முடிவல்ல இது... துவக்கம் தான்...!!!
➦➠ by:
அருணா செல்வம்
அளிப்பவர் அருணா செல்வம்
வணக்கம்
தமிழே... என் உயிரே...!
எந்த நிலையிலும்
உன்னை நான் முன் வைத்தேன்!
எந்த சபையிலும்
என்னை நீ முன் வைப்பாய்!!
நட்புறவுகளுக்கு
வணக்கம்!
எந்த ஒரு செயலில் முடிவும் வேறு
ஒரு செயலின் தொடக்கமாகத்தான் அமைந்து விடும். இது தான் உலக
நியதி. எந்த ஒரு துணிவான ஆரம்பமே வெற்றியைத் தொட பாதி தூரம் வந்து விட்டோம் என்பதை
நமக்கு உணர்த்தும். அதற்கு விடா முயற்சியும் தன்நம்பிக்கையும் தான் முக்கியம்
நிறைய பேர் எந்தக் காரியத்தையும் தொடங்கிவிட்டு
முடிக்கத் தெரியாமல் விழித்து பின் கைவிட்டு விடுகிறார்கள். அவர்களை மற்றவர்கள்
கைத்தூக்கி அல்லது கைதட்டி ஊக்குவித்து உயர வைக்க வேண்டும். ஆனால் அதற்கு
அவர்களும் முழு மூச்சுடன் முயற்சியும் செய்ய வேண்டும்.
முயற்சி இல்லாவிட்டால் அதிஷ்டம்
வந்தாலும் யாராலும் எதையும் சாதிக்க முடியாது. அப்படி முன்னேறத் துடிப்பவர்களை
வலைச்சரமானது வாரம் ஒருவரைக் கொண்டு அவர்களின் மூலம் புதியவர்களுக்கு ஊக்கத்தையும்
பழையவர்களுக்கு மேலும் உற்சாகத்தையும் கொடுக்கச் செய்கிறது.
எனக்கு இந்தப்பணி கிடைத்ததால் தான்
நான் பல பதிவுகளைப் போய் படித்திருக்க முடிந்தது. படிக்கப் படிக்கத்தான் நான்
எவ்வளவு அறியாதவளாக இருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிந்தது.
அந்த வகையில் எனக்கு இந்தப்
பொறுப்பைக் கொடுத்த வலைச்சர நிர்வாகி சீனா ஐயாவிற்கு பணிவுடன் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நான் சுட்டிக்காட்டும்
அனைவரும் நல்ல திறமைசாளிகள். அவர்களை மேலும் ஊக்குவித்து மேலும் மேலும் உணர்வடைய
உதவும் படி கேட்டுக்கொள்கிறேன்.
“ படித்தது B.Sc.,(Maths)
M.A(Tamil).பள்ளி
நாட்களிலேயே எழுத்தின் மீது காதல்.
தினமலர் பெண்கள் மலர் என்னை அடையாளம் காட்டி நிறைய தோழிகளைத் தந்தது.“ என்று தன் அறிமுகத்தில் கூறும் இவரின்
சிறுகதைகளும் மற்ற படைப்புகளும் மிக மிக அருமையாக உள்ளது. நீங்களும் சென்று படித்து
மகிழுங்கள்.
தோப்பில் தனிமரம் (சிறுகதை)
அவள் பணக்காரி..! (சிறுகதை)
2. சீராளன்
“இயற்கையின் இலவசங்களுக்குள் எதிர்ப்பின்றி எடுத்துக்கொண்ட ஒரு சில தேவைகளோடு என்
பயணம். எனைப்பற்றி கிறுக்க
வேறேதுமில்லையே! இருந்தும் என்னுயிரின்
ஸ்பரிசங்கள் இங்கே எல்லோரையும் இதமாய்த் தழுவும் என நினைக்கிறேன்.
அதுவே போதுமானதாய் இருக்கட்டுமே. எனது பிறப்பிடம், வாழ்விடம் கேட்க்காதீர்கள். ஏனெனில் எல்லோரையும் போல நானும் ஓர் நாடற்ற ஈழத்தமிழன், காற்றில்
மூச்சாய், கனவில் வாழ்விடமாய்
நாட்களைக் கடத்தும் எனக்குள்ளும் நினைவுகளை விதைத்துக் கவிதைகளை அறுவடை செய்ய காரணமாய்ப் போன என் காதல் தேவதைக்கான கவிதைகள் மட்டுமே இங்கே பூத்திருக்கின்றன. பிடித்திருந்தால் அவற்றை ரசித்துக் கொள்ளுங்கள் எனக்காகவும், என் கடந்துபோன காலங்களுக்காகவும். ........... என்றும் பிரியமுடன்
சீராளன்“
தன்
அறிமுகத்தையே இவ்வளவு சோகத்துடன் சொல்லியிருந்தாலும் இவரின் சோகத்திலும் எவ்வளவு
சுவை இருக்கிறது என்று படித்தால் நமக்கு புரியும்.
இவரின் கதம்ப வலையிலிருந்து சில
பதிவுகளை எடுத்துக் கொடுத்துள்ளேன். நீங்களும் படித்து மேலும் வளர இவரை
ஊக்குவியுங்கள்.
அருண் (சிறுகதை)
இவர் தமிழ் மணத்தின் ரேங்கின் முதல் இடத்தில்
இருப்பவர். இவரைப்பற்றி அனைவருக்குமே தெரிந்திருந்தாலும் இவரின் பதிவில்
அறிமுகமாகிய ஆதிரை வேணு கோபாலின் “30 வகை திடீர் சமையல்“ அனைவருக்கும் உதவும்
பதிவாக உள்ளது. படித்துப் பயனடையுங்கள்.
“எளியோன்
எனை பற்றி ஏதுமிலை இயம்ப.“ என்று தன் அறிமுகத்தில் சொன்னவர்,
தன் பதிவில் உலகின் மிகச்சிறந்த ஓவியர்களின் ஓவியங்களையும் சிலரின் வாழ்க்கைக்
குறிப்புகளையும் பதித்திருக்கிறார். ஓவியப் பிரியர்கள் மட்டுமின்றி அனைவருமே
பார்க்க ஏங்கும் ஓவிய பதிவுகளை எடுத்துப் பதித்துள்ளேன். சென்று பார்த்து
மகிழுங்கள்.
இவர் தனியாக வாழும்
இளையவர்களுக்காக மிக மிக சாதாரனமாக சமைக்கும் விதத்தில் சமையலைக் கற்றுத்
தந்திருக்கிறார். நிறைய வகைகள். தேவைப்படுபவர்கள் சென்று கற்கலாம்.
"தூயா" நான் புலம்பெயர் நாட்டில் தமிழ் கற்ற தமிழீழத்து வாரிசு...“ என்று தன்னை
அறிமுகப்படுத்திக் கொண்ட தூயா சமையல் செய்முறை விளக்கங்களை அழகாகச்
சொல்லியிருக்கிறார்.
“பழைய சாதம்
மீந்துவிட்டால்.....?“ அதை வீணாக்காமல்
என்ன செய்யலாம்.. என்று யோசிக்கும் குடும்ப அக்கரை உள்ளவர்களுக்குத் தேவையான பல விவரங்களைக் கொடுத்துள்ளார். நிறைய “டிப்ஸ்“ களுடன் பதிவமைத்து
உள்ளார். நமக்குத் தேவையான பல தலைப்புகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தேவையான தலைப்பை
கிளிக் செய்து படிக்கும் படி வடிவமைத்துள்ளார். தவிர நிறைய சமையல் குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார்.
சமையலில் 20 வருடத்துக்கும்
மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த
சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், குழந்தை வளர்ப்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின்
மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.“ என்று அவருக்குத் தெரிந்த அனைத்தையும் நமக்கும்
சொல்லித் தருகிறார். தேவைப்பட்டவர்கள் போய் படித்துப் பார்த்துக் கற்றுக்
கொள்ளங்கள்.
|
“கோல மயில்களே கோலமிடக் கற்போம் என்று அழைத்து
கல்லூரிப் பருவம் முதல் வசந்த காலம்! தற்போது நான் என்னைப் புதுப்பித்துக் கொண்ட
இரண்டாம் வசந்த காலம் இது.! இந்தக்
காலம் என்னைப் போல சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கெல்லாம் பொற்காலமாக அமையட்டும்.
எனது வாழ்த்துக்கள் அனைத்து மகளிருக்கும்.!“
என்று சொல்லும் இவரின் கோலங்கள் அழகானதாகவும் மனங்களை கவரும் விதத்திலும் வரைந்து
காண்பித்துள்ளார்.
தேர்க் கோலம் நேர்ப்புள்ளி நெளிகோலங்கள்
ரோஜாப்பூ கோலம்
நட்புறவுகளே... இன்றைய பதிவுகள் உங்களுக்கெல்லாம்
பிடித்திருந்ததா...? எனக்குப் பிடித்திருந்ததால் உங்களுக்கும் பகிர்ந்தேன்.
தவிர, இன்றுடன் எனக்குக் கொடுத்த
வலைச்சர ஆசிரியர் பொறுப்பு நிறைவடைகிறது. எனக்குக் கொடுத்தப் பொறுப்பைச் சொன்னது
போலவே செய்து முடித்துக் கொடுத்து இருக்கிறேன் என்று நம்பி... எனக்கு பின் வரும்
வலைச்சர பொறுப்பேற்கும் ஆசிரியருக்கு என் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு
அவர்களுக்கு வழிவிடுகிறேன்.
இங்கே எனக்குக் கொடுத்த வேலையை
முடித்ததால் என் வலைப்பூவின் வாசல் திறக்கப்படுகிறது. என்னை இதுவரை
ஊக்குவித்தவர்கள் அருணா செல்வம் என்ற என் வலைக்கும் வந்து என்னை தட்டிக் கொடுத்தும்
தவறுகளைச் சுட்டிக்காட்டித் தலையில் குட்டு கொடுத்தும் நல்வழி காட்ட அன்புடன்
அழைக்கிறேன்.
நட்புடன்
|
|
இன்று அறிமுகம் செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteபல தளங்களை அறிமுகம் செய்து, சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...
அஹா நன்றி அருணா. திண்டுக்கல் தனபாலன் சாருக்கும் சீனா சாருக்கும் வலைச்சரத்துக்கும் நன்றி.:)
ReplyDeleteகலக்கலான பதிவோடு கலக்கலான அறிமுகங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
கலக்கலான பதிவோடு கலக்கலான அறிமுகங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஇவ்வாரம் பல புதிய தளங்களை அறிமுகம் தந்தீர்கள். பணியை சிறப்பித்தீர்கள். வாழ்த்துகள்.நன்றிகள்.
அன்பு சகோதரி...
ReplyDeleteவலைச்சரத்தின் தங்களது வாரத்திலும் என் தளம் அறிமுகப்படுத்தப்படுவது கண்டு மகிழ்கிறேன். என்னுடன் சேர்ந்து தாங்கள் அறிமுகப்படுத்திய மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். முக்கியமாக வலைச்சர அறிமுகத்தை எனக்கு மின்னஞ்சல்மூலம் தெரிவித்த அண்ணன் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு என் நன்றிகள்... மீண்டும் நன்றி..
அருனா எல்லா அறிமுகங்கலும் அனைவருக்கும் பயனுள்ள தளம்
ReplyDeleteஅனைவருக்கும் பாராட்டுக்கள்
என் அறிமுகத்தை தெரிய படுத்திய தனபாலன் சாருக்கும், கோபு சாருக்கும் மிக்க நன்றி
என்ன ஜாலி யா எழுதி இருக்கீங்களா இல்லை கை தவறி எழுத்து பிழையா அருனா?
என் பெயர் ஜலீலா கமால்
என் வலைப்பூ - சமையல் அட்டகாசங்கள்
முடிந்தால் பெயரை மாற்றி போடுங்கள்.
http://samaiyalattakaasam.blogspot.ae/2013/03/south-indian-mini-thali.html
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலம் ஐயா அவர்களே
ReplyDeleteதங்கள் தகவலுக்கு, என்னால் நம்பவே முடியவில்லை ...அறிவார்ந்த சபையொன்றின் எட்டா தூரத்தில் நிற்கும் சாதாரண கிறுக்கனான என் வலைப்பூவையும் ,பெருங்கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,உள்ள வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு வலைச்சர ஆசிரியர் அருணா செல்வம் அவர்களுக்கும்,திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கும்,சீனா சார் அவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள்......
ஒருவாரமாய் அருமையான வலைப்பூக்களை அறிமுகம் செய்து வலைச்சர பணியை நிறைவாக நிறைய பூச்சரங்களை கோர்த்து நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇங்கு அறிமுகப்படுத்தி இருக்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்புத்தோழி அருணா செல்வம் என்னையும் இத்தனை அரும்பெரும் மேதைகளுடன் ஒருத்தியாய் அறிமுகஞ்செய்து பல இனிய நல்ல நட்புக்களை ஏற்படுத்தித் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
மேலும் நல்ல வகையில் உங்கள் ஆசிரியப்பணியை ஆற்றி நிறைவுசெய்யும் உங்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!!!
வணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுக்கள் ஒரு வார காலமும் சிறப்பாக வலைச்சரப் பொறுப்பாசிரியராக கடமையாற்றி பலவகைப் பட்ட பதிவுகளை வலையுலகத்துக்கு அறிமுகம் செய்துவைத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வனங்கள் என்னும் இணையத்தில் உள்ள செய்திகளை வெளியிட்டுள்ளமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறது www.vanangal.com
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் அருமை...
ReplyDeleteவலைச்சர ஆசிரியராய் கலக்கியமைக்கு வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி தோழி சிறப்பாக உங்கள் பணியைச் செய்து முடித்துள்ளீர்கள் .
ReplyDeleteசிறப்பாக பலரை அறிமுகம் செய்து தந்த பணியை மெருகேற்றிய உங்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும் மீண்டும் வலையில் சங்கமிப்போம்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
கொடுத்த பணியைக் கொழித்திடும் வண்ணம்
தொடுத்து முடித்தீா் துணிந்து! - நடுநிலையாய்த்
தந்த எழுத்துக்கள் தங்க எழுத்துக்கள்!
சிந்தை செழிக்கும் சிறந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அழகாக தொகுத்து வழங்கிதற்கு வாழ்த்துகள் தோழி
ReplyDeleteமுயற்சி திருவினையாக்கும் (ஆக்கியது )
இன்றும் பலரை அறிந்து கொண்டேன்
ஊரில் இல்லாததால் இப்போதுதான் வலைச்சரம் பார்க்க முடிந்தது. தாமதமாகிவிட்டாலும் என் நன்றியையும், வாழ்த்துக்களையும் அன்புடன் பரிமாறிக்கொள்கிறேன். ஒரு வார ஆசிரியர் பணிக்கு எவ்வளவு மெனக்கெட வேண்டும் என்று முன்பு நான் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்ற போது அனுபவப்பட்டேன். இந்த ஒரு வாரமும் அயராது ஆர்வமுடன் செயல்பட்ட உங்களுக்கு என் நன்றி! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் என் வாழ்த்து.
ReplyDeleteஉங்களுக்கு என் பாராட்டு.
இனிய ஓவியாவை வலைச்சர அறிமுகம் செய்த அருணா அவர்களுக்கு எனது நன்றி. எம்மோடு கூட அறிமுகம் பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்!
ReplyDelete