07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 2, 2010

வலைச்சரம் - ஐந்தாம் நாள் - வெள்ளி

நேசமித்திரன், அய்யனார், யாத்ரா, மண்குதிரை, ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா, நந்தா

போதும்! நாலு நாள் நான் பேசியாச்சு. இனி, நண்பர்கள் பேசட்டும். உம் கொட்டுறது என்னோட பொறுப்பு. சரியா?

1.நேசமித்திரன்

பின்ன உடலின் ஸ்கலிதங்கள்

நிலவில் ஹைட்ரசில் திரளும் கிரகண
மகாயாண இறுதியில்
திரிந்த விந்து மிடோசிஸ் பின்னி வளர்ந்து
பெஞ்சமினின் அளவுகோலுக்குள்
பொருந்தக் கண்டது உடல்

பியானோ கடல் மீட்டும்
இலக்கம் வளரும் மழை கருவிரல்
எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ்
பாறைகளின் கிராபைட் நுனி ஒளிர
புலால் உண்ணும் தாவரம்
வசியம் முகிழ்த்து

உதிரத்துரு வாசம் வீசும் டிராகன் நாக்கு
வெப்புடனுப்புமிழ் காய சண்டிகை

குறுக்கு வெட்டாத கோளங்கள்
மடங்குகளாக தலை கீழ் விகிதங்கள்

குவாண்டம்
பெல்லிடம் தோற்ற
காந்தம் திருப்பிய அணுத்துகள்
தானறிகிறது திசை

யுரேனிய விரைப்பைகள் நீலம் பாரிக்க சுமக்கும்
கோமாளி மீனுக்கு பெண்ணுறுப்பு வால்புறம்

பின்ன உடலின் ஸ்கலிதங்கள்
துடிப்பிசை மாறும் கரு மற்றும்
அதைத்தாங்கும் உடல்

***

(நீ திறப்பு தந்துதான் இதற்குள் நுழைய முடிந்தது நேசா. திறந்த பிறகு வலி நிறைந்த அசைவு!)

***

2. அய்யனார்

கண்டறிதல்

இரண்டு பியர்களுக்கு மேல் குடித்துவிட்டால்
பழைய காதலிகளுக்குத் தொலைபேசி
இன்னும் அவள் நினைப்பிலேயே இருப்பதாய்
சத்தியம் செய்யலாம்..
உடன் வந்தவனை
ஐ லவ் யூ மச்சி
என குழறலாய் நேசத்தை சொல்லலாம்

என்ன செய்வது?
குடித்த பின்பெழும் நேசங்களை மட்டும்
சொல்லாமலிருக்க முடியவில்லை...

***

(ஐ லவ் யூ மச்சி, அய்ஸ்!) :-)

***

3. யாத்ரா

எதுவுமே நிகழவில்லை இன்று

புன்னகை ஒட்டிய முகங்கள்
நெகிழ வைத்த மேலாளர் நண்பர்கள்
காத்திருக்க வைக்காமல்
வந்துவிட்ட இவள்
காலியாயிருந்த பேருந்து
ஆழ்ந்து யோசிக்கிறேன்
ஒரு அவமானம்
ஓரேயொரு ஏமாற்றம்
வன்சொல்
எதிர்ப்பட்ட லாரிக்காரனும்
சாவுகிராக்கியெனவில்லை
இது ஒரு நாளா
மன்னிக்கவும்
இன்றைக்கு
கவிதையேதுமில்லை
உங்களை வெறுமனேயனுப்புவதில்
துயரம் மெல்ல கவிகிறது.

***

(சந்தோசமா இருங்க யாத்ரா! வெறுங்கையோடு ஒன்னும் திரும்பல)

***

4. மண்குதிரை

ஒரு கவிதை

என்னால் எதுவும் இயலாது
என்று அவர்கள் கூறுவதனால்தான்

கைமாறிப்போன சொந்த நிலத்தை
மீட்க முடியதனால்தான்

இரண்டுவருடமாக அடைகாத்த காதல்
ஒரு நொடியில் உடைந்து போனதால்தான்

எல்லா இடங்களிலும் தொடர்ந்து
நிராகரிக்கப்பட்டு கொண்டேயிருப்பதனால்தான்

நானும்
இந்தக் கவிதையை எழுதுகிறேன்.

***

(அதனால்தான் நானும் வந்து வாசிச்சேன் மண்குதிரை)

***

5. ஜ்யோவ்ராம் சுந்தர்

வயதான வண்டியிது
மிக மோசமான முறையில்
கழுத்தறுக்கும்
அடைய வேண்டிய இலக்கு
தொலைவில் இருக்க
இருக்கும் நேரமோ மிகச் சொற்பம்
மெதுவாகத்தான் செலுத்த இயலும்
இந்த வண்டியை
பாதியில் நின்றுவிடும்
என்னுடன் சண்டை போடும்
தூக்கியெறியும்
இது குடிக்கும் பெட்ரோலுக்கென
என் வியர்வையில் பாதியை அழுதிருக்கிறேன்
சோனியாக இருக்கும் இவ்வண்டி
துருப்பிடிக்கவும் ஆரம்பித்தாகிவிட்டது
என்றாலும்
எல்லார்க்குமான சாலையைக் கடக்க
வண்டியில்லாமல் தீராது
இன்னொன்று
இது என் வண்டி
எனக்கு மட்டுமேயான வண்டி

***

( குர்குரே மாதிரி கோணலா இருந்தாலும், உன்னுடையதாக்கும்?..கலக்குற சுந்த்ரு!) :-)


***

6. அனுஜன்யா

அழைப்பு மணி

அழைப்பு மணி ஓசை
பால் வந்து விட்டது
பேப்பர் போடப்படுகிறது
பணிப்பெண் வந்தாயிற்று
அடுத்தத் தெரு கலா
கியாஸ் சிலிண்டர்
அலுவலகத்திலிருந்து கணவன்
என்றெல்லாம் துல்லியமாகக்
கண்டுபிடித்து விடுவாள்.
அழுத்தும் விதம்,
அழுத்தப்பட்ட நேரம்
உள்வாங்கிய மனக்கணக்கில்;
மற்றவர்க்கெல்லாம்
மாயக்கண்ணாடியில் பார்த்தல்;
சிலருக்குச்
சங்கிலியைக் கோர்த்தல்
போன்ற சடங்குகளும்;
அவனும் கலா போலவே
மணி அழுத்துவான் என்று
கசிந்த உதிரத்தினூடே
நினைவு பிரிகையில்
அவளுக்குப் புரிந்தது.

***

(கொல்றீங்களே பாஸ்!..) :-)

***
7. நந்தா

மழை கேட்டல்

வழக்கம் போலவே
அது விழுந்ததும்
விமர்சனங்கள் எழுந்தன
அக்கறையில்லாமல் அது
Asbestos Sheetகளை
அவசரமாக வாசித்துக் கொண்டே போனது
அவ்வப்போது கேட்ட அசரீரிகளை
துக்க செய்தி கேட்டது போல பயந்தார்கள்
மண்ணில் வெடித்தது
தூள் தூளாய் சரிந்தது
கிணற்றில் குதித்தது
நீரோடு நீர் மோதும்
குதூகலக் குரல்
ஒளி வடிவங்களாய் விரிந்தது
அடுத்த பாடல்
ஜன்னல் கண்ணாடியில் அரங்கேறியது
அதன் நோக்கமற்ற ஒழுகலின்
உராய்வு ஓசை கேட்க
என் காதுகளைத் தீவிரப்படுத்தினேன்
கடைசி தீக்குச்சியைப் பற்ற வைக்கும்
கவனத்தோடு.

(ரொம்ப பிடிச்ச கவிதை இது நந்தா! இப்பதான் ரொம்ப உயரமா போய்ட்டீங்க நந்தா. எட்டி தொட முடியல.)

***

நாளை இன்னும் ஏழு பேர் பார்க்கலாம் மக்கள்ஸ். கவிதைக்கென மிக சிறப்பான தளங்கள் இருக்கிறது. இனி வரும் இரண்டு நாட்களுக்குள் அவ்வளவையும் இங்கு சேர்க்க இயலாது. சாத்தியமும் இல்லை. போக, விரும்பியதை தானே தேடி அடைவதில் ஒரு சுகம் இருக்கிறது. அந்த உங்களின் சுகத்தை/ சுதந்திரத்தை நான் திருடலாகாது..

நாளை பேசுவோம்...

***

30 comments:

  1. கவிதைகளும், கவிஞர்களும் மிகச்சிறந்த தேர்வு ...

    ReplyDelete
  2. உண்மையான சிறந்த தேர்வு. பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல தேர்வுகள் மாம்ஸ்.

    ReplyDelete
  4. எல்லாமே அட்டகாசம்.

    ReplyDelete
  5. அருமையான தேர்வுகள்..... அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  6. எல்லாருமே மிகச் சிறந்த கவிஞர்கள்.

    ReplyDelete
  7. சித்தப்பா.... நெஞ்சை நெகிழ வைக்கிறது.....அற்புதமான அறிமுகங்கள்!

    ReplyDelete
  8. மிகச்சிறந்த தேர்வு .அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. ரசனைகளின் அணிவகுப்பு அருமை பா.ரா.
    நந்தாவின் மழைக்கவிதை உச்சம்.

    அன்புடன் கபிலன்.

    ReplyDelete
  10. எனக்கு பிடித்த கவிஞர்கள் அனைவரையும் ஒரே பதிவில் கட்டி தூக்கி வந்து விட்டீர்கள்

    ReplyDelete
  11. அன்பின் பா.ரா

    அனைத்துக் கவிதைகளுமே அருமை. அறிமுகங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. நன்று நன்று

    நல்வாழ்த்துகள் பா.ரா
    நட்புடன் சீனா

    ReplyDelete
  12. நல்ல அறிமுகம்.. நன்றி!!

    ReplyDelete
  13. தான் பெற்ற இன்பம், பெறுகவென
    தேடித் தேடி த்ருகிறீர்கள் பாரா.
    பாரா. நல்ல பகிர்வு.
    வாழ்த்துக்களும் நன்றியும்.

    ReplyDelete
  14. அருமையான தளங்களை தேடித்தருகிறீர்கள் பாரா. அண்ணா, நன்றி.

    ReplyDelete
  15. என் எண்டர் கவிதைகளை லிஸ்டில் சேர்ககததற்கு வன்மையாய் கண்டிக்கிறேன்..பா.ரா..:)

    ReplyDelete
  16. நல்லா இருக்கு தேர்ந்தெடுத்த முத்துக்கள்

    ReplyDelete
  17. நேசன் எப்பொழுதும் பிரம்மாண்டம்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  18. அன்பிற்கு நன்றி ராஜாராம்

    ReplyDelete
  19. தேர்தெடுத்து கொடுக்கும் கவிதைகள் அனைத்தும் மிகச்சிறப்பானதாகவே இருக்கிறது... நன்றிங்க பா.ரா. சார்...

    ReplyDelete
  20. முதல்ல என் பேர் வந்துருக்கனும்.. சரி பெழைச்சி போங்க..:))

    சரியான.. எனக்கும் பிடித்த கவிஞர்களின் வரிசை.. :)

    ReplyDelete
  21. //என் எண்டர் கவிதைகளை லிஸ்டில் சேர்ககததற்கு வன்மையாய் கண்டிக்கிறேன்..பா.ரா..:)//

    என்ன கொடுமை சரவணா இது.. அப்புறம் வலையுலகில நிறைய தற்கொலைதான் நடக்கும் :)))

    ReplyDelete
  22. அன்பு பாரா சார்,

    உங்கள் வலைச்சர பதிவுகள் அருமை. வெள்ளி அறிமுகங்கள் அருமையோ அருமை. வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் வலைச்சர ப(வ)ணி.

    நன்றி.

    ReplyDelete
  23. எனக்குப் பிடித்த கவிஞர்களின், உங்களுக்குப் பிடித்த வரிகளை வழங்கியிருக்கிறீர்கள் பா.ரா.

    -ப்ரியமுடன்,
    சேரல்

    ReplyDelete
  24. எம்புட்டு நாள் கழிச்சு போனாலும் வாங்க துரைன்னு வாய் நிறைய கூப்பிடுவார் பழனிச்சாமி மாமா
    சின்னப்ப இருந்தே அப்டிதான்

    ஒரு 9 லட்சம் கடன்காரனா இருந்தப்பவும் (தாய் வழி சீதனம்:) )துரைதான் அவருக்கு

    பெறவு எல்லாத்தையும் ஒரே வருஷத்துல அடைச்சு நிமிந்தப்பவும்
    அதே சிரிப்பு அதே துரை ...
    கருவறைல இருக்குற சிலை
    முகம் போல

    மாமா.. அண்ணன் வித்யாசம் பார்க்கத்தெரியுமா அன்புக்கு

    மீண்டும் நன்றி நண்பர்களே உங்கள் வாழ்த்துகளுக்கு

    ReplyDelete
  25. அறிமுகத்துக்கு நன்றி அண்ணா.

    ReplyDelete
  26. எல்லாமே அருமையான தேர்வு பாரா அண்ணே..

    ReplyDelete
  27. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. அருமையான தேர்வுகள்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது