07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 10, 2010

மீண்டும் சந்திப்போம்..

வந்துட்டான்யாஆஆ!வந்துட்டான்யாங்கறது கேக்குது. அதெல்லாம் சரியா வந்துருவம்ல. இன்னைக்கும் நம்ம ஆட்சிதான! ச்ச்ச்ச்ச்சேரி. வெட்டிக்கத போதும். வந்த வேலைய பார்ப்பம் வாங்க.

நம்ம வீட்ல ஒரு விசேஷம்னு வைங்க. ரொம்ப நெருக்கமானவங்களுக்கு அப்புறம் பத்திரிகை வைக்கலாம்னு நினைப்போம். அது அப்படியே அலைஞ்சி திரிஞ்சி விசேஷத்துக்கு முதல் நாள்தான் கவனம் வரும். அட கடவுளே இவருக்குச் சொல்லலையேன்னு.

ஓடிப்போய் கை புடிச்சிகிட்டு அய்யா சாமி! மன்னிச்சிடுய்யா. நம்மாளுதானன்னு இருந்துட்டேன். நல்லகாலம் கவனம் வந்திச்சின்னா, அட போய்யா! நம்ம வீட்டு விசேஷத்துக்கு நீ வந்து கூப்புடணுமாம்பாரு. அப்புடித்தான் ஆகிப்போச்சி நம்ம நிலமை. ஜெரி அய்யா அப்புடிதான் சொல்லுவாரோ? இல்ல முட்டி போடுன்னு திட்டுவாரோ. அது நாம பட்டுக்குவம். மனிதம் கொன்ற மனதில் இசை ரசிக்குமா? இந்தக் கேள்வியை எழுப்பும் கவிதை இதோ!

என்னமா குப்பத்தொட்டின்னு பேரு வெச்சி ஏமாத்துறாருங்க நான் ஆதவன். இதுவும் ஒரு பள்ளிக்கூடம். அமைதியான எழுத்தோட்டத்துக்கு உதாரணம் இவரின் மாட்டு கொட்டா வீடு.

இதோ ஓர் ஈழத்துக் கவி. எம்.ரிஷான் ஷெரிஃபின் கவிதைப் பூக்களை இன்றுதான் காணக் கிடைத்தது. விகடனில் படித்த தொடர் இவருடையது என்பது இன்னும் மகிழ்ச்சி. குழந்தைகள்..கோப்பைகள் என்ற இவரின் கவிதை உங்களுக்காக.

என்ன நினைக்கிறாரோ அதை யோசிச்சி சொல்ற ஷஃபி உங்களில் ஒருவன் சொல்றதெல்லாம் பயனுள்ளவை. info@பதில்சொல்லுங்க.com எவ்வளவு பயனுள்ள விஷயம் சொல்லுது பாருங்க.

”மறக்க மாட்டேனென நினைக்கிறேன்..மறந்திருந்தால் ஒரு வேளை இறந்திருப்பேன்”..என்ன? கவிதை மாதிரி இருக்கா. ஒரு முத்தம் வலைப்பூவுக்கு கட்டியம் கூறும் சையதின் வரிகள் இவை. ஒரு தருணம் என்ற இவரின் கவிதை சொல்லும் மீதியை.

இன்னொரு புதுக் கவிஞன் கார்த்தியின் கவிதைகள் வலைப்பூவும் கவிதைப் பூங்கா. இருப்பும் இல்லாமையும் என்ற இவரின் கவிதை இன்றைய சமுதாய ஏற்றத் தாழ்வை அழகாய்ச் சொல்கிறது.

கவிதைக்காரன் டைரி இளங்கோவின் கல் யானை உயிர் பெறுகிறது பாருங்கள். நிறைய நல்ல கவிதைகள் கொட்டியிருக்கிறது இங்கே.

சொல்லத் துடிக்குது மனசின் சொந்தக்காரி மதார். சுற்றி நடப்பவற்றை நம் கண்முன் நிறுத்தும் எழுத்து இவருடையது. பஸ் பயணிகளுக்கு டிக்கட் செக்கிங் ஒரு சாபக்கேடு. சிரிக்க சிரிக்க எளிய நடையில் இதோ.

இரண்டு வாரங்கள் ஓடி விட்டது. ஒரு வாரம் கூடுதலாகக் கிடைத்தும் எத்தனையோ சிறந்த வலைமனைகளைத் தவற விட்டிருக்கும் சாத்தியம் அதிகம். ஓரளவு நிறைவாயும் உணர்கிறேன். இந்த மிகப் பெரும் வாய்ப்பைத் தந்த சீனா அய்யாவுக்கு என் வணக்கங்களும் நன்றியும். 

 ஹி ஹி. சிங்கம்னு சிங்கிளா விடாம தொடர்ந்து பின்னூட்டம் மூலம் ஊக்குவித்த அன்புள்ளங்களுக்கு நன்றி.

அழகான தலைப்புக்களை செதுக்கித் தந்த ப்ரியாவுக்கு நன்றில்லாம் சொன்னா போதாது.

பாமரன் பக்கங்களில் தொடர்ந்து சந்திப்போம்.

13 comments:

  1. மிக்க நன்றி..:))

    ReplyDelete
  2. அய்யா,

    நீங்கள் சொல்லும் யாவரையும் முதலில் தொடர்ந்து விட்டுத்தான் படிக்கவே ஆரம்பிப்பேன். உங்கள் ரசனையில் அந்த அளவிற்கு நம்பிக்கை. இதுவரையில் அது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டேதான் இருக்கிறது.

    விடை பெறுகிறீகள் என்பது வருத்தத்தை தருகிறது என்றாலும், உங்களை உங்களிடத்தில் சந்திக்கலாம் எனும் ஒரு மாற்றும், சீனா அய்யாவால் அறிமுகப்படுத்தப் படும் மற்றொருவர் இன்னும் நிறைய புது முகங்களை வலையுலகத்துக்கு அறிமுகப்படுத்துவார் எனும் ஒரு எதிர்பார்ப்பும் ஈடு செய்கிறது.

    இன்றைய அறிமுகத்தில் யாவரும் புதியவர்களே, ஜெரி அய்யா தவிர.

    நன்றிங்கய்யா...

    ஆசிவேண்டும்,

    பிரபாகர்.

    ReplyDelete
  3. பாமரன் சார், உங்களோட அறிமுகங்கள் எல்லாம் பாராட்டுக்குரியவர்கள். வாழ்த்துக்கள் அனைவருக்கும். நீங்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப் படுத்திய விதம் அருமை. என்னையும் அவர்களுடன் சென்ற வாரம் அறிமுகப் படுத்தியதுக்கு, மிக்க நன்றி.

    ReplyDelete
  4. இந்த இதழ் சிறப்பான அறிமுகம், ஈசானந்தா உண்மையிலேயே ஜெர்ரி பழம் சுவை தான். சந்தேகம் என்பதே இல்லை. ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டுருப்பது அடுத்த ஆச்சரியம். அவருக்கும் உங்களுக்கும் அறிமுகமான மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. பல நல்ல திறமையான பதிவர்களிடையே, எனது எழுத்துக்களையும் இங்கே அறிமுகம் செய்தது கண்டு மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  6. 2 வாரம் போனதே தெரியலை பாலா சார். எத்தனை அருமையான அறிமுகங்கள். மிகச் சிறப்பாய் செவ்வனே செய்துவிட்டிர்கள்.

    ReplyDelete
  7. பாலா சார் எல்லோரையும் மிக அழகாக அறிமுகப்படுத்திவிட்டீர்கள்.

    ரொம்ப நன்றி சார்.

    ReplyDelete
  8. அன்பின் நண்பருக்கு,

    உங்கள் பட்டியலில் நானும் இருப்பது கண்டு மகிழ்கிறேன்.

    மிகவும் நன்றி நண்பரே !

    ReplyDelete
  9. அருமையான அறிமுகங்கள்...

    ரெண்டு வாரமும் அசத்தல் ஆசிரியப்பணி வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  10. அன்பின் பாலா

    அருமையான அறிமுகங்கள்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  11. @@நன்றி ஷங்கர்
    @@நன்றி பிரபாகர்
    @@நன்றி சித்ரா
    @@நன்றி ஜோதிஜி
    @@நன்றி Suffix
    @@நன்றி நவாஸூதீன்
    @@நன்றி அக்பர்
    @@நன்றி அம்மா
    @@நன்றி ரிஷான்
    @@நன்றி வசந்த்

    ReplyDelete
  12. இந்த வாய்ப்பை அளித்தமைக்கு மிக மிக நன்றி சீனா சார்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது