கவிதை சிற்பிகள்
➦➠ by:
அரசன்
இன்றைய பதிவில் கவிதை எழுதும் சில நண்பர்களின் பக்கத்திற்கு சென்று வருவோம் வாருங்கள்...
1) செய்தாலி - செய்தாலி
பெரும்பாலும் அதிகம் பேச மாட்டார், இவரின் எழுத்துக்கள் தான் அதிகம் பேசும். உணர்வுகளோடு வெளிப்படும் இவரின் கவிதைகள்...
நேசமும் நேசிப்பும், ஆடைகழற்றும் நவதொழில் இவை இரண்டும் இவரின் எழுத்துக்கு சிறு சான்று ... இது போல் எண்ணற்ற படைப்புகள் இவரின் தளத்தில் புதைந்துள்ளன...
2) என் இரசனையில் - பிரேம்
தொழில் நுட்பம், சினிமா, கவிதை என அனைத்தும் கலந்து எழுதுபவர். இவரின் காதல் கவிதைகளின் மூலம் தான் இவரின் அறிமுகம் எனக்கு கிட்டியது.
உள்ளூர நேசிக்கிறேன் உன்னை ., காற்று தீண்டா கன்னியவள் இரண்டு படைப்புகளும் இவரின் எழுத்துக்கு ஒரு அடையாளம்!
3) கவிதை - சீனி
இவரின் எழுத்தில் ஒரு காரம் இருக்கும், சமூக கோபம் இருக்கும் .. நல்ல படைப்பாளி...
தீக்குளிப்பு!, நம்புகிறேன். போன்ற படைப்புகளோடு மேலும் சிறந்த படைப்புகளும் இவரின் தளத்தில் பொதிந்துள்ளன.
4) இப்படிக்கு அனீஷ் ஜெ - அனீஷ்
இவரின் தளத்தில் நிறைந்திருப்பவை அனைத்துமே காதல் கவிதைகள் தான்!
படிக்க படிக்க நமக்கும் காதல் ஊற்றெடுக்கும்!
காதல் கதைகள், அவள் வீட்டு தீபாவளி இவை போன்ற கவிதைகளோடு மேலும் பல கவிதைகள் உங்கள் வாசிப்புக்காக காத்திருக்கின்றன!
5) சுஜா கவிதைகள் -
அதிகம் எழுதமாட்டார், எழுதினால் அதிகம் பேசும் இவரின் கவிதைகள்!
பெயரை தொலைத்தவள், ஜன்னலோர இருக்கை இந்த படைப்புகளோடு சேர்ந்து மேலும் உணர்ச்சி படைப்புகள் நிறைந்துள்ளன இவரின் தளத்தில்!
6) இரவின் புன்னகை - வெற்றி வேல்
கவிதைகளை இவரின் பக்கங்களில் அதிகம் காணலாம்! மேலும் வரலாறு பற்றியும் சில படைப்புகளை பகிர்ந்து வரும் இவரின் தளத்திலிருந்து,
என் விடியல், இங்கிருந்து தொலைவோமே இரண்டும் இவரின் கவிதைக்களுக்கான சான்று!
7) தேன்கவிதைகள்
நிறைய எழுதி வந்தவர் இப்பொழுதெல்லாம் மிக குறைவாகவே எழுதிவருகிறார். நிறைய எழுதினால் நன்றாக இருக்கும்!
கதையல்லாத கயிறுகளின் நெடி, இனிக்கும் விரல்களின் சுவை இவைகளோடு சேர்ந்து மேலும் நிறைய படைப்புகள் நிறைந்துள்ளன இவரின் தளத்தில்!
8) போற போக்குல.. - எழுதி வைக்கிறேன் மறந்து போகும் முன் ...
இப்படி ஒரு தலைப்பே ஒரு வித்தியாசமானதாக இருந்தமையால் ஒரு ரவுண்டு வருகையில் நிறைய எழுதாமல் இருந்தாலும் சொல்ல வந்ததை சிறப்பாக சொல்லி இருக்கும் இவரின் தளத்தில் சென்று ஒரு பாராட்டை தெரிவித்து விடுங்கள் தோழமைகளே!
9) பாகீரதி
அனைத்தும் கலந்து கட்டி எழுதி வரும் இவரின் தளத்திலிருந்து சில கவிதைகள் உங்களின் பார்வைக்கு ...
அவள் நினைவு, குடைக்குள் மழை இரண்டுமே மென்மையாய் புனையப்பட்ட கவிதைகள்!
என்னோடு சேர்ந்து பயணித்து கருத்துக்கள் வழங்கும் நேச உள்ளங்களுக்கு எனது நன்றிகளை கூறிக்கொண்டு விடைபெறுகிறேன், மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்...
அன்புடன்
அரசன்
உ. நா குடிக்காடு
|
|
இன்று கவிதைக்காரர்கள் அறிமுகமா? அனைவரையும் உங்களாலதான் அறிந்துகொண்டேன். நன்றி!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் அரசன்
ReplyDeleteஎன்னையும் பெருமைப் படுத்தியமைக்கு மிக்க நன்றி
பணி தொடர வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி...
ReplyDeleteமிக்க நன்றி அரசன்...
கவிதை ஊர்வலம் அழகு வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteதேன் போல் பல தளங்கள்... தேன்கவிதைகளை இன்று தான் சுவைத்தேன்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இன்றைய கவிதை தளங்கள் பற்றிய அறிமுகம் சிறப்பு அரசன் அறிமுகமான நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteகவிதைகளின் அணிவகுப்பு அருமை. அனீஷ் ஜே அவர்களின் கவிதைகளை நானும் என் வலைச்சர வாரத்தில் அறிமுகம் செய்திருந்தேன்.
ReplyDeleteமற்ற தளங்கள் புதியவை.
அறிமுகம் ஆன கவிஞர்களுக்கு வாழ்த்துகள்!
என் கவிதைகளை அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி தல...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
சிறந்த கவிஞர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவலைச்சர ஆசிரியப்பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள் அண்ணே....!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசே,அரசன்(அண்ணா)
இன்று அறிமுகமான கவிதைவலைப்பூக்கள் அருமை தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எனது தளத்தை பரிந்துரைத்தமைக்கு நன்றி அன்பரே
ReplyDeleteநமக்கும் கவிதைகளுக்கும் ரொம்ப தூரம் தோழர்... இருந்து சிலரது கவிதைகள் வெகுவாய் ரசிக்க வைக்கும் படி உள்ளது... வாழ்த்துகள் தோழர் உங்களின் திடங்கொண்ட போராட்டத்திற்கு
ReplyDeleteசிறப்பான கவிதை தளங்களை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்.
ReplyDeleteஅறிமுகமாகிய பதிவர்களுக்கு வாழ்த்துகள்.
அட...!
ReplyDeleteஒரு
கவிஞரே
கவிஞர்களை
அறிமுகப்படுத்துகிறாரே...!
அடடே...!
-நானும் கவிதை எழுதிட்டேம்பா... ஹி... ஹி...
சில புதியவர்களும் எனக்குக் காணக் கிடைத்தார்கள். நான்கு தினங்கள் வெளியூர் செல்வதால் வந்ததும் அனைவரின் தளத்திலும் கருத்திடுகிறேன் அரசன். மிக்க நன்றி!
அருமையான கவிஞர்களின்
ReplyDeleteஅறிமுகங்கள்...
ஓரிருவர் இதுவரை நான் சென்று பார்க்காத
பதிவர்கள்...
நேரம் கிடைக்கையில் நிச்சயம் சென்று பார்க்கிறேன் சகோதரரே...
உங்களின் உழைப்பு நன்றாக தெரிகிறது பதிவுகளில்..
வாழ்த்துக்கள் உங்களுக்கும் அறிமுகமான பதிவர்களுக்கும்..
NIZAMUDEEN said...
ReplyDeleteஇன்று கவிதைக்காரர்கள் அறிமுகமா? அனைவரையும் உங்களாலதான் அறிந்துகொண்டேன். நன்றி!//
நன்றிங்க நண்பரே
எல் கே said...
ReplyDeleteThanks//
நன்றிங்க
எல் கே said...
ReplyDeleteThanks//
நன்றிங்க
செய்தாலி said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் அரசன்
என்னையும் பெருமைப் படுத்தியமைக்கு மிக்க நன்றி
பணி தொடர வாழ்த்துக்கள்//
நன்றி நண்பா
ReplyDeleteBalaji said...
மிக்க மகிழ்ச்சி...
மிக்க நன்றி அரசன்...//
நன்றிங்க சார்
Sasi Kala said...
ReplyDeleteகவிதை ஊர்வலம் அழகு வாழ்த்துக்கள் சகோ.//
நன்றிங்க அக்கா
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteதேன் போல் பல தளங்கள்... தேன்கவிதைகளை இன்று தான் சுவைத்தேன்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...//
நன்றிங்க சார்
r.v.saravanan said...
ReplyDeleteஇன்றைய கவிதை தளங்கள் பற்றிய அறிமுகம் சிறப்பு அரசன் அறிமுகமான நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்//
நன்றிங்க சார்
Ranjani Narayanan said...
ReplyDeleteகவிதைகளின் அணிவகுப்பு அருமை. அனீஷ் ஜே அவர்களின் கவிதைகளை நானும் என் வலைச்சர வாரத்தில் அறிமுகம் செய்திருந்தேன்.
மற்ற தளங்கள் புதியவை.
அறிமுகம் ஆன கவிஞர்களுக்கு வாழ்த்துகள்!//
நன்றிங்க அம்மா
*anishj* said...
ReplyDeleteஎன் கவிதைகளை அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி தல...
வாழ்த்துக்கள்...//
நன்றி தல
s suresh said...
ReplyDeleteசிறந்த கவிஞர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!//
நன்றிங்க சார்
மாணவன் said...
ReplyDeleteவலைச்சர ஆசிரியப்பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள் அண்ணே....!//
நன்றிங்க அண்ணே
2008rupan said...
ReplyDeleteவணக்கம்
சே,அரசன்(அண்ணா)
இன்று அறிமுகமான கவிதைவலைப்பூக்கள் அருமை தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//
நன்றிங்க ரூபன்
Prem s said...
ReplyDeleteஎனது தளத்தை பரிந்துரைத்தமைக்கு நன்றி அன்பரே//
நன்றிங்க அன்பரே
சீனு said...
ReplyDeleteநமக்கும் கவிதைகளுக்கும் ரொம்ப தூரம் தோழர்... இருந்து சிலரது கவிதைகள் வெகுவாய் ரசிக்க வைக்கும் படி உள்ளது... வாழ்த்துகள் தோழர் உங்களின் திடங்கொண்ட போராட்டத்திற்கு//
உங்களுக்கும் கவிதை வரும் தோழர் ... எழுத முயலுங்கள் ...
நன்றிங்க சீனு தோழர்
மாதேவி said...
ReplyDeleteசிறப்பான கவிதை தளங்களை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்.
அறிமுகமாகிய பதிவர்களுக்கு வாழ்த்துகள்.//
நன்றிங்க மேடம்
பால கணேஷ் said...
ReplyDeleteஅட...!
ஒரு
கவிஞரே
கவிஞர்களை
அறிமுகப்படுத்துகிறாரே...!
அடடே...!
-நானும் கவிதை எழுதிட்டேம்பா... ஹி... ஹி...
சில புதியவர்களும் எனக்குக் காணக் கிடைத்தார்கள். நான்கு தினங்கள் வெளியூர் செல்வதால் வந்ததும் அனைவரின் தளத்திலும் கருத்திடுகிறேன் அரசன். மிக்க நன்றி!//
நன்றிங்க கவிஞரே ...
ஹி ஹி ...
சென்று வாருங்கள் சார் ...
மகேந்திரன் said...
ReplyDeleteஅருமையான கவிஞர்களின்
அறிமுகங்கள்...
ஓரிருவர் இதுவரை நான் சென்று பார்க்காத
பதிவர்கள்...
நேரம் கிடைக்கையில் நிச்சயம் சென்று பார்க்கிறேன் சகோதரரே...
உங்களின் உழைப்பு நன்றாக தெரிகிறது பதிவுகளில்..
வாழ்த்துக்கள் உங்களுக்கும் அறிமுகமான பதிவர்களுக்கும்..//
நன்றிங்க அண்ணே