07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 19, 2011

வர்களும் விஞர்களா.. ன்ன ச்சரியம்..?

இன்று பிரபல பதிவர் எழுதிய கவிதைகளை உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகிறேன்..  (படிப்பவர்கள் மன்னிக்க வேண்டும் கொஞ்சம் நையாண்டியாக வர்ணனை இருக்கும் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்...)

பொதுவாக இப்பதிவர்கள் சினிமா, நையாண்டி, நகைச்சுவை, பொதுப்பதிவுகள், பிரச்சனைக்குறிய பதிவுகள் மட்டுமே தருபவர்கள் என வாசகர்களால் அறியப்பட்டாலும் இவர்களுக்குள்ளும் ஒளிந்திருக்கு கவிஞன் சிலசமயங்களில் எட்டிப்பார்த்து விடுகிறான். அப்படி பிரபல பதிவர்கள் எழுதிய கவிதைகள் இன்றை அறிமுகத்தில் பார்க்கலாம்....

******************************************************************************
ழுகடல் ஏழுமலை தாண்டிச்சென்றாலும் காற்றுவழியே தமிழில்  கொஞ்சம் வெட்டி பேச்சு  பேச கிளம்பிவிடும் பின்னூட்ட புயல் நம்ம அன்பு சகோதரி சித்ரா‌வை தெரியாத யாரும் பதிவரென்று என்னால் நம்பிவிட முடியாது. வாரம் ஒரு பதிவென்றாலும் அந்த நாட்களின் தமிழின் மகுடம் இவருக்குதான்... தவழும் பருவத்தை மறக்காமல் இவர் எழுதிய குழந்தை கால நட்பு  இன்னும் மழலைப்பேசுகிறது...


******************************************************************************
ழுத்திலும், வார்த்தையிலும் கம்பீரம் கலந்த பகுத்தறிவு பதிவர். எங்கே செல்லும் இந்தப் பாதை  என அறிந்துக்கொள்ள கருத்து சுடரெந்தி களமிறங்கிய சிந்தனையாளர் நம்ம கே.ஆர்.பி.செந்தில். அவர்தம் பதிவுகளில் கோவமும் வேகமும் பட்டுத்தெரிக்கும், அதற்கு அப்பாற்பட்டு ஒரு மெல்லிய தன்னுள் மறைத்திருக்கும் பழைய காதலை மழை பெய்த நாட்களில் ஞாகப்படுத்துகிறார்.

******************************************************************************
ரோட்டு மண்ணிலிருந்து புறப்பட்ட சினிமாப்பித்தன் (அதாங்க சி.பி.)  சின்ன சின்ன சிரிப்புகள் சொல்லி அட்ரா சக்க என சொல்ல வைக்கும் திறமைசாலி. எதற்கும் வருந்தாத நெஞ்சம். இவர் சினிமா போட்டு சீர்கொட்ட சாரி சீர்பட்ட பதிவர் என்றாலும் இவர்க்குள்ளும் அனைத்துக்கலையும் ஒளிந்துக்கிடக்கிறது.   இவர் எழுதிய சகி...நீ நடிக்கறது சகிக்கலை என்ற கவிதை என்னை ரசிக்கவைத்தது...


******************************************************************************
சுடச்சுட நான்வெஜ் மற்றும் சாண்ட்வெஜ் தரும் பிருந்தாவனத்தில் வசிக்கும் நொந்தகுமாரனுமான இவர் தன் பதிவுகலால் பரபரப்பப்படுபவர். (ஜாக்கிசேகர்) காரமும் காமமும் கொஞ்சம் தூக்கல்தான். ஆதனால்தான் வாதங்களும் விவாதங்களும் அனலேற்றப்படுகிறது. உடல் முழுக்க முட்கள் இருந்தாலும் மென்மையாய் பூக்கம் ரோஜாபோல் இவர் பதிவில் ஒரு கவிதை பூத்திருக்கிறது. வாசமிழந்த  தங்கள் கிராமம்  பற்றி இவரின் வேதனைகள் உண்மையானதே.


******************************************************************************
 தகலத்துக்கும் ரணகளத்துக்கும் பெயர்போனவர், சகதியில் உருளும் சாமி என தற்போது புதிய பட்டப்பெயருடன் வலம் வரும் தன்மான அசிங்கம் மன்னிக்கனும் சிங்கம். இவர் ஸ்டார்ட் மியூசிக்!  என்று சொல்லிவிட்டால் கும்மியெடுக்க ஒரு பட்டாளமே படையெடுக்கும். கருத்துச்சொல்லி கலாய்க்கும் இவருக்கு கவிதை என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்பார் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி ஒரு விசும்பலில் எதிரொலிக்கிறது இவரது கவிதை...  ஆர்வம் கொண்டு வாருங்கள் அதை ரசிக்க...

******************************************************************************



பதிவுலகின் அரசியல் கற்றவர். நட்புவட்டம் பெருக்க வழி சொல்லிக்கொடுப்பவர். இவரிடம் பகைவளர்க்க சண்டையிட்டாலும் தட்டிக்கொடுத்து நட்புபாராட்டும் அன்புள்ளம். அவர்தாங்க நம்ம ரஹீம் கஸாலி இவர் புலன்விசாரணை தொடங்கி விட்டால் தப்பிஓடும் முதல் ஆள் நான்தான். பதிவெழுதி தலைப்பு வைப்பவர் மத்தியில் இவர் தலைப்பை கண்டுவிட்டு அப்புறம் பதிவிடுவார். பரபரப்புக்கு மத்தியில் குறிஞ்சிப்பூவார் பூத்திருக்கிறது இவர் பதிவில் ஒரு கவிதை இதை கவிதையா நினைச்சுக்கங்க பிளீஸ்.... என்ன பண்றது அதையும் கவிதையா நினைச்சிக்கிறோம்...

 ******************************************************************************

க்கா என்றால் உங்களுக்கு புரிந்திருக்கும். இவர் பதிவுலகின் பலியாடு, பின்னூட்டம் இட்டே பின்னால் வாங்கிக் கொள்ளும் போர்வாள்... பதிவுலகின் வடை, பஜ்ஜி விற்பனையாளர்... நம்ம நாஞ்சில் மனோ... புதிய பதிவர் முதல் ஆதிகால பதிவர்கள் வரை அறிந்த தற்போதைய முகம் இவர் ஒரு நவரச நாயகன்... இவர்க்குள்ளும் ஒளிந்திருக்கும் துயரத்தை தன் நெஞ்சில் பதிந்துப்போன ஒரு வடுவை கவிதையாய் இங்கே இறக்கிவைத்துள்ளார்.


******************************************************************************
வர் நம்ம நண்பருங்க. அழையா விருந்தாளியாக அனைத்து வாசலுக்கும் செல்பவர்..  இவருடையது வாசர்கள் மொய்க்கும் வேடந்தாங்கல் சுவையான விவாதங்கள்... அழகான கருத்துக்கள்.. அற்புதமான படைப்புகள் தருபவர்... அதிகம் வடை வாங்கிய தற்போதைய வள்ளல்.. ஏற்றயிறக்கம் பாராமல் அத்தனை பதிவுக்கும் சொல்லும் பக்குவம்.  இவருக்கு மட்டும்தான். இவருக்கு அப்படிஎன்னதான் இரவு நேர இம்சைகளோ.....


******************************************************************************
அன்பான வாசர்களே இன்றை அறிமுகங்கள் ‌எல்லோருக்கும் தெரிந்தவர்களே இருந்தும் இந்த பதிவுகள் தாங்கள் படிக்காமல் இருந்திருக்கலாம் அதற்காகவே இந்த அறிமுகம்....

இப்பதிவைப்பற்றி தங்களுடைய கருத்தை பதிவு செய்துவிட்டுச் செல்லுங்கள்... 
தமிழ்மணத்தில் தங்கள் வாக்கையும் பதிவுசெய்யுங்கள்...
நன்றி.. நாளை... சந்திப்போம்...

49 comments:

  1. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அனைவரும் அட்டகாசமான பதிவர்கள்...கலக்கட்டும் தொடர்ந்து இவர்கள்....

    ReplyDelete
  3. ஒரு வித்தியாசமான கோணத்தில் நானுமா? நன்றி தலைவரே...

    ReplyDelete
  4. அடங்கொக்காமக்கா நம்மளும் பெரிய கவிஞர் ஆயிட்டோம் போல.... இனி தொடங்கிட வேண்டியதுதான்.............

    ReplyDelete
  5. ஆஹா நாம கவித எழுதாம விட்டுட்டோமே

    உங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது

    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
    இன்று நம் பதிவுலகில் விருது வழங்கபட்டுள்ளது, விழாவில் கலந்து கலக்குங்கள்

    நாமே ராஜா, நமக்கே விருது-7

    http://speedsays.blogspot.com/2011/05/award-7.html

    ReplyDelete
  6. >>எதற்கும் வருந்தாத நெஞ்சம்.

    இப்படி சொல்லி சொல்லித்தான்யா ஆளாளுக்கு கும்மறாங்க.. ஹா ஹா

    நன்றி.. மற்ற சக பதிவர்களுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  7. நெஜமாவே அதிர்ச்சிதானுங்கோ..... எப்பவோ எழுதுன கவிதைய நோட் பண்ணி வெச்சு அறிமுகப்படுத்தினதுக்கு ரொம்ப நன்றிங்கோ!

    ReplyDelete
  8. அம்புட்டு பெரும் தமிழ் வலையுலகில் தீவிரவாதிகள்..ஹிஹி ஒபாமா தேடுராராம்லே!!

    ReplyDelete
  9. மற்ற பதிவர்களுக்கு பாராட்டுகள்!

    ReplyDelete
  10. சசிகுமார் said...

    அனைவருக்கும் பாராட்டுக்கள்.
    //////

    தங்கள் வருகைக்கு நன்றி சசி..

    ReplyDelete
  11. ///
    NKS.ஹாஜா மைதீன் said...

    அனைவரும் அட்டகாசமான பதிவர்கள்...கலக்கட்டும் தொடர்ந்து இவர்கள்....///////

    வாங்க நண்பரே...

    ReplyDelete
  12. ///
    Anbarasan k said...

    You changed your theme??

    May 19, 2011 10:55:00 AM GMT+05:30////

    இதுவும் மாற்றி யோசித்ததின் விளைவுதான் நண்பரே....
    அடுத்த பதிவு என்னால் முடிந்த வரை மாற்றியோசிக்கிறேன்...

    ReplyDelete
  13. /////
    ரஹீம் கஸாலி said...

    ஒரு வித்தியாசமான கோணத்தில் நானுமா? நன்றி தலைவரே...////////

    நன்றி நண்பரே....

    ReplyDelete
  14. ////
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அடங்கொக்காமக்கா நம்மளும் பெரிய கவிஞர் ஆயிட்டோம் போல.... இனி தொடங்கிட வேண்டியதுதான்.............
    //////////


    ரைட்டு...

    ReplyDelete
  15. ////
    Speed Master said...

    ஆஹா நாம கவித எழுதாம விட்டுட்டோமே

    உங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது
    ////


    நன்றி நண்பரே..
    தங்கள் வருகைக்கும் மற்றும்
    தங்கள் விருதுக்கும்...

    ReplyDelete
  16. சிபியா அது? ஒரு லேட்டஸ்ட் போட்டோவா வாங்கி போடக்கூடாதா? 30 வயசுல எடுத்த போட்டோவ இப்போ போட்டா எப்படி?

    ReplyDelete
  17. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    சிபியா அது? ஒரு லேட்டஸ்ட் போட்டோவா வாங்கி போடக்கூடாதா? 30 வயசுல எடுத்த போட்டோவ இப்போ போட்டா எப்படி?
    /////


    அவருதாங்க இது சமீபத்தில் எடுத்ததுன்னு சொன்னாறு...

    பயபுள்ள பொய் சொல்லியிருக்கு...

    ReplyDelete
  18. சிபி, பன்னிக்குட்டிசார் எல்லாம் கவிதைஎழுதியிருக்கிறார் என்று நீங்கள் சொன்னப்புறம்தான் தெரிகிறது. நல்ல கவிதை அறிமுகம் நண்பரே. நல்லாதானே எல்லோரும் எழுதியிருக்கறார்கள். ஏன் தொடரவில்லை. உங்கள் பாராட்டு அவர்களை உற்சாகப்படுத்தி திரும்ப எழுதவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொடரட்டும் தங்களின் ஊக்கப்படுத்தும் பணி. இந்த வாரத்தை மிகவும் விறுவிறுப்பாய் எதிர்பார்ப்புகளுடன் கொண்டுபோகிறீர்கள் நண்பரே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. மிக்க நன்றி தம்பி...

    ReplyDelete
  20. ///
    சி.பி.செந்தில்குமார் said...

    >>எதற்கும் வருந்தாத நெஞ்சம்.

    இப்படி சொல்லி சொல்லித்தான்யா ஆளாளுக்கு கும்மறாங்க.. ஹா ஹா

    நன்றி.. மற்ற சக பதிவர்களுக்கு பாராட்டுக்கள்/////

    எதையும் தாங்கும் இதயம்..

    ReplyDelete
  21. ////
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    நெஜமாவே அதிர்ச்சிதானுங்கோ..... எப்பவோ எழுதுன கவிதைய நோட் பண்ணி வெச்சு அறிமுகப்படுத்தினதுக்கு ரொம்ப நன்றிங்கோ!////

    தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  22. ////
    மைந்தன் சிவா said...

    அம்புட்டு பெரும் தமிழ் வலையுலகில் தீவிரவாதிகள்..ஹிஹி ஒபாமா தேடுராராம்லே!!////

    வாங்க சிவா...

    ReplyDelete
  23. ////
    கடம்பவன குயில் said...

    சிபி, பன்னிக்குட்டிசார் எல்லாம் கவிதைஎழுதியிருக்கிறார் என்று நீங்கள் சொன்னப்புறம்தான் தெரிகிறது. நல்ல கவிதை அறிமுகம் நண்பரே. நல்லாதானே எல்லோரும் எழுதியிருக்கறார்கள். ஏன் தொடரவில்லை. உங்கள் பாராட்டு அவர்களை உற்சாகப்படுத்தி திரும்ப எழுதவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொடரட்டும் தங்களின் ஊக்கப்படுத்தும் பணி. இந்த வாரத்தை மிகவும் விறுவிறுப்பாய் எதிர்பார்ப்புகளுடன் கொண்டுபோகிறீர்கள் நண்பரே. வாழ்த்துக்கள்.//////


    நன்றி நண்பரே...

    ReplyDelete
  24. ///

    கே.ஆர்.பி.செந்தில் said...

    மிக்க நன்றி தம்பி...
    /////
    தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  25. பெருந்தன்மை மிக்க பதிவு...

    ReplyDelete
  26. ஏதோ ஆர்வக் கோளாறில் செய்த சிறு முயற்சிங்க......... மி த பாவம்! :-)))))

    ........வித்தியாசமாக அறிமுகப்படுத்துறீங்க....... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. கருப்பு கண்ணாடி போட்டவர், தொப்பி போட்டு இருப்பவர், அரசர்குளத்தான், கோட் சூட் போட்டிருப்பவர்.....இது போன்ற பச்சிளம் பதிவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி சௌந்தர். அவர்களை ஊக்குவிக்க நம்மை விட்டால் வேறு யார் உள்ளனர்.

    ReplyDelete
  28. கவிப்(போ)(பே)ரரசுகள் வாழ்க!!

    ReplyDelete
  29. ஆம்...இவர்களும் கவிஞர்கள் தான் நண்பா... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  30. அம்புட்டு பெரும் தமிழ் வலையுலகில் தீவிரவாதிகள்..:repeatu..

    mukiama mano anney..

    ReplyDelete
  31. பிரபலங்களை அறிமுகப்படுத்திய பிரபல்த்திற்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  32. எல்லோருக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  33. நன்கறிந்த நண்பர்கள். நன்றாய் அறிமுகம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. பிரபல பதிவர்களை அருமையாக வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்தி இருக்கீங்க
    வாழ்த்துகக்ள்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. மிக்க நன்றி என் கவிதை பற்றிய அறிமுகத்துக்கு... இந்தவாரம் வலைச்சரத்தில் கலக்க கவிதை வீதி சௌந்தருக்கு என் வாழ்த்தை சொல்லிக்கொள்கின்றேன்...

    ReplyDelete
  36. Please introduce someone new..
    எனக்கென்னவோ இது சரியான ஜால்ரா போல தோன்றுகிறது.ஒரு வட்டத்துக்குள்
    இருந்து கொண்டு தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் இந்த
    மனப்பான்மையில் இருந்து வெளியே வாருங்கள்..

    ReplyDelete
  37. எல்லா மீனும் ரவுடி மீனுங்க தான் .........
    டேஸ்ட் நல்லா இருக்கும் ............

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் அனைவர்க்கும்..

    ReplyDelete
  39. கவிதை வீதி சௌந்தருக்கு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. பாராட்டுக்கள் நண்பரே

    ReplyDelete
  41. அருமையான அறிமுகங்கள்.. அனைவருக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  42. பிரபலங்களின் அட்டகாசம் ரொம்பவே அருமைங்கோ....

    ReplyDelete
  43. அன்பின் சௌந்தர் - அறிமுகப்படுத்தி இருக்கும் பதிவர்கள் எழுதிய கவிதைகளைத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்தது நன்று. அவர்களூம் மேலும் கவிதைகள் எழுத முயல்வார்கள். நல்ல செயல். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  44. அன்பின் சௌந்தர் - ஒவ்வொன்றாகச் சென்று படிக்கிறேன். வாழ்த்துகிறேன். நட்புடன் சீனா

    ReplyDelete
  45. அன்பின் சௌந்தர் - அனைத்தையும் சென்று படித்தேன் - இரசித்தேன் - மறுமொழியும் இட்டேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது