07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, March 22, 2013

மருத்துவக் குறிப்புகளும் சமுக விழிப்புணர்வுகளும்!!


அளிப்பவர் அருணா செல்வம்


நட்புறவுகளுக்கு வணக்கம்.

      இன்று நான் குறிப்பிட்டுள்ளவர்கள்  நல்ல நல்ல பதிவர்கள்  என்றாலும் மருத்துவம், சமுகம் என்பதால் அதைக்குறித்து ஒரு சின்ன நகைச்சுவையுடன் தொடங்குகிறேன்.



     நம் நாட்டி சர்தார்ஜி நகைச்சுவைகள் போல் இங்கே (பிரான்ஸ்) “ப்லோந்து“ பெண்களுக்கென்று நகைச்சுவைகள் உள்ளன. (பொதுவாகவே மஞ்சள் நிறமுடைய கூந்தல் உள்ள அழகான பெண்களைக் “ப்லோந்து“ என்று அழைப்பார்கள். இந்த அழகியப் பெண்கள் “முட்டாள்கள்“ என்பது இங்கவர்களின் கருத்து)



     ஒரு நாள் ஒரு ப்போந்து பெண் டாக்டரிடம் வந்தாள். “டாக்டர் நான் எப்பொழுது காப்பி குடித்தாலும் என் இடதுகண்ணில் காயமாகி வலிக்கிறது“ என்றாள்.

     டாக்டர் அவளின் கண்களைப் பரிசோதித்து விட்டு “ஒரு சமயம் நீங்கள் “சாப்பிடும் காப்பியில் உங்களுக்கு ஒத்துக்கொள்ளாதது ஏதாவது இருக்கிறதா?“ என்று கேட்டார்

    அதற்கு அவள்.. “இல்லை டாக்டர்... இதற்கு முன் என் அம்மா தான் காப்பி கலக்கித் தருவாள். அப்பொழுதெல்லாம் இந்த மாதிரி ஆனதில்லை. ஆனால் நானே காப்பி கலந்து குடித்தால் இப்படி கண்ணில் காயம் வந்துவிடுகிறது“ என்றாள் அழுவாத குறையாக.

    டாக்டர் சற்று நேரம் யோசித்து விட்டு அந்தப் பெண்ணிடம் ஒரு மேசையைச் சுட்டிக் காட்டி “அதில் காப்பி போடுவதற்கான அனைத்தும் இருக்கிறது. எங்கே நீங்களே காப்பிப் போட்டு என் எதிரிலேயே குடித்துக் காண்பியுங்கள். இங்கேயும் அப்படி காயம் ஏற்பட்டு வலி வந்தால் உடனே கவனிக்கிறேன்“ என்றார்.

    அந்தப் பெண்ணும் உடனே காப்பியைக் கலக்கிவிட்டு முதலில் ஒரு வாய் வைத்ததும் “ஆ“ என்று அலறி இடது கண்ணை முடிக்கொண்டு “பார்த்தீர்களா டாக்டர்...? நான் காப்பியை வாயில் வைத்ததும் காண்ணில் காயம் வந்து வலிக்கிறது...“ என்று கண்ணைக் காட்டிவிட்டு “ஏதாவது பெரிய பிரட்சனையா டாக்டர்...?“ என்று அச்சத்துடன் கேட்டாள்.

    அதற்கு டாக்டர்... “அப்படியெல்லாம் ஒரு பிரட்சனையும் இல்லை. நான் எழுதிக் கொடுப்பது போல் நடந்து கொண்டால் போதும்“ என்று சொல்லிவிட்டு ஒரு தாளில் எழுதி கொடுத்து விட்டு அதற்காக நூறும் காப்பிக்கு இரண்டும் சேர்த்து நூற்றியிரண்டு யுரோ வாங்கிக் கொண்டார்.

    அந்தப் பெண்ணும் பணத்தைக் கட்டிவிட்டு டாக்டர் எழுதிய இரசிதைப் பார்த்தாள். அதில்... “இனி காப்பி குடிக்கும் முன் கப்பில் இருக்கும் ஸ்புனை எடுத்துவிட்டு குடிக்க வேண்டும்“ என்று எழுதி இருந்தது. அவளும் “சரி டாக்டர்“ என்றபடி கிளம்பினாள்.



என்ன சிரித்தீர்களா...? (சிரிப்பு வரவில்லை என்றால் நான் பொறுப்பல்ல)

இப்பொழுது பதிவுகளைப் பார்ப்போம்.

.


“பொதுவாக பெண்கள் எழுதும் வலைதளம் என்றாலே சமையல், கவிதை, குழந்தை வளர்ப்பு, பெண்ணியம் போன்றவற்றை மையப்படுத்தியதாகவே இருக்கும். இவை மட்டும் பெண்கள் புழங்கும் வெளி அல்ல.. இவற்றையும் தாண்டி அரசியல், பொருளாதாரம் என்று பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய துறைகளையும் உங்களுக்கு தர இருக்கிறோம், இவற்றையும் தருகிறோம். நேர்மையான வாழ்க்கைப் பாதையைக் காட்டிவிடும் அத்தனையையும் நாங்கள் செய்ய விரும்புகிறோம். எங்களுடன் இணைய நீங்களும் வரலாம்என்று சமூக அக்கரையுடன் நம்மை அழைக்கிறர்.

    அதற்கு தகுந்தார் போல் இவரின் பதிவுகளும் உள்ளன. நீங்களும் படித்துப்பாருங்கள்.
பிரசவ கால பராமரிப்பு
கர்ப்ப கால உணவு
குழந்தை பராமறிப்பு
 


      “அனுராதா“ இந்த இடுகையை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். இவருக்கு மார்பு புற்று நோய். அதை ஜீலை மாதம் 26ந் தேதி 2007 அன்று அறிந்தது முதல் அதனால் ஏற்பட்ட வேதனை தாழ்வுணர்ச்சி., பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் அச்சம் மடம் நாணம் போன்ற வற்றால் ஏற்பட்ட அறியாமை... அதனால் தனக்கேற்பட்ட உள்ளக் குமுறல்கள் என்று தன் வேதனையையும் அறியாமையையும் நம்முடன் பகிர்ந்து கொண்டு.... எப்படியெல்லாம் பெண்கள் தன்னைப் போல் இருக்கக் கூடாது என்பதையும் பெண்களுக்கு உணர்த்தி தன் உணர்ச்சி அனைத்தையும் கொட்டி எழுதியுள்ளார்.

     தன்னால் முடிந்தவரை அனைத்தையும் தானே எழுதிவிட்டு கடைசி இரண்டு இடுகையைத் தன் கணவர் மூலம் எழுதி... நமக்கெல்லாம் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு செப்டம்பர் மாதம் 4 ந்தேதி 2008 அன்று பதிவை நமக்கு விட்டுவிட்டு  விண்ணுலக பதிவியை அடைந்தவர்.

    இவரின் பதிவு பெண்களுக்கு நல்ல விழிப்புணர்வைக் கொடுக்கும். என்று நம்புகிறேன்.






    டாக்டர் எம். கே. முருகானந்தன் இவரின் இடுகையைப் பற்றி நான் அதிகம் சொல்லத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். உங்களின் அனைவருக்கும் தெரிந்தவர்தான். அவரின் இடுகைக்குச் சென்றால் எல்லா நோய்களைப் பற்றிய தகவல்களும், அறிகுறிகள், அதனால் வரும் உபாதைகள், அதைப் போக்கும் வழி முறைகளையும் தனித்தனியாகப் பிரித்து விளக்கியுள்ளார்.

   இப்படிப்பட்ட இடுகைகள் மற்ற மொழிகளில் இருந்தாலும் தமிழில் இவரின் இடுகை தான் முதலில் உள்ளது. படித்துப் பயனடையுங்கள். இவரின் பதிவுகளில் ஒரு சில...










4.  நிகழ்..

(மாசிலா) “விளையாட்டு தொழில் துறை மூலம் தமிழுலகிற்கு பெரிய அளவில் சாதிக்க துடிக்கும் ஒரு அபார மனிதன்.“ என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாலும் பல சமுக விழிப்புணர்வு பதிவுகளைத் தான் பதிந்துள்ளார். அவற்றில் சில...

நோய் தீர்க்கும் நச்சுயிரி!!  

“மாயா“க்கள் அழிவின் மர்ம்ம் என்ன?

5. ஜெயசந்திரன்

இவரின் அனைத்துப் பதிவுகளும் சமுக சிந்தனை வாய்ந்தவை. இவரின் “தெரிந்து கொள்வோமா...“ என்ற தலைப்புள்ள பதிவுகள் நமக்கு நிறைய தெரிய படுத்துகின்றன. நீங்களும் படித்துப் பாருங்கள்.

மனித உரிமைகள் என்றால் என்ன?
 
தெரிந்து கொள்வோமா...? 1 முதல் 58 வரை

உள்ளுர் குளம் தீர்த்தக்குளம் ஆகாது!
 
6. கவிஞர் அஸ்மின்

“அடுத்தவனின் தத்துவத்தை பேசிப்பேசி அடுப்படியில் தூங்காமல் உலகம்போற்றும் உனக்கான தத்துவத்தை நீயே பாடி உறுதியுடன் போரிடுவாய் ஒருநாள் வெல்வாய்“ என்ற இவரின் அறிமுகம் போலவே உலகத்தை வென்றவராக இருக்கிறார்.  

இவரின் அனைத்துப் படைப்புகளும் பலரால் பாராட்டப் பெற்று பலதும் பரிசுகளைப் பெற்றதாகவே இருக்கின்றன. உணர்ச்சி மிகு வார்த்தைகளுக்கு உரிமையாளர் என்றே இவரைச் சொல்லலாம்.

நாளைய உலகம் நமக்காக விடியட்டும்
 
குயில்கள் இப்போது குரைக்கின்றன.
 
பாம்புகள் குளிக்கும் நதி!
 
7. சேக்கனா எம். நிஜாம்

“சமூக நலம் காப்போம், கல்வியைக் கற்போம், கற்பிப்போம், சுகாதாரத்தைப் பேணுவோம்“ என்று தங்களின் அறிமுகத்தில் சொல்லியது போல் அவரின் தளத்தில் நிறைய ஆசிரியர்கள் சமுக விழிப்புணர்வுகளை எழுதுகிறார்கள். அவர்கள் அனைவருமே ஆற்றல் மிகுந்தவர்கள் என்றாலும் நான் போய் ஒருவரை மட்டும் படித்ததால் இவரின் எழுத்தக்களை உங்களின் பார்வைக்கு படைக்கிறேன்.

“ஆட்டிசம்“ ஓர் விழிப்புணர்வு
 
“தில்லு“ இருக்கா!?
 
பொறா(ஆ)மை!!
 
8. நிகழ்காலம் எழில்

“அச்சத்தில் இருப்பதைவிட ஆபத்தை ஒருமுறை சந்திப்பது நல்லது.“ என்ற தராக மந்திரத்துடன் வலம் வருபவர். நம் அனைவருக்கும் தெரிந்த துணிச்சல் மிகுந்த அன்பான பெண் தோழி எழில். இவரின் “பெரியாரின் சிந்தனைத் துளிகள்“ நம் அனைவரையும் இழுக்க வைக்கும். நீரைத் தள்ளிவிட்டு பாலைமட்டும் எடுத்து நமக்குக் கொடுக்கும் எழிலான அன்னப்பறவை இவர். சமுதாயத்தில் ஒவ்வொரு பெண்ணும் இவரைப் போல் இருந்தால் இந்தியா என்றோ வல்லரசாகி இருக்கும். இவரின் பதிவுகளில் ஒரு சில...

சூழல் காப்போம் 1-2-3-...
 
ஆண்களா? பெண்களா?
 
ஆண்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
 
9. சிவா

“என் பெயர் சிவா, என்னுடைய வலைப்பதிவில் பதிவேற்றப்படுபவை யாவும் நான் படித்து, ரசித்த , நல்ல தகவல்கலை என் தளத்தில் இடுகிறேன். யார் தளத்தில் இருந்து பதிவுகள் எடுத்தாலும் அவர்களுக்கு கீழே நன்றியும் சொல்லி அவர்களை கவுரவிக்கிறேன். நான் இடும் பதிவுகள் உங்கள் அனைவருக்கும் உபயோகமாக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி.“ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பலரின் நல்ல பதிவுகளை எழுதியவரின் பெயரைக் குறிப்பிட்டே எழுதுகிறார். நீங்களும் படித்துப் பாருங்கள்.

பருக்களின் தழும்புகள் மறைய வேண்டுமா?
 
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க ஒரு வழி
 
சர்க்கரை நோய்க் கார்ர்களுக்கு உகந்த உணவு முறைகள்.
 
10. தங்கம் பழனி

இவர் பதித்த அனைத்துப் பதிவுகளும் கணிணி சம்மந்தப்பட்டதாகவே இருக்கிறது. கணினி பற்றி அறிய விரும்புகிறவர்கள் இவரின் இடுகைக்குச் சென்று படித்துப் பயன் பெறுங்கள். (எனக்குத் தமிழ் மணத்தில் ஓட்டுப்பட்டையை இணைக்கக் கற்றுக் கொடுத்தவர் என்பதை நன்றியுடன் நினைவுக் கூறுகிறேன்) எனக்கு கணினி பற்றி பெரியதாக படிக்க விருப்பம் இல்லாததால் அவர் இடுகையில் எனக்குப் பிடித்ததை எடுத்து உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். 

அழகான உதடுகள் பெற

குழந்தை சிவப்பாக பிறக்க... 

தலை முடி உதிர்வதைத் தடுக்க...
 

நட்புறவுகளே... அனேகமாக நான் கொடுத்திருக்கும் இன்றைய பதிவர்களின் பதிவுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

   நாளை புதுக்கவிதைகள் ஹைகூ எழுதுபவர்களைப் பற்றி தேடிப்பார்த்து எழுதுகிறேன்.


நட்புடன்

அருணா செல்வம்.

57 comments:

  1. "ப்லோந்து" இன்று தான் தெரியும்... நல்ல நகைச்சுவை...

    இதில் இரண்டு தளங்கள் புதியவை... அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அனுராதா அவர்களின் மறைவு தெரியாது... மிகவும் வருத்தமடையச் செய்தது...

    ReplyDelete
  2. இதில் (4) நிகழ்....(மாசிலா) அவர்களின் தளத்தில் மட்டும் கருத்துரை இட தடை செய்யப்பட்டுள்ளது...

    ReplyDelete
  3. மிக்க நன்றி சகோ. அருணா செல்வம்

    நல்லதொரு தொகுப்பு - பதிவில் பங்குபெற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.

    வலைச்சரத்தின் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் வாசகன் நான் !

    பின்னூட்டம் மூலம் எங்களின் பார்வைக்கு எடுத்துவந்த அன்பு நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மீண்டும் எங்களது நன்றி

    ReplyDelete
  4. அருமையான அறிமுகங்கள். ஐந்துபேர் தெரியாதவர்கள். தொடர்கிறேன்...

    ReplyDelete
  5. மிக்க நன்றி எனது வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு.
    அத் தகவலை எனக்கும் தந்த சகபதிவாளர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  6. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி..! ஒவ்வொரு முறையும் எனது பதிவுகள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தும்பொழுதும் பின்னூட்டம் வழியாக தகவலறியச் செய்யும் அவருடைய மனப்பாங்கு பாராட்டத்தக்கது.

    அனுதினமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஏதாவது தொழில்நுட்ப (உதவி)நுணுங்களைச் செய்துவருகிறேன். அந்த வகையில் நீங்களும் அதில் ஒருவர். ஆனால் என்றோ செய்த உதவியை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டு, அறிமுகப்பதிவில் அதை குறிப்பிட்டமை தங்களுடைய நினைவுத்திறனை, நன்றி உணர்வை, பெருந்தன்மையைக் காட்டுவதாக உள்ளது.

    அறிமுகப்படுத்தியமைக்கும், நினைவு கூர்ந்தமைக்கும் நன்றி..வாழ்த்துகள்..!!

    ReplyDelete
  7. மிக்க நன்றி எனது வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு.
    அத் தகவலை எனக்கும் தந்த சகபதிவாளர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  8. நல்ல அறிமுகங்கள்.

    சிலர் தெரியாதவர்கள். படிக்க முயல்கிறேன். [பிடுங்க வேண்டிய ஆணிகள் அதிகம்!]

    ReplyDelete
  9. Thangal paravalaana aazhamaana vaasippai thangal arimukangal mulam purindu kolla mudikirathu Thodara vaazhththukkal

    ReplyDelete
  10. அருணா!
    திருமதி அனுராதாவின் இடுகையை நான் எடுத்து ஒரு இடுகையாகப் போடலாம் என்று இருக்கிறேன். என்னுடைய சில குறிப்புகளுடன்...

    அவர்கள் இன்று இல்லை என்று அறிவதால்...எப்படி அவர்கள் எழுத்துக்களை, அவர்களின், "உயிர்-எழுத்துக்களை" போடுவது என்றும், யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று சொன்னால் நலம்.

    ReplyDelete
  11. நகைச்சுவை சிறுகதை அருமை.

    இன்று தங்களால் வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்துப்பதிவர்களுக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  12. வணக்கம்

    இன்று அறிமுகம் கண்ட தளங்கள் அனைத்தும் அருமை அருமையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  13. வலைச்சரத்தில் எங்களது சமூக விழிப்புணர்வு பக்கத்தை இணைத்து வலு சேர்த்த நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றியினை தெறுவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  14. பலருக்கும் பயன் தரும் அறிமுகப்பதிவு நன்று!

    ReplyDelete
  15. வணக்கம் தோழி. இன்றைய உங்கள் வலைச்சர ஆரம்ப நகைச்சுவைக் கதையை ரசித்தேன்.

    இன்றைய அறிமுகங்கள் நல்ல தொகுப்பாக இருக்கிறது. தங்களால் வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் உங்களுக்கும் என் இனிய நல்வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும்...

    ReplyDelete
  16. அனைத்து அறிமுகதாரருக்கும் நல்வாழ்த்து.
    'வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  17. வணக்கம் அருணா!

    நான்கு பெண்கள் தளத்தில் நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும் கட்டுரைகளை எழுதி வருபவள் என்றமுறையில் நான்குபெண்கள் தளத்தின் சார்பிலும், என் சார்பிலும் உங்களின் அறிமுகத்திற்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

    உங்களின் அறிமுகம் என் கட்டுரைகளுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.

    நன்றி, நன்றி, நன்றி!



    ReplyDelete
  18. சகோ உண்மையில் இன்று அறிமுகப்படுத்திய பகிர்வுகள் அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை. குறிப்பாக இன்று நம்மிடையே இல்லாத தோழி அனுராதாவின் கேன்சருடன் ஒரு யுத்தம் பகிர்வு படித்துவிட்டே இங்கு வந்தேன். என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை..

    ReplyDelete
  19. நகைச்சுவைக்கு கொஞ்சமாகத் தான் சிரிக்க முடிந்தது சாரி அருணா... நிறைய சமூக வலைப்பதிவாளர்களுடன் என்னையும் இணைத்தமைக்கு நன்றி.. அனுராதா அவர்களின் பதிவை முதலிலிருந்து படிக்க ஆரம்பித்து ...ஒரு நெடு நாள் தோழி பிரிந்ததை போன்ற உணர்வை அடைந்தேன்..பிறகுதான் ஞாபகம் வந்தது.. இங்கு பின்னூட்டம் போடவில்லையென்று... நல்லதொரு அறிமுகங்களுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  20. டொக்டர் முருகானந்தன் என்னுடைய இந்தப் பதிவுகளையும் படித்து கருத்துரை சொல்வார். அவரது பெருந்தன்மையை என்ன சொல்ல?
    Gem of a Person!
    அவரை என் வலைச்சர வாரத்திலும் அறிமுகம் செய்திருந்தேன்.

    திரு தங்கம் பழனியை என் வலைச்சர வாரத்திலும் அறிமுகம் செய்திருந்தேன்.

    திருமதி அனுராதா அவர்களின் அனுபவம் படிக்க மனசு கனத்துப்போனது. எல்லோரும் அரிய வேண்டிய அனுபவம்!

    திரு சேக்கனா அவர்களின் விழிப்புணர்வுப் பதிவுகளின் ரசிகை நான்.

    எல்லோருக்கும் என் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. மருத்துவம் மட்டுமல்ல தொழில்நுட்பத்திலும் தேடல் மிக்க உங்களின் உழைப்பைச் சொல்லிச் செல்கின்றது இன்றைய பணி எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.வலைச்சரத்தில் வலம் வரும் பதிவாளர்களுக்கு தகவல் சொல்லும் ஆசான் தனபாலனுக்கும் சிறப்பு நன்றிகள்!

    ReplyDelete
  22. அருமையான நகைச்சுவையுடன் சிறந்த பதிவர்களின் அறிமுகம் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. தங்கள் கண்களிற்கு எட்டிய
    எங்கள் நோய்களைத் தீர்க்க
    நல்ல வழிகாட்டலைத் தரும்
    நல்லறிஞர்களை அறிமுகம் செய்த
    ஆசிரியருக்கு நன்றி.

    ReplyDelete
  24. இது ஒரு பயனுள்ள தகவல்களை அள்ளித் தரும் பதிவு......

    ReplyDelete
  25. என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது.

    ReplyDelete
  26. உங்களுக்கும் , தாங்கள் அறிமுகம் செய்த அன்பு பதிவர்களுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  27. வணக்கம் தனபாலன் ஐயா.

    நான் கேட்டதும் பதில் கூட சொல்லாமல் உடனடியாக நீங்கள் எனக்குச் செய்யும் உதவிக்கு என்ன கைமாறு செய்வதென்று அறியாமல் வெறும் நன்றி என்ற வார்த்தையுடன் வணங்குகிறேன்.

    ReplyDelete
  28. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நிஜாம் ஐயா.

    ReplyDelete
  29. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

    ReplyDelete
  30. டாக்டர் முருகானந்தம் அவர்களுக்கு வணக்கம்.
    நீங்கள் மக்களுக்குச் செய்யும் இந்த அறிய தொண்டு எங்களுக்குக் கிடைத்தப் பாக்கியம்.
    தொடருங்கள் உங்கள் தொண்டை.
    எனக்காக வந்து பதிலிட்டமைக்கு நன்றியுடன் வணங்குகிறேன்.

    ReplyDelete
  31. தங்கம் பழனி....
    காலத்தி கால்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தில் மாணப் பெரிது. குறள் 102

    உண்மையில் நீங்கள் அன்று எனக்கு தமிழ்மண ஓட்டுப்பட்டையை இணைக்காதிருந்தால்.... நானும் பட்டைத் தீட்டப்படாதவளாகத் தான் இருந்திருப்பேன்.

    என் நன்றியை இவ்விடுகையின் மூலம் அறிவித்ததால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

    தவிர உங்களின் இடுகைகள் அனைத்தும் மற்றவர்களுக்கு உதவக் கூடியவைகள். நிச்சயம் உங்களைப் பார்க்காதவர்கள் இதனால் பயனடைவார்கள்.

    நன்றியுடன் அருணா செல்வம்.

    ReplyDelete
  32. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கவிஞர் அஸ்மின்.

    ReplyDelete
  33. அதை ஏங்க கேட்க்கிறீர்கள். சில சமயம் எந்த ஆணியையும் பிடுங்காமல் சும்மாவே இருப்பேன்.... ஆனால் நேரம் என்று ஒன்று வந்துவிட்டால்..... சாதாரணமாக மண்ணில் செறுகிய ஆணிக்கூட இழுப்பதற்கு வர மாட்டேங்கிறது... அனேகமாக என் நிலைதான் உங்களுக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் வந்து படித்துக் கருத்திட்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி நாகராஜ் ஜி.

    ReplyDelete
  34. தங்களின் வருகைக்கும் புரிதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இரமணி ஐயா.

    ReplyDelete
  35. வழக்கம் போல் உங்கள் குட் டி கதை அருமை நகைசுவையுடன்
    அறியாதவர்களை அறிந்து கொண்டேன் நன்றி மருத்துவ குறிப்புகள் மிகவும் அவசியம்

    ReplyDelete
  36. அருமையான அறிமுகங்கள்

    ReplyDelete

  37. வணக்கம்!

    ஓட்டொன்று போட்டே உயா்தமிழ் வெண்பாவில்
    பாட்டொன்று பாடிப் படைக்கின்றேன்! - ஏட்டொன்று
    தீட்டி அளித்தார் அருணா! சிறப்புகளைக்
    காட்டி அளித்தார் கமழ்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  38. வணக்கம் நம்பள்கி.

    அனுராதா அவர்கள் தன் நிலைமை யாருக்கு வரக்கூடது. நாலு பேருக்குப் பயன் தர வேண்டும் என்ற சமுக சிந்தனையுடனும் அக்கரையுடனும் தான் எழுதி இருக்கிறார்கள்.

    நீங்கள் ஒரு மருத்துவர். அவரின் “உயிர் எழுத்துக்களை“ ஆரோக்கியமான முறையில் மற்றவர்களுக்குப் பயன் தரும் வகையில் போட்டால் அவர்களின் குடும்பத்தாரே மகிழ்வர்.
    நல்லது நினைத்தால் நமக்கும் நலமே விளையும்.

    தொடருங்கள் மருத்துவ விழிப்புணர்வு பதிவுகளை. நல்வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
  39. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கோபலகிருட்டிணன் ஐயா.

    ReplyDelete
  40. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரூபன்.

    ReplyDelete
  41. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஆதிரை மொய்சா அவர்களே... (வலைப்பதிவிட்டது தனபாலன் ஐயாவா....?!!!)

    ReplyDelete
  42. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

    ReplyDelete
  43. தங்களின் வருகைக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இளமதி தோழி.

    ReplyDelete
  44. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கோவைக்கவி அவர்களே.

    ReplyDelete
  45. வணக்கம் ரஞ்சனி அம்மா.

    உங்களின் பெயரைக் குறிப்பிட மறந்து விட்டதற்காக மன்னிக்கவும்.

    தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  46. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

    ReplyDelete
  47. கொஞ்சமாகத் தான் சிரித்தீர்களா...? (இது “கடி ஜோக்“ அப்படித்தான் இருக்கும்)

    தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி எழில்.

    ReplyDelete
  48. உங்களின் இரசிப்புத் தன்மை அனைவரையும் ஊக்குவிக்கிறது ரஞ்சனி மேடம்.

    மீண்டும் நன்றி.

    ReplyDelete
  49. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனிமரம்.

    ReplyDelete
  50. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

    ReplyDelete
  51. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஜி. கே ஐயா.

    ReplyDelete
  52. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நன்றி நன்றி தேவன் மாயன்.

    தொடர்ந்து எழுதுங்கள். நாங்களும் தொடர்கிறோம்.

    ReplyDelete
  53. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மலர் பாலன்.

    ReplyDelete
  54. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கவியாழி ஐயா.

    ReplyDelete
  55. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் ஓட்டிற்கும் மிக்க நன்றி கவிஞர்.

    ReplyDelete
  56. வலைச்சரத்தில் எனது தளத்தை அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க நன்றி நண்பரே மிகவும் மகிச்சியாக உள்ளது


    பின்னூட்டத்தின் வழியாக எனது தளம் வலைச்சரத்தில் இணைக்கப்பட்டதை தெரிவித்த திண்டுக்கல் தனபாலன் அண்ணாவிற்கு மிகுந்த மனமகிழ்ச்சியோடு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்

    ReplyDelete
  57. மருத்துவ பகிர்வைத் தரும் நல்ல அறிமுகங்கள்.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது