07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label # கவிதை வீதி # சௌந்தர். Show all posts
Showing posts with label # கவிதை வீதி # சௌந்தர். Show all posts

Saturday, May 21, 2011

வர்களை ம்பி த்தனைபேரா.. ன்ன ச்சரியம்.. (Top 10 Blogs)

வாங்க நண்பர்களே... வணக்கம்..

பொதுவாக பதிவெழுத வரும்போது தன்னுடைய பதிவுகளுக்கு பின்னுட்டங்கள் வராதா, யாராவது தன்னுடைய தளத்தை யராவது பின்பற்றமாட்டார்களா என்ற ஏக்கம் இருக்கும். அப்படி பின்னூட்டங்கள் மற்றும் பாளோவர் வந்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவோம்....


தன்னுடைய பதிவுகள் மீது நம்பிக்கை வைத்து, பதிவுலகில் நயமான பதிவுகளிட்டு....  படிப்பார்கள் மத்தியிலும் மற்ற பதிவர்கள் மத்தியிலும் நல்ல பெயர் வாங்கி அதிகமான பின்னூட்டங்கள் பாளோவ்ர்ஸ் பெறுவது அவ்வளவு சாதாரண வேலையல்ல...

அப்படி அதிகமான FOLLOWERS  பெற்ற  TOP 10  பதிவர்களை இன்று பார்ப்போம்.....

முதல் இடத்தில் உள்ளவர்  

 வகுப்பறை

 2007 ஜனவரி 14-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது..
இந்த தளத்தின் மொத்த பின் தொடர்பவர்கள் : 2355
இது வரை வெளிவந்த பதிவுகள் : 841
அதிக பட்ச பதிவு வகுப்பறை என்ற பெயரில் : 750
இத்தளம் பெற்றுள்ள ஹிட்ஸ் : 18 லட்சத்திற்கும் மேல்...
2009 தமிழ்மண ரேங்கிங் : 

இரண்டாவது இடத்தில் உள்ளவர்  


 2003 அக்டோபர் 27-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது..
இவரின் வாலைப்பூவை பின்பற்றுபவர்கள் : 1688
இது வரை இவர் இட்டுள்ள பதிவுகள் : 3343
அதிக பட்சமாக அரசியல் சார்ந்த பதிவுகள் : 836.
இத்தளம் இது வரை பெற்றுள்ள ஹிட்ஸ் : 16 லட்சத்திற்கும் மேல்...

மூன்றாவது இடம் :

! ❤ பனித்துளி சங்கர் ❤ !

இத்தளம் 2009 ஆகஸ்ட் 5-ல் ஆரம்பிக்கட்டது.
இவரின் வாலைப்பூவை பின்பற்றுபவர்கள் :  1444
இதுவரை வெளியிடப்பட்டுள்ள பதிவுகள்  : 710
பெற்றுள்ள ஹிட்ஸ் : 674000 த்திகு மேல்
2009 தமிழ்மண ரேங்கிங் :  22

‌நான்காவது இடம்

முதல் பதிவை 2006 அக்டோபர் 11 ம் தேதி வெளியிட்டப்பட்டுள்ளது.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள்  1428
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 822
2010 தமிழ்மண   தரவரிசை 2
ஐந்தாவது இடம் :


இவர் முதல் பதிவை 2006 அக்டோபர் 11 ம் தேதி வெளியிட்டார்.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள்  1091
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள்   364
பெற்றுள்ள பின்னூட்டங்கள் : 22149
2010 தமிழ்மண   தரவரிசை 6

ஆறாவது இடம் :


இவர் தன்னுடைய முதல் பதிவை 
ஏப்ரல் 14 2008ம் தேதி வெளியிட்டார்.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள்  1058
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 818
2010 தமிழ்மண   தரவரிசை 8
ஏழாவது இடம் :


இவர் தன்னுடைய முதல் பதிவை 
2010 பிப்ரவரி 22 ம் தேதி வெளியிட்டார்.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள்  1047
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 454
பெற்றுள்ள பின்னூட்டங்கள் : 22144

எட்டாவது  இடம் :

வேலன்

இத்தளம் ஆர‌ம்பிக்கப்பட்டது  2008 நவம்பர்.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள் 983
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 555
பெற்றுள்ள ஹிட்ஸ் 635000



ஒன்பதாவது  இடம் :

 உண்மைத்தமிழன்  

இத்தளம் ஆர‌ம்பிக்கப்பட்டது  டிசம்பர் 2005.

இத்தளத்தை பின்தொடர்பவர்கள் 919
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 740
பெற்றுள்ள ஹிட்ஸ்  9 லட்சம்

2010 தமிழ்மண   தரவரிசை 3


பத்தாவது  இடம் :


குசும்பு 
இத்தளம் ஆர‌ம்பிக்கப்பட்டது  2007  மார்ச்

இத்தளத்தை பின்தொடர்பவர்கள் 789
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 450

 
நண்பர்களே இவ்வளவு பின்தொடர்பவர்களை பெருவது என்பது சாதராண விஷயம் அல்ல. அதை பெற அவர்கள் அளித்துள்ள உழைப்பை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அவர்கள் தொடர்ந்து சிறப்பாக வளர என்வாழ்த்துக்கள்..
 

இத்தகவல் என் அறிவுக்கு எட்டிய அளவுதான். இதில் மாற்றம் இருக்கலாம்.
யாராவது அதிக FOLLOWERS   பெற்றிருந்தால் தெரிவிக்கவும்.

(இத்தகவல்கள் இறுதியாக திரப்பட்ட நாள் : 18-05-2011)


(இவை Blogspot மட்டுமே பொருந்தும் .com மற்றும் Wordpress -க்கு பொருந்தாது.)
மேலும் வாசிக்க...

Friday, May 20, 2011

புதுசு புதுசா சொல்றாங்கயா..

வாங்க நண்பர்களே... வணக்கம்..
இன்று புதிய... சில நான் பார்த்த பதிவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகிறேன். இவர்கள் தங்கள் படைப்புகள் மூலம் பல்வேறு தகவல்களை தருகிறார்கள்... இவர்கள் வேலும் வளர என்வாழ்த்துக்கள்... நீங்களும் சென்று அவர்களை வாழ்த்துங்கள்....




ஆச்சி ஆச்சி நல்படியாக விடிந்த இன்றைய பொழுதில், நல்ல எண்ணங்களுடன், நல்ல வழியில் சென்றால் நாளையும் நல்லபடியாகவே விடியும் அப்படின்னு நல்ல நல்ல விஷயங்கள் தற்றாங்க... இயற்கை இதய வடிவ அதிசியங்கள் அப்படின்னு ஒரு பதிவு படிச்சித்தான் பாருங்களேன்..


இருதயதுடிப்பின் ஓசை! அப்படின்னு ஒரு பதிவர் பதிவர்களுக்கு தேவையான கணினி சார்ந்த நிறை டிப்ஸ் கெர்டுக்கிறாறு.. புதுப்புது பதிவர்கள் இதுபோன்ற பதிவுகளை படித்து பயன் பெறலாம். அதில் எனக்கு பிடித்தது.. மடிகணினி (Laptop) - யை பாதுகாப்பது எப்படி?


அலசல்கள்1000 அப்பிடின்னு இன்னும்ஒரு தளம் கணினி சார்ந்த சின்னசின்ன விஷயங்களைக்கூட அருமையா சொல்லியிருக்காரு.. தங்கள் கணணி இயங்க ஆரம்பிக்கும்போது பயனாளர்களுக்கு அறிவுறுத்தலை வழங்குவதற்கு....
அதுல இது சூப்பரு..


நட்சத்திர பூக்கள்  அப்புடின்னு ஒருத்தர், தலைப்பே ரொம்ப அ‌ழகா இருக்கில்ல அதில் கவிதை, பழையபாட்டு, அரசியல்-ன்னு அம்புட்டும் போட்டு கலக்குறாறு.. காலத்தால் அழியாத பாடல்கள் பார்த்து அசந்துப்போனேன்.. நீங்களும் பார்க்கலாம் தப்பில்லிங்க...


கீதமஞ்சரி அப்புடின்னு ஒருத்தங்க எம்புட்டு நல்லா கவிதை கட்டுரை கதை சொல்றாங்க தெரியுமா. என் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே! என் எழுது‌கோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே- அப்படின்னு கொள்கையா வச்சிருக்காங்க... கவிதை என்றும் பெயரிடலாம். அந்த கவிதையை படிச்சிட்டு நீங்க ஏதாவது சொல்லிட்டுப் போங்க..

மன நதி அப்படின்னு ஒரு தளம் பார்க்க ரொம்ப நல்லாயிருக்கு... எல்லா நதிகளிலும் என் ஓடம் என்று அலசியதுபோல் இவரும் மனநதியில் உலகை வலம் வர வா‌‌‌ழ்த்துவோம்...  அதில் ஓய்வில் இருக்கின்றன வீதிகள். அப்படின்னு ஒரு கவிதை என்னை கவர்ந்தது..

தமிழில் செய்திகளை உடக்குடன் தரும் ஒருதளம் இருக்குங்க செய்திகள்
‌IBC Tamil News  அப்படி என்னன்ன செய்தி போடறாங்கன்னு உடனுக்குடன் செய்திகளை பார்க்கனுமா அங்கு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வாங்க... 
 

மூன்றாம் கண்.,  பார்வையால் தன் காணும் செய்திகளை உடனுக்குடன் தருகிறார். இதில் ஒரு சீனா மற்றும் இந்தியா மாணவர்களுடன் போட்டியிட வேண்டும். அதிபர் பராக் ஒபா


எழுத்து பூங்கா இந்தபூங்காவில் பல்வேறு பூக்கள் பூத்திருக்கிறது.  இதில் அரசியல் சார்ந்த பதிவுகள் அதிகம் தந்திருக்கிறார் ஜெ- கண்டணத்துடன் கழட்டிவிடப்பட்ட முதல் கூட்டணி கட்சி.. பற்றி படித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...


நுனிபுல்லில் ஓர் பனித்துளி !! அப்படின்னு ஒரு வலைப்பூ  வித்தியாசமான முறையில் தன்னுடைய  கட்டுரையாக வெளிப்படுத்துகிறார்... இவருடைய படைப்புகள் நல்ல பயனுள்ள தகவல்களை தருகிறது.. நல்லபடியா வசிக்க வாசிங்க அப்படின்னு ஒரு பதிவு... போய் வாசிச்சிப்பாருங்க...

நாளை சந்திப்போம்...


மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்கை பதிவுசெய்யுங்கள்...
நன்றி வணக்கம்.


மேலும் வாசிக்க...

Thursday, May 19, 2011

வர்களும் விஞர்களா.. ன்ன ச்சரியம்..?

இன்று பிரபல பதிவர் எழுதிய கவிதைகளை உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகிறேன்..  (படிப்பவர்கள் மன்னிக்க வேண்டும் கொஞ்சம் நையாண்டியாக வர்ணனை இருக்கும் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்...)

பொதுவாக இப்பதிவர்கள் சினிமா, நையாண்டி, நகைச்சுவை, பொதுப்பதிவுகள், பிரச்சனைக்குறிய பதிவுகள் மட்டுமே தருபவர்கள் என வாசகர்களால் அறியப்பட்டாலும் இவர்களுக்குள்ளும் ஒளிந்திருக்கு கவிஞன் சிலசமயங்களில் எட்டிப்பார்த்து விடுகிறான். அப்படி பிரபல பதிவர்கள் எழுதிய கவிதைகள் இன்றை அறிமுகத்தில் பார்க்கலாம்....

******************************************************************************
ழுகடல் ஏழுமலை தாண்டிச்சென்றாலும் காற்றுவழியே தமிழில்  கொஞ்சம் வெட்டி பேச்சு  பேச கிளம்பிவிடும் பின்னூட்ட புயல் நம்ம அன்பு சகோதரி சித்ரா‌வை தெரியாத யாரும் பதிவரென்று என்னால் நம்பிவிட முடியாது. வாரம் ஒரு பதிவென்றாலும் அந்த நாட்களின் தமிழின் மகுடம் இவருக்குதான்... தவழும் பருவத்தை மறக்காமல் இவர் எழுதிய குழந்தை கால நட்பு  இன்னும் மழலைப்பேசுகிறது...


******************************************************************************
ழுத்திலும், வார்த்தையிலும் கம்பீரம் கலந்த பகுத்தறிவு பதிவர். எங்கே செல்லும் இந்தப் பாதை  என அறிந்துக்கொள்ள கருத்து சுடரெந்தி களமிறங்கிய சிந்தனையாளர் நம்ம கே.ஆர்.பி.செந்தில். அவர்தம் பதிவுகளில் கோவமும் வேகமும் பட்டுத்தெரிக்கும், அதற்கு அப்பாற்பட்டு ஒரு மெல்லிய தன்னுள் மறைத்திருக்கும் பழைய காதலை மழை பெய்த நாட்களில் ஞாகப்படுத்துகிறார்.

******************************************************************************
ரோட்டு மண்ணிலிருந்து புறப்பட்ட சினிமாப்பித்தன் (அதாங்க சி.பி.)  சின்ன சின்ன சிரிப்புகள் சொல்லி அட்ரா சக்க என சொல்ல வைக்கும் திறமைசாலி. எதற்கும் வருந்தாத நெஞ்சம். இவர் சினிமா போட்டு சீர்கொட்ட சாரி சீர்பட்ட பதிவர் என்றாலும் இவர்க்குள்ளும் அனைத்துக்கலையும் ஒளிந்துக்கிடக்கிறது.   இவர் எழுதிய சகி...நீ நடிக்கறது சகிக்கலை என்ற கவிதை என்னை ரசிக்கவைத்தது...


******************************************************************************
சுடச்சுட நான்வெஜ் மற்றும் சாண்ட்வெஜ் தரும் பிருந்தாவனத்தில் வசிக்கும் நொந்தகுமாரனுமான இவர் தன் பதிவுகலால் பரபரப்பப்படுபவர். (ஜாக்கிசேகர்) காரமும் காமமும் கொஞ்சம் தூக்கல்தான். ஆதனால்தான் வாதங்களும் விவாதங்களும் அனலேற்றப்படுகிறது. உடல் முழுக்க முட்கள் இருந்தாலும் மென்மையாய் பூக்கம் ரோஜாபோல் இவர் பதிவில் ஒரு கவிதை பூத்திருக்கிறது. வாசமிழந்த  தங்கள் கிராமம்  பற்றி இவரின் வேதனைகள் உண்மையானதே.


******************************************************************************
 தகலத்துக்கும் ரணகளத்துக்கும் பெயர்போனவர், சகதியில் உருளும் சாமி என தற்போது புதிய பட்டப்பெயருடன் வலம் வரும் தன்மான அசிங்கம் மன்னிக்கனும் சிங்கம். இவர் ஸ்டார்ட் மியூசிக்!  என்று சொல்லிவிட்டால் கும்மியெடுக்க ஒரு பட்டாளமே படையெடுக்கும். கருத்துச்சொல்லி கலாய்க்கும் இவருக்கு கவிதை என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்பார் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி ஒரு விசும்பலில் எதிரொலிக்கிறது இவரது கவிதை...  ஆர்வம் கொண்டு வாருங்கள் அதை ரசிக்க...

******************************************************************************



பதிவுலகின் அரசியல் கற்றவர். நட்புவட்டம் பெருக்க வழி சொல்லிக்கொடுப்பவர். இவரிடம் பகைவளர்க்க சண்டையிட்டாலும் தட்டிக்கொடுத்து நட்புபாராட்டும் அன்புள்ளம். அவர்தாங்க நம்ம ரஹீம் கஸாலி இவர் புலன்விசாரணை தொடங்கி விட்டால் தப்பிஓடும் முதல் ஆள் நான்தான். பதிவெழுதி தலைப்பு வைப்பவர் மத்தியில் இவர் தலைப்பை கண்டுவிட்டு அப்புறம் பதிவிடுவார். பரபரப்புக்கு மத்தியில் குறிஞ்சிப்பூவார் பூத்திருக்கிறது இவர் பதிவில் ஒரு கவிதை இதை கவிதையா நினைச்சுக்கங்க பிளீஸ்.... என்ன பண்றது அதையும் கவிதையா நினைச்சிக்கிறோம்...

 ******************************************************************************

க்கா என்றால் உங்களுக்கு புரிந்திருக்கும். இவர் பதிவுலகின் பலியாடு, பின்னூட்டம் இட்டே பின்னால் வாங்கிக் கொள்ளும் போர்வாள்... பதிவுலகின் வடை, பஜ்ஜி விற்பனையாளர்... நம்ம நாஞ்சில் மனோ... புதிய பதிவர் முதல் ஆதிகால பதிவர்கள் வரை அறிந்த தற்போதைய முகம் இவர் ஒரு நவரச நாயகன்... இவர்க்குள்ளும் ஒளிந்திருக்கும் துயரத்தை தன் நெஞ்சில் பதிந்துப்போன ஒரு வடுவை கவிதையாய் இங்கே இறக்கிவைத்துள்ளார்.


******************************************************************************
வர் நம்ம நண்பருங்க. அழையா விருந்தாளியாக அனைத்து வாசலுக்கும் செல்பவர்..  இவருடையது வாசர்கள் மொய்க்கும் வேடந்தாங்கல் சுவையான விவாதங்கள்... அழகான கருத்துக்கள்.. அற்புதமான படைப்புகள் தருபவர்... அதிகம் வடை வாங்கிய தற்போதைய வள்ளல்.. ஏற்றயிறக்கம் பாராமல் அத்தனை பதிவுக்கும் சொல்லும் பக்குவம்.  இவருக்கு மட்டும்தான். இவருக்கு அப்படிஎன்னதான் இரவு நேர இம்சைகளோ.....


******************************************************************************
அன்பான வாசர்களே இன்றை அறிமுகங்கள் ‌எல்லோருக்கும் தெரிந்தவர்களே இருந்தும் இந்த பதிவுகள் தாங்கள் படிக்காமல் இருந்திருக்கலாம் அதற்காகவே இந்த அறிமுகம்....

இப்பதிவைப்பற்றி தங்களுடைய கருத்தை பதிவு செய்துவிட்டுச் செல்லுங்கள்... 
தமிழ்மணத்தில் தங்கள் வாக்கையும் பதிவுசெய்யுங்கள்...
நன்றி.. நாளை... சந்திப்போம்...
மேலும் வாசிக்க...

Wednesday, May 18, 2011

ச்சைக்கிளி பாண்டியம்மா V/s  திவர்கள்....

பச்சக்கிளி பாண்டியம்மா.. எங்கத்தான் போன சீக்கிறம் வா...


“இதோ  வந்துட்டேன்யா... யோவ் உனக்கு எத்தனை முறை சொல்றேன் அந்த பேரை வச்சி கூப்பிடாதேன்னு... நல்லா வச்சிருக்கிறபாரு பேரை, சும்மா நச்சுன்னு ஒரு பேரு வைய்யா...”

சரி.. சரி.. அதுக்குதான் நம்ம பன்னிக்குட்டி ராமசாமிக்கிட்ட ஐடியா கேட்டிருக்கேன் சீக்கிரமே ஒரு நல்ல பேரா வச்சிடுறேன்...


“யாரு பன்னிக்குட்டி கிட்டயா.. கிழிஞ்சது போ... யோவ் உனக்கு வேற ஆளை கிடைக்கலையா மச்சான் அட்ரா சக்க சிபிக்கிட்ட சொன்னா எப்படி பேருவைப்பாரு தெரியுமா..!”


ஏய்.. தயவு செய்து வாயை மூடி என்னை வம்புல மாட்டவச்சிட்டு போகதே.. சரி வந்த வேலையை பாரு.. நான் சொல்றத இப்ப நீ செய்யனும்..


“உனக்கு வேற வேலையில்லயா.. என்ன வேலை.. ”

இன்னிக்கு வலைச்சரத்தில நல்லதா ஒரு நாலு பேர அறிமுகப்படுத்தி வை..


“உனக்கு வேலை கொடுத்தா நீ என்னை வேலை வாங்குறீயா.. நீயெல்லாம் ஒரு பதிவர்.. அதுலவேற பிரபல பதிவராம்... உன்னை பிரபல பதிவர்ன்னு சொன்ன நாஞ்சில் மனோவ காலிப்பண்ணனும்...”


ஏய்.. விட்ட நீ எல்லாரையும் நாரடிப்ப ஒழுங்க வந்த வேலையை பாரு...


“என்ன பாக்க சொல்ற..”


நேத்து ஏதே பதிவல்லம் படிச்சிட்டு வந்தேன்னு சொன்னியே.. அதைப்பத்தி சொல்லு..  நம்ப பயபுள்ளைக பாத்து சொல்லு...

“என்ன சொல்றது எந்தப்பக்கம் போனாலும் பதிவுன்னு பேர் போட்டு காயவுடறானுங்க... சரி சரி சொல்றேன் நீ கிளம்பு...”


நான் இங்கதான் இருப்பேன்.. நீ  சொல்லு... நான் தான் ஆசிரியர்..


“என்னது ஆசிரியரா பாவம்யா ஜனங்க அங்க பள்ளிக்கொடத்துல அருத்தது போதாதுன்னு இங்கவேற.. சீனா ஐயா உன்னை நம்மி எப்படி கொடுத்தார்ன்னு தெரியல...”


ஏய்.. அடங்க மாட்டியா நீ...

“சரி.. மேட்ருக்கு வர்றேன்... சம்திங் சம்திங்க் -ன்னு இருக்கே ஏதாவது குஜாலா இருக்குன்னு போனா அட்சயதிரிதியை ஸ்பெஷல்- ன்னு போட்டு செம காமடி பண்ணியிருக்கான் கிச்சான்னு ஒருத்தன்.. அப்புறம் அங்கிருந்து மகனே எப்பவாதது மாட்டுவேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்..



அப்புறம் எங்க போன...

“சரி வெயிலா இருக்குன்னு ஒரு இடத்தில் உட்கார்ந்தேன் அங்க Guna-ன்னு ஒருத்தர் பார்த்தது, கேட்டது, விசாரித்தது, தோணியது..  அப்படின்னு போட்டிருந்தார் சரி உள்ளே பேனேன் அங்க பார்த்தா மூன்று முட்டாள்கள் அப்படின்னு ஒரு பதிவு சரி ஏதோ உன்னப்பத்தித்தான் போட்டிறிக்காறாம்ன்னு நம்பி போயிட்டேன்... ஆனா செம கேள்வி கேட்டிருக்கார் மனுஷன்..”

அடி பாண்டியம்மா நானு முட்டாளா.. இரு உனக்கு அப்புறம் இருக்கு..


“சரி உடுய்யா வெயில் காலத்தில இப்படித்தான் இருக்கும். வெயில் காலத்துல என்ன பண்ணனும்ன்னு bigilu ன்னு ஒருத்தர்  நல்லா சொல்லியிருக்கார்.கோடைக்காலம் வந்தாச்சு – வெயிலின் தாக்கத்தை தணிக்க  அதைபடிச்சி வெயிலுக்கு கொஞசம் இதமா இருந்துச்சி இல்லன்னா உண்ணான்ட நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்..

சரி இவ்வளவு சுத்திக்கிட்டு வந்தியே சாப்பிட்டியா..


‌நல்லா கேட்டியா.. நீ வாங்கி கொடுக்காதே... அந்த செலவைகூட யாரு தலையிலாவது கட்டிடு...   சரி.. அப்படியோ போயிகிட்டே இருக்கும் போது ஒரு  டீக்கடை...... கண்ணுல பட்டது சரி சூடா ஏதாவது சாப்பிடலான்னு போன அன்னாத்தே ஜெயலலிதாவிற்கு கலைஞர் ஏற்படுத்தி கொடுத்த அருமையான வாய்ப்பு-ன்னு  ‌பதிவு போட்டு கடையை ரணகலமாக்கிக்கிட்டு இருக்காரு.. நமக்கு ஏன் வம்புன்னு வந்துட்டேன்...


ஏய் அப்படி சொல்லாதே அது நம்ம தல ரஹீம் கஸாலியின்  நண்பரோட பிளாக். அப்புறம்.. 


“யோவ் இருய்யா வர்ரேன்.. ஒரு இடத்தில் உரைகல் அப்பிடின்னு போட்டிருந்தது சரி உறையும், கள்ளும் ஒண்ணா இருக்குமான்னு போன மனுஷன் கல்யாணமாம் கல்யாணம்ன்னு போட்டு செம காமடி பண்ணியிருக்காரு.. சிரிச்சி சிரிச்சி ‌ரெக்கை வலிக்குது...”


பராவாயில்லை நீ கூட சிரி்க்கறமாதிரியான பதிவா... அப்ப கண்டிப்பா நானும் போய் பார்க்குறேன்...


“ சும்மா படிச்சிட்டு வந்துடாதே... ஓட்டுப்போட்டுட்டு வா....”
 

எல்லாம் எங்களுக்கு தெரியும்.. நீ மேலச் சொல்லு...

“ம்.. அப்படியே சிரிச்சிக்கிட்டு போகும்போது கேள்வியும் நானே பதிலும் நானே ன்னு ஏதோ புலம்பிக்கிட்டு இருந்தாரு... அவேரே கேள்விகேப்பாராம் அவரே பதிலும் சொல்லுவாராம்.. அப்ப அவரு வாழ்க்கை எப்ப எப்படி இருக்கும்? பாரு...




அடியே பாண்டியம்மா அப்படியெல்லாம் மரியாதை இல்லாம பேசக்கூடாது... அப்புறம்  எல்லோரும் சேர்ந்து நம்ம கடையை மூடிடப்போறாங்க...



“அம்புட்டு பயமா உனக்கு.. அங்க ஒருத்தன் தமிழ் திருடன் ன்னு அவனே சொல்லிக்கிறான்..  நீ எப்பவாவது ஜெயிச்சியிக்கியா... அப்படி ஜெயிக்க என்ன என்ன இருக்கனம்ன்னு ஒரு லிஸ்ட்டே வச்சிருக்காரு..~ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான்இருக்கிறது?~ இதை தெரிஞ்சிக்கோ அப்பத்தான் நீ ஜெயிப்ப....



எல்லா எனக்கு தெரியும் உன் வேலையை பாரு...



”அப்புறம் மனம் கொண்டவன் பதிவுக்கு போனேன்  மண்பானைத் தண்ணீர்
வச்சிருந்தான் அதை குடிச்சிட்டு அப்படியே கொஞ்சம் ஓய்வும் எடுத்துக்கிட்டேன்...”

நீ கிழிச்ச கிழிக்கு ஓய்வு வேற...


“அடுத்து எதாவது தெரிஞ்சிக்காலதம்ன்னு தமிழ்ச் சொல்லாக்கம் போய் பார்த்தேன் நல்ல ஆங்கில சொல்லுக்கு விளக்கம் புறவரித்து புதுசு புதுசா  கத்துக்கிட்டு ஆளுவிடுங்கடா சாமின்னு கிளம்பிட்டேன்...



“அங்கிருந்து இங்க வந்த நீ என் உயிர வாங்கிக்கிட்டு இருக்கே....”



சரி சரி.. நீ கிளம்பு ஜனங்களுக்கு நான் மெசேஜ் சொல்லனும்..

“சரி இந்த ‌செல்போன்...”


ஏன்..?


”இதல நெறைய மெசேஜ் இருக்கு..”


எடுடா அருவாள.. வரவர நீ கூட செல்வா கதைகள்.!
மாதிரி மொக்க போட ஆரம்பிச்சிட்ட..


நண்பர்களே... இன்று பச்சக்கிளி பாண்டியம்மா சில பதிவர்களின் பதிவைப்பற்றி ரொம்ப நக்கலா அறிமுகம் செஞ்சி வச்சது.. அதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லீங்க.. ஏதாவது திட்டனும்னா அந்த கிளியை திட்டிக்கங்க...”



(இது புதிய முயற்சிக்காகத்தான் யாரும் தவறாக எண்ணவேண்டாம்)
நன்றி..
நாளை வேறொறு புதிய வித்தியாசமான அறிமுகத்துடன் சந்திக்கிறேன்...
மேலும் வாசிக்க...

Tuesday, May 17, 2011

மாற்றான் தோட்டத்தில் னம் வீசும் லர்கள்...

பொதுவாக நான் கவிதைகளை அதிகம் ரசிப்பவன்...  பாரதியின் கவிதைகள் எனக்கு வீரத்தை சொல்லிக் கொடுத்தது, வைரமுத்துவின் கவிதைகள் கரு ஆழத்தை சொல்லிக் கொடுத்தது, மு.மேத்தாவின் கவிதைகள் யதார்தத்தை அறிய செய்தது.  எதுகை மோனைக்கு வாலி, தத்துவத்துக்கு அப்துல் ரஹ்மான்,  காதலுக்கு தபுசங்கர் இன்னும் இருக்கும் அத்தனைப்பேரின் கவிதையும் வாசித்து அந்த கவிகைளில் உழண்டு புரண்டு எழுந்தவன் நான்... 

பதிவுலகம் வந்தப்பிறகு அனைவருடைய கவிதைகளை வாசித்து பிரமித்திருக்கிறேன். என் கவிதைகள்  எப்படி என்று எனக்கு சொல்ல தெரியவில்லை, ஒருவேளை அவைகள் கவிதைக்கான பரிவாரங்கள் கட்டிக்கொள்ள வில்லையென்றாலும் ஒரு பிஞ்சுக்குழந்தையின் பாதத்தில் மிதிப்படும் இன்பங்கள் மட்டுமே போதும் அதற்கு கவிதைக்கான அங்கீகாரம் கிடைத்துவிடும்.

பொதுவாக ஒரு நாளைக்கு 20 அல்லது 30 பதிவுகளுக்கு செல்கிறேன் என்றால் அதில் கவிதை பதிவு என் கண்களுக்கு பட்டுவிட்டால் கண்டிப்பாக அதில் படித்து கருத்துச் சொல்லி பின்னூட்டம் இடாமல் திரும்ப மாட்டேன்.. அது போன்று நான் படித்த கவிதைகளின் நான் பெற்ற பூக்களில் வாசத்தை இங்கே தங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்....

****************************************************************************

 நகரத்து வாசத்தில் மறந்துப்போகும் 
கிராமத்து வாசனை...

கருவேல மரத்து  முள்தைத்தாளும் 
காடு கழனி நடந்த கதை 
நம் மனம் மறக்குமா..?...

வசந்த மண்டபத்தில்  தூண்களில் தலைசாய்த்து
கண்அயர்கையில்
என்னை தாலாட்டிவிட்டுப் போகிறது

(பதிவர் பெயர் : மகேந்திரன் பன்னீர்செல்வம் / தூத்துக்குடி)

****************************************************************************

கடம்பவன பூங்கா  விலிருந்து 
ராகத்துடன் பாடுகிறது ஒரு குயில்

முரண்பாடுகளின்றி
எங்கே முடிகிறது இந்த வாழ்க்கை....

உனக்கும் எனக்கும்
ஆறுதல் சொல்ல இருக்கவே இருக்கிறது
 

(பதிவர் பெயர் : தெரியவில்லை / மதுரை)

****************************************************************************
  
மோதி உடைப்படாமல்
வழிவிடுவதில்லை எந்த சிகரங்களும்..

மூச்சடைக்காமல் சிக்குவதில்லை
எந்த முத்துக்களும்...

மாலதி யின் சிந்தனைகள் வெற்றிக்கு வழிக்காட்டும்  


(பதிவர் பெயர் : மாலதி )

****************************************************************************
 
இன்னும் முழுதாக முடியவில்லை
அனைவரின் முகம்பார்க்கும் ஆசைகள்...
 
முகம்பார்த்தபின் இக்கரையும்...அக்கறையும்...
ஒன்று  எனசோர்ந்துப்போகிறேன்..

கருவறையில்  தொடங்கி 
வாழ்க்கை நீள்கிறது தேடலிலே...

(பதிவர் பெயர் : தெரியவில்லை / மதுரை)


****************************************************************************
புது உலகம் போனாலும்  நீங்காது உன் நினைவுகள்
தமிழென்று எழுதினாலும் அதில்
நிறைந்திருப்பது நீயே...

தேக்கி தேக்கி வைக்கிறேன்
இருந்தும் உதிர்ந்து விடுகிறது
கசியும் உன் நினைவுகளை  நான் என்னதான் செய்ய...!

(பதிவர் பெயர் : வெங்கட் / சென்னை)

****************************************************************************
 சுவர்கள் பூசிக்கொள்ளலாம் வண்ணங்கள்..
ஆனால் நீ.. சுவர் தேடும் சித்திரங்கள்..

என் வாழ்க்கையை வசந்தமாக்கிவிட்டு
தேய்பிறையோடு சென்றவளே...
 
உன் நினைவுளையும்...
உன் நிகழ்வுகளையும்...


(பதிவர் பெயர் : சித்தாரா மகேஷ் / மதுரை)

****************************************************************************

சின்ன சின்ன சொற்கள் எடுத்து
கோவி கவிதைகள்  கோர்க்கப்பட்டுள்ளது...

காதல் வந்து கொஞ்சும் இங்கே..
காதல் வந்து ‌கெஞ்சும்..
.
பூ கொடுத்து புல்லரிக்கும்
காதல் கவியெடுத்து ஆர்பரிக்கும்...


(பதிவர் பெயர் : கோவி / கோவை)

****************************************************************************

 கவிதை எழுத அணிதிரளும் காகிதங்கள்
கிறுக்கல்கள் 100
  முடிந்தப்பின்
ஒரு சிலவே

கவிதை வாங்கி கருத்தரிக்கும்...

கசங்கி தெரித்தோடும் தாள்களுக்கு
விடுதலை என்னிடமிருந்து..
சில காகிதங்களுக்கு என் கவிதை
ஒரு இனிய 
சுமைகள்   தான்..

(பதிவர் பெயர் : சத்யன் / திருச்சி)


****************************************************************************



என் உயிர் அனுக்களில் இருந்துப் புறப்படும்
‌‌அத்தனை எழுத்துக்களும்
என் அம்மாவிற்கு சமர்ப்பணம்
...

எப்போதும் கவிதைக்கான 
சிந்தனைகள்தான் எனக்கு
கவிதைகள் கருவாக

தனிமையில் சில நிமிடங்கள் காத்திருக்கிறேன் நான்..


(பதிவர் பெயர் : ராசை நேந்திரன் / ராசிபுரம்)

****************************************************************************


காற்று வழிவந்து ஒரு சில 
 ஷிவா காதல் கவிதை.. வரிகள்

பூவின் பாஷையும் புரிந்துக் கொள்ளலாம்

பட்டாம்பூச்சிகளுக்கு பாடம் சொல்லலாம்
இங்கே காதல் வந்து விட்டால் 

பொய்யும் மெய்யாகும்...  
உண்மைதானே...

(பதிவர் பெயர் :சிவா / தர்மபுரி)

****************************************************************************
சிகப்பு வண்ணத்தில் உள்ளவைகள் அறிமுக வலைப்பூ
நீலவண்ணத்தில் உள்ளவை அறிமுக பதிவு...

நண்பர்களே... மேற்கண்ட கவிதை வடிவம் எல்லாம் என்னுடைய கற்பனையே இவைகள் அந்த வலைப்பூ மற்றும் பதிவின் தலைப்புக்கு ஏற்ப எழுதியுள்ளேன்...  ரசித்திருந்தால் கருத்துச் சொல்லுங்கள்... 

கவிதை வீதியின் சமீபத்திய பதிவு :  வானம் வசப்படும்...


தமிழ்மணத்தில் வாக்களியுங்கள்... 

நன்றி.. நாளை சந்திப்போம்....

மேலும் வாசிக்க...

Monday, May 16, 2011

பூக்கடைக்கு ரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)



“இந்த பதிவுலகம் வந்ததற்கான முதல் நோக்கம் எப்படியாவது ஒரு ஆண்டுக்குள் 10,00,000 ஹிட்ஸ் எடுத்து தமிழ் மணம் உள்பட அனைத்து தரவரிசையிலும் தொடர்ந்து முதலிடத்தில் வகிக்கவேண்டும்”  அப்படிங்கிற ஆசையெல்லாம் இல்லங்க என் மூளை யோசித்ததை இந்த உலகம் வாசிக்க வேண்டும் என்று விளையாட்ட நுழைஞ்சேனுங்க...  (என் தளம் ஆரம்பிச்சி கொடுத்தவர் வேறயாரும் இல்லிங்க நம்ம வேடந்தாங்கல் கரண் தான் அவருக்கு ஒரு நன்றி)---- இனி என்கதை...



என் ‌நாட்குறிப்புகளில் புழுவாய் இருந்து... வெகுகாலங்கலாய் மௌனம் காத்து... தற்போது சிறகுவளர்த்து... வண்ணத்துப்பூச்சியாய் இந்த வலைப்பூக்களை மொய்த்துக்கொண்டிருக்கும் என் எழுத்துகளுக்கும், எனக்கும் அங்கீகாரம் தந்த இந்த பதிவுலக நண்பர்களுக்கும், இனிய தமிழ் வாசக நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

வளர்ந்து வரும் தற்போதை நிலையில் மிகப்பெரிய பணியாக ‌வலைச்சர ஆசிரியர் பணியை தந்து அழகுபார்த்த மரியாதைக்குரிய சீனா ஐயா அவர்களுக்கு என் வணக்கங்களும்... நன்றிகளும்...




முதல் பதிவில் என் சுயபுராணத்தை அறங்கேற்ற வந்திருக்கிறேன்.. இதைப் படிக்கும் போதே ஒரு ‌வேண்டுகோள்... தயவு கூர்ந்து ஏதாவது ஒரு மனம்கவர்ந்த பதிவை சொடுக்கி அது எப்படியுள்ளது என்று கருத்து சொல்லிவிட்டுச் சொல்லுங்கள்...


மேல் நிலை வகுப்பு படிக்கும்போது சக தோழர்கள் கவிதை எழுதுவதைப்பார்த்து விளையாட்டாய் கிறுக்க ஆரம்பித்தேன்.  அது வளர்ந்து கவித்துவம் அடைந்து நாலெல்லாம் என் நாட்குறிப்புளிலும், வெள்ளைத்தாள்களிலும் அவைகளை சேகரித்து வைத்து பின்பு அவையே என் வாழ்க்கைப்பாதையை என்னை அறியாமலயே வசந்தகாலமாக்கியது.

என் கவிதைகளில் அதிகம் ஆட்கொண்டிருப்பது என்னுடைய வறுமையும், என்னுடைய இயலாமையும், என்னுடைய கோவமும்தான். என்னசெய்ய வறுமைக்கோட்டுக்மேல் செல்லலாம் என்றால் அது தொடும் தூரத்தில் கூட இல்லை. என்  கவிதையில் இருப்பது தனிஒருவனின் கோவமல்ல அது சமுதாயத்தின் கோவம்.


கவிதைகள் என்னை கவலைகளிலிருந்து காப்பாற்றுகிறது.. அவைகள் தான் என் உயிர்அணுக்களின் உற்பத்திக்கு தற்போது உறுதுணையாக இருக்கிறது. வாட்டம் தரும் வாடை காற்றில் நான் வாடாமல் இருக்கவும், ஏக்கம் தரும் உலக இன்பத்திலிருந்து என்னை ஒதுக்கி காக்கவும், வறுமைச்சூரியக் என்னை சுட்டாலும் அந்த வெப்பத்தை தனிக்கவும், வாழ்க்கையை வழிநடத்த தற்போது துணையாக இருப்பது என் கவிதைகளே...

பதிவுக்கு வந்துவிட்டேன்.... என் முதல் கவிதை இங்கே பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

சிறகுகள் எதற்கு பறப்பதற்கு...
சிகரங்கள் எதற்கு மிதிப்பதற்கு...
சமுத்திரம் எதற்கு குடிப்பதற்கு...
 

தூண்டுகோள்கள் தேவைப்படுவதில்லை
மின்மினிகளுக்கு...
 

உன்னை நம்பி தூண்டில்போடு
சிக்கிக்கொள்ளும்
சில சாதனைகள்...


ஒரு மாலை வேலையில் முதல் முதலாய் கவிதை ‌எழுத, நண்பர்கள் ஐந்து பேர் அமர்ந்து எழுதிய கவிதைகளில் என் கவிதை சிறந்ததென்று சான்று கிடைக்க என்னைக்கேட்காமலேயே மகுடங்கள் அணிந்துக் கொண்டு, சிறகு வளர்த்து கூட்டிலிருந்து வெளிப்படும் சிட்டுக்குருவிப்போல் இந்த பூமிப்பந்து முழுவதும் சிறகுவிரித்தது என் கவிதை... அன்றிலிருந்து தான் துவங்கியது என் ஜென்மமும்....


ஒரு கவிஞனுக்கு ஒரு சம்பவத்தை, ஒரு சூழலை, ஒரு நி‌கழ்ச்சியை அறிய வில்லை என்றாலும் அதனை கவிதையாக்கும் திறன் இருக்கவேண்டும்.  மரணத்‌தைப்பற்றி கவிதை எழுத நான் இறந்துப்பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லைதானே.... அந்த திறனுக்குள் தான் என் கவிதைகள் இருக்கும்.


என் தளத்தில் நான் முதல் பதிவாக வெளியிட்டது ஒரு கவிதைதான். இது என் காதலிக்கு திருமணம் நடப்பதுபோன்று மனநிலையில் எழுதப்பட்டது. காதலிக்கு கல்யாணம்... கண்டிப்பாக இதில் உண்மையான அனுபவம் இல்லை. இருந்தும் அந்த வலியை என்னால் அந்த கவிதையில் கொடுக்க முடிந்தது 
  
அன்றாட நிகழ்வுகள் தனக்கும் கவிதையை வைத்திருக்கும். அந்த நிகழ்வுகளின் தொகுப்பாக பல கவிதைகள்..  இவைகள் எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு யாதார்த்த நிகழ்வுதான்.  பாரதி வன்மையாய் ஏசுவதற்குக்கூட கவிதையைதானே பயன்படுத்தினான். அப்படி தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள் இங்கே கவிதையில் அடைப்பட்டுக்கிடக்கிறது... அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...



தன்னம்பிக்கை குறித்த கவிதை எழுதாமல் எந்த கவிஞனும் முழுமைப்பெற்றதில்லை. இந்த சமுகம்.. இந்த நாடு... இந்த சுதந்திரம்... இந்த வாழ்க்கை... எல்லாம் உருவானது. நம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையில் தானே இந்த உலகம் குரங்கிலிருந்து தோலுரித்து மனிதத்தை உடுத்திக் கொண்டது..  இதோ என் தன்னம்பிக்கை குறித்த கவிதைகள்.



கவிஞர்களின் உண்மையான சுபாவமே கோவம்தான். அதனால் தான் பாரதியின் கவிதைகள் இன்னும் அந்த சீற்றம் குறையாமல் இருக்கிறது.  என்னுடைய கவிதையும், கெட்டுக்கிடக்கும் சில அவலங்கள் மீது கோவப்படும். அந்த கோவத்தின் வெளிப்பாடுதான் இந்த கவிதைகள்...



ஒரு தவறை தாம் செய்தால் குற்றமற்றதாக நினைக்கிறோம். அதே தவறை பிறர் செய்யும் போது அதுமிகப்பெரிய குற்றமாக கருதுகிறோம். அதெப்படி ஒரே தவறு தனக்கும் மற்றவர்க்கும் வித்தியாசப்படும். இந்தகருத்தை மையப்படுத்தி நான் எழுதிய கட்டுரைகள்  நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது..  அவை 

 

கவிதை மட்டுமே எழுதிக்கொண்டிருந்த நான் வாசகர்கள் மற்றும், மற்ற பதிவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கட்டுரைகள், வாரம் ஒரு தகவல், சினிமா விமர்சனம், நகைச்சுவைகள், மொக்கை பதிவுகள் என் ஜனரஞ்சகமாகவும் என்னை மாற்றிக்கொண்டேன்.  அதன் பிறகுதான் என் வலைப்பூ மணவீச ஆரம்பித்தது.. அவற்றில் சில உங்களுக்காக...


பொது கட்டுரைகள் ... 

வாரம் ஒரு தகவல் என்று தலைப்பில்... 

 நகைச்சுவை 


இன்னும் நிறைய வந்துக் கொண்டிருக்கும் உங்களின் ஆதரவு இருந்தால். 

ஆரம்பத்தில் தடம் தெரியாமல் சென்றுக்கொண்டிருந்தேன். மற்ற பதிவுகளை படிக்கும் நேரமும் எனக்கு கிடைக்காமல் இருந்தது. அதன் பிறகு மூத்த பதிவர்கள் நண்பர் ‌தொப்பி தொப்பி, கே.ஆர்.பி.செந்தில், பனித்துளி சங்கர், ரஹிம் கஸாலி போன்றோரின் பதிவுகளை படித்தபின் நாமும் தரமான பதிவுகளை தரவேண்டும் என்ற நோக்கில் பதிவிட ஆரம்பித்தேன். 100-க்கு 90 சதவீதப்பதிவுகள் சொந்தப்பதிவுகளாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். காபி டூ பேஸ்ட் பதிவில் எனக்கும் அதிக ஆர்வம் இல்லை அது நம் தனித்தன்மையை எடுத்துக்காட்டாது.
 
ஆகையால் தோழர்களே  பதிவுளகில் ஒன்று கூடி தமிழ் பருகுவோம்... நட்பு வட்டத்தை வளர்த்துக் கொள்வோம். பகைவளர்த்து எல்லைவகுக்க நாம் என்ன காட்டினமா... கற்பனைக்கும் கருத்துக்கும் மட்டும் செவிச்சாய்ப்போம்... 
பிறகு இந்த தமிழ் வலைப்பூ உலகமெங்கும் அடர்ந்துப்படரும்.....


நன்றி..! வணக்கம்..!
 

கவிதை வீதியில் இன்றை பதிவு : வானம் வசப்படும்...

 
அன்புடன் # கவிதை வீதி # சௌந்தர்
அறிமுகங்களுடன் நாளை சந்திக்கிறேன்...

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது