07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label அய்யனார். Show all posts
Showing posts with label அய்யனார். Show all posts

Sunday, June 3, 2007

விடைபெறல்







வலைச்சரத்தின் மூலமாய் என் பார்வைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.ஆரம்ப பதிவில் சொன்னது போல சமீபமாய் படிக்க துவங்கியிருப்பதால் பெரும்பாலான பதிவர்களை இன்னும் கண்டறியவில்லை.என் ஒற்றைப் பார்வையில் இவ்வுலகில் தட்டுப்பட்ட இடுகை மற்றும் பதிவர்களை மட்டும் பகிர்ந்து கொண்டேன்.பதிவுகளை படித்த நபர்களின் எண்ணிக்கை எனக்கு திருப்திகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.பின்னூட்டமிட்டு ஆதரவளித்த நண்பர்களுக்கும் (குறிப்பாய் மின்னுதுமின்னல்) எழுதப் பணித்த வலைச்சரம் ஆசிரியர் பொன்ஸ் க்கும் மிகுந்த அன்பும் நன்றிகளும்.

திட்டமிட்டபடி ஐந்து இடுகைகளை பதிவிக்க முடிந்தது.செறிவாய் வந்திருந்ததா என தெரியவில்லை.ஐந்து இடுகைகளும் ஒற்றை சாளரமுறையிலே எழுதப்பட்டது ஒரு குறையாகப் படுகிறதெனக்கு இருந்தும் திட்டமிட்டபடி செயலாற்றியதில் மகிழ்ச்சி.

எதிலேயும் திருபதியடையா சிக்கலான மனதின் நீட்சி இன்னும் செறிவாய் எழுதியிருக்கலாமோ என விடைபெறும் கணங்களில் யோசிக்கத் தவறவில்லை.
மேலும் வாசிக்க...

ஒரு விடுபட்ட கவியும் சில புதிய பதிவர்களும்

தூரன் குணா - கொரங்காடு
வலைக் கவிகள் பதிவில் விடுபட்ட செறிவான கவிஞர்.அபூர்வமாய் வலைபதியும் குணா தற்போது தன் கவிதைகளை தொடர்ந்து பதிவிக்க தொடங்கி இருக்கிறார் கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்.இவரின் சில கவிதைகள் ப்ரியத்தின் பொங்குகள், பாழை அடைகாப்பவன் நீ , கூடற்ற பறவை


காயத்ரி
பாலைத்தினை என இலக்கியமாய் உள்ளே வந்திருப்பவர் ஒரே மாதத்தில் 40 இடுகைகளுக்கு மேல் எழுதி தள்ளிவிட்டார் .இவரின் பரட்டை என்கிற அழகு சுந்தரம் விமர்சனம் படித்து இன்னொரு நகைச்சுவை பதிவர் என முத்திரை குத்தும்முன் கவிதைகளாய் எழுதி இன்னொரு பரிணாமம் காட்டுகிறார்.எல்லா கவிதைகளும் நன்றாய் வந்திருக்கிறது.புறக்கணிப்பின் வலிகள், மரபுடைக்க முடியாமையின் துயர் மிகச் சரியாய் சொல்லப்பட்டிருக்கிறது.வந்த உடனேயே பரவலான கவனம் பெற்றிருக்கிறார்.

அருண் சிவா - குட்டிப்பிசாசு
அட்டகாசமான பேர் :) உள்ள நுழைந்த உடனே நேராய் கிடேசன் பார்க்கில் துண்டு போட்டு இடம் பிடித்து பாசக்கார குடும்பத்தின் கொ.ப.செ பதவியையும் வாங்கிட்டார். நகைச்சுவை,திரைப்படம்,கவிதை ன்னு இந்த பிசாசு நல்லா எழுதுது serigo leone பற்றிய இடுகை நல்லா வந்திருந்தது.கம்மங்க்கூழு வித் கவுண்டமணி செம காமெடி
எழுத்துருவ மாத்து பிசாசு.


கீர்த்தனாவின் - +ள் விகுதி
உள்ள வரும்போதே நண்பர்கள் புடைசூழ வந்திருக்காங்க பெரிய பதிவர்களின் தோழியா இருப்பங்கன்னு நெனக்கிறேன்.இவங்களோட எண் முறை இல்த்திரனியல் புதுமையான அபூர்வமான இடுகை.கரப்பான், ஆண் சிலந்திகள் , போன்ற கவிதைகள் சிறப்பாக இருந்தது.

கதிரவன் - வாழ்க்கைப் பயணம்
தன் பயணங்களை பகிர்ந்து கொள்ளும் கதிரவனின் இப்பதிவு செறிவாய் இருக்கிறது.இஸ்ரேல் பற்றிய வரலாற்றுப் பூர்வமான தகவல்களை இங்கே பெறலாம்

கோகிலவாணி - துவக்கம்
குழந்தைகளுக்கான படைப்புகள் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் வலைப்பதிவில் இல்லை.அக்குறை தீர்க்க குழந்தைகளுக்கான பாடல்களை சுமந்து வந்திருக்கிறார்.சிங்க ராஜாவும் சின்ன பெண்ணும் , கோழியும் மயிலும் இந்த பாடல்கள் இனிமையாக் இருக்கிறது.
பொன்ஸ் இவங்களை கவனிங்க குழந்தைகளுக்கான் வலைத்தளத்துல பயன்படுத்திக்கலாம் :)

சிமோன்தி
இந்த வலைப்பக்கம் இன்னும் தமிழ்மணத்தில் இணைக்கப்படவில்லை என நினைக்கிறேன் மூன்று கவிதைகளும் மிக சிறப்பாய் எழுதப்பட்டிருக்கிறது.காலத்தின் மீது மரணத்தால் எழுதுதல்,கனதியான பொழுதுகளில் அழியும் இருப்பு

திரைவெளி - மணிதர்ஷா
இவரது ஒசாமா திரைப்படபதிவு நன்றாக வந்திருக்கிறது.சரிநிகர் இலக்கிய இதழில் வெளிவந்த விமர்சனம் மிகச் சிறப்பாய் எழுதப்பட்டிருக்கிறது.மற்ற இரண்டு படங்களும் two woman , turtles can fly வெகு சிறப்பாய் எழுதப்பட்டிருக்கிறது.இவரின் வரவு என் போன்றவர்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான்.

தனிமடலில் சிமோன் தி மற்றும் மணிந்தர்ஷா பதிவின் சுட்டிகளை தந்த ABV VBA (என்ன பேர்னு கூட தெரியலிங்க மடல் ஒண்ணு வந்தது) க்கு நன்றிகள்
மேலும் வாசிக்க...

Thursday, May 31, 2007

கும்மி,கொண்டாட்டம்,கேலி,கிண்டல் மற்றும் நகைச்சுவை

நாம் மெல்ல மற்ந்து கொண்டிருக்கும் விடயம் இந்த நகைச்சுவை உணர்வு இயந்திரமாகிப்போன உதடுகளிலிருந்து உதிர்க்கவே முடிவதில்லை இதயத்திலிருந்து புன்னகையை மாறாய் இப்பதிவுலகில் அடுத்தவரை இழிக்காத நகைச்சுவை பதிவுகள் ஏராளம் என் பர்வையிலிருந்து சில


கும்மி என்றால் இந்த பாசக்கார குடும்பம் அடிக்கும் கும்மிதான் இப்போதைக்கு டாப் .இந்த குடும்பம் பற்றிய அறிமுகம், பதவி, பொறுப்புகள் எல்லாம் கண்மணி இப்பதிவில் விளக்கியுள்ளார்.

இவர் எங்க தல ன்னு பதிவுலகமே கொண்டாடுற பாலபாரதி மற்றும் பாகச உலகம் முழுக்க பரவி இருக்கும் பாகச தொண்டர்கள் இந்த வேலைய செவ்வனே செய்துட்டு வராங்க இதில் சேருவது எப்படின்னு சென்ஷி விலாவரியா சொல்லியிருப்பார்.வரவனையனோட பாலா மாம்ஸ் ஆன கதை செம டாப்

வாவச இவிங்க 1 வருசத்த கடந்து வெற்றிகரமா செயல்படுற திறமசாலிங்க தேர்ந்த செறிவான காமெடி ன்னா நேரா இவங்க பதிவுக்கு போயிடலாம் இங்க படிச்சி சிரிச்ச சில பதிவுகள்.வவா ஆட்டோகிராப்-2 ,கவுண்டர்ஸ் டெவில் ஷோ-விஜய்

கேலி க்கும் கிண்டலுக்கும் இவர விட்டா ஆளே இல்லிங்க அண்ணாச்சி ன்னு எல்லாராலும் அழைக்கப்படுற ஆசிப் மீரான்தான் அவர். மனுசன் கிண்டலாவே பொறந்தாரா எப்படி இந்த மாதிரிலாம் சிந்திக்கிறான்னு தோனும்.என்னோட தனிமையின் இசை அப்படிங்கிற கவிதைய அப்படியே உல்டாவாக்கி இசையின் தனிமை ன்னு இவர் அடிச்ச கூத்து செம காமெடி.
சமூக கோபத்தையும் கிண்டலாவே சாடுற இவர் அணுகுமுறை முற்றிலும் புதிது.

அடிக்கடி படிக்கிற சில நகைச்சுவை பதிவுகள் அபிஅப்பா வோட உலக கோப்பை கிரிக்கெட் அல்டிமேட் காமெடி. தம்பி யோட இந்த ரஸ்னா மேட்டர நெனச்சி நெனச்சி சிரிச்சேன் அட்டகாசமான காமெடி இது.இம்சையரசி யோட எடுத்த சபதம் முடிப்பேன் எல்லாருக்கும் நேர்ந்த சோகம்.அத சொன்ன விதம் திரும்ப திரும்ப படிக்க வச்சது. வெட்டியோட விமர்சனங்கள் நல்லாருக்கும் அதிலேயும் இந்த வீராசாமி வாய் விட்டு சிரிக்க வச்ச பதிவு.கப்பி யோட இந்த லீவ்லெட்டர் சென்சிபிள் காமெடி
மேலும் வாசிக்க...

வலையில் சமூகம்

விழிப்புணர்வு,கருத்துச்செறிவு மிக்க இடுகைகள் வலையில் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.வழிகாட்டியாகவும்,பயனுள்ள தகவல்களை பரிமாறிக்கொள்ளும் தளமாகவும் வலைப்பதிவு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.செய்தி தளமாக வெற்றிகரமாய் சற்றுமுன் வலையை மிளிரச்செய்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.

ஜெஸிலா
இவரை புதுமை ஜெஸிலா என்றழைக்கலாம்,மூடநம்பிக்கைகளுக்கு எதிரான இவரது குரல் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.பெண்ணியம்,உடல்நலம்,மனநலம் என பல்வேறு தளங்களில் இயங்கும் இவரது கட்டுரைகள் எளிமையாகவும் சிறப்பானதாகவும் அமைந்திருக்கிறது.

பொன்ஸின் நீலக்குழந்தை இடுகை மனதை தொட்டது பிரச்சினைகளை பேசுவதோடு நின்றுவிடாது களமிறங்கி நண்பர்கள் துணையுடன் தீர்வு கண்டது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

செந்தழல் ரவி யின் வேலை வாய்ப்பு வழிகாட்டி,மிகவும் பயனுள்ள மற்றும் பாராட்டப்பட வேண்டிய பணி

தோல் பதனிடும் தொழில் குறித்தான மா.சிவக்குமாரின் தொடர் கட்டுரைகள் விலாவரியாய் அத்தொழில் குறித்தான நுட்பம் ,மேலாண்மை, மாசு என எல்லாக் கூறுகளையும் அலசுவது சிறப்பு.

தென்றலின் நாணயம் பக்கம் சிறப்பாக இருக்கிறது என்னை போன்ற மந்தமானவர்களுக்கு கூட புரியும் முறையில் எளிமையாக மியூச்சுவல் ஃபண்ட் குறித்து சிறப்பாய் விளக்குகிறார்.

சம்சாரியின் வரவு இயற்கை விவசாயம் குறித்த விழிப்பை ஏற்படுத்தியுள்ளது பஞ்சகவ்யம் குறித்த இவரது தொடர் இடுகைகள் மிக்வும் சிறப்பானவை.விவசாயம் அழிக்கும் அரசியல்வாதிகள் கட்டுரை குமுறல்களை ஏற்படுத்தியது.மண்ணோடு இலக்கியத்தையும் கலக்கும் இவரது அணுகுமுறை வெகு சிறப்பு

பெனாத்தல் சுரேஷின் அரசியல் கட்டுரைகள் நடுநிலமையாய் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இவரது குழப்பமும் உரத்த சிந்தனையும் கட்டுரை என் அலைவரிசையோடு ஒத்துப் போனது.
தேர்தல் முடிவுகள் இடுகை அதை இன்னும் உறுதிப்படுத்தியது.தமிழக அரசியலின் அவசர கோலங்கள் எனும் இந்த கட்டுரை நடுநிலமையாகவும் சிறப்பாகவும் இருக்கும்

சமீபத்தில் வலையில் வெங்கட் மற்றும் ஜெகத் இடையே நிகழ்ந்த திரைமறைவு அரசியல் ஊட்கங்கள் எனும் கட்டுரையும் எதிர்வினைகளும் படிக்க மகிழ்ச்சியாய் இருந்தது.தனிமனித தாக்குதல்,முகம் சுளிக்க வைக்கும் சாடல்கள், குறுகிய பார்வை என வலையில் மலிந்த விடயங்கள் எதுவுமில்லாமல் ஆரோக்கியமான சிந்தனைகளை பகிர்ந்து கொண்ட இருவருக்கும் நன்றிகள்.

லிவிங் ஸ்மைல் வித்யாவை பற்றி வெகு விரிவாய் வெட்டி முன் வாரத்தில் பதிவிட்டிருந்தாலும் சமூகம் எனும் தலைப்பில் அவரது பங்கு தவிர்க்க இயலாத காரணத்தினால் அவரது வலிகளை உள்வாங்கி கொண்ட சக வலைபதிவாளன் எனும் முறையில் இங்கே அவரின் பணிக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

மிகமிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதரான ஓஷோ வை பற்றி பேசும் சக சன்யாசி ஆனந்த நிரூப் மகிழ்ச்சியளிக்கிறார் இவரின் சில இடுகைகள் புத்தருக்கு அவமானம், துனுக்காக மட்டுமே இல்லாத செறிவான கட்டுரைகளையும் இவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

புத்தரின் விபாஸனா தியான முகாம் பற்றி பேசும் முத்துக்குமரனின் இந்த இடுகை மிக சிறப்பான ஒன்று .
மேலும் வாசிக்க...

Tuesday, May 29, 2007

வலைக் கவிகள் மற்றும் கவிதைகள்

கவிதையின் மீதுள்ள காதலும் கிறக்கமும் என்னை வேறெந்த தளத்திலும் இயங்கவிடுவதில்லை.வலையில் முதலில் தேடிப்படிப்பது பெரும்பாலும் கவிதைகளாகத்தான் இருக்கும்.இப்போது வலையில் மலிந்த விடயம் கவிதைதான் செறிவாய் எழுதுபவர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருப்பது வருத்தமளிக்கிறது.கவிதைக்கான தளம் விரிவடைந்த இக்காலகட்டத்திலும் இன்னும் பழைய,சலித்த அணுகுமுறைகளோடே கவிதைகள் தினமும் நூற்றுக்கணக்கில் எழுதப்படுவது குறித்து எப்போதும் வேதனை உண்டெனக்கு.இப்பதிவில் என் பார்வையில் சிறந்த கவிஞர்களை பகிர்ந்து கொள்ளுகிறேன்.
தமிழ்நதி
கவிதை,சிறுகதை,கட்டுரை என முப்பரிமாண வடிவில் இயங்கும் தமிழ்நதி முழு நேர எழுத்தாளர்.கனடாவில் பெரும்பாலான தமிழ் ஏடுகளில் இவரது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன விரைவில் தமிழ்நாட்டின் வெகுஜன ஊடகங்களிலும் இவரது பங்களிப்பை எதிர்பார்க்கலாம்.இவரின் கவிதைகள் அழகியல் பார்வை கொண்டது.அழகின் லயிப்பிலிருந்தபடியே நககண்ணில் ஊசி ஏற்றுவது போல ஒரு வலி அல்லது துன்பம் சுமந்தபடி வெகு அழகாய் மிளிர்ந்திருக்கும். எனக்குப் பிடித்த இவரின் சில கவிதைகள் எழுது இதற்கொரு பிரதி ,சாத்தானின் கேள்வி, கலைந்துபோன மேகம்
தனிமையை மெல்ல இட்டு நிரப்புகிற்து அன்பின் வழிதல்கள்.
வா.மணிகண்டன்
வெகு நுட்பமான கவிஞர்.இவரது கவிதைகளை படிப்பதே ஒரு அலாதியான சுகம்.இவரது பார்வை சம தளங்களிலிருந்து மீண்டு உணர்வு நிலைகளின் மென் கோடுகளை அரூப வடிவின் ரகசிய வழித் தடங்களை சரியாய் பிடிக்கிறது.இவரது கவிதைகள் உயிர்மை,காலச்சுவடு உட்பட பெரும்பாலான இலக்கிய ஏடுகளில் வெளிவந்துள்ளது.வலைப்பதிவில் பதிவிக்காத இவரது 28 கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்றை படிக்க நேர்ந்த இரவொன்றில் இக்கவிஞனின் விரல்களை மென்மையாய் பற்றிக்கொள்ளத் தோன்றியது.எனக்கு பிடித்த இவரது சில கவிதைகள் நிழல், எழுதிவிட முடியாத கவிதை,அது பிசாசு போலவே இல்லை,சனிக்கிழமை இரவின்

அபிமன்யூ
புதிதாய் எழுத வந்திருக்கிறார்.காதல் என்ற உட்பிரிவில் எழுதப்பட்டிருக்கும் 12 கவிதைகளும்,கவிதைகள் பிரிவில் 10 கவிதைகளும் நன்றாக இருக்கிற்து.தலைப்புகள்,கவிதை இயங்கும் தளங்கள் வித்தியாசமாக
புதிதாக உள்ளது.குழப்பங்கள் நிரப்பிய கோப்பை ,
மித மிஞ்சிய தேநீரும் கடவுளின் நண்பனும்
இந்த இரண்டு கவிதைகளும் எனக்கு ஓஷோ வினை நினைவு படுத்திப் போனது.கடவுளின் மரணப்படுக்கை எனக்கு மிகவும் பிடித்தது
நிவேதா
புனைவு கவிதைகள் வெகு நேர்த்தியாய் வருகிறது இவருக்கு.புலி கானகம் என என் சிந்தனைகளோடு ஒத்திருக்கிறது இவரது கவிதைகள் அல்லது இருவருமே ரமேஷ் ப்ரேமின் சாயல்கள் என்றும் சொல்லலாம்.இருப்பினும் சாயல்களை தவிர்க்க முனைதல் அபத்தமென்பதால் அதை அப்படியே விட்டுவிடலாம்.இவரது கனவுகளை படியுங்கள் மேலும் தேவதைகள் காத்திருப்பதில்லை, அகமெங்கும் பொழியும்... இந்த இரண்டும் செறிவாய் இருக்கும்.

லக்ஷ்மி யின் கையெட்டும் தூரம் கவிதை சிறப்பாக வந்திருந்தது கென் னின்(பேர் நல்லாருக்கில்ல!!) இந்த கவிதைகள் நன்றாக வந்திருக்கிறது. ப்ரியனின் இந்த கவிதை நன்றாக இருந்தது.
மேலும் வாசிக்க...

Monday, May 28, 2007

என் வலையுலக முன்மாதிரிகள்

சித்தார்த்
வலைப்பதிவில் நான் முதலில் படித்த இடுகை இவரின் சொர்கத்தின் குழந்தைகள் எனும் இடுகைதான் செறிவான எழுத்துக்குச் சொந்தக்காரர்.பெரிய படிப்பாளி நல்ல சிந்தனையாளன்.வலம்புரி இதழின் இணையாசிரியர்.இவரது சில மொழிபெயர்ப்புகள் மிகவும் பிரசித்துபெற்றது.

பாம்பாட்டி சித்தன்
இவரது கவிதைகளும்,பரந்த வாசிப்பனுபவமும் என்னை நெடுநாள் நடைவழிகுறிப்புகளிலேயே கட்டிப்போட்டு வைத்திருந்தது.இவரது எல்லா இடுகைகளும் எனக்கு பிடிக்குமென்றாலும் கவிதையை வெகு விரிவாய் பேசும் இவரது தொடர் கவிதை அலசல்கள் தெளிவான ஒரு அனுகுமுறையை எனக்கு தந்தது. மேலும் பின்நவீனத்துவம் ஒரு அறிமுகம் எனும் இடுகை என் ஆரம்பகால கேள்விகளுக்கு விடையளிப்பதாய் இருந்தது.

சன்னாசி
இவரது எழுத்துக்களை படித்தபின் என் எல்லைகள் வெட்கப்பட்டு தலைகவிழ்ந்தது. இவரது பார்வை மற்றும் அனுகுமுறைகள் புதிதாய் ஒரு தளத்தில் இயங்குகின்றன.மாண்டீரீஸர் என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.யார்?எங்கிருக்கிறார்? ஒரு தகவலும் தெரியவில்லை.தெரிந்தவர் யாரேனும் பினூட்டத்தில் சொன்னால் மகிழ்வேன்.
நகுலன் நாவல்களை விரிவாக அலசும் இவரது இடுகை நகுலன் விடைபெற்ற அன்று படிக்க ஆறுதலாய் இருந்தது. இவரது உலோகங்கள் எனும் புனைவு கவிதை எனக்கு பிடித்த ஒன்று.இவரது perfume திரைப்பட விமர்சனம் வெகுவாய் ஈர்த்தது.அதிலேயும் இப்படி சொல்லியிருப்பார்

இந்தப் படத்தைப் பார்க்கையில் முன் சீட்டில் அமர்ந்துகொண்டு சொரசொரப்பு பிளாஸ்டிக் காகிதத்துக்குள் கைவிட்டுக் கைவிட்டுப் பிரித்து கிரிச் கிரிச் என்று அரைமணி நேரத்துக்குச் சப்தம் எழுப்பிக்கொண்டிருந்த ஆசாமியில் சீட் முதுகில் ஓங்கி மிதிக்கலாமா என்று தோன்றியது

சுகுணாதிவாகர்
கோபமான எழுத்துக்கள் இவருடையது.சமூகம்,பெரியாரியல்,கூர்மையான விமர்சனங்கள் அவ்வப்போது முகத்திலறையும் கவிதைகளென பன்முக தன்மை கொண்ட கலைஞன். சென்னை சென்றால் இவரை சந்தித்து வெகுநேரம் பேசவேண்டுமெனத் திட்டம். வனம்,சொற்களின் தாய், முகம் பார்க்கப்படும் காலடிச்சுவடுகள் கவிதைகளும் யார் யாரை தூக்கில் போடலாம் என்ற இவரது ஒட்டு மொத்த கோபத்தையும் வெளிப்படுத்திய கட்டுரையும் எனக்கு மிகவும் பிடித்தவை.

டிசே தமிழன்
வலையில் 4 வருடங்களாய் செறிவாய் இயங்கும் இளைஞர் இவர் சம வயதுக்காரர் என்பது ஆச்சர்யமாய் இருந்தது.முதிர்வான,செழுமையான எழுத்துக்கள்.இவருடைய பின்நவீனத்துவ புரிதல்கள் நான் திரும்பத் திரும்ப படித்துக்கொண்டிருக்கும் இடுகை.துப்பாக்கி தின்று விழுங்கிய கவிஞன் சில மணி நேரங்கள் என்னை உறைய வைத்த கட்டுரை.புத்தக வாசிப்பு என்ற கட்டுரை என் புரிதல்களோடு ஒத்திருந்தது இந்த தனிமை கவிதை எனக்கு பிடித்தது.

மதிகந்தசாமி
இலக்கியம்,திரைப்படம் என வலையில் வெகுபரவலாய் இயங்கும் மதி எனக்கு மிகவும் பிடித்தவர்.2003 லிருந்து எழுதப்பட்ட இவரின் மூவிடாக் என் ஓய்வு நேரங்களை மொத்தமாய் திருடிக் கொள்கிறது.இவர் சமீபத்திலிட்ட காதற்படங்களின் பட்டியல் எனக்குப் பிடித்த ஒன்று.Open your eyes இந்த படமும் விமர்சனமும் எனக்கு மிகவும் பிடித்தது இந்த படம் பாக்கனும்.இவரோட மியூசிங்க்ஸ் ல என் பெயரையும் பாத்து சந்தோஷப்பட்டேன் :)

செல்வநாயகி
இவங்களோட எழுத்தும் சிந்தனையும் என்னை நெகிழ்வடைய வைக்கும் தமிழ்நதி சொன்னது போல இருந்து இருந்து எழுதினாலும் மனதில் நிற்கும்படி எழுதுபவர் சாத்தப்பட்ட கதவுகளினூடான தரிசனம் எனக்கு பிடித்த இடுகை.மனுசங்கடா இடுகை,கல்யாண்ஜி பற்றி பேசும் இந்த இடுகை எனக்கு மிகவும் பிடித்தது.கல்யாணி பத்தி பேசுறாங்கன்னாவே இயல்பா ஒரு நெகிழ்வு அவர்களிடம் இருக்கும்.எடுத்துக்காட்டா இத படிங்க சும்மாதான் இருக்கிறேன்
மேலும் வாசிக்க...

Sunday, May 27, 2007

திறக்கப்பட்ட சன்னல்கள் – பின்புலம்



ஒரு ஞாயிற்றுகிழமையின் மதிய வெக்கையில் பொன்ஸ் வலைச்சரம் தொடுக்க அழைத்தபோது கொஞ்சம் தயக்கமாக இருந்ததென்னவோ உண்மை.வெட்டியாய் வலையில் மேய்ந்துகொண்டிருப்பவன் என்பதை எப்படியோ தெரிந்து வைத்திருக்கிறார்கள்.சென்ற வருடத்தின் இறுதிவாக்கில் சில்ரென் ஆஃப் ஹெவன் படத்தை கூகுலில் தேடிக்கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டது சித்தார்த்தின் அங்கிங்கெனாதபடி வலைப்பக்கம்.கணினியில் தமிழெழுத்துக்களையே பார்த்திராத நான் ஒரு பெரிய உலகத்தின் சன்னல்களை சித்தார்த்தின் மூலமாய் கண்டுகொண்டேன்.அடுத்த மூன்று மாதங்கள் அவன் அறிமுகப்படுத்திய மதி,பாம்பாட்டி சித்தர் வலைப்பக்கங்களை மேய்ந்து கொண்டிருந்தேன்.மெல்ல தமிழ்மணம் தடம் பற்றி வந்து சேர்ந்தபோது இவ்வுலகின் பிரம்மாண்டம் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது.பொன்ஸ் ஐ வெகு தயக்கங்களுக்குப்பிறகு தொடர்பு கொண்டு வலைப்பதிவிக்க தொடங்கி விட்டேன் தமிழ்மணத்தில் சேராமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது தம்பியின் அறிமுகம் கிடைத்தது.என் வலையில் ஏதோ கோளாறாம் என் பக்கத்தை தமிழ்மணத்தில் இணைக்க தம்பி,வெட்டி,ராம் போன்ற நண்பர்கள் அரும்பாடுபட்டிருக்கிறார்கள். என் எழுத்துக்களை பார்த்த பிறகு ஏண்டா இவனை சேர்த்தோம் என நொந்திருப்பார்கள் என்பது திண்ணம்.

வரவிருக்கும் ஒரு வாரத்தில் எனக்கு பிடித்த,நான் படித்த,படித்துக் கொண்டிருக்கிற வலைப்பதிவுகளையும் சில இடுகைகளையும் இங்கிட விரும்புகிறேன்.இது முழுக்க முழுக்க என் பார்வையின் என் கண்ணோட்டத்தின் அனுகுமுறைதான்.இதில் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் இருக்குமெனில் சற்று பொறுத்துக் கொள்ளுங்கள்.இப்போதுதான் வந்திருக்கிறேன் இன்னும் எல்லாரையும் படிக்கவில்லை.தலைப்போடு தொடர்புடைய சுட்டிகள் ஏதேனும் இருக்குமெனில் தயங்காது பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இந்த ஒரு வாரத்தில் நான் எழுதப்போகும் பதிவுகளை பின் வருமாறு வகைப்படுத்தியுள்ளேன்.

1.வலையுலகில் இலக்கியம்,திரைப்படம் சம்பந்தமான இடுகைகள் அதாவது வலையுலக அறிவுஜீவிகளின் பதிவுகள்.
2.வலைக் கவிகள், கவிதைகள்
3.கருத்துச் செறிவு,சமூக பார்வை,ஜனரஞ்சக பார்வையுள்ள எழுத்துக்கள்
4.கும்மி மற்றும் கொண்டாட்டம் நிரம்பிய நகைச்சுவை இடுகைகள்
5.புதிய பதிவர்கள் பற்றிய அறிமுகங்கள்

திட்டமிடும் துறையிலிருப்பதால் இது போன்ற ஆரம்ப மிகைப்படுத்தல்களை தவிர்க்க இயலவில்லை.வார முடிவில் பார்த்து விடுவோம் திட்டத்திற்க்கும் நடைமுறைக்குமுள்ள வேறுபாடுகளை.ஓ கே மக்கா ஸ்டர்ட் மியூஜிக்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது