அன்பின் சக பதிவர்களேகடந்த வாரத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற அருமை நண்பர் பிரபாகர் ஏற்ற பணியினைச் செவ்வனே செய்து முடித்து மன நிறைவுடன் விடைபெறுகிறார். அவர் ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் முப்பது பதிவர்களை - இதுவரை யாரும் அறிமுகப் படுத்தாத பதிவர்களை அறிமுகப் படுத்தவும் மற்றும் தினம் ஒரு தகவல் தரவும் திட்ட மிட்டு - அதன் படி தகவல்களும் அறிமுகங்களும் அளித்து விடை பெறுகிறார்.அவர் ஏழு இடுகைகளில் ஏறத்தாழ 45 பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறார்....
மேலும் வாசிக்க...
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
சுவாமி விவேகானந்தர்:
நிறைய இடுகையாளர்களை குறிப்பிடவேண்டும் என எண்ணியிருந்தாலும், அதற்கெல்லாம் நமக்கு தகுதி இருக்கிறதா எனும் கேள்வி ஒருபுறம், அறிமுகப்படுத்தாதவர்களை, புதியவர்களை நிறைய சொல்லவேண்டும் எனும் எண்ணம் மறுபுறம் என இருந்ததால் நிறைய பேரை சொல்ல இயலவில்லை.
அடுத்து வானம்பாடிகள் அய்யா...
மேலும் வாசிக்க...
நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை.
-விட்மன்
வலைச்சரத்தில் இன்று ஆறாம் நாள், விடைபெறுவதற்கு முந்தைய நாள். அதேபோல் நேற்று கலகலவென காமெடி வலைப்பூக்களைப் பார்த்த நாம் இன்று இலக்கியம், தொழில்நுட்பம், சமையல் குறிப்புகள், நினைவோடைகள், நடப்பு நிகழ்வுகள் என கதம்பமாக பார்க்கலாமே?
அறிவியல் சார்ந்த பதிவுகளை எழுதுவதற்கு தனியான திறமை வேண்டும். சாதாரணமாய் ஒரு விஷயத்தை சொல்லிவிட முடியாது. அதனைப்பற்றி...
மேலும் வாசிக்க...
காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல
-வின்ஸ்ட்டன் சர்ச்சில்
வாரத்துல அஞ்சி நாள உங்க ஆதரவில ஓட்டியாச்சு. எழுதுற நடையில ஒரே மாதிரி பண்ணினா போரடிக்குமில்ல! இன்னிக்கு நடய மாத்தி கொஞ்சம் காமெடிய பத்தி பாப்போமா?
சிறுகதைன்னா அதுல ஒரு விஷயம் சொல்லப் போறோங்கறதுல தெளிவா இருப்போம், பெரும்பாலானவங்க ஏத்துக்கிற மாதிரி இருக்கும்.
ஆனா, காமெடி எழுதறது அவ்வளவு ஒன்னும் சாதாரண விஷயமில்லைங்கோ... ரொம்ப கஷ்டம். நாம சரியான காமெடின்னு...
மேலும் வாசிக்க...
மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும்இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்.
(மு.வ.)
வலைச்சரத்தில் இன்று நான்காம் நாள். எழுதுவதில் மிகவும் சவாலானது சிறுகதை எழுவதுதான் என்பது எனது பணிவான எண்ணம். முதல் பத்தியிலேயே படிப்பவர்களை கவர வேண்டும். இறுதிவரை அவரை நம்மோடு வைத்திருந்து படித்து முடித்தவுடன் ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
தொடர்ந்து எழுதிவரும் எந்த ஒரு இடுகையாளரும் கண்டிப்பாய்...
மேலும் வாசிக்க...
நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்.
-மகாத்மா காந்தி
அனைவருக்கும் எனது வணக்கம். இரு நாட்களை கடந்து இன்று இந்த இனிமையான மூன்றாவது நாளிற்கு வந்திருக்கிறோம்.
எனக்கு தமிழின் மேல் தணியாத ஆர்வம், கவிதைகள் என்றால் ரொம்ப பிரியம் என சொன்னால் அது முழுதும் உண்மையல்ல. இலக்கணத்தில் அவ்வளவாய் புரிதல் இல்லை. நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா என இதைத்தாண்டி தெரியாது. இருப்பினும்...
மேலும் வாசிக்க...
வாழ்நாளில் ஒரு பிழையையும் செய்ததில்லை என ஒருவர் நினைத்தால், அவர் புதிய முயற்சிகள் எதுவும் செய்தில்லை என்று அர்த்தம்.
-ஐன்ஸ்டின்.
வணக்கம், வலைச்சரத்தில் இன்று இரண்டாம் நாள். நேற்று சுய அறிமுகத்திலேயே முடித்துக்கொண்டதால் இன்று மனம் கவர்ந்த இடுகையாளர்களை பார்த்துவிடலாம்.
சிலருடைய இடுகைகளை படித்தால் நமது உள்ளக்கிடக்கையை அப்படியே அவரில் காண இயலும். சமகால நிகழ்வுகளை அவர்கள் விவரிக்கும் விதத்தில், நமக்கு நிறைய படிப்பினைகளோடு, அப்படியே...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !மதுரையில் உள்ள தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடி ஒரு விழிப்புணர்வு - பொது நல நிகழ்வு ஒன்றை நிகழ்த்த விரும்பினர். அதனைச் செயலாக்க ஒரு கருததரங்கத்தைக் கூட்டி உள்ளனர்.வளரும் தலை முறையினரை நல்வழிப் படுத்த, பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் பயனுள்ள கூட்டத்தை நடத்த இருக்கின்றனர்.இதில் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் கலந்து கொண்டு கருத்துகளை பரிமாற உள்ளார். குழந்தைகளுக்கு நல்ல தொடுகை - அல்லாத தொடுகை - எவை என்பதை உணர்த்தும்...
மேலும் வாசிக்க...
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
-லியோ டால்ஸ்டாய்
அனைவருக்கும் என் பணிவான வணக்கம். வலைச்சரத்தில் இன்று முதல் ஒருவாரத்துக்கு நானும் ஒரு பூவாய் இணைந்திருக்கிறேன். முதலாய் நிகழும் எந்த ஒரு விஷயமும் நம் நெஞ்சைவிட்டு அகலாமல் பசுமையாய் இறுதிவரை இருந்தினிக்கும். முதல் பயணம், முதல் நட்பு, முதல் காதல், முதல் முத்தம், முதல் சினிமா, முதல் வேலை, முதல் ஆசிரியர்... என நிறைய சொல்லிக்கொண்டே...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களேஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்று, ஏற்ற பணியினை சிறப்புடன் செய்து மன நிறைவுடன் விடை பெறுகிறார் அருமை நண்பர் டி.வி. இராதாகிருஷ்ணன். இவர் ஏழு இடுகைகள் இட்டு நூற்றி இருபது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். இவரது வாரத்தில் ஏறத்தாழ எழுபதற்கும் மேற்பட்ட பதிவர்களை அறிமுகப்படுத்தி உள்ளார். புதியவர்கள், இளம் பதிவர்கள், பெண் பதிவர்கள், சமையல் குறிப்பு வழங்குபவர்கள், மறுமொழி இடுபவர்கள் என பல வகைப் பதிவர்களையும் அறிமுகப்படுத்தி...
மேலும் வாசிக்க...
ஆசிரியப் பணியின் கடைசி நாள்.நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்த/அறிமுகமான பதிவர்களைப் பற்றி எல்லாம் சொல்ல ஆசை.ஆனால் கொடுக்கப்பட்ட நாட்களோ எழு..சுய தம்பட்டம் நீங்கலாக ஆறு நாட்களில்...எவ்வளவு பதிவர்களைப் பற்றி சொல்ல முடியும்.ஒரு பாடலின் வரிகள் தான் ஞாபகம் வந்தது.'கங்கை நீரும் சொம்புக்குள்ளே அடங்கிவிடாது"இனி வரும் ஆசிரியப் பணி மேற்கொள்வோர் அவர்களை அறிமுகப் படுத்துவர்..இல்லையேல் மறு சுழற்சியில் சீனா சார் என்னை மீண்டும் அழைக்க மாட்டாரா..என்ன..இன்று...
மேலும் வாசிக்க...
வாரம் முழுதும் அலுவலகத்தில் வெந்ததையும்..வேகாததையும் சாப்பிட்டு ஓடி வேலை செஞ்சுட்டீங்க.வீக் எண்ட் விடுமுறை.நீங்க தங்கமணியா இருந்தா ரங்கமணியையும்..ரங்கமணியாய் இருந்தா தங்கமணியையும் உதவிக்கு வைத்துக் கொண்டு..இந்த பதிவுகளுக்கு சென்று பார்த்து வித விதமா சமைச்சு ஹாலிடேஸ்ஸை எஞ்சாய் பண்ணுங்க.காஞ்சனா ராதாகிருஷ்ணனின் அன்னை மிராஸ் கிச்சன் போனா..பிரண்டை குழம்பு செய்யலாம்.ஹெவியா சாப்பிட்டுட்டா..மாறுதலுக்கு ஒன்று இது.மேனகாசத்யா வின் sashikaa...
மேலும் வாசிக்க...
கவிதை எழுதுவதற்கு ஒரு தனித் திறமை வேண்டும்.நம் இணையத்தில் பலர் அதில் சிறந்து விளங்குகிறார்கள்.குறிப்பாக பா.ரா., அனுஜன்யா, ஜ்யோவ்ராம், கலகலபிரியா, உயிரோடை லாவண்யா..போன்றோர் உண்மையான கவிதை எழுதும் பதிவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.மண்டபத்தில் யாரும் எழுதித் தராவிடினும்..என்னைப் போன்றோர் இணையத்தில் கவிதை என்று லேபிள் போட்டு எழுதி ..இல்லை..இல்லை..கிறுக்கி வருகிறோம்.சமயத்தில்..எங்களாலும் சில நல்லக் கவிதைகள் எழுதிவிட முடிவதுண்டு.இணையத்தில்..நான்...
மேலும் வாசிக்க...
தமிழ்மணத்தில் ஒரு நாளைக்கு முன்பெல்லாம் 260-270 இடுகைகளே பதிவர்களால் இடப் பட்டு வந்தன.இப்போழுதெல்லாம் 350 இடுகைகள் சராசரியாக வருகின்றன.பதிவர்கள் அதிகம் ஆகிவிட்டனர்.இன்று நான் சொல்லப் போகும் பதிவர்களில் சில பதிவர்கள் பெரும்பான்மையினர் அறிந்திருக்கக் கூடும்.சிலர் புது பதிவர்களாக உள்ளனர்.ஆகவே இந்த இடுகை..புதிய பதிவரா..பழைய பதிவரா என்றெல்லாம் பாராது திறமையுள்ள பதிவர்கள் என்று கொள்ளவும்.நான் சொல்லப் போகும் முதல் பதிவர் வெ.இராதாகிருஷ்ணன்..இவர்...
மேலும் வாசிக்க...
இன்று சில இளம் பதிவர்களை அறிமுகப் படுத்துகிறேன்.அதற்கு முன் ஒரு சிறு தகவல்..நமக்கு எதுவெடுத்தாலும் நேரம் போதவில்லை என்கிறோம்..ஆனால்..தங்கள் வேலைநேரம் என்று இல்லாமல்..எல்லா நேரமும் வேலைநேரமாகக் கொண்டுள்ள மருத்துவர் தொழிலில் உள்ள புருனோ,சுரேஷ்(பழனியிலிருந்து),தேவன்மாயம்,எம்.கே.முருகானந்தன் ஆகியோர் வலைப்பூவிலும் நல்ல தகவல்களை நமக்கு அளித்து வருகின்றனர்.அவர்களுக்கு என் பாராட்டுகள்கோழிபையன்...இவரது திரைவிமரிசனங்கள்..யோகா பத்மாசனம்...
மேலும் வாசிக்க...
பெண்களின் வாழ்க்கை முன்பெல்லாம் ஒரு வட்டத்துக்குள்ளேயே இருந்தது.ஆனால் இன்றோ பெண்கள் ஈடுபடாத துறையே இல்லை எனலாம்.அவர்கள் அறிவுத்திறன் அதிகமுள்ளவர்கள்.(உடனே எதிர்மறை பின்னூட்டம் வேண்டாம்...இது உண்மை.) இதை பல ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.பெண் பதிவர்கள் சந்தனமுல்லை,விதூஷ்,தீபா,வித்யா,அமிர்தவர்ஷிணி அம்மா,இயற்கை,அன்புடன் அருணா,தாரிணிப்பிரியா,கோமா,புதுகைத் தென்றல்..இப்படி நிறைய சொல்லலாம்..(சில பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம்..இப்பதிவிடும்போது...
மேலும் வாசிக்க...
சில நேரங்களில்..நாம் வேலை செய்யும் அலுவலகத்தில்..நமக்குப் பின் வந்தவர்கள் பதவி உயர்வு பெறுகையில்..நம்மை நிர்வாகம் கன்ஸிடர் பண்ணவில்லையே என்ற மெலிய வருத்தம் ஏற்படுவதுண்டு.ஆனால் அதற்காக சில நாட்கள்?மாதங்கள் கழித்து நமக்கும் அப்பதவி கிடைக்கையில்..Better late than never என மனதுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு..அப்பதவியை ஏற்றதும் உண்டு.கிட்டத்தட்ட அதே நிலை எனக்கு..ஆனால் சீனா சார் சொன்னதும்..உடனே சரி என்றும் சொல்லிவிட்டேன்..சீச்சீ இந்தப்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களேஅருமை நண்பர் அரவிந்த் எடுத்த செயலை - ஏற்ற பணியினை பொறுப்பாகச் செயல்படுத்தி வாரம் முழுவதும் இடுகைகள் இட்டு பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி நம்மிடமிருந்து மனம் மகிழ விடை பெறுகிறார். அவரை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வலைச்சரம் குழுவின் சார்பாக வழி அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.அடுத்து, நாளை 18.01.2010ல் துவங்கும் வாரத்திற்கு இனிய நண்பர் டி.வி.ராதாகிருஷ்ணன் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர்தமிழா தமிழா...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தில் ஒரு வாரமாக எழுதி வந்தது மிக நல்ல அனுபவமாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி. இந்த வேளையில், இந்த வாரம் ஊக்கம் குடுத்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். வலைசரத்தில் எழுத வாய்ப்பளித்த திரு.சீனா அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள், இப்படி அனுபவம் திரும்ப கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு விடைபெற்றுக்கொள்கிறேன்.நன்றி வணக்க...
மேலும் வாசிக்க...
அக்கிலீஸ் - பெங்களூரில் வேலை.என் எண்ணங்களின் அலைவரிசை என்று வலைப்பூவில் எழுதி வருகிறார்.தற்சமயம் இரண்டு மாதங்களாக எதுவும் எழுதவில்லை.காரணம் தெரியவில்லை.ஊக்கமாக இருந்தால் நாம் கொடிப்போம்.தற்குறிப்பேற்ற அணி,வஞ்சப்புகழ்ச்சி அணி என்று எழுதி கலக்கினார்.திரும்பவும் வந்து கலக்குவார் என்பதில் சந்தேகம் இல்லை.எதிர்கவிதைகள் கூட எழுதுவார்.வஞ்சப்புகழ்ச்சி அணி எதிர்கவிதைகிருத்திகன் குமாரசாமி - மெய் சொல்லப் போறேன் என்று பதிவின் தலைப்பில் கூட...
மேலும் வாசிக்க...
அதிரடி தான் எனக்கு வழக்கம்.தொடர்ந்து மூன்று நாட்கள் வலைச்சரத்தில் அடக்கி வாசித்து இருக்கிறேன் என்பது எனக்கு ஆச்சர்யமே.இன்று பிறந்த நாள் என்பதால் கொஞ்சம் ஸ்பெஷல் அதிரடிகள் இருக்குமா என்று பார்ப்போம்.வெண்ணிற இரவுகள் கார்த்தி - இதுவரை எந்த பதிவரையும் ஒருமையில் விளித்தது இல்லை என்ற சரித்திரம்,பூகோளம் உடைந்தது இவனிடம் தான்.ஏதோ ஒரு ஈர்ப்பு இவன் மேல் இருக்கிறது.இரும்புத்திரை,நர்சிம்,சாரு என்று வரிசையாக அறிமுகம் கொடுத்ததில் இருந்தே...
மேலும் வாசிக்க...
காவிய புதன் என்ற பெயர் காரணத்திற்காகவே கொஞ்சம் பின் செல்வோம்.ஜெகநாதன் - பின்னூட்டப் புயல்,சுனாமி,சூறாவளி என்று தான் சொல்ல வேண்டும்.என்னுடைய ரசனை அதிகமாக இவருடன் தான் ஒத்துப் போகிறது.நூற்றாண்டுகள் தாண்டி வரும் கதையில் வாசிக்கும் நாமும் சேர்ந்து பயணிக்கிறோம்.ஒவியம்,புனைவு என்று பல்வேறு தளங்களில் இயங்கும் திறன் படைத்தவர்.இலக்கியவாதியாக மாற வேண்டியவரின் இலக்கு மாறி சில சமயம் மொக்கையும் போடுவார்.அதுவும் சுவாரஸ்யம் குறையாமல்...
மேலும் வாசிக்க...
பொதுவாக எனக்கு கவிதைகள் என்றால் கொஞ்சம் என்ன நிறையவே அலர்ஜி அதற்கு இரண்டு காரணங்கள்.1.நான் கவிதை எழுதி கொடுத்தப் பிறகு தான் மூன்று பெண்கள் என்னோடு பேசுவதை நிறுத்தி விட்டார்கள் .2.+1 படிக்கும் பொழுது (நான் தேறவே மாட்டேன் என்று ஊர் உலகமே சொன்ன காலம் அது) கவிதை எழுதினேன் என்று வீட்டில் திட்டினார்கள்.அப்புறம் பதிவுலகத்திற்கு வந்தப்பிறகு வேண்டாவெறுப்பாக கவிதைகள் படிக்க ஆரம்பித்து பிடித்து போய் நானும் முயற்சி செய்யலாம் என்று கனவில்...
மேலும் வாசிக்க...
வலைச்சரம் என்ற வலைப்பூ இருப்பது தெரிந்தப் பிறகு தினமும் பார்ப்பது வழக்கம்.யாராவது என்னை அறிமுகம் செய்து இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு ஏமாந்து செல்வது வழக்கம்.அதிகப்பட்சமான ஏமாற்றம் அடைந்தது அத்திரி ஆசிரியராக இருந்த சமயம் தான் ஏற்பட்டது.மதுரை - திருநெல்வேலி பதிவர்கள் என்பதில் என் பெயர் இல்லை.துபாய் ராஜா பின்னூட்டத்தில் என்னை குறிப்பிட்டு சொன்னார்.பிறகு அத்திரியின் நட்பும்,கண்டிப்பும் சாட் மூலம் வந்து சேர்ந்த்து.தண்டோரா...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !கடந்த இரு வார காலமாக வலைச்சரத்தின் ஆசிரியப் பொறுப்பினை ஏற்ற அருமை நண்பர் பாலா - (பாமரன் பக்கங்கள் - வானம்பாடிகள்), ஏற்ற பொறுப்பினை கடமை தவறாது நிறைவேற்றி மிகுந்த மனமகிழ்ச்சியுடனும், அப்பாடா என்ற பெருமூச்சுடனும் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.நண்பர் பாலா ஏறத்தாழ நூறு பதிவர்களை - இடுகைகளைத் தேடித் தேடி, அருமையான முறையில் பதின்மூன்று இடுகைகளில் அறிமுகம் செய்து தன்னுடைய கடும் உழைப்பின் பலனை நமக்குத் தந்திருக்கிறார்....
மேலும் வாசிக்க...
வந்துட்டான்யாஆஆ!வந்துட்டான்யாங்கறது கேக்குது. அதெல்லாம் சரியா வந்துருவம்ல. இன்னைக்கும் நம்ம ஆட்சிதான! ச்ச்ச்ச்ச்சேரி. வெட்டிக்கத போதும். வந்த வேலைய பார்ப்பம் வாங்க.நம்ம வீட்ல ஒரு விசேஷம்னு வைங்க. ரொம்ப நெருக்கமானவங்களுக்கு அப்புறம் பத்திரிகை வைக்கலாம்னு நினைப்போம். அது அப்படியே அலைஞ்சி திரிஞ்சி விசேஷத்துக்கு முதல் நாள்தான் கவனம் வரும். அட கடவுளே இவருக்குச் சொல்லலையேன்னு. ஓடிப்போய் கை புடிச்சிகிட்டு அய்யா சாமி! மன்னிச்சிடுய்யா....
மேலும் வாசிக்க...
வணக்கம் நண்பர்களே!பழகப் பழகப் பாலும் புளிக்கும்னு சொலவட இருக்கில்ல. பத்து நாளுக்கு மேல நானும் புளிக்காம இருக்க ரொம்பவே முயற்சிக்கிறேன். புதியவர்கள் அறிமுகம் பண்ணலாம்னு தேடி வரப்ப, எனக்குப் புதியவர்களா பிரமிக்க வைக்கும் பதிவர்களும் கிடைக்கிறாங்க. புதியவர்களும் நிறைய கிடைக்கிறாங்க. ரொம்பவே வருத்தப் பட வைக்கும் ஒரு விடயம், ரொம்ப அழகான எழுத்துக்குச் சொந்தக்காரர்களான பல புதியவர்கள் சென்ற வருடம் முழுதும் 3 அல்லது 4 படைப்புகள் மட்டுமே...
மேலும் வாசிக்க...
வணக்கம் நண்பர்களே!வலைமனை.இதுவும் நமக்கொரு வீடு. நம் சிந்தனைக் குழந்தைகள் பிறந்து தவழ்கிற வீடு. நட்புக்கள் வருகிற வீடு. ஏதோ காரணத்தால் ஒரு நாள் நம் வலை மனைக்கு வர முடியாவிட்டால் என்னமோ தொலைச்சா மாதிரி இருக்கில்ல. பரம்பரையா வாழ்ந்து, நாம விளையாடி, வளர்ந்து நம் விருப்பத்தில் எங்கயோ பிழைப்புன்னு போனாலே வீடு கவனம் வந்திச்சோ எல்லாத்தையும் கடாசிட்டு வந்து ஒரு ஒரு செங்கல்லா தொட்டுத் தடவி, ஒரு ஒரு செடியா பார்த்து பேசி கொஞ்சி, நம் மண்ணின்...
மேலும் வாசிக்க...
வணக்கம் நண்பர்களே!பதிவுன்னு எழுத ஆரம்பிக்கும் போதே என்னிய மாதிரி பலரும் எது தோணுதோ எழுதுவோம்னு பரந்த நோக்கில்(யாருப்பா அது எத விட்டு வச்ச கெடுக்காமன்னு குரல் விடுறது) ஆரம்பிக்கிறோம். தீர்மானமா, சமையல், சினிமா, மொழி, வரலாறு இப்படி ஏதொ ஒரு தனிப்பாதை போட்டு அதில் நம்மை இழுத்துச் செல்பவர்கள் சிலரே.தமிழ்மொழி, அதன் வளர்ச்சி, ஈழம் என தமிழ் சார்ந்த விஷயங்களை புள்ளி விபரங்கள், சரித்திர மேற்கோள்கள் காட்டி உணர்வு பூர்வமாக எழுதுபவர் தேவியர்...
மேலும் வாசிக்க...

வணக்கம் நண்பர்களே!கொஞ்சம் வேலை அதிகமா இருந்திச்சிங்க. அதான் நேற்றைய இடுகை வரவில்லை. அடுத்த இடுகைகள்ள கூடுதலா அறிமுகம் செய்துட்டா போச்சி. வேலைன்னா வேலை அப்படி ஒரு வேலை. களைச்சுட்டேன். அட ஃபிலிமெல்லாம் காட்டலைங்க. நிசமாத்தான்.ஃபிலிமெல்லாம் நமக்கு காட்றதுக்கு கூட பதிவர்கள் இருக்காங்க. தேடி தேடி திரட்டி, பார்த்து, விமரிசனம் பண்ணி, தேவைப்பட்டத...
மேலும் வாசிக்க...