07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 5, 2010

என்னிலை முதலில் (வலைச்சரம்)

நான் என்பது க. பாலாசி. என்னிந்த உடலுக்கும், உயிருக்கும் இக்குறுகிய ஆயுளில் எனை ஈன்றோர் கொடுத்திட்ட ஒரு புனைவு.

மஞ்சள் நகருக்கும் (ஈரோடு), மயிலாடுதுறைக்குமிடையே (செம்பொன்னார்கோவில்) அமைக்கப்பெற்றதொரு சிறிய பாலம் எனது வாழ்க்கை. இருட்டறையில் எழுதப்பட்ட என்கதையில் மெல்லியதொரு ஒளியாய் இந்த வலைப்பூ. இலக்கில்லா திசையினை எட்டிப்பிடிக்க ஏதுவாக இந்த பரிணாமம். இருளில் நின்று கருமையை உமிழ்ந்து, வெண்மை வெளிப்பட்டதாய் மனதிற்குள் ஓர் மகிழ் மாயைப்பொருந்திய மனிதனாக நானும்.

எங்கோ அல்லது என்றோ மனதில் புதைப்படவிருந்த ஒருவித ஏக்கம், இயலாமை மற்றும் தனிமையினை இன்றையநாளில் எழுத்தின்வடிவில் இழைத்துக்கொட்டவெண்ணும் ஒரு சீவன். கடல்கொண்ட உலகில் அலைகளின் ஆட்டுதலுக்கு அசைவுற்று விரையும் கப்பல்களுக்கு நடுவே நானும் ஒரு சிறிய கட்டுமரத்துடன் காத்திருக்கிறேன்.

என்செடியில் பூத்த மலர்களுக்கு வாசமளித்துகொண்டிருக்கும் அன்பர்கள், நண்பர்கள் (ஆண், பெண்) யாவருக்கும் நன்றியை நவிலும் தருணமும் வாய்ப்பும் இதுவன்றி வேறெப்படியமையும் என்பதில் இன்றுவரை ஐயமே மிகைகிறது. என்னெழுத்துடன் துணையெழுத்தாய் என்றுமிருக்கும் வலையுலக படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் என்னென்றும் நன்றியியம்புவது என்கடமை.

வலைச்சரம். பெரும் மதிப்பிற்கும், பிரமிப்பிற்குமுரிய இடம். இப்பெயர்தான் இத்தளத்திற்கு எவ்வளவு பொருத்தம். எத்தனைச்சரங்கள் இங்கே மகுடமாக வீற்றிருக்கின்றன. இத்துடன் நானும் எனது உதிரிப்பூக்களை தூவிவிடுகிறேன் என்பதே எனக்கு பெருமைதான்.

ஆசிரிய வாய்ப்பினை ஒரு மாணவனுக்கு வழங்கி ஒதுங்கிநின்று, என் ஒப்பனையின் வீரியம் காணுமொரு குருவாய் அய்யா சீனா அவர்கள். மீண்டும் நன்றியினை அவருக்கு உரித்தாக்குவது என் சிரம்தாழ்ந்த பணி.


மாணவனாய் படைப்பாளிகளை சுட்டிக்காட்டுவது என்போன்ற புதிவர்களான பதிவர்களுக்கும் மிகையுதவும் என்ற நன்நன்பிக்கையின் நோக்கில் இந்தவாரம் என்னுடையதாக இத்தளத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது.

நேற்றென்னுள் விரிந்த மலர்களை, இன்று வெறுக்கும் ஒரு மனநிலை எனக்குள் எப்பொழுதும் இருப்பதுண்டு. காரணம் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கவேண்டும் என்ற எண்ணம். சரியோ தவறோ புதிதாயொரு இடுகையை ஈனும்போதும் நேற்றென்னது இறந்துவிடுகிறது. சிலரின் பார்வையில் சிறப்பாக தெரியலாம். எனினும் எனக்குப்பிடித்த என் சில இடுகைகள் கீழே...


அக்கம் பக்கம்
(ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடு)
கௌரவம்
(என்னால் நம்பமுடியாத, என் நல்ல கவிதை)



என்றும் தங்களின் ஆதரவை நாடும்,
பாசமுடன்,




54 comments:

  1. அய்யா சாமி. இப்படியொரு தமிழ் படிக்க கொடுத்து வச்சிருக்கணும். நல்லாருய்யா. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் பாலாசி...வலைச்சர வாரத்திற்கு காத்திருக்கிறோம்! கலக்குங்க...:-)

    ReplyDelete
  3. மிக மிக அருமை பாலாசி.... அந்தத் தமிழுக்கு ஒரு சபாஷ்...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் வாத்யாரே!

    ReplyDelete
  5. good start ,
    intro vae aala asathuthu ,
    kalakku maa,

    all the best

    ReplyDelete
  6. கண்ணு... ராசா...
    உனக்கு எவ்வளவு நேரந்தான் காத்துக்கிட்டு இருக்கிறது...


    ஆனாலும் காத்துக்கிட்டிருந்தது வீண் போகல...

    அருமையான நடை

    பாவிப்பயலே அந்த மாடு கவிதைய சொல்லமா விட்டுட்டியே...

    அப்புறம்.. அந்த நாலணா காசு, நடுவீதி...

    ReplyDelete
  7. தமிழின் வீரியம் சிலிர்ப்பூட்டுகிறது அண்ணா....

    மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறேன்...

    ReplyDelete
  8. தமிழோடு விளையாடுமென் இளவலே! வாழ்த்துக்கள்.... அசத்துங்கள்... உங்களை எண்ணி பெருமையாய் இருக்கு!

    பிரபாகர்...

    ReplyDelete
  9. உங்களின் வட்டார மொழிப்பதிவுகள் சில படித்திருக்கிறேன்; இந்தத் தமிழும் அழக எழுதிருக்கீங்க. வாழ்த்துகள் ஆசிரியர் பொறுப்பிற்கு.

    ReplyDelete
  10. இந்தத் தமிழும் ’அழகா’ எழுதிருக்கீங்க.

    ReplyDelete
  11. தமிழ் எழுச்சியா இது?

    வாழ்க; வளர்க!!

    ReplyDelete
  12. அறிமுகமே அருமை பாலாசி.

    அசத்துங்கள்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. எல்லோரும் உத்து பார்க்கிறாங்க...அருமை.

    ReplyDelete
  14. வானம்பாடிகள் said...
    அய்யா சாமி. இப்படியொரு தமிழ் படிக்க கொடுத்து வச்சிருக்கணும். நல்லாருய்யா. வாழ்த்துகள்//

    வேறென்னங்க சொல்ல? :))

    வாழ்த்துகள்.!

    ReplyDelete
  15. ஆஹா!! தமிழ் கொஞ்சி
    விளையாடுகிறது, வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  16. மிக அருமையான தமிழில் இடுகை. வாழ்த்துக்கள் வலைச்சரத்திற்கு.

    ReplyDelete
  17. //வானம்பாடிகள் said...
    அய்யா சாமி. இப்படியொரு தமிழ் படிக்க கொடுத்து வச்சிருக்கணும். நல்லாருய்யா. வாழ்த்துகள்.//

    வாங்கய்யா... வருகைக்கும் வாழ்த்துதலுக்கும் நன்றிகள்...

    //Blogger சந்தனமுல்லை said...
    வாழ்த்துகள் பாலாசி...வலைச்சர வாரத்திற்கு காத்திருக்கிறோம்! கலக்குங்க...:-)//

    நன்றிங்க சந்தனமுல்லை...

    //Blogger கலகலப்ரியா said...
    மிக மிக அருமை பாலாசி.... அந்தத் தமிழுக்கு ஒரு சபாஷ்...//

    வாங்கக்கா... நன்றி....

    //Blogger வால்பையன் said...
    வாழ்த்துக்கள் வாத்யாரே!//

    நன்றிங்க குருவே...

    //Blogger ரோகிணிசிவா said...
    good start ,
    intro vae aala asathuthu ,
    kalakku maa,
    all the best//

    நன்றிங்கக்கா...

    //Blogger ஈரோடு கதிர் said...
    கண்ணு... ராசா...
    உனக்கு எவ்வளவு நேரந்தான் காத்துக்கிட்டு இருக்கிறது...
    ஆனாலும் காத்துக்கிட்டிருந்தது வீண் போகல...
    அருமையான நடை
    பாவிப்பயலே அந்த மாடு கவிதைய சொல்லமா விட்டுட்டியே...
    அப்புறம்.. அந்த நாலணா காசு, நடுவீதி...//

    மாடு கவிதையா... நீங்கவேற... இங்க நல்லதாத்தான் சொல்லணும்..அதனாலத்தான்...

    மிக்க நன்றி...வணக்கம்...

    //Blogger அகல்விளக்கு said...
    தமிழின் வீரியம் சிலிர்ப்பூட்டுகிறது அண்ணா....
    மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறேன்...//

    ஏங்க ராசா புரியலையா...:-)) ஹி..ஹி..சும்மாதான்..

    நன்றிங்க....

    //Blogger பிரபாகர் said...
    தமிழோடு விளையாடுமென் இளவலே! வாழ்த்துக்கள்.... அசத்துங்கள்... உங்களை எண்ணி பெருமையாய் இருக்கு!
    பிரபாகர்...//

    நன்றிங்கண்ணா...

    //Blogger ஹுஸைனம்மா said...
    உங்களின் வட்டார மொழிப்பதிவுகள் சில படித்திருக்கிறேன்; இந்தத் தமிழும் அழக எழுதிருக்கீங்க. வாழ்த்துகள் ஆசிரியர் பொறுப்பிற்கு.//

    நன்றிங்க ஹுஸைனம்மா...

    //Blogger ஹுஸைனம்மா said...
    இந்தத் தமிழும் ’அழகா’ எழுதிருக்கீங்க.//

    மீண்டும் நன்றிகள்...

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் பாலாசி
    அன்புடன்
    சந்துரு

    ReplyDelete
  19. //Blogger பழமைபேசி said...
    தமிழ் எழுச்சியா இது?
    வாழ்க; வளர்க!!//

    நன்றிங்கய்யா...

    //Blogger அக்பர் said...
    அறிமுகமே அருமை பாலாசி.
    அசத்துங்கள்.
    வாழ்த்துகள்.//

    நன்றிங்க அக்பர்...

    //Blogger தாராபுரத்தான் said...
    எல்லோரும் உத்து பார்க்கிறாங்க...அருமை.//

    நன்றிங்க அய்யா...

    //Blogger 【♫ஷங்கர்..】║▌│█│║││█║▌║ said...

    வேறென்னங்க சொல்ல? :))
    வாழ்த்துகள்.!//

    நன்றிங்க ஷங்கர்...

    //Blogger சைவகொத்துப்பரோட்டா said...
    ஆஹா!! தமிழ் கொஞ்சி
    விளையாடுகிறது, வாழ்த்துக்கள் நண்பரே.//

    நன்றிங்க நண்பரே...

    //Blogger அமைதிச்சாரல் said...
    மிக அருமையான தமிழில் இடுகை. வாழ்த்துக்கள் வலைச்சரத்திற்கு.//

    நன்றி அமைதிச்சாரல்...

    ReplyDelete
  20. ஜி!தமிழின் சுவை எழுத்தில் தெரிகிறது.

    ReplyDelete
  21. வாழ்த்துகள்.

    அனுபவிங்க.

    ReplyDelete
  22. வாழ்த்துகள் பாலாசி...வலைச்சர வாரத்திற்கு காத்திருக்கிறோம்! கலக்குங்க...:-)

    ReplyDelete
  23. அருமையான ஆரம்பம் பாலாசி.

    ReplyDelete
  24. செந்தமிழ் நடை அருமை.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. அருமையான எழுத்து நடை பாலாசி. வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. வாங்க வாங்க பாலாசி, வெல்கம் :-)

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் பாலாசி!

    ReplyDelete
  28. வாழ்த்துகள் பாலாசி...வலைச்சர வாரத்திற்கு காத்திருக்கிறோம்! கலக்குங்க...:-)

    ReplyDelete
  29. சுயம் நடை ரொம்ப நல்லா இருக்குங்க..
    வாழ்த்துக்கள் பாலாசி.... :-)

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  31. அழகுத்தமிழ்..

    ReplyDelete
  32. அன்பின் பாலாசி

    அருமையான சுய அறிமுகம் - நல்ல துவக்கம் - மிகவும் ரசித்தேன். தமிழ் விளையாடுகிறது பாலாசி

    நல்வாழ்த்துகள் பாலாசி

    ஆமாம் லேபிலீல் பாலாசி என இட வேண்டும்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  33. அருமை அருமை ஆரம்பமே கலக்கல் .இத இத இததான் சொன்னங்க ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாதுன்னு .தூள் கிளப்புங்க

    ReplyDelete
  34. வலைச்சரத்தில் தாங்கள் தொடுத்தது உதிரிப்பூக்கள் அல்ல

    அலங்காரமான மாலையே..

    அழகுற மிளிர்கிறது..

    வாழ்த்துகள் பாலாசி

    ReplyDelete
  35. //ராஜ நடராஜன் said...
    ஜி!தமிழின் சுவை எழுத்தில் தெரிகிறது.//

    நன்றி ராஜ நடராஜன்...

    //Blogger ஆடுமாடு said...
    வாழ்த்துகள்.
    அனுபவிங்க.//

    நன்றிங்க சார்...

    //Blogger சே.குமார் said...
    வாழ்த்துகள் பாலாசி...வலைச்சர வாரத்திற்கு காத்திருக்கிறோம்! கலக்குங்க...:-)//

    நன்றி சே.குமார்...

    //Blogger இராமசாமி கண்ணண் said...
    அருமையான ஆரம்பம் பாலாசி.//

    நன்றிங்க இராமசாமி கண்ணன்...

    //Blogger Jaleela said...
    செந்தமிழ் நடை அருமை.
    வாழ்த்துக்கள்//

    நன்றி ஜலீலா...

    //Blogger நண்டு@நொரண்டு -ஈரோடு said...
    வாழ்த்துக்கள்.//

    நன்றி வக்கீலய்யா...

    //Blogger ச.செந்தில்வேலன் said...
    அருமையான எழுத்து நடை பாலாசி. வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள்.//

    நன்றி ச.செந்தில்வேலன்...

    //Blogger முரளிகுமார் பத்மநாபன் said...
    வாங்க வாங்க பாலாசி, வெல்கம் :-)//

    நன்றி நண்பரே...

    //Blogger மாதவராஜ் said...
    வாழ்த்துக்கள் பாலாசி!//

    நன்றிங்கய்யா..

    //Blogger அம்பிகா said...
    வாழ்த்துகள் பாலாசி...வலைச்சர வாரத்திற்கு காத்திருக்கிறோம்! கலக்குங்க...:-)//

    நன்றிங்க அம்பிகா...

    //Blogger கனிமொழி said...
    சுயம் நடை ரொம்ப நல்லா இருக்குங்க..
    வாழ்த்துக்கள் பாலாசி.... :-)//

    நன்றி கனிமொழி...

    //Blogger செ.சரவணக்குமார் said...
    வாழ்த்துக்கள் நண்பரே.//

    நன்றி செ. சரவணக்குமார்...

    //Blogger முகிலன் said...
    அழகுத்தமிழ்..//

    நன்றிங்க முகிலன்...

    //Blogger cheena (சீனா) said...
    அன்பின் பாலாசி
    அருமையான சுய அறிமுகம் - நல்ல துவக்கம் - மிகவும் ரசித்தேன். தமிழ் விளையாடுகிறது பாலாசி
    நல்வாழ்த்துகள் பாலாசி
    ஆமாம் லேபிலீல் பாலாசி என இட வேண்டும்
    நட்புடன் சீனா//

    நன்றி அய்யா... லேபிலில் இணைத்துவிடுகிறேன்...

    ReplyDelete
  36. வாழ்த்துகள் பாலாசி

    ReplyDelete
  37. மொதொ..வரியே சூப்பருங்கண்ணா... எப்புடி இப்படியெல்லாம்... கலக்கறீங்க.. பாலாசி...

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் :)

    (எல்லாம் பதிவ படிச்ச effectuபா)

    ReplyDelete
  38. //padma said...
    அருமை அருமை ஆரம்பமே கலக்கல் .இத இத இததான் சொன்னங்க ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாதுன்னு .தூள் கிளப்புங்க//

    வாங்கக்கா... நன்றிங்க...

    //Blogger நிகழ்காலத்தில்... said...
    வலைச்சரத்தில் தாங்கள் தொடுத்தது உதிரிப்பூக்கள் அல்ல
    அலங்காரமான மாலையே..
    அழகுற மிளிர்கிறது..
    வாழ்த்துகள் பாலாசி//

    நன்றிங்க சிவா...

    // T.V.ராதாகிருஷ்ணன் said...
    வாழ்த்துகள் பாலாசி//

    நன்றி அய்யா...

    //Blogger துபாய் ராஜா said...
    வாழ்த்துக்கள்.//

    நன்றி துபாய் ராஜா...

    //D.R.Ashok said...
    மொதொ..வரியே சூப்பருங்கண்ணா... எப்புடி இப்படியெல்லாம்... கலக்கறீங்க.. பாலாசி...
    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் :)
    (எல்லாம் பதிவ படிச்ச effectuபா)//

    வாங்க அசோக் அண்ணா... நன்றி....

    ReplyDelete
  39. நடை நல்லா இருக்குங்க

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் பாலாசி.
    வலைச்சரத்தில் முதல் சரமே முத்துச்சரம்.
    "என்னிலை" எழுத்தில் என்ன ஒரு முன்னிலை!
    அறிமுகமே... சும்மா அதிருதே!!!

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  42. நேற்றென்னுள் விரிந்த மலர்களை, இன்று வெறுக்கும் ஒரு மனநிலை எனக்குள் எப்பொழுதும் இருப்பதுண்டு. காரணம் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கவேண்டும் என்ற எண்ணம். சரியோ தவறோ புதிதாயொரு இடுகையை ஈனும்போதும் நேற்றென்னது இறந்துவிடுகிறது. சிலரின் பார்வையில் சிறப்பாக தெரியலாம்.


    .......அருமையான எழுத்து நடையில், தன்னடக்கம் கொண்ட அறிமுகம். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  43. கைகள் ஜன்னல் கம்பிகளுடன் இருந்தாலும் கண்கள் நட்சத்திரங்களோடுதான் - என்ற வரிகள் ஞாபகம் வருகிறது!!!

    ReplyDelete
  44. கைகள் ஜன்னல் கம்பிகளுடன் இருந்தாலும் கண்கள் நட்சத்திரங்களோடுதான் - என்ற வரிகள் ஞாபகம் வருகிறது!!!

    ReplyDelete
  45. முதல் இரண்டு பத்தி அசத்தல்..தமிழின் சுவை மேலும் சுவைத்தேன்...

    //நான் என்பது க. பாலாசி. என்னிந்த உடலுக்கும், உயிருக்கும் இக்குறுகிய ஆயுளில் எனை ஈன்றோர் கொடுத்திட்ட ஒரு புனைவு.//

    உள்ளத்தை உருக்கியது இந்த வரிகள்...
    மேலும் அசத்துங்கள் பாலாசி...வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  46. எழுதிய தமிழைப் போல வந்தவர்களின் வாழ்த்துகளும் அருமை பாலாசி.

    நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  47. //நேசமித்ரன் said...
    நடை நல்லா இருக்குங்க//

    நன்றிங்க நேசமித்ரன்..

    //Blogger அரசூரான் said...
    வாழ்த்துக்கள் பாலாசி.
    வலைச்சரத்தில் முதல் சரமே முத்துச்சரம்.
    "என்னிலை" எழுத்தில் என்ன ஒரு முன்னிலை!
    அறிமுகமே... சும்மா அதிருதே!!!//

    அப்டிங்களா... மிக்க நன்றி அய்யா..

    //Blogger விஜய் said...
    வாழ்த்துக்கள்//

    நன்றி விஜய்...

    //Blogger Chitra said...
    .......அருமையான எழுத்து நடையில், தன்னடக்கம் கொண்ட அறிமுகம். வாழ்த்துக்கள்!//

    நன்றிங்க சித்ரா...

    //Blogger தேவன் மாயம் said...
    கைகள் ஜன்னல் கம்பிகளுடன் இருந்தாலும் கண்கள் நட்சத்திரங்களோடுதான் - என்ற வரிகள் ஞாபகம் வருகிறது!!!//

    நன்றிங்க டாக்டர்...

    //Blogger தமிழரசி said...
    முதல் இரண்டு பத்தி அசத்தல்..தமிழின் சுவை மேலும் சுவைத்தேன்...//
    உள்ளத்தை உருக்கியது இந்த வரிகள்...
    மேலும் அசத்துங்கள் பாலாசி...வாழ்த்துக்கள்....//

    நன்றிங்க அக்கா...

    //Blogger ஜோதிஜி said...
    எழுதிய தமிழைப் போல வந்தவர்களின் வாழ்த்துகளும் அருமை பாலாசி.
    நல்வாழ்த்துகள்.//

    நன்றி ஜோதிஜி....

    ReplyDelete
  48. இவ்வளவு நல்ல பையனா நீங்க?

    super...

    ReplyDelete
  49. அருமையான தமிழ் வார்த்தைகள். கலக்குங்க பாலாசி. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  50. //பிரேமா மகள் said...
    இவ்வளவு நல்ல பையனா நீங்க?
    super...//

    ஆமாந்தாயீ... நன்றிம்மா...

    //Blogger அஹமது இர்ஷாத் said...
    அருமையான தமிழ் வார்த்தைகள். கலக்குங்க பாலாசி. வாழ்த்துக்கள்...//

    நன்றிங்க அஹமது..

    ReplyDelete
  51. மிகவும் இனிமையான அறிமுகம்! உங்களின் படைப்புகளையும் படித்தேன். எதார்த்த உலகை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன வரிகள். அழகுடன் மிளிர்கின்றன மின்மினி போல் நெஞ்சுக்குள். அனுபவம் கூடும் போது உங்களின் படைப்புகளை இன்னும் ஆழமாக உணரமுடியும் என நினைக்கிறேன். நல் வாழ்த்துக்களுடன்... - சிவாஜி.

    ReplyDelete
  52. அன்பின் பாலாசி

    நான் இட்ட மறுமொழிகளுக்கு முன்னால் வந்த மறுமொழிகள் காணவில்ல என அலைபேசியில் கூறினாய். உண்மை - இப்பொழுதுதான் பார்த்தேன் - எப்படிக் காணாமல் போனதென்று தெரியவில்லை. எடிட் போஸ்ட்ஸில் மறுமொழிகளின் எண்ணிக்கை அதிகம் காட்டுகிறது.

    என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னுடைய மடலிலும் இல்லை. உன்னுடைய மடலில் நிச்சயம் இருக்கும். எடுத்து இட இயன்றால் இட்டு விடு இங்கே.

    மறுமொழிகளுக்குப் பதில் போடும் போது ஏதேனும் அழித்தாயா ? மறுமொழிகளின் கடைசியில் ஒரு டெலீட் கமெண்ட் சுட்டி - குப்பைத் தொட்டி வடிவில் - இருக்கும். அதனை தவறுதலாகச் சுட்டினால் கூட அழிந்து விடும். ஆனால் அததனை மறுமொழிகளும் அழிய வாய்ப்பில்லை. எனக்குத் தெரியவில்லை.

    இனிமேல் கவனமாக இருக்கலாம்.

    யாரேனும் மீட்க வழி கூறினால் நன்றி உடையவனாக இருப்பேன். எப்படி அழிந்திருக்கலாம் எனவ்னும் கூறினால் மிக்க் நன்றியுடையவனாக இருப்பேன்.

    வருந்துகிறேன் பாலாசி
    நல்வாழ்த்துகள் பாலாசி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  53. //சிவாஜி said...
    மிகவும் இனிமையான அறிமுகம்! உங்களின் படைப்புகளையும் படித்தேன். எதார்த்த உலகை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன வரிகள். அழகுடன் மிளிர்கின்றன மின்மினி போல் நெஞ்சுக்குள். அனுபவம் கூடும் போது உங்களின் படைப்புகளை இன்னும் ஆழமாக உணரமுடியும் என நினைக்கிறேன். நல் வாழ்த்துக்களுடன்... - சிவாஜி.//

    மிக்க நன்றிங்க சிவாஜி...

    //Blogger cheena (சீனா) said...
    வருந்துகிறேன் பாலாசி
    நல்வாழ்த்துகள் பாலாசி
    நட்புடன் சீனா//

    இழந்த பின்னூட்டங்கள் மீண்டும் கிடைக்கப்பெற்றன அய்யா... மகிழ்கிறேன்... நன்றி....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது