07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 31, 2010

நன்றி பிரபாகர் - வருக வருக லோகு

அன்பின் சக பதிவர்களே

கடந்த வாரத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற அருமை நண்பர் பிரபாகர் ஏற்ற பணியினைச் செவ்வனே செய்து முடித்து மன நிறைவுடன் விடைபெறுகிறார். அவர் ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் முப்பது பதிவர்களை - இதுவரை யாரும் அறிமுகப் படுத்தாத பதிவர்களை அறிமுகப் படுத்தவும் மற்றும் தினம் ஒரு தகவல் தரவும் திட்ட மிட்டு - அதன் படி தகவல்களும் அறிமுகங்களும் அளித்து விடை பெறுகிறார்.

அவர் ஏழு இடுகைகளில் ஏறத்தாழ 45 பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறார். அனைவருமே புதிய பதிவர்கள் - நல்ல இடுகைகள் இடுபவர்கள். தனக்கு ஆசானாக விளங்குபவருக்கும், தன்னை வலைப்பூ ஆரம்பிக்க ஊக்கம் கொடுத்தவருக்கும், அவ்வப்பொழுது இடுகைகளைத் தவறாது படித்துத் தட்டிக் கொடுக்கும் நண்பர்கள் இருவருக்கும் நன்றி பாராட்டியது ஒரு நல்ல செயல். ஏறத்தாழ 190 மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.

நண்பர் பிரபாகரை வாழ்த்தி வழியனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

பிப்ரவரி முதல் தேதி முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க இணக்கம் தெரிவித்திருந்த நண்பர் சில தவிர்க்க இயலாத காரணங்களினால் பொறுப்பேற்க இயலாத நிலையில், மீண்டும் ஒரு முறை பொறுப்பேற்க வருகிறார் திருப்பூரைச் சார்ந்த நண்பர் லோகு. இவர் ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு முறை பொறுப்பேற்று எழுதியவர். அதனால் இப்பொழுது அறிமுகப்படுத்த வில்லை.

நண்பர் லோகுவினை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் இறுதிநாள் : நன்றியும் வணக்கமும்.

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

சுவாமி விவேகானந்தர்:

நிறைய இடுகையாளர்களை குறிப்பிடவேண்டும் என எண்ணியிருந்தாலும், அதற்கெல்லாம் நமக்கு தகுதி இருக்கிறதா எனும் கேள்வி ஒருபுறம், அறிமுகப்படுத்தாதவர்களை, புதியவர்களை நிறைய சொல்லவேண்டும் எனும் எண்ணம் மறுபுறம் என இருந்ததால் நிறைய பேரை சொல்ல இயலவில்லை.

அடுத்து வானம்பாடிகள் அய்யா குறிப்பிட்ட நூற்றுக் கணக்கானோரை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தினால் கொஞ்சமல்ல நிறைய கூடுதல் சுமையாகவே இருந்தது. இருப்பினும் எனது முந்தைய இடுகையான எனக்கு பிடித்த இடுகையாளர்களை படித்தீர்களானால் மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு பிடித்தவர்களைப் பட்டியலிட்டிருந்தேன்.

இன்று வலைச்சரத்தின் வாயிலாக இன்னும் பலரை சொல்லவும், நிறைய இடுகையாளர்களை புதிதாய் படிக்கவும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. எழுதிய இந்த ஒரு வாரத்தினை எனது வாழ்வின் சந்தோஷ தருணங்களாய் எண்ணி இயன்ற அளவு அனுபவித்து எழுதி வந்திருக்கிறேன்.

இந்த இடத்தில் என்னை வலைப்பூவை ஆரம்பிக்க ஊக்குவித்து எனது நண்பராக, முன்னோடியாக இருக்கும் லக்கி எனும் என் குருஜி கிருஷ்ணாவுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆரூரன், கேபிள் அண்ணா, பட்டர்ஃப்ளை சூர்யா, தண்டோரா, நர்சிம், அப்துல்லா அண்ணன், ஆதி, சகா கார்க்கி, நண்பர் ஜோதிஜி, இளவல் பாலாசிகோவி அண்ணாஞானசேகரன் அண்ணா, தம்பிகள் நாஞ்சில் பிரதாப், புலிகேசி, ஜெட்லி அன் கோரோஸ்விக் மற்றும் அறிமுகப்படுத்தியுள்ள எல்லா நண்பர்கள், மற்றும் எழுத மறந்த எல்லோருக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

பெண்பதிவர்கள் இன்று வலையுலகில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். நிறைய பேரை படித்து வருகிறேன், அவர்களின் எழுத்துக்களின் வாசகனாயும் இருக்கிறேன். துளசி கோபால்,சின்ன அம்மணி, நிலாமதி, மாதேவி, ஜெஸ்வந்தி, Mrs.Menagasathia,கண்ணகி, அன்புடன் அருணா என இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த வலைச்சரத்தின் வாயிலாய் எனக்கு பல புதிய உறவுகளை கிடைக்கப் பெற்றிருக்கிறேன். அதற்கெல்லாம் முக்கிய காரணமாய் இருக்கும், நம்பி எழுத ஊக்குவித்த சீனா அய்யா மற்றும் வலைச்சர குழுவினருக்கும், வலைச்சரத்தில் பங் கேற்ற, பங்கேற்கப்போகும் அனைத்து வலையுலக அன்பர்களுக்கும், என்னைக் குட்டி தவறுகளை சரிசெய்து என்னை செம்மைப்படுத்தும் என் ஆசான் வானம்பாடிகள் அய்யாவிற்கும், உரிமையாய் என்னை தோள்கொடுத்து தாங்கும் அன்பு கதிருக்கும், ’சேம் ப்ளட்’ என ஊக்குவிக்கும் அன்பு நண்பர் சங்கருக்கும், ஏனைய வலையுலக நண்பர்களுக்கும், பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்திய அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றியினை காணிக்கையாக்கி, பணித்த கண்களுடன் விடைபெறுகிறேன். மற்றுமொரு தருணத்தில் சந்திப்போம், நன்றி, வணக்கம், வாழ்க்கை வாழ்வதற்கே...
மேலும் வாசிக்க...

Saturday, January 30, 2010

வலைச்சரத்தின் ஆறாம் நாள் : கதம்பம்..

நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை. 

-விட்மன்

வலைச்சரத்தில் இன்று ஆறாம் நாள், விடைபெறுவதற்கு முந்தைய நாள். அதேபோல் நேற்று கலகலவென காமெடி வலைப்பூக்களைப் பார்த்த நாம் இன்று இலக்கியம், தொழில்நுட்பம், சமையல் குறிப்புகள், நினைவோடைகள், நடப்பு நிகழ்வுகள் என கதம்பமாக பார்க்கலாமே?

அறிவியல் சார்ந்த பதிவுகளை எழுதுவதற்கு தனியான திறமை வேண்டும். சாதாரணமாய் ஒரு விஷயத்தை சொல்லிவிட முடியாது. அதனைப்பற்றி ஆழ்ந்த அறிவு, அதனை படிக்கும் சாதாரண நபருக்கும் புரியும்படியான விளக்கம் என நிறைய விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழ்நுட்பம் எனும் வலைப்பூவில் நமக்கு தேவையான தகவல்கள் யாவும் நிறைய கொட்டிக்கிடக்கிறது, உபயோகப்படுத்துவது எப்படி என்ற எளிய விளக்கங்களுடன். பயர்பாக்ஸ் கூகிள் குரோம் உபயோகித்தாலும் இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரை எப்படி அதனுள்ளே உபயோகிப்பது என்பதற்கு இந்த இடுகையை பாருங்களேன்...

ஜெய் எனும் பெயர் கொண்ட தம்பி தனது ஸ்ரீ.கிருஷ்ணா வலைத்தலத்தில் நிறைய தொழில்நுட்பத்தகவல்களை தந்த வண்ணம் இருக்கிறார். கிரிக்கெட்டிலும் அலாதி பிரியம் என்பதால் எந்த ஒரு மேட்சுக்கும் இணையத்தில் நேரடியாய் பார்க்கும் வலை முகவரியை கொடுத்துக் கொண்டிருப்பார். இவரின் இடுகையில் இவர் தந்திருந்த கணிணியை புதிதாக வாங்கிய போது இருந்த வேகத்தில் இயங்கவைப்பது எப்படி? யை படித்து அதனை உபயோகித்து அசந்து போனேன்.

இவர் குறிப்பிட்ட அந்த Free Registry Cleaner எவ்வளவு உபயோகமாய் இருக்கிறது தெரியுமா? இதன் மூலம் தேவையில்லாத ரெஜிஸ்ட்ரிகளை அழித்துவிடலாம்; கணனியின் நினைவகத்தை சுத்தப்படுத்திவிடலாம், Startup Manager, Uninstall Manager, Process Manager, Video Converter என எல்லாம் இதில். இதையெல்லாம் அவரது இடுகையில் குறிப்பிட்டிருந்தால் இன்னும் அருமையாய் இருந்திருக்கும். இறுதியாண்டு, நேரமின்மையால் விட்டிருக்கிறார்.

ஏற்கனவே சொன்னதுபோல் தமிழின் பால் ஆர்வந்தானே தவிர அவ்வளவாய் இலக்கணத் தமிழறிவு கிடையாது. இதனை நிவர்த்தி செய்ய நிறைய தமிழ்சார்ந்த விடயங்களை படித்து நிவர்த்தி செய்துகொள்வதோடு சரி. முனைவர் குணசீலன் அய்யாவில் ஆரம்பித்து இன்னும் பலரை தொடர்கிறேன். இவரைப்பற்றி வானம்பாடிகள் அய்யா ஏற்கனவே சொல்லிவிட்டதால் மற்றும் சிலரைப்பற்றி பார்ப்போம்.

முனைவர் அய்யா நா. இளங்கோ அவர்களின் காதலியின் பேச்சு போல் ஹைக்கூ எனும் இந்த இடுகையைப் பாருங்கள், என்ன அழகான ஒரு விளக்கம். படித்து எழுதினால் நம் எழுதும் ஹைக்கூ இன்னும் சிறப்புறும்.

முனைவர் கல்பனாசேக்கிழார் அவர்களின் இடுகையை பார்க்க நேர்கையில் கலித்தொகை - பதிப்புகள் எனும் இடுகை என்னை வெகுவாக கவர்ந்தது. கலித்தொகை எவ்வாறெல்லாம் பதிப்புகளை கண்டது என்பதை தெளிவாய் விளக்கியிருக்கிறார். படித்துப்பாருங்களேன்... (துளசி மேடம், வரலாற்றைப்பற்றி எழுதுபவர்களைப் பற்றி தேர்ந்தெடுத்து எழுத பணிச்சுமையால் இயலவில்லை, இதனை வரலாற்றோடு சம்மந்தப் படுத்திக்கொண்டு என்னை மன்னிக்க)

சமையல் குறிப்புக்களை கீதா ஆச்சல் அவர்கள் என் சமயல் அறையில் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார். முன்னதாக செய்யப்போகும் பதார்த்தத்தில் என்னென சத்துக்கள் இருக்கின்றன, அது நமது உடல் நலத்துக்கு எவ்வாறு உகந்தது என்றெல்லாம் எழுதி அருமையாக விளக்குவார். சமையலில் ஆர்வமுள்ள என்போன்றோருக்கு இவ் வலைப்பூ ஒரு அருமையான வழிகாட்டி. உதாரணத்திற்கு இவர் எழுதிய புடலங்காய் புட்டு பற்றிய ஒரு இடுகையைப் பாருங்களேன்....

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காய்கறியை பிடிக்கும், அதற்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். சொர்ணம் அவர்கள் தன் என் மன வானில் எனும் வலைப்பூவில் அப்பாவுக்கு பிடித்த பாகற்காயும்... நார்த்தங்காயும் !!! என ஒரு இடுகையை எழுதியிருக்கிறார். படித்துப்பாருங்கள், பாகலும் இனிக்கும்.

கிராமங்களில் இருப்பவர்கள் கண்டிப்பாய் சுமைதாங்கிகளையும் சில வருடங்களுக்கு முன் பெரும்பாலான வீடுகளில் இருந்த திண்ணைகளையும் மறக்க இயலுமா? மீன் துள்ளியான், இவரது சுமை தாங்கி கற்களும் திண்ணைகளும் எனும் இடுகையை படித்துப்பாருங்கள், தெரிந்த விஷயம்தான், அழகாய் பதித்திருக்கிறார். இவரின் எல்லா இடுகையிலும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது, படித்துப்பாருங்கள்.

விதூஷ் என்னும் வலைப்பூவில் வித்யா என்பவர் பெண்ணே நீயும் பெண்ணா என ஒரு தொடர் இடுகையினை நண்பர் பலா பட்டறை சங்கர் படிக்கச் சொல்ல, சென்று படித்து வியந்தேன்... பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அவற்றை எப்படி சமாளிப்பது என மிகத் தெளிவாய் சொல்லியிருக்கிறார். நிறைய விஷய ஞானம் உள்ளவர், அருமையாய் எழுதி வருகிறார், படித்துப் பாருங்களேன்....

அய்யா இட்ட பணியினை மன நிறைவுடன் உங்களின் ஆதரவோடு ஆறு நாட்களுக்கு முடித்திருக்கிறேன். இறுதி நாளான நாளை சந்திப்போமா?
மேலும் வாசிக்க...

Friday, January 29, 2010

வலைச்சரத்தின் ஐந்தாம் நாள் : நகைச்சுவை

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல

-வின்ஸ்ட்டன் சர்ச்சில்

வாரத்துல அஞ்சி நாள உங்க ஆதரவில ஓட்டியாச்சு. எழுதுற நடையில ஒரே மாதிரி பண்ணினா போரடிக்குமில்ல! இன்னிக்கு நடய மாத்தி கொஞ்சம் காமெடிய பத்தி பாப்போமா?

சிறுகதைன்னா அதுல ஒரு விஷயம் சொல்லப் போறோங்கறதுல தெளிவா இருப்போம், பெரும்பாலானவங்க ஏத்துக்கிற மாதிரி இருக்கும்.

ஆனா, காமெடி எழுதறது அவ்வளவு ஒன்னும் சாதாரண விஷயமில்லைங்கோ... ரொம்ப கஷ்டம். நாம சரியான காமெடின்னு நினைச்சிக்கிட்டு ரொம்ப ரசிச்சி உசிர கொடுத்து எழுதுவோம், ஆனா படிச்சிட்டு நல்லா இருக்கிற மொகத்த இன்னும் சோகமா வெச்சிகிட்டு ஆமா என்னா சொல்ல வர்றேம்பாங்க. அதுக்கெல்லாம் அசந்துடுவோமா நாம? முயற்சி பண்ணி நிறையா எழுதுவோம்ல...

சில பேருக்கிட்ட ஒரு காமெடின்னு சொன்னதுமே பயங்கரமா சிரிச்சி வெறுப்பேத்தி, ஆமா இப்ப சொல்லுன்னு நம்மளயே காமெடி பீஸ் ஆக்கிடுவாங்க.

நம்மள பொறுத்தவரைக்கும் காமெடிங்கறது மத்தவங்கள புண்படுத்தாம, படிக்கிறவங்க நராசமா உணராம, ரசிச்சி சிரிக்கிற மாதிரி இருக்கனும், அம்புடுத்தேன்.

அதுக்குன்னு இடுகை மொத்தமா எல்லாரும் சிரிக்கனும்னு மூச்சக் கட்டி எழுதத் தேவையில்ல. சொல்ல வர விஷயத்த நாசூக்கா காமெடி தூவி கொடுத்தோம்னா அதுவே பெரிய சக்சஸா ஆயிடும்.

அப்படி நாம கஷ்டப்பட்டு தேடிப்புடிச்சதில கிடைச்ச சில காமெடி பீஸ கீழ குடித்திருக்கேன், படிச்சிட்டு சிரிப்பு வரலன்னா, என்ன கன்னா பின்னன்னு திட்டிட்டு கடைசியா கொஞ்சம் சிரிச்சிடுங்க... சரியா?

 உக்காந்து யோசிப்போமில்லே... அட இடுகை எழுதறதுக்காக செய்யறதப் பத்தி இல்லங்க, ஒரு வலைப்பூவோட பேரே அதுதான். அங்கதான் நமக்கு இந்த சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.01 சிக்கினாரு. படிச்சிப்பாருங்க, சிரிப்புக்கு நான் உத்திரவாதம். சேட்டைக்காரன் நாலு பாகம் வரைக்கும் எழுதிட்டாரு. உங்களுக்கும் பிடிச்சிருக்கான்னு படிச்சிட்டு சொல்லுங்க.

பட்டாபட்டின்னு ஒருத்தரு ப.மு,கழகம்னு ஆரம்பிச்சி ரவுசு வுட்டுட்டிருக்காரு. அவரோட இடுகை கணிதம் பழகலாம் வாங்க படிச்சிட்டு எனக்கு கணக்கே மறந்துடிச்சின்னா பாருங்களேன். அவிங்க கட்சி ஆபீஸ் போட்டோ பாத்துட்டு ஒரே சிரிப்புத்தான் போங்க. கீழ ஒருத்தர் செய்யறத பாத்து இன்னும்...

உங்களுக்கு கவிதை எழுதனும்னு ஆசையா? கவலையே உடுங்க, டக்ளசாயிருந்து இப்ப ராஜுவா இருக்கிற தம்பி எழுதின 30 நாட்களில் கவிதை எழுதுவது எப்படி..?. படிச்சி பாருங்க, உடனே பேனாவ எடுத்து எதாச்சும் எழுத ஆரம்பிச்சிடுவீங்க.

பார்த்ததும் படித்ததும்-ல நம்ம சங்கரு அமி கொல்கொத்தா ஜாக்ச்சி னு கல்கத்தா போன கதைய எழுதிருப்பாரு பாருங்க, ரொம்ப ஆர்வமா படிச்சி.... வேணாம், நீங்களே படிச்சிப்பாருங்க...

டுபுக்குன்னு ஒரு வலைப்ப்பூவ பாக்குறப்போ வயலின்னு ஒரு இடுகை. வயலின் கத்துக்கறதப்பத்தி எப்புடி சொல்லியிருக்காப்ல.... படிச்சி டரியலாயிட்டேன், காமடிய லேசா தூவி கலக்கியிருக்காப்ல... நீங்களும் படிச்சி பாருங்க....

சாமின் வலையுலகம்....னு ஒரு ஒரு வலைப்பூ கண்ணுல மாட்ட சும்மா லுக்கு உட்டா உள்ள ஒரு சூப்பர் இடுகை சிக்குச்சி. குருவி படத்தில் Mr.Bean னு தலைவரு சும்மா கலக்கலா ஒரு யூ டியூப் விடியோவ போட்டிருந்தாரு. பாத்துட்டு டரியலாயிட்டேன். நீங்களும் பாருங்க, ஆபீஸ்ல வேணாம், சவுண்டோட வீட்ல பாருங்க.

அகசியம்ங்ற வலைப்பூவ நேத்துத்தான் பாத்தேன், அதுல எழுதற வரோதயன் கனகநாயகம் கற்பித்த ஆசிரியருக்கு கல்லால் எறி! ன்னு ஒரு இடுகை. சும்மா கூலா கலக்கியிருக்காரு. ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுங்க, செம கூலாகலாம் வாங்க...ன்னு கூப்பிடறாரு.

சிரிச்சது போதுங்களா? நாளைக்கு கொஞ்சம் சீரியஸா பார்க்கலாம். இப்போ நான் ஜூட்!
மேலும் வாசிக்க...

Thursday, January 28, 2010

வலைச்சரத்தின் நான்காம் நாள் : சிறுகதைகள்...

மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும்இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்.

(மு.வ.)

வலைச்சரத்தில் இன்று நான்காம் நாள். எழுதுவதில் மிகவும் சவாலானது சிறுகதை எழுவதுதான் என்பது எனது பணிவான எண்ணம். முதல் பத்தியிலேயே படிப்பவர்களை கவர வேண்டும். இறுதிவரை அவரை நம்மோடு வைத்திருந்து படித்து முடித்தவுடன் ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

தொடர்ந்து எழுதிவரும் எந்த ஒரு இடுகையாளரும் கண்டிப்பாய் ஒரு சிறுகதையாய் எழுதியிருப்பார். சிறுகதைகளில் நன்றாய் பரிமளிப்பவர்கள் தான் பின்னாளில் மிகச்சிறந்த எழுத்தாளராய் ஆக இயலும். அவ்வாறு சிறுகதைகளை எழுதும் பதிவர்களின் எனக்கு பிடித்தவைகள் இன்று.

முதலாவதாய் கு.ஜ.மு.க. என வலைப்பூவிலேயே ஒரு கட்சியை வைத்திருக்கும் இவரின் அழகான ஒரு சிறுகதையான முருங்கை மரமும் பசுமாடும் நொண்டியும் படித்துப்பாருங்கள். என்ன அழகாய் ஒரு முருங்கை மரத்தை பின்னணியாய் வைத்து எழுதியிருக்கிறார். குடுகுடுப்பை, இது போன்ற சிறுகதைகளை நிறைய தாருங்கள்.

தீராத பக்கங்கள் மூலம் எழுதிவரும் மாதவராஜின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவரின் “ம்மா.... ம்மா” எனும் இச் சிறுகதையினைப் படித்தோமென்றால் அப்படியே மனதை இறுக்கி இதுதான் உலகம் எனும் ஒரு வேதனையை வெளிப்படுத்தச் செய்யும். மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் இதுதானே உண்மை?

விசா பக்கங்களின் சிறுகதைகளை தொடர்ந்து ரசித்து வருகிறேன். நான் படித்து ரசித்த இந்த உதடுகள் சுடும் !!!! எனும் திருப்பங்களுடன் கூடிய ஒரு சிறுகதையினை படித்துப்பாருங்கள். கொஞ்சம் நீளமாய் இருந்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

குழந்தைகளின் தொந்தரவுகள் இனிமையான அவஸ்தைதான். ஆயிரம்தான் அவர்கள் நம்மை படுத்தினாலும் அவர்கள் இல்லாமல்.... நினைத்துப் பார்க்கவே மனம் கஷ்டப்படுகிறது. இது மாதிரியான ஒரு நிகழ்வை மிகச் சாதாரணமாய் எப்படி சொல்லியிருக்கிறார் இரவி சுகா தனது நான்...நானாக வலைப்பூவில், தொல்லை - ஒரு நிமிட சிறுகதை யில்.

ஒரு சிறுகதையினை படித்து முடிவில் பெரிய திருப்பம் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. இடையிலேயே நமக்கு முடிவு தெரிந்தாலும் சுகம் தான். கோமதி அரசு அவர்கள் தனது வலைப்பூவான திருமதி பக்கங்களில் எழுதிய இந்த திருப்பம் எனும் சிறுகதையினை படித்துப் பாருங்கள், குழப்பமில்லாமல் தெளிவாய் நடக்கும் ஒரு சாதாரண விஷயத்தை அழகாய் சொல்லியிருக்கிறார்.

ஒவ்வொரு பாத்திரமாய் உருவெடுத்து போர்ட்ரெய்ட் கதைகள் என தனது என்னுள்ளே எனும் வலைப்பூவில் எழுதும் ஷங்கியின் இடுகைகள் கொஞ்சம் புதுமையாகவும் வித்தியாசமாயும் இருக்கும். இவரின் சமீபத்திய ஒன்றான உத்தமன் - போர்ட்ரெய்ட் படித்துப் பாருங்களேன், ஏன் சொல்கிறேன் எனபுரியும்...

கிராமச்சாவடி மூலம் அழகாய் அப்பா சைக்கிள் எனும் இடுகையில் கா.பழனியப்பன் எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்! அருமையான நடை, இன்னும் நிறைய இவர் எழுத வேண்டும். கவனிக்கத்தக்க ஒருவர்.

சைவகொத்துப்பரோட்டா எனும் வலைப்பூவில் கலக்கி வரும் அன்பரின் இடுகையில் இந்த முதல் கொலை எனும் இந்த சிறுகதையை படிக்க நேர்ந்தது. கொலை செய்வதைப்பற்றித்தான், எப்படி எழுதியிருக்கிறார் என பாருங்கள். படித்து தொடரப்பட வேண்டியவர்.

"ஆரண்யநிவாஸ்" ஆர் ராமமூர்த்தி, இதுதான் வலைப்பூவின் பெயர். இதில் கருப்புநிறத்தில் ஒரு பலூன் எனும் ஒரு சிறுகதையை படிக்க நேர்ந்தது. மனிதநேயத்துடன் மிக அழகாய் இருந்தது. நீங்களும் படித்துப் பாருங்களேன்! கவனிக்கப்பட வேண்டிய ஒருவர்.

நான்கு நாட்கள் வெகு விரைவாய் கடந்து விட்டது. ஐந்தாம் நாளான நாளை இன்னுமொரு வித்தியாசமான வலைப்பூ அணிவகுப்பில் ஒரு வித்தியாசமான தொகுப்பில் சந்திப்போமா?
மேலும் வாசிக்க...

Wednesday, January 27, 2010

வலைச்சரத்தின் மூன்றாம் நாள் - கவிதைகள்.

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம். 

-மகாத்மா காந்தி

அனைவருக்கும் எனது வணக்கம். இரு நாட்களை கடந்து இன்று இந்த இனிமையான மூன்றாவது நாளிற்கு வந்திருக்கிறோம்.

எனக்கு தமிழின் மேல் தணியாத ஆர்வம், கவிதைகள் என்றால் ரொம்ப பிரியம் என சொன்னால் அது முழுதும் உண்மையல்ல. இலக்கணத்தில் அவ்வளவாய் புரிதல் இல்லை. நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா என இதைத்தாண்டி தெரியாது. இருப்பினும் நல்ல விசயங்களை தாங்கி வரும் எந்த ஒரு கவிதையையும் ரசிக்கத் தவறுவதில்லை...

வானம்பாடிகள் அய்யாவின் கவிதைகளின் வர்ணனைகளும்,  கதிரின் கவிதைகளின் வார்த்தை ஜாலங்களும், கலகலப்ரியாவின் கவிதைகளின் பொருள் பொதிந்த தாக்கங்களும், பா.ரா. வின் எதார்த்தம் நிறைந்த அழகிய வார்த்தைகளிலான எளிய கவிதைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்களெல்லாம் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதால் புதிதாய் சிலரை இதோ வரிசையாய் பார்க்கலாம். இவர்களில் சிலர் கவிதைகள் மட்டுமே எழுதி வருபவர்கள், சிலர் கவிதையும் அவ்வப்போது எழுதுபவர்கள்.

பனித்துளியாய் எனும் ஒரு வலைப்பூவில் மோகன் ராஜேந்திரனின் ஒரு காலையில் நீ இல்லை எனும் இக்கவிதையைப் பாருங்கள். அழகாயும் யதார்த்தமாயும் நன்றாக இருக்கிறது.


நேசமித்திரன் கவிதைகள் எனும் வலைப்பூவை சமீப காலமாக தொடர்ந்து வருகிறேன். கவிதைப்பிரியர்களுக்கு இது ஒரு அருமையான இடம். எல்லாம் புரிவதற்கு திரும்ப திரும்ப படித்து தெளிகிறேன் (நம் தமிழறிவு அவ்வளவே). அற்புதமான எழுத்து, அழகான கவிதைகள். உதாரணத்திற்கு நேசமித்திரனின் யாருமற்ற கருவறை, இவரது கவிதையின் சிறப்பை சொல்லும்...

நள்ளெண் யாமம் என்னும் வலைப்பூவில் க.சீ. சிவக்குமார் எழுதி வருகிறார். இவரின் குளிர் எனும் கவிதையை படித்துப்பாருங்கள், குளிர்தலாய் உணர்வீர்கள். தொடர்ந்து படிக்கப்படவேண்டியவர்.

பயணங்கள் எனும் வலைப்பூவின் வாயிலாய் எழுதிவரும் மா.குருபரனின் புன்னகை எனும் இக்கவிதையை படித்துப் பார்த்தீர்களென்றால், உங்களின் புன்னகைக்கும் முகம் கூட வாடிப்போகும் படித்த பாதிப்பில்.

தமிழ்க்கவிதைகள் எனும் வலைப்பூவில் எழுதி வரும் உத்தமபுத்ராவின் கவிதைகளை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறார்.  இவரின் ‘எச்சங்கள்’ எனும் இக் கவிதை ஒரு உதாரணத்திற்கு. படித்துத் தொடர ஒரு அருமையான வலைப்பூ... இன்னும் இவர் நிறைய எழுத மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

ராகவனின் வலைப்பூவில் கவிதைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இதோ அவரின் நம்பிக்கை... எனும் இக் கவிதையை படித்துப் பாருங்கள். எவ்வளவு எளிமையாய் அழகாய் இருக்கிறது!

தொடர்பவன் எனும் வலைப்பூவை எதேச்சையாய் பார்த்து நானும் ஆனேன் தொடர்பவனாய். நண்பர் கவிதைகள் நிறைய எழுதிக்கொண்டிருக்கிறார். இதோ அவரது தொடர்பவனாய் எனும் இக்கவிதையினை பாருங்களேன்.

வானம் வெளித்தபின்னும் எனும் வலைப்பூவில் எழுதிவரும் சகோதரி ஹேமா என்னமாய் கவிதை எழுதுகிறார் தெரியுமா? உதாரணத்திற்கு அவரின் சமீபத்திய இருகையான பெண்ணை படித்துப்பாருங்கள்...

முனியப்பன் பக்கங்களின் வாயிலாக டாக்டர் மிகவும் அருமையாய் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். இதோ அவரின் என்னை ஏன் மீண்டும் சந்தித்தாய் ? எனும் இந்த இடுகையை படியுங்கள், கவிதையின் வாயிலாய் நம்ம கலங்க வைத்திருப்பார்.

இவ்வளவு போதும் என நினைக்கிறேன். நாளை சந்திப்போமா?

மேலும் வாசிக்க...

Tuesday, January 26, 2010

வலைச்சரத்தின் இரண்டாம் நாள்... சம கால நிகழ்வுகள்...

வாழ்நாளில் ஒரு பிழையையும் செய்ததில்லை என ஒருவர் நினைத்தால், அவர் புதிய முயற்சிகள் எதுவும் செய்தில்லை என்று அர்த்தம்.

-ஐன்ஸ்டின்.

வணக்கம், வலைச்சரத்தில் இன்று இரண்டாம் நாள். நேற்று சுய அறிமுகத்திலேயே முடித்துக்கொண்டதால் இன்று மனம் கவர்ந்த இடுகையாளர்களை பார்த்துவிடலாம்.

சிலருடைய இடுகைகளை படித்தால் நமது உள்ளக்கிடக்கையை அப்படியே அவரில் காண இயலும். சமகால நிகழ்வுகளை அவர்கள் விவரிக்கும் விதத்தில், நமக்கு நிறைய படிப்பினைகளோடு, அப்படியே பின்பற்றுவதற்கும் ஏதுவாய் இருக்கும். அந்த வகையில் எழுதுபவர்களில் முதன்மையானவர் செந்தில்வேலன்... இன்றுவரை இவரது இடுகைகளில் ஒன்றை கூட தவற விட்டதில்லை, ஒவ்வொன்றும் ஒரு முத்தாய் இடுக்கும்.

அயல் நாடுகளின் வசிப்பவர்கள் தனது அப்பா அம்மாவினை பிறவிப் பெருங்கடன் செலுத்துவதாய் அழைத்துச் செல்வதையும், அவர்கள் அங்கு வந்து எப்படி உணர்கிறார்கள் என்பதையும், அழைத்துச் செல்வதற்கு முன் செய்யவேண்டியன என்ன என்பதையும் எவ்வளவு அழகாய் தனது இடுகையான அயல்நாடுகளில் அம்மா அப்பா... வில் எப்படி சொல்லியிருக்கிறார் என பாருங்கள்! 

அடுத்து நாகா. ஒரு ஊர்ல என ஆரம்பித்து நமது தாத்தா பாட்டியிடம் கதை  கேட்டு வளர்ந்து வந்திருக்கிறோம். இவரும் ஒரு ஊரில் எனும் வலைப்பூவில் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். மிகவும் அருமையாய் எழுதும் இவர், பணிச்சுமையினால் பகிர்வது கொள்வதை குறைத்திருக்கிறார்.

தனது ஒரு இடுகையான பா(வே)லைத் திணை யில் ஒரு நிகழ்வினை எப்படி சொல்லியிருக்கிறார் என்பதைப் படித்துப்பாருங்களேன். நண்பா, ஒரு வேண்டுகோள், வாரத்திற்கு இரண்டாவது எழுதுங்கள்.

பறவைகள் வானில் பறப்பதை பார்த்திருக்கிறோம், ஆனால் அவை V வடிவில் பறப்பதை பார்த்திருக்கிறீர்களா? அது ஏன் தெரியுமா? இதோ சிறிய பறவை எனும் வலைப்பூவின் மூலம் எழுதிவரும் ஜோதியின் பறவைகள் V வடிவத்தில் பறப்பது ஏன்? எனும் இடுகையை பாருங்கள், தெளிவாய் விளங்கும்...

வானவில் எனும் வலைப்பூவில் யோகேஸ்~பொன்வண்டு எனும் பெயரில் எழுதி வருபவர் உலக வெப்பமயமாதலைப்பற்றி அருமையாய் பசுமை இல்ல வாயுக்கள் - நம் பங்களிப்பு என்ன? என ஒரு இடுகையை தந்திருக்கிறார், படித்துப்பாருங்கள். எத்தனை தகவல்கள், என்ன அருமையான விளக்கங்கள்?

செ.சரவணக்குமார் பக்கங்கள் வலைப்பூவை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். அவரின் ‘ஏமாற்றமும் வேதனையும்’ எனும் இடுகையை படித்து அவரது பாதிப்பால் நானும் பாதிப்படைந்தேன். உடன் இருக்கும் சக மனிதர்களுல் இப்படியும் இருப்பார்களோ? எனும் ஒரு பெரும் ஐயத்தை ஏற்படுத்தியது. இது போன்ற ஏமாற்றங்களை பகிரும் போது நமது மனச்சுமை கொஞ்சமாவது குறையுமல்லவா?

மழைமேகம் என்னும் வலைப்பூவில் கலிகாலப் புகையும், கம்பராமாயணத்தில் புகையும்! என்னும் இடுகையில் புகை பற்றி மிக அழகாய் ஒரு சம்பவத்தோடு சொல்லியிருக்கிறார். படித்துப்பாருங்களேன், நடப்பு நிகழ்வோடு புராணத்தை தொடர்புபடுத்துதல் அழகுதானே?

காந்திய கிராமங்களில் அந்தமானிலிருந்து எழுதிவரும் க.நா.சாந்தி லெட்சுமணன்அவர்களின் வீட்டு மனைகளாகும் விளைநிலங்கள் என்னும் இந்த இடுகையைப் பாருங்கள், நமது எண்ணத்தை பிரதிபலிப்பதாய் இருக்கும். செட்டி நாட்டு பலகாரங்கள்செய்து பார்க்க சமையல் குறிப்புகளையும், கவிதைகளையும் எழுதி வருகிறார். படித்து பின்தொடர ஒரு அருமையான வலைப்பூ.

அன்பு நண்பர் சங்கவியை  ஏற்கனவே வலைச்சரத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அவரது வலைப்பூவான உங்களில் ஒருவனில் நேற்று இட்டிருக்கும் நோயின்றி வாழ நடைப்பயிற்சி இடுகையைப் படித்துப் பாருங்களேன், கண்டிப்பாய் நடக்க ஆரம்பித்துவிடுவீர்கள், அல்லது தோன்றும். மிக அருமையான எழுத்து, கவனிக்கப்பட வேண்டியவர்.

சொல்லத்துடிக்குது மனசு எனும் வலைப்பூவில் நேற்று வந்திருக்கும் இடுகையில்மொபைல் போன் பேச்சு - போது இடங்களில் தவிர்க்க வேண்டியவை என்பது பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என படித்துப் பாருங்களேன், பயனுள்ளதாய் இருக்கிறது. படித்துத் தொடர ஒரு நல்ல வலைப்பூ...

இவையெல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என எண்ணுகிறேன். உங்களின் கருத்துக்களால் என்னை செம்மைப்படுத்துங்கள்.


இன்றைக்கு இது போதும், நாளை இன்னும் பல புதியவர்களோடு சந்திப்போமா?

மேலும் வாசிக்க...

Monday, January 25, 2010

ஒரு விழிப்புணர்வு நிகழ்வு - மதுரைப் பதிவர்கள்

அன்பின் சக பதிவர்களே !

மதுரையில் உள்ள தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடி ஒரு விழிப்புணர்வு - பொது நல நிகழ்வு ஒன்றை நிகழ்த்த விரும்பினர். அதனைச் செயலாக்க ஒரு கருததரங்கத்தைக் கூட்டி உள்ளனர்.

வளரும் தலை முறையினரை நல்வழிப் படுத்த, பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் பயனுள்ள கூட்டத்தை நடத்த இருக்கின்றனர்.

இதில் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் கலந்து கொண்டு கருத்துகளை பரிமாற உள்ளார். குழந்தைகளுக்கு நல்ல தொடுகை - அல்லாத தொடுகை - எவை என்பதை உணர்த்தும் படியாக பாதுகாவலராகிய பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் இக்கருத்தரங்கம் பயனளிக்கும்.

எனவே விருப்பமுள்ளவர்களை கலந்து கொள்ள மதுரைப் பதிவர்கள் அழைக்கின்றோம். மற்றும் நிறுவனங்களிலிருந்தும் தங்களது ஆர்வலர்களை அனுப்பலாம். இவர்கள் அனைவரும் சமூக நலம் கருதி நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற 29.01.2010 க்கு முன்னதாக விருப்பத்தினைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்.

அனுமதி இலவசம் !

நாள் : 31.01.2010 ஞாயிறு
காலம் : மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை
இடம் : அமெரிக்கன் கல்லூரி ( செமினார் ஹால் )
கருத்தரங்க ஆய்வர் : மன நல மருத்துவர் ஷாலினி
M.B.B.S., Ph.D., F.R.P.S.
Consultant Psychiatrist
"MIND FOCUS"
Psychiatric Services and Research Foundation

தகவலுக்கும் முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ள :

தருமி : 9952116112
சீனா : 9840624293
கார்த்திகைப் பாண்டியன் : 9842171138
ஸ்ரீ : 9360688993

நல்வாழ்த்துகள்.
நட்புடன் சீனா.
மதுரை தமிழ்ப் பதிவர்கள் .



மேலும் வாசிக்க...

வலைச்சரத்தின் ஒரு பூவாய் நானும்...

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

-லியோ டால்ஸ்டாய்

அனைவருக்கும் என் பணிவான வணக்கம். வலைச்சரத்தில் இன்று முதல் ஒருவாரத்துக்கு நானும் ஒரு பூவாய் இணைந்திருக்கிறேன். முதலாய் நிகழும் எந்த ஒரு விஷயமும் நம் நெஞ்சைவிட்டு அகலாமல் பசுமையாய் இறுதிவரை இருந்தினிக்கும். முதல் பயணம், முதல் நட்பு, முதல் காதல், முதல் முத்தம், முதல் சினிமா, முதல் வேலை, முதல் ஆசிரியர்... என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த வகையில் இன்று என் ஆசான் வானம்பாடிகள் அய்யாவின் ஆசிகளை மானசீகமாய் பெற்றுக்கொண்டு, சீனா அய்யாவின் அன்புக்கட்டளைக்கு இணங்கி, இதோ இன்று 'முதல்' ஆசிரியராய் ஒரு வாரத்திற்கு என்னுடைய எண்ணங்களை பகிர்ந்துகொண்டு உங்களோடு எழுத்தாட இருக்கிறேன். உங்களின் அன்பான ஆதரவினையும், என்னை செம்மைப்படுத்தும் கருத்துக்களையும் எதிர்நோக்கி இதோ ஆரம்பிக்கிறேன்.

எனக்கு எழுதுவதை விட படிக்கத்தான் நிறைய பிடிக்கும், மிக எளிதான ஒன்று என்பதால். வாழ்விலேயே எளிதான விஷயங்களை சொல் என எவரேனும் என்னைக்கேட்டால் சட்டென இரண்டை சொல்லுவேன். முதலாவதாய் அறிவுறை சொல்லுவது அடுத்ததாய் விமர்சிப்பது. கடினமான விஷயங்கள் எனக்கேட்டால் அறிவுரை கேட்பது, விமர்சனங்களை தாங்கிக்கொள்வது. எனக்கு இந்த கடினமான இரண்டும் மிகப் பிடிக்கும் என்பதால் தயக்கமின்றி அறுவுறுத்துங்கள், விமர்சியுங்கள்.

எழுத வந்து எட்டு மாதங்களை முடித்திருக்கிறேன், உங்களின் மேலான அன்போடும் ஆதரவோடும். இந்த வலையுலகில் எனக்கு கிடைத்த உறவுகள்தான் இடுகையெழுத வந்ததில் கிடைத்திட்ட பொக்கிஷங்கள் என்பேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே வலைப்பூவில் நினைவுகளின் குறிப்பேடாய் எண்ணத்தை கிளர்ந்து எழுதியும், எண்ணத்தை எழுதுகிறேன் வலைப்பூவில் சம நிகழ்வுகளைப் பற்றியும் எழுதி வருகிறேன். சினிமா விமர்சனங்கள் மற்றும் மற்றவர்களை புண்படுத்தும் எதையும் எழுதுவதைத் தவிர்த்து வருகிறேன்.

எனது இடுகைகளில் பிடித்ததாய் சொல்லவேண்டுமென்றால் மூன்று இடுகைகளை சொல்லுவேன். முதலாவதாய் எனது முதல் ஆசிரியருக்கு குரு வணக்கமாய் 'நின்னு போச்சு ரயில் வண்டி' என் முதல் ஆசானை நினைவு கூறுவதாயும், எங்களுக்குள் இருந்த பரஸ்பர அன்பையும் சொல்லுவதாய் இருக்கும்.

அடுத்ததாய் என்னை சுதந்திரமாய் வளர்த்து இன்றும் எனது முதல் நண்பனாய் இருக்கும் எனது தந்தைக்காக எழுதிய அப்பாவுக்கு பிறந்த நாள் இடுகை, எனக்கும் அவருக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை சொல்வதாய் இருக்கும்.

மூன்றாவதாய் எனக்கு நிகழ்ந்த ஒரு பேயோடு சம்மந்தமான பேயைப்பார்த்த கதை எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவச்சிதறலாயும் இருக்கும், இதில் வரும் கோவிந்து உங்களை நிறைய கவர்வார்.

என்னைக் கவர்ந்தவர்களை வகைப்படுத்தி சொல்ல ஆசைப்படுகிறேன். முடிந்த வரையில் கடந்த மூன்று மாதங்களில் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியவர்களை தவிர்க்க முயல்கிறேன். நிறைய பிடித்த சிலரை குறிப்பிட இதனை மீறவும் வாய்ப்பிருக்கிறது, அதற்காக ஆரம்பத்திலேயே என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வரிசையில் எழுதுபவர்களை குறிப்பிட்டு எழுத எண்ணம்...
  • சமுதாய சிந்தனையோடு எழுதுபவர்கள்
  • நகைச்சுவையாய் எழுதுபவர்கள்
  • கவிதையால் நம்மை களிப்புறச்செய்பவர்கள்
  • சிறுகதைகள் பற்றிய ஒரு தொகுப்பு
  • தகவல் தொழில்நுட்பம், இலக்கியம், சமையல் குறிப்புகள்

மேலும் இந்த எழுதும் வாரத்தில் இதையெல்லாம் செயல்படுத்தவும் எண்ணம்.
  • ஒவ்வொரு நாளும் ஒரு தகவல்.
  • நாளுக்கு குறைந்தது ஐவராய், ஒரு முப்பது பேரை அறிமுகப்படுத்துதல்.
  • ஒவ்வொருவரை அறிமுகப்படுத்தி அவரைப்பற்றி சொல்லி அதே சமயம் அவர்களிடம் எனது எதிர்ப்பார்ப்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் சொல்லல்...
வலைச்சரத்தின் பூவாகி
வாசம் வீசும் ஏழுநாட்கள்
வாழ்நாளின் வசந்தமான
ஒளிநிறை இன்பப்பூக்கள்.

அறிமுகம் போதும், நாளை சந்திப்போமா?

மேலும் வாசிக்க...

Sunday, January 24, 2010

நன்றி டிவீஆர் - வாங்க வாங்க பிரபாகர்

அன்பின் சக பதிவர்களே

ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்று, ஏற்ற பணியினை சிறப்புடன் செய்து மன நிறைவுடன் விடை பெறுகிறார் அருமை நண்பர் டி.வி. இராதாகிருஷ்ணன். இவர் ஏழு இடுகைகள் இட்டு நூற்றி இருபது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். இவரது வாரத்தில் ஏறத்தாழ எழுபதற்கும் மேற்பட்ட பதிவர்களை அறிமுகப்படுத்தி உள்ளார். புதியவர்கள், இளம் பதிவர்கள், பெண் பதிவர்கள், சமையல் குறிப்பு வழங்குபவர்கள், மறுமொழி இடுபவர்கள் என பல வகைப் பதிவர்களையும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

நண்பர் இராதாகிருஷ்ணனை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் வலைச்சரம் சார்பினில் பெருமை அடைகிறேன்.

25ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு பொறுப்பேற்க வருகிறார் நண்பர் பிரபாகர். சேலத்தினைச் சார்ந்தவர். திரை கடலோடி, சிங்கையில் ஒரு வங்கியில் திரவியம் தேடிக் கொண்டிருக்கிறார். வாழ்க்கை வாழ்வதற்கே என்றொரு வலைப்பதிவினிலும் எண்ணத்தை எழுதுகிறேன் என்றொரு வலைப்பதிவினிலும் எழுதி வருகிறார்.மறுமொழிகள் இடுவதில், இடுகையை முழ்வதுமாக வாசித்து, வஞ்சனை இல்லாமல் விரிவாக இடுபவர்களில் இவரும் ஒருவர். ( நானும் நானும் ஒருத்தன்). டெம்ப்ளேட் மறுமொழிகளை இவர் பயன படுத்தவே மாட்டார்.

கவிதை எழுதுவதிலும் கில்லாடி - இன்ஸ்டண்ட் கவிஞர் எனக் கூடச் சொல்லலாம். நகைச்சுவையும் - பழமொழிகளின் பொருளும் இவரது இடுகைகளீல் ஆங்காங்கே காணப்படும்.

நண்பர் பிரபாகரை வருக வருக - பணியினைச் சிறப்புறச் செய்க என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

வலைச்சரம் - ஏழாம் நாள் பணி-பின்னூட்டமிடுபவர் சேவை

ஆசிரியப் பணியின் கடைசி நாள்.நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்த/அறிமுகமான பதிவர்களைப் பற்றி எல்லாம் சொல்ல ஆசை.ஆனால் கொடுக்கப்பட்ட நாட்களோ எழு..சுய தம்பட்டம் நீங்கலாக ஆறு
நாட்களில்...எவ்வளவு பதிவர்களைப் பற்றி சொல்ல முடியும்.ஒரு பாடலின் வரிகள் தான் ஞாபகம் வந்தது.'கங்கை நீரும் சொம்புக்குள்ளே அடங்கிவிடாது"

இனி வரும் ஆசிரியப் பணி மேற்கொள்வோர் அவர்களை அறிமுகப் படுத்துவர்..இல்லையேல் மறு சுழற்சியில் சீனா சார் என்னை மீண்டும் அழைக்க மாட்டாரா..என்ன..

இன்று

மனித மனம் பாராட்டை எதிர்ப்பார்க்கும் ஒன்று.அதேபோல நம் எழுத்துக்களை ஒருவர் பாராட்டுவாரானால்..அதுவே அவர் மேலும் மேலும் எழுத வைக்கும் டானிக்காக ஆகும்.(சில சமயங்களில் இவர் எழுதுவதை விட்டுவிட மாட்டாரா..என்ற எண்ணத்தில் பாராட்டுவாரும் உண்டு..அது எழுதுபவர்களுக்கு புரிவதில்லை)

நாம் இடும் இடுகைகளை படித்து..(படிக்காமல்) பின்னூட்டம் இடும்போது..சில சமயங்களில் பதிவைவிட பின்னூட்டங்கள் நன்றாய் அமைந்துவிடும்.பின்னூட்டங்கள் இட்டு பதிவர்களை ஊக்குவிக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி.

சில மாதங்களுக்கு முன் வரை..பின்னூட்டம் இடுவதில் குறிப்பிடத் தக்கவர்களாக இருந்தவர்கள் மங்களூர் சிவா,ராப் ஆகியோர்.இவர்கள் பதிவுகளும்..குறிப்பாக ராப் பின் பதிவுகளைப் பார்த்து நான் வியந்தது உண்டு.இவர்கள் அனைத்துப் பதிவுகளையும் எப்படி படிக்கிறார்கள் என்று எண்ணியது உண்டு.அடுத்து..சொல்லப்பட வேண்டியவர் கோவி..புதிய பதிவர் என்றால்..தொடர்ந்து அவருக்கு பின்னூட்டம் போடுவார்..பதிவருக்கு தன் எழுத்தின் மீது நம்பிக்கை வரும் வரையில். அடுத்து மணிகண்டன்..திறமை மிக்கவர்.வலைப்பதிவும் எழுதுவது உண்டு.மனதில் தோன்றுவதை..பதிவர் யாராயிருந்தாலும் பளீச் என பின்னூட்டம் இடுபவர் .

பிரபாகர்.ஸ்டார்ஜன்,அக்பர்,பீர்,நவாஸுதீன்,சின்ன அம்மிணி,ராகவன் நைஜிரியா,பாலாசி அத்திரி,நட்புடன் ஜமால்,நசரேயன்,அண்ணாமலையான்,சங்கர்,நாஞ்சில் பிரதாப்,பின்னோக்கி,பிரிய முடன் வசந்த்,சின்ன அம்மிணி,பலா பட்டறை ஆகியோர் இடுகைகள் இடுவதுடன்..பல பதிவர்கள் வலைப்பூவிற்கு சென்று பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.(சில பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம்..அது என் தவறே!அதற்காக எனக்கு பின்னூட்டம் இடுவதை நிறுத்தி விடாதீர்கள்)

இவர் பெயரைச் சொல்ல வில்லை யெனில் பதிவு முற்றுப் பெறாது.வானம்பாடிகள்..இவரால் எப்படி அனைத்து பதிவுகளுக்கும் பின்னூட்டம் இட முடிகிறது..இயற்கை இவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தானே கொடுத்திருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை..கூடியவரை பின்னூட்டம்..குறைந்தது டெம்ப்ளேட் பின்னூட்டமாவது இட்டு வருகிறேன்.யார் எனக்கு பின்னூட்டம் இட்டாலும் ..அதற்காக அவர்கள் மெனக்கட்டதற்காக தனியாகவே ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்கிறேன்.இதைப் பற்றிக் கூட ..தன்னை ஒரு பிரபல பதிவர் என எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவர்..கிண்டலடித்ததுண்டு.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து அதிக கோஷ்டிகள் உள்ள இடம் இணையதளம்..இதைச் சார்ந்தவர்கள் தங்கள் மக்களுக்கு மட்டுமே பின்னூட்டமிடுவர்.மற்றவர்களுக்கு பின்னூட்டம் இட்டால்..அது தங்கள் பிரபலத்தைக் குறைத்துவிடும் என எண்ணுகிறார்களோ என்னவோ..

கடைசியாக..எனக்கு வலைச்சரத்தில் எழுத சந்தர்ப்பம் அளித்த சீனா சாருக்கு என் நன்றி.

நன்றி..வணக்கம்
மேலும் வாசிக்க...

Saturday, January 23, 2010

வலைச்சரம்-ஆறாவது நாள்..ஒரு பிடி பிடிக்கலாம்

வாரம் முழுதும் அலுவலகத்தில் வெந்ததையும்..வேகாததையும் சாப்பிட்டு ஓடி வேலை செஞ்சுட்டீங்க.வீக் எண்ட் விடுமுறை.நீங்க தங்கமணியா இருந்தா ரங்கமணியையும்..ரங்கமணியாய் இருந்தா தங்கமணியையும் உதவிக்கு வைத்துக் கொண்டு..இந்த பதிவுகளுக்கு சென்று பார்த்து வித விதமா சமைச்சு ஹாலிடேஸ்ஸை எஞ்சாய் பண்ணுங்க.

காஞ்சனா ராதாகிருஷ்ணனின் அன்னை மிராஸ் கிச்சன் போனா..பிரண்டை குழம்பு செய்யலாம்.ஹெவியா சாப்பிட்டுட்டா..மாறுதலுக்கு ஒன்று இது.

மேனகாசத்யா வின் sashikaa விற்கு சென்றால்..மிளகு ரசம்..உடல் வலி தீர

என் இனிய இல்லம் faizakader பதிவு..நீங்க அசைவ பிரியராய் இருந்தால் ஆட்டுக்கால் குழம்பு..ஆரோக்ய டிப்ஸ் எல்லாம் கூட உண்டு

susri susri யின் சுவையோ சுவையில் கத்தரிக்காய் சாதம் சாப்பிடலாம்

அருணா மணிகண்டனின் veggie paradise ல் coriander சப்பாத்தி ஒரு வெட்டு வெட்டலாம்

ஜலீலானின் சமையல் அட்டகாசங்களில் பாகிஸ்தானியர்களின் பரோட்டா..கீமா ஒரு கை பார்த்திடலாம்.

ammu madhu வின் அம்முவின் சமையலுக்குச் சென்றால்..இத்தாலியன் உணவுகள் ருசிக்கலாம்

கீதா அச்சலின் என் சமையலறையில் பிரௌன் ரைஸில் பிஸி பேளா சாப்பிட ஆசை என்றால் செல்லலாம்.

vijisvegikitchenல் மைக்ரோ வேவ் முறையில் சில உணவு வகைகளை சாப்பிடலாம்.

எல்லாவற்றிற்கும் சென்று அனுபவித்து விட்டு..தூங்காமல்..நாளை என் கடைநாள் பணி இடுகையை பார்க்க வந்துடுங்க.
மேலும் வாசிக்க...

Friday, January 22, 2010

வலைச்சரம் - ஐந்தாம் நாள்

கவிதை எழுதுவதற்கு ஒரு தனித் திறமை வேண்டும்.நம் இணையத்தில் பலர் அதில் சிறந்து விளங்குகிறார்கள்.குறிப்பாக பா.ரா., அனுஜன்யா, ஜ்யோவ்ராம், கலகலபிரியா, உயிரோடை லாவண்யா..போன்றோர் உண்மையான கவிதை எழுதும் பதிவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

மண்டபத்தில் யாரும் எழுதித் தராவிடினும்..என்னைப் போன்றோர் இணையத்தில் கவிதை என்று லேபிள் போட்டு எழுதி ..இல்லை..இல்லை..கிறுக்கி வருகிறோம்.சமயத்தில்..எங்களாலும் சில நல்லக் கவிதைகள் எழுதிவிட முடிவதுண்டு.

இணையத்தில்..நான் படித்த சில கவிதைகளும்..அதை எழுதியவர்களும்..இன்றைய இடுகையில்.

ஈரோடு கதிர்..நம்பிக்கை நுனி கவிதை மட்டுமல்ல இவர் இடுகைகள் அனைத்தும் படிக்கப் படவேண்டியவை..ஆகவே தான் இந்த பதிவில் அவரையும் சேர்த்துள்ளேன்.

ஹேமா எழுதிய வானம் வெளுத்த பின்னும்..வலைப்பூவில் பெண் பற்றிய கவிதையும்..கூட்டாஞ்சோறு கவிதையும் தவறாமல் படிக்க வேண்டிய கவிதைகள்.வாழ்த்துகள் ஹேமா

தேனம்மை லட்சுமணனின் ..சும்மா வலைப்பூவில் இன்னா(வோ) நாற்பது அருமையான கவிதை

மயாதியின் கொஞ்சு(ச)ம் க(வி)தைகள் வலைப்பூவில் எழுதியுள்ள sms கவிதைகள் படியுங்கள்..கவிதைகள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன.

நேசமித்திரன் கவிதைகள் இது இவர் வலைப்பூவின் பெயர்.காலுறைகள் திருடுபவன் படியுங்கள்..புரிதல் சிறிது கஷ்டம்..புரிந்து விட்டாலோ அடடா....

D.R.அசோக் நான் இங்கே அவள் எங்கே கவிதை இவரையும் தொடர்ந்து படியுங்கள்.

புலவன் புலிகேசியின் வழிப்போக்கன் தரும் அருமையான கவிதை பொங்குமா பொங்கல் நான் தட்டச்சு செய்கையில் என் நினைவிற்கு வந்த கவிதைகள் இவை..

தவிர..நிலா ரசிகன்,வசந்தகுமார்,ரவிஷங்கர்,நர்சிம்,அகநாழிகை,தியாவின் பேனா ,தண்டோரா ஆகியோர் கவிதைகளையும் நான் ரசித்ததுண்டு.
மேலும் வாசிக்க...

Wednesday, January 20, 2010

வலைச்சரம் நான்காம் நாள்..மேலும் சில பதிவர்கள்

தமிழ்மணத்தில் ஒரு நாளைக்கு முன்பெல்லாம் 260-270 இடுகைகளே பதிவர்களால் இடப் பட்டு வந்தன.இப்போழுதெல்லாம் 350 இடுகைகள் சராசரியாக வருகின்றன.பதிவர்கள் அதிகம் ஆகிவிட்டனர்.இன்று நான் சொல்லப் போகும் பதிவர்களில் சில பதிவர்கள் பெரும்பான்மையினர் அறிந்திருக்கக் கூடும்.சிலர் புது பதிவர்களாக உள்ளனர்.ஆகவே இந்த இடுகை..புதிய பதிவரா..பழைய பதிவரா என்றெல்லாம் பாராது திறமையுள்ள பதிவர்கள் என்று கொள்ளவும்.

நான் சொல்லப் போகும் முதல் பதிவர் வெ.இராதாகிருஷ்ணன்..இவர் இடுகைகளை பலர் படித்துவரக் கூடும்.அருமையான பதிவர்.ஆழமான எழுத்து.அப்படி இதுவரை இவரது பக்கம் செல்லாதவர்கள் தவறாது இவரது எல்லாம் இருக்கும் வரை வலைப்பூவிற்குச் சென்று அறிவுரையை படியுங்கள்

நலங்கிள்ளி ..என்னும் பதிவர்..பதிவுலகம் வந்து நான்கு மாதங்களே ஆகின்றன.மூங்கில் இவர் வலைப்பூவின் பெயர்.இவரது பொங்கல் வாழ்த்து அட்டைகள் நான் படித்த இடுகை.ஊக்கப்படுத்த வேண்டிய பதிவர்.நலங்கிள்ளி நிறைய எழுதுங்கள்.

சரண்..இளையபாரதம் 2010..திருவாரூர் காட்சிகள்..கண்முன் நிறுத்தப் படுகிறது...ஒரு ரேஸ் பாதை சுரங்கப் பாதை ஆனதே..என்ற இடுகையில்மந்திரன்..இவர் இதுவரை 60 இடுகைகளை தன் வலைப்பூவான மந்திர ஆசைகளில் எழுதியுள்ளார்.தேசத்துரோகிகள் ..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

நான் ஆதவனின் குப்பைத்தொட்டியில் மாணிக்கங்கள் காணப்படுகின்றன.கலக்கல் பதிவான கை எட்டும் தூரத்தில் ஆஸ்கார்..இவர் திறமைக்குச் சான்று .

அவனி அரவிந்தன்..உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை வரிப்புலித் தைலம்..படிப்பப்பட வேண்டிய ஒன்று.

coolzkarthi வலைப்பூவின் பெயரும் இதுவே..தொடர்ந்து எழுதி வந்தவர் சில மாதங்களாக எழுதுவதில்லை.காரணம் தெரியவில்லை.அப்படி என்னதான் வேலைப் பார்ப்பீங்க..ஒரு சாம்பிள் இவர் திறமைக்கு

பாக்த்தாத்திலிருந்து பூங்குன்றன்..கவனிக்கப் பட வேண்டிய பதிவர்

மேலும் ஜெரி ஈசானந்தா, S.A.நவாஸுதீன்,கார்த்திகா வாசுதேவன்,சங்கவி,கபிலன் இவர்களையும் படியுங்கள்
மேலும் வாசிக்க...

வலைச்சரம் மூன்றாம் நாள் - இளம் பதிவர்கள் சிலர்

இன்று சில இளம் பதிவர்களை அறிமுகப் படுத்துகிறேன்.அதற்கு முன் ஒரு சிறு தகவல்..நமக்கு எதுவெடுத்தாலும் நேரம் போதவில்லை என்கிறோம்..ஆனால்..தங்கள் வேலைநேரம் என்று இல்லாமல்..எல்லா நேரமும் வேலைநேரமாகக் கொண்டுள்ள மருத்துவர் தொழிலில் உள்ள புருனோ,சுரேஷ்(பழனியிலிருந்து),தேவன்மாயம்,எம்.கே.முருகானந்தன் ஆகியோர் வலைப்பூவிலும் நல்ல தகவல்களை நமக்கு அளித்து வருகின்றனர்.அவர்களுக்கு என் பாராட்டுகள்


கோழிபையன்...

இவரது திரைவிமரிசனங்கள்..யோகா பத்மாசனம் இடுகைகள் எல்லாமே நன்றாக உள்ளது.நீங்களும் போய்ப் பாருங்கள்.

வெற்றி

இவர் வலைப்பூ பெயர் நெஞ்சினிலே..சரளமான நடை.அந்த மூன்று வார்த்தை இடுகையை சிரிக்காமல் படித்து முடிக்க முடியாது

angel

இந்த பதினான்கு வயது ஏஞ்சலின் வலைப்பூ எனது எண்ணங்களின் உருவம் கோபம்பற்றிய பதிவு அருமை..இந்த தேவதை மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்

மேற்சொன்ன மூவரும் இளைய பதிவர்கள்..நம் ஊக்கம் கண்டிப்பாக அவர்களுக்குத் தேவை

கணேஷ்

கணேசின் பக்கங்கள்..இதில் இவரது சியாமளா 18 படியுங்கள்..இவரது எழுத்தாற்றலுக்கு இது சான்று

சே.குமார்

இவர் நான்கு வலைப்பூவில் எழுதுகிறார்.கவிதைக்கு ஒன்று,ஹைக்கூ விற்கு ஒன்று,சிறுகதைகளுக்கு ஒன்று,நினைத்ததை எழுத ஒன்று..ஏதேனும் ஒன்றுக்கு சென்றால் மற்றைவைக்கு நீங்களாகவே செல்வீர்கள்.

மீண்டும் நாளை சந்திப்போம்
மேலும் வாசிக்க...

Tuesday, January 19, 2010

வலைச்சரம் இரண்டாம் நாள் - பெண் பதிவர்கள்

பெண்களின் வாழ்க்கை முன்பெல்லாம் ஒரு வட்டத்துக்குள்ளேயே இருந்தது.ஆனால் இன்றோ பெண்கள் ஈடுபடாத துறையே இல்லை எனலாம்.அவர்கள் அறிவுத்திறன் அதிகமுள்ளவர்கள்.(உடனே எதிர்மறை பின்னூட்டம் வேண்டாம்...இது உண்மை.) இதை பல ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

பெண் பதிவர்கள் சந்தனமுல்லை,விதூஷ்,தீபா,வித்யா,அமிர்தவர்ஷிணி அம்மா,இயற்கை,அன்புடன் அருணா,தாரிணிப்பிரியா,கோமா,புதுகைத் தென்றல்..இப்படி நிறைய சொல்லலாம்..(சில பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம்..இப்பதிவிடும்போது என் கவனத்தில் வந்தவர்கள் இவர்கள்.அவ்வளவே)இவர்கள் பதிவெல்லாம் படிக்கையில் மனதில் உற்சாகம் பிறக்கிறது.பெண்கள் நிறைய எழுத வேண்டும்.ஒரு நாளைக்கு தமிழ்மணத்தில் கிட்டத்தட்ட 300 இடுகைகள் வருகின்றன.அதில் பத்து விழுக்காடு..அதாவது 30 இடுகைகள் கூட பெண்களுடையது அல்ல.

பெண்கள் எழுத நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் கடினமான காரியம்.காலையில் எழுந்து...வீட்டு வேலைகளை முடித்துவிட்டு..குழந்தைகளுக்கு வேண்டுவனவற்றையும் கவனித்து..கணவரையும் அலுவலகத்திற்கு கிளப்பி..தானும் அவசர அவசரமாக வேலைக்குத் தயாராகி..பஸ்ஸையோ..தன் டூ வீலரையோ நம்பி..நகர டிராஃபிக்கில் தவழ்ந்து அலுவலகப் பணி முடித்து..மாலை வீடு திரும்பி..திரும்பவும்......

இதற்கிடையே..எழுதுவதற்கும் நேரம் ஒதுக்குவது என்றால்....சற்று இயலாத காரியம்தான்.ஆனலும் முயன்றால் முடியாதது இல்லை இன நிரூபித்து வரும் அனைவருக்கும் என் பாராட்டுகள்.நான் மேலே குறிப்பிட்டுள்ளவர்களைத் தவிர..இவர்களும் கவனிக்கப் படவேண்டியவர்கள்..இவர்கள் பதிவுகளையும் படியுங்கள்.பின்னூட்டத்தை வாரி வழங்குங்கள்.
கண்ணகி

ஒன்றே குலம் ஒருவனே தேவன்..என்ற வலைப்பூ.இவர் திறமை அறிய இங்கு செல்லுங்கள்

சித்ரா

கொஞ்சம் வெட்டிப் பேச்சு இவர் தன் வலைப்பூவிற்கு வைத்துள்ள பெயர்..ஆனால் வெட்டி எழுத்தல்ல..அதற்கு சான்று 'வெற்றியின் ரகசியம்'

கயல்விழி சண்முகம்

கயல்விழி (சண்முகம்)யின் கூர்வாள் அழகு..அதைப் பதம் பார்க்க சென்றிடுவீர்.அப்பத்தா அழகோ அழகு

அமுதா

என் வானம் என் எண்ணங்கள்..திறமை மிக்கவர் என்பதற்கு இவரது டிசிப்ளினே சாட்சி.அமுதா நிறைய எழுதுங்கள்

அம்பிகா

இவரைப் பற்றி சொல்வதுடன் இவரின் அழகம்மா இடுகையை வாசியுங்கள்

விக்னேஷ்வரி

2008 மார்ச் முதல் இதுவரை 58 இடுகைகளே இட்டுள்ளார்.அனைத்தும் முத்து.திறமையை வைத்துக் கொண்டு ஏன் இவ்வளவு சுணக்கம்.அதிகம் எழுதுங்கள்.

ஜெஸ்வந்தி

மௌனராகங்கள் வலைப்பூ பெயர் மட்டுமல்ல மௌனமாக எழுதியும் வருகிறார்.முன் பதிவருக்குச் சொன்னது இவருக்கும் பொருந்தும்.ஜெய்ப்பூர் முழங்கால் மூட்டு படியுங்கள்

நாளை சந்திப்போம்
மேலும் வாசிக்க...

Monday, January 18, 2010

முதல் நாள் ஆசிரியப் பணி

சில நேரங்களில்..நாம் வேலை செய்யும் அலுவலகத்தில்..நமக்குப் பின் வந்தவர்கள் பதவி உயர்வு பெறுகையில்..நம்மை நிர்வாகம் கன்ஸிடர் பண்ணவில்லையே என்ற மெலிய வருத்தம் ஏற்படுவதுண்டு.ஆனால் அதற்காக சில நாட்கள்?மாதங்கள் கழித்து நமக்கும் அப்பதவி கிடைக்கையில்..Better late than never என மனதுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு..அப்பதவியை ஏற்றதும் உண்டு.

கிட்டத்தட்ட அதே நிலை எனக்கு..ஆனால் சீனா சார் சொன்னதும்..உடனே சரி என்றும் சொல்லிவிட்டேன்..

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என பொய் சொல்வானேன்.

நான் பதிவுலகம் வந்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஒடிவிட்டன. தமிழா..தமிழா..என்பது என் வலைப்பூ பெயர்.நான் எழுதிய பதிவுகளில் எது எனக்குப் பிடித்த பதிவு?

நம் குழந்தைகளில் ஏதேனும் ஒன்று சோனியாய் இருந்தாலும்..(சோனியா தானே இன்று பாரதத்தை ஆட்டிப்படைக்கிறார்)அது நம் மனதிற்குத் தெரிந்தாலும்..அதை விட்டுக் கொடுக்க முடியுமா வெளியில்..அதுபோல நான் எழுதிய பதிவுகள் எல்லாம் எனக்குப் பிடிக்கும்.

தவிர மகாபாரதத்தை மிகவும் எளிய நடையில் மகாபாரதம் என்றே ஒரு வலைப்பக்கத்தில் எழுதுகிறேன். வள்ளுவனையும் விட்டு வைக்கவில்லை

சில முக்கியச் செய்திகளை தொகுத்து அவ்வப்போது கறக கசடற வில் அளித்து வருகிறேன்.

என்னை ஊக்குவிக்கும் அனைத்து பதிவர்களுக்கும்...பின்னூட்டம் இடுபவர்களுக்கும் என் நன்றி.

சரி..சரி..போதும் சுயதம்பட்டம் என நீங்கள் சொவது காதில் விழுகிறது..

ஆனால்..எந்த திறமைசாலியும்..தம்பட்டம் அடிக்காவிட்டால் சங்கமத்தில் காணாமல் போக வாய்ப்புண்டு.அதுதான்,,,ஹி..ஹி..

நாளை சந்திப்போம்
மேலும் வாசிக்க...

Sunday, January 17, 2010

நன்றி அரவிந்த் - வருக வருக ராதாகிருஷ்ணன்

அன்பின் சக பதிவர்களே

அருமை நண்பர் அரவிந்த் எடுத்த செயலை - ஏற்ற பணியினை பொறுப்பாகச் செயல்படுத்தி வாரம் முழுவதும் இடுகைகள் இட்டு பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி நம்மிடமிருந்து மனம் மகிழ விடை பெறுகிறார். அவரை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வலைச்சரம் குழுவின் சார்பாக
வழி அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்து, நாளை 18.01.2010ல் துவங்கும் வாரத்திற்கு இனிய நண்பர் டி.வி.ராதாகிருஷ்ணன் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர்
தமிழா தமிழா என்ற பதிவினில் எழுதி வருகிறார். 19.02.2008 முதல் இன்று வரை 876 இடுகைகள் இட்டிருக்கிறார்.

இவர்
:

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை செய்து விருப்ப ஓய்வு பெற்றவர். 30 ஆண்டுகளாக சௌம்யா தியேட்டர்ஸ் என்ற பெயரில் நாடகக் குழு நடத்தி வருகிறார். இதுவரை 15 நாடகங்கள் மேடையேற்றி..1000 முறைகளுக்கு மேல் நடந்துள்ளன. சொல்லக் கொதிக்குது நெஞ்சம் என்ற நாடகம் நாடக விழாவில் பரிசு பெற்றது. இதை டெலி ஃபிலிம் ஆகவோ.. திரைப்படமாகவோ எடுக்க சில தயாரிப்பாளர்களை அணுகி வருகிறார். பாரத ரத்னா என்ற நாடகம் ..பரிசு பெற்றதுடன்..இலக்கியச்சிந்தனை அமைப்பினரால் 2005 க்கான சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு விருது பெற்றது. இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் கலைமகள்,புதிய பார்வை ஆகிய பத்திரிகைகளில் வந்துள்ளன.

நண்பர் டிவிஆரை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக தருக என வரவேற்று நல்வாழ்த்துகளுடன் , ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் கடைசி நாள்

வலைச்சரத்தில் ஒரு வாரமாக எழுதி வந்தது மிக நல்ல அனுபவமாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி. இந்த வேளையில், இந்த வாரம் ஊக்கம் குடுத்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். வலைசரத்தில் எழுத வாய்ப்பளித்த திரு.சீனா அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள், இப்படி அனுபவம் திரும்ப கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு விடைபெற்றுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.
மேலும் வாசிக்க...

Friday, January 15, 2010

ஐந்தாவது நாள் - சூப்பர்ஹிட் வெள்ளி

அக்கிலீஸ் - பெங்களூரில் வேலை.என் எண்ணங்களின் அலைவரிசை என்று வலைப்பூவில் எழுதி வருகிறார்.தற்சமயம் இரண்டு மாதங்களாக எதுவும் எழுதவில்லை.காரணம் தெரியவில்லை.ஊக்கமாக இருந்தால் நாம் கொடிப்போம்.தற்குறிப்பேற்ற அணி,வஞ்சப்புகழ்ச்சி அணி என்று எழுதி கலக்கினார்.திரும்பவும் வந்து கலக்குவார் என்பதில் சந்தேகம் இல்லை.எதிர்கவிதைகள் கூட எழுதுவார்.

வஞ்சப்புகழ்ச்சி அணி

எதிர்கவிதை

கிருத்திகன் குமாரசாமி - மெய் சொல்லப் போறேன் என்று பதிவின் தலைப்பில் கூட பொய் பேச தெரியாதவர்.சென்ற வார உலகம் போல நான் பார்க்கும் உலகம் என்று கலந்து கட்டி அடிக்கிறார்.அவர் பார்வையே அலாதி தான்.அரசியல்,திரைப்படம்,விளையாட்டு என்று பரிமாணத்தில் செல்கிறது.

நான் பார்க்கும் உலகம்

வேட்டைக்காரனும் சில வலிகளும்

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் - இதே பெயரில் வலைப்பூ வைத்திருக்கிறார்.கவிதை எழுதுவதில் திறன் பெற்றவர்.இன்னொரு வலைப்பூவும் வைத்திருக்கிறார்.மூன்றாவது செவி என்று அலைபேசியை வைத்து ஒரு அருமையான கவிதை எழுதியுள்ளார்.


அந்த கவிதை உங்களுக்காக இதோ


படுக்கையில் கூட
இரண்டாவது மனைவியாய்
அருகாமை

அனுபவம் நிறைய உள்ளது போலத் தெரிகிறது

குறை ஒன்றும் இல்லை - இந்த பெயரில் எழுதினாலும் யார் மீதாவது குறை இருந்தால் நேரடி விமர்சனம் தான்.இவர் பேச்சை கேட்டு வெண்ணிற இரவுகள் கார்த்தி பதிவுலகத்தை விட்டு விலக முடிவு செய்தான்.அந்த அளவிற்கு குறை இருந்தால் குறை ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு கும்மாங்குத்துகள் விழும்.எனக்கு கூட குத்துகள் கிடைத்திருக்கிறது.

முதல் உதாரணம் - ஈழம்(கையாலாகாதவன் எல்லாம் பேசக் கூடாது என்பதில் இருவருக்கும் உள்ள ஒற்றுமை.ஆயிரத்தில் ஒருவன் கூட இந்த காரணத்தினால் பிடிக்கவில்லை)

தமிழ் ஆதரவாளர்களிடம் சில கேள்விகள்
மேலும் வாசிக்க...

Thursday, January 14, 2010

நான்காவது நாள் - அதிரடி வியாழன்

அதிரடி தான் எனக்கு வழக்கம்.தொடர்ந்து மூன்று நாட்கள் வலைச்சரத்தில் அடக்கி வாசித்து இருக்கிறேன் என்பது எனக்கு ஆச்சர்யமே.இன்று பிறந்த நாள் என்பதால் கொஞ்சம் ஸ்பெஷல் அதிரடிகள் இருக்குமா என்று பார்ப்போம்.

வெண்ணிற இரவுகள் கார்த்தி - இதுவரை எந்த பதிவரையும் ஒருமையில் விளித்தது இல்லை என்ற சரித்திரம்,பூகோளம் உடைந்தது இவனிடம் தான்.ஏதோ ஒரு ஈர்ப்பு இவன் மேல் இருக்கிறது.இரும்புத்திரை,நர்சிம்,சாரு என்று வரிசையாக அறிமுகம் கொடுத்ததில் இருந்தே தெரிந்திருக்கும் அவனுடைய வளர்ச்சி.நான் அறிமுகம் செய்யும் போது தான் கவனித்தேன் அவனுக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமைகளை - அதிரடி,அவசரம் இரண்டுமே இருவருக்கும் பொருந்தும்.பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன் என்பது உண்மை தான் போலும்.பதிவுகளில் அனல் தெறிக்கிறது.

பொங்கல் பண்டிகையை கூட விட்டு வைக்கவில்லை.

போர்வாள் - பெயரை உச்சரிக்கும் போது கொஞ்சம் என்ன நிறையவே அதிர்கிறது.ஒரு பதிவு தான் எழுதி இருக்கிறார்.அறிமுகமே குத்திக் கிழிக்கிறது.

போர்களம்புக வேண்டியதொரு நேரம்
புணர்ச்சியில் ஆழ்ந்த வீரர்களும்,
காதல் கணங்களில் போர்மொழி புரியும் நரிகளும்
தலைதூக்கக்கண்டு, கவலை கொள்கிறதிவள் மனம்.

இந்த வரிகளில் மனம் இன்னும் லயித்து தான் கிடக்கிறது.

இவ்வலையைப் பூக்கள் தூவி நிரப்புதல் விட
வாள்கள் கொணர்ந்து வளர்க்க முனைகிறேன்.

அடுத்த பதிவிலும் சூடு ஆறாமல் இருக்கும் என்று நட்போடு பார்த்துக் கொண்டேயிருப்பேன்.

அறிமுகமே அதிரடியாக இதோ

வெற்றி - நெஞ்சினிலே என்ற பெயரில் பதிவு எழுதுகிறார்.குரு நாதருக்கே பாடம் எடுக்கும் சிஷ்யப் பிள்ளை.எண்டர் கவிதையை என்ன செய்யலாம் என்று நானும்,அத்திரியும் புரியாமல் தவிக்க அவர் இந்த பதிவிலும் குருவை கவிதையை வேறு தளத்தில் காமம் தவிர்த்து எழுத சொல்லி தூண்டி விடுகிறார்.

தெரியாமல் தான் கேட்கிறேன்.ஏன் இந்த கொலைவெறி.நான் சரியா தானே பேசுறேன்.

பராசக்தி வசனத்தை நினைவு படுத்தும் பதிவு இங்கே


ஊடகன் - இத்தனை நாளாக எங்கு தான் போனாயோ என்று பாடத் தோன்றுகிறது.பின்ன என்ன அவர் ஆண்களுக்கு இடஒதுக்கீடு என்ற பதிவில் அவர் சொன்ன கருத்துகளை நான் முன்னர் சொல்லி உதை வாங்கி இருந்தேன்.என்னை மாதிரி இன்னும் ஒருவர் கருத்து சொல்லி உதை வாங்கும் போது ஏற்படும் சந்தோஷமமே அலாதி தான்.

மும்பையில் பெண்களுக்கு என்று தனி இருக்கைகள் சில உண்டு.அது தவிர எதுவும் கிடையாது.இருவரும் அருகருகில் அமர்ந்து பயணம் செய்வார்கள்.இதுவரை பிரச்சனை வந்தது போல் எனக்கு தெரியவில்லை.காரணம் அங்கு இருக்கும் பெண்களுக்கு தைரியம் ஜாஸ்தி.மீறி கை வைப்பவன் முகத்தை ஒரு முறை பதம் பார்த்தால் அவன் வைப்பானா.பயந்து நடுங்குவதால் தான் எல்லாம் நடக்கிறது.அப்புறம் இதற்கெல்லாம் தீர்வு கடுமையான தண்டனைகளும்,தனி மனித ஒழுக்கமும் தான்.சொல்ல மறந்து விட்டேன் - இது மாதிரி நான் சொன்னதற்கு இது மும்பை இது சென்னை என்று சொன்னார்கள்.அங்கு இன்னும் சில விதிமுறைகள் இருக்கின்றன.அதில் ஒன்று - வரிசையில் தான் ஏறுவார்கள்.இங்கு - ஹையோ ஹையோ.

சில மாதங்களுக்கு முன் இவரை கண்டால் எனக்கு ஆகாது.அதிரடி விமர்சங்களுக்கு பஞ்சமே கிடையாது.இந்த கதை படித்தப் பிறகு அவருடைய மைனஸ் எல்லாம் எனக்கு தெரியவில்லை.இந்த கதை படித்து விட்டு கண் கலங்கினேன்.காரணம் இது போன்ற வேலைகளை எல்லாம் மனிதர்கள் செய்யக் கூடாது என்று சின்ன வயதில் இருந்தே சொல்லி வருகிறேன்.இது போல வேலை செய்யும் சமூகத்தில் இருந்து எத்தனை பேர் ஆந்திராவில் நக்சல்பாரிகளாக மாறி இருக்கிறார்கள் என்று நினைத்தால் பெயர் தெரியாதவர்கள் மீது எல்லாம் கோபம் வருகிறது.எனக்கு இரண்டு முறை அங்கீகாரம் கொடுத்துள்ளார்.சில ஆயிரம் ஹிட்ஸ் அவரால் வந்தது.தற்சமயம் அவருக்கு ஏதோ ஹிட்ஸ் பிரச்சனை.அதனால் இந்த கைமாறு.
மேலும் வாசிக்க...

Wednesday, January 13, 2010

மூன்றாவது நாள் - காவிய புதன்

காவிய புதன் என்ற பெயர் காரணத்திற்காகவே கொஞ்சம் பின் செல்வோம்.

ஜெகநாதன் - பின்னூட்டப் புயல்,சுனாமி,சூறாவளி என்று தான் சொல்ல வேண்டும்.என்னுடைய ரசனை அதிகமாக இவருடன் தான் ஒத்துப் போகிறது.நூற்றாண்டுகள் தாண்டி வரும் கதையில் வாசிக்கும் நாமும் சேர்ந்து பயணிக்கிறோம்.ஒவியம்,புனைவு என்று பல்வேறு தளங்களில் இயங்கும் திறன் படைத்தவர்.இலக்கியவாதியாக மாற வேண்டியவரின் இலக்கு மாறி சில சமயம் மொக்கையும் போடுவார்.அதுவும் சுவாரஸ்யம் குறையாமல் எழுதுவார்.சாரு,ஜெயமோகன் என்று பெரும் தலைகளுக்கே கடிதம் எழுதுவார்.

அவருடைய சில கதைகள்

தலைமுறையாய் தொடரும் கனவு

காமத்தின் முற்றுப்புள்ளியை சொன்ன கதை

அவர் வலைச்சரம் ஆசிரியராக மாறினால் நிச்சயம் சில இரசனையானப் புதிய பதிவர்கள் நமக்கு கிடைப்பார்கள்.

அகல்விளக்கு - இவரை அறிமுகம் செய்ய எனக்கு கொஞ்சம் கூச்சமாக தான் இருக்கிறது.தினமணியே அறிமுகம் செய்த "பிரபல" பதிவர்.அவர் வலைச்சரம் ஆசிரியர் ஆகும் போது என்னை போல சின்னப் பதிவர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

வயதை விட எழுத்தில் முதிர்வு தெரிகிறது.(ஆம் அவர் யூத்தாக மாற இன்னும் வருடங்கள் இருக்கிறது).நட்பு தேடி அலைவது தான் தொழில்

அதற்கு சாட்சி சொல்ல இந்த பதிவு - ஒரு 80 வயதின் நினைவு.

சுப தமிழினியன் - ஆனந்தவிகடனில் மாணவப் பத்திரிக்கையாளன்.ஆக நினைப்பது மாவட்ட ஆட்சியாளராக.புத்தக விமர்சனங்கள் அருமையாக எழுதுகிறார்.பெரியார் மீது பெரும் பற்று இருக்கிறது. காதல் செரிமானத்திற்கு ஜெலுசில் குடிக்கும் குழந்தை.

புத்தக விமர்சனம்

காதல் செரிமானம்

பெயர் சொல்ல விரும்பவில்லை - இப்படி ஒரு வித்தியாசமான பெயர்.நான் என்ன டாட்டாவா இல்லை பிர்லாவா என்று கேட்கிறார்.அப்படி கேட்டாலும் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் மூலம் நீதி சொல்கிறார்.தெரிந்த கதைகள் தான் என்று விட்டு விடாமல் அவர் பாணியில் சொல்கிறார்.

கையில் என்ன...........கொண்டு வந்தோம், கொண்டு செல்ல!


வாழ்க்கை - தற்பெருமை
மேலும் வாசிக்க...

Monday, January 11, 2010

இரண்டாம் நாள் இன்று - காதல் செவ்வாய்

பொதுவாக எனக்கு கவிதைகள் என்றால் கொஞ்சம் என்ன நிறையவே அலர்ஜி அதற்கு இரண்டு காரணங்கள்.

1.நான் கவிதை எழுதி கொடுத்தப் பிறகு தான் மூன்று பெண்கள் என்னோடு பேசுவதை நிறுத்தி விட்டார்கள் .

2.+1 படிக்கும் பொழுது (நான் தேறவே மாட்டேன் என்று ஊர் உலகமே சொன்ன காலம் அது) கவிதை எழுதினேன் என்று வீட்டில் திட்டினார்கள்.

அப்புறம் பதிவுலகத்திற்கு வந்தப்பிறகு வேண்டாவெறுப்பாக கவிதைகள் படிக்க ஆரம்பித்து பிடித்து போய் நானும் முயற்சி செய்யலாம் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது.

பெண்கள் எழுதி காதல் கவிதைகள் படித்தால் அது ரொம்பவே வசீகரிக்கும்.உதாரணம் ஊர் உலகமே முணுமுணுத்த பாடல் வசீகரா - எழுதியது தாமரை.

அது போல முதல் அறிமுகம் ஒரு பெண்

மதார் - சிவில் என்சீனியர்.அனுபவங்களுக்கும்,கும்மிகளுக்கும் நடுவில் கவிதைகளும் உண்டு.திருச்செந்தூர் பெண்.ஏன் உங்கள் சொந்த ஊரைக் குறிப்பிடவில்லை என்று தட்டாமல் கேட்ட பெண்.அப்படி அவர் எழுதிய ஒரு கவிதை.

கவிதை காதலன் - உதவி இயக்குனர்.கவிதைகளுக்கு நடுவில் அவர் போடும் புகைப்படங்கள் அவர் ரசனையை சொல்கிறது.ஒரு இயக்குமராக வர வாழ்த்துக்கள்.காதல் கவிதைகள் எழுதி அடிக்கடி பெருமூச்சை விட வைக்கிறார்.அறிவுமதி பற்றி நான் எழுத நினைத்தை விட சிறப்பாக எழுதி இன்னொரு பெருமூச்சு விட காரணமானவர்.

அறிவுஜீவி - பெயர்க்கு ஏற்றப்படி காதல் கவிதைகள் எழுதி காதில் புகை வர செய்கிறார்.கிறுக்கல்கள் என்று சொல்லி விட்டு அருமையாக கவிதை எழுதுகிறார்.

உனக்கும் எனக்குமான உறவை
நான் இன்னும்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
வார்த்தைகளில்..!

இப்படி எத்தனை காதல்களோ..

மாரிமுத்து - கவிதை எழுதி எண்டர் தட்டுகிறாரா இல்லை எண்டர் தட்டி கவிதை எழுதுகிறாரா.அருமையாக எழுதுகிறார்.சேறு என்று தலைப்பு வைத்து இருந்தால் அருமையாக இருந்திருக்கும்.குறுந்தகட்டுக் கிறுக்கல்கள் என்று பெயர் வைத்து கவிதையில் காதல் சொல்கிறார்.

நம் தேர்வு முடிவுகள்
அறிவிப்பு பலகையில்,
என் விரல் தேடியது
என் பெயரை,
என் விழி தேடியது,
உன் பெயரை...

பின் குறிப்பு 1: கவிதை இப்படியும் எழுதலாம் என்று களத்தில் குதித்து உரையாடல் போட்டியை நிறுத்தப் பார்த்த கவிதை இது.ஆரம்பத்தில் எழுதும் போது இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கொலை வெறியோடு சொன்ன கவிதை.இன்னும் தொடரும் என்று தெரிகிறது இந்த ஆரம்பம்.

பின் குறிப்பு 2: இப்படி எல்லாம் கவிதை எழுதி பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது
மேலும் வாசிக்க...

முதல் நாள் இன்று - நகைச்சுவை திங்கள்

வலைச்சரம் என்ற வலைப்பூ இருப்பது தெரிந்தப் பிறகு தினமும் பார்ப்பது வழக்கம்.யாராவது என்னை அறிமுகம் செய்து இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு ஏமாந்து செல்வது வழக்கம்.அதிகப்பட்சமான ஏமாற்றம் அடைந்தது அத்திரி ஆசிரியராக இருந்த சமயம் தான் ஏற்பட்டது.மதுரை - திருநெல்வேலி பதிவர்கள் என்பதில் என் பெயர் இல்லை.துபாய் ராஜா பின்னூட்டத்தில் என்னை குறிப்பிட்டு சொன்னார்.பிறகு அத்திரியின் நட்பும்,கண்டிப்பும் சாட் மூலம் வந்து சேர்ந்த்து.தண்டோரா அண்ணன் முதல் முறையாக என்னை அறிமுகம் ஊர்சுற்றிக்குப் பிறகு நீங்கள் ஆசிரியராக விருப்பமா என்று சீனா ஐயா கேட்டதும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.நான் எதையும் வெளியே காட்டுவதில்லை.குறிப்பாக மகிழ்ச்சியை.இரண்டு வாரம் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க வேண்டும் என்று அதை தள்ளிப் போட்டேன்

அதுவே எனக்கு இன்று ஒரு தடைக்கல்லாக தெரிகிறது.காரணம் - வானம்பாடிகள் பாலா ஐயா.

வானம்பாடிகள் பாலா ஐயா இரண்டு வாரங்களாக ஆசிரியராக பணியாற்றி இரட்டை சதம் அடித்தப் பிறகு என்னை மாதிரி ஒரு அறிமுக ஆட்டக்காரன் அதில் இறங்கி ரன்ரேட் குறையாமல் பார்த்துக் கொள் என்றால் அங்கு எகிறி வரும் பவுன்சர்களைக் கண்டு வயிற்றில் கொஞ்சம் புளி தான்.

வலைச்சரத்தில் பெயர் வருவதையே பாக்கியமாக நினைத்த ஒருவனுக்கு ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் உண்மையில் இது தான் எனக்கு கிடைத்த உச்சப்பட்ச பாராட்டு,அங்கீகாரம் என்று நினைக்கிறேன்.

ஆரம்பக் கட்டத்தில் இரும்புத்திரை என்று ஒருத்தன் என்று இருக்கிறான் என்று வெளியே சொன்னப் பதிவு இது.

சின்ன வயதில் ஒரு பெண்ணின் நட்பை சொன்ன கதை இது

இரயில் பயண்ங்களின் ஏக்கங்களை சொன்னப் பதிவு.

எனக்கும் ஆக்சன் திரில்லர் எழுத வரும் என்று எனக்கு நானே சொன்ன பதிவு.

என்னுடைய சுயதம்பட்டத்தை இந்த நகைச்சுவை திங்களில் பதிவு செய்கிறேன்.

நாளை காதல் செவ்வாய் - அதிரடி காதல் பதிவு எழுதும் பதிவர்களை பார்ப்போம்.

முதல் பந்தில் சிங்கிள் அடித்த சந்தோஷத்தில் நாளை மீண்டும் சந்திப்போம்.

எனக்கு இப்படி வாய்ப்பு அளித்த சீனா ஐயாவிற்கு நன்றிகள்.அதிரடி அறிமுகம் செய்த ராஜூவிற்க் நன்றிகள்.அவர் ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டால் எனக்கு அவரை பற்றிய அறிமுகம் எழுத வாய்ப்பு தர வேண்டும்.எதிர் அறிமுகம் போட வேண்டாமா.

எத்தனை மாதம் ஆனாலும் இந்த அங்கீகாரம் மனதில் ஒரத்தில் தித்தித்துக் கொண்டே இருக்கும்.மீண்டும் மீண்டும் நன்றிகள்.என்னை அறிமுகம் செய்த தண்டோரா மற்றும் பின்னூட்டத்தில் என்னை சுட்டி காட்டிய துபாய் ராஜாவுக்கும் என் நன்றிகள்.
மேலும் வாசிக்க...

Sunday, January 10, 2010

சென்று வருக பாலா - கலக்க வருக அரவிந்த்

அன்பின் சக பதிவர்களே !

கடந்த இரு வார காலமாக வலைச்சரத்தின் ஆசிரியப் பொறுப்பினை ஏற்ற அருமை நண்பர் பாலா - (பாமரன் பக்கங்கள் - வானம்பாடிகள்), ஏற்ற பொறுப்பினை கடமை தவறாது நிறைவேற்றி மிகுந்த மனமகிழ்ச்சியுடனும், அப்பாடா என்ற பெருமூச்சுடனும் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

நண்பர் பாலா ஏறத்தாழ நூறு பதிவர்களை - இடுகைகளைத் தேடித் தேடி, அருமையான முறையில் பதின்மூன்று இடுகைகளில் அறிமுகம் செய்து தன்னுடைய கடும் உழைப்பின் பலனை நமக்குத் தந்திருக்கிறார். அதற்கு நமது கருத்துகளாக ஏறத்தாழ 270 மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.

அன்பர்களே ! நண்பர் பாலா அறிமுகப்படுத்திய பல புதிய பதிவர்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்களின் வலைப்பூக்களில் தொடர்பவர்களின் எண்ணிக்கையாகட்டும் - ஹிட்ஸ்களாகட்டும் கூடிக்கொண்டே செல்கிறது.

எனதருமை நண்பர் பாலா அவர்களுக்கு நல்வாழ்த்துகள் கலந்த நன்றியினை வலைச்சரக்குழுவின் சார்பினில் மன நிறைவுடன் தெரிவித்து வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து 11ம் நாள் துவங்கும் வாரத்திற்கு இரும்புத்திரை அரவிந்த் ஆசிரியப் பொறுபேற்க ஆரவத்துடன் வருகிறார். இவரைப்பற்றிய அறிமுகத்தினை எனது சார்பினில் மதுரையைச் சார்ந்த ராமராஜு என்ற ராஜூ என்ற டக்ளசு வழங்குகிறார்.

இதோ அறிமுகம் :

இரும்புத்திரை. அரவிந்த் அவர்களுக்கு அறிமுகமே தேவையில்லை. அவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலிப்பக்கம். இப்போது மும்பை வாசம். மற்றபடி சென்னையே தஞ்சம். அரவிந்த், சினிமா பதிவுகளாகட்டும் சக பதிவர்களை கலாய்த்து எழுதும் கல கல பதிவுகளாகட்டும் சூப்பர் ரகம்தான். கவிதைகளும் எக்ஸ்ட்ரா டோஸ்தான். அவ்வப்போது எதிர்க்கவிதைகளும் வரும். தற்சமயம் திருநெல்வேலியின் வட்டார வழக்கு மொழியில் “சாணிக்குழி” என்ற தொடர்கதையை, தன்னுடைய தளத்தில் எழுதி வருகிறார்.குறைந்த அவகாசத்தில் வலையுலகில் அதிக பட்டங்களைப் பெற்றவர் என்று கூட ஒரு நமுட்டுச் சிரிப்புடன் சொல்லிக் கொள்ளலாம். தமிழ்சினிமாவை அக்குவேறாய் ஆணிவேராய் துவைத்துத் தொங்கப்போட சரியான ஆள் அரவிந்த் (கவனிக்க,அடியாளில்லை). இப்போது வலைச்சரத்தை தொகுத்துத் தொங்கப்போட வந்திருக்கிறார். வாருங்கள். வாழ்த்துவோம். கலக்குங்க அரவிந்த் அவர்களே.

அன்புடன்
ராஜு.

ராஜூவிடன் சேர்ந்து நாமும் அரவிந்தை வருக வருக - தமிழ்ச்சரத்தினைத் தொடுக்க வருக என வரவேற்கிறோம்.

நல்வாழ்த்துகள் அரவிந்த்

நட்புடன் சீனா

மேலும் வாசிக்க...

மீண்டும் சந்திப்போம்..

வந்துட்டான்யாஆஆ!வந்துட்டான்யாங்கறது கேக்குது. அதெல்லாம் சரியா வந்துருவம்ல. இன்னைக்கும் நம்ம ஆட்சிதான! ச்ச்ச்ச்ச்சேரி. வெட்டிக்கத போதும். வந்த வேலைய பார்ப்பம் வாங்க.

நம்ம வீட்ல ஒரு விசேஷம்னு வைங்க. ரொம்ப நெருக்கமானவங்களுக்கு அப்புறம் பத்திரிகை வைக்கலாம்னு நினைப்போம். அது அப்படியே அலைஞ்சி திரிஞ்சி விசேஷத்துக்கு முதல் நாள்தான் கவனம் வரும். அட கடவுளே இவருக்குச் சொல்லலையேன்னு.

ஓடிப்போய் கை புடிச்சிகிட்டு அய்யா சாமி! மன்னிச்சிடுய்யா. நம்மாளுதானன்னு இருந்துட்டேன். நல்லகாலம் கவனம் வந்திச்சின்னா, அட போய்யா! நம்ம வீட்டு விசேஷத்துக்கு நீ வந்து கூப்புடணுமாம்பாரு. அப்புடித்தான் ஆகிப்போச்சி நம்ம நிலமை. ஜெரி அய்யா அப்புடிதான் சொல்லுவாரோ? இல்ல முட்டி போடுன்னு திட்டுவாரோ. அது நாம பட்டுக்குவம். மனிதம் கொன்ற மனதில் இசை ரசிக்குமா? இந்தக் கேள்வியை எழுப்பும் கவிதை இதோ!

என்னமா குப்பத்தொட்டின்னு பேரு வெச்சி ஏமாத்துறாருங்க நான் ஆதவன். இதுவும் ஒரு பள்ளிக்கூடம். அமைதியான எழுத்தோட்டத்துக்கு உதாரணம் இவரின் மாட்டு கொட்டா வீடு.

இதோ ஓர் ஈழத்துக் கவி. எம்.ரிஷான் ஷெரிஃபின் கவிதைப் பூக்களை இன்றுதான் காணக் கிடைத்தது. விகடனில் படித்த தொடர் இவருடையது என்பது இன்னும் மகிழ்ச்சி. குழந்தைகள்..கோப்பைகள் என்ற இவரின் கவிதை உங்களுக்காக.

என்ன நினைக்கிறாரோ அதை யோசிச்சி சொல்ற ஷஃபி உங்களில் ஒருவன் சொல்றதெல்லாம் பயனுள்ளவை. info@பதில்சொல்லுங்க.com எவ்வளவு பயனுள்ள விஷயம் சொல்லுது பாருங்க.

”மறக்க மாட்டேனென நினைக்கிறேன்..மறந்திருந்தால் ஒரு வேளை இறந்திருப்பேன்”..என்ன? கவிதை மாதிரி இருக்கா. ஒரு முத்தம் வலைப்பூவுக்கு கட்டியம் கூறும் சையதின் வரிகள் இவை. ஒரு தருணம் என்ற இவரின் கவிதை சொல்லும் மீதியை.

இன்னொரு புதுக் கவிஞன் கார்த்தியின் கவிதைகள் வலைப்பூவும் கவிதைப் பூங்கா. இருப்பும் இல்லாமையும் என்ற இவரின் கவிதை இன்றைய சமுதாய ஏற்றத் தாழ்வை அழகாய்ச் சொல்கிறது.

கவிதைக்காரன் டைரி இளங்கோவின் கல் யானை உயிர் பெறுகிறது பாருங்கள். நிறைய நல்ல கவிதைகள் கொட்டியிருக்கிறது இங்கே.

சொல்லத் துடிக்குது மனசின் சொந்தக்காரி மதார். சுற்றி நடப்பவற்றை நம் கண்முன் நிறுத்தும் எழுத்து இவருடையது. பஸ் பயணிகளுக்கு டிக்கட் செக்கிங் ஒரு சாபக்கேடு. சிரிக்க சிரிக்க எளிய நடையில் இதோ.

இரண்டு வாரங்கள் ஓடி விட்டது. ஒரு வாரம் கூடுதலாகக் கிடைத்தும் எத்தனையோ சிறந்த வலைமனைகளைத் தவற விட்டிருக்கும் சாத்தியம் அதிகம். ஓரளவு நிறைவாயும் உணர்கிறேன். இந்த மிகப் பெரும் வாய்ப்பைத் தந்த சீனா அய்யாவுக்கு என் வணக்கங்களும் நன்றியும். 

 ஹி ஹி. சிங்கம்னு சிங்கிளா விடாம தொடர்ந்து பின்னூட்டம் மூலம் ஊக்குவித்த அன்புள்ளங்களுக்கு நன்றி.

அழகான தலைப்புக்களை செதுக்கித் தந்த ப்ரியாவுக்கு நன்றில்லாம் சொன்னா போதாது.

பாமரன் பக்கங்களில் தொடர்ந்து சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Saturday, January 9, 2010

மின்னுவதெல்லாம் பொன்னல்ல..

வணக்கம் நண்பர்களே!

பழகப் பழகப் பாலும் புளிக்கும்னு சொலவட இருக்கில்ல. பத்து நாளுக்கு மேல நானும் புளிக்காம இருக்க ரொம்பவே முயற்சிக்கிறேன். புதியவர்கள் அறிமுகம் பண்ணலாம்னு தேடி வரப்ப, எனக்குப் புதியவர்களா பிரமிக்க வைக்கும் பதிவர்களும் கிடைக்கிறாங்க. புதியவர்களும் நிறைய கிடைக்கிறாங்க.

ரொம்பவே வருத்தப் பட வைக்கும் ஒரு விடயம், ரொம்ப அழகான எழுத்துக்குச் சொந்தக்காரர்களான பல புதியவர்கள் சென்ற வருடம் முழுதும் 3 அல்லது 4 படைப்புகள் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். சிலரின் வலைமனை எழுத்தை நெருங்க முடியாமல் செய்கிறது. அலறும் பாடல்கள், தேவையில்லாத விட்ஜெட்கள், செயலறச் செய்யும் லிங்குகள் என்று.

ஒரு வேண்டுகோள் புதியவர்களுக்கு. உங்கள் எழுத்தும், படுத்தாத வலைமனையும் தான் அவசியம். கொஞ்சம் முயன்றால் நிறைய எழுதலாம். இன்றைய அறிமுகங்களைப் பார்ப்போமா?

சின்னச் சின்னக் கதைகள், பக்திப் பாடல்கள், ஆன்மீகக் கட்டுரைகள் கொண்ட வலைப்பூ அடியாரின் இந்து முரசு. மதங்களுக்கப்பாற்பட்டு நன்னெறி சொல்வதே ஆன்மீகம். அதிலும் சின்னச் சின்னக் கதைகள் மதம் கடந்து இறையுணர்த்துமாயின் அதை விட சிறந்த வழியென்ன இருக்க முடியும். அப்படி ஒரு கதை எந்நாளும் ஏகனோடிரு.

இன்றைக்கு கிடைத்த என் புதையல் மகேஷின் துக்ளக். இத்தனை நாள் எப்படி பார்க்காமல் போனேன் தெரியவில்லை. டிஜம்பர் மீஜிக் ஜீஜன் இன் சென்னை என்ற தலைப்பே சிரிக்க வைக்கிறதெனில் அந்த இயல்பான நையாண்டி அருமை. புதியவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும் இவர் எழுத்தை (என்னையும் சேர்த்துதான் சொன்னேன்).

ஒலி வங்கியும் ஊமை நிழல்களும். தலைப்பே சொல்கிறதல்லவா? இது வித்தியாசமானதென. ஆம். இரவுப் பறவை என்ற வலைப்பூ முழுதும் வித விதமான வித்தியாசமான கவிதைப் பறவைகள்.

மந்திரனின் மந்திர ஆசைகள் என்னை மிகவும் கவர்ந்தது. நியாயமான கோபம் வெளிப்படுத்தும் இடுகைகள் வாழ்க்கையில் சுற்றியிருப்பனவற்றை பார்க்கும் பார்வை புதியது. வக்கிரம் யாருக்கு என்ற இந்த ஒரு இடுகை போதும் அவரின் திறமை சொல்ல.

சரணின் இளையபாரதம் ஒரு வித்தியாசமான வலைப்பூ. சமூக அக்கறையுடனான இடுகைகள், தொலைக்காட்சி அனுபவங்கள் என பலதரப்பட்ட தேர்ந்த எழுத்துகள் படிக்க கொட்டிக் கிடக்கிறதிங்கே. பர்ஸ் தொலைவது குறித்த அட்டகாசமான இடுகை இது.

அக்பரின் சிநேகிதன் சிநேகமான ஒரு வலைப்பூ. கலகலவென இருக்கும் இவர் வலைப்பூவின் ஒரு பூ, சின்னப்பூ சொல்லும் அழகாய் ஒரு கவிதை, அம்மாவை நினைவுறுத்தி.

சதீஷ் கவிதைகளின் கண்ணீர் தருணங்கள் இந்தப் புதிய பதிவரிடம் நிறைய எதிர் பார்ப்பைத் தருகிறது. எழுதுங்கள் நண்பரே.

டயானாவின் அறிந்ததும் அனுபவமும்
ஒரு அனுபவம். அழகான ஈழத்தமிழில் அருமையான ஓர் கருத்துள்ள இடுகை. மின்னஞ்சலில் வலம் வந்தது என்றாலும் இந்தத் தமிழ் ஈர்க்கும்.

நல்லது நண்பர்களே! நாளை சந்திப்போமா?

மேலும் வாசிக்க...

Friday, January 8, 2010

ஏக்கமும் தாக்கமும்

வணக்கம் நண்பர்களே!

வலைமனை.இதுவும் நமக்கொரு வீடு. நம் சிந்தனைக் குழந்தைகள் பிறந்து தவழ்கிற வீடு. நட்புக்கள் வருகிற வீடு. ஏதோ காரணத்தால் ஒரு நாள் நம் வலை மனைக்கு வர முடியாவிட்டால் என்னமோ தொலைச்சா மாதிரி இருக்கில்ல.

பரம்பரையா வாழ்ந்து, நாம விளையாடி, வளர்ந்து நம் விருப்பத்தில் எங்கயோ பிழைப்புன்னு போனாலே வீடு கவனம் வந்திச்சோ எல்லாத்தையும் கடாசிட்டு வந்து ஒரு ஒரு செங்கல்லா தொட்டுத் தடவி, ஒரு ஒரு செடியா பார்த்து பேசி கொஞ்சி, நம் மண்ணின் சில்லிப்பில் கால் பதிய நிக்கமாட்டமான்னு ஏங்கிப் போகுமில்லையா?

அது மறுக்கப்பட்ட ஒரு இதயத்தின் வலி. ஆறுதல் சொல்ல முடியாத வலி. அதை விட ஆயிரம் வீடு வாங்கினாலும் அத்தனையும் கொடுத்து விடுகிறேன். இடிந்து சிதிலமானாலும் பரவாயில்லை. அந்த மண் எனக்கு வேண்டும் என என்றும் வலிக்கும் வலி. ஜீவ நதியில் ஜீவராஜ் வீடு என்ற இடுகையில் அந்த வலியை நாம் உணர வைக்கிறார். வலைச்சரத்துக்காக நான் தேடியதில் கிடைத்த இன்னோரு வைரம் இவர் எழுத்து.

மனசு ரொம்ப கவலையா, விரக்தியா எதும் செய்யத் தோணாம இருக்கும் போது குழந்தையாவே இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு ஏங்கிப் போகும். அதும் வீட்டில பாட்டி, தாத்தா,அப்பா, அம்மான்னு மடியில் அமர்ந்து கேட்ட கதைகள், தூங்குறப்ப சொன்ன கதைகள்ளாம் அடுத்த தலைமுறைக்கு குடுக்க முடியாம தொலைச்சிட்டு நிக்கிறோம். திருமதி ருக்மணி சேஷசாயி சுட்டிக் கதை  வலைப்பூவில் இந்த ஒரு இடுகையில் அந்தக் குறை தெரியாமல் செய்து விடுகிறார். படிக்கையில் குழந்தையாகிப் போனேன். நன்றி அம்மா உங்கள் பணிக்கு.

வடலூரான் கலையரசன்
கழுகுப்பார்வை பார்த்து கலவரமாக்குற கூத்து இங்கே. லொள்ளுக்குண்டோ அடைக்கும் தாழாம்? குசும்பன், இராகவன் நைஜீரியா இவங்களோடு சேர்ந்து அடிச்ச லூட்டி இங்கே. ஏன் கலை. இராகவனுக்கு காமிரா வாங்கிக் குடுத்த கலையரசன் நீங்கதானே?

எங்கே போனாலும் நட்புடன் நீளும் ஒரு கை. மனசார பாராட்டு. பின்னூட்ட முடியாவிடில் திரட்டிகளில் பின்னூட்டு. பிரச்சினையிருக்கிறதா பாருங்கள் என்று முடிந்தால் மின்னஞ்சல் இப்படி ஒரு நட்புக்கரம் வலையுலகின் வரம். ஆமாங்க நட்புடன் ஜமால்தான். ஏணிப்படிகள் என்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புச் செய்திகள், சின்னதாய்க் கவிதைகள். கொஞ்சம் எழுதலாமே ஜமால்.

இன்றைய தேடலின் பலன் இந்தக் கவிஞன். கமலேஷ். சுயம் தேடும் பறவை என்ற பெயரே கவிதையாய் வலைமனை இவருடையது. நெஞ்சை ஆக்கிரமித்துக் கொள்ளும் எழுத்து. வித்தியாசமான கவிதைகள். நீரியல் சுழற்சி என்ற இவரின் கவிதை ஒன்று போதும் சாட்சி கூற. இனித் தொடர்வேன்.

மோகனின் மோகனச் சாரல் அழகான பூங்கொத்தோடு வரவேற்கிறது. கலகலப்பான எழுத்து. படிக்க சிரிக்க இதோ இவரின் எஸ்.எம்.எஸ்.கலாட்டா.

ரிஷபன்.  அசத்தும் எழுத்துக்கு சொந்தக்காரர். மண்ணில் சொர்க்கம் என்ற அவரின் இடுகையை அறிமுகப்படுத்த வாய்த்ததில் மகிழ்ச்சி.

வெற்றிக் கதிரவனின் தேடல் ஒன்றே வாழ்க்கை ஒரு வித்தியாசமான அனுபவம் தரும். அவரின் சுயபுராணம் அதற்கோர் எடுத்துக் காட்டு.


நாளை சந்திப்போம். வர்ட்ட்ட்டா:)
மேலும் வாசிக்க...

Thursday, January 7, 2010

ரத்தின(ங்கள்) சுருக்கம்...

வணக்கம் நண்பர்களே!

பதிவுன்னு எழுத ஆரம்பிக்கும் போதே என்னிய மாதிரி பலரும் எது தோணுதோ எழுதுவோம்னு பரந்த நோக்கில்(யாருப்பா அது எத விட்டு வச்ச கெடுக்காமன்னு குரல் விடுறது) ஆரம்பிக்கிறோம். தீர்மானமா, சமையல், சினிமா, மொழி, வரலாறு இப்படி ஏதொ ஒரு தனிப்பாதை போட்டு அதில் நம்மை இழுத்துச் செல்பவர்கள் சிலரே.

தமிழ்மொழி, அதன் வளர்ச்சி, ஈழம் என தமிழ் சார்ந்த விஷயங்களை புள்ளி விபரங்கள், சரித்திர மேற்கோள்கள் காட்டி உணர்வு பூர்வமாக எழுதுபவர் தேவியர் இல்லம் தேவிஜி. அகதிகள் குறித்த அவலம் சொல்லும் அவரின் ஓர் இடுகை ஒரு ஊரிலே.

ரவிப்ரகாஷின் என் டைரி ஒரு புதையல். மென்மையான உணர்வுகளின் வெளிப்பாடு, நனவோடைகள் என்று பலவும் கிடைக்கும் இங்கே. உள்ளம் உலுக்கும் அவரின் எழுத்துக்கு ஒரு சாம்பிள் இது. இவரின் இன்னோரு வலைப்பூ உங்கள் ரசிகன். இங்கும் இவரின் எழுத்தை அனுபவிக்கலாம். பத்திரிகையாளரின் எழுத்துக்கு கட்டியம் கூற எனக்கு வாய்த்தற்கு நன்றி.

கலகலப்புக்கு ஒரு வலைமனை நாஞ்சில் எக்ஸ்ப்ரஸ். பெயருக்கேற்றார்போல் ஒரு ரயில் வண்டியின் அத்தனை பரபரப்பும் பிரதாபின் இடுகைகளில் இருக்கும். மூக்குக் கண்ணாடி குறித்த அவரின் பதிவு இந்த எக்ஸ்ப்ரஸின் வேகம் சொல்லும்.

மூச்சுத் திணற ஈழத் தமிழ் சுவைக்க ஓர் முற்றமிருக்கிறது. ஈழத்து முற்றம். ஒரு குழுவாக இந்த வலைப்பூவை பராமரிக்கிறார்கள். அழகான எழுத்துக்களின் நந்தவனம் இது. மனமள்ளும் மொழியழகுக்கு இதோ.

லஞ்சம் - ஊழல் - மோசடி
யென்ற இந்த வலைப்பூவை இன்று கண்டெடுத்தேன். சமுதாயத்தில் புரையோடிய இந்த நோயை துகிலுரிக்கும் வலைப்பூ இது. பிச்சைக்காரரிடம் திருடிய ஒரு போலீஸ் காவலரின் முகத்திரை கிழிக்கும் இடுகை இது.

படிக்காதவன் என்ற பெயர் ஈ.ரா.வின் வலைப்பூவுக்கு. நம்மை படிக்க வைக்கும் எழுத்து இவருடையது. வரவில்லை என்ற இவரின் கவிதை இதோ.

இரசிகையின் கவிதைக்கு ரசிகனாகாமல் இருக்க முடியாதுங்க. நிமிடங்களில் சில என்ற இவரின் கவிதை அட சொல்ல வைக்கும் ரகம்.

இன்றைக்கு இவ்வளவு போதும். நாளை சந்திப்போமா?


மேலும் வாசிக்க...

Wednesday, January 6, 2010

தூண்டும் இன்பம் ....

வணக்கம் நண்பர்களே!

கொஞ்சம் வேலை அதிகமா இருந்திச்சிங்க. அதான் நேற்றைய இடுகை வரவில்லை. அடுத்த இடுகைகள்ள கூடுதலா அறிமுகம் செய்துட்டா போச்சி. வேலைன்னா வேலை அப்படி ஒரு வேலை. களைச்சுட்டேன். அட ஃபிலிமெல்லாம் காட்டலைங்க. நிசமாத்தான்.

ஃபிலிமெல்லாம் நமக்கு காட்றதுக்கு கூட பதிவர்கள் இருக்காங்க. தேடி தேடி திரட்டி, பார்த்து, விமரிசனம் பண்ணி, தேவைப்பட்டத பாருங்க சாமின்னு கொடுக்கிற விஷயம் ரொம்ப பெருசு.ஒரு காலத்துல நாங்களும் ரவுடிதான்னு மவுண்ட்ரோட் தியேட்டர்ல புது ஆங்கிலப் படம் ரிலீஸ் ஆனா முதல் வாரம், ப்ளாக்ல டிக்கட் விக்கிற அண்ணாச்சிங்க மூணு டிக்கட் நியூஸ் ரீல் முடியற வரைக்கும் நமக்காக வச்சிருக்கிற அளவுக்கு இருந்திச்சி.

சினிமா போறது அறவே நின்னு போனாலும், ஆடின காலும் பாடின வாயும் மாதிரி படம் பார்த்து பழகின மனசும் சினிமாவ தேடும்போது அலுங்காம குலுங்காம நேர நாம போற திரையரங்கு பட்டர்ஃப்ளை. டெண்டு கொட்டாய் படல்ல விரல விட்டு ஓட்ட பண்ணி இடுக்கால திருட்டுத்தனமா பார்க்கிறா மாதிரி விமரிசனம் படிச்சிட்டு பின்னூட்டம் கூட போடாம வந்துடுவேன். சாரி சூர்யா.:)).



படத்தோட கதையை பார்க்கத் தூண்டும் விதமா சொல்லி, படம், நடிகர்கள் பற்றிய குறிப்பும் அழகான நடையில் சொல்லி படம் பார்க்க இயலாவிடினும் அந்த நிறைவைத் தரும் எழுத்து சூர்யாவினுடையது. அருணா மேம் பூங்கொத்துனு சொல்றா மாதிரி நான் சொல்றது ஒரு சோறு பதத்துக்கு, இதோ! இது தவிர பட்டர்ஃப்ளை சிறகடிக்க நந்தவனமும் வைத்திருக்கிறார். புத்தகக் கண்காட்சி பற்றிய இடுகை பாருங்கள்.

இன்னோரு மனம் கவர்ந்த ஃபிலிம் காட்டி ஹாலிவுட் பாலா. அக்கரைச் சீமை என்ற இவர் வலைப்பூவில் சினிமாவும் சினிமா மட்டும் என்றாலும், டிக்கட் கட்டணத்துக்கு பதில் மனதைப் பறித்துக் கொள்கிறார். படக்கதையை விட இவர் சொல்லும் விதமும் தகவலும் வித்தியாசம். இதோ ஒரு சோறு பதத்துக்கு.


சோறு சோறுன்னு பறக்கறேன்னு பார்க்கறீங்களா. இதை எழுதும்போது பசி.   சரி இதுக்கும் வலைப்பூ இருக்குமே பார்க்காலாம்னு தேடினா அம்முவின் சமையல் அழைத்தது. சமையலைப் பாராட்டுமுன் இவங்க பெண்ணாதிக்கத்துக்கு கண்டனம் சொல்லியே ஆகணும். அதென்னங்க உங்க தளத்துக்கு பெண்கள்தான் வருவாங்கன்னு தீர்மானம் பண்ணிட்டீங்களா? அவங்கள மட்டும் வாங்க வாங்கங்கறீங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ். பார்க்கப் போனா ஆம்பிளைங்கதான் நீங்க சொல்றத கவனமா பார்த்து சரியா செய்வாங்க. கவுரவப் பிரச்சினை பாருங்க அதான். ஹி ஹி. சமையல் எப்படி இருக்குமுங்கறத அந்த ஃபோட்டோல பார்க்கும்போதே தெரியுது. நீங்களே பாருங்கப்பா.


போன இடுகையிலயே சொல்லி இருக்க வேண்டியவர் ஒருத்தர் இருக்காருங்க. கணினி மென்பொருள்ள பல மென்பொருள் பயன்பாடு, தரவிறக்கம் போன்ற விளக்கங்களோட வேறு சில பொது அம்சங்களும் அழகா தருவாரு. அதாங்க நம்ம வேலன். நகைச்சுவையா புகைப்படத்துக்கு கமெண்ட், புகைப்படத்தில் ஒட்டு வேலைன்னு அசத்தலான ஒரு இடுகை உங்களுக்கு.

நிலா அது வானத்து மேலேன்னா அந்த வலைப்பூவின் பதிவரும் அங்கதான். ஸ்டார்ஜன். கவிதை, கட்டுரை, நகைச்சுவைன்னு எல்லாம் எழுதி இருக்கார். தமிழ்மணம் போட்டியில் இவரின் படைப்பு முதல் சுற்றில் தேர்வாகி இருப்பது ஒன்றே இவரின் எழுத்தின் அங்கீகாரம் சொல்லும். ரெஃபரன்ஸ் புஸ்தகம் புதுப் பதிவர்களுக்கு.

விஜய் கவிதைகள் வலைப்பூவும் சரி, கவிதைகளும் சரி மிக மிக வித்தியாசமான ஒரு அனுபவம். படிக்கப் பிடிக்கும். பாருங்கள் ஒன்றை.

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமாரின் எளிமையான கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. கதையும் கூட. அடிக்கடி எழுதலாமே சரவணக்குமார்:). திருக்கல்யாணம் என்ற அவரின் கவிதை இதோ.

கேசவனின் ஞானமேதவம் என்ற வலைப்பூ ஒரு இன்ப அதிர்ச்சி. ஆன்மீகமும் தமிழும் படிக்க படிக்க ஒரு இனம்புரியா அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக்கும் எழுத்து. ஔவையின் சிலேடை என்ற இவரின் இடுகை படிக்கவே எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது பாருங்கள்.

சேலம் வசந்த் இன்னோரு புது அறிமுகம் வலையுலகுக்கு. நல்ல நடையோடு சுவாரசியமாக எழுதுகிறார். கிதார் கற்றுக் கொண்ட கதையில் இவரின் அலப்பறையை அனுபவியுங்கள்.

நாளை மீண்டும் சந்திப்போம்.

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது