ஆங்கிலேயர்கள் 200
ஆண்டுகளுக்கு மேலாக வளமாக இருந்த நம் நாட்டை சுரண்டி ஆண்டுவிட்டு போகும்போது
நாட்டை வறுமையாகத்தான் விட்டு
சென்றார்கள். அவர்கள் நம்மை ஆண்டபோது மக்கள் நலனிலும் அக்கறை கொள்ளவில்லை என்பது அப்போது
மக்களின் சராசரி ஆயுட்காலம் 27 ஆக இருந்ததிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். மக்கள்
பசி பட்டினியாலும் நோய் தாக்குதலாலும் இறந்ததால் தான் அந்த நிலை.
ஆனால் இப்போது நம்
நாட்டில் மக்களின் சராசரி ஆயுட்காலம் 65.71 ஆக அதிகரித்திருக்கிறது என்று
கேள்விப்படும்போது ஆறுதலையளிக்கிறது. இதற்கு காரணம் நமது சுற்றுப்புற துப்புரவில்
ஏற்பட்ட மாற்றமும், உணவு
உற்பத்தியில் நாம் அடைந்த தன்னிறைவும்தான்.
ஆனாலும் இன்னும்
நாம் அடையவேண்டிய இலக்கை அடையவில்லை என்பதை உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஆய்வு தரும்
புள்ளி விவரங்களிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். பொது சுகாதாரத்தில் 175 நாடுகளுக்கிடையே
நமது நாடு 171 ஆவது இடத்தில்தான் இருக்கிறது என்பதுதான் அது.
மேலும் மருத்துவர்களின்
எண்ணிக்கையைப் பார்க்கும்போது, BRIC என சொல்லப்படுகின்ற Brazil, Russia, India China ஆகிய இந்த நான்கு நாடுகளில் பிரேசிலில் 10,000
பேருக்கு 12 மருத்துவர்களும் ரஷ்யாவில் 10,000
பேருக்கு 43 மருத்துவர்களும் சீனாவில் 10,000
பேருக்கு 13 மருத்துவர்களும் இருக்கும்போது நம் நாட்டில் 10,000
பேருக்கு 6 மருத்துவர்கள்தான் இருக்கிறார்களாம்.
2031 ஆம் ஆண்டு நம் நாட்டில் 1000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற
இலக்கை அடையவேண்டும் என்பதுதான் அரசின் குறிக்கோள்.
மருத்துவர்கள்
எண்ணிக்கை அதிகரிப்பது முக்கியம் என்றாலும் ஏழை எளியோருக்கு இலவச அல்லது குறைந்த
செலவில் சிகிச்சை அளிப்பதும் அதை அளிக்க அதிக அளவில் அரசு மருத்துவ மனைகள் கட்டுவதும் முக்கியம். எனவே
அரசு இதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இன்று தனியார்
மருத்துவக் கல்லூரிகள் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு கல்வி கட்டணத்தை வசூலிக்கின்றன
என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அந்த கல்லூரிகளில் படித்து வரும்
மருத்துவர்கள் எப்படி இலவசமாக சிகிச்சை செய்வார்கள் என எதிர்பார்க்கமுடியும்? தங்களிடம் வரும் நோயாளிகளிடம் தாங்கள்
போட்ட ‘முதலீட்டை’ வட்டியுடன் வசூலிக்கத்தான்
நினைப்பார்கள். அவர்களிடம் ஏழை எளியோர் சென்று குறைந்த செலவில் மருத்துவம் பெறுவது
என்பது நடவாத ஒன்று.
எனவே அரசு அதிக
அளவில் மருத்துவக் கல்லூரிகளையும், மருத்துவ மனைகளையும் திறக்கவேண்டும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில், பொது மக்கள் வரிப் பணத்தில் படிக்கும்
மாணவர்கள், படித்து முடித்து குறிப்பிட்ட காலம் இங்கு
பணியாற்றவேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் விதிக்கவேண்டும்.அதோடு மருத்துவர்களின் ஊதியத்தையும்
கணிசமாக உயர்த்தவேண்டும்.அது நடக்குமானால் எல்லோருக்கும் செலவில்லா அல்லது குறைந்த
செலவில் மருத்துவ உதவி கிட்ட வாய்ப்புண்டு.
ஒரு நாட்டில்
மக்கள் உடல் நலத்தோடு இருந்தால்தான் அந்த நாடு வளத்தோடு இருப்பதாக பொருள். சும்மாவா
சொன்னார்கள் ‘நோயற்ற
வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று
------
சரி. இன்றைக்கு
சில சுவாரஸ்யமான, எல்லோருக்கும்
தேவையான செய்திகளைத் தரும் பதிவுகளைப் பார்ப்போமா?
1.இலங்கையிலிருந்து
‘ஹாய் நலமா?’ என்ற பெயரில் வலைப்பதிவில் எழுதிவரும் டாக்டர்
M.K.முருகானந்தன் அவர்கள் ஒரு புகழ் பெற்ற அனுபவமிக்க மருத்துவர். இந்த
வலைப்பதிவில் எளிய நடையில் எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் உடல் நலம்
சம்பந்தப்பட்டவைகளை எழுதிவருகிறார். ‘மருத்துவத்தில் கற்றதைச்
செய்கிறேன். அனுபவித்தைத் சொல்கிறேன். முடிந்தவரை எளிய மொழியில்.’ என்று அவர் சொல்வது நூற்றுக்கு நூறு சரியே. இதுபோல் இவ்வளவு விரிவாக
யாரும் தமிழில் உடல் நலம் பற்றி எழுதியதில்லை. இவர் எழுதியதில் எதை சொல்ல எதை விட.
நேரம் இருப்பின் முதலில் இருந்து கடைசி வரை படிக்கவேண்டிய பொக்கிஷம். நேர் சிந்தனையும் உடல் நலமும் பற்றிய பதிவு அவசியம் படிக்கவேண்டிய ஒன்று.
2. சித்த
மருத்துவம் அறிய விரும்புவோர் அவசியம் பார்க்க வேண்டிய பதிவு இது. ஒரு மருத்துவன்
என்ற அடையாளத்தோடு சமகாலத்தை பார்ப்பதாக சொல்லும் டாக்டர்.G.சிவராமன் அவர்கள் ஒரு சித்த
மருத்துவர். தனது சித்த வைத்தியன் என்ற வலைப்பதிவில் சித்த மருத்துவம்
எந்தெந்த வியாதிகளுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை எளிய நடையில் எழுதி வருகிறார். இவரது
பதிவும் அனைவருக்கும் உபயோகமான ஒன்று. குடும்ப மருத்துவர் ஏன் தேவை என்பதை அழகாய் சொல்கிறார்
குடும்ப மருத்துவர்-அவசர அவசியத்தேவை என்ற பதிவில்.
3.சித்த
மருத்துவம் பற்றிய இன்னொரு வலைப்பதிவு சித்த மருத்துவக் குறிப்புகள் இந்த
வலைப்பதிவுக்கு சொந்தக்காரர் கை.க.சோழன் அவர்கள். இவர் சித்த மருத்துவரா எனத்
தெரியவில்லை. இருப்பினும் இந்த பதிவில் உள்ள சில கைவைத்திய குறிப்புகள் உபயோகமாக
இருக்கும்.
4.இலங்கையிலிருந்து
ஒரு பதிவர் எழுதும் ‘சித்த மருத்துவம் பற்றிய இன்னொரு வலைப்பதிவு ‘சித்தர்கள்
இராச்சியம்’ என்பது. இந்த
வலைப்பதிவை ஒரு மருத்துவரான ‘தோழி’ அவர்கள் 20110ஆம் ஆண்டு முதல் பதிவில் எழுதி வருகிறார். இயன்றவரையில்
இனியவராய் இயல்பானவராய் இதயசுத்தியுடன் குருவை நாடி வாழ்பவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்
கொள்கிறார். சித்தர் ரகசியம் .. ஓர்அறிமுகம் என்ற இவர் எழுதியுள்ள தொடர் சித்தர்கள் பற்றி அறிய ஆவல் உள்ளவர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம்
நிறைவேற்றும்.
5. மூலிகைவளம் என்ற பெயர் தாங்கிய வலைப்பதிவில் 2007 ஆம் ஆண்டிலிருந்து மூலிகைகள்
பற்றிய அரிய பல தகவல்களை பதிவிட்டு வரும் குப்புசாமி அவர்கள் கேரள
மாநிலத்தில் உள்ள ஆனக்கட்டி என்ற ஊரில் வேளாண்மை செய்து வருபவர். இவரது பதிவில்
அனேகமாக எல்லா மூலிகைகள் பற்றியும் எழுதிவிட்டார் என நினைக்கிறேன். மூலிகைகளின் தாவரப்பெயர், தாவரக் குடும்பம், Botanical Name,
பயன்படும் பாகம் வளரியல்பு என விரிவாக சொல்லியிருக்கிறார். இது அல்லாமல் தா(வரங்கள்),காவல் மறுமலர்ச்சி, மனித வாழ்க்கை என்று மூன்று
வலைப்பதிவுகள் வைத்திருக்கிறார். இதில் தா(வரங்கள்) என்ற வலைப்பதிவில் வேளாண்
பெருமக்களுக்கு தரப்படும் பயிற்சிகள் பற்றிய விவரங்களை கொடுத்து உதவிக்கொண்டு
இருக்கிறார். இவை இரண்டுமே மிகவும் உபயோகமான பதிவுகள் என்பது என் கருத்து.
6. சித்த
மருத்துவம் பற்றிய இன்னொரு அருமையான வலைப்பதிவு ‘மூலிகை முற்றம்’ இந்த முற்றத்தில் நமக்காக தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தை விரிவாக
தருகிறார் சுமைஹா அவர்கள். இவர் ஒரு சித்த மருத்துவர். இவர் தந்தை சித்த
மருத்துவராக இருந்ததால் இவருக்கும் இதில் பிடிப்பு ஏற்பட்டு ஒராண்டுக்குமேல் அதில்
பயிற்சி எடுத்து தான் கற்றதை, பெற்றதை நம்மோடு
பகிர்ந்துகொள்ளும் இவரின் வலைப்பதிவை எனது மூலிகைப் பயணம்... என்ற தொடரிலிருந்து
படிப்பது உசிதம்.
7. ஆயுர்வேத மருத்துவத்தில் நாட்டம் உள்ளவர்களுக்காக Curesure முகமது அவர்கள் ஆயுர்வேத மருத்துவம். என்ற
வலைப்பதில் எல்லாவித நோய்களுக்குமான மருத்துவக் குறிப்புகளைத் தருகிறார். இந்த
வலைப்பதிவில் சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி பற்றிய புத்தகங்கள் பற்றியும்
விவரங்கள் தந்துள்ளார். இந்த முறை மருத்துவத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு இது
ஒரு தகவல் சுரங்கம்.
8. ஹோமியோ மருத்துவம் என்றால் என்ன என்பதையும் அதன் அடிப்படைத் தத்துவத்தையும், அது எப்படி குணமாக்குகிறது என்பதை அறிய
Homeomedicine என்ற இந்த வலைப்பதிவு உதவும்.
9. யுனானி மருத்துவம் என்றால் என்ன என்பது பற்றியும் அதனுடைய
கொள்கைகள்-கருத்துப்படிவங்கள் பற்றியும் விரிவாக சொல்கிறது உடல் நலம் என்ற மய்ய
அரசின் India Development Gateway
இன் இந்த தளம்.
இன்று
இவை போதும். மற்றவை நாளை.
உடல்நலம் குறித்த பார்வை மிகவும் அருமை...
ReplyDeleteஇதில் இரு தளங்கள் அறியாதவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
சேவைகளாக பணிகளைத் தொடரும் அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...
மருத்துவம் பற்றிய தனி அலசல் புதிதாகவும் நன்றாகவும் உள்ளது. அடுத்த வாரமும் நீங்களே தொடர்ந்தால் தவறில்லையே
ReplyDeleteஉண்மையில் நல்ல அறிமுகங்கள். டாக்டர் முருகானந்தம் அவர்களைத் தவிர பிறரின் வலைத்தளங்களை அறிந்ததில்லை. அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteமருத்துவம் சம்பந்தப்பட்ட எந்தத் தளங்களையும் நான் சென்று படித்ததில்லை இதுவரை. ஆகவே அனைத்தும் புதிய தளங்களே எனக்கு. நல்லறிமுகம் செய்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!
ReplyDelete"உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
ReplyDeleteஉடம்பை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே"
Now I am aware of so many good medical sites. Thanks
சித்த மருத்துவ முறைகளைப் பற்றி தகவல்கள் கூறும் பதிவுகள், சித்த, யூனானி,ஆயுர்வேத மருத்துவங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும் தெளிவாக்கும் பதிவுகள் இருந்தால் அவைகளின் தொடர்புகளை தந்தால் உதவியாக இருக்கும்.
ReplyDeleteதிரு நடன சபாபதி அவர்களின் ஒவ்வொரு நாளைய பதிவும் அவரது முகவுரையும் அறிவை வளர்க்கும் வழிகாட்டலாக அமைந்துள்ளது.
இக்கால மக்களுக்கு பல்வேறு பொருட்களில் ஒரு நடைமுறை புரிதல் இருந்தாலும் அவற்றின் உள்ளே இருக்கும் நுட்பமான செய்திகள்
தெரிவதற்கான நேரம் இல்லை.
திரு நடன சபாபதியின் பணி . பாராட்டுதற்குரியது.
சுப்பு ரத்தினம்.
www.Sury-healthiswealth.blogspot.com
வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி திரு கவியாழி கண்ணதாசன் அவர்களே!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!
ReplyDeleteதிருமந்திரத்தை சொல்லி வாழ்த்தியமைக்கு நன்றி
ReplyDeleteதிரு N.பக்கிரிசாமி அவர்களே!
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சுப்பு ரத்தினம் அவர்களே! சித்த, யூனானி,ஆயுர்வேத மருத்துவங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை பற்றிய பதிவை தனியாக எழுத ஆசை. அதை பின் எனது வலைப்பதிவில் எழுதுவேன். ஆலோசனைக்கு நன்றி!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் !! எல்லோருக்கும் பயன்படும் வகையில் தொகுத்து உள்ளீர்கள் !!
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு தேவன் மாயம் அவர்களே!
ReplyDeleteமிக சிறப்பான சுவாரஸ்யமான பதிவர்களின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
ReplyDeleteஇன்றைய சூழலில் எங்கு கூட்டம் இருக்கிறதோ இல்லையே மருந்து கடைகளிலும் மருத்துவரிடமும் தான் கூட்டம் இருக்கிறது.
ReplyDeleteஇன்றைய தங்கள் பகிர்வுகள் சிறப்பு.
உடல் நலம் மிக அவசியம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையலாம்.
ReplyDeleteஎன்பதற்கிணங்கிய பதிவுகள்.
டொக்டர் முரகானந்தம் தான் இதில் தெரியும்.
அனைவருக்கும் இனிய வாழ்த்து.
சில வலைத்தளங்கள் ஆடுது பார்க்க முடியவில்லை என்றேனல்லவா!
நேற்று சகோதரி திருமதி கோமதி அவர்கள் Hussain னம்மா தந்ததாக ஓர் இணைப்பு தந்தார் அதனூடாக அருமையாக- திருமதி வலைத்தளம் சென்று கருத்திட்டேன். இப்பொது தங்களதும் திருவாளர் இளங்கோவிடம் போகவும் இனைப்பு தந்துள்ளார். .இப்போது நேரமில்லை.
இந்த மகளிர் தினத்தில் இவ்விரு பெண்மணிகள் மற்றும் அனைவருக்கும்இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
இன்று வலைச்சரத்தில் மிகச்சிறப்பான முறையில் அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்து மருத்துவப் பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.
ReplyDeleteஉடல்நலத்தை பேணும் அவசியத்தை வலியுறுத்தி வலைச்சரத்தை, மருந்தாகவும் அழகாகவும் தொடுத்துள்ள தங்களுக்கு என் பாராட்டுக்கள். நன்றிகள்.
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
ReplyDeleteநன்றி திருமதி சசிகலா அவர்களே!
ReplyDeleteகருத்துக்கு நன்றி சகோதரி திருமதி வேதா. இலங்காதிலகம் அவர்களே! எனது மகளிர் தின இனிய நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபாராட்டுகளுக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா எனது வலைத்தளத்தையும் இங்கு அறிமுகப்படுத்தியதற்கு
ReplyDeleteநன்றி மருத்துவர் M.K.முருகானந்தன் அவர்களே!
ReplyDeleteஅனைத்து மருத்துவ பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteபிரமிப்பாக இருக்கிறது;ஒவ்வொரு தலைப்பின் கீழும் ,பல பதிவர்களை அறிமுக செய்து வைத்திருக்கும் முறை.சிறப்பான அறிமுகங்கள்; அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteமனம் திறந்த பாராட்டுகளுக்கும், பதிவர்களை வாழ்த்தியமைக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி திருமதி மாதேவி அவர்களே!
ReplyDeleteuseful article..
ReplyDeleteI have just started writing about the simple methods to follow in day to day life to live long.
பாராட்டுக்கு நன்றி திரு செங்கதிரோன் அவர்களே! உங்கள் பணி வெற்றிபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉடல் நலம் குறித்து இத்தனை பதிவர்கள் எழுதுகிறார்கள் என இன்று தான் தெரிந்து கொண்டேன். ஒரு சிலரை நான் படிப்பதுண்டு. மற்றவர்களையும் இனிமேல் படிக்கிறேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
ReplyDeleteஎனது மூலிகைவளம் இணைத்தமனைக்கு மிக்க நன்றி நடனசபாபதி அவர்களே. உங்கள் முயற்சி மேலும் வளர்க.
ReplyDeleteஇன்றுதான் உங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன். நன்றி திரு குப்புசாமி அவர்களே!
ReplyDelete