டெல்லி சாந்தினி சௌக்கில் மத்திய அரசில் பணிப்புரியும் ஒருவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.வழியில் இரண்டுபேர் பேசிக்கொண்டிருந்ததை கவனித்தார்.
கடவுளைக் காணமுடியுமா? என்று ஒருவன் கேட்க, ஓ... முடியுமே! உன் கோட்டை கழட்டிவிட்டு பத்தடி முன்னால் சென்று பார் கடவுள் தெரிவார் என்றான்.
அவனும் அப்படியே செய்து திரும்பி வந்து பிரகாசமான முகத்துடன் தாங்க்ஸ். நீங்கள் என் கண்களை திறந்துவிட்டீர்கள். கடவுளை நன்றாக பார்க்க முடிந்தது என்றானாம்.இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசு அலுவலர் கடவுளைப் பார்த்தவனை அணுகி எனக்கும் பார்க்க வேண்டும் என தன் கோட்டைக் கழற்றி அவனிடம் தந்துவிட்டு பத்தடி முன்னால் சென்று பார்த்தார். காக்காய் கூடுகட்டிய டெலிவிசன் ஆன்டெனாக்களைத் தவிர ஏதும் தெரியவில்லை. திரும்பிப் பார்த்தால் அவர்கள் இருவரையும் காணவில்லை கோட்டில் அந்த மாதச் சம்பளம்.(சுஜாதா எழுதிய நூலில்)
இப்படித்தான் எதை எங்கு பார்ப்பது தேடுவது என்று தெரியாமல் இருப்பதையும் இழந்துவிடுகிறோம்.
ஓன்றை வாங்குவது என்றால் அதைப்பற்றி பெரும்பாலோர் அலசி ஆராய்ந்து நேரம், காலம், வாஸ்த்து இப்படி நிறைய சம்பர்தாயங்கள் பார்த்து வாங்குவார்கள்.
ஒரு பொருளுக்கே இவ்வளவு பார்க்கின்ற நாம் நம்மைப்படைத்த இறைவனை(?) அறியாமலேயே இருப்பது அமைதிக்கு பாதகம்.
இப்படி அறியாமலேயே இருப்பதுதான் பல பிரச்சனைகளுக்கு காரணமாகவும் இருக்கிறது.அப்படி அறிவதற்கு வாய்ப்பை நமக்கு தருவது ஞானிகள்
ஞானத்தை விளக்குவதற்கு பல கதைகள் உண்டு அதில்
முல்லா நசூருதீன் கதைகளும் ஒன்று.
வாழ்வியல் என்பது கிட்டதட்ட ஞானம். பலர் வாழ்வியலை போதிக்கும் குருமார்களிடம் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள்.காரணம் இந்த அவசர உலகில் அமைதி என்பதை ஒருவருக்கொருவர் தொலைத்துவிட்டு பொருள்தேடலில் அதைத் தேடுகிறார்கள்.அதை எங்கு தொலைத்தோமோ அங்குதான் தேடவேண்டும்.
நம்மில் தொலைத்துவிட்டு வெளியில் தேடினால் கிடைக்குமா?
எதைத் தேடுகிறோம் என்றே தெரியமால் தேடுகிறோம்
நம்மை நாம் அறிவதற்கு இந்ததளம்
தன்னம்பிக்கையை ஊட்டுகிறது.
மூதறிவாளன் இறைவன் அவனின் முகவரியை ஞானிகளிடமிருந்துதான் இவ்வுலகம் பெற்றுக்கொண்டிருக்கிறது.
சுயத்தேடல் நிறைந்தவர்கள் சிதாகாசத்தை சித்தரித்து நம் சித்தம் தெளியத்தருகிறார்கள்.
ஞானம் என்றால் என்ன வென அறிந்துக்கொள்ள துடிப்பவர்களுக்கும் சூபியிசம் என்றால் என்ன என்றறிய துடிப்பவர்களுக்கும் ஞானவெட்டியானின் பதிவுகள் சம்பூரணத்தை விளக்குகிறது.ஞானத்தாகம் கொண்டவர்களுக்கு தாகிப்பிரபம் நீருற்றாய் விளங்குகிறது.
இந்திய விமானப்படையில் ஐந்தாண்டுகள் பணிமுடித்து ஸ்டேட் பேங்ஆப் இந்தியாவில் மேலாளராக பணிப்புரிந்து ஓய்வு பெற்ற
செயச்சந்திரன் B.SC A.M.I.E.R.E.(LOND).,C.A., I.C.W.A., M.B.A
இவர்
சித்தன்னாக எல்லோருக்கும் சுயச்சிந்தனை ஊட்டுகிறார். ஞானிகளின் எழுத்துக்களுக்கும் சித்தர்களின் பாடல்களுக்கும் விளக்கம் கொடுத்து மின்னூலாக பதிவிடுகிறார்
இது ஞான ஊற்று மெய்ஞானக்காற்று அனுபவித்துப்பாருங்கள்.
புல்லாங்குழல் என்பது ஒரு மகத்தான ஆன்மீகக் குறியீடு நீங்களும் நானும் ஒருவகையில் புல்லாங்குழலைப் போன்றவர்கள் என்று மௌலானா ரூமி கூறுகிறார்கள் அதைதான் நூருல்அமீன் தனது வலைதளத்தில் ஞானமணம் பரப்புகிறார். படிக்க படிக்க நம் சிந்தனை சிறகில்லாமலேயே பறக்கிறது. விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் என சந்தேகங்களுக்கு பின்னூட்டதில் கட்டுரையே வரைந்திருக்கிறார். பல ஆன்மீக சந்தேகங்களுக்கு இந்த வலைதளம் தெளிவு தருகிறது.
ஆபிதீன் பக்கங்கள் அழிந்துக்கொண்டிருக்கும் இலக்கியங்கள் அழியாத மனிதர்கள் என பட்டியலிட்டு வைத்திருக்கிறார். நிறைய விசயங்களையும் வண்ணமில்லா மனிதர்களையும் வகைப்படுத்தியுள்ளார்.நிறைய விசயங்களை நிறைத்திருக்கிறார். பேதமில்லாமல் எதார்தத்தை எழுதுகிறார்.இவரின் பதிவுகளில் ஞானமும் ஞானிகளும் நிழலாடுகிறார்கள்.
தினம் ஒரு தகவல் என நல்லதொரு சிந்தனையை தினம் தந்து கொண்டிருக்கின்றார்
இவருடைய பதிவுகளில் பல பொக்கிசங்கள் பொதிந்திருக்கிறது.
ஞானியும்குழந்தையும் நல்லதொரு சிந்தைமிக்க கதையாக தந்திருக்கிறார்.
கொல்லிமலைச் சாரல் ஆனந்த் பிரசாத். இமெயில் மூலம் சிலருக்கு மட்டும் பகிர்ந்த தகவலை வலைதளம் அமைத்து அனைவருக்கும் வழங்குகிறார்.
ஞானத்தில் சிறந்த ஞானம் எது? என்று
தமிழ் நண்பர்கள் கேட்டனர் அவர்களின் இந்த கேள்விக்கு ஒரு கதை பதிலாகிறது.
உணரமுடியா மர்மங்களின்...
ஆதி முடிச்சிலும்...,
கற்பனைக்குள் எட்டா காரியங்களின்
கருவிலும், விளங்க முடியா விந்தைகளிலும்
பிணைந்திருக்கும் பருமனில்
புகுந்திருப்பது நானின்றி வேறு யார்?
தேடலில் கேட்பவர்
தேவாதொடர்வோம் நன்றி.!