எண்ணங்கள் பூக்கும் காவியமாய் ஆக்கும்
கவிஞனின் எண்ணங்கள் பூக்கும்
கவிதைகள் வண்ணமாய் காய்க்கும்
மனம் சிறகுகள் இன்றியே பறக்கும்
கனவுகள் உறக்கமின்றியே பிறக்கும்
கவிதைகள் வண்ணமாய் காய்க்கும்
மனம் சிறகுகள் இன்றியே பறக்கும்
கனவுகள் உறக்கமின்றியே பிறக்கும்
பிளைட் டிக்கட் கைக்கு வந்ததும் என்னை
என் கணவரும் சந்தோஷமாக அனுப்பி வைத்தார். உள்ளுக்குள் நல்ல புளுகு
போலும் என்று நினைத்துக் கொண்டேன். எனக்கும் சந்தோஷம் தாங்க முடியலை கொஞ்ச
நாளைக்கு தொல்லை இல்லை இல்ல.ம்..ம்..ம்
விமானத்தினுள் வேறு யாரும் இல்லை நான் மட்டும் தான் .அப்பனே! முருகா!
ஞானபண்டிதா! கேட்குதாப்பா என்னை திரும்ப பத்திரமா கொணர்ந்து
சேர்த்திடுப்பா. சேட்டை ரொம்ப கூடிப்போச்சுப்பா பூமீல ...மயில் மேல சுத்துற
உனக்கு இதெல்லாம் எங்க புரியப்போகுது. என்னமோ அப்பா நான் சொல்லிட்டேன்
பார்த்துக்க .. நான் மெல்ல பாட்டு கேட்டுக் கொண்டு சாய்ந்து இருக்கிறேன்
சத்தம்....... கடபுடா..... கடபுடா.... என்று கேட்கிறது என்னன்னு பார்த்தால் பழுது அடைந்திருந்த விமானத்தை சரி
பார்த்து விட்டு ட்றயல் பாக்கிறான்களாம் இல்ல. இப்ப தானே புரியுது ஏன் யாரும் இல்லேன்னு, ஏதோ சதி போல தான் இருக்கிறது. அதை அப்புறம் பார்க்கலாம் . அம்மாடியோவ் உயிரை கையில புடிச்சுக்கொண்டு போய் சேர்ந்திட்டேன்ங்க ஒரு மாதிரி அப்பாடா .!
அப்புறம் மெல்ல சுத்து முத்தும் பார்த்தா ரூபன் நேம்போர்டு ஓட நிக்கிறாரு. அவரை தான் எல்லோருக்கும் தெரியுமே. ஆனால் என்ன அவருக்கு தெரியாதில்ல. ஓடி ஓடி பார்க்கிறாரு திரு திருன்னு வேற முழிக்கிறாரு நான் பக்கம் போய் நின்று பார்க்கிறேன் என்ன செய்றாரு என்று கையில
பெரிய புக்கே வேற. நான் மெல்ல ரூபன் என்றேன் திடுக்கிட்டு அம்மா என்று ஏங்கிவிட்டார். நான் எதிர்பார்த்ததை போல் இல்லை போலும் என்று
நான் உள்ளுக்குள் நினைத்தேன். மெல்ல சமாளித்துக்கொண்டு அந்த புக்கேயை எனக்கு தர வந்தார் நான் வேண்டலையே நான் சொன்னேன் இதெல்லாம் எனக்கெதற்கு இது கொஞ்சம் ஓவராத் தெரியவில்லையா என்ன ரூபன் இது என்று எனக்கு கோபம் வந்து விட்டது. பின்னர் அடக்கிக் கொண்டு இது உண்மையாக யாருக்கு கொடுக்க வேண்டும் தெரியுமா? என்றேன் யாருக்கும்மா என்றார், இப்ப எங்க வலைதளத்தில டாப் நியூஸ் என்ன தெரியுமா என்றேன். என்னம்மா தெரியாதே என்றார். என்ன தெரியாதா என்ன அண்ணாவும் தம்பியுமா வலை முழுக்க சுத்துவீங்க இது தெரியாதா யார் அண்ணா... அவர் தாங்க நம்ம சகோதரர் திண்டுக்கல்தனபாலன்
வலைச்சித்தர் தான். யாரு என்று கேள்வி வேற, இப்போ இது தெரிஞ்சுது
குறளாலேயே அடி செமத்தையாய் விழும் தம்பிக்கு ஜாக்கிரதை. என்னம்மா நீங்களே
அடி வாங்கித் தந்திடுவீங்க போல இருக்கே.
ஓ ஓகே..... சரியம்மா விசயத்தை சொல்லுங்களேன். ம்....ம்...ம்... அது தான்பா நம்ம சீராளன்
சௌமிய தேசத்து இளவரசர். அவர் அழகான நந்தவனம் அமைத்து கறைபடியாத காலத்தால்
அழியாத காதல் கோட்டையல்லவா கட்டி யிருக்கிறார். தாஜ்மகால் என்ன
தாஜ்மகால்ங்க.இதை போய் பாருங்க. நான் ஒன்னும் பொய் சொல்லலீங்க வேணுமிண்னா
நீங்களே போய் பாருங்க. அவருக்கு கவிஞர் பட்டம் அல்லவா கொடுத்திருகிறார்கள். தெரியாதா அவருக்கு பட்டத்தை அளித்தவரே நம்ம கவிஞா் கி. பாரதிதாசன் ஐயா தான் ஆகையால் இருவருக்கும் தான் கொடுத்து கௌரவிக்க வேண்டும். அதுசரி ரூபன் "பாரதிதாசன்"எனும்
பெயர் அவருக்கு பொருத்தமா அல்லது அந்த பெயருக்கு அவர் பொருத்தமா எனக்கு
புரியவே இல்லப்பா. பிறக்கும் போதே பெற்றோருக்கு புரிந்து விட்டதா பெரிய...
கவிஞராக வருவார் இவர் என்று ஒரே குழப்பமாவும் ஆச்சரியமாகவும் இருக்கே
யாராவது புரிஞ்சா சொல்றீங்களா? ப்ளீஸ்!
ரூபன் நாம போகும் போது வழியில சீராளன் பார்த்துவிட்டு போகலாமா? அம்மா.... சும்மா கடுப்பு ஏத்தாதீங்க என்கிறார். இது என்ன பஸ் சா....... நினைச்ச இடத்தில பெல் அடித்து இறங்கிறதுக்கு. சரி சரி கோவிச்சுக்காதப்பா .. அப்ப சரி நாம் இவற்றை அவர்களுக்கு அனுப்பி விடுவோம் என்றேன் . ரூபன் அப்படியா அம்மா நீங்க சொல்வது சரிதான் . அப்பிடின்னா அனுப்பிடுவோம் என்கிறாரு. சும்மா சொல்லக்கூடாது நல்ல புள்ளதாங்க ரூபனும் இல்ல . சரிம்மா இப்ப என்ன பிளான் நல்லா தூங்கினீங்க இல்ல சரி சப்பிட்டுவிட்டு நான் உங்களுக்கு கொஞ்சம் இடம் காட்டலாம் என்று நினைக்கிறன் டைம் போதாது அம்மா என்ன சொல்கிறீர்கள். 5 மணித்தியாலத்தில் விமானநிலையம் செல்லவேண்டும் நாளைக்கு இந்தியாவில நிற்போம் அம்மா. இருவரும் தேனீர் அருந்திக்கொண்டு இருக்கும் போது கடையில ஒரு பையன் விளம்பர பத்திரிகை கொடுத்து வந்தான் என்னடா என்று பார்த்தால் கவிஞர்கள் ஒன்றுகூடலாம் நல்லதாப் போச்சு வாங்க அம்மா நாமும் சென்று கலந்துகொள்வோம்..
ரூபன் நாம போகும் போது வழியில சீராளன் பார்த்துவிட்டு போகலாமா? அம்மா.... சும்மா கடுப்பு ஏத்தாதீங்க என்கிறார். இது என்ன பஸ் சா....... நினைச்ச இடத்தில பெல் அடித்து இறங்கிறதுக்கு. சரி சரி கோவிச்சுக்காதப்பா .. அப்ப சரி நாம் இவற்றை அவர்களுக்கு அனுப்பி விடுவோம் என்றேன் . ரூபன் அப்படியா அம்மா நீங்க சொல்வது சரிதான் . அப்பிடின்னா அனுப்பிடுவோம் என்கிறாரு. சும்மா சொல்லக்கூடாது நல்ல புள்ளதாங்க ரூபனும் இல்ல . சரிம்மா இப்ப என்ன பிளான் நல்லா தூங்கினீங்க இல்ல சரி சப்பிட்டுவிட்டு நான் உங்களுக்கு கொஞ்சம் இடம் காட்டலாம் என்று நினைக்கிறன் டைம் போதாது அம்மா என்ன சொல்கிறீர்கள். 5 மணித்தியாலத்தில் விமானநிலையம் செல்லவேண்டும் நாளைக்கு இந்தியாவில நிற்போம் அம்மா. இருவரும் தேனீர் அருந்திக்கொண்டு இருக்கும் போது கடையில ஒரு பையன் விளம்பர பத்திரிகை கொடுத்து வந்தான் என்னடா என்று பார்த்தால் கவிஞர்கள் ஒன்றுகூடலாம் நல்லதாப் போச்சு வாங்க அம்மா நாமும் சென்று கலந்துகொள்வோம்..
.
கதை தொடரும்.....
கதை தொடரும்.....
எம்முடன் நீங்களும் வரலாமே.
1. காக்கைச்சிறகினிலே என்ற வலைப்பூவில் கவிதை எழுதிவரும் அகல் அவர்கள் மிக அற்புதமாக எழுதியதை ரசிக்க இதோ இங்கே குறுங்கவிதை பாகம்-2 kakkaisirakinile.
2. சில்லறைக்கவிதைகள் என்ற தலைப்பில் கவிதை எழுதிவரும் இலங்கையை பிறப்பிடமாக கொண்ட திரு. நிரோஷ் அவர்களின் குறுங்கவிதை மிக அழகிய
படங்களுடன் சில்லறை வரிகள் ஒளிர்கிறது என் யன்னல் நிலவே
3. வசந்தமண்டபம் என்னும் வலைப்பூவில் கவிதையுடன் பன்முகப்பட்ட படைப்புக்களை எழுதிவரும் ஒருபடைப்பாளி அவர்தான் திரு.மகேந்தின் அவருடைய நிழல்ப்படக்கவிதை
களை ரசிக்க இங்கே சொடுக்கவும். ilavenirkaalam. blogspot.com
4. அடுத்து யார் என்றால் வலைச்சரத்தில் சில மாதங்கள் கடமை புரிந்த அன்புச்சகோதரன் திரு. சிவனேசன் (தனிமரம் எனும் பெயரில் )எழுதிவருகிறார் இவருடைய வலைப்பூவைப்பற்றி நான் சொல்வதை விட நீங்கள்
சென்று பாருங்கள் ஒருதடவை. எப்படி எப்படியெல்லாம் கவிதை எழுதுகிறார் என இதோ அவர் எழுதிய கவிதை தங்களின் பார்வைக்கு. சினேஹா போல சிந்திய கவிதை! .http://www.thanimaram.org/ 2014/02/blog-post.html
5. பார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன் சிவகுமாரன் காதல் பாக்களை என்னமா வடித்து கலக்குகிறார் நீங்கள் நிச்சயம் பர்க்கவேண்டியவையே இதோ சென்று பாருங்கள் காதல் வெண்பாக்கள் 40
6. நீரோடை மகேஷ்
கவிதைகள் என்ற வலைப்பூவில் மிக அருமையாக கவிதை எழுதியுள்ளார் நம்பிக்கைசாரல் என்ற தலைப்பில் www.neerodai.com இந்த கவிதையை இரசித்து அவருக்கு தங்களின் உச்சாகத்தை ஊட்டுங்கள்.
கவிதைகள் என்ற வலைப்பூவில் மிக அருமையாக கவிதை எழுதியுள்ளார் நம்பிக்கைசாரல் என்ற தலைப்பில் www.neerodai.com இந்த கவிதையை இரசித்து அவருக்கு தங்களின் உச்சாகத்தை ஊட்டுங்கள்.
7. தூரிகைச்
சிதறல்கள் என்னும் தளத்தில் எழுதிவரும் திருமதி கவிக்காயத்திரி என்பவர்
தன்னுடைய தளத்தில் மிக அருமையாக கவிதை படைத்து வருகிறார் அந்த வகையில்
அவருடைய கவிதையாக எழுதப்படாத கவிதைகள் என்ற தலைப்பில் உள்ள கவிதையை பார்க்க இதோ thoorikaisitharal. blogspot.com
என்னும் கவிதை எழுதியிருக்கிறார் பாருங்கள். valvaiyooraan.blogspot. com
என்று வேற சொல்கிறார்.என்ன தான் சொல்ல வருகிறார்.இதோ சென்று பாருங்கள்.
10 கவிதாயினி என்னும் வலைப்பூவில் மிக அழகிய நிழற்படங்களுக்கு கவிதையால் வரிவடிவம் கொடுத்துள்ளார் அந்தக் கவிதை இதோ.நீரோடை பார்த்து இரசியுங்கள். kavithaini.blogspot. com
11 உதவாத ஒருகோடிப் பாடல்களை – இன்னும்
உருவாக்க எருவாக நான் வாழவோ?
கதவற்ற வெறும்வீட்டில் நான்மட்டுமே – நிற்கக்
காலற்றும் நடக்கின்றேன்
உனைநோக்கியே!
கரைக்கின்ற அமிலத்தில் கருதங்கவே – கெஞ்சக்
கதியற்றுக் கண்ணீரும்
கடன் வாங்கவோ?
அரைக்கின்ற காலத்தின் திரளாகநான் – கொஞ்சம்
அருகேவா என்நெஞ்ச
அழல்நீங்கவே! என்கிறார் Joseph Viju
அரைக்கின்ற காலத்தின் திரளாகநான் – கொஞ்சம்
தளத்தில் இலக்கண இலக்கியங்களை கற்றுத் தேர்ந்த எழுத்தாளர், முறைப்படி கவிதைகளை படைக்க வல்லவர் சுவை மிக்க சொல்லாடார் ஊமைக்கனவுகள் எனும் இத் தளத்தில் நான் போகிறேன் கண்டு களியுங்கள்
சரிங்க தூக்கம் கண்ணை சுழட்டுதுங்க இனி மீண்டும் நாளை சந்திப்போம். சாக்கு போக்கு சொல்லாமல் எலோரும் நாளை வந்து விடுங்கள் சரியா.