07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 8, 2011

உலகம் ஒரு ப்ளாக் ஸ்பாட்... :)))

முன் குறிப்பு:
"மன்னிக்கணும்,வேலை பளு காரணமாய் நேத்து பதிவு போட முடியல" என அப்பாவி பீலிங் காட்ட
 
"சுமார் எத்தனை கிலோ இருக்கும்" என்றது மைண்ட்வாய்ஸ்
 
"என்ன எத்தனை கிலோ?" என முறைத்தார் அப்பாவி
 
"என்னமோ வேலை பளு'னியே.. அதை தான் எத்தனை கிலோ'னேன்"
 
"ஓடி போய்டு... வலைச்சரத்துல கடைசி நாள் அடி வாங்கிக்காதே மைண்ட்வாய்ஸ்"
 
"ஹி ஹி... அப்பாவி டென்ஷன்...மீ ஹாப்பி" என எஸ்கேப் ஆனது மைண்ட்வாய்ஸ்
 
"போஸ்ட் போடாதது பத்தி நீ ஒண்ணும் பீல் பண்ணாதே அப்பாவி...நாங்க ஒரு நாள் நிம்மதியா இருந்தோம்"னு கோரசா ஒரு சத்தம் கேக்குதே... இருக்கட்டும் இருக்கட்டும்... ஹ்ம்ம்...:)))
 
நான் போன முறை இந்தியா போறதுக்கு சில நாள் முன்ன, எங்க அம்மாகிட்ட போன்ல பேசிட்டு வெச்சதும் எழுதின சில வரிகளை, அன்னையர் தினத்துக்காக உங்ககிட்ட பகிர்ந்துகிட்டு அப்புறம் வலைச்சரம் தொடுக்கலாம்...
 
மாவடுவும் மல்லிகையும்
மணக்கும் பருப்புபொடியும்
அதிரசமும் அச்சுமுறுக்கும்
அத்தனையும் வேணுமுன்னு
அம்மாகிட்ட ஆசையசொன்னேன்
அவளுந்தான் உருகிப்போனா....

என்னவாங்கி வரட்டுமுன்னு
என்தாய நானும்கேக்க
என்புள்ள நீவந்தாபோதும்
'எனகென்ன வேணுமடி' னா

அம்மா...
குடுக்கத்தான் தெரியுமுனக்கு
கேக்கத்தான் தெரியுமெனக்கு...
 
இனிய அன்னையர் தின வாழ்த்துகள் எல்லா அன்னையர்க்கும்...
 
இனி... வலைச்சரம்...
 
"டேய் மாது... ஏண்டா ஒரே சோகமா இருக்கே"
 
"போடா சீனு... மனசே சரி இல்ல...நேக்கு ப்ளாக் ஆரம்பிக்கணும்னு ரெம்ப நாளா ஆசை...ஆனா"
 
"அதுக்கென்னடா மாது... ஜோரா ஆரம்பியேன்... காசா பணமா"
 
"எல்லாம் சரிடா... எதை பத்தி எழுதறதுனு ஒரே கொழப்பமால்ல இருக்கு"
 
"அடடே... நம்ம பஞ்ச் பாலா கூட இப்படி தான் கொழம்பி போய் அதை பத்தியே ஒரு போஸ்ட் போட்டு இருக்கார் பாரேன்"
 
"சரி எதையாச்சும் எழுதறேன்னு வெய்யி... நல்லா சுண்டி இழுக்கராப்ல ஒரு பேரு வெக்கணுமே"
 
"அப்ப ஒண்டி வில்லுனு வெய்யி..."
 
"என்ன கிண்டலா இருக்கா... இந்த மிடில் க்ளாஸ்க்கு ஏத்த ஒரு பேரை சொல்லுடானா"
 
"மிடில்க்ளாஸ்மாதவினு ஏற்கனவே ஒருந்தங்க இருக்காங்க.. நீ வேணுமானா மிடில்க்ளாஸ்மாதுனு ஆரம்பியேன்"
 
"அடபோடா நானே வீட்டு வாடகை வாங்க ஓனர் எந்த நேரத்துல வருவானோன்னு திக்கு திக்குனு இருக்கேன்...இவன் வேற மிடில் க்ளாஸ் மாது மாடி படி மாதுனு...ஹ்ம்ம்..."
 
"டேய்... இப்படி நாலும் பொலம்பரதுக்கு தான் ப்ளாக் வேணுங்கறது... இதை பத்தி கூட கவிதை எழுதறாங்க தெரியுமோ... சுஜா கவிதைகள்ல போய் பாரேன்"
 
"அதை கூட எழுதலாமா? வேற என்ன மாதிரி எழுதறதுனு ஒரு ஐடியா குடேன்"
 
"ஒரு லிஸ்ட் போடறேன் கேளு....
 
மரகதம்னு ஒரு ப்ளாக்ல புடிச்ச பாட்டு பத்தி கூட எழுதி இருக்காங்க... அது போல எழுதலாம்...
 
அப்புறம் GeeVee போல படிச்சதுல புடிச்சது கூட ஷேர் பண்ணிக்கலாம்...
 
சுத்திமுத்தி நடக்கற விஷயங்கள் பத்தி நாகேந்திர பாரதி போல குட்டி கவிதைகள் சொல்லலாம்
 
ஆதவா, அவர் ப்ளாக்ல எழுதின மாதிரி திருவிழால ஒரு பொண்ண பாத்து பல்பு வாங்கின கதைய கூட எழுதலாம்
 
நம்ம ஜலீலா அக்கா போல ஜோக்ஸ் சொல்லலாம்
 
இல்ல தமிழ் உதயம் சார் போல அருமையான கதை கூட சொல்லலாம்
 
கருண் அவர்கள் போல வெளிநாட்டில் வாழும் தமிழனின் மனதை பதிவு செய்ய இப்படி கவிதை கூட எழுதலாம்
 
இதெல்லாம் வராதுன்னா ஜானகிகிட்ட கேட்டு எதுனா சமையல் குறிப்பு போடு.. இங்க சவிதா கிட்சன்ல சரவண பவன் சாம்பார் பத்தி கூட சொல்லி இருக்காங்க பாரேன்...
 
"ஆஹா... இவ்ளோ மேட்டர் இருக்கா... நான் கூட இந்த அப்பாவி மாதிரி மொக்கை மட்டும் தான் போடலாம்னு நினைச்சேன்"
 
"பகலில் பக்கம் பாத்து பேசு... அப்பாவிய பத்தி பேசினா அதுவும் வேண்டாம்னு சொல்லுவாங்க... அப்புறம் நம்மள காமெடி பீஸ் ஆக்கியும் ஒரு போஸ்ட் போட்டுடும் அந்த பொண்ணு"
 
"அதுவும் சரி தான்..." என மாது கூறி கொண்டிருக்கும் போதே
 
புயலாய் எண்டர் ஆகிறார் அப்பாவி "எசூஸ்மீ... உங்களுக்கும் எனக்கும் எதுனா வாய்க்கா தகறாரா... நான் பாட்டுல சிவனேன்னு இருக்கேன்... என்னை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க மிஸ்டர் மாது"
 
அப்பாவியை அங்கு எதிர்ப்பார்க்காத மாது ஜெர்க் ஆகி "ச்சே ச்சே... நீங்க தப்பா நினைச்சுக்காதேள் அப்பாவி... பொதுவா சொன்னேன்" என சமாளித்தார்
 
"பொதுவா சொல்றதுக்கு நான் என்ன மொக்கை ஸ்பெசலிஸ்ட்னு போர்டா மாட்டி இருக்கேன்"
 
"ஹி ஹி... அப்படி இல்ல மேடம்... மொக்கை போடவும் ஒரு தனி திறமை வேணும் பாருங்கோ..."
 
இப்படி ஒரு ஐஸ் வெச்சதும், உடனே புயல் ஒன்று பூ ஆனது போல் கூல் ஆன அப்பாவி "அப்படியா சொல்றீங்க மாது சார்"
 
"ஆமாம் மேடம்... ஒத்த லைன் வெச்சுட்டு பத்து பாக்க காவியம் எல்லாம் படைக்கறதுன்னா சும்மாவா?"
 
"ஐயோ... நீங்க ரெம்ப புகழ்றீங்க போங்க... சரி நான் போயிட்டு வரேன்... கிளம்பறதுக்கு முன்னால இந்த வலைச்சரத்துல எழுத வாய்ப்பு குடுத்த சீனா ஐயாவுக்கு மொதல்ல நன்றி சொல்லிக்கறேன்..."
 
"'வலைச்சரத்துல எழுதறீங்களா'னு சௌந்தர் கேட்டப்ப, எழுத முடியுமானு  நான் தயங்கினப்ப, 'எல்லாம் எழுதலாம் எழுதுங்க அக்கா' னு சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த சௌந்தர் தம்பிக்கு நன்றி சொல்லாம போனா நல்லா இருக்காது பாருங்க...:))"
 
(அப்பாடா எப்படியோ சௌந்தரை சிக்க வெச்சாச்சு... அன்பு மிகுதில கல்லு முட்டை தக்காளி பார்சல் எல்லாம் அனுப்பணும்னா அவருக்கே அனுப்பிடுங்க... என்கிட்ட ஏற்கனவே ஓவர் ஸ்டாக்...ஹி ஹி...)
 
"Jokes apart... தொடர்ந்து படித்த எல்லாருக்கும் மிக்க நன்றி... ஒகே டாட்டா பை பை... நேரம் கிடைக்கறப்ப வீட்டு பக்கம் வாங்க... முகவரி இங்க...:)))" இப்படி நன்றி நவிலல் எல்லாம் முடிஞ்சு அப்பாவி கிளம்பவும்
 
"நல்லவேள சமாளிச்ச மாது... இல்லைனா பொங்கி எழுந்து இன்னும் நாலு பக்க வசனம் பேசி இருப்பா அப்பாவி" என சீனு மாதுவை பாராட்டினான்
 
இதையும் ஒட்டு கேட்ட அப்பாவி "உலகம் ஒரு ப்ளாக் ஸ்பாட்... அதில் எல்லாரும் அப்பாவிக்கு ப்ரூடஸ்கள்... அவ்வ்வ்வவ்...." என பீலிங்க்ஸ் ஆப் வலைச்சரம் ஆனாள்
 
:))))))

28 comments:

  1. எல்லாரையும் பாலோவ் பண்ண ஆரபிசிடேன் மிக்க நன்றி ....

    ReplyDelete
  2. Ungal padhivil,ennai pattri kurippittamiku mikka nandri.romba sandhoshama irukku.Super a irundhuchu unga post.vizhundhu vizhundhu sirichen.follow panren ungalai.

    ReplyDelete
  3. நல்ல கருத்தாழம்மிக்க அனைவரும் படிக்க வேண்டிய உபயோகமான பதிவு அப்பாவி. நன்றி.

    ReplyDelete
  4. ஹையா மாது சீனு! நல்ல ஐடியா அப்பாவி.

    முடிஞ்சுதா ட்யூட்டி? அப்போ உடனே கதையை எழுதவும். மற்ற வலைச்சர பதிவுகளுக்கு உண்மையான கமெண்ட்: "நல்ல கருத்தாழம்மிக்க அனைவரும் படிக்க வேண்டிய உபயோகமான பதிவு அப்பாவி. நன்றி."தான் வருது.. :D
    நல்லா வித்தியாசமா சிரிச்சுக்கிட்டே ஆணி பிடுங்கியமைக்கு உங்களுக்கு சாரி ஒரு பரிசும் கிடையாது. Bye-bye!

    ReplyDelete
  5. சுவாரஸ்யமாக எழுதி அறிமுகப் படுத்தினீர்கள் அப்பாவி... ஒரு வாரம் போனதே தெரியவில்லை. நடுவில் ஒரு நாள் மிஸ் ஆனது வருத்தம்தான். (ஜோக் இல்லை, நிசம்மாதான்...) வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. ஒரு வாரம் ஆகிடுச்சா ? சரி சரி டாட்டா போயிட்டு வாங்கா

    ReplyDelete
  7. நிறைவான வாரம் புவனா. நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. உங்கள் காமெடியான எழுத்து நடை மிகப் பிடித்தது. நிறைவான வாரம்.

    ReplyDelete
  9. வித்தியாசமானமுறையில் நகைச்சுவை நிரம்ப அறிமுகங்களை அரங்கேற்றியதற்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  10. மகிழ்ச்சி - பல தரப்பட்ட பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கு.
    நன்றி - என்னையும் அறிமுகம் செய்தமைக்கு.

    ReplyDelete
  11. என்னைக் குறிபபிட்டமைக்கு நன்றி அப்பாவி தங்கமணி!
    உங்கள் கவிதை மிக நன்றாக உள்ளது.

    ReplyDelete
  12. ஒரு வாரம் சிறப்பாக எழுதியதற்கு பாராட்டுகள்....நேத்து எழுதமா இருந்ததற்கு அடி தரனும்...!!!

    ReplyDelete
  13. "'வலைச்சரத்துல எழுதறீங்களா'னு சௌந்தர் கேட்டப்ப, எழுத முடியுமானு நான் தயங்கினப்ப, 'எல்லாம் எழுதலாம் எழுதுங்க அக்கா' னு சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த சௌந்தர் தம்பிக்கு நன்றி சொல்லாம போனா நல்லா இருக்காது பாருங்க...:))"////

    இப்போ ரொம்ப சந்தோசமா இருப்பீங்களே....


    கல்லு முட்டை தக்காளி பார்சல் எல்லாம் அனுப்பணும்னா அவருக்கே அனுப்பிடுங்க..////

    கவலை படாதீங்க மக்களே எனக்கு அனுப்புங்கள் ...நான் அவங்களுக்கு திருப்பி அனுபிடுறேன்...

    ReplyDelete
  14. ஆஆஆஆ அப்பாவி அதற்குள் ஒரு வாரம் பறந்திடுத்தா?
    கவிதை அருமை,இதான் அம்மாங்கிறது.
    நல்ல அறிமுகங்கள்.
    அப்பாவி எனக்கு கீ போர்ட்ல கொஸ்டியன் மார்க் வேலை செய்யாமல் இருந்தது,அதான் உங்க ட்ரிக் நினைவு வந்துச்சு,குப்புற தட்டி நிமிர்த்தினேன்,ரஸ்க் தூள் வெளியே வந்தது,நன்றி..

    ReplyDelete
  15. @ சௌந்தர்,
    அவனா நீ(யி). இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே. ஏன்ப்பா. ஏன் இந்த கொலை வெறி. எதற்காக இப்படி செஞ்சீங்க. அது எப்படி, இவங்கள ப்ளொக் உலகத்திற்கு பிள்ளையார் சுழி போட வைச்சுட்டு நல்ல பில்ளை மாதிரி ஆக்டிங் குடுத்திட்டு இருக்கீங்க. இருங்க ஒரு பாக்கட் அந்திராஸ் அனுப்பிட்டு தான் மறுவேலை.

    ReplyDelete
  16. ஒரு வாரம் ஒடினதே தெரியலை; அவ்ளோ விறுவிறுப்பு!! வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. //"உலகம் ஒரு ப்ளாக் ஸ்பாட்...//

    ஆமா, உலகத்துமேல என்ன அப்படியொரு வெறுப்பு? அதைப்போய் ‘கறுப்புப் புள்ளி’னு திட்டிருக்கீங்களே?

    ReplyDelete
  18. வலைச்சரத்தில் தங்கள் பணி மிகவும் சிறப்பாக இருந்தது...

    தங்கள் அளித்த விதம் உண்மையில் வித்தியாசமாக இருந்தது...

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. அம்மா வை பற்றி கவிதை சூப்பர்,
    அறிமுகப்படுத்திய விதஙக்ள் அருமை ,
    என்னையும் பற்றி சொல்லி இருக்கீன்க்க , என் அட்டகாசமே சமையலில் தான் சரி ஜோக்கில் போட்டு இருக்கீஙக், ஒகே ஒகே
    நன்றி நன்றி

    ReplyDelete
  20. அன்பின் புவணா

    இன்றுடம் முடிகிறதா - ஒரு வாரம் நன்கு சென்றது. நல்ல அறிமுகங்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  21. நன்றிகள் பல அக்கா... இதைப் போன்ற ஊக்கங்கள் என்னைப் போல புதியவர்களுக்கு பெரிய பூஸ்ட்.. :)) நன்றி அக்கா..

    ReplyDelete
  22. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  23. அனாமிகா துவாரகன் said...
    @ சௌந்தர்,
    அவனா நீ(யி). இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே. ஏன்ப்பா. ஏன் இந்த கொலை வெறி. எதற்காக இப்படி செஞ்சீங்க. அது எப்படி, இவங்கள ப்ளொக் உலகத்திற்கு பிள்ளையார் சுழி போட வைச்சுட்டு நல்ல பில்ளை மாதிரி ஆக்டிங் குடுத்திட்டு இருக்கீங்க. இருங்க ஒரு பாக்கட் அந்திராஸ் அனுப்பிட்டு தான் மறுவேலை.///

    நம்ம எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு .... இதெல்லாம் ரொம்ப தப்பு நான் உங்களுக்கு நல்லது தான் செய்து இருக்கேன் என்னால ஒரு வாரம் கதை வரல அதை நினைச்சு சந்தோசப்படுங்க....நீங்க என்ன செய்யணும் நினைச்சாலும் அப்பாவிக்கு செய்யுங்க...!!!

    ReplyDelete
  24. என்னை அறிமுகப் படுத்தியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வலைச்சரத்தில் என் பெயர் காணும்போதெல்லாம் சிலிர்ப்பும் உண்டாகிறது.
    பதிவு ரொம்பவும் சீரியஸாக அல்லாமல் நண்பனின் தோளில் கைபோட்டமாதிரி பேசுவதாக இருப்பது சிறப்பு!!
    இருவரும் பேசிக் கொள்வது போல வித்தியாசமாய்!!

    வாழ்த்துக்கள்+நன்றி!

    ReplyDelete
  25. மிக்க நன்றி அப்பாவி தங்கமணி

    மற்றும் எல்லா வலைச்சரங்களையும் படித்தேன்

    நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  26. @ hajasreen - நன்றிங்க

    @ savitha ramesh - நன்றிங்க சவிதா

    @ Porkodi (பொற்கொடி) - ஹா ஹா ஹா... வசிஷ்டர் வாயால பிரம்ம ரிஷி வாங்கினாப்ல ஒரு பீலிங்... ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ் கொடி :))

    @ ஸ்ரீராம். - ரெம்ப நன்றிங்க வாழ்த்துக்கும் வருத்தத்துக்கும்...;))

    @ எல் கே - சரிங்கோ...நன்றிங்கோ...:)

    @ ராமலக்ஷ்மி - நன்றிங்க ராமலக்ஷ்மி

    @ கலாநேசன் - மிக்க நன்றிங்க

    @ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா

    @ தமிழ் உதயம் - நன்றிங்க சார்

    @ middleclassmadhavi - நன்றிங்க மாதவி

    @ சௌந்தர் - ஹா ஹா...அடி எல்லாம் வேண்டாம்... மீ அப்பாவி அக்கா யு நோ..:)).... ரெம்ப ரெம்ப சந்தோஷம்... பின்ன சிக்க வெக்க நீங்களே சான்ஸ் குடுத்தாச்சே... தேங்க்ஸ் சௌந்தர்...:))

    @ asiya omar - ஹா ஹா ஹா... கோவிந்த் இதை படிச்சுட்டு செமயா சிரிச்சார்...மீ டூ...:))

    @ அனாமிகா ௦- :))

    @ ஹுஸைனம்மா - தேங்க்ஸ்'ங்க.. அட அட அட... என்ன ஒரு சிந்தனை... ஹா ஹா...:))

    @ # கவிதை வீதி # சௌந்தர் - ரெம்ப நன்றிங்க

    @ Jaleela Kamal - உங்க அட்டகாசம் சமயல்லனு சொல்லாமையே எல்லாருக்கும் தெரியும்...அதான் ஜோக் பத்தி சொன்னேன்... நன்றிங்க..:)

    @ cheena (சீனா) - நன்றிங்க

    @ பாலா - நன்றிங்க பாலா

    @ யாழ். நிதர்சனன் - நன்றிங்க

    @ சௌந்தர் - அடபாவிங்களா... எல்லாம் பிளான் பண்ணித்தான் பண்றாயங்க...அவ்வ்வ்வ்....:))

    @ VELU.G - நன்றிங்க

    ReplyDelete
  27. "உலகம் ஒரு ப்ளாக் ஸ்பாட்... அதில் எல்லாரும் அப்பாவிக்கு ப்ரூடஸ்கள்... அவ்வ்வ்வவ்...." என பீலிங்க்ஸ் ஆப் வலைச்சரம் ஆனாள்//
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  28. மிக்க நன்றி அப்பாவி தங்கமணி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது