதற்கு சுட்டி

குழந்தைகள் பற்றி பேசும்போதே, வயதில் பெரியவர்கள் நினைவுக்கு வந்து விடுகிறார்கள்.நம் பாட்டிகளின் கைவைத்தியம், இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கை,!
இதைப் பார்க்க விளங்கும்
http://pattivaithiyam.blogspot.com/
இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே.இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும். இப்படிச் சொல்பவர் பாண்டிச்சேரியிலிருந்து ஆஸ்திரேலியா போயிருக்கும் இக்பால்.
காய்,கனி, இலைகளின் பயன்கள், கைவைத்தியக் குறிப்புகள் கொடுத்துவருகிறார்.

இவரது கண்ணும் உணவும் அனைவரும் படிக்கவேண்டிய பதிவு.

அடுத்தவர் மாதேவி.

இந்த காய்,கனி, இலை, இதில் செய்ததை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஆனால் அவர்களைக் கவரும் வண்ணம் எங்ஙனம் கொடுப்பதாம். உதவிக்கு வருகிறார் மாதேவி.
இவர் வலைப்பூ இதோ
சின்னு ரேஸ்ரி என்ற பெயரில் எழுதி வரும்
மாதேவி, பல நாட்டு சமையல் வகைகள், உடல்நலத்திற்கு ஏற்ற உணவு வகைகளை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் உள்ளவர். அழகான படங்கள், தெளிவான செய்முறை குறிப்புகளுடன் மிளிறும் இவரது வலைப்பூவில் என்னை வியப்பிலாழ்த்தியது இதுவரை கேட்டிராத மாங்காய்- கீரை சலாட் குறிப்பு இதோ

குழந்தைகள் பிறந்தநாள் வைபவம் கொண்டாடுபவர்கள் மட்டுமில்லாம எல்லோரும் இவரது அலங்கரிக்கப்பட்ட பழ சலாட்டை கட்டாயம் செய்து பார்க்கவும்.
சாண்ட்விச் வகைகள் சத்துணவாக மாற்றுகிறார் மாதேவி.


அப்படியே கொஞ்சம் ஈகரை சித்த மருத்துவம் அப்படிங்கிற
வலைப்பூவுக்குள் போனால், முகப்புலேயே எத்தனை எத்தனை பிரிவுகள் . எதையும் தேடவே வேணாம். அவ்வளவு சுலபமா போட்டு வச்சிருக்காரு சிவகுமார் சுப்புராமன். மலர்களும் மருந்தாகும் படிக்கவேண்டிய பதிவுகளில் ஒன்று.




மேலும் வாசிக்க...

Tuesday, April 14, 2009

வலைச்சரத்தில் இன்று - சித்திரை முதல் நாள்

இன்றைக்கு ஏப்ரல் 14, சித்திரை முதல் நாள் இங்கே சிங்கையில் தமிழ் ஆண்டு பிறப்பு கொண்டாட்டங்கள் நடக்கும். இந்த மாதம் முழுவது சிங்கப்பூரில் தமிழ் மொழி விழாக்கள் வாரயிறுதிகளில் காலை, மாலை வேளைகளில் உண்டு.

வெவ்வேறு நிலைகளில் உள்ள மாணவர்களுக்கான, சொற்போர், நாடகப்போட்டிகள், பாட்டுப்போட்டி, மாறுவேடப்போட்டி, பேச்சுப்போட்டி,கதைசொல்லும்போட்டி, காப்பிய
புதிர்போட்டி, கோலப்போட்டி, கதைஎழுதும்போட்டி,கட்டுரைபோட்டி, பெரியவரளுக்கான கதை எழுதும் போட்டி, கவிதைப்போட்டி (மரபு/ புதுகவிதை)
அப்படின்னு தமிழை வளர்க்க இங்குள்ள எல்லாக்கழகங்கள், மன்றங்கள், ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக நடத்துகிறார்கள்.

தமிழுக்கு என்னாலான அடிப்பொடித்தொண்டு எல்லாக்கழகங்கள் மன்றங்கள் ஆகிய,... இந்த ஆகிய, முதலிய மற்றும் போன்ற இவற்றை எங்கே எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

முதலிய என்னும் சொல் முதலாக உடைய அல்லது முதலாவதாக உள்ள என்பன போன்ற பொருள் உள்ள சொல்லாகும். பலவற்றை வரிசையாகச் சொல்ல நேரும் போது எல்லாவற்றையும் சொல்லாமல் அவற்றில் முதலிலுள்ள ஒன்றை மட்டும் சொல்லி மற்றவற்றைச் சொல்லாமல் குறிப்பிடுகிற இடங்களில் மட்டும் முதலிய எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

எடுத்துக்காட்டு : கலைஞர் குறளோவியம் முதலிய இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். சேரன், சோழன் பாண்டியன் ஆகிய தமிழ்வேந்தர்கள்,..... என்பதே சரி. சேரன், சோழன், பாண்டியன் முதலிய மூவேந்தர்,.. தவறு , மூவேந்தர் இம்மூவர் மட்டுமே. கடைசியாக, போன்ற இதை எப்போது பயன்படுத்துவதாம். ஒன்றை மட்டும் சொல்லாமலும், எல்லாவற்றையும் சொல்லாமலும் சிலவற்றை மட்டும் சொல்லும் இடங்களில் போன்ற வரும்.

எடுத்துக்காட்டு: சரிதா அக்னிசாட்சி, தண்ணீர் தண்ணீர், நூல்வேலி, போன்ற படங்களில் நடித்துள்ளார். இது சரி.

தமிழ்ச்சொற்களில் நுட்பமான வேறுபாடுகளை எண்ணி இறும்பூது எய்துகிறேன்.
மேற்கண்ட வாக்கியத்தில் வேறுபாடு என்பது சரியான பயன்பாடு.
அப்படியே மாறுபாட்டையும் பார்த்துவிடுவோம்.
வேறுபாடு என்பது வித்தியாசம். மாறுபாடு என்பது முரண்பாடு.
வேறுபாடு என்பது கொய்யாப்பழத்திற்கும்,மாம்பழத்திற்கும் இடையே உள்ளது.
மாறுபாடு என்பது கொய்யாப்பழத்திற்கும்,நிமிட்டாம் பழத்திற்கும் இடையே உள்ளது.

இறும்பூது எய்துகிறேன், அதுவும் எதற்கு, தமிழ்ச்சொற்களில் உள்ள நுட்பமான வேறுபாடுகளை எண்ணி , இது என்ன கொடுமை. பின்ன என்ன?

இறும்பூது என்றால் மகிழ்ச்சி, பெருமகிழ்ச்சி,
இதெல்லாம் இல்லவே இல்லை. வியப்பு, நம்ப முடியாத ஆச்சரியம் இதுதான் இறும்பூது. கவனமாகப் பயன்படுத்தவேண்டும்.

இடைச்சொறுகலாக என் சொந்த கருத்து.
பெண்கவிஞர், கவிதாயினி இதெல்லாம் தேவையே இல்லை. கவிஞர் என்றால் போதும். ஆசிரியர், வழக்கறிஞர், மருத்துவர் இதெல்லாம் எப்பாலினருக்கும் பொது.

ஒரு சம்பவம் அல்லது நிகழ்வு.
ஓய்வாக இருக்கும்போது செய்யுங்கள் என்றாராம் பேராசிரியர் நன்னனிடம் ஒருவர். அவர் எப்படி செய்வார். ஓய்வாக இருக்கும்போது. ஒழிவாக இருக்கும்போது என்று சொல்லியிருக்கவேண்டும்.

இன்று நாம் பார்க்கப்போகும் பதிவர்கள்:

சங்கப்பலகை வைத்திருக்கும் சிங்கப்பூர் அறிவன்
வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை
என்று எவ்வளவு தவறாக பயன்படுத்தி வருகிறோம் என்பதையும் இப்பழமொழிகளின் மெய்யான பொருளையும் விளக்கியுள்ள பதிவு என்னைக் கவர்ந்தவற்றில் ஒன்று.

பாரம்பரிய இசைக்கருவிகள், தமிழிசை பற்றிய செய்திகள், தமிழும் சிவமும், தமிழ்ப்புத்தாண்டு குறித்த விரிவான விளக்கங்கள் போன்றவற்றைக் காணலாம். பொருளாதாரம், , நாட்டுநடப்பு பற்றிய கட்டுரைகளும் எழுதி வருகிறார்.


இந்த வலைப்பூவில் உழவனும், ஜி. பாலாவும் இணைந்துள்ளார்கள்.

இதிலுள்ள தமிழ் மருத்துவக்குறிப்புகள், இசைமருத்துவச் செய்திகள் இக்காலத்திற்கு ஏற்றவையே. தொய்யல்கீரை- காரணப்பெயரை விளக்கி அதன் பயனையும் கொடுத்துள்ளார்.

இதைக்காட்டிலும் இவர் பதிவின் சிறப்பான இடுகைகள் தமிழின் பெருமைகள் என்ற தொடர் பதிவுகளே. தமிழின் உண்மையான சிறப்புகளைத் தேடிப்பிடித்து எழுதியுள்ளார். நல்லவேளை இவர் வலைப்பூவை இப்போதாவது பார்த்தேனே என்று நினைத்துக்கொண்டேன்.

பத்துக்கு ஒரு சூழியம்
மகாயுகத்திற்கு எத்தனை சுழியம்,
பிதாகரஸ் தியரம் எழுதப்படுவதற்கு முன்பே
போதையனார் எப்படி அளந்தார் என்பதை அளக்காமல் விளக்கமாக கூறியிருக்கும் பாடலை பரப்ப முயலலாம்.

உழவன் கவிதைகளில் கரிசல் காட்டுப்பொண்ணு
எனக்குப் பிடித்திருந்தது. இலக்கணம் படிக்கவில்லை தலைக்கனமும்
எனக்கு இல்லை இப்படிச்சொல்பவர்.

நிறைய காதல் கவிதைகள் எழுதி வரும் பிரியமுடன் பிரபுவைத் தனித்துக்காட்டுவது திரைப்பாடல்களுக்கு இவர் தன் சொந்த வரிகளை நிரப்பி பாடல் கட்டுவது. மிக எளிதாகத் தோன்றினாலும் கேலி இல்லாமல் பொருளோடு புனையும் வல்லமை இவருக்குள்ளது.


பெங்களூருவிலிருந்து எழுதும் திகழ்மிளிர்

தமிழுக்குச் செய்யும் தொண்டாக பல ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களை இந்த இணைப்பில், கூகிள் விரிதாளில் பட்டியல் இட்டுள்ளார்.
படித்து, பயன் பெறுக.

மேலும்
இந்த வலைப்பூவில் ஒணத்தி, கொண்டயம், கண்டு
முதலிய சொற்கள் பற்றிய விளக்கமும் தருகிறார்.

Beemorgan கவிதைகள், கதைகள், திரைவிமர்சனம், படித்ததில் பிடித்தவை, பார்த்ததில் பிடித்தவை எதையும் இவர் விட்டுவைக்கவில்லை. இவர் பதிவைப் படித்தபோது அரசூர் வம்சம் இன்னும் நான் படிக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது.
இவர் பதிவுகளில் என்னைக் கவர்ந்தது பட்டாம்பூச்சியுடனான அனுபவத்தைக்கூறும் எனக்கென கண்முன் காட்சியைக் கொண்டு நிறுத்தும் வரிகள்.
மேலும் வாசிக்க...

Monday, April 13, 2009

வலைச்சரம் - வணக்கம், நான், சிங்கப்பூர் மற்றும் குதிரைப்பந்தயம்


வணக்கம் வலைச்சரம் வாசகர்களே.
என்னைபற்றிய ஓர் அறிமுகம் என் வலைப்பூ
முகப்பில் உள்ளது.

1993 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சாங்கி விமானநிலையத்துல வந்து இறங்கினேனா, உடனே ஒரே பரபரப்பு , எனக்கில்லங்க, மத்தவங்களுக்குத்தான். நாட்டு அரசர், அமைச்சர்கள் புடைசூழ என்னை வரவேற்க இருப்பதாக செய்தி வந்ததுதா, மத்தவங்கள அனாவசியமா எதுக்கு சிரமப்பட வைக்கணும்னு நான் அதெல்லாம் வேண்டான்னு மறுக்க, யாரங்கே இந்தக் குழந்தைக்கு நிறைய விளையாட்டு சாமான்கள், மிட்டாய்கள் , பழங்கள், எல்லாம் கொடுங்கன்னு ஆணை வர ,
அதிலேந்து ஒருவழியா மீண்டு நான் தங்கவேண்டிய இடத்துக்குப் போனேங்க, அப்புறமேட்டு நூலகம் எங்கன்னு விசாரிக்கணும்னு நெனச்சுகிட்டு.

நான் வந்த 1993 ஆம் ஆண்டுக்கு சரியா 100 வருசம் முன்னால என்னைப்போலவே தமிழகத்துலேந்து ஒருத்தர் சிங்கப்பூர் வந்திருக்காரு. வந்தவர் நூலகத்தைத் தேடியெல்லாம் வரலை, ஏன்னாக்க அவரே ஒரு நூலகம் ஆச்சுதே.

1893 இதே ஏப்ரல் மாசம் வந்தவர் அவரே ஒரு நூல் எழுதிட்டாரு. அதான் அதிவினோத குதிரைப் பந்தய லாவணி ' இதான் தமிழ்ல அச்சிடப்பட்ட முதல் இலக்கியமாங். மதிப்புரை, அணிந்துரை, வாழ்த்துரை, கருத்துரை,
முன்னுரை, என்னுரை, ஒரு பருந்துப்பார்வை எதுவும் இல்லாமல்
மகா ஸ்ரீ ஸ்ரீ குருங்குளம் கருப்பண்ண உபாத்தியாயரின் மாணாக்கன்
மகா ஸ்ரீ ஸ்ரீ ஆதித்திருக்குடந்தை சரபக்கொடி
நா.வ இரங்கசாமிதாசனால் இயற்றியது
அப்படினுட்டு, பிழைகளைப் பொறுத்தருளச் செய்யுங்கன்னு பணிவோடு கேட்டுகிட்டு, சிங்கையையும், சாமியையும் வணங்கிட்டு கூட அழைச்சிட்டு வந்திருக்கும் மனைவி கேட்க (இவங்க குதிரைப்பந்தயம் பார்க்கணும்னுதானே நாகப்பட்டணத்துலேந்து கப்பல்ல ஏத்தி வந்திருக்காரு )

அப்படியே பாட ஆரம்மிச்சிருக்காருங்க, ஒவ்வொரு இடமா அவங்களுக்கு காட்டிக்கிட்டே வந்திருக்காரு. மானே தேனே அடிக்கடி விளிச்சு பாடுற பாடல்
இங்க இருக்கு பாருங்க

படிக்க சுளுவா இருக்கணும்னா
இத்தப்பாருங்க

இந்தப் புத்தகமெல்லாம் இப்ப நம்மகிட்ட இல்லைங்க, ஒலக வழக்கப்படி
இலண்டன் நூலகத்துல பாரம்பரிய சேகரிப்புகள்ல
டிஜிட்டர் உருவத்தில இருக்காமாங். பினாங் வழியா சிங்கப்பூர் வந்தவரு, கடந்து வர ஒவ்வொரு பேட்டையையும் அங்கிருக்கிற பள்ளிவாசல், கோவில், கடைங்க, டாணா பார் ( சுளுக்கெடுக்குற இடம்- அதாங்க போலிஸ் ஸ்டேசன்) , ஆசுபத்திரி, தபால் நிலையம், கோப்பிக்கட, ஆப்பக்கடை, தண்ணீர்ப்பீலி (குழாய்) அல்லாத்தையும் கவனமா லாவணில பதிஞ்சிருக்காரு.

நொடிக்கொருக்கா மானே தேனே சொல்லிக்கிட்டே படாடென்சன் ஆவுற இடத்தையெல்லாங்கூட அத்தப் பாரு இத்தப் பாருன்னு காட்டிகிட்டே வாராரு. அது என்னான்னு நீங்களே படிச்சுக்கிடுங்க.

பொறமலைங்கறது - இப்ப St John's island ஆம், ஸ்ட்டியரிங்க சுக்கான்னு அழகா எழுதியிருக்காரு, தஞ்சம்பாக்கார் தான் Tanjong Pagar Dock, சப்ராஜி ரோட் தான் இப்ப South Bridge ரோடு குசாலா ஊர்கோலம் வந்து, குதிரைப் பந்தயம் நடக்குமிடத்துக்கு வந்து சேர்ந்துட்டாங்க இரண்டுபேரும். இத்தோட மொதல் பாகம் முடிஞ்சிச்சு அப்படிங்கிறாரு.

இரண்டாம் பாகம் எங்க ?
இலண்டன் நூலகத்துகாரங்க தேடிட்டு இருங்காங்களோ என்னவோ
இன்னைக்கி நாம பார்க்குற பதிவர்கள் யாரெல்லாங்க
இதோ

ஹாலிவுட் படங்கள், மெக்சிகன் படங்கள், அல்ஜீரியப் படங்கள், சென்னைத் திரைப்படவிழாப்படங்கள், இந்தியப் படங்கள், குழந்தைகளுக்கான , பெரியவர்களுக்கான படங்கள், பார்க்கவேண்டியவை, தவறவிடக்கூடாதவை, குடும்பப் படங்கள் ன்னு அட்டவணை போட்டு படத்தோட அழகா யாராவது எழுதியிருந்தா தேர்ந்தெடுத்துப் பார்க்கலாமேனு நினைக்கிறவங்க முதல்ல வரவேண்டிய வலைப்பூ,
எல்லாந் தெரிஞ்சவங்க கூட எதையாவது தவற விட்டுட்டமான்னு இங்க வந்து உறுதிபண்ணிக்கிடலாம். அவ்வளவு விவரத்தோட (ஈரானிய, இத்தாலிய, இஸ்ரேலிய) வரிசைப்படுத்தி ரொம்பத் தெளிவா எழுதியிருக்காரு. சூர்யா.

டென்சனாவற விசயத்தை சுளுவா லாவணில சொல்றத பாத்தமே.
டென்சன் ஆக்குற செய்தியை வெற்றிகரமா முன்னிறுத்துறது (presentation) எப்படிங்கறத இவ்வளவு எளிமையா வலிமையா இப்பதான் படிக்குறேன். சூப்பரா எழுதியிருக்காரு குவைத்துல இருக்குற மஞ்சூர் ராசா
நகைச்சுவைல வேறு கலக்குறாரு இவரு. பெயரில் வரும் குழப்பம்ன்னுட்டு ஒரு கட்டுரை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பதிமூணு வித்தியாசங்கள் அப்படின்னு எழுதியிருக்கறதெல்லாம் மெய்யாங்காட்டியுமே சிரிப்பு வருது . சிலத என்னால ஒத்துக்கிட முடியாட்டியும் நல்லாத்தான் இருக்குது.

நாட்டு நடப்பு, அறிவியல் செய்தி (செல்போனில் எப்படி முட்டை அவிக்கலாம்) அதிக கவனம் கிடைக்காத ஸ்மைல் பிங்கி பற்றிய விவரங்க,

வாடிவாசல் விமர்சனம், நீங்க தினமும் சாப்பிடுற உணவு உங்களுக்குப்பிடிக்கவில்லையா? அப்படின்னு கேள்வி கேட்டு படங்க போட்டிருக்காரு, நீங்க பாத்திட்டு சொல்லுங்க, அப்புறம் சாப்பாட்ட யாரும் குத்தம் சொல்லமாட்டீங்க
இவரோட வலைப்பூ



மேலும் வாசிக்க...

Sunday, April 12, 2009

நன்றி - நர்சிம் : வருக! வருக மாதங்கி

அன்பின் நர்சிம் ஒரு வார காலம் ஆசிரியப்பொறுப்பில் இருந்து அரும்பணியாற்றி ஆறு பதிவுகளீட்டு 116 மறுமொழிகள் பெற்று இன்று வலைச்சரத்தினின்று விடை பெறுகிறார். அவர் வித்தியாசமான முறையில் பதிவுகளிட்டு பல புதிய / புகழ பெற்ற பதிவர்களை அறிமுகம் செய்து விடை பெறுகிறார். அவருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துக் கூறுவதில் பெருமை அடைகிறோம்.

13,ம் நாள் துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் அன்பின் மாதங்கி. இவர் பெரிதினும் பெரிது கேள் என்றொரு வலைப்பூ வைத்திருக்கிறார். 2005ல் இருந்து எழுதி வருகிறார். கவிதைத் தொகுப்பாக புத்தகம் வெளியிட்டு உள்ளார். தமிழ்ப் புத்தாண்டில் கலக்க வரும் இவரை வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறோம்.

மேலும் வாசிக்க...

Saturday, April 11, 2009

எனது பதிவுகளில் எனக்கு...

இன்று எனக்குப் பிடித்த சில எனது பதிவுகள்.


இந்தப் பதிவு குமுதம் நடுப்பக்கத்தில் ஒரு எழுத்து கூட மாறாமல் முதல்முறையாக அச்சில் வந்த பதிவு. அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கார்ட்டூன் படங்களுடன் அருமையாக வந்ததைப் பார்த்து மகிழ நினைத்த நொடியில் ஒரு சிறு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வேறு செய்திருந்தார்கள்.. அதாவது எழுதியவர்- ‘நர்சிம்’ என்ற எழுத்துக்களுக்குப் பதில் ‘மணிவண்ணன்’ என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன்.ஹும்ம்.

---

அப்பாவின் வழிகாட்டுதலைப் பற்றிய இந்தப் பதிவு எனக்கு பிடித்த என்பதை விட எனக்கு நல்ல அறிமுகத்தை தந்த பதிவு என்றும் சொல்லலாம்.

--

வார்த்தைகளைப் பற்றி நான் எழுதிய இந்தப் பதிவும் எனக்குப் பிடித்த ஒன்று.. அதில் உள்ள அம்பேத்கரின் மேற்கோளைப் படிக்கும் பொழுதெல்லாம் ஒரு பிரஷ்னஸ் வரும் எனக்கு.உத்வேகம்.உங்களுக்கு?

---------
அக்காவைப் பற்றி நான் எழுதியது.. சில கண்ணீர்மல்கும் மடல்களைப் பெற்றுத்தந்த பதிவு.

---

ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டைப் பற்றி,எங்கள் கிராமத்தில்,வீட்டில் நான் அனுபவித்த,பார்த்த,கேட்ட அத்தனை செய்திகளையும் எழுத்தில் கொண்டுவர வைத்த இந்தப் பதிவும் பிடித்த ஒன்று.

--

இந்தப் பதிவு யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ.. பதிவும்,பின்னூட்டங்களும் எங்காவது யாருக்காவது பயன்படும் என்பதால்.. ஏனெனில் ஏதாவது செய்யணும் பாஸ் இந்த சமூகத்திற்கு.

-----

நன்றி!.

..










மேலும் வாசிக்க...

Friday, April 10, 2009

டாக்டர் ஷாலினி...ஷக்தி..

எனக்குள்ளே
ஒரு சின்னஞ்சிறுபெண்
எப்போதும் இருந்து கொண்டு
ஒருபோதும்
மூப்படையவோ – சாகவோ
மறுத்தபடி வாழ்கிறாள்

-லிவ் உல்மன்

உமாஷத்தியின் வலையில் கண்ட ஒரு பூதான் அந்த மேற்கோள் கவிதை. “வானவில் ஏறித் தப்பிச் சென்றவன்” போன்ற கவித்துவ தலைப்புகள் கண்களில் படுகிறது.
-------

டாக்டர் ஷாலினி

பேச்சளவில் சமூக அக்கறை கொண்ட மக்களுக்கு மத்தியில் ஆக்‌ஷன் ஓரியண்ட்டட் டாக்டர். சிதறல்கள் தீபாவின் குட்டச் பேட் டச் என்ற பதிவில்,குழந்தைகள் வளர்ப்பு பற்றி எழுதி இருந்தார். அதன் அடுத்த கட்டமாக இது குறித்து ஒரு கருத்தரங்கம் நடத்தினால் என்ன என்று எண்ணி, டாக்டரிம் கேட்க நினைப்பதற்குள் ஓக்கே சொன்ன சமூக அக்கறையாளர். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அறிவிப்பு வரும். அனைவரும் வரவேண்டும். நன்றி டாக்டர் ஷாலினி.

------

“இந்தப் பூமிப்பந்தைப் புரட்டிப் போடும் அடுத்த நெம்புகோல் தமிழ் மூளைகளிலிருந்து உருவாக வேண்டும் என்ற கனவுகளோடு...”

இப்படிக் கனவுகானும் வலைப்பூ..

மா.சிவக்குமார் , உள்ள(த்)தை எழுதுகிறேன் என்ற தலைபிலேயே வசீகரிக்கும் நல்ல நடையில் அருமையான ‘எழுத்து’க்கள்.

-------------

சொல்வதற்கு நிறைய இருக்கு என்று தன்னைப் பற்றிய குறிப்பில் சொல்லும் வித்யாவின் இந்தப் பதிவு எனக்குப் பிடித்த ஒன்று. குறை சொல்லலாம்,அதற்கு தீர்வும் சொல்வது அடுத்தக் கட்டம். நிறைய எழுதுங்கள் வித்யா.

---------
மிஸஸ் தேவின் இந்தப் பதிவு, அம்பையின் ‘அடவி’ விமர்சனம். பொதுவாகவே விமர்சனங்களுக்கு நிறைய மெனக்கிடுகிறார். நீண்ட விமர்சனங்களில் கதை மாந்தர்களைப் பற்றிய குறிப்புடன் இவர் எழுதி வரும் விமர்சனங்கள் அந்தப் படைப்பை படிக்கத் தூண்டுகிறது.அதுதான் தேவையும் கூட.

----------

வெட்டிப்பயல் மிகப் பிடித்த, 2006ல் இருந்து எழுதிவரும் அருமையான பதிவர்.. கல்லூரி கதையில் வென்ற இவருக்கு வாழ்த்துக்கள்.

---------


---




மேலும் வாசிக்க...

Thursday, April 9, 2009

குழந்தைகள் உலக க,கொ,க,கூ, அனுஜம்யா,மின்னும் மின்னல்..

க,கொ,க,கூ

குழந்தைகள் என்றாலே தனி உலகம்தான். அதற்குள் பயணப்பட நிறைய வாகனங்கள் வேண்டும்.அதில் முதன்மையானது காமிக்ஸ். இப்படி குழந்தைகளின் உலகத்தை பதிவில் அற்புதமான தகவல்களுடன் பதிந்து கொண்டிருக்கும் இந்த வலைத்தளத்தைப் பாருங்கள்.குழந்தையாக மாறுங்கள்.

இன்னும் நிறைய எழுதுங்கள் காமிக்ஸ் பிரியன்(பெயர் உட்பட எந்த விவரமும் தெரியவில்லை இந்த பதிவரைப்பற்றி)

-----------

அனுஜன்யா

‘நிறைய படியுங்கள் ஏனெனில் அதுதான் எனக்கும் சொல்லப்பட்டது’ என்ற வார்த்தைகளை முதல் பின்னூட்டமாக எனக்கு இட்டவர். யார்ரா இது என உள்ளே போனால், அனு‘ஜம்’யா என்று சொல்லவைக்கும் கவிதைகள். பெரும்பாலான கவிதைகள் உயிரோசை,கீற்று என வேறுதளத்தில் இயங்கும்,ஆனால் இயல்பானவர். ‘High’கூக்கள் நிறைய எழுதி இருக்கிறார்.

மின்னல்

காற்றும் கணமான அட்டையும் என்ற இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள். மழையும் வானும் சார்ந்த பிரதேசமாக இருக்கிறது இவரது பெரும்பாலான படைப்புகள். அதனால்தானோ மின்னல் பக்கம் என்ற பெயரில் எழுதுகிறார்?.

நிறைய எழுதுங்கள் மின்னல்.

-----------
மேலும் வாசிக்க...

Wednesday, April 8, 2009

வளர்மதி,அகநாழிகை,ஜமாலன்,அமிர்தவர்ஷினி...

வளர்ந்தமதி.

நான் அவ்வப்பொழுது, மும்மூணு வார்த்தைகளை ரெவ்வெண்டு வரிகளாக மடக்கிப் போட்டு அதற்கு கவிதை என்றும் லேபிள் கொடுத்து பதிவாக போட்டுக்கொண்டிருப்பேன். “ நீங்கள் கவிதைகளில் எங்கு நிற்கிறீர்கள் என்பது தெரிகிறது” என்று ஒரு பின்னூட்டம் போட்டார் என்பதை விட பொடனியில் போட்டார் என்றே சொல்லலாம். அவர்தான் வளர்மதி.

சிற்றிதழ் பேக்ரவுண்ட் பார்ட்டி. மாற்றுச் சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர். மிகுந்த மெனக்கெடலுடனும் தேடலுடனும் எழுதுபவர். ஆழ்ந்து படிக்க வேண்டும்.

ஒரு சோறு பதத்திற்கு இந்தப் பதிவைப் பாருங்கள்

படித்துவிட்டு “சூப்பர்” என்று பின்னூட்டம் போட்டால் தெறிக்கும் தமிழில் பதில் வரும்.

---------

அகநாழிகை

சட்டக்கல்லூரி விவகாரம் பற்றி பதிவர் சந்திப்பில் பேசப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அடைமழையிலும் சுடச்சுட விவாதம் நடந்த அன்றைய தினத்தில் போலீஸ் மீசையுடன் ஒருவர் வந்து எல்லாரிடமும் பெயர் மற்றும் இன்னபிற டீட்டெய்ல்களைக் கேட்டவாறே இருந்தார்.

உளவுத்துறையோ என்று நினைத்துக்கொண்டே(டரியலாகிக்கொண்டே) அவரது விவரங்களை வாங்கி, வீட்டிற்குப் போனதும் முதல் காரியமாக அந்த வலைத்தளத்தை நோண்டிப்பார்த்ததும் தான் தூக்கம் வந்தது. மிக நல்ல கவிதைகளை எழுதியிருக்கிறார். வடக்குவாசல் என்ற இதழில் வெளிவந்த நல்ல கவிதைகள்.

படிக்க

-------

ஜமாலன்

கொஞ்சம் ஹோம்வெர்க் செய்துவிட்டு படிக்க வேண்டிய ப்ளாக்.அல்லது படித்துவிட்டு மூளையில் வொர்க்கவுட் செய்ய வேண்டிய பதிவுகளா இல்லையா என்பதை இதைப் படித்து முடிவுசெய்யுங்கள்.

--------

அமிர்தவர்ஷிணி அம்மா என்ற அக்காவின் தெருக்கூத்துப் பற்றிய இந்தப் பதிவும் அந்தக் கலையை பற்றி தெ(பு)ரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

..

மேலும் வாசிக்க...

Tuesday, April 7, 2009

துக்ளக்கல்லாதமகேஷ்..மழைக்கு ஒதுங்கிய..

துக்ளக் மகேஷ்

துக்ளக் என்றவுடன் வேறுமாதிரி நினைத்துவிடாதீர்கள். துக்ளக் கோமாளித்தனங்கள் ஒன்று கூட இவர் எழுத்தில் பார்க்க முடியாது. ஆழ்ந்த அறிவும், திறமையும் மிக்க பதிவர்.

இவர் எழுதிய கடவுள் பற்றிய பதிவு மிக ஆழ்ந்த ஒன்று.

‘தொர’ அவ்வப்பொழுது இங்கிலீஷ் படங்களுக்கு எழுதும் விமர்சனங்களும் அருமையாக இருக்கும்.( ‘தொர’ வார்த்தைப்ரயோகம்: நன்றி அப்துல்லா).

அ.மு.செய்யது.

மழைக்கு ஒதுங்கியவை... என ரம்மியமான தலைப்பில் எழுதிவரும் கவனிக்கப்பட வேண்டிய புதிய(இப்ப கொஞ்சம் பழசாகிவிட்ட) பதிவர்.

இவர் எழுதிய வழக்கொழிந்த சொற்கள் பதிவில் நிறைய வார்த்தைகள் அருமையாக இருக்கும். பின்னூட்ட மொக்கைகளைக் குறைத்தால் இன்னும் வளரலாம் செய்யது.

நையாண்டி நைனா

லகலகலக என இவர் நையாண்டி மட்டுமே செய்வார் என்று நினைத்திருந்த பொழுது, கம்பரின் பாடல் ஒன்றில் சீதை ஏன் வளையலைத் திருப்புவதாக எழுதியிருக்கிறார் கம்பர் என சில காரணங்களை அப் பதிவில் குறிப்பிட்டேன். பின்னூட்டத்தில் அடி பின்னி விட்டார் மனுஷன். மிக அருமையாக உல்ட்டா பதிவுகள் போடுவார். எனது கணிப்பில்,இவர் சீரியஸ் பதிவு எழுதினால் அருமையாக இருக்கும்.ஊர் பெயர் எதுவும் தெரியாது. கணேசாக இருக்கும் வாய்ப்பும் உள்ளது (ச்சும்மா நக்கல் நைனா.)

..

என்.கணேசன்.

இவர் யார் என்றே தெரியாது எனக்கு2007 ல் இருந்து எழுதி வருகிறார். ஒரு பின்னூட்டம் கூட இட்டதில்லை இவருக்கு என்றாலும் இவரின் படைப்புகளை படிக்காமல் தாண்டிப்போனதில்லை. இவரின் படைப்புகள் தொடர்ந்து விகடனில் வருவது இவரது ஃபுரொபைலைப் பார்த்தாலே தெரியும். மிக நேர்த்தியான நடை.

இவரது வலைப்பூ

மேலும் வாசிக்க...

Monday, April 6, 2009

வலைச்சர வணக்கம்..

வலைச்சர வணக்கம்...

ஆம். இந்த வாரம் எனது விரல்கள் தான் வலைச்சர ஆசிரியர்.வலைச்சரத்திற்கு நன்றி.

ஓராண்டு பதிவனுபவமும், நேற்றைய பதிவர்சந்திப்பில் மேலும் சில அறிமுகங்களை தந்த இவ்வேளையில் இந்த வேலை எளிதாகப் போகிறதெனக்கு என்றாலும்,

10 ரூபாய்க்கு மொத்தமாக ஷாம்புகள் வாங்கி 10 நாளும் ஒவ்வொரு பாக்கெட்டையும் ஊதாரித்தனமாக உபயோகித்து, 14ன்காவது நாளில் ஏற்கனவே உபயோகித்த சாஷேக்கைளை உயிர்போக அமுக்கி பிதுக்கி வரும் ஈரோர் சொட்டு ஷேம்புக்களை உபயோக்கிக்கும் நிலைப் போலத்தான் அறிமுகங்களும். வலைச்சர ஆசிரியர் ஆனால் அவரை,இவரை என அடுக்கி வைத்து அனைத்தும் பிரபலமாகிவிட்ட வலைஞர்களாகிவிட்ட நிலையில்.. எண்ணப்பிதுக்கல், என்றாலும் ஒரு வாரம் இருக்கிறது..இருக்கட்டும்.

நான் ஏன் எழுத வந்தேன் என்ற வரலாற்றுக் கேள்விகளை புறம்தள்ளி, வலையுலகின் நட(ட்)ப்புகளை அகமிழுப்போம்.

ஆம், வலையுலகம் என்னை ஒரு மிகப்பெரிய சோகத்தின் சுவடுகளில் இருந்து மிக வேகமாக வெளிவரச்செய்தது என்றே சொல்ல வேண்டும். அந்த நாட்களில் என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு இயந்திரத்தனமான வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தேன். life has to move on என்ற சொற்றொடர் மிக நன்றாக இருக்கும் அதை அடுத்தவருக்கு ஆறுதலாக சொல்லும்பொழுது.ஆனால் நமக்கு வரும் பொழுது அதில் இருந்து வெளிவர ஏதாவது ஒரு வேற்றுவெளி தேவைப்படுகிறது. எனக்கு யாவரும் கேளிர்.

அதுபோலத்தான் எல்லோருக்கும். பொதுவாக 16 வயதில் இருந்து 22 வயது வரை அனேகம் பேர் ஏதாவது ஒரு வகையில் மினிமம் கவிதைகளாகவாவது எழுதத்தான் செய்கிறோம். அதில் பலர் காதலித்து விடுகிறார்கள்.சிலர் தொடர்ந்து எழுதுகிறார்கள். பிறகு வேலைக்குப் போய்விடுகிறார்கள். அதிலும் சிலர் தொடர்கிறார்கள். விளைவு, ஒரு காலை நேரம், நாக்கை துருத்திக் கொண்டு, தொலைபேசியில் சந்தேகம் கேட்டுக் கேட்டு, பிளாக் ஆரம்பித்துவிடுகிறோம்.

இது செல் போன் மாடல் வாங்குவது மாதிரி தான். முதலில் ஹலோன்னு சொல்றதுக்கு ஒரு போன் இருந்தா போதும் என லோ மாடல் வாங்கி,பிறகு fm, அப்புறம் கேமிரா,(ச்சே எனக்காக இல்ல,வீட்ல) என பிளாக்பரி வரை போகிறவர்கள் உண்டு.

அதுபோலத்தான், டெய்லியா எழுதப்போறோம், என்று தொடங்கி, நல்லா எழுதலன்னா என்ன, நம்ம பிளாக் என்று ஆசுவாசப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக பின்னூட்ட மெருகேற்றல்களுக்குப் பிறகு பிளாக் டிசைனில் தொடங்கி, பதிவுகளின் தரம் வரை தினமும் அரை நாள் மேனுவலாகவும் 24 மணிநேரம் மெண்டலி(ல்)யாகவும் சுற்றும் பதிவர் மனநிலை.

தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் வரப்போவதும் இங்கிருந்துதானோ என புருவம் உயர்த்த வைக்கும் பதிவுகள் எத்தனையோ... பார்ப்போம் இந்த வாரம்.

..
மேலும் வாசிக்க...

Sunday, April 5, 2009

நன்றி கலந்த நல்வாழ்த்து கவிதா - விடை பெறுக - நர்சிம் - வருக வருக் - பொறுப்பேற்க வருக

அன்பின் கவிதா

ஒரு வார காலமாக ஆசிரியர் பொறுப்பேற்று நவரத்தினச் சரமாக வலைச்சரம் தொடுத்து - அருமையான புதிய பதிவர்கள் பலரை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்து - பல பதிவர்களின் வலைச்சர அனுபவத்தினைக் கேட்டறிந்து - பதிவாக இட்டு - ஏற்ற பொறுப்பினை செம்மையாகச் செய்து விடைபெறும் உங்களுக்கு எங்களின் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வலைச்சர ஆசிரியர் ஆவதற்கு பொருத்தமான ஒருவரை தனி மடலில் பரிந்துரை செய்க

அன்பின் நர்சிம்

நலம். நலமே விளைக ! நாளை ஏப்ரல்த்திங்கள் ஆறாம் நாள் முதல் வலைச்சரத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்பதற்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் வலைப்பூவாகிய யாவரும்கேளிர் எனும் பதிவு எல்லோராலும் அதிகம் படிக்கக்கூடியது. நல்ல பல பதிவுகள் கொண்ட வலைப்பூ.

விதிகளின் படி பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துக.

வலைச்சர ஆசிரியர் ஆவதற்கு பொருத்தமான ஒருவரை தனி மடலில் பரிந்துரை செய்க

சீனா
மேலும் வாசிக்க...

Saturday, April 4, 2009

05.04.09 - வைடூரியச்சரம் - (Cat's Eye )- நவரத்னங்கள் விடைபெறுமின்றன

வணக்கம் !! இந்த வாரத்தொடக்கத்தில் இருந்து வலைச்சரம் தொடுக்க எனக்கு வாய்ப்பு அளித்த சீனாஜி க்கு எங்களுடைய நன்றியை தெரிவித்து கொண்டு நவரத்தினங்களை பற்றி நானும் நிறைய அறிந்துக் கொள்ள வாய்ப்பு கொடுத்தமைக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறோம். இந்த வாரங்களில் இட்ட பதிவுகளை வரிசைப்படுத்த விரும்புகிறேன்....



நவரத்தினங்களின் தொகுப்பு - (Summary)


30.03.2009 முத்துச்சரம் – (pearl ) – பார்வைகள்

31.03.09 – வைரச்சரம் (Diamond)-பிடித்த எழுத்துக்கள்

01.04.09 - ரத்தினச்சரம்-(lapiz lazuli) புதிய பதிவர்கள்

02.04.09 - மாணிக்கச்சரம் (Ruby) - பிடித்த பெண் எழுத்தாளர்கள்

03.04.09 – பவளச்சரம் (coral ) - பழப்பச்சடி

04.04.09 – கோமேதகச்சரம் – (Sappire )– வலைச்சரம் பற்றி பதிவர்கள்

05.04.09 - வைடூரியச்சரம் - (Cat's Eye )- நவரத்னங்கள் விடைபெறுமின்றன



அணில் குட்டி அனிதா : ஆமாம் கிளம்பறோம், சீனா அண்ணாச்சி ரொம்ப நன்றி நன்றி நன்றி..!! .. உங்க வலைச்சரம் கவி பென்டை சூப்ப்ரா நிமித்துச்சி... :)) பின்ன சரம் தொடுக்கறதுன்னா சும்மாவா? அம்மணிக்கு முதுகுவலி ன்னு புலம்பல்ஸ் ஆஃப் வேளச்சேரி ஆயிட்டாங்க.. :) ஸ்ஸ் கொஞ்ச நாள் நிம்மதியாக இருக்கலாம்... முதுகு சரியா ஆகிறவரைதான்...!!



பீட்டர் தாத்ஸ் :- வைடூரியச்சரம் - (Cat's Eye )- Some Quality of Cat's Eye • Smoothness• Brilliance of chatoyance• High specific gravity - heavier than average stone of the same size• Having three streaks of light, similar to the sacred thread worn by Brahmins in India• Straightness of the chatoyance


Read more about Cat's Eye


மேலும் வாசிக்க...

04.04.09 – கோமேதகச்சரம் (Sapphire )–வலைச்சரம் பற்றி பதிவர்கள்

வலைச்சரம் தொடுப்பது என்பது அவ்வளவு எளிதாக எனக்கு தோன்றவில்லை, எல்லாம் இந்த ஐந்து நாட்களில் பெற்ற அனுபவம் தான். சரி நம்மை போல மற்ற நண்பர்களின் அனுபவமும் கேட்டு தெரிந்துக்கொண்டு அப்படியே வலைச்சரத்தின் பழைய புதிய நினைவுகளை கொண்டு வரலாம் என்று ஆசைப்பட்டு அனைவரிடமும் அவர்களின் கருத்தை கேட்டிருந்தேன்.. இதோ...(இதுவரை அனுப்பியவர்கள் வரை,) வலைச்சரம் பற்றிய அவர்களின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள் :-

கயல்விழி முத்துலெட்சுமி :- வழக்கம்போலத்தான் நம்மளையும் நம்பி கூப்பிடறாங்களேன்னு முதலில் குஷி.. நாமபாட்டுக்கு தினம் வர பதிவுன்னு தமிழ்மணத்துல காட்டுற எல்லாமே படிச்சு குவிக்கிறோமே.. அதுல இருந்து எழுதிடலாமேன்னு தோணிச்சே தவிர.. இதைப்படிங்க ..நீங்க தவறவிட்டறாதீங்கன்னு சொல்லனும்ன்னா அதுஎப்படிப்பட்ட நல்ல பதிவா இருக்கனும்ன்னு ஒரு விதமான தடுமாற்றம் ஆகி எப்படியோ பொறுப்பை முடிச்சிட்டேன்னு தான் சொல்லனும்.. ஆனால் அதுக்கப்பறம் சொந்தப்பதிவுகளை பொறுப்பா எழுதனும்னு தோன்ற ஆரம்பிச்சது .. :)

குட்டி கண்ணம்மா (G3) :- கவிதாயினி காயத்ரிக்கும் ஜி3 காயத்ரிக்கும் குழப்பம் வந்து தான் நான் சிக்கினேன் வலைச்சரத்துல. இல்லாட்டி நம்மள எல்லாம் யாரு சீண்ட போறா... சரி.. அந்த கதைய விடுங்க. ஆனா ஒரு வாரம் போட வேண்டிய பதிவுக்காக பழைய பதிவுகள் எல்லாம் படிச்சப்போ, திரும்ப அந்த நாட்களுக்கே போன மாதிரி ஒரு அனுபவம். பதிவுகள்ல பின்னூட்டங்கள் அதை தொடர்ந்த ஜி-டாக் அரட்டைகள்னு எல்லாத்தையும் திரும்பிப்பாக்க ஒரு வாய்ப்பா இருந்துது. நான் தொகுத்த அந்த ஒரு வாரம் மத்தவங்களுக்கு எப்படி இருந்துதுனு தெரியலை (டெர்ரராத்தான் இருந்திருக்கும் :) என்ன இருந்தாலும் அதை நானே சொல்லக்கூடாதில்ல :P ) ஆனா தொகுத்த எனக்கு மனநிறைவா இருந்துது :)

ஆயில்யன் :- எழுதுவதை மட்டுமே யோசிக்க வைக்கும் பதிவுலகில்
எழுத்துக்களை வலைச்சரம் வாசிக்க வைக்கிறது !

கடந்து போன நிமிடங்களில் மலர்ந்து மறைந்த வலைப்பூக்கள்
பின் மீண்டும் மலர்ந்து வாசம் வீசச்செய்யும் வலைச்சரம்

வலைச்சரத்தில்
எழுதுபவர்களுக்கும் உற்சாகம்!
எழுத்தில் வலம் வருபவர்களுக்கும் உற்சாகம்!
எழுத்தினை வாசிப்பவர்களுக்கும் உற்சாகம்!

பழமையான வலைச்சர பக்கத்தினை கொஞ்சம் எளிமைப்படுத்துங்கள் யாவரும் வலம் வந்து வரிகள் கண்டு வாசித்து செல்ல....!

கோபிநாத் :- இருவர் மனதில் எப்போதும் விழா மேடைகள் பெருமையான விஷயமாக இருக்கும். ஒன்று பரிசை வாங்குபவர் மற்றொருவர் பரிசை தருபவர். அப்படி ஒரு பெருமைக்குறிய மேடை தான் நம்ம வலைச்சரம். அதில் நானும் இந்த இரண்டு நிலைகளில் இருந்திருக்கிறேன் என்பது எனக்கு மிக பெருமையான விஷயம். என்னையும் தொடர்ந்து ஏழு நாட்கள் பதிவுகள் போட வைத்தவர்கள்.அவர்கள் செய்யும் பணி மிக பெருமைக்குறிய விஷயம். தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் ;) இந்த வாய்ப்பை தந்தமைக்கு கவிதா அக்காவுக்கு என்னோட மனமார்ந்த நன்றி ;)

ஜமால் :- அது நாள் வரை, வலைச்சரத்தில் அறிமுகமே செய்யப்படாத நான் ஒரு தொகுப்பாளராக, மிக்க மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. முதல் நாள், ஒரு வித பயம் கலந்த எதிர்ப்போடு போயிற்று, வாசகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்தடுத்த நாட்கள் இன்னும் கண் விருந்து வைக்கவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. முடிந்த அளவு புதியவர்களை அறிமுகம் செய்தேன். ஐந்து நாட்கள் தான் முடிந்தது பின்னர் சற்று சோர்வடைந்துவிட்டேன். மொத்தத்தில் மெத்த மகிழ்ச்சி.

கோவி கண்ணன் :- வலைச்சரம் தொகுப்பு என்பது 'படித்ததில் மனதில் பதிந்தவை' வகை, பின்னே தெரியாததை எப்படி எழுத முடியும் ? நாலு பேருக்கு நாம் என்ன என்ன மண்டையில் ஏற்றிவைத்திருக்கிறோம் என்பதாக மறைமுகமாக புரிய வைக்கும், பிடித்தவற்றை எழுதுவது எல்லோருக்கும் எளிமையானது தான். ஆனால் நமக்கு நன்கு அறிமுகமானவங்களை பதிவுல குறிப்பிடலையேன்னு யாரும் வருத்தப்படுவாங்களோ ன்னு கொஞ்சம் உறுத்தலாக இருக்கும். இந்த 'பதிவை' விட்டுட்டிங்களேன்னு சிலர் கேட்பாங்க, வலைச்சரம் விளம்பரத்துக்கானது அல்ல, அது அவரவர் பார்வையிலான தொகுப்பு என்ற எண்ணத்தில் தான் எழுதினேன்.

தருமி :- வலைச்சரத்தின் அந்த ஒரு வாரப் பொறுப்பில் நான் செய்த தவறுகள் தான் அதிகம். சரியான புரிதல் இல்லாமல் என் பதிவுகளுக்கு ஒரு முன்னோட்டம் ஏதும் முதல் பதிவில் சரியாகக் கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன். தொடர்ந்த பதிவுகளிலும் முழுமையான அளவில் மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு இடம் கொடுத்ததாக நினைவில்லை. மொத்தத்தில் சரியான முன்னேற்பாடு ஏதுமின்றி ஒரு வார வலைச்சரத்தை கெடுத்த 'பெருமை' மட்டும் என்னைச் சேரும். மன்னிக்கணும்.

சென்ஷி :- வலைச்சரம் ஆரம்பித்த புதிதிலேயே அதில் ஆசிரியர் பொறுப்பு கொடுத்திருந்தார் நண்பர் சிந்தாநதி.. (இப்ப எங்க தலைவா இருக்கீங்க?). அன்றைய பதிவுகளில் இப்போது இருப்பதை போல நிறைய்ய பதிவர்கள் இல்லாது இருந்த போதும் நண்பர்கள் அல்லாது மற்றையோர் எழுதும் பதிவர்களில் ரசனைக்குரிய பதிவுகளை தேர்ந்தெடுக்க சற்று சிரமப்பட்டு போயிருந்தேன். (இப்போதும் நல்ல பதிவுகளை யாரேனும் தொடுப்பு அனுப்ப வேண்டி உள்ளது.) இப்போது வலையுலகத்தில் நிரம்பி வழியும் பதிவுகளிலும் சிறந்ததை தேர்ந்தெடுத்து தொடுத்து கொடுக்கும் பதிவர்களை பார்க்கும்போது வலைச்சரத்தின் பங்கு மற்றவர்களை விட எனக்கு மிக அதிகமாய் பயன்பட்டுக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாய் உள்ளது.

வலைச்சரத்தின் அத்தனை ஆசிரியர்களுக்கும், வலைச்சரம் என்ற புதுவலையை தொடுத்து தந்த சிந்தாநதி மற்றும் இதர பொறுப்பாசிரியர் குழுவினருக்கும் ரசிகர்களின் சார்பாய் நன்றிகளை

தெகாஜி :- ம்ம்... நான் வலைச்சரம் தொடுக்கும் பொழுது ரொம்ப யோசிக்க வேண்டியதா இருந்தது யாரையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்றதுங்கிறதில. ஏன்னா, அதிகம் கவனிக்கப்படாத அதே நேரத்தில் என் மனதில் நின்றவங்கங்கிற முறையில நான் கொடுக்க முனைந்திருப்பேன். சந்தோஷத்தை கொடுத்தது! ரொம்ப எக்ஸ்சைட்டடா இருந்தேனாம் கவனிச்ச ஒரு நண்பன் சொன்னான்.

நாகைசிவா :- விடிஞ்சா கல்யாணம் பிடிடா வெத்தலை பாக்கு என்பது போல் தான் நான் வலைச்சரம் ஆசிரியர் ஆனதும். அதனால் ரொம்ப எல்லாம் ஹோம் வொர்க் பண்ணாமல் 2006ல் வந்த பதிவுகள் எவை என்று யோசித்து மனதில் சட்டேன ஞாபகம் வந்த பதிவுகளை ஒரு வாரம் சரமாக தொடுத்தேன். ஞாபகம் வந்த போதிலும் அதை தேடி எடுத்து சுட்டி தருவது என்பது ஒரு இமாலய சவால் தான். இருந்தும் அதை பிடித்து மறுபடியும் படிக்கும் போது பள்ளி காலத்து தோழனை சந்தி்த்த மகிழ்வு இதில் கிடைத்தது. சுருக்கமாக இனிமையான அசை போடலாக அமைந்தது.


அணில்குட்டி அனிதா:- ம்ம்.. எல்லாரையும் சொன்னாங்களே அம்மணியின் அனுபவத்தை சொன்னாங்களா...? சொல்ல மாட்டாங்க.. ஏன்னா.. ஹி ஹி.. பெண்டு நிமுந்து போச்சி இல்ல... ..... ..எனக்கும் ஒரு அனுபவம் கிடைச்சது.. பட்னி கிடந்த அனுபவம் தான்.... ஆனாலும்... ஓசில ஜூஸ் வாங்கி குடிக்க நானு என்ன வேணுனாலும் செய்வேனில்ல.. ! :)


பீட்டர் தாத்ஸ் :- கோமேதகச்சரம் (Sapphire)–Sapphire is the most precious of blue gemstones. It is a most desirable gem due to its color, hardness, durability, and luster. The most valuable color of sapphire is cornflower blue, known as Kashmir sapphire or Cornflower blue sapphire.
Read More About Sapphire :-
http://www.addmorecolortoyourlife.com/gemstones/sapphire.asp
http://en.wikipedia.org/wiki/Sapphire
http://www.cwjewelers.com/stonesapph.htm
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது