07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 14, 2009

வலைச்சரத்தில் இன்று - சித்திரை முதல் நாள்

இன்றைக்கு ஏப்ரல் 14, சித்திரை முதல் நாள் இங்கே சிங்கையில் தமிழ் ஆண்டு பிறப்பு கொண்டாட்டங்கள் நடக்கும். இந்த மாதம் முழுவது சிங்கப்பூரில் தமிழ் மொழி விழாக்கள் வாரயிறுதிகளில் காலை, மாலை வேளைகளில் உண்டு.

வெவ்வேறு நிலைகளில் உள்ள மாணவர்களுக்கான, சொற்போர், நாடகப்போட்டிகள், பாட்டுப்போட்டி, மாறுவேடப்போட்டி, பேச்சுப்போட்டி,கதைசொல்லும்போட்டி, காப்பிய
புதிர்போட்டி, கோலப்போட்டி, கதைஎழுதும்போட்டி,கட்டுரைபோட்டி, பெரியவரளுக்கான கதை எழுதும் போட்டி, கவிதைப்போட்டி (மரபு/ புதுகவிதை)
அப்படின்னு தமிழை வளர்க்க இங்குள்ள எல்லாக்கழகங்கள், மன்றங்கள், ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக நடத்துகிறார்கள்.

தமிழுக்கு என்னாலான அடிப்பொடித்தொண்டு எல்லாக்கழகங்கள் மன்றங்கள் ஆகிய,... இந்த ஆகிய, முதலிய மற்றும் போன்ற இவற்றை எங்கே எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

முதலிய என்னும் சொல் முதலாக உடைய அல்லது முதலாவதாக உள்ள என்பன போன்ற பொருள் உள்ள சொல்லாகும். பலவற்றை வரிசையாகச் சொல்ல நேரும் போது எல்லாவற்றையும் சொல்லாமல் அவற்றில் முதலிலுள்ள ஒன்றை மட்டும் சொல்லி மற்றவற்றைச் சொல்லாமல் குறிப்பிடுகிற இடங்களில் மட்டும் முதலிய எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

எடுத்துக்காட்டு : கலைஞர் குறளோவியம் முதலிய இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். சேரன், சோழன் பாண்டியன் ஆகிய தமிழ்வேந்தர்கள்,..... என்பதே சரி. சேரன், சோழன், பாண்டியன் முதலிய மூவேந்தர்,.. தவறு , மூவேந்தர் இம்மூவர் மட்டுமே. கடைசியாக, போன்ற இதை எப்போது பயன்படுத்துவதாம். ஒன்றை மட்டும் சொல்லாமலும், எல்லாவற்றையும் சொல்லாமலும் சிலவற்றை மட்டும் சொல்லும் இடங்களில் போன்ற வரும்.

எடுத்துக்காட்டு: சரிதா அக்னிசாட்சி, தண்ணீர் தண்ணீர், நூல்வேலி, போன்ற படங்களில் நடித்துள்ளார். இது சரி.

தமிழ்ச்சொற்களில் நுட்பமான வேறுபாடுகளை எண்ணி இறும்பூது எய்துகிறேன்.
மேற்கண்ட வாக்கியத்தில் வேறுபாடு என்பது சரியான பயன்பாடு.
அப்படியே மாறுபாட்டையும் பார்த்துவிடுவோம்.
வேறுபாடு என்பது வித்தியாசம். மாறுபாடு என்பது முரண்பாடு.
வேறுபாடு என்பது கொய்யாப்பழத்திற்கும்,மாம்பழத்திற்கும் இடையே உள்ளது.
மாறுபாடு என்பது கொய்யாப்பழத்திற்கும்,நிமிட்டாம் பழத்திற்கும் இடையே உள்ளது.

இறும்பூது எய்துகிறேன், அதுவும் எதற்கு, தமிழ்ச்சொற்களில் உள்ள நுட்பமான வேறுபாடுகளை எண்ணி , இது என்ன கொடுமை. பின்ன என்ன?

இறும்பூது என்றால் மகிழ்ச்சி, பெருமகிழ்ச்சி,
இதெல்லாம் இல்லவே இல்லை. வியப்பு, நம்ப முடியாத ஆச்சரியம் இதுதான் இறும்பூது. கவனமாகப் பயன்படுத்தவேண்டும்.

இடைச்சொறுகலாக என் சொந்த கருத்து.
பெண்கவிஞர், கவிதாயினி இதெல்லாம் தேவையே இல்லை. கவிஞர் என்றால் போதும். ஆசிரியர், வழக்கறிஞர், மருத்துவர் இதெல்லாம் எப்பாலினருக்கும் பொது.

ஒரு சம்பவம் அல்லது நிகழ்வு.
ஓய்வாக இருக்கும்போது செய்யுங்கள் என்றாராம் பேராசிரியர் நன்னனிடம் ஒருவர். அவர் எப்படி செய்வார். ஓய்வாக இருக்கும்போது. ஒழிவாக இருக்கும்போது என்று சொல்லியிருக்கவேண்டும்.

இன்று நாம் பார்க்கப்போகும் பதிவர்கள்:

சங்கப்பலகை வைத்திருக்கும் சிங்கப்பூர் அறிவன்
வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை
என்று எவ்வளவு தவறாக பயன்படுத்தி வருகிறோம் என்பதையும் இப்பழமொழிகளின் மெய்யான பொருளையும் விளக்கியுள்ள பதிவு என்னைக் கவர்ந்தவற்றில் ஒன்று.

பாரம்பரிய இசைக்கருவிகள், தமிழிசை பற்றிய செய்திகள், தமிழும் சிவமும், தமிழ்ப்புத்தாண்டு குறித்த விரிவான விளக்கங்கள் போன்றவற்றைக் காணலாம். பொருளாதாரம், , நாட்டுநடப்பு பற்றிய கட்டுரைகளும் எழுதி வருகிறார்.


இந்த வலைப்பூவில் உழவனும், ஜி. பாலாவும் இணைந்துள்ளார்கள்.

இதிலுள்ள தமிழ் மருத்துவக்குறிப்புகள், இசைமருத்துவச் செய்திகள் இக்காலத்திற்கு ஏற்றவையே. தொய்யல்கீரை- காரணப்பெயரை விளக்கி அதன் பயனையும் கொடுத்துள்ளார்.

இதைக்காட்டிலும் இவர் பதிவின் சிறப்பான இடுகைகள் தமிழின் பெருமைகள் என்ற தொடர் பதிவுகளே. தமிழின் உண்மையான சிறப்புகளைத் தேடிப்பிடித்து எழுதியுள்ளார். நல்லவேளை இவர் வலைப்பூவை இப்போதாவது பார்த்தேனே என்று நினைத்துக்கொண்டேன்.

பத்துக்கு ஒரு சூழியம்
மகாயுகத்திற்கு எத்தனை சுழியம்,
பிதாகரஸ் தியரம் எழுதப்படுவதற்கு முன்பே
போதையனார் எப்படி அளந்தார் என்பதை அளக்காமல் விளக்கமாக கூறியிருக்கும் பாடலை பரப்ப முயலலாம்.

உழவன் கவிதைகளில் கரிசல் காட்டுப்பொண்ணு
எனக்குப் பிடித்திருந்தது. இலக்கணம் படிக்கவில்லை தலைக்கனமும்
எனக்கு இல்லை இப்படிச்சொல்பவர்.

நிறைய காதல் கவிதைகள் எழுதி வரும் பிரியமுடன் பிரபுவைத் தனித்துக்காட்டுவது திரைப்பாடல்களுக்கு இவர் தன் சொந்த வரிகளை நிரப்பி பாடல் கட்டுவது. மிக எளிதாகத் தோன்றினாலும் கேலி இல்லாமல் பொருளோடு புனையும் வல்லமை இவருக்குள்ளது.


பெங்களூருவிலிருந்து எழுதும் திகழ்மிளிர்

தமிழுக்குச் செய்யும் தொண்டாக பல ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களை இந்த இணைப்பில், கூகிள் விரிதாளில் பட்டியல் இட்டுள்ளார்.
படித்து, பயன் பெறுக.

மேலும்
இந்த வலைப்பூவில் ஒணத்தி, கொண்டயம், கண்டு
முதலிய சொற்கள் பற்றிய விளக்கமும் தருகிறார்.

Beemorgan கவிதைகள், கதைகள், திரைவிமர்சனம், படித்ததில் பிடித்தவை, பார்த்ததில் பிடித்தவை எதையும் இவர் விட்டுவைக்கவில்லை. இவர் பதிவைப் படித்தபோது அரசூர் வம்சம் இன்னும் நான் படிக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது.
இவர் பதிவுகளில் என்னைக் கவர்ந்தது பட்டாம்பூச்சியுடனான அனுபவத்தைக்கூறும் எனக்கென கண்முன் காட்சியைக் கொண்டு நிறுத்தும் வரிகள்.

19 comments:

  1. இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அடடா அருமையான பதிவு - இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    முதலிய - ஆகிய -- போன்ற - பௌஅன்படூத்த வேண்டிய முறையைச் சொன்ன விதம் நன்று. ஒன்று - அனைத்தும் - சில - ஆகியவற்றைக் குறிப்பிடும் போது பயன படுத்த வேண்டும் - நன்று நன்று.

    இறும்பூது - விளக்கம் அருமை

    வேறுபாடு - மாறுபாடு
    ஓய்வு - ஒழிவு
    இருபாலாருக்கும் பொதுவான் சொற்கள்

    தமிழ்த்தொண்டு வாழ்க

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அருமையான பயனுள்ள வலைப்பூக்களின் சுட்டிகள் - அறிவன் - உழவன் - பிரபு - திகழ்மிளிர் - பாலசுந்தரம் இவர்காளீன் வலைப்பூக்கள் அனைவராலும் படிக்க வேண்டியவை. அறிமுகப்படுத்தியது நன்று.

    வலைப்பூக்களின் சுட்டிகளுக்குப் பதிலாக -- பதிவின் சுட்டிகளியே அளித்தால் நலமாக இருக்குமோ ......

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. பிரியமுடன் பிரபுவை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். கவிதையைத் தவிர தனக்கு பிடித்த சில புத்தகங்களையும், படித்ததில் பிடித்தது என பதிவிடுகிறார். மற்றவர்களை இனிதான் சென்று படிக்க வேண்டும்.

    நல்ல பதிவு மாதங்கி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    கிருஷ்ணப் பிரபு.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் கவிஞர்.
    மிக அதிகளவில் நாம் உபயோகிக்கும் சொற்களில் கூட பல தவறுகள் செய்கிறோம், நல்ல முறையில் எளிதாக விளக்கியுள்ளீர்கள்.

    ReplyDelete
  6. சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்

    அருமையான தகவல்கள்


    தமிழ் மொழி மாதத்தை ஒட்டி சிங்கையில் நடக்கும் பல்வேறு வகை விழா நடப்பது உள்ளத்திற்கு உவகை அளிக்கிறது.
    அதைக் கண்டு களிக்கும் வாய்ப்பை என்க்கும் கிடைத்து இருப்பதை நினைக்கையில் களிப்படைக்கின்றேன்.

    இதைப் பற்றி இன்னும் பல தகவல்களை தங்களின் இடுகையின் வாயிலாக விரிவாக அறிய கண்டேன்.

    ReplyDelete
  7. /தமிழ்ச்சொற்களில் நுட்பமான வேறுபாடுகளை எண்ணி இறும்பூது எய்துகிறேன்.
    மேற்கண்ட வாக்கியத்தில் வேறுபாடு என்பது சரியான பயன்பாடு.
    அப்படியே மாறுபாட்டையும் பார்த்துவிடுவோம்.
    வேறுபாடு என்பது வித்தியாசம். மாறுபாடு என்பது முரண்பாடு.
    வேறுபாடு என்பது கொய்யாப்பழத்திற்கும்,மாம்பழத்திற்கும் இடையே உள்ளது.
    மாறுபாடு என்பது கொய்யாப்பழத்திற்கும்,நிமிட்டாம் பழத்திற்கும் இடையே உள்ளது.

    இறும்பூது எய்துகிறேன், அதுவும் எதற்கு, தமிழ்ச்சொற்களில் உள்ள நுட்பமான வேறுபாடுகளை எண்ணி , இது என்ன கொடுமை. பின்ன என்ன?

    இறும்பூது என்றால் மகிழ்ச்சி, பெருமகிழ்ச்சி,
    இதெல்லாம் இல்லவே இல்லை. வியப்பு, நம்ப முடியாத ஆச்சரியம் இதுதான் இறும்பூது. கவனமாகப் பயன்படுத்தவேண்டும்.
    /

    உண்மை தான்.நான் தமிழை முழுவதும் அறிந்தவன் என்று சொல்ல மாட்டேன். இன்னும் எழுத்துப்பிழையுடன் எழுதிக்கொண்டு இருக்கிறேன். அதை உங்களைப் போன்றவர்கள் எழுத்துகள் மூலம், படிக்கும் புத்தங்களின் வாயிலாகவும் திருத்திக் கொள்ள விழையும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  8. தங்களைப் புத்தக வெளியிட்டு விழாக்களில் பற்றிய நிகழ்ச்சிகள் வசந்தம் ஒளிவழியில் ஒளிப்பரப்பாகும் பொழுது கண்டதுண்டு.

    சிங்கையில் இருப்பதால் பல நல்ல கவிதைத்தொகுப்புகளைப் படிக்க முடிக்கிறது. அந்த வகையில் சிங்கை ஒரு நன்றியை நவில வேண்டும்.

    மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்.

    சித்திரைத் திருநாள் அன்று
    இவ்வளவு ஒரு அருமையான
    இடுகை இட்டு இதயங்களில்
    இன்பத்தமிழின் இனிமையை இயம்பிதற்கு

    ReplyDelete
  9. சாதாரணமாகத் தெரியும் இந்த வார்த்தைகளுக்குள் இத்தனை நுட்பமான வேறுபாடுகளா?
    ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. பயனுள்ள தகவலை பதிந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. புத்தாண்டன்று இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா..!? :o)

    என் நண்பர்கள் வட்டத்தைத் தாண்டி எனக்குக்கிடைத்திருக்கும் முதல் விமர்சனம் இது.. தொடுப்பு கொடுத்தமைக்கும் விமர்சனத்திற்கும் ஆசிரியர் மாதங்கிக்கு சிறப்பு நன்றிகள்.. உங்களின் ஊக்கமும் ஆதரவும் என்னை மென்மேலும் எழுதவைக்கும்..

    தகவல் தந்த நண்பர் கிருஷ்ணப் பிரபுவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. :)

    ReplyDelete
  11. இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  12. அட என்னை பற்றியும் செய்தி இருக்கு

    நன்றி

    ReplyDelete
  13. எனக்கும் தகவல் தந்த நண்பர் கிருஷ்ணப் பிரபுவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. :)

    ReplyDelete
  14. ஓ ! எழுத்துக்களை பயன்படுத்துவதுல இம்புட்டு இருக்கா ?!?!?

    இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா கற்றுகொண்டு வருகிறேன்

    முதலில் தாமிழை தவறில்லாமல் எழுதனும்

    அருமையான பதிவு
    நன்றி

    ReplyDelete
  15. தமிழை
    அருமையாக அலசுகிறீர்கள்!!!
    மிக அருமை!!

    ReplyDelete
  16. தெளிவான விளக்கங்களுடன் அருமையான பதிவு.

    ReplyDelete
  17. நான் கற்கும் பாதையில்
    கண்ட மலர்களைத் தான்
    அளித்துவருகிறேன்.இவை நான் படைத்தவை அல்ல. நானும் ஒரு மாணவர்தான்.

    ReplyDelete
  18. அன்பு மாதங்கி,
    வலைச்சரத்தில் என்னுடைய பதிவுகளைப் பற்றிக் குறிப்பிட்டமைக்கு நன்றி.

    மிகத் தாமதாகவே பார்க்க வாய்த்தது.மன்னிப்பும் வேண்டுகிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது