07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 23, 2013

புதுக்கவிதைகளும் ஹைகூக்களும்!!



அளிப்பவர் அருணா செல்வம்
 


நட்புறவுகளுக்கு வணக்கம்.

    இன்று நான் படித்து மகிழ்ந்த புதுக்கவிதை எழுதி வரும் தளங்கள் சிலவற்றையும் ஹைகூக்கள் எனும் குறும்பாக்கள் எழுதி வரும் தளங்களையும் உங்களுக்குப் பகிர்கிறேன்.



    உள்ளத் துள்ளது கவிதை – இன்பம்

        உருவெடுப்பது கவிதை!

    தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

        தெரிந்து உரைப்பது கவிதை



என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

    

     கவிதையை எழுதும் பொழுது கவிஞர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்களோ அந்த நிலையை உணர்த்தி விடும் கவிதைகளும் உண்டு. சில நேரங்களின் தலைப்பிற்காக வலிந்தும் தெளிந்தும் எழுதிய கவிதைகளும் சக்தி வாய்ந்ததாக அமைவதும் உண்டு..

           பொதுவாக எல்லா கவிதைகளுமே ஏதோ ஒரு கருத்தின் அடிப்படையில் தான் புனையப் படும். கவிதைகளில் சாராதண கவிதை எது? சக்தி வாய்ந்த கவிதை எது? என்று பிரித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியாது. அதுவும் படிப்பவரின் மனநிலையைப் பொறுத்துத் தான் கரு விளங்கும்.

    உதாரணத்திற்கு, கூர்மையான கத்தி ஒன்றை எடுத்து அதனால் காய்கறிகளை வெட்டினாலும், மரத்தை வெட்டினாலும், ஏன் ஒரு மனிதனை வெட்டினாலும்... வெட்டிவிடும்! அவ்வளவு கூர்மையான அதே கத்தியைக் கொண்டு ஒரு சாதாரண பஞ்சு குவியலை வெட்டிப் பாருங்கள்... எவ்வளவு நேரம் எடுத்து வெட்டினாலும் அதனால் வெட்டவே முடியாது. அதற்காக கத்தியின் கூர்மையைப் பழிக்க முடியுமா...?

    அதே போல தான் கவிதைப் புனைவதும். கவிதையைப் படிக்கும் பொழுது நம் மனநிலையைப் பொறுத்தே அதன் கருத்து அமையும்... என்று கூறி... நான் இரசித்தக் கவிஞர்களின் தளங்களை உங்களுக்கும் எடுத்தெழுதிக் காட்டுவதில் மகிழ்கிறேன்.




1 பேராசிரியர் கோவிகவிதைகள்

இவரின் கவிதைகள் அனைத்தும் தேன் துளிகள்.













   இருக்கும் வரையில் இதயம் துடிக்கும், இமைகள் இமைக்கும், உதடுகள் சிரிக்கும்... இறந்தபின் ஈ மொய்க்கும்!! என்பது இவரின் அறிமுகமாக வைத்திருந்தாலும் இவரின் கவிதைகள் அனைத்தும் பிரபலமானவைகள்.

    இவரின் தலைப்பில் சொன்னது போல் இல்லாமல் இவரின் கவிதைகள் இவருக்குப் பின்பும் மற்றவரிகளை மகிழ்விக்கும்.












3. அன்புடன் நான் (கருணாகரசு)

   இவரைப்பற்றி நான் உங்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நான் அவரின் கவிதைகளை விரும்பி வாசித்துச் சுவைப்பதால் அந்த சுவையை அறியாதவர்கள் போய் வாசித்துக் கவிச்சுவையை அறியவேண்டும் என்று விரும்பி அவரை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.



காதல் தின்றவன் (1 இருந்து 12 வரை)











   எண்ணச் சுரங்கத்திலிருந்து கற்பனைச் செம்பு சிறிது கலந்து தங்கக் கருத்துகளைக் கொண்டு கவியாபரணம் படைக்க விரும்பும் ஓர் சராசரிப் பெண் ! என்று தன்னை அறிமுகஞ்செய்யும் இவரின் கவிதைகள் கற்பனைகள் சராசரியானவைகள் அல்ல... என்பதை நீங்களே போய் படித்துப்பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.




   பூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.
     பூமகளின் அறிமுகமே அருமையென்றால்... இவரின் கற்பனைகளைக் கேட்கவா வேண்டும்.!! இவரின் ஒவ்வொரு கவிதையும் அருமை... அருமை... நான் வியந்து படித்தேன். நீங்களும் படித்துப் பாருங்கள்.








மழை...! (என்ன அருமையான கற்பனை...! வியந்தேன்.)




   சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது, கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்து கொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்ட தென்பதல்ல .....வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும். உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்.. -புலோலியூர் கரன்-

     இப்படி அருமையான அறிமுகத்தை அவரே தந்துள்ளார். பாடல்களும் அருமையான உள்ளன. போய் படித்துப்பாருங்கள்.













   இவர் முகநாலில் தான் அதிகமாக எழுதுகிறார் என்று நினைக்கின்றேன். தமிழ் ஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழியிலும் தன் கவிதைகளைப் படைத்துள்ளார். அது என்ன மொழி என்று எனக்குத் தெரியவில்லை. இவர் கவிதையாலேயே கதைகளை எழுதி வருகிறார். படிக்கச் சுவையாக இருக்கிறது.









என் காதல் (கவிதைத் தொடர்)




   இவரைத் தெரியாதவர்கள் வலையுகத்தில் யாருமே இருக்க முடியாது என்று நினைக்கிறேன். எல்லா இணையத் தளத்திலும் இவரின் கவிதைகள் முன் பக்கத்திலேயே இருக்கும். நிறைய தொடர் கவிதைகள் எழுதியுள்ளார். இவரின் பாணி சற்று வித்தியாசமாக இருக்கும். படித்துப்பாருங்கள்.













   “சமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்!  என்று தன்னை அறிமகப் படுத்தியிருக்கும் இவரின் கவிதைகள் அனைத்தும் அருமையாக உள்ளது. இவர் கவிதைகளைப் படிக்காதவர்கள் படித்து மகிழுங்கள்.


 





  

10. ரிஷ்வன் கவிதைத் துளிகள் ரிஷ்வன்“... பிரபலமானவருக்கு எதற்கு அறிமுகம்? தொடருங்கள்.











இவர்களைத் தவிர...





 


 இப்படி நன்றாக நமக்கு அறிமுகமானவர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம் தான். நேரம் தான் போதவில்லை.



      என்ன நண்பர்களே... இன்றைய பதிவுகள் உங்களுக்குப் பிடித்திருந்ததா...? நான் குறிப்பிட்ட அனைவரையும் படித்துப் பாருங்கள். எனக்குப் பிடித்தது போல் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்... என்ற நம்பிக்கையுடன் நாளை மற்றுமொரு பதிவில் உங்களைச் சந்திக்கிறேன்.



அன்புடன்

அருணாசெல்வம்.



40 comments:

  1. காலை வணக்கம் கவிதைகளில் சாராதண கவிதை எது? சக்தி வாய்ந்த கவிதை எது? என்று பிரித்துப் பார்த்த உங்களின் மதிப்பீடு சரியே.

    ReplyDelete
  2. கருத்திட்ட வரும் அன்பர்களுக்கு :

    16.03.2013 அன்று ஏற்பட்டது போல் இன்றும் அதே பிரச்சனை... udanz இணைத்துள்ள எந்த தளத்திலும் உங்களால் செல்ல முடியாது...

    தங்களின் தளத்தில் udanz ஒட்டுப்பட்டை அல்லது Logo வைத்திருந்தால் எடுத்து விடுங்கள்...

    Google Chrome browser-ல் உங்களின் பதிவுகளை அவர்களால் வாசிக்க முடியாது... Malware என்று வரும்... சரியானவுடன் (?) இவைகளை இணைத்துக் கொள்ளலாம்... நன்றி...

    இதை நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சி... நன்றிகள் பல...

    ReplyDelete
  3. அருணா! ஏனோ தானோ என்றில்லாமல் உண்மையான உழைப்பை கொடுத்துள்ளீர்கள் வலைச்சரத்திற்கு...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வணக்கம்

    இன்று அறிமுகமான பதிவுகள் அருமை சிலதளங்கள் புதியவை சில தளங்கள் பழையவை எனக்கு அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் அத்தோடு அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  5. வணக்கம்

    முக்கியமான தகவல் வழங்கிய திண்டுக்கல் தனபால் அண்ணா அவர்களுக்கு எனது நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  6. இன்றைய அறிமுகங்களில் இரண்டு தளங்கள் எனக்கு புதிது... நன்றி...

    தளங்கள் 2 கவியழகன், 3 அன்புடன் நான் - இந்த இரண்டு தளங்களும் செல்ல முடியவில்லை - udanz பிரச்சனையால்...

    அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. /// கவிதையைப் படிக்கும் பொழுது நம் மனநிலையைப் பொறுத்தே அதன் கருத்து அமையும்... ///

    100 % உண்மை...

    ReplyDelete
  8. இன்றைய வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளன் அனைத்த்ப்பதிவர்களுக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    தங்களுக்கு என் பாராட்டுக்கள் + நன்றிகள்.

    ReplyDelete

  9. வணக்கம்!

    புதுக்கவிதை மின்னும் புதையல் வலையை
    மதுக்கவிதை மங்கை வடித்தார்! - எதுகவிதை
    என்றே வினாத்தொடுத்தார்! இன்பத் தமிழ்ஓங்க
    நன்றே உழைத்தார் நயந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  10. இன்றைய வலைச்சரத்தில் என் அறிமுகத்திற்கு மிக்க நன்றி.
    ஏனைய அறிமுகங்களுக்கும் தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
    தகவலை என் தளத்திற்கு உடன் வந்து தெரிவித்த
    அன்புள்ளங்கள் DD சார் & ரூபன் சார் அவர்களுக்கு
    என் நன்றிகள்.

    ReplyDelete
  11. அறிமுகத்திற்கு நன்றிகள். அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. கவிஞர்களில் சிலரை நான் அறிவேன்!! மற்றவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  13. எனது வலைப்பூ வலைச்சரத்தில் மூன்றாவது முறையாக அறிமுகமாகிறது... அறிமுகப்படுத்திய ஆசிரியருக்கு, கருத்துக்கூறிய நண்பர்கள் அனைவர்க்கும் எனது நன்றிகள்..

    ReplyDelete
  14. என்னையும் சேர்ந்தற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  15. நானெல்லாம் ஒரு கவிஞனா தோழரே...

    என்னை விட சிறப்பானவர்கள் இருக்கிறார்கள்.. நான் சிறு துரும்பு... திறமைசாலிகளை அடையாளங் காணுங்கள்...

    மற்றவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்...

    அன்புடன்

    மோகனன்

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்றைய அறிமுகங்களுக்கு மட்டும்
    அல்ல தயங்கித் தயங்கி ஆசிரியர் பொறுப்பை ஏற்ப்பது போல் ஏற்றுக்
    கொண்டு இவ்வளவு சிறப்பாக பதிவர்களை அறிமுகம் செய்த
    வலைச்சர ஆசிரியர் உங்களுக்கும் .மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
    தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்தி உண்மையிலும் தேடித்
    தேடி மிக அருமையாக உங்கள் பணியை செவ்வனே செய்கின்றீர்கள் .
    மிக்க நன்றி மேலும் சிறப்பாக இப் பணி தொடரட்டும் சகோ .

    ReplyDelete
  17. இனிய வணக்கம் அனைவருக்கும்...

    மேற்படி தோழி அம்பாளடியாள் கூற்றினையே நானும் வழிமொழிகிறேன்...
    மிக அருமையாகத் தொகுத்து பல அறிமுகங்களை இங்கு தரும் எம் வலைச்சர ஆசிரியருக்கு அன்பான வாழ்த்துக்கள்!

    மற்றும் இன்றும் இங்கு அறிமுகமாகப்பட்ட அனைத்துத் தோழர்களுக்கும் என் இனிய பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. தோழி நீங்கள் சொல்வது சரி அவரவர் படிப்பவரின் மனநிலை பொறுத்தே கவிதையின் கரு அமையும் இன்றைய அறிமுகங்களுக்கு நன்றி

    ReplyDelete
  19. பல தளங்களை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். நன்றி.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. வணக்கம் கவியாழி ஐயா.

    தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  21. வணக்கம் தனபாலன் ஐயா.

    தங்களின் உதவிகளுக்கு மிக்க நன்றி. தவிர வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  22. நம்பள்கி.... நம்மை நம்பி பொறுப்பைக் கொடுத்தவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கக்கூடாது இல்லையா...
    இருந்தாலும் என்னால் முடிந்தவரையில் செயல்படுகிறேன்.

    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நம்பள்கி.

    ReplyDelete
  23. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரூபன்.

    ReplyDelete
  24. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கோபலகிருட்டிணன் ஐயா.

    ReplyDelete
  25. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கவிஞர்.

    ReplyDelete
  26. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி தோழி.

    ReplyDelete
  27. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி “அன்புடன் ஆனந்தி“

    ReplyDelete
  28. வணக்கம்.
    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தேவன் மாயன்.

    ReplyDelete
  29. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அகல்.

    ReplyDelete
  30. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி நச்சத்திரா.

    ReplyDelete
  31. வணக்கம்..
    என்னை இங்கு அறிமுக படுத்திய நண்பர்களுக்கு என் நன்றி.......

    ReplyDelete
  32. வலைசரத்தில் மூன்றாவது முறையாக அறிமுகமாகிறேன்.. ஒவ்வொரு முறையும் புதிய கோணத்தில் நான்..

    பதிவர் அருணா செல்வம் மற்றும் அறிமுகமாக்கிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

    அன்புடன்,
    பூமகள்.

    ReplyDelete
  33. அருமையான கவிஞர்கள் அறிமுகம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  34. //கவிதைப் புனைவதும். கவிதையைப் படிக்கும் பொழுது நம் மனநிலையைப் பொறுத்தே அதன் கருத்து அமையும்... // - உண்மை!

    அறிமுகமான எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

    தகவலுக்கு நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

    ReplyDelete
  35. என்னை வலைதளத்தில் அறிமுகப்படுத்திய அருணா செல்வம் அவர்களுக்கு நன்றி... ரிஷ்வன்

    ReplyDelete
  36. அருணா செல்வம் அவர்களுக்கு நன்றி ... என்னை போன்று இங்கு அறிமுக படுத்த பட்ட வலை பதிவாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

    என் வலைபக்கத்தில் தமிழ்(நான் கற்ற மொழி), தெலுகு(என் தாய் மொழி) ஆகிய தென்னிந்திய மொழிகளில் கவிதைகள் , கவிதை நூல் ( என் காதல் ) பதித்துள்ளேன். அதனுடன் சில ஆங்கில அலசல் பதிவுகளை பதித்துள்ளேன்.

    என்னை இங்கு அறிமுகம் செய்ததற்கு ஆயிரம் பதினாயிரம் நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  37. அப்பப்பா இதில் பல தெரியாதவைகளும் உள்ளது .
    அனைவருக்கும் மகிழ்வுடன் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  38. அப்பப்பா இதில் பல தெரியாதவைகளும் உள்ளது .
    அனைவருக்கும் மகிழ்வுடன் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  39. அருணா செல்வம் அவர்களே என்னையும் கவிஞர்கள் பட்டியியலில் சேர்த்ததற்கு நன்றி.

    ஆனாலும் கவிஞன் என்று சொல்லிகொள்ளும் அளவிற்கு நான் இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து.. அனைத்துமே என் எண்ணங்கள் கிறுக்கல்கள் மட்டுமே

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது