07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, November 12, 2011

வாங்க கதை பேசுவோம்!

பாட்டி வடை சுட்ட கதையிலிருந்து ஆரம்பித்து நம் எல்லோருக்கும் வெறும் சாதம் மட்டும் ஊட்டாமல் கதையையும் சேர்த்தே ஊட்டிப் பழக்கப்படுத்திவிட்டார்கள்! கதை கேட்காமல் இருக்கவே முடிவதில்லை நம்மால்.

சல்லடை போட்டு சலித்தால் இணையத்தில் சில நல்ல சிறுகதைகள் சிக்கும். நான் தேடியவரை நல்ல கதைகள் என்று எனக்குத் தோன்றியவற்றை இன்று பார்ப்போம்.

அடுக்கடுக்காக சம்பவங்கள், கால ஓட்டத்தில் முன்னும் பின்னும் நகரும் நினைவுகள், நிறைவேறாத காதலின் பௌதிகமான சாட்சியாக இருந்த காபி டம்ளரைத் (மட்டுமாவது) தனதாக்கிக் கொண்டுவிடவேண்டும் என்ற உந்துதல், புறவயச் சூழல் பற்றிய குறிப்புகள் என்று பல விதங்களில் இந்தச் சிறுகதை சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.

முதல் பாராவிலேயே கதை தொடங்கிவிடுகிறது. கதையின் கரு - கத்தி மேல் நடக்கும் வித்தை. சேதமில்லாமல் நடந்திருக்கிறார். இன்னமும் கொஞ்சம் நன்றாக எழுதி இருக்கப்பட வேண்டிய கதை. பத்மாவின் கவிதைகளையும் படித்துப் பாருங்கள்.

அடுத்த கதை பற்றிப் பார்க்குமுன் ரமணி சாரின் இந்தக் கவிதையைப் படித்துவிடுங்கள். படித்துவிட்டீர்களா? நன்று. கடைசிப் பாடலை மட்டும் இன்னொருமுறை படித்துவிடுங்கள். ஆயிற்றா? இப்போது இந்தக் கதையைப் படியுங்கள்.

வித்யா சுப்ரமணியம் மேடத்திற்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால் பிடித்த கதைகள் என்று வரும்போது இந்தக் கதையைப் பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும் என்ற உந்துதல் காரணமாக இதைப் பகிர்கிறேன். இந்தக் கதை ஒரு வகையில் என்னை உலுக்கிவிட்டது என்றே சொல்வேன்.

எது சரி எது தவறு என்று யாருமே அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. இதை மீண்டும் கதைவடிவில் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதோ உங்களுக்கும்.

நகைச்சுவையையும் காதலையும் கலந்து கதம்பமாகக் கொடுத்திருகிறார் எழுத்தாளர். அச்சில் ஏறிய முதல் கதை என்பது கூடுதல் மகிழ்ச்சி.

15 comments:

  1. நச்சென்று சில கதைகளை பகிர்ந்திருக்கீங்க சகோ.நிச்சயம் வாசிப்பேன்..தொடருங்க அசத்தலாய்..

    ReplyDelete
  2. நேரம் கிடைக்கும் பொழுது வாசிக்கிறேன், பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  3. மிகச்சிறந்த அருமையான அறிமுகங்கள் என்று சொல்வதைவிட, மிகச்சிறப்பான படைப்புகளுக்கு மிகச்சரியான திசைகாட்டி போல திரு கோபி அவர்கள் திகழ்ந்துள்ளார் என்பது ஒருவேளை சரியாக இருக்கலாம்.

    மிகவும் சந்தோஷம்.

    அந்த அருமையான படைப்புகளை மீண்டும் படிக்க நினைவூட்டியதற்கு நன்றி.

    அடையாளம் காட்டப்பட்டுள்ள அருமையான படைப்பாளிகள் அனைவருக்கும், என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  4. எனது வலைத்தளத்தையும் சிறுகதையையும் அன்புடன் அறிமுகம் செய்து வைத்ததற்கு இதயங்கனிந்த நன்றி சகோதரர் கோபி ராமமூர்த்தி!

    ReplyDelete
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சிறுகதைப் பதிவுக்கு வாழ்த்துக்கள்! அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. தங்களால் எனது பதிவு
    அறிமுகம் செய்யப்பட்டதை மிகப் பெரிய
    அங்கீகாரமாகக் கருதுகிறேன்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. அனைத்தும் நல்ல அறிமுகப்பதிவுகள்.

    ReplyDelete
  9. என்னை அறிமுகப் படுத்தியதிற்கு நன்றி, கோபி!

    ReplyDelete
  10. தெரிந்த பதிவர்கள் எனினும் எனது ரசனைக்குரிய முக்கிய பதிவர்களைக் குறிப்பிட்டமைக்கு மகிழ்ச்சி

    ReplyDelete
  11. @ஆசியா உமர், மிக்க நன்றி

    @சூர்யஜீவா, மிக்க நன்றி

    @தமிழ்வாசி, மிக்க நன்றி

    @வை.கோபாலகிருஷ்ணன், மிக்க நன்றி

    @மனோ சாமிநாதன், மிக்க நன்றி

    @ஜலீலா கமால், மிக்க நன்றி

    @மிடில் கிளாஸ் மாதவி, மிக்க நன்றி

    @ரமணி, மிக்க நன்றி

    @சாகம்பரி, மிக்க நன்றி

    @ஆரண்யநிவாஸ், மிக்க நன்றி

    @ராஜி, மிக்க நன்றி

    ReplyDelete
  12. நல்ல அறிமுகங்கள்.... அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  13. @வெங்கட் நாகராஜ், மிக்க நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது