07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 11, 2013

பெரு மகிழ்வுடன் சிறு அறிமுகம் ...

அன்பின் வலைச்சர , மற்றும் தமிழ் பதிவுலக நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள். எங்கோ, எப்படியோ இலக்கின்றி பொழுதை போக்கி கொண்டிருந்த என்னை, என்னின் துளி ஆர்வத்தைக் கண்டு எனக்கு, இளைய/இணைய தமிழின் பெருங்களமாகிய  பதிவுலகத்தை அறிமுகப் படுத்தி, இதுநாள் வரை கைப்பிடித்து வழி நடத்திச் செல்கிறார் எங்கள் மண்ணின் மைந்தர் திரு. கருணாகரசு, இப்படி தான் எனக்கு பதிவுலகின் முதல் அறிமுகம், அவரின் அந்த சிறு விதை இன்று எண்ணற்ற நட்புக்களை எனக்கு வழங்கி இருக்கிறது. 


புதுக்கணவன் மனைவி வீட்டுக்கு முதலில் செல்லுகையில் எந்த மாதிரி தயக்கத்தில், கூச்சத்தில் இருப்பாரோ அந்த அளவு தயக்கத்தில் இருந்த என் மன தயக்கத்தை உடைத்தெறிந்தது கடந்த வருடத்தில் சென்னையில் நடந்த பதிவர் மாநாடு. அனைவரிடமும் இயல்பாக பேசி கலக்க சந்தர்ப்பம் வழங்கிய நண்பர் குழுவினருக்கு நன்றியை தவிர்த்து சொல்ல வேறு எதுவும் வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.


மெத்தப் படித்தவனுமில்லை, தமிழின் பால் அதீத ஆர்வமுமில்லை. மொழியின் வீரியத்தை, அதன் தாக்கத்தை என்னுள் விதைத்தது சில நண்பர்களின் பேச்சும், அவர்களின் எழுத்தும். அதை பற்றி நாம் விரிவாக வரும் நாட்களில் காண்போம். சரி தோழமைகளே, வாருங்கள் நான் இதுவரை கிறுக்கிய மொத்த குப்பைகளில், தேறிய சிலதை பார்ப்போம். தவறுகள் இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து தயங்காமல் அடிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதை முன் கூட்டியே உங்களுக்கு நினைவு படுத்த கடமை பட்டுள்ளேன்.

எனது ஆரம்பால கவிதைகளை என்னாலே மீண்டும் படிக்க இயலாது என்பதால் உங்களை இம்சிக்க விருப்பமின்றி என்னால் அதிகம் இரசிக்க பட்ட சில பதிவுகளை உங்களுக்கு என் அறிமுகமாக வழங்க விழைகிறேன்! அதில் ஒன்று தான் தாயில்லா ஒரு பெண் குழந்தையின் ஏக்கம் அம்மா இல்லா வீடு என்ற கவிதையில் கிறுக்க முனைந்தேன்!

அடுத்து களவு போன கடவுள்வரலாறாகும் வாழ்வு என்ற இரு பதிவுகளையும் எழுத சற்று சிரமப்பட்டேன். எனக்குள் நிறைந்த மகிழ்வை தந்த பதிவுகளும் கூட.. ஊரைவிட்டு சென்னை நோக்கி நகருகையில் மனம் சற்று சந்தோசத்தில் திளைத்தது என்னவோ உண்மை தான், பிறகு இங்கு அடைப்பட்டு கொண்டதும் மீண்டும் மனக்குரங்கு ஊரை பற்றி சிந்திக்கையில் எழுத ஆரம்பித்தது தான் ஊர்ப்பேச்சு  எனும் தொடர்...

அடுத்து எங்களது மண்ணின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக நான் எடுத்த சில படங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன் ... அதையும் ஒரு எட்டு பார்த்துடுங்க .தோழமைகளே .. அடுத்து  சிதையும் கலைத்தமிழ் என்ற கிறுக்கலையும் கிறுக்கி உள்ளேன்.

பெரும்பாலானவர்களை சுழற்றிப் போடும் காதல் என்னையும் விட்டுவைக்கவில்லை, அதை மையப்படுத்தி சிலவற்றை புனைந்துள்ளேன். அவற்றுள் சில உங்களின் பார்வைக்கு 

செம்மண் தேவதை

அப்படியே உன்னையும்

சின்ன சின்ன ஆசைகள்

மேலும் இந்த வாய்ப்பை வழங்கி என்னை பெருமை படுத்திய திரு. சீனா அய்யா அவர்களுக்கும், என்னை இந்த வாரம் முழுதும் தொடரப் போகும் நண்பர்களாகிய உங்களுக்கும் இந்த கிராமத்தானின் உள்ளம் நிறை நன்றிகளும், வணக்கங்களும்....

நிறை மகிழ்வுடன், 

அரசன் 
உ. நா குடிக்காடு  


59 comments:

  1. சுருக்கமாக இருந்தாலும் சுய அறிமுகம் + பகிர்வுகள் பற்றி விவரித்தது அருமை... மறக்காமல் திரு. கருணாகரசு அவர்களையும் குறிப்பிட்டது சிறப்பு... அவருக்கும் வாழ்த்துக்கள்...

    மேலும் அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Eniya vaalththu.
    Vetha.Elankathilakam

    ReplyDelete
  3. இந்த வாரம் வலைச்சரத்திற்கு ஆசிரியராய் பொறுப்பேற்றிருக்கும் இனிய நண்பர் அரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கு நன்றி

    வெற்றி பவனி வாருங்கள் அரசன்

    ReplyDelete
  4. தம்பி வருக வருக அறிமுகம் சிறப்பாக இருக்கிறது. சரி சரி அடிக்க நான் ரெடியா இருக்கேன். பிரம்படி போதுமா ?

    ReplyDelete
  5. வாங்க வாங்க அரசன்... ரொம்ப நாளைக்கப்புறம் எனக்கு தெரிஞ்சவங்க வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் நண்பா. . .கலக்குங்க.. . .

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சகோதரரே விறுவிறுப்பாக உங்கள் ஆசிரியர் பணி
    சிறப்பாகத் தொடரட்டும் !

    ReplyDelete
  8. சுய அறிமுகம் சிறப்பாயுள்ளது. தொடர்ந்து நற்பணியாற்றிட நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வாழ்த்துகள் சகோ..

    ReplyDelete
  10. வணக்கம்
    சே,அரசன்(அண்ணா)

    உங்களைப்பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது நன்றி செய்தவரை கடசி வரை மறக்ககூடாது என்பதை நீங்கள் நிருபித்துள்ளீர்கள் அதுதான் உங்களை எழுத வேண்டும் என்ற சிந்தனை உணர்வை விதைத்தஉயிராயுதம் அவர்தன் திரு,கருணாகரசு அவர்கள் அவரையும் இந்த வேளையில் நினைவு கூறியமைக்கு மிக்க நன்றியண்ணா மேலும் இந்த எழுத்துலகில் வெற்றிவகை சூட எனது வாழ்த்துக்கள் மேலும் சிறப்பான பதிவுகள் மலரட்டும்


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. திண்டுக்கல் தனபாலன் said...
    சுருக்கமாக இருந்தாலும் சுய அறிமுகம் + பகிர்வுகள் பற்றி விவரித்தது அருமை... மறக்காமல் திரு. கருணாகரசு அவர்களையும் குறிப்பிட்டது சிறப்பு... அவருக்கும் வாழ்த்துக்கள்...

    மேலும் அசத்த வாழ்த்துக்கள்...//

    மிகுந்த நன்றிகள் தனபாலன் சார்

    ReplyDelete
  12. kovaikkavi said...
    Eniya vaalththu.
    Vetha.Elankathilakam//

    மிகுந்த நன்றிகள் மேடம்

    ReplyDelete
  13. r.v.saravanan said...
    இந்த வாரம் வலைச்சரத்திற்கு ஆசிரியராய் பொறுப்பேற்றிருக்கும் இனிய நண்பர் அரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கு நன்றி

    வெற்றி பவனி வாருங்கள் அரசன்//

    மிகுந்த நன்றிகள் சார்

    ReplyDelete
  14. அப்பாதுரை said...
    வாழ்த்துக்கள்!//

    நன்றிங்க சார்

    ReplyDelete
  15. Sasi Kala said...
    தம்பி வருக வருக அறிமுகம் சிறப்பாக இருக்கிறது. சரி சரி அடிக்க நான் ரெடியா இருக்கேன். பிரம்படி போதுமா ?//

    எது கொண்டு வேணாலும் அடிக்கலாம் .அக்கா . உங்களுக்கு இல்லாத உரிமையா ?

    ReplyDelete
  16. ezhil said...
    வாங்க வாங்க அரசன்... ரொம்ப நாளைக்கப்புறம் எனக்கு தெரிஞ்சவங்க வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி...
    வாழ்த்துக்கள்//

    மிகுந்த நன்றிகள் எழில் மேடம்

    ReplyDelete
  17. என் ராஜபாட்டை : ராஜா said...
    வாழ்த்துக்கள் நண்பா. . .கலக்குங்க.. //

    நன்றிங்க ஆசிரியரே

    ReplyDelete
  18. அம்பாளடியாள் said...
    வாழ்த்துக்கள் சகோதரரே விறுவிறுப்பாக உங்கள் ஆசிரியர் பணி
    சிறப்பாகத் தொடரட்டும் !//

    நன்றிங்க சகோ

    ReplyDelete
  19. NIZAMUDEEN said...
    சுய அறிமுகம் சிறப்பாயுள்ளது. தொடர்ந்து நற்பணியாற்றிட நல்வாழ்த்துக்கள்.//

    நன்றிங்க நண்பரே

    ReplyDelete
  20. சென்னை பித்தன் said...
    வாழ்த்துகள் அரசன்//

    நன்றிங்க அய்யா

    ReplyDelete
  21. **தமிழன் *** said...
    வாழ்த்துகள் சகோ..//

    நன்றிங்க தமிழன்

    ReplyDelete
  22. வே.நடனசபாபதி said...
    வாழ்த்துக்கள்!//

    நன்றிங்க அய்யா

    ReplyDelete
  23. 2008rupan said...
    வணக்கம்
    சே,அரசன்(அண்ணா)

    உங்களைப்பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது நன்றி செய்தவரை கடசி வரை மறக்ககூடாது என்பதை நீங்கள் நிருபித்துள்ளீர்கள் அதுதான் உங்களை எழுத வேண்டும் என்ற சிந்தனை உணர்வை விதைத்தஉயிராயுதம் அவர்தன் திரு,கருணாகரசு அவர்கள் அவரையும் இந்த வேளையில் நினைவு கூறியமைக்கு மிக்க நன்றியண்ணா மேலும் இந்த எழுத்துலகில் வெற்றிவகை சூட எனது வாழ்த்துக்கள் மேலும் சிறப்பான பதிவுகள் மலரட்டும்


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-//

    அன்பின் வருகைக்கும் , நிதான கருத்துக்கும் என் உள்ளம் நிறை நன்றிகள் ரூபன்

    ReplyDelete
  24. யோவ் ராசா உனக்குள்ள இவ்ளோ பெரிய இலக்கியவாதி இருக்கான்னு சொல்லவே இல்ல... ரொம்ப அருமையான அறிமுகம்... தொடர்ந்து பலரை அறிமுகப்படுத்த வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  25. சென்னையிலுள்ள பெரும்பாலானவர்கள் கிராமத்திலிருந்து வந்தவர்களே.இப்போ நீங்களும் நகரத்தான் ஆகிவிட்டீர்கள்.
    உங்களது மதிப்புரையை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் அன்பரே கலக்குங்க

    ReplyDelete
  27. வார்த்தைகளையெல்லாம் எங்கே பிடிக்கிறீர்கள் அரசன்... பட்டாசு.. :-)))

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் அரசன்.

    ReplyDelete
  30. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  31. உற்சாகமாக வாரத்தைத் துவங்கியிருக்கிறீர்கள் அரசன். துள்ளலான வார்த்தைகளில் உங்களின் அறிமுகம் சிறப்பு. தொடர்ந்து அசத்துங்கள் வாரம் முழுவதும். என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  32. சிறப்பான வாரமாக அமைய வாழ்த்துகள் அரசன்.....

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் அரசன்.

    ReplyDelete
  34. அறிமுகமே கவித்துவமாக உள்ளது. வலைச்சர ஆசிரியப் பணியை சிறப்புற செய்ய வாழ்த்துக்கள் அண்ணே!

    ReplyDelete
  35. ஏற்ற பணி சிறக்க வாழத்துக்கள்!

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள் நண்பரே...
    தொடருங்கள்... தொடருங்கள்...

    ReplyDelete
  37. தொடரட்டும் உங்கள் பணி..வாழ்த்துக்கள் அண்ணே..

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் உறவே பணி சிறக்கட்டும்!

    ReplyDelete

  39. கரைசேரா அலைகளென
    கண்ணில் விழுந்தாய்..
    கண்கண்ட நாள்முதல்
    கருசுமந்த படைப்புகளால்
    நெஞ்சத்தில் தேன் வார்த்தாய்
    தமிழ்வலை கூறும்
    நல்லுலகாம் வலைச்சரத்தில்
    நன்றாய் மலரெடுத்து
    பாமாலை சூட வந்தாய்..
    சிறக்கட்டும் உம பணி..

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  40. சீனு said...
    யோவ் ராசா உனக்குள்ள இவ்ளோ பெரிய இலக்கியவாதி இருக்கான்னு சொல்லவே இல்ல... ரொம்ப அருமையான அறிமுகம்... தொடர்ந்து பலரை அறிமுகப்படுத்த வாழ்த்துக்கள்...//

    யோவ் எதுக்கைய்யா இப்படி ..
    வாழ்த்துக்கு நன்றி சீனு

    ReplyDelete
  41. கவியாழி கண்ணதாசன் said...
    சென்னையிலுள்ள பெரும்பாலானவர்கள் கிராமத்திலிருந்து வந்தவர்களே.இப்போ நீங்களும் நகரத்தான் ஆகிவிட்டீர்கள்.
    உங்களது மதிப்புரையை தொடர வாழ்த்துக்கள்//

    நகரத்தில் வசிப்பதால் நான் நகரத்தான் ஆகிட மாட்டேன் .சார் . இன்னும் எனக்குள் ஊறிக்கொண்டு தான் இருக்கிறான் அந்த கிராமத்தான் ,,,

    ReplyDelete
  42. Prem s said...
    வாழ்த்துக்கள் அன்பரே கலக்குங்க//

    நன்றிங்க அன்பரே

    ReplyDelete
  43. வரலாற்று சுவடுகள் said...
    வார்த்தைகளையெல்லாம் எங்கே பிடிக்கிறீர்கள் அரசன்... பட்டாசு.. :-)))//

    என்ன அண்ணே சொல்றீக .. எல்லாம் உங்களின் ஆசிர்வாதம் தான்

    ReplyDelete
  44. செய்தாலி said...
    வாழ்த்துக்கள்//

    நன்றி நண்பா

    ReplyDelete
  45. angelin said...
    வாழ்த்துக்கள் அரசன்.//

    நன்றிங்க அஞ்சு அக்கா

    ReplyDelete
  46. இராஜராஜேஸ்வரி said...
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..//

    நன்றிங்க மேடம்

    ReplyDelete
  47. பால கணேஷ் said...
    உற்சாகமாக வாரத்தைத் துவங்கியிருக்கிறீர்கள் அரசன். துள்ளலான வார்த்தைகளில் உங்களின் அறிமுகம் சிறப்பு. தொடர்ந்து அசத்துங்கள் வாரம் முழுவதும். என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!//

    உற்சாக வார்த்தைக்கு என் நன்றிகள் சார்

    ReplyDelete
  48. வெங்கட் நாகராஜ் said...
    சிறப்பான வாரமாக அமைய வாழ்த்துகள் அரசன்...//

    நன்றிங்க நண்பரே

    ReplyDelete
  49. அருணா செல்வம் said...
    வாழ்த்துக்கள் அரசன்.//

    நன்றிங்க மேடம்

    ReplyDelete
  50. Abdul Basith said...
    அறிமுகமே கவித்துவமாக உள்ளது. வலைச்சர ஆசிரியப் பணியை சிறப்புற செய்ய வாழ்த்துக்கள் அண்ணே!//

    வாங்க பாஸ் ... மிகுந்த நன்றிகள்

    ReplyDelete
  51. புலவர் இராமாநுசம் said...
    ஏற்ற பணி சிறக்க வாழத்துக்கள்!//

    மிகுந்த நன்றிகள் அய்யா

    ReplyDelete
  52. சே. குமார் said...
    வாழ்த்துக்கள் நண்பரே...
    தொடருங்கள்... தொடருங்கள்...//

    மிகுந்த நன்றிகள் தோழரே

    ReplyDelete
  53. Uzhavan Raja said...
    தொடரட்டும் உங்கள் பணி..வாழ்த்துக்கள் அண்ணே..//

    நன்றி தம்பி

    ReplyDelete
  54. தனிமரம் said...
    வாழ்த்துக்கள் உறவே பணி சிறக்கட்டும்!//

    நன்றிங்க தோழமையே

    ReplyDelete
  55. மகேந்திரன் said...

    கரைசேரா அலைகளென
    கண்ணில் விழுந்தாய்..
    கண்கண்ட நாள்முதல்
    கருசுமந்த படைப்புகளால்
    நெஞ்சத்தில் தேன் வார்த்தாய்
    தமிழ்வலை கூறும்
    நல்லுலகாம் வலைச்சரத்தில்
    நன்றாய் மலரெடுத்து
    பாமாலை சூட வந்தாய்..
    சிறக்கட்டும் உம பணி..

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...//

    அன்பின் அண்ணனுக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகளும் வணக்கங்களும்

    ReplyDelete
  56. சிவகுமார் ! said...
    congrats.//

    நன்றிங்க அண்ணே

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது