07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 7, 2015

தில்லி ஸ்பெஷல் – 3


சரம் – மூன்று! மலர் – பத்து!


பொதுவா, ஒரு ஊருக்கு குழந்தைகளுடன் சுற்றுலா செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் – அங்கே இருக்கும் பல இடங்கள் குழந்தைகளைக் கவர்வதில்லை – சும்மா கோவில், கோட்டை, கொடிமரம்-னு பார்க்கிறது அவர்களுக்குப் பிடிப்பதில்லை.  வேறு வழியில்லாது தான் பார்க்கிறார்கள்.  நமக்குப் பிடித்தவை போலவே அவர்களுக்குப் பிடித்த சில இடங்களையும் சுற்றுலாவில் சேர்த்துக் கொள்வது நல்லது. 


நீங்க தில்லிக்கு வந்தா பார்க்க வேண்டிய இடமாக நேற்றைய பதிவில் இந்தியா கேட், லால் கிலா, லோட்டஸ் டெம்பிள், குதுப்மினார் போன்ற இடங்களைச் சொல்லி இருந்தேன்.  இன்றைய பதிவில் குழந்தைகளுக்கான சில இடங்கள் பார்க்கலாம்!


Shankar’s International Doll Museum: திரு கே. ஷங்கர் பிள்ளை [1902-1989] என்ற புகழ்பெற்ற அரசியல் கருத்துச்சித்திரம் வரைபவரால் உருவாக்கப்பட்டது  தான் இந்த ம்யூசியம். “Costume Dolls” என்று சொல்லப்படும் துணிகளால் செய்யப்பட்ட அழகான பல பொம்மைகளை இங்கே பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். உலகின் பல மூலைகளிலும் இருந்து ஷங்கர் அவர்களுக்கு பரிசளிக்கப்பட்ட பொம்மைகளை தில்லியில் உள்ள Children’s Book Trust-ன் கட்டிடத்தில் ஒரு மாடியில் 5200 சதுர அடி அரங்கில், 160 கண்ணாடி அறைகளில் அடுக்கி வைத்துள்ளார்கள். இங்கே இருக்கும் பொம்மைகளில் முக்கியமான சில - ஜப்பானின் காபுகி மற்றும் சாமுராய்” பொம்மைகள்ஸ்பெயின் நாட்டின் ஃப்லேமென்கோ டான்சர்ஸ்” பொம்மைகள்இந்தியாவின் கதகளி” நாட்டிய பொம்மைகள் மற்றும் தஞ்சாவூர் தலையாட்டி” பொம்மைகள். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் இருக்கும் கண்னாடிக்கூண்டின் உள்ளே மேல்புறம் தெரியாத வகையில் ஒரு மின்சார விசிறி இருப்பதால் இந்த பொம்மைகள் எப்போதும் தலையாட்டிக் கொண்டு இருக்கும் அழகே அழகு. 

திங்கள் தவிர வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் காலை 10.00 மணியிலிருந்து மாலை 06.00 மணி வரை இந்த அரும்பொருட்காட்சியகம் திறந்திருக்கும். ஆனால் ஒரே ஒரு குறை – இங்கே புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. நுழைவு கட்டணம்: சிறுவர்களுக்கு ஐந்து ரூபாய்,பெரியவர்களுக்கு 15 ரூபாய். இந்த இடத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பார்த்த எங்கள் மகள் தஞ்சாவூர் செல்லும்போது கண்டிப்பா வாங்கித் தரணும் என்று வாங்கிக் கொண்டாள். 


National Rail Museum: – தில்லி நகரின் முக்கியப் பகுதியான சாணக்யபுரியின் வெகு அருகில் உள்ள இந்த ம்யூசியம் பிப்ரவரி 1, 1977-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பதினோரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் போக்குவரத்து சம்பந்தப்பட்ட பொருட்களை நீங்கள் பார்க்க முடியும்.  குழந்தைகளைக் கவரும் வண்ணம் அனைத்து மாடல்களிலும் ரயில்கள் இங்கே உண்டு.  அங்கே உள்ள குளிரூட்டப்பட்ட அறையில் இந்திய ரயில்வே துறை ஆரம்பித்தது முதல் தற்காலம் வரை உள்ள பலவித ரயில் பெட்டிகள்என்ஜின்கள் ஆகியவற்றின் மாதிரிகள்பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்கள்ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்த்துவிட்டு வெளியே வந்தால்பலவிதமான உண்மையான ரயில் இன்ஜின்கள், “Royal Saloon” என்று அழைக்கப்படும் மஹாராஜாக்கள் பயன்படுத்திய ரயில் பெட்டிகள் போன்றவற்றைக் காணலாம். 1887 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட "ஃபேரி க்வீன்" என்ற ரயில் இன்ஜின் தற்போதும் உபயோகிக்கக்கூடிய நிலையில் உள்ளது. 

உலகிலேயே பழமையான இந்த ரயில் வண்டி மூலம் தில்லியிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வர்” என்ற இடத்திற்கு முன்கூட்டியே பதிவு செய்து வைத்துள்ள பயணிகளை அழைத்துச் செல்கிறார்கள். வாரத்தின் திங்கட்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களிலும் காட்சியகம் திறந்து இருக்கும். குழந்தைகளுடன் நீங்களும் இங்குள்ள “Toy Train” மூலம் சுற்றி வந்து பல ரயில்களைப் பார்க்க முடியும்.  ரயில் சம்பந்தப்பட்ட பரிசுப் பொருட்கள் விற்கும் ஒரு கடையும் இங்கே உண்டு. 




ஐஸ்க்ரீம்:- குழந்தைகளுக்கான சுற்றுலாத் தலங்களை பார்த்து விட்டு, அவர்களுக்கு, ஏன் நமக்கே மிகவும் பிடித்தமான ஐஸ்க்ரீம் பற்றி சொல்லாவிட்டால் எப்படி! தில்லியில் MOTHER DAIRY, KWALITY WALLS, AMUL, VADILAL என்று பலதரமான கம்பெனிகளின் ஐஸ்க்ரீம்கள் நிறைய உள்ளன. விலையும் நம்ம ஊரை விட இங்கு மலிவு தான். நிறைய ஃப்ளேவர்களிலும் கிடைக்கும். (உதாரணத்துக்கு - LITCHI, ANJEER, SHAHI MEVA MALAI, பான் ப்ளேவர் கூட இருக்கு) கோடைக் காலங்களில் 1 கிலோ வாங்கினால்  1 கிலோ இலவசம் என்று ஆங்காங்கே நிறைய விளம்பரங்கள் காணப்படும். நாங்கள் குளிர்காலத்திலும் வாங்கி நிறைய ருசித்ததுண்டு....:) நீங்களும் தில்லி வரும் போது நம்ம ஊரில் இல்லாத ப்ளேவர்களில் வாங்கி ருசியுங்களேன்....:)


என்ன நண்பர்களே, குழந்தைகளுக்கான இரண்டு இடங்களையும் ஐஸ்க்ரீம்களைப் பற்றியும் இன்னிக்குப் பார்த்தாச்சா?  வலைச்சரத்தில் இன்றைய அறிமுகங்களைப் பார்க்கலாம்!

அலையல்ல சுனாமி என்ற பெயரில் ஒரு வலைப்பூ இருக்கிறது.  அந்த வலைப்பூவிலிருந்து கையளவு நீர் எனும் பதிவு ஒன்று இன்றைய அறிமுகங்களில் ஒன்றாக!

ஆத்மா – பேசுவது குறைவது எனும் பெயர் கொண்ட வலைப்பூ இன்றைய இரண்டாம் அறிமுகமாக... அவ்வலைப்பூவிலிருந்து ஒரு பதிவாக ஆதலால் நாம் ஏழைகள்.

தூய தமிழ் பேணும் பணி எனும் பெயரில் வலைப்பூ வைத்திருக்கிறார் யாழ் பாவாணன் அவர்கள். அவர்களது பக்கத்திலிருந்து இன்றைய மூன்றாம் அறிமுகப் பதிவு – பாரதியின் பாவரிகள் உண்மையாகுமா?

வேதாவின் வலை என்ற வலைப்பூவில் கவிதைகள் பகிர்ந்து கொள்கிறார் வேதா. இலங்காதிலகம் அவர்கள். அவரது வலைப்பூவில் இருந்து விரல்களை ஏன் யார் தந்தார்? எனும் பதிவு இன்றைய நான்காம் அறிமுகமாக!

இன்றைய நாளின் கடைசி அறிமுகம் இதய சுவடுகள் எனும் வலைப்பூ!  அதிலிருந்து ஒரு பதிவு – பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

இடைவிடாத பணிச்சுமை.  முடிந்தால் நாளை ஒரு பதிவுடன் சந்திக்கிறேன்...

நட்புடன்

ஆதி வெங்கட்,
திருவரங்கம்.

படங்கள் உதவி - கூகிள்!


26 comments:

  1. அடுத்தமுறை புதுதில்லி செல்லும்போது இவற்றைப் பார்ப்பேன். மிகவும் அழகான புகைப்படங்கள். நம்மையே ஈர்த்துவிட்டது என்றால் குழந்தைகளுக்குக் கேட்கவா வேண்டும்? புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரயில் மியூசியத்தில் உள்ள ஜாய் ட்ரையினில் போக ஒவ்வொருமுறையும் நானே அடம் பிடிப்பேன்....:)) பொம்மைகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

      Delete

  2. Shankar’s International Doll Museum இருக்கும் கட்டிடத்திற்கு அடுத்த கட்டிடத்தில் தான் எனது அலுவலகம் இருந்தது. பலமுறை அந்த அருங்காட்சியகத்திற்கு சென்றிருக்கிறேன். அவசியம் பார்க்கவேண்டியதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
    ஒரு சிறு திருத்தம்:Mother Dairy என மாற்றிவிடுங்கள்.

    இன்றக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஓ! அங்கு தான் தங்கள் அலுவலகமா? மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.

      Delete
  3. தில்லி ரெயில் ம்யூசியம் அருமையாக இருக்கும் பார்த்திருக்கின்றோம். அதே போன்று பொம்மைகள் ம்யூசியம் அதுவும் பார்த்திருக்கின்றோம் அருமையான ஒன்று...மதர் டயரி நாக்கில் நீர் ஊறுகின்றது....

    அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      Delete
  4. குழந்தைகளுக்கு பிடித்த இடங்களை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    இன்றைக்கு அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சொக்கன் சார்.

      Delete
  5. பயணத்தை தொடர்கிறோம்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      Delete
  6. குழந்தைகளுடன் டெல்லிப்பயணம் அருமை. ஐஸ்க்ரீமுடன் முடித்துள்ளது அழகு. பகிர்வுக்கு நன்றிகள். இன்று அறிமுகம் ஆகியுள்ளோருக்குப் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்.

      Delete
  7. புகைப்படங்கள் அருமை இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      Delete
  8. சிறப்பான அறிமுகங்களுடன் தில்லி தகவல்களும் அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.

      Delete
  9. தில்லியில் உள்ள குழந்தைகளுக்கு பிடித்த இடங்கள் அழகு. ஐஸ்கிரீம் கூடுதல் சுவை. அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள். அறிமுகப்படுத்திய தளங்களை நானும் வாசிக்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க விச்சு.

      Delete
  10. அனைத்து படஙகளும் அற்முகங்களும் மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜலீலாக்கா.

      Delete
  11. சுவையான தகவல்கள்.

    சரத்தில் கோர்க்கப்பட்டிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  12. பதிவில் சொன்ன இடங்களை 20 வருசத்துக்கு முன்பு பார்த்திருக்கேன். மகள் சின்னவளா இருந்த போது .

    இப்போ நிறைய மாறுதல்களுடன் இருக்கு!

    சரத்தில் அறிமுகமானவர்களுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.

      Delete
  13. Padangalum, idangalum arumai. Enathu valaipoovai arimugapadithiyatharku nandri

    ReplyDelete
  14. There is one Children's Library in the Nehru House. Such a beautiful library with vast collection. only for children. Please visit the Library with your daughter during your visit to Delhi Mrs. Venkat.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது