07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 15, 2009

வலைச்சரம் மூன்றாவது நாள் - குழந்தை

உங்கள் குழந்தைக்கு புத்தகம் வாசித்துக்காட்டப்போகிறீர்களா?

சில குறிப்புகள் :
கதைகள் மட்டும்தான் படிக்கவேண்டும் என்று இல்லை. செய்திதாளில் அவர்களுக்கேற்ற செய்திகளைப் படித்துக்காட்டலாம். கவிதைகள், பாடல்கள் படித்துக்காட்டலாம். நாம் படித்தவற்றில்

சுவையானவற்றை அவர்களிடம் பகிரலாம். சுவாரசியமான படங்களைக் காட்டலாம். அவர்களே அதைப் பற்றிக்கேட்பார்கள். குழந்தையிடம் நீயே படி என்பதை விட நாமிருவரும் சேர்ந்து படிக்கலாம் என்று சொல்லிப்பார்க்கலாம்.

குழந்தை படிக்கும்போது தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டவேண்டாம்.


(இதை எழுதும்போதே, பல மாதங்களுக்கு முன் நியூஸ்வீக் பத்திரிகையில் செல்லத்துக்குப் படித்துக்காட்டுதல் என்ற சிறு இயக்கம் பற்றி ஒரு கட்டுரை படித்தது நினைவுக்கு வந்தது. குழந்தை நாள்தோறும் ஏதேனும் ஒரு புத்தகத்தை சிறிதுநேரம் வாசித்துக்காட்ட வேண்டும் .

யாருக்கு - செல்லநாய்க்குட்டிக்கு

பக்கத்தில்- பெரியவர்கள் யாரும் இருக்கக்கூடாது.

விளைவு- (சில அமரல்களுக்குப் பின்) குழந்தை ஒரு நிமிடத்தில் வாசிக்கும் சொற்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததாம். முக்கியமாக

அதற்கு தன்னம்பிக்கை மிகக் கூடியதாம்( பாவம் நாய்க்குட்டிக்கு உச்சரிப்பு தெரியாதே )எல்லோரும் நாய்க்குட்டியை வளர்க்கமுடியாவிட்டாலும் குறைந்தபட்சம் பாய்ந்து பாய்ந்து தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் இருக்கலாம். வாசித்து முடித்தபின் நாசுக்காக சொல்லவேண்டுமாம்)

பொறுமையான சொற்களைப் பிரித்து உச்சரிக்கக் கற்றுக்கொடுக்கவும். இதை எத்தனை தரம் படிச்சாச்சி, இன்னும் தெரியலையா என்பதுபோல் பேச வேண்டாம். நிறைய தவறுகள் ஏற்பட்டால் குழந்தைக்கு அப்புத்தகம் கடினமானதாக இருக்கலாம். சற்று எளியதைத் தேர்ந்தெடுக்கலாம்.

குழந்தைக்குப் பிடித்த நூலாசிரியர்கள் யார் யாரென தெரிந்துகொள்ள முயலலாம்.

உங்கள் குழந்தைக்கு வாசிக்க வரும். இதை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். நீ வாசிக்கிறது போதாது போன்ற எதிர்மறை விமர்சனம் வேண்டாம்.

கதை படித்து/ சொல்லி முடித்தபின் கதையைப் பற்றிக் கேட்கலாம். நீ எப்படி முடித்திருப்பாய்? ஏன்?

எந்தப் பாத்திரம் உன்னைக் கவரவில்லை/கவர்ந்தது /பிடித்தது/பிடிக்காதது இப்படி மாறி இருந்தால் எப்படி ஆகி இருக்கும்,.நீ எப்படி கதையை முடித்திருப்பாய்..... இப்படி எதாவது கேட்கலாம்.

படித்து முடித்த புத்தகத்தை டைரியிலோ அல்லது முடித்த புத்தகங்கள் பட்டியலில் சேர்ப்பதற்காகவே படிக்கவேண்டும் என்பதை முன்னிறுத்தி படிக்கக்கட்டாயப் படுத்துவதோ, அவள்/அவன் உன் வயதுதான் எப்படிப்படிக்கிறாள் என்றோ யாருடனும் ஒப்பிடவேண்டாம்.

இவை எல்லாவற்றையும் விட மிக எளிய வழிஇருக்கிறது. குழந்தையைப் வாசிக்கச் சொல்லிவிட்டு நீங்கள்/நாம் ஐபோட், தொலைக்காட்சி, கணினி முதலியவற்றை தனியராய் இயக்கி மகிழ்ந்துகொண்டிராமல், ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் துவங்கலாம்.

இன்று நாம் பார்க்கப்போகும் பதிவர்கள்

http://sasipartha.blogspot.com/
உயிரெழுத்துகள் என்ற பெயரில் வலைப்பூ வைச்சிருக்கிற சசிரேகா ராமசந்திரன் இத்தாலிலேந்து அழகான படங்களுடன் பதிவு எழுதுறார்.
மழலை வகுப்பு நிகழ்வுகள் அனுபவங்களை

கேஜீ ஆரம்பம் என்ற தலைப்புல பல பதிவுகள்

போட்டிருக்கார். அதுல ஒன்று இதோ

ரொம்ப அனுபவித்து எழுதியிருக்கார்.

கவிதை மாதிரி அப்படின்னு நிறைய பதிவுகள் இருக்கு அதுல குழந்தை ங்கற தலைப்பில் நான்கு வரியில் எழுதியிருக்கும் ஒரு கவிதை ரொம்ப மென்மையாயிருக்கு. இதோ நீங்களும் படிச்சுப்பாருங்க கவிதைகள் ,

குழந்தைகளின் உலகம் பற்றிய கவிதைகள் அல்லது கவிதை உலகத்து குழந்தைகள் என்று நினைக்கும்போதே மனதில் வந்தமரும்
கவிதைகள் , முகுந்த் நாகராஜனோட கவிதைக்குழந்தைகள்.

முதல் கவிதைத் தொகுப்பு- அகி

இவரோட இரண்டாவது கவிதைத் தொகுப்பு -ஓர் இரவில் 21 செண்ட்டிமீட்டர் மழை பெய்தது.
ஒன்றாம் வகுப்புக்கு போலீஸ்காரர், நாயைக்கூட்டி வருகிறார் எதற்கு? என்ன ஆகிறது படியுங்கள்
மூன்றாவது கவிதைத் தொகுப்பும் (கிருஷ்ணன் நிழல்) இப்போது வெளிவந்திருக்கிறது.
இவரோட வலைப்பூ இங்கே

சொந்தமாக விழுந்து உடைந்த கோப்பை அப்படின்னு ஒரு கவிதை, குழந்தைகளின் மாயக்கற்பனையை அடையாளம் காட்டும்.

இதோ இதற்கு சுட்டி

குழந்தைகள் பற்றி பேசும்போதே, வயதில் பெரியவர்கள் நினைவுக்கு வந்து விடுகிறார்கள்.நம் பாட்டிகளின் கைவைத்தியம், இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கை,!
இதைப் பார்க்க விளங்கும்
http://pattivaithiyam.blogspot.com/
இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே.இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும். இப்படிச் சொல்பவர் பாண்டிச்சேரியிலிருந்து ஆஸ்திரேலியா போயிருக்கும் இக்பால்.
காய்,கனி, இலைகளின் பயன்கள், கைவைத்தியக் குறிப்புகள் கொடுத்துவருகிறார்.

இவரது கண்ணும் உணவும் அனைவரும் படிக்கவேண்டிய பதிவு.

அடுத்தவர் மாதேவி.

இந்த காய்,கனி, இலை, இதில் செய்ததை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஆனால் அவர்களைக் கவரும் வண்ணம் எங்ஙனம் கொடுப்பதாம். உதவிக்கு வருகிறார் மாதேவி.
இவர் வலைப்பூ இதோ
சின்னு ரேஸ்ரி என்ற பெயரில் எழுதி வரும்
மாதேவி, பல நாட்டு சமையல் வகைகள், உடல்நலத்திற்கு ஏற்ற உணவு வகைகளை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் உள்ளவர். அழகான படங்கள், தெளிவான செய்முறை குறிப்புகளுடன் மிளிறும் இவரது வலைப்பூவில் என்னை வியப்பிலாழ்த்தியது இதுவரை கேட்டிராத மாங்காய்- கீரை சலாட் குறிப்பு இதோ

குழந்தைகள் பிறந்தநாள் வைபவம் கொண்டாடுபவர்கள் மட்டுமில்லாம எல்லோரும் இவரது அலங்கரிக்கப்பட்ட பழ சலாட்டை கட்டாயம் செய்து பார்க்கவும்.
சாண்ட்விச் வகைகள் சத்துணவாக மாற்றுகிறார் மாதேவி.


அப்படியே கொஞ்சம் ஈகரை சித்த மருத்துவம் அப்படிங்கிற
வலைப்பூவுக்குள் போனால், முகப்புலேயே எத்தனை எத்தனை பிரிவுகள் . எதையும் தேடவே வேணாம். அவ்வளவு சுலபமா போட்டு வச்சிருக்காரு சிவகுமார் சுப்புராமன். மலர்களும் மருந்தாகும் படிக்கவேண்டிய பதிவுகளில் ஒன்று.




17 comments:

  1. மூன்றாம் நாள் வாழ்த்துகள்

    சுட்டிகளை அவசியம் படிக்கின்றேன்.

    ReplyDelete
  2. அன்பின் மாதங்கி

    பல புதிய அரிய வலைப்பூக்களை அறிமுகப்படுத்திய விதம் நன்று. அனைத்துப் பூக்களுக்கும் சென்று படித்து மறு மொழியும் இட்டு விட்டேன். நன்றி

    ReplyDelete
  3. நல்ல பதிவு
    தகவல்கள்
    அறிமுகம்

    ReplyDelete
  4. வாழ்த்துகள்

    பலரும் எனக்கு புதுமுகங்கள்

    ReplyDelete
  5. பல அறிய பதிவாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நன்றி மாதங்கி.

    ReplyDelete
  6. அருமையான அறிமுகங்கள் ...பயனுள்ள அறிமுகங்களும் கூட,எல்லாவற்றையும் பார்த்து விட்டேன்,நன்றி மாதங்கி

    ReplyDelete
  7. நன்றி மாதங்கி...நீங்கள் அளித்த மற்றும் அறிமுகப்படுத்திய பதிவுகளில் என்னுடையதும் ஒன்று என்னும் பொழுது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்!!!

    ReplyDelete
  8. மூன்றாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. குழந்தையிடம் நீயே படி என்பதை விட நாமிருவரும் சேர்ந்து படிக்கலாம் என்று சொல்லிப்பார்க்கலாம்.
    ////

    ஆமாங்க
    நாமும் படிக்கும் போது குழந்தைக்கு ஆர்வம் அதிகமாகும்

    ReplyDelete
  10. ////
    கதை படித்து/ சொல்லி முடித்தபின் கதையைப் பற்றிக் கேட்கலாம். நீ எப்படி முடித்திருப்பாய்? ஏன்?

    எந்தப் பாத்திரம் உன்னைக் கவரவில்லை/கவர்ந்தது /பிடித்தது/பிடிக்காதது இப்படி மாறி இருந்தால் எப்படி ஆகி இருக்கும்,.நீ எப்படி கதையை முடித்திருப்பாய்..... இப்படி எதாவது கேட்கலாம்.
    ////

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. மிகவும் பயனுள்ள தொகுப்பு. நன்றி

    ReplyDelete
  12. ஆஹா அசத்திட்டீங்க :)

    ReplyDelete
  13. குழந்தைகளின் வாசிப்புப் பழக்கம் பற்றிய இன்றைய பதிவில் எனது பதிவுகளையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  14. நன்றி நட்புடன் ஜமால், சீனா,ஜோதிபாரதி,
    திகழ்மிளிர், எனது பயணம், சசிரேகா, மிஸஸ் தேவ்,ப்ரியமுடன் பிரபு,
    ஆகாயநதி,உழவன் மாதேவி.

    ReplyDelete
  15. நன்றி நட்புடன் ஜமால், சீனா,ஜோதிபாரதி,
    திகழ்மிளிர், எனது பயணம், சசிரேகா, மிஸஸ் தேவ்,ப்ரியமுடன் பிரபு,
    ஆகாயநதி,உழவன் மாதேவி.

    ReplyDelete
  16. நன்றி... நீங்கள் அறிமுகப்படுத்திய பதிவுகளில் என்னுடையதும் ஒன்று. அதை அறிமுகப்படுத்திய விதம் நன்று. அருமையான,பயனுள்ள வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

    நன்றி மாதங்கி!

    ReplyDelete
  17. நன்றி... நீங்கள் அறிமுகப்படுத்திய பதிவுகளில் என்னுடையதும் ஒன்று. அதை அறிமுகப்படுத்திய விதம் நன்று. அருமையான,பயனுள்ள வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

    நன்றி மாதங்கி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது