முத்தான அறிமுகப் பதிவுகள் பகிரும் - மூன்றாம் நாள்
➦➠ by:
பூமகள்
முத்தான அறிமுகப்பதிவுகள் பகிரும் - மூன்றாம் நாள்
வணக்கம் வலைச்சர
நண்பர்களே..!!
இனிய நாளாக
எல்லாருக்கும் அமைய வாழ்த்துகள்..!
இன்று நாம் சந்திக்கும் பதிவர் அமரன்.
இன்று நாம் சந்திக்கும் பதிவர் அமரன்.
இனிய தமிழுக்கும் பல
சிந்தனைகளின் ஊற்றுக்கும் சொந்தக்காரர் இவர். அமரன் என்ற பெயரில் எழுதி வரும் இவர்
பதிவுலகுக்கு வெளியில் இருக்கும் நல்ல பதிவர்.
அமரன் அவர்களின் குறுங்கவிதை..
பழுத்துவிழும் இலைகளை
எருவாக்கி விருட்சமா(க்கு)வது
ஓரறிவு ஜீவன்களாம்..!
சருகாக உருவகிப்பது
ஆறறிவு ஜீவன்களாம்.
யாரறிவு ஆறறிவு????
%%%%%%%%%%%%%%%%%%%
ஏக்கம்!
உன்னைத் தின்று
என்னில் சேர்க்கிறது
கண்கள்..
என்னுள்ள உன்னை
பிரிக்க முடியாது மூழ்கிறது
மனது.
மிதவையாக மாறாதோ
கண்களின்
இன்னொரு தின்னல்
ஏக்கத்தில் கழிகிறது காலம்!!
என்னில் சேர்க்கிறது
கண்கள்..
என்னுள்ள உன்னை
பிரிக்க முடியாது மூழ்கிறது
மனது.
மிதவையாக மாறாதோ
கண்களின்
இன்னொரு தின்னல்
ஏக்கத்தில் கழிகிறது காலம்!!
--அமரன்
$$$$$$$$$$$$$$$$$$
சரி இன்றைய அறிமுகத்துக்கு செல்வோமா??!!
இவர் 2007 முதல் எழுதி வருகிறார். திண்ணை, அகநாழிகை என இவரது பதிவுகள் பலவும் உலவக்
காணக்கிடைக்கிறது. கவிதைகளில் மனத்தைக் கட்டிப் போடுகிறார். இயற்கை, உணர்வுகள் என பல பிரிவுகளில் இவர்
படைப்புகள் நீளுகிறது. நம் மனதைச் சிறகடிக்கச் செய்த கவிதையில் ஒன்று பயணக்குறிப்புகள் - வாழச்சால் .
தலைப்பற்ற இக்கவிதை, என் மழலைக்காலத்தை நினைவூட்டியது. இவரின் தளமெங்கும் கவிதைகளாலும்
உணர்வுகளாலும் நிரம்பியிருக்கிறது. சிலிர்ப்பூட்டும் நீரோடையில் பயணித்தது போன்ற ஒரு சிலிர்ப்பு.
கதிர்பாரதி என்ற பெயருடையஇவரின் தளம்
பல்வேறுபட்ட படைப்புகளால் நிரம்பியிருக்கிறது. குழந்தையின் உலகில் வீடு குறித்த அழகான
பதிவு வீடு என்ற இவரின் இக்கவிதை. சமூகத்தின் சிலவகை
மனிதர்களைக் குறித்து சாடும் காக்கைகள் என்ற கவிதை சடாரென ஒரு செய்தி சொல்லி
முடிகிறது.
கொஞ்ச காலம் முன்னால் இருந்த கிணறு உடனான
நம் பந்தம் பற்றி எதார்த்தமாக விவரிக்கிறார் பாக்கெட் மணியும் பாலிதீன் பையும் என்ற பதிவில். மேலும் நிகழ்காலத்தில்
நிகழ்ந்த நிகழ்வையும் சொல்லி அதிர்ச்சியடைய வைக்கிறார். மேலும் மூக்குத்தியும் மழையும் என்ற பதிவில் கவிதையோடு வெள்ளரிக்காய், மாங்காய் சுவைகளை
நினைவூட்டுகிறார்.
4. திருச்சொல்
திருநாவுக்கரசு பழனிச்சாமி என்னும் இவர் 2007 முதல் எழுத ஆரம்பித்திருந்திருக்கிறார். இவரின் படைப்புகள் பல கவிதைகளால்
நிரம்பியிருக்கிறது. வீட்டின் அம்மா, அப்பா
இல்லாத துயர் சொல்லும் கண்ணாடியின் துயரம் மனதை என்னவோ செய்தது.
எழுதுவதற்கொன்றுமில்லை என்ற இவரின் கவிதையில்
நான் ரசித்த வரிகள்..
....
கான்கிரீட் அறைகளில்
அமர்ந்து கொண்டு
இயற்கையை
எழுதுவதென்பது
கல்லறைக்குள்
படுத்துக்கொண்டு
காற்றை
தேடுவது போலானது.
....
இவரின் எழுத்தாளுமை அசர வைக்கும். நீண்டக்காலமாக இவரின் எழுத்துகளின் ரசிகை
நான். கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் என இவரின் படைப்புகள் பல. புத்தகங்களும் பல
வெளியிட்டிருக்கும் இவரின் கவிதைகளில் மிகப் பிடித்தமானது காத்திருப்பு என்ற கவிதை. மேலும் உன் காலடி வானம் என்ற கவிதையும்
அதற்கு தகுந்த படமும் மனதைக் கவர்கிறது.
இன்றைய அறிமுகங்கள் அனைவரும் மனத்தைக் கொள்ளை
கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.. மீண்டும் நாளை புதிய அறிமுகங்களுடன் சந்திக்கிறேன்..
அன்புடன்,
பூமகள்.
|
|
அனைவரையும் சென்று பார்த்தேன்...
ReplyDeleteஅற்புதமான படைப்பாளிகள்...
அறிமுகத்திற்கு நன்றிகள் பல...
உங்கள் வலைச்சரப்பணி சிறக்க வாழ்த்துக்கள்...
அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteஅனைத்தும் சிறந்த தளங்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteVetha.Elangathilakam.
வலைச்சர ஆசிரியருக்கும் அறிமுகப் பதிவர்களுக்கும் என் இனிய வணக்கமும் வாழ்த்துக்களும்...
ReplyDeleteபணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகமான அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கள் தொடர்ந்தும் புதிய தளங்களை அறிமுகம்
ReplyDeleteசெய்யும் உங்கள் பணி சிறக்கட்டும் .இன்று அறிமுகமான
அனைத்து உறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .
அன்பின் பூமகள்
ReplyDeleteகவிஞர்கள் அறிமுகம் நன்று - அனைவரையும் சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
நல்ல கவிதைத் தளங்கள் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
ReplyDeleteவாழ்த்துக்கள் பூமகள்!
அறியாத பல தளங்கள் இன்று அறிமுகம்! அறிமுகம் செய்தமைக்கு நன்றி!
ReplyDeleteஅமரக்கவிதையோடு அறிமுகப்படுத்திய தளங்களுக்கு நன்றி பூமகள். இவற்றில் யவ்வனம், ரிஷான் ஷெரிஃப் தவிர மற்ற தளங்கள் புதியவை. சென்று பார்ப்பேன்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....
ReplyDelete