07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 29, 2010

கவிதையாய் - வலைச்சரம் நான்காம் நாள்

இன்றைய காலகட்டத்தில் மட்டுமல்ல தொன்றுதொட்டே கவிதை என்றதும் அடுத்து நினைவுக்கு வருவது காதல். இதுவரை எழுதப்பட்ட பெரும்பாலான கவிதைகள் காதலை நோக்கியே பயனித்திருக்கின்றன. சமூகம் சார்ந்த கவிதைகளை அவர்களால் எழுத முடியாது என்பது அதற்கு காரணமில்லை. அவர்களுக்கு காதலில் உள்ள ஈடுபாட்டை விட சமூகத்தின் மீதான ஈடுபாடு குறைவாக உள்ளது. இதற்கு ஏதோ ஒன்று காரணம் என சொல்லி தப்பி விட முடியாது.

இவர்களை போன்றவர்களுக்கும் சமூகப் பொறுப்பும், அதன் மீது காதலும் இருக்கிறது. அவற்றை எப்படி கவிதையாக்கலாம் பலருக்கு சொல்லலாம் என்பதை ஆக்கப்பூர்வமாக யோசித்து செயல் பட்டால் நிச்சயம் சமூகத்திற்கான எழுத்தாய் அது மாற்றம் பெறும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் வேண்டாம்.

கவிதைகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் பலரது கவிதைகள் படிப்பவர்களுக்க்கு புரியாது. இங்கு நான் தொகுத்திருக்கும் கவிதைகள் அனைவருக்கும் எளிதில் புரியக்கூடிய வகையில் இருக்கும்.


"உயிரே...
வாழ்வினில் காதல் செய்யாமல்,
காதலையே வாழ்வாக தந்த,
நீ கிடைக்க என்ன தவம் செய்தேனோ!!!"

தன் கணவர் ஹரியின் மீதான இவரது காதல் வெளிப்பாடுதான் இந்த கவிதை.


"உனக்காகவே நானென்று
என்னை நீ
உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்
சாந்தி அடையக்கண்டேன்"

இதுவும் தோழி மலிக்காவால் காதலாய் பொழியப்பட்ட கவிதை


தாய் என்பவள் உண்மையில் இவ்வுலகில் ஒரு மிகபெரிய கடவுள். மற்றவையெல்லாம் கடவுள்களே இல்லை. தன் பிள்ளை என்றில்லை எந்த பிள்ளைக்கு துன்பம் வந்தாலு கலங்கி விடும் கண்கள் அவளுடையது.

"எதற்கும் இருக்கட்டுமென
எப்பவும் மாற்று மருந்தொன்று
இருக்கும் அம்மாவிடம்."

அந்த தாய்க்காக ஒரு அழகிய கவிதை


"ராட்சத பறவைகளை
துரத்தத் திராணியற்று
மாறிய திசையில் பயணிப்பதை
தவிர்க்க முடியாமல்
கூடுகள் கலைந்த தவிப்போடு"

இலங்கைப் போரால் பாதிக்க்கப்பட்ட மக்கள் புலம்பெயர்தல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. அவர்களின் நிலையை அழகாய் வெளிப்படுத்தியிருக்கும் இந்த கவிதை நிச்சயம் படிப்பவர்களின் மனதை கண்க்கச் செய்யும்.


"கல் தடுக்கி
கால் இடறுவது போல
என் நினைவுகளுக்குள்
நீ இடறுகிறாய்
இதயத்திறகுள் நீ
எங்கு இருக்கிறாய்
தெரியவில்லை
தூக்கி எறிவதற்கு முயல்கிறேன்
முடியவில்லை"

தனக்கு கவிதை எழுதத் தெரியாது என சொல்லிவிட்டு இக்கவிதையை எழுதியிருக்கிறார். இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்தும் காதலை அழகாய் சொல்லும் கவிதைகள்.


"தமிழ் வாழ
தமிழர்கள் இருக்கிறார்கள்..

ஆனால்
தமிழன் வாழ...?"

பிணங்களின் மீது மனிதமற்று நடந்த சுயநல மாநாட்டிற்கு இவர் 2009-ல் எழுதிய இக்கவிதை மிகப் பொருத்தம்.


"ஒரு பறவைக்கு இத்தனை திமிராயென்று
என்னை தரையோடு தேய்த்துவிடும்
நோக்கத்தில்
உங்களின் பாதங்கள் நெருங்குகின்றன.

இப்போதும் உங்களை நான்
தடுக்கும் உத்தேசமில்லை

ஏனென்றால்...

நான் பறவை இல்லை."

மரங்களின் அவசியத்தையும், அவற்றை அழித்துக் கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் சொல்லும் ஒரு அற்புதக் கவிதை இது.


"நீ சேட்டை செய்கையில்
அத்தை அல்லிப்பூ செண்டாலோ
மாமன் மல்லிப்பூ செண்டாலோ
அடிப்பதில்லை..
ஏனென்றால்
இவள் எங்கள் கூட்டம்
என்று
அல்லிகளும் மல்லிகளும்
குழைந்து நிற்கின்றன !"

சென்ற மாதம், இவருக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்திருக்கிறாள். அவளுக்காக இவர் எழுதியிருக்கும் தாலாட்டுக் கவிதை இது. பாசத்தின் வெளிப்பாடாய்.


"தன்னுயிர் காக்கும் மாந்தர்கள்
புத்துயிர் தரும் தாவரம் வளர்க்க
இன்றே புது நீதி செய்குவோம்!"

மரங்கள் இருந்த இடத்தில் மனமில்லாக் கட்டிடங்கள் நிறைந்து நிற்கும் இக்காலத்தில் மரம் வளர்க்க வேண்டும் என வலியுறுத்ஹ்டும் இக்கவிதை அழகுதான்.

பி.கு: என்னைக் கவர்ந்த இக்கவிதைகளில் எனக்குப் பிடித்த வரிகளை மட்டுமே இங்கு தந்திருக்கிறேன் முழுக்கவிதையையும் படித்துப் பாருங்கள்.

17 comments:

  1. கவிஞர்கள் அனைவரும் நான் மிகவும் ரசிப்பவர்கள்.. அவர்களை அறிமுகம் செய்தமைக்கு என் வந்தனம்

    ReplyDelete
  2. அன்பின் புலிகேசி

    கவிஅதை - கவிஞர்கள் - றிமுகம் நன்று - அதனையும் தேர்ந்தெடுத்துப் போடப்பட்ட அறிமுகங்கள்

    நல்வாழ்த்துகள் புலிகேசி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  3. வித்தியாசமான கவிதைகள். அனைத்தும் அருமை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - நன்று. ஆனால் பொதுநலம் சார்ந்த கவிதைகள் என்பதில் வினவு தளத்தில் கிடைக்கும் தோழர் துரை.சண்முகத்தின் கவிதை ஏதாகிலும் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். -சித்திரகுப்தன்

    ReplyDelete
  4. கவிதைகள் அனைத்தும் சூப்பர் நண்பா

    ReplyDelete
  5. //ஒன்று சேர் said...
    வித்தியாசமான கவிதைகள். அனைத்தும் அருமை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - நன்று. ஆனால் பொதுநலம் சார்ந்த கவிதைகள் என்பதில் வினவு தளத்தில் கிடைக்கும் தோழர் துரை.சண்முகத்தின் கவிதை ஏதாகிலும் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். -சித்திரகுப்தன்
    //

    நிச்சயம் இருக்கிறது. ஆனால் இவர்களும் அது போன்று எழுத வேண்டும் என்பதே என் ஆசை.

    ReplyDelete
  6. சில தெரியாத கவிஞர்கள்

    நல்ல அறிமுகம்- நன்றி

    ReplyDelete
  7. அருமையான கவிஞர்கள், கவிதைகள் ..
    அருமையான அறிமுகங்கள்

    ReplyDelete
  8. இத்தனை நாளா இன்னும் இந்த கவிதைகளை ஞாபகம் வச்சிருக்கீங்க புலிகேசி... மிக்க நன்றி எனது அறிமுகத்திற்கு இப்போது கண்டறியாத காதல் இரண்டாம் பாகம் எழுதி இருக்கிறேன் முடிந்தால் படித்து பாருங்கள்.

    ReplyDelete
  9. வித்தியாசமான கவிதைகள். அனைத்தும் அருமை.

    கவிஞர்களை அறிமுகம் செய்தமைக்கு என் நன்றி.

    ReplyDelete
  10. அருமையான தேர்வுகள்!!!
    அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. கலக்கலுங்க புலிகேசி... நல்ல கவிதைகளை தேர்ந்தெடுத்திருக்கீங்க...

    ReplyDelete
  12. நன்றி, முருகவேல்!

    மற்ற அறிமுகங்களையும் வாசிக்கிறேன்.

    ReplyDelete
  13. உங்கள் அறிமுகங்களுக்கு நன்றிகள் தோழர் ...
    அண்மையில் நானெழுதிய ஒன்று ...
    இன்ஷா அல்லாஹ் ...
    http://neo-periyarist.blogspot.com/2010/07/blog-post_759.html
    அனைவரின் பார்வைக்கும் பின்னூட்டத்திற்கும்.
    அனைவரின் கருத்துக்களையும் வேண்டுகிறேன் அன்புடன் !

    ReplyDelete
  14. சுயமுகம்,உணர்வுகள்,சமுகம்,கவிதை..எல்லாமே அருமைங்க.

    ReplyDelete
  15. கவிதை அறிமுகம் அசத்தல் ... தொடருங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது