07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 27, 2009

பதிவர் சந்திப்பும் -பதிவுகளும் -வலைசரத்தில் மூன்றாம் நாள்

நான் மிகவும் மதிக்கின்ற வலை பதிவர்களின் பதிவுகளின் பகிர்வு ..!


சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடாகி இருந்தது.சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு ஹோட்டலில்...! அதில் கலந்து கொண்டவர்கள்
அண்ணன் ராகவன்,ரம்யா,நாமக்கல் சிபி,தாமிரா,புதுகை அப்துல்லா,அமு செய்யது, ராஜி ..மற்றும் நண்பர் சுரேஷ் ரம்யாவின் அக்கா கலை அக்கா மற்றும் நான்..!



பதிவர் சந்திப்பை பொறுத்தவரை நான் அதுவரை யாரையும் சந்தித்தது இல்லை
அதுதான் என் முதல் பதிவர் சந்திப்பு...! யாரை எப்படி எதிர்கொள்வது என்றும் புரியவில்லை முடிந்தவரை அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கலாம் என ஒரு எண்ணத்தில் இருந்துவிட்டேன் . அதனாலேயே என்னை அமைதியானவன் என்று
தவறாக நினைத்து விட்டனர் நண்பர்கள்..! ;;))


அந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பற்றியும் வர்களின் சிறந் பதிவுகளையும் பற்றி சொல்லுகிறேன்.

அண்ணன் ராகவன்

நான் எதிர்பார்த்ததைவிட இளமையாகவும் சுறு சுறுப்பாகவும் இருந்தார்.ஒரு புதியவரை பார்க்கிறோம் என்ற எண்ணம் துளியும் ஏற்படவில்லை.

இவர் பதிவில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த பதிவுதான்...!



போய்விட முடிவு
செய்துவிட்டேன்












ரம்யா

ஆரம்பத்தில் வெகு சாதாரணமாக தோன்றி..! பின்னர் அணைக்கட்டில் இருந்து பீறிட்டு கிளம்பும் வெள்ளத்தைபோல பதிவுலகில் கலக்கியவர். தன்னம்பிக்கைக்கும்,தைரியத்திற்கும் உதாரணம் இவர். இவரை பற்றி ஒரு வரியில் சொல்வதென்றால்.

''இரும்பு இதயம் படைத்த பீனிக்ஸ் பறவை ''


இவரது பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்தது




பெற்றோர்கள் சிந்திக்க

ஆதரவற்ற குழந்தைகளும் -முதியவர்களும்







படத்தில் அண்ணன் ராகவன் ,நாமக்கல் சிபி,போன் பேசுவது தாமிரா

நாமக்கல் சிபி

முதலில் தன்னை கோவி .கண்ணன் என அறிமுக படுத்தி கொண்டார் அவர் சொன்னதை முதலில் நான் சரியாக கவனிக்கவில்லை செய்யதுவிடமும் அப்படியே சொல்ல..! கோவி .கண்ணனா ? அவர் படத்தை பதிவுகளில் பார்த்து இருக்கிறேன் அவரா நீங்க ...? என சொல்ல.. பார்த்து இருக்கீங்களா ? அப்டினா நாந்தான் நாமக்கல் சிபி என்றார். விளையாட்டாய் பேசுகிறாரா?? இல்லை சீரியஸா பேசுகிறாரா?? என உடனடியாக கண்டுபிடிக்க முடியாத வகையில் சுவாரஸ்யமாய் பேசுகிறார் இந்த நக்கல் நாயகன்..!

மரம் வளர்ப்போம் வாருங்கள்

என்ற இவர் பதிவு முக்கியமானது



தாமிரா

ரொம்ப அழகாய் சிரிக்கிறார்..! ரிஷப ராசிக்காரர்களை போன்ற சாந்தமான முகம் பார்த்தவுடன் பிடித்து போகும் இயல்பான மனிதர்





மோகம் முப்பது நாள்


இவரின் இந்த பதிவ படிச்சு பாருங்க






புதுகை அப்துல்லா


கலகலப்பானவர் பதிவுகளில் சொல்வது போலவே நேரிலும் அண்ணே என்று அழைக்கிறார்..!


இவர் பதிவுகளில் இந்த பதிவு மிகவும் சிறப்பானது

தீபாவளி நினைவுகள்





.மு.செய்யது

அருமையான படைப்பாளி..! வலையுலகில் ஒரு சிறந்த இடத்துக்கு வருவார்.! அசத்துகிறார் இவர் இந்த பதிவுகளில் ..!

கரையான் அரித்த மீதி கதவுகள்

ஜூன் 10 சில நியாபக குறிப்புகள்




ரசனைக்காரி

சமீபத்தில் இல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த சகோதரி துள்ளலான எழுத்துக்கு சொந்தகாரர்..!

மனதை கணக்க வைத்த இந்த பதிவினை படித்து பாருங்கள்




மீனாட்சி அக்கா

21 comments:

  1. அட பதிவர் சந்திப்பு - வலைச்சரத்தினில் அறிமுகங்கள் கொண்ட இடுகையாக மாறிய மர்மம் என்னவோ ?? நல்லாருக்கு நல்வாழ்த்துக்ள் ஜீவன்

    ReplyDelete
  2. இத்தனை பேரை சந்திச்சிட்டிங்களா!?

    நீங்க சொன்னதுலயே ரெண்டு பேரை நான் இன்னும் பார்க்க்ல!
    ஆனா அவுங்க ப்ளாக் ரெகுலரா படிக்கிறேன்!

    ReplyDelete
  3. சுவார‌ஸிய‌மான‌ ப‌திவ‌ர் ச‌ந்திப்பு அது !!!!

    மீண்டும் அந்த‌ நினைவுக‌ளை மீட்டெடுத்த‌த‌ற்கு ந‌ன்றி ஜீவ‌ன்..

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ஜீவன்.நல்ல தெரிவுப் பதிவாளர்கள்.நானும் இவர்கள் பக்கம் உலவி வருவதுண்டு.

    ReplyDelete
  5. நான் அண்ணாந்து பார்க்கும் தொலைவில் இருக்கும் பதிவர்கள் இவங்க என்னைக்கு இவங்களை எட்டிப்பிடிக்க என்று பல நேரம் நினைச்சுக்கிட்டே மட்டும்தான் இருக்கேன்..

    வாழ்த்துக்கள் தமிழ்..

    ReplyDelete
  6. பகிர்விற்கு நன்றி..

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அண்ணே ரொம்ப நாள் கழிச்சு நீங்க சொன்ன என்னோட இடுகையைப் படிச்சுப் பார்த்தேன்.

    மிக்க நன்றிங்கண்ணே.. உங்க புகழ்ச்சி ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், இந்த புகழ்ச்சிக்கு நான் தகுதியானவனா என்றுத் தெரியவில்லை.

    மற்ற வலையுலக நண்பர்கள் அனைவரும் மிக அழகாக, நன்றாக எழுதுபவர்கள்.

    மிக்க நன்றி அண்ணே.

    ReplyDelete
  8. அழகான அறிமுகம். அவர்கள் வலையங்களை நன்றாக அலசி இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. தெரிந்த பதிவுகள் எல்லாமே அருமை. வாழ்த்துக்கள் ஜீவன்.

    ReplyDelete
  9. நல்ல அறிமுகங்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. வெற்றிகரமான மூன்றாம் நாள் வாழ்த்துக்கள் தல.

    அதிக வர்ணம் அடிக்காமல் அழகா சொல்லி இருக்கீங்க மக்களைப்பற்றி. நீங்க கலக்குங்க தல

    ReplyDelete
  11. மலரும் நினைவுகளா....
    அப்ப நீங்க அமைதியான ஆளு கிடையாதா...

    ReplyDelete
  12. ஒரு பதிவர் சந்திப்பை அப்படியே அறிமுகப் பதிவா மாத்திட்டீங்களே !:)

    ReplyDelete
  13. நன்றிண்ணா. எழுதுனதுக்கும் என்னோட சின்ன வயது படத்தை வெளியிட்டதுக்கும் :)

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்..வலைச்சர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் ஜீவன், அழகிய தொகுப்பு!!

    ReplyDelete
  16. யோவ்ஸ்.. ஜீவ்ஸ்..

    260 பதிவுகளைத்தாண்டி போய்க்கொண்டிருக்கிறேன். இணைப்புக்கொடுக்க இந்தப்பதிவுதான் கிடைத்ததா உமக்கு.? ஊர் என்னைப்பற்றி என்ன நினைக்கும்.?

    (ஹிஹி.. வலைச்சரவாழ்த்துகளும் நன்றிகளும்)

    ReplyDelete
  17. அ.மு.செய்யது said...
    சுவார‌ஸிய‌மான‌ ப‌திவ‌ர் ச‌ந்திப்பு அது !
    //

    ஆமாம், சுவாரசியமான பதிவர் சந்திப்புதான். ஹோட்டல் பில்லை அண்ணன் இராகவன் கவனித்துக்கொண்டதால்.. ஹிஹி.!

    ReplyDelete
  18. மூன்றாம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  19. வலைச்சரத்தில் இன்று ஜீவன் அவர்களால் எனக்கு அறிமுகம் கிடைத்துள்ளது.

    முதல் முறை அறிமுகம் சின்னப்பையன் அவர்களால்..

    இரெண்டாம் முறை சகோதரர் கார்க்கி அவர்களால்..

    மூன்றாம் முறை அறிமுகம் தோழி தமிழரசியால்...

    நான்காம் முறை அறிமுகம் நண்பர் ஜீவன் அவர்களால்..

    இந்த வலைச்சர அறிமுகம் எனக்கு மிகவும் ஊக்க மருந்தாக இருக்கிறது.

    உங்களுக்கெல்லாம் நான் கைமாறாக என்ன செய்யப் போகிறேன் என்று தெரிய வில்லை!

    நன்றி! நன்றி! நன்றி! அறிமுகப் படுத்திய அனைவருக்கும்!!

    ReplyDelete
  20. நல்ல அறிமுகங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. வருகை தந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி ..!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது