07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 7, 2010

பின்னல்கள் (வலைச்சரம் மூன்று)

வாழ்விற்கும் வீழ்விற்குமிடையேயான இந்நிலப்போர் அடங்குவதற்குமுன் நாம் வெட்டிச்சாய்த்துவிட்டுப் போகப்போவது எத்தனையெத்தனையோ. இயற்கையினை வீழ்த்தி செயற்கையின் நிழலில் இளைப்பாறுவதென்பது ஒரு குறுகிய காலந்தான் இவ்வையகத்தில் சாத்தியமென்பதை நாம் உணர்வது எப்பொழுது என்றுதான் தெரியவில்லை.ஓளியுமிழும் நல்விளக்கை அமர்த்திவிட்டு, கொள்ளிக்கட்டையின் தணலுக்கு உயிரூட்டி குளிர்காயவெண்ணுவது நம்மின் மூடத்தனமேயன்றி வேறெதுவுமிருக்க வாய்ப்பில்லை.

இம்மலட்டு வாழ்க்கைக்கு என்னடித்தளமும், இருகரங்களும் வழித்துணை நிற்பதில் சங்கடமான மனநிலைக்கே சென்றுகொண்டிருக்கிறேன். அடியாத காற்றும் பரவாத வசந்தமும் என்றும் பயன்தரா. இதுவொரு ஆதங்கம், இச் சமுதாயச்சூழலில் எவற்றிற்கேனும் பொருத்திப்பார்க்கலாம்.


நிற்க

அன்பர் ஆரூரன் விசுவநாதன் அவர்கள் ஈரோடு வலைப்பதிவர்கள் சந்திப்பில் முன்னுரை நல்கும்பொழுது சொன்னார்.. இங்கே பதிவுகள் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததென்று. அப்பொழுதும் சிறுபிள்ளைத்தனத்திற்கு விலைபோயிருந்த என் மதிகளுக்கு எட்டிடவில்லை, பதிவுகளும் இங்கே மிக முக்கியத்துவம் வாய்ந்ததுதானென்று. சிலரின் இடுகைகளை படிக்கும்பொழுது இப்பொழுது உணர்கிறேன், நாம் எதோவொரு சூழ்நிலையில் நட்டு விட்டுப் போகும் எழுத்துச்செடிகள் நாளை யாருக்காவதேனும் பூமரமாக காட்சிதரும் என்பதை

ஒன்று
இங்கே மீனாமுத்து (கோலாலம்பூர், மலேசியா) காணக்கிடைக்காத தாலாட்டுப்பாடல்களை பதிந்துவைத்துள்ளார்.

வாய்க்காத செல்வமொன்று குழந்தையாய் பிறந்ததென்னி தாயவள் மனமுரு(க்)கும் பாடலொன்று

அதியமலை பொதியமலை

மலடி மனமுருக
பார்த்தவர்கள் நின்றுருக
கல்லுருகச் செம்புருக
கண்டார் மனமுருக

பச்சை நிற வள்ளியம்மை
பவழ நிறத் தெய்வானை
சோதி நிற வேலவரும்
சொல்லி வரம் தந்தாரோ


கட்டிக்கரும்பே...(படிக்கும் பொழுதுகளில் குழந்தையாய் என் மனதை நானே பார்க்கிறேன்.)


இரண்டு


இங்கே ஆ.உமாசங்கர் (அமெரிக்கவாழ் அருப்புக்கோட்டைத் தமிழன்

சான்றுகள்
1.
ஆயிரம் காலம் நான்
2.
வாத்சல்யம் - கண்ணே நவமணியே
(வார்த்தைகளேதும் இல்லை இவைப்பற்றி வர்ணித்துகூற...)


ஒரு ஆதங்கம் மற்றும் பகிர்வுடன் நண்பர் ச. செந்தில்வேலன்
தாலாட்டும் சுகிசிவமும்...எனும் தலைப்பில்....

இவர்கள் பதிந்திருக்கும் எல்லா தாலாட்டுப்பாடல்களையும் படித்துப்பாருங்கள். வாழ்வில் நாமிழந்த வற்றக்கூடாத நதியினை, எங்கிருந்தோ எப்பொழுதோ பதிந்துவிட்டு சென்றிருக்கிறார்கள். சுருக்குப்பையிக்கும், சுருங்கிய முகத்திற்கும் சொந்தக்காரிகள் கோர்த்துவிட்டுப்போன சரமது இன்றைநாளில் வாடித்தான் கிடக்கிறது. தீர்த்தமளித்து தீட்சையளிக்கத்தான் யாருமில்லையென்று தோன்றுகிறது. என்பாதி எங்கிருக்கிறாளோ எனக்கது தெரியாது. வந்தவுடன் பிரதியெடுத்துக்கொடுத்து, இதைப்படித்துக் நம்பிள்ளைக்காவது பாடி உறக்கமளியடி என்று கொடுக்கவெண்ணியிருக்கிறேன். அவள் ஏற்கலாம் அல்லது என்மேல் சில கனரக பொருட்களை ஏவலாம். எதுவும் என்மேனியில் வாய்க்கப்பெறும். எனக்கதில் ஐயமில்லை. நீங்களும் முடிந்தால் ‘தைரியமாக’ இத்தாலாட்டுக்களுக்கு உயிர்கொடுங்கள்.


•••••••••••••••••••••••••••

அதேபோன்று


மண்டிய புதர்களுக்கு நடுவே இன்னும் கிராமப்புறங்களில் உயிர்வாழும் அரளிமலர்களாம் ஒப்பாரிகள். ஜனனம், மரணம் இரண்டிற்குமிடையேயான இம்மனித உயிர்களுக்கு இரண்டாமதில் கிடைக்கும் மகத்துவம். செல்கின்ற வழியில் நம்மின் வாழ்நிலை இன்பதுன்பங்களை இறப்பினூடே செவிகளில் வடித்துகொட்டும் வழமை. இணையதள தேடுபொறியில்கூட ஒருசில ஒப்பாரிகள் மட்டுமே கிடைக்கின்றன. இதன்மூலம் நானும் உணர்கிறேன். நிகழ்ந்துவரும் இழப்புகளில் இதற்குமோர் இடமிருக்குமென்பதை.


இங்கே
க.நா.சாந்தி லெட்சுமணன். போர்ட் பிளேயர், அந்தமான். (காந்திய கிராமங்கள்)

இவரின் இந்த இடுகை ஒப்பாரி
(உறவினர்களின் பிரிவுகள் பற்றின அழுகை)

2.ஒப்பாரிப்பாடல் (இதனுள் அடங்கிய வரிகள் கீழே.... என்னசொல்ல இதைப்பற்றி.... )

கஞ்சிக்கு மஞ்சன் களைக்க வைத்துப்போனாயா
சோத்துக்கு மஞ்சன் சோம்ப விட்டுப்போனாயா
அமுதுக்கு மஞ்சன் அழுக வைத்துப்போனாயா
பாலுக்கு மஞ்சன் பறக்க வைத்துப்போனாயா
காடு மண மணங்க கண்டாங்கி தீப்பறக்க
மஞ்ச,மணமணங்க மங்கிலியந்தீப்பறக்க
.....

ஒப்பாரிகள் தவிர இவரது வலைப்பூவில் மேலும் சில தொகுப்புகள். எல்லாமே கிராமிய மொழி...
தாலாட்டுக்களும், ஒப்பாரிகளும் மனிதனின் வாழ்வில் இனிமீட்டுப்பெறமுடியா இன்பங்கள். சுட்டியவற்றில் கொட்டிக்கிடப்பவைகளை கொள்வாரொருவர் உண்டென்றால் நானும் மகிழ்வேன்.

மீண்டும் நன்றிகள்,

பாசமுடன்,


26 comments:

  1. பின்னல்கள் பொருண்மையான தளத்தில் பயணிக்கிறது .தேடிப் பொருள் சேர்த்து படைத்துவக்கும்
    அரும்மொழி பாலாசி தொடர்க !

    ReplyDelete
  2. தாலாட்டை கேட்டுட்டு வரேன் :))

    ReplyDelete
  3. உலகத்திற்கு
    வந்தபின் கேட்கும் தாலாட்டும்,
    போனபின் கேட்கமுடியாத ஒப்பாரியும்...

    தாலாட்டு வாழ்க்கைக்கு ஊக்கம்
    ஒப்பாரி வாழ்ந்த வாழ்வின் தாக்கம்

    இதற்கு நடுவில்தான் நாம்
    பாடும் பாட்டுக்களும்,
    படும் பாடுகளும்...

    ReplyDelete
  4. எப்டிய்யா புடிக்கிற இந்த லிங்கையெல்லாம்? அருமையான அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள் பாலாசி

    ReplyDelete
  5. அனைவருமே அருமையான அறிமுகங்கள்..

    வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
  6. அறிமுகப்படுத்திய விதமே, அழகு கவிதை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அருமை.
    க.நா.சாந்தி அவர்கள் மட்டுமே அறிவேன். மற்றவர்களையும் படிக்கிறேன்.
    நன்றி பாலாசி.
    தொடருங்கள். :)

    ReplyDelete
  8. பின்னல்-களில் பல சன்னல்-கள்...

    தட்டாமலே திறக்கும் கதவு
    காரணம் உங்கள் பதிவு.

    நல்ல அறிமுகங்கள். தாலாட்டு பாட தயாராகியாச்சி போல... வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. ///////ஒன்று

    இங்கே மீனாமுத்து (கோலாலம்பூர், மலேசியா). காணக்கிடைக்காத தாலாட்டுப்பாடல்களை பதிந்துவைத்துள்ளார்.

    வாய்க்காத செல்வமொன்று குழந்தையாய் பிறந்ததென்னி தாயவள் மனமுரு(க்)கும் பாடலொன்று...////////



    நண்பரே உங்களின் அறிமுகத்தில் இந்த தாலாட்டுப்பாடல்களை பற்றியது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது . ஒவ்வொரு பாடல்களும் ஒரு புதுமை . பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    ReplyDelete
  10. நீ நடத்து ராசா. உன்ன அடிச்சிக்க ஆளில்ல போ!:)

    ReplyDelete
  11. கலக்கறீங்க பாலாசி. அழகா தொகுத்திருக்கீங்க சரத்த :))

    ReplyDelete
  12. அருமையான அறிமுகங்கள்.

    ReplyDelete
  13. superb... அப்ப அப்ப எட்டிப் பார்த்துக்கறேன்.. நீ அசத்து மோனே... ஜூட்..

    ReplyDelete
  14. //நேசமித்ரன் said...
    பின்னல்கள் பொருண்மையான தளத்தில் பயணிக்கிறது .தேடிப் பொருள் சேர்த்து படைத்துவக்கும்
    அரும்மொழி பாலாசி தொடர்க !//

    மிக்க நன்றி நேரமித்ரன் அய்யா...

    //Blogger சைவகொத்துப்பரோட்டா said...
    தாலாட்டை கேட்டுட்டு வரேன் :))//

    நன்றிங்க நண்பரே...

    //Blogger பழமைபேசி said...
    ஆசிரியப் பெருந்தகைக்கு வணக்கமும் நன்றியும்!//

    பெருந்தகையா !!!!... ஏனுங்க நீங்கவேற.. நன்றிங்க....

    //Blogger ஹுஸைனம்மா said...
    உலகத்திற்கு
    வந்தபின் கேட்கும் தாலாட்டும்,
    போனபின் கேட்கமுடியாத ஒப்பாரியும்...
    தாலாட்டு வாழ்க்கைக்கு ஊக்கம்
    ஒப்பாரி வாழ்ந்த வாழ்வின் தாக்கம்
    இதற்கு நடுவில்தான் நாம்
    பாடும் பாட்டுக்களும்,
    படும் பாடுகளும்...//

    ஆமங்க... சரியாச்சொன்னீங்க நன்றியும்....

    //Blogger முரளிகுமார் பத்மநாபன் said...
    எப்டிய்யா புடிக்கிற இந்த லிங்கையெல்லாம்? அருமையான அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள் பாலாசி//

    வாங்க நண்பா..வணக்கமும்... நன்றியும்...

    //Blogger அகல்விளக்கு said...
    அனைவருமே அருமையான அறிமுகங்கள்..
    வாழ்த்துக்கள் அண்ணா...//

    நன்றிங்க ராசா...

    //Blogger Chitra said...
    அறிமுகப்படுத்திய விதமே, அழகு கவிதை. வாழ்த்துக்கள்!//

    நன்றிங்க சித்ரா...

    //Blogger 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    அருமை.
    க.நா.சாந்தி அவர்கள் மட்டுமே அறிவேன். மற்றவர்களையும் படிக்கிறேன்.
    நன்றி பாலாசி.
    தொடருங்கள். :)//

    நன்றிங்க ஷங்கர்...

    ReplyDelete
  15. //அரசூரான் said...
    பின்னல்-களில் பல சன்னல்-கள்...
    தட்டாமலே திறக்கும் கதவு
    காரணம் உங்கள் பதிவு.
    நல்ல அறிமுகங்கள். தாலாட்டு பாட தயாராகியாச்சி போல... வாழ்த்துகள்.//

    மிக்க நன்றிங்க சார்... உங்களது வருகைக்கும்... பின்னூட்டத்திற்கும்...

    //Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    நண்பரே உங்களின் அறிமுகத்தில் இந்த தாலாட்டுப்பாடல்களை பற்றியது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது . ஒவ்வொரு பாடல்களும் ஒரு புதுமை . பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள் மீண்டும் வருவேன் .//

    நன்றிங்க பனித்துளி சங்கர்... உங்களின் எப்போதும்போலான வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...

    //Blogger வானம்பாடிகள் said...
    நீ நடத்து ராசா. உன்ன அடிச்சிக்க ஆளில்ல போ!:)//

    வாங்கய்யா... நன்றியோ நன்றி...

    //Blogger ச.செந்தில்வேலன் said...
    கலக்கறீங்க பாலாசி. அழகா தொகுத்திருக்கீங்க சரத்த :))//

    வாருங்கள் நண்பரே... நன்றிங்க....

    //Blogger துபாய் ராஜா said...
    அருமையான அறிமுகங்கள்.//

    நன்றி துபாய் ராஜா...

    //Blogger ரோகிணிசிவா said...
    NO COMMENTS BALASI ,
    I M DUMB !!!//

    அப்டியா.... சரி... நன்றிங்கா...

    //Blogger கலகலப்ரியா said...
    superb... அப்ப அப்ப எட்டிப் பார்த்துக்கறேன்.. நீ அசத்து மோனே... ஜூட்..//

    அட நீங்களா. வருக வணக்கம்... நன்றியும்கூட..

    ReplyDelete
  16. மிக அருமையாக தொகுத்திருக்கிறீர்கள் பாலாசி

    வாழ்த்துகள். தேன் தமிழில் தொடருங்கள்.

    ReplyDelete
  17. அருமையான அறிமுகங்கள்.

    ReplyDelete
  18. தொடர்ந்து கொண்டு போகும் விதம் அருமை புதுமையும் கூட.

    ReplyDelete
  19. சாந்தியின் வலைப்பூ அறிவேன்.

    //சுட்டியவற்றில் கொட்டிக்கிடப்பவைகளை கொள்வாரொருவர் உண்டென்றால்//

    என்ன அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்! தொடருங்கள் பாலாசி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. கட்டுரைக்கு நீங்கள் தந்த முன்னுரை மிக அழகு... எழுத்தின் வீச்சம் எங்கேயோ இழுத்துச் செல்கிறது.. தாலாட்டுக்குறித்த பதிவுகள் இன்னும் அருமை..

    ReplyDelete
  21. அருமையான அறிமுகங்கள்..

    ReplyDelete
  22. //அக்பர் said...
    மிக அருமையாக தொகுத்திருக்கிறீர்கள் பாலாசி
    வாழ்த்துகள். தேன் தமிழில் தொடருங்கள்.//

    மிக்க நன்றி அக்பர்...

    //Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...
    அருமையான அறிமுகங்கள்.//

    நன்றிங்க அய்யா...

    //Blogger ஜோதிஜி said...
    தொடர்ந்து கொண்டு போகும் விதம் அருமை புதுமையும் கூட.//

    நன்றி ஜோதிஜி...

    //Blogger செ.சரவணக்குமார் said...
    அருமை//

    நன்றிங்க செ.சரவணக்குமார்...

    //Blogger ராமலக்ஷ்மி said...
    சாந்தியின் வலைப்பூ அறிவேன்.
    என்ன அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்! தொடருங்கள் பாலாசி. வாழ்த்துக்கள்.//

    நன்றிங்க அக்கா....

    //Blogger பிரேமா மகள் said...
    கட்டுரைக்கு நீங்கள் தந்த முன்னுரை மிக அழகு... எழுத்தின் வீச்சம் எங்கேயோ இழுத்துச் செல்கிறது.. தாலாட்டுக்குறித்த பதிவுகள் இன்னும் அருமை..//

    நன்றிம்மா....

    //Blogger ஜெஸ்வந்தி said...
    அருமையான அறிமுகங்கள்..//

    நன்றிங்க ஜெஸ்வந்தி....

    ReplyDelete
  23. nalla arimugangal..

    ungal ezhutthhu nadai arumai.

    arimugappaduththum vitham pudhumai.

    vazhththukkal

    ReplyDelete
  24. //சே.குமார் said...
    nalla arimugangal..
    ungal ezhutthhu nadai arumai.
    arimugappaduththum vitham pudhumai.
    vazhththukkal//

    மிக்க நன்றிங்க சே.குமார்....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது