எழிலான அறிமுகப்பதிவுகள் எடுத்தியம்பும் ஏழாம் நாள்
➦➠ by:
பூமகள்
எழிலான அறிமுகப்பதிவுகள் எடுத்தியம்பும் ஏழாம் நாள்
அன்பு வலைச்சர வல்லமை படைத்த பதிவர்களுக்கு,
பூவின் வணக்கங்கள். இன்று கடைசியாய் பார்க்கப் போகும் பதிவுலகுக்கு வெளியில்
இருக்கும் நல்ல பதிவர் அக்னி.
அக்னி:
இவரின் கவி வரிகள் பல சுடர்விடும் நெருப்பென நம்மைத் தொடும். அவை,
அணையாமல் இருக்கும் விளக்குகளாக என்றும் மனமெங்கும் மிதந்து கொண்டிருக்கும். இவர் பதிவுகள்
பல பரிமாணங்கள் கொண்டவை.
இவரின் ஒரு கவிதை இதோ.
பல கைகள் சிந்தும் பருக்கைகள்...
தினமொரு சுவை தேடிய நாவு...
சமைத்துவைத்திருந்ததை மறுத்துச்,
சமைக்கவைத்துண்ட கணங்கள்...
கோபவேளைகளில்,
பறக்கும் தட்டங்களாகிய
உணவுத் தட்டங்கள்...
கள்ளத்தீன் தின்று,
பசியடங்கிப் போனபின்
வீணடிக்கப்பட்ட உணவுகள்...
முதல்நாள் மீதத்தை
மறுத்தொதுக்கிய
மறுநாட்கள்...
தினமும் சாதமாவெனப்
பழித்துண்ட
பலநாட்கள்...
உணவு தேடி வந்ததால்,
அன்று தெரியாத அருமை..,
இன்று தெரிகின்றது...
சிந்தும் ஒரு பருக்கைச் சோற்றில்,
பல வெறுமை வயிறுகள்
தெரிகின்றன...
தவறிச் சிந்திப் போகையில்,
பொறுக்கிச் சேர்த்துக் கொள்கின்றேன்...
எங்கோ ஒரு மூலையில்
நிகழ்ந்துகொண்டிருக்கும்
பட்டினிச்சாவின் கொடுமையை
இந்தச் சோற்றுப் பருக்கை
போக்கிவிடாதுதான்...
ஆனால்,
பல கைகள் வீணடிக்கும் பருக்கைகள்
ஒருவனுக்கு ஒருவேளை உணவாகலாம்...
ஒருவேளை அவனுக்கு உயிராகலாம்...
புரியாமல்,
அன்றைய நான் ஒருவன்,
என்னைக் கேவலமாய்ப் பார்த்து
நகைக்கின்றான்...
சமைத்துவைத்திருந்ததை மறுத்துச்,
சமைக்கவைத்துண்ட கணங்கள்...
கோபவேளைகளில்,
பறக்கும் தட்டங்களாகிய
உணவுத் தட்டங்கள்...
கள்ளத்தீன் தின்று,
பசியடங்கிப் போனபின்
வீணடிக்கப்பட்ட உணவுகள்...
முதல்நாள் மீதத்தை
மறுத்தொதுக்கிய
மறுநாட்கள்...
தினமும் சாதமாவெனப்
பழித்துண்ட
பலநாட்கள்...
உணவு தேடி வந்ததால்,
அன்று தெரியாத அருமை..,
இன்று தெரிகின்றது...
சிந்தும் ஒரு பருக்கைச் சோற்றில்,
பல வெறுமை வயிறுகள்
தெரிகின்றன...
தவறிச் சிந்திப் போகையில்,
பொறுக்கிச் சேர்த்துக் கொள்கின்றேன்...
எங்கோ ஒரு மூலையில்
நிகழ்ந்துகொண்டிருக்கும்
பட்டினிச்சாவின் கொடுமையை
இந்தச் சோற்றுப் பருக்கை
போக்கிவிடாதுதான்...
ஆனால்,
பல கைகள் வீணடிக்கும் பருக்கைகள்
ஒருவனுக்கு ஒருவேளை உணவாகலாம்...
ஒருவேளை அவனுக்கு உயிராகலாம்...
புரியாமல்,
அன்றைய நான் ஒருவன்,
என்னைக் கேவலமாய்ப் பார்த்து
நகைக்கின்றான்...
--அக்னி.
அடுத்து நாம் பார்க்க இருக்கும் பதிவுலகிற்கு வெளியில் இருக்கும் பதிவர்
சிவா.ஜி. இவர் பன்முகம் கொண்டவர். படைப்புகள் மூலம் பல அனுபவங்கள் பகிர்பவர்.
இவரின் பல சிறுகதைகள் மிக அற்புதமானவை. இவரின் கவிதை ஒன்று இதோ..
சிவா.ஜி :
வெடித்த வயல்
முப்போகம் விளைந்து
முன்னவரைக் காத்த
மண்ணவள்.....
ஈரமிழந்து இறுகி...இன்று
கோரமாய்த் தெரிகிறாள்!
சுரந்து வற்றிய மடியாய்
பரந்து கிடக்கும்
வெடித்த வயல்!
பயிர் விளையா பருவத்தில்
காசழுத்தம் குறைந்ததால்
வீட்டிலடிக்கும் புயல்!
விரும்பாது பெற்ற
விவசாயி நிலை....
இயற்கையும் மனிதனும்
இணைந்து நடத்திய கொலை!
இதற்கு உழவனின்
உயிர்தானா விலை?
முன்னவரைக் காத்த
மண்ணவள்.....
ஈரமிழந்து இறுகி...இன்று
கோரமாய்த் தெரிகிறாள்!
சுரந்து வற்றிய மடியாய்
பரந்து கிடக்கும்
வெடித்த வயல்!
பயிர் விளையா பருவத்தில்
காசழுத்தம் குறைந்ததால்
வீட்டிலடிக்கும் புயல்!
விரும்பாது பெற்ற
விவசாயி நிலை....
இயற்கையும் மனிதனும்
இணைந்து நடத்திய கொலை!
இதற்கு உழவனின்
உயிர்தானா விலை?
-சிவா.ஜி.
சரி அன்பர்களே.. இனி இன்றைய அறிமுகங்களைச் சந்திப்போமா??!!
‘எமக்கு தொழில் கவிதை’ என்ற தலைப்புடன் ஆரம்பிக்கும்
இவர் வலைப்பூவில் 2010 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். இவரது, பாசத் தீ கவிதை,
அப்பாவுக்கும் மகனுக்குமான பாசப்பிணைப்பைத் தலைமுறைகள் தாண்டி சொல்கிறார். அருமை. இவரின்
குட்டி இளவரசி
என்ற கவிதை குட்டிக் குட்டி கவிதைகளால் கட்டிப் போடுகிறது.
2. நிலாப் பெண்
இவரது தளம் காதல் கவிதைகளால் பெரும்பாலும் நிரம்பியிருக்கிறது.
இவர் 2008 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். சில சமையல் குறிப்புகளும்
காணக் கிடைக்கின்றன. காதல் கவிதை தவிர்த்த இவரின் ஐயகோ! கவிதை,
வெகுவாக ரசிக்க வைத்தது. நான் யாரெனில்..
என்ற கவிதை, இக்கால நெடுந்தொடர் குரித்துச் சாடுகிறது.
3. "ஷஃபிக்ஸ்"
இவர் அறிவியல், ஆரோக்கியம், சிறுகதை என
பல கிளைகளில் எழுதி வந்தாலும் இவரின் கவிதைகளே பதிவுகளில் அதிக இடம்பிடிக்கிறது. எண்ண அலைகள்
என்ற கவிதையில் சமூகத்தின் முக்கிய பிரச்சனியாயைச் சாடுகிறார். இவரின் கணப் பொழுதுகள்
சொல்லும் வலி அதிகம்.
4. ரேகுப்தி
இவர் 2005 ஆண்டு முதல் எழுதி
வருகிறார். இவரின் முகம்வழி நுரைத்தொழுகும் சூனியம் என்ற கவிதை மிக அருமையாக வடித்திருக்கிறார். சிதைதல் என்ற கவிதையில்
வரிகள் சொல்லும் வலி பெரியது.
5. சொல்வேந்தனின்
சிந்தனைத் துளிகள் – தாமரை செல்வன்
ரொம்ப சாதாரணமான மனிதன் என்ற விளக்கத்துடன் ஆரம்பிக்கும்
இவரது வலைப்பூ பல்சுவைகளையும் தன்னிடம் கொண்டிருக்கிறது. எந்தக் கேள்வியோடு இவருடம்
வந்தாலும் தகுந்த அறிவியல் சார்ந்த ஆதரங்கலோடான தெளிவான பதிலை இவரிடமிருந்து பெறலாம்.
பதிவுலகுக்கு வெளியில் இவர் பதிவுகள் பலவற்றை தமிழ் மன்றத் தளத்தில் படித்தமையால் இவரது
எழுத்தாழுமை, இலக்கியப் புலமை எனக்கு நன்கு
பரிச்சயம். தாமரை பதில்கள்
– 71 – 76 என்ற பதிவு போல் பல பதிவுகள் இவரிடம் கேட்ட கேள்விகளுக்கு
விளக்கமளிக்கும் பதிவாக அமைந்திருக்கிறது. மழை! என்ற இவரின் கவிதை கிராமியமாய் பொழிகிறது
மனமெங்கும்.
6. அன்பே
சிவம் – முரளிக்குமார்.
அனுபவம், கிறுக்கல்கள், சிறுகதை, இசை என இவரின்
எழுத்துகள் பல பிரிவுகளில் பயணிக்கின்றன. இவரின் முகப்புக்கவிதை,
உன் ஆயிரம் நினைவுகளை
கிளர்த்தியெழுப்ப,
எங்கிருந்தோ
பறந்துவரும்
ஒற்றைத் தலைமுடி
போதுமானதாயிருக்கிறது.
மனதை கொள்ளை கொள்கிறது. பாட்டி, என்றொரு
தேவதை. என்ற கவிதை நம் பாட்டியோடு நாம் உறவாடிய நொடிகளை நினைவூட்டுகிறது. இவரின்
வலைப்பூ வடிவமைப்பு அருமையாக உள்ளது,
இவர் 2007 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். இவரின் தேமாங்காய்,
புளிமாங்காய் கவிதை சொற்கட்டுகளால் மேட்டு கட்டுகிறது. மழலைக்கவிதையொன்று..!
என்ற கவிதை, மழலைகள் பற்றிச் சொல்லி மகிழ வைக்கிறார்.
இவரின் வலைப்பூ,
கதைகளாலும், அனுபவப் பகிர்வுகளாலும் நிரம்பியிருக்கிறது. இவரின் தொடர்கதைகள் மற்றும்
சிறுகதைகள் வெகு சுவாரஸ்யமானவை. அனுபவப் பகிர்வில் அட்டக்கத்தி படத்தை நினைவூட்டும்,
ஆசை ஒரு புல்வெளி
என்ற அனுபவப் பதிவு. இவரின் மதிய உலா மற்றொரு
வகை.
என்ன நண்பர்களே.. இன்றைய அறிமுகங்கள் உங்களுக்கு
அறிமுகமாகிவிட்டார்கள் அல்லவா??!!
இன்றோடு எனது வலைச்சரப் பணி இனிதே நிறைவடைகிறது.
பணிச்சுமை தாண்டி, கிடைத்த குறைந்த நேரத்தில் எழுதிய என் பதிவுகள் உங்கள் உள்ளம் நிறைத்திருக்குமெனில்
நான் வெகுவாக மகிழ்வேன். என் குறை, நிறை தாண்டி, என் பணி இனிதே தொடர ஊக்கமளித்த அனைத்து
தாயுள்ளங்கொண்ட பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா ஐயா,
கொடுத்த பணியை என்னால் முடிந்த அளவு பூர்த்தி செய்திருப்பேன் என நம்புகிறேன்.
உங்கள் அனைவரின் அன்போடும், ஆசியோடும் வலைச்சர பணியிலிருந்து விடுபடுகிறேன்.
எனது பூமகளின் பூக்களத்துக்கு
இனி நீங்கள் தொடர்ந்து வந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.
இனிய வணக்கங்களுடன்,
உங்கள் அன்பு,
பூமகள்.