07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 23, 2010

தமிழ்சினிமாவின் சிறந்த ஆளுமைகள்

தமிழர்களின் சினிமா மீதான காதல் உணர்வுப்பூர்வமானது. அதனால் தான் இன்றும் படங்களில் நடித்து விட்டால் போதும்,முதல்வர் நாற்காலியை எட்டிப்பிடித்து விடலாம் என்ற ஆசையில் நிறையபேர் சுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றை சற்று நேரம் செலவிட்டுப் படித்துப்பார்த்தால் புரியும். கலைஞரோ, எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ வெறும் சினிமாவில் இருந்ததால் மட்டும் முதல்வர்கள் ஆகிவிடவில்லை. அது ஒரு காஸ்ட்லி விசிட்டிங்கார்ட் அவ்வளவுதான். அதையும் தாண்டி எவ்வளவோ உள்ளது.

நம் தமிழ்சினிமா மிகச்சிறந்த திறமையாளர்கள் பலரைக் கொண்டது. அதில் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகள் பற்றி பதிவர்கள் பார்வையில் இன்று...

எம்.ஆர்.ராதா :காலத்தைத் தாண்டி ஒலித்த கலகக்காரனின் குரல். சுகுணாவின் இப்பதிவு ராதாவின் பல முகங்களை வெளிக்கொண்டு வந்தது.

நாகேஷ் : சுதேஷமித்திரனின் இப்பதிவு காலத்தை வென்ற கலைஞனை அழகாக ஞாபகமூட்டுகிறது.

கவுண்டமணி : முரளிகண்ணனின் கவுண்டமணி பற்றிய தொடர் பதிவுகளில் வெளியான பின்னூட்டங்கள், இன்றும் அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் அன்பிற்குச் சாட்சி.

ஸ்ரீதர் : ஆர்.வி அவர்களின் வலைப்பூவில் ஸ்ரீதர் பற்றிய நிறைய இடுகைகள் உள்ளன. வாசித்துத்தான் பாருங்களேன்.

பாரதிராஜா :இயக்குநர் மகேந்திரன் பாரதிராஜா பற்றிச் சொன்னதைத் தொகுத்து தந்திருக்கிறார் முருகன். இதைப் படித்தால் பாரதிராஜாவின் வாழ்க்கைக்குறிப்பு இலவசம்.

பாக்யராஜ் : றேடியோஸ்பதி இந்தப் பதிவில் பாக்யராஜின் பல படங்களுக்கு சிறு குறிப்பு கொடுத்திருப்பார்.

மணிரத்னம் : அ.ராமசாமியின் இக்கட்டுரை மணியின் கருத்தியலையும் அலசுகிறது.

இளையராஜா : நம் ராகதேவனின் இசையைப் பற்றி நிறைய பதிவுகளைப் படித்திருப்போம். இளையராஜா பற்றிய விமர்சனங்கள் ஏன் உணர்வுப்பூர்வமாகி விடுகின்றன? ஏனெனில் அவரின் இசை தமிழர்களின் உணர்வோடு கலந்திருப்பதால் தான். அவருடைய வாழ்க்கைகுறிப்பு அடங்கிய pdf இத்தளத்தில்..


பி.சி.ஸ்ரீராம்: ஒளிப்பதிவு மேதை குறித்த ஆனந்தவிகடனின் 25 இது.


அஜயன்பாலாவின் இந்த 1980-1989 தமிழ்சினிமா கட்டுரை,தமிழ்சினிமாவை நேசிப்பவர்கள் அனைவராலும் வாசிக்கப்படவேண்டிய ஒன்று.

அன்புடன்

செல்வம்

10 comments:

  1. வித்தியாசமான அறிமுகம் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அய்....... இப்படி அறிமுகப் படுத்துவது புதுசா இருக்கே....... பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. பல சிறப்பான பதிவுகளை அளித்தமைக்கு நன்றி

    ReplyDelete
  4. well written and good informations.

    ReplyDelete
  5. அன்பின் செல்வம்

    திரைத்துறையினரைப் பற்றிய பதிவுகளைத் தொகுத்து வழங்கியமை நன்று - நல்வாழ்த்துகள் செல்வம் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. தவற விட்டிருந்த சிறப்பான இடுகைகளை தொடுத்ததற்கு நன்றிகள்

    ReplyDelete
  7. வித்தியாசமான அறிமுகம் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வித்தியாசமான அறிமுகம்

    ReplyDelete
  9. வித்தியாசமான அறிமுகம் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நன்றி....பத்மா, சித்ரா, கானாபிரபா, வானதி, சீனா ஐயா, சுரேஷ், குமார், மின்மினி, ஸ்டார்ஜன்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது