07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, January 6, 2015

தில்லி ஸ்பெஷல் – 2


சரம் - மூன்று! மலர் - ஒன்பது!


தில்லியில் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. ஒரு நாள் பயணமாகவும் செல்லலாம். அல்லது தனித்தனியாகவும் சென்று வரலாம். ஒரு சில இடங்களைப் பற்றி நாம் இன்றைய பதிவில் பார்க்கலாம்.



INDIA GATE:  ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் 1919-ஆம் ஆண்டு நடந்த ஆஃப்கான் போரில் உயிரிழந்த 70,000 இந்திய மற்றும் பல ஆங்கிலேய ராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் கட்டப்பட்ட நினைவுச்சின்னம் தான் இந்தியா கேட். 1921-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்டது!  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1971-ஆம் ஆண்டின் போரில் உயிரிழந்த இந்திய ராணுவத்தினரின் நினைவாக இந்த நினைவுச் சின்னத்தில் Amar Jawan Jyoti-யும் ஏற்படுத்தினார்கள்.  அன்றிலிருந்து இந்த ஜோதி எரிந்த வண்ணமே இருக்கிறது. இந்த நினைவுச் சின்னத்தில் 1919 போரில் உயிரிழந்த பல ஆங்கில மற்றும் இந்திய வீரர்களின் பெயர்கள் பொறித்து வைக்கப்பட்டுள்ளது! இந்நினைவுச் சின்னத்தினைக் காண கட்டணம் ஏதும் கிடையாது.

பட உதவி - கூகிள்!

REDFORT:  லால் கிலா என்று அழைக்கப்படும் இடம் ஒரு மிகப்பெரிய கோட்டை – 1638-ஆம் வருடம் கட்டப்பட்ட இக்கோட்டை பல முகலாய மன்னர்கள் பயன்படுத்திய இடம். பிறகு ஆங்கிலேயர்களும் தங்களது ராணுவத்தினை இங்கே தங்க வைத்திருந்தார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு எல்லா வருடமும் சுதந்திர தினத்தன்று அப்போதைய பிரதம மந்திரி இக்கோட்டையில் தான் இந்தியக் கொடியை ஏற்றுவார்.  மிகவும் பழமையான இவ்விடம் வாரத்தின் ஆறு நாட்களுக்கு [செவ்வாய் முதல் ஞாயிறு வரை] திறந்திருக்கும். திங்கள் கிழமை இங்கே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை. மாலை ஆறு மணிக்கு Light and Sound Show ஒன்றும் இங்கே நடத்துகிறார்கள். கோட்டை சந்தித்த பல வரலாற்று நிகழ்வுகளை இந்த காட்சியின் மூலம் பார்க்கலாம்.  இதற்கு கட்டணமாக 80 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த நினைவு!


LOTUS TEMPLEதில்லியின் நேரு ப்ளேஸ் பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு வழிபாட்டுத் தலம் தான் இந்த Lotus Temple.  ஒரு அழகிய பூங்காவிற்கு நடுவே தாமரை வடிவில் கட்டப்பட்ட இத்தலத்தினை 1986-ஆம் ஆண்டு கட்டி முடித்தார்கள். தாமரை மலரினைச் சுற்றி ஒன்பது சிறிய நீர்நிலைகள் இருக்க, எல்லா மதத்தினரும் இங்கே பிரார்த்தனை செய்ய முடியும்.  மாலை நேரங்களில் விளக்கொளியில் பார்க்கவே அழகாய் இருக்கும்!  இங்கே நுழைய கட்டணம் ஏதுமில்லை. திங்கள் கிழமைகளில் இவ்விடம் பராமரிப்பிற்காக மூடி இருப்பார்கள்.  L&T நிறுவனத்திரால் கட்டப்பட்ட இவ்விடம் ரொம்பவே அழகு.  




QUTAB MINAR: தில்லியின் மெஹ்ரோலி பகுதியில் இருக்கும் ஒரு முகலாயர் கால வெற்றிச் சின்னம் தான் குதுப்மினார். 1193-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்நினைவுச் சின்னத்தின் உயரம் 73 மீட்டர். மூன்று நிலைகள் சிவப்புக் கற்களாலும், மேலே இருக்கும் இரண்டு நிலைகள் மார்பிள் கற்களாலும் கட்டப்பட்டது இவ்விடம்.  7 மீட்டர் உயரமுடன் இங்கே அமைக்கப்பட்ட இரும்புத் தூண் துருப்பிடிக்காது இன்று வரை இருக்கிறது. குத்புதின் ஐபக் காலத்தில் கட்டப்பட்ட இந்த வெற்றிச் சின்னத்தினைப் போல இரண்டு மடங்கு உயரத்தில் கட்ட ஆரம்பித்த சின்னம் ஒன்று முடிக்கப்படாது பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். அதையும் இவ்விடத்தில் பார்க்க முடியும்.   



காஜர் ஹல்வா:-


பட உதவி - கூகிள்!

தில்லியில் இந்த பனிக்காலத்தில் எல்லோர் வீட்டில் செய்யும் ஒரு இனிப்பு இந்த காஜர் ஹல்வா. காஜர் என்றால் கேரட். ஷிம்லாவிலிருந்து வரவழைக்கப்படும் கேரட்டுகள் நல்ல செக்கச்சிவப்பாக பார்க்கும் போதே கண்களைக் கவரும். கேரட்டை துருவி சர்க்கரைகோவா சேர்த்து கிளறுவது தான் காஜர் ஹல்வா. நல்ல குளிர்காலத்தில் எங்கள் வீட்டிலும் அடிக்கடி செய்வதுண்டு. குளிர் காற்றில் வெளியில் செல்லும் போது இனிப்பு கடைகளில் சுடச்சுட தொன்னையில் தரும் காஜர் ஹல்வாவுக்கு ஈடு இணையே கிடையாது. ஒரு தொன்னை 10 ரூபாய் அப்போது…:)

இன்றைய தில்லி ஸ்பெஷலில் அறிமுகங்கள்  சிலரைக் காணலாம்.

காகிதப்பூக்கள் வலைத்தளம் வைத்திருக்கும் ஏஞ்சலின் அவர்களின் க்வில்லிங் வாழ்த்து அட்டைகள் வெகு அழகாக இருக்கும். இயற்கை காட்சிகளையும்மிருகங்களையும் காகிதங்களால் நிறைத்து அழகாக்கி இருப்பார். இவரது க்வில்லிங் பதிவு ஒன்று இதோ….

கணக்காயன் ஐயா அவர்கள் ஒரு ஓய்வு பெற்ற தமிழாசிரியர். இவரது அழகான தமிழில் பொங்கல் வாழ்த்து ஒன்று..

அப்பாவி தங்கமணி அவர்களின் தங்கமணி ரங்கமணி கலாட்டாக்களும்அவ்வப்போது எட்டி பார்க்கும் மைண்ட் வாய்ஸும்தாய்மை பரிமளிக்கும் சிறுகதைகளும் யாரும் மறந்திருக்க முடியாது. பிஸியாக இருப்பதால் பதிவுலகம் பக்கம் எட்டி பார்ப்பதில்லை. அவரது பதிவு ஒன்று இங்கே

அமுதவன் பக்கங்களில் நடிகர் சூர்யா பற்றி இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் கட்டுரை ஒன்றை ஐயா பகிர்ந்திருக்கிறார். அது இதோ உங்கள் பார்வைக்கு

அமைதிச்சாரல் அவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் அவ்வளவு தத்ரூபமாகவும் அழகாகவும் இருக்கும். அவரின் சிந்தனையில் உதித்த துளிகள் சில இங்கே பகிர்வாக..

நாளை தில்லி பற்றிய வேறு சில தகவல்களோடும்பதிவர்களின் அறிமுகத்தோடும் சந்திக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

27 comments:

  1. தில்லியைச் சுற்றிவந்து அல்வா எடுத்துக் கொண்டேன்.

    சரத்தில் கோர்க்கப்பட்டிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகள். ஆமாம், 'அப்பாவி' இப்போ எல்லாம் எழுதுவதே இல்லை. மனதைத் தொடும் சிறுகதைகளைத் தருவதில் திறமையானவர்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாவி அவங்க பாப்பாவோடு படு பிஸி...:)

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  2. புதுதில்லியில் தாங்கள் அழைத்துச்சென்றுள்ள இடங்களுக்கு, பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் சென்றுவந்தேன். உங்களது பதிவு மறுபடியும் அங்கே அழைத்துச்சென்றது. அப்போது ருசிக்காத காஜர் ஹல்வாவை இப்போது ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

      Delete
  3. அழகான இடங்களை பதிவின் மூலம் சுற்றிப் பார்த்து விட்டோம் + இனிப்போடு... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      Delete
  4. தில்லியில் பார்த்த இடங்களை திரும்பவும் பார்த்து பழைய நினைவுகளை அசை போட வைத்தமைக்கு நன்றி! அறிமுகம் செய்யபட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.

      Delete
  5. தில்லியை சுற்றிக்காட்டுகிறேன் பேர்வழி என்று சொல்லி கடைசியில் அல்வாவை கொடுக்கிறீங்களே. சரி, எனக்கும் ஒரு கிலோவை பார்சல் பண்ணி அனுப்பிடுங்க.

    அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. 1 கிலோ தானே! அனுப்பிட்டா போச்சு...:)

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சொக்கன் சார்.

      Delete
  6. தங்களின் டில்லி பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் நன்றாக இருக்கின்றன. என்னுடைய தளத்திற்கு சில வாசகர்களை அனுப்பிவைக்கும் உங்கள் பணிக்கு என்னுடைய நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.
      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அமுதவன் ஐயா.

      Delete
  7. டெல்லி பற்றிய படங்களும் செய்திகளும் இன்றைய அறிமுகங்களும் எல்லாமே அருமை. பாராட்டுக்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்.

      Delete
  8. விளக்கமான விடயங்களுடன் புகைப்படங்கள் அருமை இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      Delete
  9. டில்லி பற்றிய பதிவு அருமை .பள்ளியில் படிக்கும்போது போனேன் இப்போ எவ்வளவு மாற்றம் ...! எனக்கு மிகவும் பிடித்த வாழ்த்து அட்டை அது ..என்னோடு அறிமுகமான நட்புக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .காஜர் அல்வாக்கும் தாங்கஸ்ப்பா :)

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பிடித்த வாழ்த்து அட்டையை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ஏஞ்சலின்.

      Delete
  10. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஆதி..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க சாந்தி.

      Delete
  11. தில்லியை பற்றிய தகவல்களுடன் பதிவர்கள் அறிமுகம் சிறப்பு! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.

      Delete
  12. பயணக்கட்டுரை /பதிவர் அறிமுகம் -சிறப்பு.प्रशंसनीय ;

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சேதுராமன் ஐயா.

      Delete
  13. படங்கள்... அல்வா... டில்லி குறித்த் செய்திகள் என எல்லாம் அருமை...
    அறிமுகமான வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி குமார் சார்.

      Delete
  14. லெல்லியில் சுற்றிப்பார்த்த இடங்களை மீண்டும் சுற்றிப்பார்த்து விட்டேன்.
    காரட் அல்வா எல்லோர் வீடுகளிலும் செய்யப்படும் சாப்பிட்டு இருக்கிறேன்.
    சரம் மூன்றில் இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது